ஹிட்டு கொடுக்கனும்னா

. " ஹிட்டு கொடுக்கனும்னா நீ கிட்ட வராதே நான் சொல்றத அப்டியே எய்து இல்லன்னா சொல்லமாட்டேன் " என்று நெஞ்சில் கைவைத்து தள்ளியவரை சமாளித்து அவரிடம் இருந்து கறக்கப்பட்ட சில ரகசியங்கள்: அதிக பின்னூட்டங்களை பெறவும் அதிக சொல்லடிகளை வாங்கவும் நம் குவாட்டர் கோவிந்தனின் சில யோசனைகள் இங்கே.
1. முதல்ல இருக்கிற சாதி எல்லாத்தையும் திட்டு அப்றமா உன் சாதிதான் ஒசந்த சாதின்னு கத்து
2. அதுக்கு யாராவது பின்னூட்டம் போட்டா நீ அதுக்கொரு பின்னூட்டம் போட்டு ஒப்பேத்து
3. யாரும் தொடவே யோசிக்கிற விஷயத்த நீ தில்லா ஆரம்பிச்சு பின்னூட்டத்த நீயே போட்டு சூடேத்து
4. ஒரு அஞ்சாரு வலைய வேர வேர பேர்ல ஆரம்பிச்சு ஒன் ஒரிஜினல் பேருக்கு புகழ்மால சூட்டிக்க எல்லா
இடத்திலியும் லிங்க் குடுத்துரு
5. வலைல கவனிக்கிற மாதிரி யாரும் எழுதுனா ஒட்னே நீ ஒரிஜினல் பேர்ல ஆதரிச்சும் அனானிமசா திட்டியும் பின்னூட்டம் போடு அப்றமா ஒரிஜினல் பேரில போயி அனானிய ஒரு புடி புடி அப்றமா அந்த வலையோட ஓனரு ஒனக்கு நிரந்தர வாசகரு.
6. ஒனக்கு யாரும் பின்னூட்டம் போட்டா ஒடனே வெத்தல பாக்கு வச்சி அவங்கள உள்ள கூப்பிடு அவங்க உனக்கு பிடிக்காத எதையும் சொன்னா வெளிய தொரத்தி கதவ சாத்து அப்றம் அவங்க வலைக்கி போயி அனானியா பின்னூட்டம் போடு
7. தினசரி பேப்பர பாரு தலைப்பு செய்தி என்னான்னு பாத்து எல்லா பேப்பர்லியும் இருந்து ஒரே சேதிய ஒவ்வொரு பத்தி வெட்டி ஒட்டுனா ஒரு பதிவு ரெடி .
8. இதவிட இன்னொரு வேல பன்னு நீயே ஒனக்கொரு போலிய ரெடிபன்னு அதுல ஒன்ன நீயே திட்டிக்க ஒரிஜினல் பேருல போலி வந்துட்டான்னு கத்து நீ ஒடனே பேமசு. ஆனா ஒன்னு சமத்துல ஒரிஜினல் போலியாயிடும் சாக்கிரதை
9. கவர்மண்டுல நல்லது எதும் செஞ்சா கண்டுக்காத எதாவது ஒரு சின்ன தப்பு நடந்தா அய்யோ அம்மான்னு கத்தி ஊரக்கூட்டு ஒனக்கு நிறயா பின்னூட்டம் முன்னூட்டமுல்லாம் வரும்
10. பா.ம.க வ ஆதரிச்சு இல்ல திமுகவ ஆதரிச்சு இல்ல திராவிடத்த ஆதரிச்சு எழுதுனா நிறயா அனானிமசூ பின்னூட்டம் வரும். பாதி இங்லீசுலேயே இருக்கும். குறிப்பா இடஒதிக்கீட்ட ஆதரிச்சு எழுதாத, எல்லாரும் வெளிநாட்டு அனானிமசு உள்ளூரு சோமாதிரி ஆட்கள் தொடர்ந்து பின்னூட்டம் போடுவாங்க ஆனா எல்லா பால்லயும் சிக்ஸர் அடிக்க கத்துக்கோ.
11.கடேசியா ஒன்னு " இந்த மாதிரி குவாட்டர் குடிக்கிர எங்கிட்ட ஐடியா கேக்கறத விட்டுபுட்டு உருப்படியா எதாவது உலகத்துக்கு சொல்ற வழியப்பார்"!



ஆறு மனமே ஆறு

திருவாளர் கப்பிபயலின் வேண்டுகோளுக்கு இணங்கி(என்னா பேருப்பா இது:)

1. ஆறு. ஆற்றில் குளிப்பது. என் வீட்டின் பின்புறத்தில் எப்போது வற்றும் எனத்தெரியாத ஆற்றில் எப்போதாவது வரும் வெள்ளத்தில் குளிப்பது. உடலும் மனசும் ஏகாந்தமாக எழுந்திருக்க மனமற்றிருக்கும் வேளையில் மனைவி வந்து எறுமைமாடு சீக்கிரம் வாயேன் என்பதுவரை குளிக்க பிடிக்கும்
2.அப்பா. ஒரு நல்ல தோழனாக என்னோடு விவாதிக்கும் எனக்கு முழுச்சுதந்திரமும் எப்போதும் மாறாத இளமையும் கொண்டு நல்ல ஆலோசனைகள் கூறும் அப்பாவுடன் விவாதிப்பது ( சில நேரம் அது சண்டையில் கூட முடியும். கருத்து மோதல்கள்தான். இது எப்படி சுக அனுபவம் என்றால் அதை அப்பாக்களோடு நல்ல இணக்கத்தில் இருப்பவர்கள் மட்டுமே அறிய முடியும் ஆக மொத்தம் அவர் அப்பா என்ற பெயரில் இருக்கும் நண்பன்
3.எங்கள் வீட்டு நாய்கள்: எட்டு நாய்கள் உண்டு. காலம்தோரும் காலைச்சுற்றிவரும் அவற்றுக்கு பட்ட கடனுக்கு சோற்றைத்தவிர என்ன தருவது என்று இப்போதும் வருந்தினாலும் அவற்றுடன் வயல்வெளிகளில் சுற்றி வருவது.
4.சினிமா. ஆங்கிலப் படங்களின் பெரிய நிலையமே உண்டு சுமார் எழுநூறு படங்களுக்கு மேல் கமல்ஹாசனின் குருதிப்புனலும் விருமாண்டியும் எனது விருப்பமானவை. மிஸ்டர் பீனின் தொடர்களுக்கு நிரந்தர ரசிகன் விடியும் வரை கணினியில் சினிமா பார்க்க பிடிக்கும்.
5.ரஷ்ய மொழிபெயர்ப்பு நாவல்கள் எழுதி நூறாண்டுகளுக்கு மேலானாலும் இன்றும் படிக்க சோர்வே தராதவை. அலெக்சோய் தல்ஸ்தோயின் காரின் அழிவுக் கதிரும் அலக்ஸாந்தர் குப்ரினின் மூன்று காதல் கதைகளும் எனது விருப்பம் தமிழில் கல்கியும் சுஜாதாவும். மொத்தத்தில் புத்தகங்கள்
6. மோட்டார் சைக்கிள்: சே குவேரா போல எங்கே போனாலும் பைக்கிலேயே போவது மிகப்பிடிக்கும் எண்னை விலை தான் கொஞ்சம் இடிக்கும்.

