அனைவரும் அர்ச்சகராக தடை மற்றும் சிதம்பரம் கோவிலில் தமிழில் பாட தடை இரண்டு முக்கிய அநீதி தீர்ப்புகள் வெளியாகியிருக்கும் இவ் வேளையில் இப் பதிவு மிக அவசியாமாய் இருக்கிறது

பார்ப்பான் நீதிபதியாய் இருக்கும் நாடு கடும்புலி வாழும் காடேயாகும்

மேன்மை தங்கிய கனம் நீதிபதிகள் அவர்களே சமூகம் கோர்ட்டார் எனக்கு அனுப்பியிருக்கும் நோட்டீசில், சமூகம் கோர்ட்டை அவமதித்ததாகவும், அதற்கு ஏன் நான் தண்டிக்கப்படக் கூடாது என்பதற்குக் காரணம் காட்ட வேண்டுமென்றும் கோரப்பட்டிருக்கிறது. மேலும், ஒரு சிவசாமி (தலியார்) என்பவரால் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகச் சொல்லி, எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பிரமாணப் பத்திரிகையில் (Write petition) ரிட் பெட்டிஷன் நெம்பர் 568 55 இல் சமூகம் கோர்ட்டு தீர்ப்பில், கனம் திருச்சி ஜில்லா கலெக்டரைப் பற்றிச் சொல்லப்பட்டிருப்பவைகளைக் குறித்து, திருச்சி பொதுக்கூட்டத்தில், நான் 4.11.1956 ஆம் தேதியில் மேற்படி தீர்ப்பைச் சொன்ன கனம் நீதிபதிகளைக் குறை கூறியிருப்பதாகவும், அந்த நீதிபதிகளைத் தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசியிருப்பதாகவும், அவர்களுக்கு உள்ளெண்ணம் கற்பித்துத் தாக்கியிருப்பதாகவும், அதனால் சமூகம் கோர்ட்டின் கவுரவம் வெகுவாகப் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், சமூகம் கோர்ட் நீதிபரிபாலனத்திற்கு இடையூறு விளைவிப்பதாகவும் இருக்கிறதென்றெல்லாம் கண்டிக்கிறது.
இந்தக் குற்றச்சாட்டு வார்த்தைகளில், நேரிடையான பொருளுக்கு, ஏற்றமாதிரி நான் யாதொரு குற்றம் செய்தவனல்ல. பொதுவாக, மனித சுபாவத்தைப் பற்றியும், நீண்ட காலமாக அது பிரதிபலித்து வருவதைப் பற்றியுமே எடுத்துச் சொல்லி, அதற்குப் பரிகாரம் தேடவே முயற்சித்து இருக்கிறேன். உதாரணமாக பிரஸ்தாபத் தீர்ப்பில் ரிட் பெட்டிஷன் நெம்பர் 568 55 தீர்ப்பில் பாதிக்கப்பட்டிருப்பவர் ஒரு திராவிடர். அதிலும் தமிழர் (Non-Brahmin) மீது தீர்ப்புக் கொடுத்திருக்கிறவர்கள் பிராமணர்கள் என்று சொல்லப்படுகிற பார்ப்பனர்கள். இந்தத் தீர்ப்பின்மீது என்னுடைய ஆராய்ச்சிக்கு எட்டிய கருத்து, பாதிக்கப்பட்டவர் பார்ப்பனரல்லாதாராய் இருப்பதாலும், தீர்ப்புக் கூறினவர்கள் பார்ப்பனர்களாயிருப்பதாலும் இம்மாதிரி ஏற்பட்டது என்பது எனது தாழ்மையான முடிவு...
மநுதர்ம சாஸ்திரத்தின்படி, ஒரு பார்ப்பனரல்லாதவன் (சூத்திரன்) ஒரு நாட்டிலே (பார்ப்பனர்களும் வாழும் நாட்டிலே) நீதிபதியாகவோ, நிர்வாக அதிகாரியாகவோ, அமைச்சராகவோ, அரசனாகவோ, உயர் பதவியாளனாகவோ இருக்கக்கூடாது என்பது தர்மமாகும். அப்படியிருக்கவிடக்கூடாது என்பதும் பார்ப்பனர் தர்மமாகும். இந்த மநு தர்மந்தான் நீதிபதிகள் கையாளும் இந்துச் சட்டத்திற்கு மூலாதாரமாகும். இதற்கு உதாரணங்கள் அதிகம். கனம் கோர்ட்டார் அவர்களுக்குக் காட்டவேண்டியதில்லை