டாக்டரய்யா.. இது நியாயமா?ராமதாஸ§க்கு ஒரு அனல் கடிதம்

ÔÔபாட்டாளி மக்கள் கட்சி.. இன்று பணக்காரக் கட்சியாகிவிட்டது. பா.ம.க. ஆரம்பிக்கப்பட்டபோது, பாட்டாளிகளின் தலைவன் என்று ராமதாஸ் செய்த சத்தியங் களை நம்பி, அந்தக் கட்சியில் சேர்ந்த பாட்டாளி மக்களுக்கு ராமதாஸ் துரோகம் செய்துவிட்டார்..ÕÕ குமுறல்களுடன் பேனா எடுத்தார் பேராசிரியர் தீரன்.
Ôஅன்பிருந்த டாக்டர் ஐயா அவர்களுக்கு,
தீரன் வரையும் மடல்.
நலம்.. பா.ம.க. சார்பில் தங்கள் மகன் டாக்டர் அன்புமணி அவர்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக நியமித்ததால் தாங்களும் நலமாயிருப்பீர்கள். வாழ்த்துக்கள் தெரிவிக்க வேண்டிய நேரம் இது. கூடவே வருத்தமும்!
16.7.89 இந்தத் தேதியை நினைவிருக்கிறதா? ஆம்! பா.ம.க. ஆரம்பிக்கப்பட்ட தினம். சென்னைக் கடற்கரையில் லட்சக்கணக்கான தொண்டர்கள் முன்னிலையில், கட்சியின் நிறுவனராக தாங்கள் செய்த சில சத்தியங்களை, இப்போது வசதியாக மறந்துவிட்டீர்கள். அதை அன்புடன் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
சமூகநீதி, ஜனநாயகம், சமத்துவம், மனிதநேயம் ஆகியவையே நம் குறிக்கோள். மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை மக்களின் நல்வாழ்வுக்கும் அவர்களின் முன்னேற்றத்துக்கும் பாடுபடுவது என்ற லட்சியத்துடன்தானே பாட்டாளி மக்கள் கட்சியை ஆரம்பித்தோம்.
அன்றைக்கு நீங்கள்.. ‘தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள், பாட்டாளி மக்களை கட்சிக் கொடி கட்டுவதற்கும் போஸ்டர்கள் ஒட்டுவதற்கும் கூட்டம் சேர்க்கவும் வோட்டுப்போடவும் மட்டுமே பயன்படுத்திக் கொள்கிறார்களே தவிர, அவர்களுக்கு எந்தவிதப் பதவியோ, வசதியோ அளிப்பதில்லை. ஆனால், பா.ம.க. இந்த அரசியல் கட்சிகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, பாட்டாளி மக்களைக் கைதூக்கிவிடும். நல்ல லட்சிய நோக்கத்துடன் அவர்களுக்குக் கட்சிப் பொறுப்பையும் அரசியல் பதவிகளையும் நிச்சயமாக வழங்கும்’ என்று பேசினீர்கள்.
அதுமட்டுமல்ல, அந்தக் கடற்கரை கூட்டம் உட்பட தொடர்ச்சியாக கிராமம் கிராமமாக மக்களைச் சந்தித்து நீங்கள் பேசியது நினைவிருக்கிறதா? ‘உங்களிடம் டைரி இருந்தால் எழுதிவைத்துக்கொள்ளுங்கள்’ என்று ஒவ்வொரு கூட்டத்திலும் நீங்கள் செய்த ஐந்து சத்தியங் களை நான் டைரியில் எழுதவில்லை. ஒரு நல்ல பா.ம.க. தொண்டனாக என் நெஞ்சில் எழுதிய காரணத்தால் மறக்க முடியாமல் நினைவுபடுத்துகிறேன்.
எந்தக் காலத்திலும் எந்தச் சூழ்நிலையிலும் நானோ, என் குடும்பத்தவர்களோ.. சங்கத்திலோ அல்லது கட்சியிலோ எந்தப் பொறுப்பையும் வகிக்கமாட்டோம். இது மக்களிடம் நீங்கள் செய்த முதல் சத்தியம்.
இரண்டாவது.. என் உயிர்மூச்சு உள்ளவரை நானோ அல்லது என் வாரிசுகளோ எம்.எல்.ஏ., அல்லது எம்.பி. பதவிக்குப் போட்டி போடமாட்டோம். குறிப்பாக, என் கால் செருப்புகூட சட்டமன்றத்திலோ, நாடாளுமன்றத்திலோ படவே படாது.
மூன்றாவது சத்தியம்.. கடைசிவரையில் என் சொந்தச் செலவில்தான் இயக்கப்பணிகளைச் செய்வேனே தவிர, சங்கப் பணத்திலோ, கட்சிப் பணத்திலோ சல்லிக்காசுகூட தொடமாட்டேன்.
நான்காவது சத்தியம்.. நான் மட்டுமல்ல.. என் பிள்ளையோ, மனைவியோ மகளோ யாருமே எந்தப் பதவிக்கும் வரமாட்டார்கள். என் உயிர்மூச்சு உள்ளவரை என் குடும்பத்தாரும் இந்தச் சத்தியத்தைக் காப்பாற்றுவார்கள். பொதுவாழ்வில் கறாராகவும் நேர்மையாகவும் நான் இருப்பேன் என்பதை நீங்கள் நம்புவதற்காக இந்தச் சத்தியம் என்றீர்கள்.