ஆறு மட்டுமே எழுதவேண்டும் என்பதால் இத்தோடு விடுகிறேன் இப்படி எனக்கு சுக அனுபவம் தரும் பட்டியல் எழுத பக்கம் போதாது.(யாருப்பா இது பட்டியல் போட்டு ஆளுங்கள பழச சிந்திக்க உட்றது நீங்கள்ளாம் எதாவது சுழ்ற்ச்சி ஏவாரம் பாக்கலாம்யா:))




ஜெயாவுடன் எனது அனுபவம்

ஜெயாவுடன் எனது முதல் அனுபவம். இப் பதிவை நீங்கள் எப்படி எடுத்துக்கொள்ளப்போகிறீர்கள் என்பதை அறியேன். இது என்வாழ்வில் முதன் முறையாக அதுவும் ஒரு அன்னிய தேசத்தில் (அமீரகம்) நிகழ்வது கொஞ்சம் வித்தியாசமாகவே இருந்தது. இதற்கு முன் இப்படி ஒரு அனுபவம் ஏற்படாமல் போனதாலோ என்னவோ?. சரி அனுபவத்திற்கு வருவோம்.
நேற்றும் வழக்கம் போல இரவு ஒருமணி வரை வலையில் மேய்ந்துவிட்டு இன்று காலை எழுந்த போது உமாவை பார்த்தேன் ஆள் இன்னும் அப்படியே இருக்கிறார். வந்திருந்த குழந்தைகளை சில கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தார். நான் அலுவலகம் செல்ல நேரமாகிவிட்டதால் பல்துலக்கவேண்டி வெளியேறினேன் உமாவை கவணிக்க முடியவில்லை. ஆனால் இதற்கு அவர் கவலைப்பட போவதில்லை. பல்துலக்கிவிட்டு வந்ததும் ஹெட்லைன்ஸ் டுடே யில் செய்திகளை பார்த்துவிட்டு கிளம்பத்தயாரானேன். மீண்டும் உமாவின் நிணைவு வரவே ஜெயாவை பார்த்துவிட்டு பிறகு அலுவலகம் போகலாம் என்று உத்தேசித்தேன்.
இத்தனை நாட்களும் நண்பர்கள் பலர் ஜெயா பற்றி சொன்ன போது நம்பவில்லை ஆனால் நேரில் பார்த்ததும் அவர்கள் சொன்னது உண்மைதான் நல்ல நிறத்தில் பார்ப்பவரின் மனங்கவரும் விதத்தில். ஜெயாவுக்கு அம்மாவைப் போலவே பிடித்த நிறம் பச்சை. சில நேரம் விளம்பரப் பிரியை என்றாலும் எல்லாம் காலத்தின் கோலம் வேறென்ன சொல்ல. அவர் அவர்களுக்கு நேரம் வந்தால் அப்படித்தான். நேற்றிருந்தார் இன்று இல்லை.
ஆனால் வருகை தருபவர்கள் எண்ணிக்கை குறையவா போகிறது. சிலருக்கு பிடிக்காமல் போகலாம் அது அவர்களின் விருப்பம். ஆனால் வேறு வழியில்லாத அயல் நாட்டில் வசிக்கும் என்போன்றவர்களுக்கு. வேறு கதியில்லை. என்னைப்போல அமீரகத்தின் வேறு சில நண்பர்களும் இதே அனுபவத்தை பெற்றிருக்கலாம். அவர்கள் எல்லோரும் வலையில் இவ்வனுபவத்தை பகிர்ந்துகொள்வார்களா? தெரியாது.
இன்று நேரங்கழித்து அலுவலகம் சென்றதும் சக ஊழியர்கள் என்னிடம் ஏன் தாமதம் என்றவர்களுக்கு ஜெயாவை பார்த்துவிடு வந்தேன் என்றதும் காலையிலேவா என்றார்கள் அப்புறம் நீ அந்த பக்கம் கூட போகாதவனாயிற்றே எப்படிப்பா என்றார்கள். என்ன செய்ய பிடிக்கவில்லை என்றாலும் வேறு வழியில்லாத போது என்ன செய்வது?. என்னைப் பொருத்தவரை ஜெயா சுமார் ரகம்தான். போகப்போக பார்க்கிறேன்.
(ஒன்னுமில்லீங்க இன்னைக்குத்தான் முதன்முதலா ஜெயா டிவிய பாக்குரனுங்க. (நிசந்தான்ங்க) அதான் அந்த அனுபவத்த சொல்லிட்டு போலாம்னு......... செயா டிவி பத்தி குவாட்டர் கோவிந்தன் அப்புறமா எழுதுரன்னு சொல்லீருக்கார்)




காட்டில் வருடக் கணக்காகத் தனி ஆட்சி நடத்திக் கொண்டிருந்த ஒரு சிங்கம், வழிதவறி ஒரு கிராமத்துக்குள் வந்துவிட்டது. வந்த அசதியில், ஒரு மரத்தடியில் படுத்து உறங்க... அதிகாலையில் சேவல் கூவல்தான் அதன் தூக்கத்தைக் கலைத்தது. சேவலின் குரலை இதற்கு முன் கேட்டறியாத சிங்கம், கண்விழித்த கணமே, ஏதோ ஆபத்து என்று எண்ணி தலைதெறிக்க ஓட்டம் பிடித்தது. அருகில் நின்ற ஒரு காளை, தன்னைப் பார்த்துதான் சிங்கம் பயந்து ஓடுவதாக நினைத்துக்கொண்டு, அதை விரட்ட ஆரம்பித்தது. கொஞ்ச நேரத்திலேயே காட்டு வழியைக் கண்டுபிடித்த சிங்கம், காட்டின் எல்லைக்குள் நுழைந்து, ஒரு மரத்தின் நிழலில் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தது. சற்றுத் தொலைவில் நின்ற காளை, சிங்கத்தைப் பார்த்து உறுமிக் கொண்டிருந்தது. சிங்கம் பயந்து ஓடும் என்பதுதான் காளையின் எதிர்பார்ப்பு. ஆனால், தனது அதிகார எல்லைக்குள் இருக்கும் தெம்போடு அந்தக் காளை மீது பாய்ந்து, அதை அடித்துக் கொன்றது சிங்கம்.