என்றே கருதுகிறேன்... ஆகையினால்தான் பார்ப்பனர்கள் எந்தப் பதவியிலிருந்தாலும், அவர்களுடைய நடத்தையில் சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம், பார்ப்பனரல்லாதார்களை ஒழித்துக் கட்டுவதில், தலையெடுக்கவிடாமல் செய்வதில், சரியாகவோ, தப்பாகவோ, காலாகாலம் பாராமல் தங்கள் முயற்சிகளைச் செய்து கொண்டுதான் வருவார்கள். இப்படி இவர்கள் நீண்ட நாட்களாக செய்து வருகிறார்கள் என்பதற்கு ஏராளமான உதாரணங்கள் எடுத்துக் காட்ட முடியும்...
...என்னுடைய குறிப்பெல்லாம் பொதுவான பார்ப்பன ஜட்ஜுகள் யாராக இருந்தாலும், அவர்களுடைய நடத்தையில் சட்டத்தைப் பொறுத்து எப்படி நடந்து கொண்டாலும், தமிழனுக்குத் தன்னாலான கேடு செய்து அழுத்தவோ, அழிக்கவோ செய்ய வேண்டியது, அவர்கள் ஜாதி மதக் கடமை என்பதும், இதில் யாரும் எந்தப் பார்ப்பனரும், மறந்தும் தவறி நடக்க மாட்டார்கள் என்பதும், இந்த நிலை ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது மற்றவர் கடமை என்பதும்தான்... நான் சொல்வதெல்லாம் எங்களைக் "கீழ் சாதி' என்றும், நாங்கள் மேலே வருவது தங்களுக்கு ஆபத்து என்றும், தங்கள் மதத்திற்குக் கேடு என்றும், தங்களை மேல் ஜாதி என்றும், இந்த ஜாதிப் பிரிவுகள் இப்படியே இருக்க வேண்டும் என்றும் கருதிக் கொண்டிருக்க மநுதர்ம இந்து பார்ப்பனர்கள் ஜட்ஜுகளாகவும், வேறு எந்த உத்தியோகஸ்தர்களாகவும் எங்கள் நாட்டில் எங்களுக்கு வேண்டாம். வேறு நாட்டில் அவர்களுக்கு எவ்வளவு உயர் பதவி வேண்டுமானாலும் கொடுங்கள். அவற்றில் நாங்கள் குறுக்கிடவில்லை. இந்தக் கருத்தை வெளியிடும் வகையில்தான் பிரஸ்தாப வழக்கு பேச்சில் நான் பேசியிருக்கிறேன்...
பார்ப்பான் நீதிபதியாய், ஆட்சியாளராய் இருக்கும் நாடு கடும்புலி வாழும் காடேயாகும். ஆதலால், நாங்கள் புலிவேட்டை ஆடுகிறோம். புலி மேலே பாய்ந்ததில் ஒருவர் இருவர் அடிபட வேண்டியதுதான். "எல்லா பார்ப்பனர்களும் அப்படித்தானா?' என்று கனம் ஜட்ஜுகள் சிந்தித்து, நான் சொல்வதைத் தவறு என்று கருதலாம்...
...இந்த மாதிரி விஷயம் எப்படி இருந்தாலும், உண்மையில் விவாதத்திற்கு இடமில்லாமல், ஒரு நீதிபதி என்பவர் தவறானது என்று சொல்லும்படியான தன்மையில் நடந்து கொண்டால், தீர்ப்பு அளித்தால், அதற்குப் பரிகாரம் தேட வேண்டுமானால், பொதுமக்களுக்கு வழி என்ன இருக்கிறது? அப்பீலுக்கே போய்த் தீரவேண்டுமானால், எல்லோருக்கும் எல்லாக் காரியங்களிலும் அப்பீலில் இடமிருக்குமா? அரசாங்கத்தில் அரசர் ராஷ்டிரபதி பிரதமர் முதலமைச்சர் முதலியவர்களுடைய போக்குகளைப் பற்றியும், உத்தரவுகளைப் பற்றியும், பொதுக்கண்டனங்களும் கிளர்ச்சிகளும் செய்யத் தாராளமாக இடம் சட்ட அனுமதியும் கிடையாது என்றால், மக்களுக்குச் சுதந்திரம் எங்கே இருக்கின்றது? பரிகாரம் எப்படித் தேடுவது? பொதுஜனங்களுடைய உணர்ச்சிகளை எப்படிக் காட்டுவது?

