சட்ட சபையில் க.வும் ஜெ.வும்
காலை சட்ட மன்றம் வந்த ஜெ நேராக சென்று கையொப்பம் இட்டு விட்டு சேகர்பாபு மற்றும் பாண்டு ரங்கண் இருவரையும் வரச்சொல்லி அனுப்புகிறார்.

ஜெ: என்னய்யா நேத்து நான் பேசுனத பாத்தீங்களா?

சேகர் பாபு: சரிங்கம்மா

பா.ரங்கண்: சரிங்கம்மா

ஜெ: சரி சரி இந்த ஒ.பி ய வரச்சொல்லுங்க

இருவரும்: சரிங்கம்மா!

பா.ர: (வழக்கம்போல் வழியில் கிடக்கும் நாற்காலியை தாண்டி ஓடுகிறார்)

தனது சக எம்.எல்.ஏக்களுடன் உம் மென்று இருக்கும் ஓ.பி.யிடம்

பா.ர: அண்ணே மோசம் போச்சுண்ணே

ஓ.பி: என்னய்யா?

பா.ர: அம்மா அம்மா....

ஓ.பி: அம்மாவுக்கு என்னாய்யா?

பா.ர: ஒங்கள வரச்சொன்னாங்க(சொல்லி முடிப்பதற்குள் முகம் கருக்க எழுந்து பதரி கும்பிட்ட படியே வெளியேருகிறார் ஓ.பி)

ஓ.பி: அம்மா நீங்க வரச்சொன்னதா....

ஜெ: ஏன் நான் வரச்சொன்னாதான் வருவீங்களா

ஓ.பி: இல்லீங்க

ஜெ: சரி சரி நல்லா சாப்டீங்களா( திரு திருவென்று விழிக்கிறார்)

ஓ.பி: (மனசுக்குள்) ஒருவேள நம்ம முதல்வரா இருக்க குள்ள சாப்டத பத்தி நேத்து எவனும் கேட்ருப்பானா?)

ஓ.பி: இல்லீங்க

ஜெ: இல்லயா.... அதான் முந்தானேத்து நம்ம ஆளுங்க எல்லாரும் நல்லா பெஞ்சு மேல ஏரி நின்னு கத்தகுள்ள நீங்க சும்மா இருந்தீங்க.

ஓ.பி: இல்லம்மா அப்பிடி இல்லம்மா நான் ஒரு மு.முதல்வர் நானே எப்பிடி.....(இழுக்கிறார்)

ஜெ: சத்தமாக... என்னா நெனச்சுகிட்டிருக்கீங்க.. அப்ப நீங்க முதல்வரா இருந்தீங்களா நானா?

ஓ.பி: (உடனே மண்டியிட்டு) தெய்வமே வாய்தவறி வந்துடுச்சு ம்மா......(அழுகிறார்)

ஜெ: சரி சரி நல்லா சாப்பிடுங்க நல்லா சத்தமா பேசனும்மில்ல நேத்து நான் பேசுனத பாத்தீங்களா?

ஓ.பி: இல்லம்மா அதுவந்து நம்ம வீட்ல சன் டிவி இல்லம்மா நம்ம டிவில காட்டுலங்கம்மா...
ஜெ: பரவால்ல இனிமே நீங்களும் சன் டிவி பாருங்க நானே இப்ப சகோதரி ராதிகாவோட செல்விதான் ரசிச்சு பாக்குறன்

ஓ.பி: மகிழ்ச்சியாக .... ஆமாங்கம்மா அதுல தாமர மறுபடியும் ஜி.ஜே வ சேத்துக்குவாங்களா? பாவம்மா அவரு

ஜெ: சன்டிவி இல்லன்னு சொன்னீங்க?

ஓ.பி:( ஆஹா வாய்தவறி சொல்லிபுட்டமா?) இல்லம்மா பேப்பர்ல பாத்தன்

ஜெ: இதெல்லாம் பாருங்க நான் பேசுனத பாக்கல ம்?

ஜெ: நேத்து நான் கேட்ட கேள்விய பாத்து அந்த மோசக்கார கருணாநிதி வாயடச்சு போனாரு நல்ல வேள நேத்து பட்ஜெட் இல்ல...

ஓ.பி: (கையில் இருக்கும் பைலை மறைத்து வைக்கிறார்)

ஜெ: சரி சரி போய் ஒரு லெட்டர் எழுதி கொண்டுவாங்க..