அந்தக் காளையைப் போல்தான் மக்களும், தேர்தல் நேரத்தில் வாக்குகள் கோரிவரும் அரசியல் தலைவர்கள் பேசுவதைத் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். தனது வாக்குரிமையைக் கண்டு அரசியல்வாதிகள் அஞ்சுவதாக மயக்கம் கொள்கிறார்கள். தங்களுக்காகப் பயந்துகொண்டு பொருட்களின் விலையை ஏற்றாமல் இருப்பதாகக் கருதுகிறார்கள். ஆனால், தனது அதிகார எல்லைக்குச் சென்ற அடுத்த நிமிடம் அரசியல்வாதிகள் சாதாரண மக்கள் தலையில் பெருஞ்சுமையை ஏற்றி விடுகிறார்கள். மக்களின் சட்டைப் பையில் இருந்து சுலபமாகப் பணத்தை அரசாங்கத்தின் கஜானாவுக்கு எடுத்துச் சென்று விடுகிறார்கள்.
ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே அமலுக்கு வர இருப்பதாகக் கூறப்பட்ட பெட்ரோல், டீசல் விலை உயர்வு இப்போது அமலுக்கு வந்துள்ளது. மத்திய அரசு பெட்ரோலுக்கு நான்கு ரூபாய், டீசலுக்கு இரண்டு ரூபாய் என விலையை அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வுக்கு எதிர்பார்த்தபடியே பி.ஜே.பி. உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை வெளியில் இருந்து ஆதரிக்கும் இடதுசாரி கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இதன் உச்சகட்ட அரசியலாக பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா ஆகியோரை உறுப்பினர் களாகக் கொண்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியும், விலை உயர்வைக் குறைக்க வழி உண்டா என்று பரிசீலிக்குமாறு மத்திய அரசைக் கேட்டுக் கொண்டார்!
‘காங்கிரஸ் கட்சி சாதாரண மக்கள் பிரச்னையில் சரியாகவே நடந்து கொள்கிறது. சோனியா காந்தி எப்போதும் ‘ஆம் ஆத்மி’யின் நலனில் அக்கறை கொண்ட வராகவே இருக்கிறார். ஆனால், ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ்காரர்கள் வேறுவழியில்லாமல் இந்த விலை உயர்வு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது.’ &இப்படி ஒரு பிம்பத்தை பொதுமக்களிடம் கொண்டு செல்ல காங்கிரஸ் முயற்சி செய்கிறது. கடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது, பெட்ரோல் விலை உயர்த்தப்படும் போதெல்லாம் ‘சாதாரண ஏழை மக்கள்’ வாழ்க்கையை இந்த விலை உயர்வு எவ்வா றெல்லாம் பாதிக்கும் என்று காங்கிரஸ் கட்சி விளக்கம் கொடுத்ததும், விலையேற்றத்தைக் கண்டனம் செய்ததும் வேறு விஷயம்!
பி.ஜே.பி. கட்சி பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்வதில் எந்தவிதமான நேர்மையும் இல்லை என்று ஒரு தரப்பினர் கருதுகிறார்கள். அந்தக் கட்சியின் தலைமையில் ஆட்சி நடந்தபோது, ‘‘உலகச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பதால் இங்கும் பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை’’ என்று கீறல் விழுந்த ரிக்கார்டு மாதிரி சொல்லிக் கொண்டிருந்தனர், அந்தக் கட்சி பிர முகர்கள். இப்போது அவர்கள் வீதிகளில் இறங்கிப் போராடுவது, அக்கட்சியின் நேர்மையைச் சந்தேகிக்க வைக்கிறது.
சரி... உலகச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஏறுவதால்தான் இந்தியாவில் நாம் இவ் வளவு விலை கொடுக்க வேண்டியுள்ளதா... உள்நாட்டு வரிவிதிப்புக் கொள்கைகளுக்கு இந்த விலை உயர்வில் எந்தப் பங்கும் இல்லையா..? இப்படிப்பட்ட கேள்விகள் மக்கள் மனதில் எழக்கூடும்.
ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு சில்லறை விற்பனை விலையாக நாம் கொடுக்கும் ரூபாய் 50&ல் ஏறத்தாழ 40 சதவிகிதமே கச்சா எண்ணெயின் விலையாக உள்ளது. மீதி இருக்கும் 60 சதவிகிதம் உற்பத்திச் செலவு, லாபம், உள்நாட்டில் விதிக்கப்படும் கலால் வரி, சுங்கவரி, விற்பனை வரி போன்றவற்றுக்கே செல்கிறது. எனவே இந்த மூன்றடுக்கு வரி முறையில் மாற்றம் கொண்டுவந்து விலை உயர்வைக் குறையுங்கள் என்று இடதுசாரி கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
வரி விதிப்பு குறித்த உண்மையான விவரங்கள் பரவலாக மக்களுக்குத் தெரிந்துவிட்ட நிலையில்தான், காங்கிரஸ் கட்சி தனது அஸ்திரத்தைக் கையில் எடுத்துள்ளது. அதாவது தவிர்க்கவே இயலாத காரணங்களால்தான் மத்திய அரசு பெட்ரோல் விலையை ஏற்றியிருக்கிறது என்பதை மக்கள் தெரிந்திருக்கிறார்கள் என நினைக்கிறது காங்கிரஸ். எனவே அதன் பாதிப்பு மக்களிடம் ஏற்படுவதைக் குறைப்பதற்கு இந்த உயர்வின் மீது மாநில அரசு விற்பனை வரியை விதிக்காமல் இருக்க வேண்டும். இந்த முடிவைக் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் நடைமுறைப்படுத்துகிறார்கள். இதன் மூலம் மற்றவர்கள் ஆளும் மாநிலங்களில் அந்தக் கட்சிகளுக்கு மக்கள் சுமையைக் குறைக்கும் அக்கறை இல்லை என்ற தோற்றத்தை மக்கள் மன்றத்தில் உருவாக்க நினைக்கிறார்கள். பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்தவர்களையே அந்த எதிர்ப்பு ‘பூமராங்’ ஆகித் தாக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
கூட்டணிக் கட்சியான தி.மு.க., தன் ஆளுகைக்கு உட்பட்ட தமிழகத்தில், டீசலுக்கு விற்பனை வரியை குறைத்து, காங்கிரஸ் ரூட்டில் தானும் பயணிப்பதாக காட்டிக் கொண்டிருக்கிறது. கூடவே, ÔÔசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் போது, இங்கே ஆளுங்கட்சியாக இருப்பவை அதற்கான காரணங்களைக் கூறுவதும், எதிர்க்கட்சியாக இருப்பவை எதிர்த்துப் போராடுவதும் ஜனநாயக அரசியலில் வாடிக்கையாகிவிட்ட, வருந்தத் தக்க நிலையென்பதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லைÕÕ என்று Ôபெட்ரோல் அரசியலைÕ போட்டும் உடைத்திருக்கிறார் தமிழக முதல்வர் கருணாநிதி.
பெட்ரோல் விலை உயர்வு பிரச்னைக்கான தீர்வு மத்திய அரசிடமே இருக்கிறது. மத்திய அரசு விதிக்கும் வரிகளில் மாற்றம் கொண்டு வருவதே விலை உயர்வைக் குறைக்கும். மாநிலங்களில் விற்பனை வரியைக் குறைப்பது என்பது இந்தப் பிரச்னைக்குத் தீர்வல்ல. இருந்தபோதிலும், காங்கிரஸ் அந்த முடிவையே கையில் எடுத்துள்ளது. அரசியல்ரீதியாகத் தனிமைப்பட்ட நிலையில் இருந்த காங்கிரஸ், இப்போது இதன் மூலம் தனது கையிலும் ஓர் ஆயுதத்துடன் நிற்கிறது.
அந்த ஆயுதம் பலம் சேர்க்குமா அல்லது அந்தக் கட்சியையே பதம் பார்க்குமா என்பது போகப்போகத்தான் தெரியும்! ஜென்ராம்

குவாட்டர் கோவிந்தன்

வாசகர்களின் ஏகோபித்த வேண்டுகோளுக்கினங்க இது வெளியிடப்படுகிறது ? :))

வசனங்கள்

இப்பதிவில் நான் ரசித்த சில வசனங்களை பட்டியலிட்டுள்ளேன். நீங்களும் ரசித்திருக்கக் கூடும் இவற்றை. சில சமூகம் பேசும் சில அரசியல் பேசும் சில ஆன்மீகம் பேசும் சில நாத்திகம் பேசும் சில ஊழலை பேசும் சில நகைச்சுவை பேசும் சில நாகரீகம் பேசும் சில வன்முறை பேசும். பட்டியலின் வரிசை எண் எனதளவில் தரவரிசை பட்டியலே ஆகும்.
1. ஒரே ரத்தம் ஆனா ஒரே கலர் இந்திய புகழ் எப்படியெல்லாம் பரவுது? -குருதிப்புனல்
2.என்னால மட்டும் என்னாகிட போவுதுன்னு தான் அவன் அவன் கூவத்த சாக்கடையாக்குறான் - மகாநதி
3.சந்தோஷம்னா என்னன்னு அத அனுபவிக்ககுள்ள தெரியறதில்ல- விருமாண்டி
4.தாத்தா நீங்க நல்லவரா கெட்டவரா?- தெரீலியேப்பா- நாயகன்.
5.அந்த பேன்ல காத்துவராது வெரும் சத்தம்தான் வரும் ரும்ரும்ரும்ரும்-குணா
6.போய்ட்டார்னா - செத்துபோய்ட்டார் திரும்பிவர்ல அலைல போய்ட்டார் -அன்பே சிவம்
7.தேங்காபொறுக்கவந்தப்புறம் நாய் என்ன மனுசன் என்ன ஏறி மிதிச்சு போயிட்டே இருக்கவேண்டிதுதான் - அமைதிப்படை.
8.ஓடினாள் ஓடினா...........பராசக்தி
9.சொல்வேறு செயல்வேறு என்பதில்லை இந்த சசாங்கனிடம்- குலேபகாவலி
10.எங்கும் இருப்பேன் -அதுசரி தெருத்தெருவா சுத்துரவர் போலருக்கு- திருவிளையாடல்
அடுத்த அட்டவணை அடுத்த பதிவில்..........