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டதற்கு 23.4.1957 அன்று,சென்னை உயர் நீதிமன்றத்தில் பதிலளித்துப் பேசியதிலிருந்து..

28 comments:

Anonymous said...

அப்படியெனில் பிராமணர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்று சூத்திர அரசியல்வாதிகள் சொல்லுவது மட்டும் சரியா?

fhygfhghg said...

வெரி குட்.

மிகவும் தேவையான பதிவு.

அருண்மொழி said...

ஓய், இந்த கேஸை விஸாரித்த benchல் ஒன்னில்லே, மூனு பாப்பானுங்கோ இருந்தா என்று தகவல் வந்துள்ளது. எப்படி ஸரி பார்ப்பது என்றுதான் புரியவில்லை.

லக்கிலுக் said...

கலக்கல்.... உங்கள் டைமிங் சென்ஸை பாராட்டுகிறேன்....

Unknown said...

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ....
அனானிமஸ்,
வழிப்போக்கன்,
அருண்மொழி,
லக்கிலுக்,
இன்னும் ஒரு ரெண்டு மூணு பேர் வரனும் அப்புறமா இருக்கு கச்சேறி

குழலி / Kuzhali said...

ஏற்கனவே இதை கீற்று.காம் ல் படித்திருந்தேன், தேவைப்படும் போது பயன்படுத்தலாமென்றிருந்தேன், நீங்கள் மிகச்சரியான நேரத்தில் எடுத்து போட்டுள்ளீர்கள்

நன்றி

Unknown said...
This comment has been removed by a blog administrator.
Unknown said...

நன்றி குழலி, அதே கீற்றில் இருந்து எடுத்ததே இது, காலம் கனிந்து வருகையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் எனும் ......களின் விதிப்படி இப்போது பயன்படுகிறது.

வாங்க வணக்கத்துடன்,,,, இது சும்மா இப்போ சமீபத்தில் 1957 இல் பேசியது ,,,, அதனால் இன்னும் மரபுகள் மாறவில்லை,,, ஆமா எனக்கொரு ரகசியத்தை சொல்லுங்களேன்... என்னான்னா
" அதெப்படி எத்தனை ஆப்புகள் வந்தாலும் வணக்கத்துடன் ஏற்றுக் கொண்டு மீசையில் மண்ணில்லை என்கிறீர்கள்? "?

உங்களின் மரபு காக்கும் மாண்பு வாழ்க .... ஒரு தனிப்பட்ட கேள்வி : நீங்க என்ன வேலை பார்க்கிறீர்கள்?

Sivabalan said...

மகேந்திரன்,

தேவையான பதிவு.

Unknown said...

நன்றி சிபா இப்போதைய நீதிமன்ற நடவடிக்கைகளை பார்க்கையில் மிக அவசியமான பதிவாய் கருதுகிறேன்

Darren said...

அட எங்க இன்னும் அதிமேதாவிகள் ஜெயராமன் மற்றும் அதன் குருப் காணவில்லை..ஒரு வேளை அவர்களுக்கு முன்னமே தீர்ப்பு தெரியுமோ என்னவோ...

Unknown said...