ஓ.பி: (வெளியேருகிறார்)

சிறிது நேரத்தில் திரும்பி வந்து..
ஓ.பி: அம்மா

ஜெ: ஆச்சா? (கடிதத்தை வாங்கி கடுப்பாகிறார்) என்னாய்யா இது?

ஓ.பி: ராஜினாமாங்க..

ஜெ: (மனசுக்குள்) நம்மாளுங்க லெட்டர்னாவே ராஜினாமா லெட்டர்தான்யா எழுதுரான் ...

ஜெ: இல்ல ஓ.பி. நீங்க முப்பதாம் தேதி பேசலில்ல அந்த நேரத்த எனக்கு தரும்படி சபாநாயகருக்கு ஒரு கடிதம் வேனும்..

ஓ.பி: சரிங்கம்மா..
இதற்குள் சபாநாயகரும் முதல்வரும் வந்து விட்டதாக தகவல் வரவே சபைக்குள் நுழைகிறார் ஜெ.

சபா: (திருக்குறள் வாசிக்கிறார்) பகல்வெல்லும் கூகையக் காக்கை இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது

ஜெ: நான் இப்போது பேச அனுமதி வேண்டும்.

சபா: உங்கள் நேரம் வரும் போது பேசலாம். உட்காருங்கள்

ஜெ: (மனசுக்குள்) அதுக்கு அஞ்சு வருஷமில்ல ஆகும்..

சபா: நீங்கள் இப்போது உட்காருங்கள்

ஜெ: சரிய்யா..எனக்கு தெரியும்யா (அமருகிறார்)(அவை குறிப்பில் இருந்து நீக்கப்படுகிறது)

உடனே.. முதல்வர் எழுந்து

மு.க: ஒரு முன்னாள் முதல்வர் அவை தலைவரை பார்த்து சரிய்யா என்று சொல்வது அழகல்ல..

எம்.எல்.ஏக்கள் அனைவரும் மேசையை பலமாக தட்டுகின்றனர்

ஜெ: ஒரு முன்னாள் முதல்வர் சரியில்லை என்று இன்னாள் முதல்வர் கூறுவதை கேட்டு சபா அவர்கள் எதுவும் சொல்லாமல் இருப்பது சனநாயக படுகொலை

சபா: நீங்க உட்காருங்க.... இப்போது கேள்வி நேரம் தொடங்குகிறது
அன்பழகன்: கவர்னர் உரைமீதான எனது விவாதம்....

அன்பு: கவர்னர் அவர்கள் இங்கே சட்ட மன்றம் வந்த போது தனது செல்போன் உரையை விட்டு சென்றுவிட்டார் எனவே...

ஜெ: இது இந்த சபைக்கு தேவயில்லாதது. எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது

சபா: கேளுங்கள்

ஜெ: கவர்னர் உரையை மறந்து விட்டாரா அல்லது யாரும் திருடி விட்டார்களா?

மு.க: திருடியிருக்க வாய்ப்பில்லை காரணம் கவர்னர் உரையன்று அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் சபையில் இல்லை

ஜெ: கடுப்பாகிறார்

ஜெ: முதல்வர் சொல்வதை பார்த்தால் என்னவோ அதிமுகவினர் திருடர்கள் என்பதுபோல் இருக்கிறது நீங்கள்தான் ஊழல் செய்வதில் விஞ்ஞானிகள்

சபா: இது அவைகுறிப்பில் இருந்து நீக்கப் படுகிறது

ஆ.வீ: கலர்.டி வி ஊழல் செய்தது நீங்களா நாங்களா?

ஜெ: இது தேவையில்லாதது( என்னது தேவையில்லாத மாட்டிகிட்டமே ஆளாளுக்கு கேள்வி கேட்கறான்?)

ஜெ: எனக்கு பேச அனுமதி தராத சபாவை கண்டித்து வெளி நடப்பு செய்கிறேன் (வெளியேறுகிறார்)
லாபியில் இருக்கும் பத்திரிகையாளர்களிடம்

ஜெ: எனக்கு பேசவே அனுமதி தரவில்லை என்னை எல்லோரும் கேள்வி கேட்டார்கள் ஆனால் பதில் சொல்ல அனுமதிக்க வில்லைஇந்த ஆட்சி கவிழ்ந்துவிடும் எம்ஜியார் வாழ்க என்றபடி வெளியேறுகிறார். இது கேட்டதும் சேகர் பாபு பின்பக்க கதவு வழியாக சபைக்குள் குதிக்கிறார்

அரியலுõர்
நகர புறவழி சாலைகள் ரூ.
11 கோடியில் பணிகள் துவக்கம்

அரியலுõர்: அரியலுõர் நகருக்கான புறவழிச்சாலைகள் அமைக்கும் பணி ரூ.

