A CUT AND PASTE POST- PERIYAR

நான் சாதாரணமான ஆள்தான். என் கூட்டத்தில் வந்து கூடியிருக்கிறீர்கள். சாதாரணமான ஆள்தான் என்றாலும் எப்படிப்பட்டவன் என்று உங்களுக்குத் தெரியும். நீங்கள் கும்பிடுகிற சாமிகளான ராமனையும், பிள்ளையாரையும் உடைத்து தூள்தூளாக ஆக்கினவன்.

பெரும்பாலோர் மதிக்கிற ராமனையும் அவன் ஒரு அயோக்கியன். அவன் மனைவி சீதை ஒரு ஒண்ணா நம்பர் விபச்சாரி; "அவள் சினையானதே' ராவணனால்; அதுவும் இலங்கையில் என்பதை ராமாயணத்திலிருந்தே எடுத்துக்காட்டி வருகிறவன். 20, 30 வருஷத்திற்கு முன்பாகவே நான் சாஸ்திரத்தை, மநுதர்ம சாஸ்திரத்தை நெருப்பிலே போட்டு எரித்தவன். இந்த ராமாயணத்தை எரிக்கணும் என்று சொன்னவன். எல்லோரும் ஜனநாயகம் (மக்களாட்சி) என்று சொல்வதை நான் முழுப் பித்தலாட்டம், மக்களைப் பிடித்த பேய் என்று சொல்லுகிறவன்.


சாதி ஒழியணும் என்பதுதான் எங்களுடைய முதலாவது கொள்கை. பார்ப்பானும் இருக்கக்கூடாது; பறையனும் இருக்கக்கூடாது; மனிதன்தான் இருக்கணும் என்று சொல்லுகிறோம். ஜனநாயக அரசாங்கம் என்று சொல்லுகிறான். சாதி காப்பாற்றப்படும் என்பது, மூலாதார உரிமை என்று அரசமைப்புச் சட்டத்திலே எழுதி வைத்துக் கொள்கிறான். அதில் நாம் சூத்திரன் நாலாஞ்சாதி மக்கள் பார்ப்பானுடைய வைப்பாட்டி மக்கள்! இதுக்குப் பேர் ஜனநாயகமா? நாம் 100க்கு 97 பேர். அவன்கள் 100க்கு 3 பேர். அவனிடம் ஆட்சி இருக்கிறது. அவன் சாதியைக் காப்பாற்ற சட்டம் செய்து வைத்துக் கொண்டிருக்கிறான். இந்த நாட்டிலே இருக்கிற மற்றக் கட்சிக்காரனெல்லாம் அவன் போடுகிற எலும்புத் துண்டைக் கடித்துக் கொண்டு, அந்தச் சட்டத்தின் மீது சத்தியம் பண்ணிக் கொடுத்துவிட்டு அவனுடைய சட்டசபையில் உட்காருகிறான். அவனுக்கு சாதி ஒழிய வேண்டும் என்ற எண்ணம் இருக்க முடியுமா? சட்டத்தை மாற்ற வேண்டும் என்றால், கிளர்ச்சி தவிர வேறு ஏதாவது வழி நமக்கு இருக்கிறதா?

20 கோடி ரூபாய் இந்த வருஷத்து கல்விக்கு செலவாகிறதே! இவையெல்லாம் யாருடைய பணம்? நம் பணம்தான்; ஆனால் இதனால் படிக்கிறவன் நூற்றுக்கு நூறு பார்ப்பான் தானே? நாம் வரி கொடுத்துத்தானே இப்படிப் பணம் செலவிட முடிகிறது? நம்மிடத்தில் வரி வாங்கணும் என்றால், அவன் தேவையை உத்தேசித்து அல்ல. நம்மைப் "பாப்பராக' (பணம் இழந்தவன்) ஆக்கவேணும்; பிச்சையெடுக்கும்படிச் செய்ய வேண்டும் என்பதைத் தவிர வேறு என்ன? ஏன் நமக்குப் படிப்பு வராதா? நம் வாயிலே மாத்திரம் படிப்பு நுழையாதா?
இவற்றையெல்லாம் மீறி நம் பையன்கள் இப்போது படித்து விடுகிறார்கள்.