கால்பந்து உலகக்கோப்பை யாருக்கு புதிய தகவல்.
இன்று ஒரு சுவாரஸ்யமான செய்தி கிடைத்தது. நம்மவர்கள் வலையிலும் வெளியிலும் கா.ப.உ.கோ பற்றி ஆளாளுக்கு எழுதித் தள்ளுகிறார்கள் அப்படியே வேறு ஏதேனும் செய்தி கிடைக்கு மா என தடுமாறிய போது கண்ணில் அகப்பட்ட செய்தி இது
இதை சொன்னவரை வைத்து பார்த்தால் ஒருவேளை அவர் சொன்னது நடந்தாலும் நடக்கலாம். ஏனென்றால் போனமுறையே அவர் சொன்ன து நடந்தது. எல்லோரும் ஒரு பக்கம் சொல்ல இவர் சொன்னது மட்டு மே நடந்தது எனவே இந்தமுறை நிச்சயமாக கோப்பை பிரேசிலுக்குத்தான்.
" கால்பந்து போடியில் பிரேசில் அணிதான் வெற்றிபெரும்னு எல்லாருக்கும் தெரியும் இருந்தும் எல்லா அணியும் உளே வருது அவங்க அவங்க ஒரு திட்டம் போட்டுத்தானே உள்ளே வரப்போறாங்க? அதே மாதிரி நாங்களும் ஒரு வியூகம் பன்னுவோம்"
சொன்னது யாருன்னு கேக்கறீங்களா அண்ணன் விஜயகாந்துங்க
(வலைல எல்லாரும் கா.ப.உ.கோ பத்தி எழுதுறாங்க நான் எழுதுலன்னா நல்லாவா இருக்கும்?)

வளர்ந்ததால் இழந்தது

உணர்ச்சிகள்

‘உணர்ச்சிகள்’ படத்துக்கு ஆர்.சி.சக்தி அவர்களுக்கு உதவிக் கதாசிரியனாகவும் படத்தின் கதாநாயக னாகவும் நான் டபுள் ட்யூட்டி செய்து கொண்டிருந்த நேரம்.
படத்தில், ஒரு பெரிய கிணற்றுக்குள் அமர்ந்து இரு காதலர்கள் பேசுவது போன்ற காட்சி. எங்களின் அன்றைய பட்ஜெட், நல்ல கமலைக்கிணற்றில் காட்சியை எடுக்க அனுமதிக்கவில்லை. கிணற்றுக்குள் என்றது கிணற்றடியாக மாறி, பின் எங்கோ ஒரு மரத்தடியில் படமானது. கமலைக் கிணறு இல்லாமல் கமலை (என்னை) மட்டும் வைத்து எடுத்தார் ஆர்.சி.சக்தி. (அந்த ஏக்கம்தானோ என்னவோ, என் கிராமத்துத் திரைக்கதைக் காதலர்கள் அவ்வப்போது கிணற்றுக்குள் அமர்ந்திருப்பார்கள். உதாரணம்... தேவர்மகன் ‘இஞ்சி இடுப்பழகா’ பாட்டு, விருமாண்டியில் ஒரு காதல் காட்சி!)
நிற்க. சமாசாரம் என்னன்னா, அதுல ஒரு டயலாக் வரும். அதை நான் சொன்னபோது ஆர்.சி.சக்தியண்ணன் ரொம்ப ரசிச்சாரு.
காட்சி சுருக்கம்: பணக்கார இளம் விதவை .

வேலைக்காரப் பையன் உஷ்ண காலம். வீட்டில் யாருமில்லாத நேரம்.
பூவுக்குள் பூகம்பம்னு வைரமுத்து சொல்வாரே, அந்த மாதிரி இருபதுக்கு ஓர் அதிர்வு வர, விவரம் சரியாகத் தெரியா விட்டாலும் உடம்பு ஒத்துழைத்ததால் பதினெட்டும் உடன்படுகிறான். உடற்திரவங்களின் பரிமாற்றம் நடந்துவிடுகிறது.
அந்தக் காலத்துக்கு மகா கி-\த்தனமான ஐடியா அது. ஜீரணிப்பதே சந்தேகமாக இருந்த நேரம். இன்னிக்கி அது சும்மா பிஸ்கோத்து.
வசனம் இப்படிப் போகும் அந்தக் காட்சியில்... பையன் பேரு முத்துனு வச்சுக்குவோம். பொண்ணு அகல்யானு வச்சுக்குவோம். ஒரிஜினல் பேரு ஞாபகமில்லை.
உடலுறவுக்குபின், அடுத்தநாள் கிணற்றுக்குள் அமர்ந்தபடி அந்த வெளியுலகம் தெரியாத காதல் நுணல்கள் பேசுகின்றன.

அகல்: ‘‘முத்து! நாம எங்கயாவது ஓடிப் போயிடலாமா?’’
முத்து: ‘‘ஏன் சின்னம்மா?’’
அகல்: ‘‘ஒண்ணா இருக்கலாமே!’’
முத்து: ‘‘இங்கனக்குள்ளயே இருந்துக்கிறலாமே? வெளிய எங்கிட்டாச்சும் போனா சங்கடமில்ல? இங்க நல்ல சாப்பாடு, தங்க எடமெல்லாம் இருக்கே! வெளிய இது மாதிரி வருமா?’’
அகல்: ‘‘ஒனக்குப் புரியலயா? நான் ஒன்னக் காதலிக்கிறேன்.’’
முத்து (சற்றே அதிர்ந்து): ‘‘எதுங்கம்மா?’’
அகல்: ‘‘நீ என்னக் காதலிக்கலியா?’’
முத்து: ‘‘அப்பிடின்னா என்னங்கம்மா?’’ (மேலும் அதிர்ந்து, முத்துவை வெறித்துப் பார்க்கிறாள் அகல்).
முத்து அடுத்து என்ன செய்வதென்று புரியாமல் கிணற்றில் ஒரு கல்லை வீசுகிறான். வட்ட வட்டமாகப் பிரிகிறது தண்ணீர் கிணற்றினுள்ளே! காதலர்களும் தான்.

இந்தக் காட்சியின் ஆதார ஸ்ருதியை எனக்குத் தந்தது, எங்கள் வீட்டில் சிறு வயது முதலே வேலை செய்த புலியேறு என்ற வேலைக்காரன்... ஸாரி, வேலைக்காரர். அப்போது புலியேறுக்கு
40 வயதிருக்கும். எனக்கு
7, 8 வயதிருக்கும்.
எல்லோரும் புலியேறை நீ... வா... போ... என்றே அழைத்ததால், நானும் ஏக வசனம்தான். பிற்பாடு ‘மனிதனுக்கு மரியாதை’ என்ற தத்துவம் புரிந்து, பழக்கத்தை நான் மாற்ற முற்பட, மறுத்துவிட்டார் புலியேறு.

7&க்கும்
40&க்கும் உரையாடல் இப்படி நடந்தது.
நான்: ‘‘புலியேறு... ஒனக்கு புள்ள, பொண்ணெல்லாம் இருக்கில்ல?’’
புலி: ‘‘ஏகப்பட்டது இருக்குங்கய்யா!’’
நான்: ‘‘ஒன் சம்சாரத்தை லவ் பண்றியா?’’
புலி: ‘‘சேச்சே! அதெல்லாம் செய்ய மாட்டேங்கய்யா! சந்தோச மாத்தான் வச்சிருக்கேன் அவளை.’’
நான்: ‘‘லவ் பண்ணா மலா? எப்பிடி?’’
புலி: ‘‘லவ்வுன்னா என்னங்கய்யா?’’
நான்: ‘‘அய்யய்ய! இது கூடத் தெரியாதா? பொண்டாட்டிய புருஷன் பண்ணியே ஆகவேண்டிய விஷயம்.’’
புலி (வெட்கி): ‘‘சின்னய்யா! அப்படி எல்லாம் பேசக்கூடாது. நீங்க ரொம்ப சின்னப்புள்ள. தப்பு! அய்யாவுக்குத் தெரிஞ்சா என்னயத்தான் வைவாக!’’
நான்: ‘‘ஏன்?’’
புலி: ‘‘அதெல்லாம் பெரியாளா ஆனதுந்தேன் பேச, கொள்ளச் செய்யலாம். இப்பப்பிடாதுங்க அய்யா!’’