11.40 கோடியில் துவங்கியுள்ளது.
அரியலுõரிலிருந்து செந்துறை, பொன்பரப்பி வழியாக ஜெயங்கொண்டம் வரையிலான

45 கி.மீ., துõர சாலையை அகலபடுத்தி நுõறு அடிரோடு அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
தமிழ்நாடு மேம்பாட்டு நிறுவனம் சார்பில்

65 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்த திட்டமிடப்பட்டு, நில ஆர்ஜித பணிகள் கடந்த நான்கு ஆண்டுகளாக நடந்தது.
அதனை தொடர்ந்து அரியலுõர்செந்துறை சாலையில் நுõறு அடிரோடு அமைப்பதற்காக சாலை அகலப்படுத்தும் பணி இப்போது துவங்கியுள்ளது. அதேபோல

11 கோடியே
40 லட்சம் ரூபாய் மதிப்பில் அரியலுõர் நகருக்கான புறவழிச் சாலை அமைக்கும் பணியும் துவங்கியுள்ளது.
அரியலுõர்பெரம்பலுõர் சாலையில் அல்லிநகரத்தில் துவங்கி, மகாலிங்கபுரம் ரயில்வேகேட், செந்துறை ரோடு, கல்லங்குறிச்சி ரோடு, ஜெயங்கொண்டம் ரோடு, பொய்யூர் ரோடு ஆகியவற்றை கடந்து திருச்சி ரோடு வரையிலான ஏழரை கி.மீ., துõரத்துக்கு 120 அடி அகலம் கொண்ட புறவழிச்சாலை அமைக்கும் பணிகளும் துவங்கியுள்ளது.
மேற்கண்ட அரியலுõர் புறவழிச்சாலை பணிகள் முடிந்த பிறகு அரியலுõர் வழியாக சிமென்ட் ஆலைகளுக்கு செல்லும் லாரிகளால், அரியலுõர் நகரில் ஏற்படும் போக்குவரத்து தவிர்க்கப்படும் என்று தெரிகிறது.

5 comments:

துபாய் ராஜா said...

அருமையான கற்பனை!!!.அரியலூர்
செய்தி உண்மைதானே???

Unknown said...

அது உண்மை நண்பரே

நியோ / neo said...

>> ஜெ: இல்லயா.... அதான் முந்தானேத்து நம்ம ஆளுங்க எல்லாரும் நல்லா பெஞ்சு மேல ஏரி நின்னு கத்தகுள்ள நீங்க சும்மா இருந்தீங்க.

ஓ.பி: இல்லம்மா அப்பிடி இல்லம்மா நான் ஒரு மு.முதல்வர் நானே எப்பிடி.....(இழுக்கிறார்)

ஜெ: சத்தமாக... என்னா நெனச்சுகிட்டிருக்கீங்க.. அப்ப நீங்க முதல்வரா இருந்தீங்களா நானா?

ஓ.பி: (உடனே மண்டியிட்டு) தெய்வமே வாய்தவறி வந்துடுச்சு ம்மா......(அழுகிறார்) >>


பின்னீட்டீங்க ராசா! :)


>> ஜெ: (மனசுக்குள்) நம்மாளுங்க லெட்டர்னாவே ராஜினாமா லெட்டர்தான்யா எழுதுரான் ... >>

தூள்! :))

>> ஜெ: கவர்னர் உரையை மறந்து விட்டாரா அல்லது யாரும் திருடி விட்டார்களா?

மு.க: திருடியிருக்க வாய்ப்பில்லை காரணம் கவர்னர் உரையன்று அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் சபையில் இல்லை >>

அப்பிடிப் போடு அருவாள! :)))

Unknown said...

இன்னும் இருக்கு கவலையே படாதீங்க...

ஜெ: (பாண்டுரங்கணிடம்) நீங்க இன்னும் சட்டசபைல இருக்கிறதாவே நெனைப்பா?
பா.ர: (வழக்கம்போல் வாய்பொத்தியபடி) சரிங்கம்மா..
ஜெ: முதல்ல பெஞ்ச விட்டு இறங்குய்யா(மனசுக்குள்....ம் இதல்லா இருந்து என்ன பன்னுறது)

மனதின் ஓசை said...

அருமையான கற்பனை.. ரசித்தேன்..:-)