அதைத் தடுக்கவும் சூத்திரனைப் படிக்க விடக்கூடாது என்பதற்கு என்னென்ன செய்ய வேண்டுமோ, அத்தனையும் பார்ப்பான் செய்கிறான். வெளிப்படையாகச் சொல்லவில்லை. வேறுவிதமாக அதையே சொல்லுகிறான்.

பள்ளிக்கூடத்திலே தகுதி, திறமை அடிப்படையில் இனிமேல் சேர்க்கணும்; ஜாதி அடிப்படையில் பின் தங்கியவர்கள் இவர்கள் என்பதைப் பார்த்து, எந்தவிதச் சலுகையும் கூடாது என்பதாக ஓர் உத்தரவு போடணும் என்கிறான். இன்னும் நூற்றுக்கு 70 - 80 மார்க் வாங்கினவனைத்தான் சேர்க்கணும் என்கிறான்.

பார்ப்பானைத் தவிர மற்றவரைச் சேர்க்கணும் என்றால் திறமை இல்லையே என்று சொல்லி விடுகிறான். நம் பையன்கள் டாக்டருக்குப் படிக்கணும்; எஞ்சினியருக்குப் படிக்கணும் என்றால் நூற்றுக்கு 60 மார்க்கு வாங்கணும் என்கிறான். நம் பையன்கள் 35 மார்க் வாங்குவதே மிகவும் கடினம்; இவனை 60 மார்க் வாங்கு என்றால் அது எப்படி முடியும்? சாதாரணமாகப் பாஸ் பண்ணுவது எதற்கு? யோசிக்க வேண்டாமா? இன்றைக்குப் போத்தனூரிலே ஒரு வீட்டிலே தங்கியிருந்தேன். 70,000 பெறுமான மதிப்புள்ள பெரிய வீடு; கட்டி 30 வருஷமாயிற்று; இன்றும் நன்றாகத்தான் இருக்கிறது; இதை என்ன படிச்சு 60 மார்க் வாங்கிய தகுதி, திறமை உள்ள எஞ்சினியர்தான் கட்டினாரா?

டாக்டர், எஞ்சினியர் என்று ஆயிரம் இரண்டாயிரம் கொள்ளையடிக்கிற உத்தியோகம் எல்லாம் நமக்குக் கிடைக்காதபடி என்னென்ன செய்ய வேண்டுமோ, அத்தனையும் செய்து அவனே படிக்கும்படியான அளவுக்கு வசதி செய்து கொண்டான். வேறு ஒரு நாடாக இருந்தால், இந்த மாதிரி அக்கிரமம் செய்கிற பார்ப்பானைச் சுட்டுத்தள்ளியே இருப்பார்களே!

சாதாரணமாக நாட்டு வைத்தியம் பண்ணணும் என்றால், தனியாகப் பிராக்டீஸ் (தொழில்) செய்கிறவர்கள் ஒரு சர்டிபிகேட் இருந்தால் போதுமானது. ஓமியோபதி டாக்டர் என்கிறான். ஆனால், அலோபதி ஆங்கில மருத்துவர் டாக்டர் படிப்பு படிக்கணும் என்றால் 60 மார்க் வாங்கணும் என்றால் என்ன அர்த்தம்?

3 பேர் வேலைக்கு வரணும் என்றால் 30 வருடமாக நாம் முட்டிக் கொள்ள வேணும். பார்ப்பான் தகுதி போச்சு, திறமை போச்சு என்று கூச்சல் போடுகிறான் என்றால் இது எவ்வளவு அயோக்கியத்தனம்? இந்த அயோக்கியத்தனத்திற்குக் கேள்வி கேட்பாரே இல்லையே! ஒரு பயலும் இதை எடுத்துக்காட்டி இதற்குப் பரிகாரம் தேடணும் என்று வருவதே கிடையாதே! நம்முடைய நிலைமை அப்படி இருக்கிறது.