ஐந்தாவது சத்தியம்.. என் கட்சியில் உள்ளவர்கள் அல்லது நானேகூட ஊழல், தவறு செய்தால், மக்கள் மன்றத்தின் முன்னால் பகிரங்கமாக விசாரணை நடத்தி, அதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் முச்சந்தியில் நிற்க வைத்து என்னை சவுக்கால் அடியுங்கள் என்றீர்கள்.
எல்லோரும் சிலிர்த்துப் போனோம்.. ‘அட, இப்படி ஒரு தலைவனா?’ என நெகிழ்ந்துபோனோம். ஆனால், நடந்தது என்ன? சத்தியம் செய்த நாளில் இருந்து நாட்டு நலனைவிட, கட்சி நலனைவிட, குடும்ப நலனே பெரிது என்று செயல்பட்டு வருகிறீர்கள். இதற்கு உச்சகட்ட எடுத்துக்காட்டுதான்.. சங்கத்துக்கோ, கட்சிக்கோ எந்தக் காலத்திலும் எந்தப் பணியும் செய்யாத அன்புமணியை.. உங்கள் மகன் என்கிற ஒரே தகுதியின் காரணத்தில், கட்சி முடிவு என்ற பெயரில் கட்சியின் அமைப்புச் செயலாளராக்கினீர்கள். அமைச்சரும் ஆக்கியிருக்கிறீர்கள். தாங்கள் ஆரம்பகாலத்தில் செய்த அத்தனை சத்தியங்களையும் சர்க்கரைப் பொங்கலாக்கி உங்கள் குடும்பத்தினருக்குச் சாப்பிட வழங்கிவிட்டீர்களே.. இது எந்த வகையில் நியாயம்?
உங்கள் சத்தியங்களைக் கேட்டு உங்களுக்காகவே உழைத்துத் திரிகிற பா.ம.கவின் அடிமட்டத் தொண்டர்களின் வேதனையை வெளிப்படுத்தக்கூட வாய்ப்பு கிடையாதா?
பா.ம.க\வின் வளர்ச்சிக்காக கொள்கை, லட்சியம் என்று உங்களுக்காக உயிரைவிட்ட இருபத்தைந்து தியாகிகளின் ஆன்மாக்கள்தான் உங்களை மன்னிக்குமா?
இதையெல்லாம்விட உச்சகட்டம்.. தேர்தலிலேயே போட்டியிடாமல் மக்களவை உறுப்பினராகக்கூட இல்லாமல்.. அன்புமணியை கொல்லைப்புற வழியாகஇப்போது காபினெட் அமைச்சராக்கியிருக்கிறீர்களே.. நீங்கள் மக்களிடம் செய்த சத்தியங்கள் என்னாயிற்று? ‘கட்சியின் முடிவு.. அதனால் அன்புமணியை அமைச்சராக் கினேன்’ என்பீர்கள். அன்பு மணியை அமைச்சராக்குங்கள் என்று எந்த பா.ம.க. தொண்டன் கேட்டான்?
தி.மு.கவிலும் அ.தி.மு.கவிலும்கூட ஒரு முடிவுக்குப் பிறகு, ஜனநாயக முறைப்படி நடந்த பொதுக்குழு அல்லது செயற்குழுவைக் கூட்டுவார்கள்.. அன்புமணியை அமைப்புச் செயலாளராக்க, அமைச்சராக்க என்ன கூட்டம் கூட்டினீர்கள்?
1998\ம் வருடத்திலேயே பா.ம.க\வில் ஜனநாயகத்துக்கு பாடை கட்டியாகிவிட்டது. இப்போது கட்சி முடிவு என்பதெல்லாம்.. நீங்களும் உங்கள் குடும்பமும் எடுத்த, எடுக்கிற முடிவுகள்தானே.. இதை ஏன் கட்சிக்காரர்கள் எடுத்த முடிவு.. பா.ம.க. தொண்டன் முடிவு என்று அப்பாவிகள்மீது பாவத்தையும் பழியையும் சுமத்துகிறீர்கள்?
உண்மையிலேயே உங்களுக்கு கட்சியின் மூலம் மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற எண்ணமிருந்தால்.. இப்போதுள்ள ஆறு எம்.பி\க்களில் நிர்வாகத் திறமைமிக்கவர் அல்லது ஏற்கெனவே அமைச்சராக இருந்தவருக்கு அல்லவா அந்த வாய்ப்பை வழங்கியிருக்க வேண்டும்? எல்லோரையும் விட்டு மகனுக்கு காபினெட் அமைச்சர் பதவி வாங்கிக் கொடுத்ததில் மக்கள் சேவை எங்கே இருக்கிறது?
பல்வேறு கிராமங்களில் நீங்கள் மக்கள் முன் செய்த சத்தியங்களை நானும் அருகில் இருந்து செய்து கொண்டவன் என்பதாலேயே என் உள்ளம் கொதிக்கிறது. வேதனையில் வெம்புகிறது.
காந்தி, காமராஜர், பெரியார் போன்ற தலைவர்கள் சத்தியம் செய்ததில்லை. ஆனால், உண்மையாக வாழ்ந்துகாட்டி முன் உதாரணமாக இருந்தார்கள். நீங்கள் காந்தி, காமராஜராக வேண்டாம்.. நீங்கள் செய்த சத்தியங்களை மறந்துவிடா மல் குடும்பத்தைத் தாண்டி, கட்சிக்கும் மக்களுக்கும் ஏதாவது நல்லது செய்ய நினைத்தாலே போதும்.. அதைத்தான் ஒவ்வொரு பா.ம.க. தொண்டனும் எதிர்பார்க்கிறான்.
சிலரை சில நாட்கள் ஏமாற்றலாம்.. பலரை பல நாட்கள் ஏமாற்றலாம். எல்லோரையும் எப்போதும் ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது. இதுவும் நீங்கள் சொன்னதுதான்.
இப்படிக்கு,
தீரன்Õ