//சமீபத்தில் 1972ல், இதே கருணாநிதியால் கொண்டுவரப்பட்ட இதே மாதிரியான சட்டத்துக்கு இதே சுப்ரீம் கோர்ட் ஆப்பு வைத்தது.

ஆனாலும் அசராமல் அவரும் சில பத்தாண்டுகள் கழித்து மீண்டும் அவசர சட்டமியற்றுகிறார். மீண்டும் சுப்ரீம் கோர்ட் வந்து 'சமூகநீதி' கொடுமையிலிருந்து கடவுளை காப்பாற்றுகிறது.//

வணக்கத்துடன் நன்றி:) நீங்க என்ன சொல்றீங்கன்னே தெரியலியே எல்லா பக்கமும் இப்படி குத்தினா எங்க வலிக்குதுன்னு யாருக்கும் தெரியலீங்களே? :)

Unknown said...

//அட எங்க இன்னும் அதிமேதாவிகள் ஜெயராமன் மற்றும் அதன் குருப் காணவில்லை//

நன்றி தரன்.. ஒருவேளை இங்கே வந்தால் சாமிகுத்தம் ஆகிப் போகும் என்று பயந்திருப்பார் :))

PRABHU RAJADURAI said...

பொதுவாக ஒரு சட்டம் செல்லாது என்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அது விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படில் குறிப்பிட்ட சட்டத்தினை செயல்படுத்துவதை வழக்கு முடியும் வரை தடை செய்வது நியாயம்தானே! இதற்காக இவ்வளவு புகைச்சல் தேவையில்லையே...இது ஒரு இடைக்கால தடைதான். வழக்கு நிலுவையில் இருக்கையில் சரியான ஒரு செயலும் கூட

Unknown said...

//குறிப்பிட்ட சட்டத்தினை செயல்படுத்துவதை வழக்கு முடியும் வரை தடை செய்வது நியாயம்தானே//

என்னை பொறுத்தவரை காலதாமதப் படுத்தும் நீதி மறுக்கப் படுவதற்கு சமம். தடை என்பது காலம் கழிக்க ஒரு வழி. இதன் மூலம் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு இதை இழுத்தடிப்பார்கள் என்பது தாங்கள் அறியாதது அல்ல கருத்துக்கு நன்றி ராஜதுரை அவர்களே

Unknown said...

வாங்க வணக்கம் நீங்க போலீஸ்காரா? இந்த மாதிரி உள்குத்து வெளிய தெரியாம குத்துறீங்க நான் கூட நேத்து ஒன்னும் முதல்லில் புறியாம மீசை மண்ணு பத்திலாம் கேள்வி கேட்டுட்டேன் அட அதை கேட்டதும் நல்லதுதான் நீங்க எங்க குத்துறீங்கன்னு இப்பல்ல தெரியுது

Unknown said...

//ஜெயலலிதாவின் பதவியேற்பு செல்லாது என தீர்ப்பளித்தால் மட்டும் இனிக்கிற நீதி இப்போது கசக்குதோ? கலிகாலமடா சாமி! //

பரம பிதா நீங்க சொன்னதையே நானும் திருப்பி உங்களை கேக்கவா?
ஜெயலலிதா பதவியேற்றது செல்லாதுன்னா கசக்குதுல்ல? இப்ப மட்டும் இந்த தீர்ப்பு இனிக்குதா?

//ரோட்டில ஒடுரதுகெல்லாம், கருப்பு கவுன் போட்ட நெனப்புல பேசுதுக//

இன்னொரு விஷயம் இந்த மாதிரி தெருவில போறதுல்லாம் பேசுதுங்கன்ற மாதிரி அநாகரீகமா என் பதிவில எழுதுவது இதுவே கடைசியா இருக்கட்டும் என்னா?

Unknown said...