தகுதியும், திறமையும் தான் முக்கியமா? அதை அளப்பதற்கு தர்மா மீட்டர் பார்ப்பான்தானா? நம்மவன் படித்தால் என்ன, இவன் அப்பன் வீட்டு முதல் குறைந்தா போகிறது? முதலிலே ‘இண்டர்மீடியெட்' படித்தால் போதும் என்றான். இப்போது என்ன என்றால், நீ அது பாஸ் பண்ணியிருந்தாலும் 60 மார்க் வாங்கணும் என்றால் என்ன போக்கிரித்தனம்!

மாடு மேய்க்கிறவனெல்லாம் மந்திரியாகி விடுகிறான்! அவன்தான் பெரிய பெரிய எஞ்சினியரை எல்லாம் நிர்ணயிக்கிறான். சீப் எக்சிகியூடிவ் எஞ்சினியர் போன்ற பலவித உத்தியோகஸ்தர்களையும் நியமிக்கிறான் என்றால் அதற்கு மாத்திரம் தகுதி, திறமை வேண்டாமா?


சேலம் - பொட்டிரெட்டிப்பட்டியில் 25.3.1959 அன்று ஆற்றிய உரை

14 comments:

சுந்தரவடிவேல் said...

இன்றைக்கும் பொருந்தும்!
எங்கிருந்து எடுத்தீர்கள் என்ற விபரத்தையும் எழுதினால் நன்றாக இருக்கும். நன்றி.

கதிர் said...

//மாடு மேய்க்கிறவனெல்லாம் மந்திரியாகி விடுகிறான்!//

சரிதான்!!

ரவி ஸ்ரீநிவாஸ் said...

In 1959 there was reservation for SCs,STs and Backward Castes.So the
allegation that Brahmins monopolised education was a lie.Periyar the irrationalist would
always blame one caste for all such
problems.

கப்பி | Kappi said...

//A CUT AND PASTE POST//
:)

பகிர்ந்தமைக்கு நன்றி மகி!

Sivabalan said...

மகி,

தொடர்ந்து உங்களால் முடிந்தவற்றை கொடுத்துவருகிறீர்கள்.

நன்றி

Anonymous said...

மாடு மேய்ப்பவர்களிடம் இவ்வளவு காழ்ப்புணர்ச்சியா? தில்லியில் இடஒதுக்கீடு எதிர்ப்பு போராட்டம் நடத்திய மேற்சாதி மாணவர்கள் செருப்புக்கு பாலிஷ் போடுபவர்களை இழிவுபடுத்தினார்களே அது மாதிரி இருக்கிறது.

PRABHU RAJADURAI said...

நன்றாகத்தான் இருக்கிறது, அவர் பேசியதை தற்பொழுது படிப்பதும்...

Unknown said...

பின்னூட்டமிட்ட கப்பி, வணக்கத்துடன், சிபா, அனானி, சுந்தர வடிவேல், தம்பி, ரவி சீனிவாஸ், பிரபு ராஜதுரை அணைவருக்கும் நன்றி... ஆமா யாருக்குமே புதுசா விவாதம் பன்ன தோனலியா?

Anonymous said...

இந்தி பேசுவோருக்கு தமிழகத்தில் இடஒதுக்கீடு உண்டு; தமிழ் முற்பட்டோருக்கு இடவிலகல்

அன்புள்ள அய்யா,

தற்போதைய தமிழக அரசின் இடஒதுக்கீடு கொள்கை தமிழ் என்கிற அடிப்படையில் அல்லாமல் வெறும் ஜாதி என்கிற அடிப்படையில் உள்ளது.

நீங்கள் பிற்பட்டோர் பட்டியலை பார்த்தால் தமிழ் தவிற்று பிறமொழிகள் பேசும் ஜாதிகள் உள்ளன.

இதில் இந்தி பேசும் முஸ்லிம்கள், ஸவுராஷ்டிரியர்கள்; தெலுங்கு பேசும் ரெட்டியார்கள்,நாயுடுகள், கன்னடம் பேசும் கவுண்டர்கள் ஆகியோர்க்கெல்லாம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

தமிழ் பிராமிணர்களை அயோக்கியர்கள் என கருதும் தி மு க இந்தி பேசும் வடக்கர்கள் வாக்குகளை பெற இந்தி மொழி தேர்தல் பிரசுரங்களை வெளியிட்டது.