நான்: ‘‘சினிமாவிலெல்லாம் காட்றாளே?’’
புலி: ‘‘அத்த எங்க காட்றாங்க? அதுக்கு முன்னாடியே முடிச்சு பாட்டுப் பாடிப்புட்டு, கதைக்குப் போயிருவாகள்ல..?’’
நான்: ‘‘சீ! அய்யய்யே... லவ்வுன்னா அது இல்ல! காதல்! எம்.ஜி.ஆர். சரோஜாதேவிய, பானுமதியையெல் லாம் பண்ணுவாரே... அது!’’
புலி: ‘‘அப்படியா! பயந்தே போனேன்! அதெல்லாம் சினிமாவுல செய்யறதுங்க அய்யா! வீட்டுல செய்ய முடியுங்களா?’’

நான்: ‘‘அப்ப, ஒன் சம்சாரம் சந்தோசமா இருக்காளானு எப்பிடித் தெரியும் ஒனக்கு?’’
புலி: ‘‘நாலு புள்ளயப் பெத்துக்கிட்டு கூடவே இருக்காளே... சரி, அத விடுங்கய்யா! நீங்க சைக்கிளை மிதிங்க அய்யா! சைக்கிள் பளகுவோம்.’’

புலியேறு சீட்டின் பின்னால் கையை வைத்து தாங்கிப் பிடித்து ஓடிவர, சைக்கிளும் கிராமியக் காதலும் பழகலானேன். அதற்குப் பிறகு... நன்றி ஜெயகாந்தனுக்கு, மலையாளப் படங்களுக்கு, ஐரோப்பிய, ஜப்பானிய சினிமாக்களுக்கு!
‘‘அக்கம்பக்கம்
வசந்தம் இல்லை.
துக்கத்தோடுஅமர்ந்திருக்கிறது
சவத்தின் மீது ஒரு பட்டாம்பூச்சி!’’
வியட்நாம் போரில் மனிதர்களோடு மனித உரிமைகளும் குண்டுகளாலும், ஏவுகணைகளாலும் காவு வாங்கப்பட்ட துயரத்தைப் பதிவு செய்த வரிகள் இவை.
‘‘வந்துட்டாங்கய்யா மனித உரிமை பேச..!’’ எனக் கேலி பேசுகிறவர்களுக்குத் தெரியுமா, மனித உரிமை என்கிற சொல்லின் வரலாற்றுக்குப் பின்னால்