பரம பிதா மீண்டும் மீண்டும் தவறு செய்கிறீகள், எனது பதிவில் சக வலைப்பதிவரை எந்த இடத்திலும் சாதியோ அல்லது மதமோ சொல்லி நான் எழுதியதில்லை. அதே போல எழுதும் பொழுதும். நான் ம்யூஸ் அவர்களிடம் பலமுறை என பதிவில் ராமஸாமி நாயக்கர் என்றே எழுதி வந்தார் அதையும் கண்டித்தேன் ஆனால் கோபத்தை கிண்ட வேண்டும் என்றே தொடர்ந்து எழுதியதால் நானும் பதிலுக்கு பாப்பான் ராஜாஜிக்கு தெரியும் எனும் வார்த்தையை பயன்படுத்தினேன். இப்பதிவின் கருத்து என்பது பெரியார் சொன்னது அதை அப்படியே வெளியிட்டேன் அவரை இன்னும் நாயக்கராகவே பார்க்கும் நீங்கள் என்னையும் மற்ற பதிவர்களையும் சீண்டும் விததைதில் எழுதுவது எனக்கு மேலும் இதுபோல பதிவுகளை வெளையிடத் தூண்டுமே ஒழிய எந்த வகையிலும் எனை அது கட்டுப் படுத்தாது இப்போதும் நான் உங்களிடம் இது போல் என்பதிவில் எழுத வேண்டாம் என்றே சொல்வேன். மேலும் இதுவே உங்கள் விருப்பமாய் இருப்பின் தாராளமாக எத்தனை தூரம் தரம்தாழ முடியுமோ போகலாம் எனக்கு எந்த கவலையும் இல்லை. என்னிடமிருந்து பதிலுக்கு எதிர்பார்த்தால் உங்களுக்கு கிடைப்பது எதுவ்மிலை.

//simply perverted minds!! //
this is the limit

மு. சுந்தரமூர்த்தி said...

பிரபு ராஜதுரை அவர்களே,
நீங்கள் வழக்குரைஞர் என்பதால் சில பொதுவான சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளலாம் என்று கேட்கிறேன்.

சட்டமியற்றும் (அல்லது ஏற்கனவே இருக்கும் சட்டத்தில் திருத்தம் செய்யும்) அதிகாரம் சட்ட/நாடாளுமன்றத்திற்கும், அச்சட்டங்களை சரியாக விளக்கி, தீர்ப்பளிப்பதே நீதிமன்றங்களின் பணி என்பது என் புரிதல். நாடாளுமன்றமோ அல்லது சட்டமன்றமோ இயற்றிய அல்லது திருத்திய சட்டம், அது அரசியல் சட்டத்துக்கு புறம்பாக இல்லாத வரையில், செல்லுபடியாகாது என்று தள்ளுபடி செய்யவோ அல்லது அச்சட்டத்தினை நடைமுறைப்படுத்தத் தடைவிதிக்கவோ நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உண்டா? ஆம் என்றால் நீதிமன்றங்களின் அதிகார வரம்பு நாடாளுமன்றத்தின்/சட்டமன்றங்களின் அதிகார வரம்பைவிட கூடுதலானதா?

இக்குறிப்பிட்ட சட்டத்தின் முன்வரைவு சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதற்கு ஆளுநரின் ஒப்புதல் கொடுக்கப்பட்டுவிட்டதா? கொடுக்கப்பட்டிருந்தால் அது இப்போது சட்டமாகிவிட்டது என்று தானே பொருள்? உச்சநீதிமன்றம் எந்த அடிப்படையில் இடைக்காலத் தடை விதித்துள்ளது என்பதை விளக்க இயலுமா? அதாவது மாநில அரசின் சட்டத்தை override செய்யும் மத்திய அரசின் சட்டம் அல்லது அரசியல் சட்டம் ஏதாவது இருப்பதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளதா?

இன்னொரு கேள்வி, ஒரு வழக்கில் வாதி, பிரதிவாதி இருக்கும்போது இடைக்காலத் தீர்ப்பு யாருக்குச் சாதகமாக இருக்கவேண்டும் என்று நெறிமுறைகள் உள்ளனவா? உதாரணமாக இந்த குறிப்பிட்ட வழக்கில் இச்சட்டத்தால் பாதிக்கப்பட்டதாக கருதுபவர்களுக்கு (எதிர்த்து வழக்கு தொடுத்தவர்களுக்கு) சாதகமாக இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அது இத்தடையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதகமாக அமைகிறதே. அவர்கள் இன்னொரு வழக்கைத் தொடுத்து இடைக்காலத் தடைநீக்கம் பெறமுடியுமா?