தமிழகத்தில் தமிழ் பிராமணர்கள் தமிழர்கள் அல்ல என பிரச்சாரம் செய்கின்றன ப ம க, தி மு க ஆகியோர்.

கர்ணாநிதிக்கு தமிழ் பிராமணர்கள் வெறுப்பு இந்தி மொழிக்கு மேலானது போலுள்ளது.

எனது வகுப்பில் இந்தி பேசும் மாணாக்கர் விலைக்கொடுத்து OBC சான்றிதழ் வாங்கி அண்ணா பல்கலைக்கழகம் சேர்ந்தார். இந்தி/உருது மட்டும் பேசும் முஸ்லிம் தமிழகத்தில் ஜாதிகள் இடஒதுக்கீடு பெறுகின்றனர்.

சென்னை விமானகத்தில் தமிழ் ஊழியர்கள் அவ்வளவு இல்லை. எல்லாமே இந்தி பேசுபவர்கள் தான்.

தமிழக CBSE பள்ளிகள் இந்தி திணிப்பு தான்.

இந்தி, கன்னடம், தெலுங்கு பேசும் ஜாதிகள் வருக; தமிழ் பிரமாணர் ஒழிக என கொள்கை வைத்துள்ளது தற்போதைய இடஒதுக்கீடு சட்டம்.

கர்நாடகத்தில் கன்னடத்திற்கு பிரதானம் அளிக்கப்படுகிறது. கன்னட பிராமணர் கன்னடர் ஆவார். தமிழகத்தில் தமிழ் பிராமணர் வெளியாள் எனவு இந்தி, உருது, கன்னடம், தெலுங்கு ஜாதிகள் தமிழர்கள் என்கிற பெயரில் இடஒதுக்கீடு வாங்குகின்றனர்.

தமிழக தமிழர்களுக்கா வெறும் ஜாதி கணக்கில் உகுந்தவருக்கா?

BadNewsIndia said...

மந்திரிக்கு படிப்பு வேண்டாமா என்று கேட்பது நியாயம். ஆனால், இது என்ன?

//பார்ப்பானைத் தவிர மற்றவரைச் சேர்க்கணும் என்றால் திறமை இல்லையே என்று சொல்லி விடுகிறான். நம் பையன்கள் டாக்டருக்குப் படிக்கணும்; எஞ்சினியருக்குப் படிக்கணும் என்றால் நூற்றுக்கு 60 மார்க்கு வாங்கணும் என்கிறான். நம் பையன்கள் 35 மார்க் வாங்குவதே மிகவும் கடினம்; இவனை 60 மார்க் வாங்கு என்றால் அது எப்படி முடியும்? சாதாரணமாகப் பாஸ் பண்ணுவது எதற்கு? யோசிக்க வேண்டாமா? இன்றைக்குப் போத்தனூரிலே ஒரு வீட்டிலே தங்கியிருந்தேன். 70,000 பெறுமான மதிப்புள்ள பெரிய வீடு; கட்டி 30 வருஷமாயிற்று; இன்றும் நன்றாகத்தான் இருக்கிறது; இதை என்ன படிச்சு 60 மார்க் வாங்கிய தகுதி, திறமை உள்ள எஞ்சினியர்தான் கட்டினாரா?
//

மடத்தனம் அல்லவா இது?

மகேந்திரன், கட்/பேஸ்ட் எல்லாம் சரிதான். அடுத்தவர் மனம்/நம்பிக்கை இதை எல்லாம் பற்றி கவலைப்படாமல் பெரியார் பேசி இருக்கலாம். நீங்களாவது சில பாகங்களை அடித்திருக்கலாம்.

No wonder his followers are giving speeches in the same tone. I dont see any decency in them.

வால்டர் said...

கட்டுரை நச்சுன்னு இருக்கு தலைவா.

அனானியா மேலே வந்து எச்சில் துப்பிய கிழட்டுப் பயல்தான்.

பேட் நியூசை நம்பாதீங்க. அவனும் ஒரு பிராமனர்.

Anonymous said...