15 கோடி உயிர்கள் விலை பேசப்பட்ட உண்மை?
நாடு பிடிக்கும் ராஜாக்களின் இரண்டாம் உலகப் போர் சூதாட்டத்தில் மனித உரிமைகளும், உயிர்களும்தான் பந்தயப் பொருட்கள். அதைக் கண்டித்து, மனிதர்களின் வாழ்வுரிமையை நிலைநாட்ட ஐ.நா. சபை,
1948 ம் ஆண்டு டிசம்பர் பத்தாம் தேதி மனித உரிமைப் பிரகடனத்தை வெளியிட்டது. மனிதனின் நாகரிக வாழ்வுக்கும், சுதந்திர உணர்வுக்கும் உறுதி தருகிற பிரகடனம் அது.
விலங்குகளைக்கூட மனித நேயத்தோடு நடத்த வேண்டும் என்கிற நவயுகத்தில், மனிதர்களை மனிதர்களாக நடத்துங்கள் என்று கேட்டுக்கொண்டால் கேலியாகப் பார்ப்பவர்களை என்னவென்று சொல்வது! புழுவைவிடக் கேவலமாக நடத்தப்பட்டவர்களுக்குதான், நசுக்கப்பட்டவர்களுக்குதான் மனித உரிமைக் குரல்களின் அர்த்தம் புரியும்!
சந்தேகத்தின்பேரில் உங்கள் வீட்டுக்குள் நுழைந்த போலீஸ், தெருவே வேடிக்கை பார்க்க உங்கள் கன்னத்தில் அறைந்து, பூட்ஸ் கால்களால் எட்டி உதைத்து ஜீப்பில் ஏற்றிய தருணங்களை நீங்கள் கடந்து வந்திருக் கிறீர்களா?
வீரப்பன் என்கிற குற்றவாளியைப் பிடிப்பதற்காகப் போன அதிரடிப்படையின் அத்துமீறல்களால் பிறப்பு உறுப்பில் மின்சாரம் பாய்ச்சப்படும் மரண வலியை அனுபவிக்க வேண்டாம்... அந்த வலி தாளாது கதறும் குரல்களையாவது கேட்டிருக்கிறீர்களா?
‘இந்தச் சாதியில் பிறந்த உனக்கு இவ்ளோ திமிராடா?’’ என்று சக மனிதன் வாயில் சிறுநீர், மலம் ஊட்டிய நாகரிக(!) மனிதர்களைச் சந்தித்தது உண்டா?
‘‘போலீஸாரின் லத்திகளுக்கு மட்டும் விந்து பாய்ச்சுகிற சக்தி இருக்குமானால், இந்நேரம் நான் 13 குழந்தைகளுக்குத் தாயாகி இருப்பேன்’’ என்று அஜிதா என்கிற பெண் நீதிமன்றத்தில் தந்த வாக்குமூலத்தில் வெறும் வார்த்தைகளே பதிவாகி இருக்கின்றன. வலிகளைப் பதிவு செய்யும் ஆற்றல் வார்த்தைகளுக்கு இல்லை.
எல்லா மனிதர்களுக்கும் சுய மரியாதையுடனான அவர்களின் வாழ்வுரிமைகளை வலியுறுத்துவதும், அந்த உரிமைகள் கேள்விக்குள்ளாக்கப்படும்போது குரல் எழுப்புவதும், மக்களிடம் மனித உரிமைகள் பற்றிய விழிப்பு உணர்வைக் கொண்டுசெல்வதும்தான் மனித உரிமை அமைப்புகள் செய்கிற வேலை.
கற்பழிப்புக் குற்றம்சாட்டப்பட்ட கார்பரல் சோமரத்னே என்கிற சிங்கள ராணுவ சிப்பாய், ராணுவ நீதிமன்றத்தில் தந்த வாக்குமூலம் மனித உரிமை ஆர்வலர்களை உலுக்கிப்போட்டது. ‘‘கற்பழிப்பது குற்றம் என்றால், அதற்காக என்னை நீதிமன்றம் தண்டிக்கும் என்றால், ஒட்டுமொத்த சிங்கள ராணுவத்தையும் தண்டிக்க வேண்டும். காரணம், நூற்றுக்கணக்கான தமிழ்ப் பெண்களைக் கற்பழித்துக் கொன்று, ஒரே குழியில் போட்டுப் புதைத்திருக்கிறோம். அதற்கு நானே சாட்சி!’’ என்று தன்னைக் காப்பாற்றிக்கொள்ளும் முயற்சியில் அவர் தந்த வாக்குமூலம், ஒட்டுமொத்த சிங்கள ராணுவத்தின் கேவலத்தையும் பகிரங்கப்படுத்தியது.
இது ஏதோ இலங்கையில் நடக்கிற அத்துமீறல் என்று அலட்சியமாக இருக்க முடியாது. தங்கள் மானத்தை அனுதினமும் கேள்விக்குள்ளாக்கும் இந்திய ராணுவத்தை எதிர்த்து அஸ்ஸாம் பெண்கள் நிர்வாணப் போராட்டம் நடத்தியதைப் பார்த்து நம் நாடே தலை குனிந்ததே! மானத்தைக் காப்பாற்ற உரிமை கேட்டு நிர்வாணமாகிற சோகத்தைப் புரிந்துகொண்டால், மனித உரிமையின் அவசியமும், அவசரமும் புரியும்.
போலீஸ§ம், ராணுவமும் சமூக விரோத சக்திகள் மூலமும் நிகழ்த்தப்படும் மனித உரிமை மீறல்களைத்தான் தினம் தினம் நாம் செய்திகளில் பார்க்கிறோம். அன்றாடம் நம் வாழ்வில் மீறப்படும் உரிமைகள் பற்றிய கவனமோ, அக்கறையோ பாதிக்கப்பட்டவர்களுக்கே இல்லை. அதனால் வெளிச்சத்துக்கு வராமல் போகும் சம்பவங்கள் உங்கள் வீட்டுக்கு அருகிலேயே நடந்து கொண்டு இருக்கின்றன.
மக்களின் வரிப் பணத்தில் இயங்கும் மருத்துவமனையில், ஏழை என்பதாலேயே புறக் கணிக்கப்படுதலும், ரேஷன் கடைகளில், ‘எப்படி ரேஷன் அரிசி அதுக்குள்ள தீர்ந்து போகும்?’ என்று கேட்டால், ‘போய் கோர்ட்ல கேஸ் போடு’ என்று அலட்சியமாக வரும் அதிகாரத்தின் குரலும், ‘லஞ்சம் தராவிட்டால் உனக்கு எந்த வேலையும் செய்ய முடியாது’ என்று அவமானப்படுத்தும் அரசு இயந்திரமும், ‘கறுப்பாக இருக்கிறாய்; அது எவ்வளவு அசிங்கம் தெரியுமா? எங்கள் அழகு கிரீமைப் பயன்படுத்தி வெள்ளையாக மாறிவிடு’ என்று சொல்லி ஒட்டுமொத்த மக்களின் நிறத்தையே கேவலப்படுத்து கிற விளம்பரமும்கூட மனித உரிமை மீறல்கள்தான். சாதி வேற்றுமை பார்க்கிற யாருமே மனித உரிமைகளை மீறுகிறவர் கள்தான். மதப் பிரிவினை செய்கிற யாருமே மனித உரிமைக்கு விரோதமானவர் கள்தான். பெண் என்பதால் மனைவியை, மகளை அடிமைகளாக நடத்துகிறவர்கள் எல்லோரும் மனித உரிமையை மீறுகிற குற்றத்தையே செய்கிறார்கள்.