PRABHU RAJADURAI said...

சுந்தரமூர்த்தி,

தங்களது கேள்விகளுக்கு நன்றி. அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பாக இருக்கும், இயற்றப்படும் சட்டங்களையே செல்லாதது என நீதிமன்றங்கள் தீர்மானிக்க முடியும். Unreasonableness, undue hardship என்று கூறப்படும் காரணங்களையும் இதற்குள் அடக்க முடியும்.

இயற்றப்பட்ட சட்டம் ஆளுஞரின் ஒப்புதல் பெற்ற பிறகே சட்டமாகிறது. அவ்வாறு சட்டம் நடைமுறைக்கு வந்த பின்புதான் நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யப்பட முடியும். இவ்வாறு ஒரு சட்டம் வரப்போகிறதென்ற எதிர்ப்பார்ப்பில் வழக்கு தாக்கல் செய்ய முடியாது.

நான் இந்த சட்டம் பற்றியோ அல்லது வழக்கு பற்றியோ படிக்கவில்லை என்பதால், என்ன மேற்கோள் காட்டப்பட்டது என்பது தெரியாது. ஆனால் எனது அனுமானம், ‘இந்து மத உரிமைகளை பாதிக்கிறது என்ற அடிப்படையில்தான்’ இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் வழக்காடிய திரு.பராசரன் இந்த சட்டத்தின் மூலம் பெளத்தர்கள், சீக்கியர் கூட அர்ச்சகர் ஆகும் நிலை உள்ளதாக வாதாடியதாக திரு.பத்ரியின் வலைப்பதிவில் படித்தேன்...அபத்தம்!

மூன்றாவது எந்த வழக்கினை பற்றி கேட்கிறீர்கள் என்று புரியவில்லை. சிதம்பரம் வழக்கினைப் பொறுத்தவரை, எனது சுய விருப்பம் எப்படியோ, நானும் அந்த நீதிபதி போலத்தான் இடைக்கால உறுத்துக் கட்டளை வழங்கியிருப்பேன் (interim injunction). உச்ச நீதிமன்ற வழக்கினைப் பொறுத்தவரையும் தடை வழங்கியது வழக்குரைஞராக பணியாற்றும் எனக்கு வியப்பான செய்தியல்ல. ஏனெனில், பொதுவாக வழக்கு தாக்கல் செய்யப்படும் பொழுது உள்ள நிலை வழக்கு நிலுவையில் இருக்கையில் காப்பாற்றப்பட வேண்டும் (status quo to be maintained). ஆனால் பல வழக்குகளில் இவ்வாறு தடை உத்தரவு வாங்குவது தற்பொழுது உள்ள நிலைப்பாட்டில் கடினம்தான். ஆனால், இதுவே சரியான அணுகு முறை.

இது குறித்து விரிவாக எழுத எண்ணியிருந்தேன். நேரம் வாய்க்கவில்லை!
இனி தயவு செய்து என் பின்னூட்டத்திற்கு பின்னூட்டம் இடுபவர்கள், எனக்கு தனியே ஒரு மின்னஞ்சல் செய்து விடவும். ஏற்கனவே படித்த பதிவுகளை மீண்டும் திறந்து பார்க்கும் வசதியும், நேரமும் இல்லை.

அன்புடன்
பிரபு ராஜதுரை

Unknown said...

நன்றி ராஜதுரை அவர்களே சுந்தர மூர்த்தி அவர்களின் கேள்விக்கு பொருப்புடன் பதில் சொன்ன உங்களுக்கு மீண்டும் நன்றிக|ள்

PRABHU RAJADURAI said...

மேலும் விபரங்களுக்கு
http://marchoflaw.blogspot.com/2006/08/blog-post_19.html

Unknown said...