4 comments:

மிக்கி மௌஸ் said...

எப்படியும் டாக்டர் அய்யா இதை படித்து பதில் சொல்லப் போவதில்லை. குறைந்தது அவருக்கு நெருக்கமானவர்கள் யாரேனும் இதை பற்றி அவர்க்கு நினைவூட்டினால் சரிதான் ! என்ன செய்வது நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்.

மிக்கி மௌஸ் said...

எப்படியும் டாக்டர் அய்யா இதை படித்து பதில் சொல்லப் போவதில்லை. குறைந்தது அவருக்கு நெருக்கமானவர்கள் யாரேனும் இதை பற்றி அவர்க்கு நினைவூட்டினால் சரிதான் ! என்ன செய்வது நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்.

ஜெயக்குமார் said...

//என் உயிர்மூச்சு உள்ளவரை நானோ அல்லது என் வாரிசுகளோ எம்.எல்.ஏ., அல்லது எம்.பி. பதவிக்குப் போட்டி போடமாட்டோம். //
போட்டியிட மாட்டோம் என்று தானே சொன்னார். போட்டியிடாமல் அமைச்சராகவும் மாட்டோம் என்று சொல்லவில்லையே?!

Unknown said...

இதில் நான் கருத்து சொல்ல ஏதுமில்லை கேள்விகளை வைத்திருக்கிறேன் அவ்வளவே