சட்டங்களின் மூலம் மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க வேண்டிய அரசுகள் அதைச் செய்யத் தவறுகின்றன. பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காகத் தடா சட்டம் கொண்டுவருவதாகச் சொன்னது அரசு. நான்கு மாநிலங்களில் மட்டுமே பயன்படுத்தப்படும் என்ற வாக்குறுதியோடு நிறைவேற்றப்பட்ட தடா சட்டம் 23 மாநிலங்களில் நடை முறைப்படுத்தப்பட்டது. நாடு முழுவதும் 67,509 பேர் தடாவின் கீழ் கைது செய்யப் பட்டதாகச் சொல்கிறது புள்ளிவிவரம். ஆனால், அவர்களில் குற்றம் நிரூபிக் கப்பட்டவர்கள் ஐந்நூறுக்கும் குறைவான வர்களே! 60 நாட்கள் போலீஸ் காவலில் இருந்து சித்ரவதை அனுபவித்த மற்ற அப்பாவிகளுக்கு எந்தத் தீர்வும் இல்லை. கடுமையான சட்டங்கள் மூலம் திறமையான குற்றவாளிகள் உருவானதுதான் மிச்சம்.
தஞ்சாவூரில் ஒரு பெண், சாராய கும்பலால் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப் பட்டுக் கொலை செய்யப்பட்டார். பெண்கள் அமைப்பு இந்தப் பிரச்னை யைக் கையில் எடுத்தது. அச்சுறுத்தல் இருப்பதாக சாராய வியாபாரிகளுக்குப் போலீஸ் பாதுகாப்பு கிடைத்தது. கள்ளச் சாராய கும்பல் மீது புகார் கொடுத்த அப்பெண்ணின் கணவர் குற்றவாளி ஆக்கப்பட்டார். பிக்பாக்கெட் குற்றத் துக்காகக் கைது செய்யப்பட்டவரோடு அவரது வீட்டுப் பெண்களும் காவல் நிலையத்துக்கு இழுத்து வரப்பட்டனர். அந்தப் பெண்களின் தொடைகளில் ஏறி நின்று லத்திகளால் பின்புறம் அடித்து, ‘குற்றத்தை நிரூபிக்க’ போலீஸார் கடமை ஆற்றினர். ‘எங்களை அடித்தாலும் பரவாயில்லை. தொடை மீது ஏறி நிற்காதீர்கள்’ என்று கண்ணீர் மல்க வேண்டுகோள் வைத்தனர் அந்தப் பெண்கள்.
அதேபோல், ஆட்டோ டிரைவர் ஒருவரை விசாரணைக் காகக் காவல் நிலையம் அழைத்துப் போய், விசாரணை என்கிற பெயரில் அவரது கையையே உடைத்துவிட்டனர். பிறகு அவர் குற்றமற்றவர் என்று கண்டுபிடித்து, அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தது போலீஸ். ஆட்டோ ஓட்டிப் பிழைக்க முடியாமல் அவரது வாழ்க்கையே கேள்விக்குறி ஆகிப்போனது.
மீடியாவின் கண்களுக்கு உச்ச கட்ட வன்முறைகள்தான் தெரியும். ‘பேய் ஆட்சி செய்தால், பிணம் தின்னும் சாத்திரங்கள்’ என்னும் வரிகளை, ‘போலீஸ் ஆட்சி செய்தால், பிணமாகும் மனித உரிமைகள்’ என மாற்றி எழுதலாம்.
சித்ரவதை, பாலியல் பலாத் காரம், அடிதடிகள் போன்ற வற்றோடு மட்டுமே மனித உரிமையின் சம்பந்தம் முடிந்து விடுவதாக நினைக்கிறோம். குழந்தைத் தொழிலாளர் கொடுமை ஒழிந்து, அனைத்துக் குழந்தைகளுக்கும் சமமான கல்வி வழங்கப் படவேண்டும் என்கிற குழந்தைகளின் உரிமையும், தன் உடல் மீதும் வாழ்வு மீதும் அத்துமீறல் செய்வதைத் தடுக்கக்கோரும் பெண்ணுரிமையும், சாதி, மதம், இனம், மொழி, நிறம் போன்ற வேறுபாடுகளுக்கு எதிராக, ‘உன்னைப்போல நானும் மனிதன்தான். என்னை வேறுபடுத்தித் துன்புறுத்துகிற அதிகாரம் உனக்குக் கிடையாது’ என்று போராடுகிற உரிமையும்கூட மனித உரிமைக் குரல்கள்தான். மனிதனாகப் பிறந்த எவரின் அடிப்படை வாழ்வு உரிமைகள் பாதிக்கப்பட்டாலும் அது மனித உரிமை மீறலே! ‘எங்கள் மக்கள் தொகைக்கு சமூகத்தின் எல்லாத் தளங்களிலும் இட ஒதுக்கீடு வேண்டும்’ என்று கேட்பதும் மனித உரிமை சம்பந்தப்பட்டதுதான். அந்த உரிமையை மறுத்தோ, எதிர்த்தோ போராடு கிறவர்களை போலீஸ் தன் லத்திகளால் மூர்க்கத்தனமாக அடக்க நினைப்பதுகூட மனித உரிமைகளுக்கு விரோதமான செயலே!
காவல்துறை மற்றும் அதிகார வர்க்கங்களால் மனித உரிமை மீறப்பட்டால், அதை முறைப்படி எப்படி எதிர்த்துப் போராட வேண்டும் என்று பலருக்குத் தெரியவில்லை. காவல் நிலையத்தால் துன்புறுத்தப்பட்டவர்களுக்கு மாவட்ட எஸ்.பி&யிடம் புகார் சொல்ல முடியும் என்பது தெரியாத பட்டதாரிகளேகூட இருக்கிறார்கள். துன்புறுத்தல் நடந்த நாள், நேரம், இடம் போன்ற சரியான தகவல்களை ஆவணப் படுத்தி ஒரு புகார் மனு எழுதத் தெரியாமல் தவிக்கிறோம். இதையெல்லாம் பள்ளி, கல்லூரிகளில் சொல்லிக்கொடுத்து விழிப்பு உணர்வு ஏற்படுத்துவது அவசரத் தேவை. சாதி, மதம் பார்க்காமல், வேறு எந்தப் பிரிவினைக்குள்ளும் மனிதனைத் தள்ளாமல் சமமாக நடத்துகிற மனித உரிமைக் கல்வியை, கட்டாயம் பள்ளி களில் ஒரு பாடமாகக் கொண்டுவர வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்கள், மாநில மனித உரிமை ஆணையத்துக்குப் புகார் அனுப்பித் தீர்வு தேட முடியும். ஆனால், தனிமனிதர்களாக அரசு அமைப்புகளை எதிர்த்துப் போராடுவது இயலாத காரியம். கூட்டு முயற்சிதான் மனித உரிமைகளை மீட்டுத் தரும். நம்பிக்கை மிகுந்த மனித உரிமை அமைப்புகள், பெண் இயக்கங்கள், தொழிற் சங்கங்கள் போன்ற மக்கள் திரளான அமைப்புகளின் உதவியோடு போராட்டத்தை முன் னெடுக்க வேண்டும். ‘பக்கத்து வீட்டுக் காரரை போலீஸ் கைது செய்தால் எனக்கென்ன?’ என்று இருக்காமல், முறையான விசாரணை மேற்கொள்ளப் படுகிறதா என்பதை எல்லோரும் கவனிக்க வேண்டும். அதையும் தனி மனிதனாகச் செய்ய வாய்ப்பில்லை என்பதால், ஒவ்வொரு ஏரியாவுக்கும் ஒரு ‘விஜிலென்ஸ் குழு’ அமைக்கப் படலாம். குறிப்பாக, கிராமங்களில் இந்த முறை வழக்கத்துக்கு வர வேண்டும். இப்படி தொடர்ச்சியான முயற்சிகளின் மூலம்தான், நாம் நமது உரிமைகளை வென்றெடுக்க முடியும்.
உரிமைகளோடு வாழ்ந்தால்தான், நாம் மனிதர்கள். உரிமைகள் அற்றவர்களுக்கு வரலாறு தந்த பட்டம் அடிமைகள்!
நாம் மனிதர்களாக வாழப் போகிறோமா, அல்லது அடிமைகளாகவா? Thanks to vikatan .com