நன்றி ராஜதுரை அவர்களே

Anonymous said...

vayiru yerinthu yerinthu innum eththanai naalthan saahap pohireerkal.. paarppan paarppan enru vayiru erikinravarkalukku oru
kelvi.. neengal paarppanai ethirppathu arivinaal alla,, vayiththerichchal ennum keelana unarchial. ingu nadanthathu, nadakkinrathu ellam ellarukkum therium. paarppana ethirppu ennum keelana prachara uththikku dhayavu seithu inimelum yaarum bali akatheerkal..

Unknown said...

//vayiru yerinthu yerinthu innum eththanai naalthan saahap pohireerkal.. paarppan paarppan enru vayiru erikinravarkalukku oru
kelvi.. neengal paarppanai ethirppathu arivinaal alla,, vayiththerichchal ennum keelana unarchial. ingu nadanthathu, nadakkinrathu ellam ellarukkum therium. paarppana ethirppu ennum keelana prachara uththikku dhayavu seithu inimelum yaarum bali akatheerkal//

இன்னாபா இங்கிலீசு அனானி நாங்க இல்லாத நேரம் வந்து வயிரு எரிய்துங்கறே? வரண்டி ஒனக்கு பதில் இருக்கு என்னிய இன்னா நெனைச்சே

Anonymous said...

i love you

Anonymous said...

பெரியார் - கன்னடம் பேசும் 'தமிழர்'
கருணாநிதி - தெலுங்கு 'தமிழர்'
வைகோ - தெலுங்கு பேசும் 'தமிழர்'
OBC பட்டியல்ல 10 இந்தி பேசும் 'தமிழர்' இருக்காங்க...
இப்ப சாலைப்பணிக்கு வந்திட்டாங்க இந்தி பேசும் பீஹாரிக...Madras airportல எல்லாமே இந்திக்காரங்க... நாளைக்கு OBC பட்டியல்ல சேருவாங்க இந்தி பேசும் தமிழ் தெரியாத 'தமிழர்'களா...

பார்ப்பான் தமிழ் பேசும் 'அன்னியன்'.

ஏன் இந்த வலைப்பதிவு ல இடுகை இடும் 'தமிழர்கள்'ல எத்தனை பேர் தெலுங்கு...

பாப்பான் பாப்பான் பார்ப்பான் ன்னு சொல்லுது எல்லா உண்மைய மூடி மறைக்க ...வேறன்ன?

இப்ப குஜராத்துல குஜ்ஜார்...தமிழ் நாட்டுல 3% பேர் தான் பார்ப்பனர்க...நாளைக்கு தமிழ் நாட்டுல பெரிசு இருக்க...பார்ப்பான் இல்ல....OBCக்குள்ளையே பெரிசு காத்திருக்கு...உத்தப்புரம் வெறும் உதயம்...

அப்ப உத்தப்புரத்துல நடந்துதே எப்படி...யார்யா அங்க பார்ப்பான்?

இந்திக்கார அர்ஜுன் ஸிங்குக்கு இந்தி தெலுங்கு பேசும் 'தமிழ்' அடியாட்கள் நிறைய போல....ஹீ ஹீ!!!

Anonymous said...

URDU IMPOSITION FROM DMK AND RESERVATION OF HINDI CASTES

When it come to reservation Tamilnadu loves Hindi speaking OBCs compared to Tamil speaking forward castes.

The Tamil (or Telugu) political parties continue say Paarpaans, paarppaiyans, etc. The Paarppaans are Tamils. Even without Paappaans things are going on Uthamapuram, Southern districts and also 2-tumbler system (also sponsored by the Telugu parties).

The Bihari workers working in Tamilnadu are NOT Tamils.

The arrogant Hindi speaking airports staff in Chennai airport are not Tamils.

Also several Urdu and Hindi speaking castes in Tamilnadu reserved lists DONT speak Tamil.

From this it is obvious reservation movement is plan to destroy Tamil and replace with Hindi speakers.

Karunanidhi also has made Urdu language compulsory in muslim schools in Tamilnadu. So they really are liking Urdu and Hindi compared to Tamil language.

Many people who support elimination of Tamils with these Hindi and Telugu speakers are obviously non-Tamils in TN reserved category.