வக்கிறேன் பாரு ஆப்பு


சத்தம் போட்டு பேசாதடீ இதுவேற அந்தபையன் இதுக்கொரு பதிவு போட்டுரபோவுது.....
என்ன பன்ன தமிழ்நாட்டுல குடிமகன்லாம் அதிகமாயிட்டாங்களே..
நீ இந்த மாறிக்கு எதாவது கமெண்டு போட்டுகிடே இரு ஒரு நாளு என்னய மாறி எமன் எறுமைல வரமாட்டாரு உனக்கு ஆட்டோதாண்டி?
ஆமாம் பாரதி திருக்குறள எல்லாம் போடுதே இந்த பையன் எப்ப ஒம் பாட்ட போடபோவுது?..
தலைவா ஒங் குறளயெல்லாம் ஒரு ஆளு திருடி திருடி அவரு வலைப்பூவுல தினம் போடுறாரு. உனக்கு எதும் காப்பிரட் இல்லையா?
யாரோ துபாய்லருந்து மகேந்திரனாம் என்னைய சண்டியருண்ணு போடறதோட இல்லாத அம்மாவ சண்டியர்களின் தலைவின்னு வேற எழுதுதாம்.... மவனே அவன் இங்க மெட்ராஸ் ஏர்போர்ட் வந்துதான ஆகனும் அங்க வக்கிறன் பாரு ஆப்பு!
சட்டமன்றத் தேர்தலுக்கு ஓர் ஆண்டிற்கு முன்பே அ.தி.மு.கழகம் தமது கதவுகளை அகலத் திறந்து வைத்திருந்தது. கூட்டணிக்குத் தயார் என்று குரல் கொடுத்தது. டெல்லி சென்றார்கள். அங்கேயும் கூட்டணிக்குத் தயார் என்று அறிவித்தார்கள்.
அந்த அறிவிப்பு காங்கிரஸ் தலைமைக்கு விடுத்த அழைப்புத்தான். ஆனால், அதன் கதவுகள் திறக்கப்படவில்லை. சோர்ந்து போகாது சோனியாவைச் சந்திக்க, தொடர்ந்து முட்டி மோதிப் பார்த்தனர். கம்யூனிஸ்ட் கட்சிகளின் கதவோரம் நின்று பார்த்தனர். பலன் இல்லை.
காரணம், அதற்கு முன்னர் ஐந்து ஆண்டுகள் அந்தக் கட்சிகள் கசப்பான அனுபவங்களை அனுபவித்துவிட்டன. குறிப்பாக, காங்கிரஸ் தலைமையை _ சோனியா காந்தியை அ.தி.மு.க., வாய்ப்பு வரும்போதெல்லாம் அவமானப்படுத்தியது. எந்தக் காரணம் கொண்டும் பிரதமராக, சோனியா அரியணை ஏறிவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தது. அதற்கு ஏற்ப பிரதமர் பீடக் கனவு நாயகர்களுடன் உறவு கொண்டது. இன்றைக்கும் அந்தக் கனதனவான்களுடன் சேர்ந்து, சோனியாவிற்கு எதிராக மூன்றாவது அணி அமைக்க முயற்சிக்கிறது.
சோனியாவின் இத்தாலியப் பெயரைக் கண்டுபிடித்து அதனை மூச்சடக்கி உச்சரித்து, ‘இவருக்கு காங்கிரஸ்
தலைவி பதவியா?’ என்ற ஆவேசக் குரல், அ.தி.மு.க. பணிமனையில்தான் எழுந்தது.
ஒரே மேடையில் பேச வந்த சோனியா காந்தியை, விழுப்புரத்தில் ஒரு மணி நேரம் காக்க வைத்தனர். அவரோடு பிரியங்காவும் காத்திருந்தார். கடைசிவரை அந்த மேடைக்கு அ.தி.மு.க. தலைமை வரவில்லை. இது எவ்வளவு பெரிய அவமானம்?
சோனியாவின் பதிபக்தி பற்றியெல்லாம் கச்சேரி நடத்தினர்.
2001_ம் ஆண்டுத் தேர்தலில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி கண்டு வெற்றி பெற்ற பின்னர், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் டெல்லி சென்றார். சோனியாவைச் சந்தித்தார். வாசலுக்கு வந்தார். அத்தோடு கூட்டணி முடிந்தது என்று அறிவித்தார்.
சட்டமன்ற காங்கிரஸ் கட்சியை ஒவ்வொரு முறையும் உடைத்தார்கள். துதிபாடிகளை உருவாக்கினார்கள்.
கடந்த சட்டமன்றத்தில், காங்கிரஸ் உறுப்பினர்கள் பலர் மவுன விரதம் இருந்தனர். அதற்கான பரிசுகளையும் பெற்றுக்கொண்டார்கள். அ.தி.மு.க. அரசை எத்தனை பேர் விமர்சித்தார்கள்?
அமரர் எம்.ஜி.ஆர். காலத்து அ.தி.மு.க. தலைமை, இன்று இல்லை. அந்தக் கட்சி மாநிலக் கட்சியாக இருக்கலாம். ஆனால், காங்கிரஸ் தலைமைக்கே அந்தக் கட்சி சவால் விட்டுக் கொண்டிருக்கிறது.
எனவேதான், தமிழகத்தில் அந்தக் கட்சிக்குக் கடிவாளம் போடுவதை முதல் பணியாக காங்கிரஸ் தலைமை கருதியது. அடிப்படை அரசியல் நாகரிகத்தைக்கூட எட்டி உதைப்பவர்களுடனும் இனி, எந்த வகையிலும் உறவோ, உடன்பாடோ இல்லை என்று தீர்க்கமாக முடிவெடுத்தது.
ஆனால், அந்த முடிவைச் செயல்படுத்தும் ஆற்றலோ, திறமையோ தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு இல்லை. நெஞ்சுருக்கி நோய் வந்தவனின் நிலையில், மூச்சு விடுவதற்கே போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறது. கோஷ்டி அரசியல் அதன் இதயத்தை அரித்துக்கொண்டிருக்கிறது.
காங்கிரஸ் தலைமை தொடர்ந்து சந்திக்கின்ற அவமானங்கள், சவால்களைப் பற்றிக் கவலையில்லை. தேர்தலா? என் கோஷ்டிக்கு எத்தனை சீட்டு என்று அலிபாபா குகையில் பங்கு போடுவதுபோல் பங்கு போட்டுக் கொள்கிறார்கள்.
அ.தி.மு.க.வின் சவாலைச் சந்திக்கும் ஆற்றல், யாருக்கு உண்டு? சோனியா சிந்தித்தார். கலைஞருக்குத்தான் உண்டு என்று சரித்திரம் சொன்னது. எனவேதான், நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைமையில் கூட்டணி. சட்டமன்றத் தேர்தலில் அதே தி.மு.க. தலைமையில் கூட்டணி என்று முடிவுக்கு வந்தார்.
வடமாநிலங்களில் காங்கிரஸ் தலைமைக்கு சவால் பி.ஜே.பி. இங்கே காங்கிரஸ் தலைமைக்கு சவால் அ.தி.மு.க. இந்துத்வா கொள்கையிலும் இரண்டு கட்சிகளுக்கும் பரிபூரண உடன்பாடு உண்டு. சோனியாவைக் கொச்சைப்படுத்துவதிலும், இரண்டு கட்சிகளுக்கும் அமோக உடன்பாடு உண்டு.
அ.தி.மு.க.வை வெல்வதில், சோனியா _ கலைஞர் கூட்டணி முதல் வெற்றி பெற்றிருக்கிறது. தோல்வி கண்டவர்கள் சும்மா இருப்பார்களா? தி.மு.க. அரசின் ஆயுளைக் கணித்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த அரசுக்கு அச்சாணி இல்லை என்கிறார்கள். கவலைப்படாதீர்கள். கவிழ்ந்துபோகும் என்று தொண்டர்களுக்கு ஆறுதல் கூறுகிறார்கள்.
களத்தைத்தான் இழந்திருக்கிறோம். போரை இழக்கவில்லை என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் அறிவிக்கிறார்.
அவருடைய ஒரே லட்சியம் தி.மு.க.வை ஒழிப்பதுதான். கலைஞர் குடும்பம், சன் டி.வி. ஆதிக்கம் என்பதனைத் தாண்டி அவர்களால் சிந்திக்கவே முடியாது.
ஆனால், தமது போரின் முன்னணிப் படையாக தி.மு.கழகத்தை சோனியா நிறுத்தியிருக்கிறார். அந்தப் படைக்குச் சேதாரம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில், அவர் தெளிவாக இருக்கிறார்.
எனவே, இந்த நிலையில் அவர் எடுக்கின்ற முடிவிற்குப் பின்னே காங்கிரஸ் கட்சி ஒரே அணியாய்த் திரண்டு நிற்கவேண்டும். ஆனால், தி.மு.க. அரசில் தங்களுக்கும் பங்கு வேண்டும் என்று இங்கே தீர்மானம் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். அந்தக் குரலுக்கு அம்மா டி.வி. ஓஹோவென்று விளம்பரம் தருகிறது.
எந்தக் காரணம் கொண்டும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றுவிடக்கூடாது என்று விரதமிருந்த ஏடுகள், அத்தகைய செய்திகளை அலங்கரித்து, பட்டுக்குஞ்சம் கட்டி வெளியிடுகின்றன.
அரசில் அங்கம் பெறுவதில்லை என்று தேர்தலுக்கு முன்னரே பா.ம.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துவிட்டன. ஆனால், இப்போது அந்தக் கட்சிகளுக்கும் சேர்த்து கூட்டணியில் பங்கு என்று கடல் கொள்ளைக்காரர்கள் போல் சிலர், கணக்குப் போட்டுக்கொடுக்கிறார்கள்.
வெற்றி பெற்ற எல்லாக் கட்சிகளும் சட்டமன்றக் கட்சி நிர்வாகிகளைத் தேர்ந்தெடுத்துவிட்டன. அதற்காக சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. வழக்கம்போல கோஷ்டி கானம் ஆரம்பமானது.
சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் சுதர்சனம்தான் மேலிட முடிவு என்று வீரப்ப மொய்லி நெருப்பை அணைத்தார். ஆனால், அந்தத் தீ முழுமையாக அணையவில்லை. சட்டமன்ற காங்கிரஸ் செயலாளரையும் தேர்ந்தெடுக்க முடியவில்லை. கொறடாவையும் தேர்ந்தெடுக்க முடியவில்லை. மங்களகரமாகக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
இதில் வேடிக்கை என்னவென்றால், 34 பேர் கூடி நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க முடியவில்லை. இந்த லட்சணத்தில் தங்களுக்குள் எப்படி மந்திரிகளைத் தேர்ந்தெடுப்பார்கள்? அங்கேயும் கோஷ்டி கானம் ஆரம்பமாகும்.
தன் கோஷ்டிக்கு 23 சீட்டுக்களைப் பெற்றார் வாசன். கபிஸ்தலம் கைத்தடிகள் பாபநாசத்திலும் பேராவூரணியிலும் தோற்றன. அவர் பரிந்துரைத்தவர்களில் பத்துப் பேர் தோற்றிருக்கிறார்கள்.
மந்திரி பதவி என்றால், விகிதாச்சார அடிப்படையில் தனக்கு நாலு மந்திரி என்பார்கள். இதர கோஷ்டிகளுக்கு இரண்டு இரண்டு மந்திரிகள் என்பார்கள். இந்தக் கூத்தெல்லாம் வேண்டாம் என்றுதான், கலைஞரே அமைச்சரவை அமைக்கட்டும் என்று சோனியா முடிவு செய்தார்.
அவருடைய லட்சியம் பெரிது. அவமானப்படுத்திய சக்தி களை வைக்கவேண்டிய இடத்தில் வைக்கவேண்டும் என்கிறார். அந்த லட்சியமெல்லாம், இங்கே இருக்கின்ற காங்கிரஸ்காரர்களுக்குத் தெரியாது. எப்படியோ மந்திரி பதவி கிடைத்தால், சொர்க்கவாசல் திறந்த மாதிரி என்று கருதுகிறார்கள்.
உள்ளம் உள்ளவர்களுக்கு ஊசியின் துவாரத்தில்கூட இடம் கிடைக்கும். பரந்த உள்ளம் இல்லாதவர்களுக்கு, உலகம் முழுமையும் தேடினாலும் இடம் கிடைக்காது.
மந்திரி பதவி வேண்டும் என்று பிரச்னை கிளப்பியவர்களைச் சற்று உற்றுப் பாருங்கள். கடந்த சட்டமன்றத்திலும் அமர்ந்திருந்தார்கள். ஆம். அம்மாவின் ஆசீர்வாதத்தோடு அமர்ந்திருந்தார்கள். நல்லவருக்கு அழகு வாய் திறக்காது இருத்தல் என்று இலக்கணம் வகுத்துக் கொண்டார்கள்.
அவர்கள் தலைமைக்கு ஏற்பட்ட அவமானங்களைத் துடைப்பதைவிட, தங்கள் தலைகளுக்குக் கிரீடம் தேடுகிறார்கள்.
தி.மு.க. அரசிற்கு வெளியிலிருந்து ஆதரவு என்று ஏற்கெனவே காங்கிரஸ் தலைமை அறிவித்துவிட்டது. அதுமட்டுமல்ல; நிபந்தனையற்ற ஆதரவு என்றும் அறிவித்திருக்கிறது. அதன் பின்னரும் தங்களுக்கு மந்திரி பதவி வேண்டும் என்று கொடி தூக்குபவர்கள் யாருக்காகச் செயல்படுகிறார்கள்? ஆமாம். யாருக்காகவோதான் செயல்படுகிறார்கள்!