MORE AND MORE HINDI SPEAKERS WILL ENTER TAMILNADU'S OBC LIST
-----------------------------

Tamil Nadu means "Land of Tamils". Officially the rules of Tamilnadu "love Tamil language".

But realities are otherwise.

Really Tamilnadu will become less Tamil. The present OBC list is filled with 5 - 10 castes including Urdu muslims and also Saurashtrians many of whom who essentially speak Hindi.

Forward community castes are mostly Tamils including Tamil Brahmins and many in Mudhaliar community and others. The poor amoung the non-Brahmin forwards may not be able to obtain OBC certificate.

Parties like DMK PMK are in fact Tamil haters as evidenced by fact that they support the reservation policy which in the present form gives preference to Hindi speaking backwards and also other Telugu, Kannada castes.

Those who are curious could check out:
www.tn.gov.in/bcmbcmw/bclist.htm
and count the number of matches for Urdu, Kannada and Telugu.

Probably the goal of breaking Tamil heritage sites like Raamar Paalam is also a mean to satisfy their Tamil hatred.

Amoung the many who are accusing Tamil communities, falling are hard facts that are missing you eye. Go to any road construction site in Tamilnadu. Tamil workers are boycotted. The workers are from Bihar. If you followed the newspapers, you would have heard about the protest about 3 weeks ago. Go to the Tamilnadu's airport. Only Hindi staff.

One one hand DMK, DK, PMK, etc says paappaan paappaan paappaan, calling them non-Tamils, on other hand Hindi speakers are occuying Tamilnadu and will soon be the OBC category. Of course the gain is political posts from Hindi masters like Arjun Singh.

If you are not guessing right, these Bihari workers will get into Tamilnadu OBC list (just the way the Hindi castes have got in).

Karnataka gives preference for Kannadigas irrespective of their caste and then only comes internal reservation. Kannada brahmins are also Kannadigas, but in Tamilnadu people who dont speak Tamil are also Tamils..The Hindi speaking "Tamils" (many who dont speak Tamil at all listed in the OBC list) are much higher in priority than Tamil-speaking "non-Tamils".

Also many people affected by 2-tumbler system are also Tamil dalits. It appears the system is sponsored by non other the 'Tamil' parties, who are obviously against Tamils first of all for reasons mentioned.

Now Urdu will become a compulsory language in TN muslims school thanks to DMK.

DMK's greatest contribution to Tamil language is introduction of Hindi obscene FM radio in Tamilnadu.

Probably Tamilnadu can change its name as OBC Desh if Hindi OBCs and Hindi has priority over Tamils and Tamil language.

Anonymous said...

வால்டர் வெற்றிவேல் ஒரு இந்திக்காரன்...அதான் இந்தி பேசறவங்கள ஆதறிக்கிறான்!!!

Anonymous said...

திரு வால்டர் வெற்றிவேல் அவர்கள்,

பிராமணர்கள் பெரும்லாலுமானவர் தமிழர்கள்.

பீஹார் மாநிலத்தில் வது தமிழிகத்தில் சாலைகளில் வேலை செய்வோர் தமிழர்கள் அல்ல.

இதில் நம்பதற்கோ நம்பாதற்கோ கேள்வியில்லை...

தமிழகத்தில் விமான நிலைய ஊழியர்கள் தமிழர்கள் அல்ல.

உத்தப்புரம் சுவர் விவகாரத்தி பிராமணர்/பார்ப்பான்/பார்பனர்கள் இல்லை. இரு தரப்பினரும் பிற்பட்டோர் என இடஒதுக்கீடு பெறுபவர்கள்.

உங்கள் எதிரி பிராமணர் அல்ல. வெளிமாநில இந்தி ஆள்களை பெருகுவதை கவனிக்கமால திசை பழிகள் எங்கெயோ போகிறது.

மூன்று வருடம் முன்பு 900 பேர் பயணச்சீட்டில்லாம தமிழக ராமேசுவரத்திற்கு இருப்புப்பாதையில் வந்தவர்கள் இந்திக்காரர்கள். தமிழகத்தில் குற்றங்களும் பல விழுக்காடு இந்தி ஆள்களால் நடத்தப்படுகிறது.

கொஞ்சும் தமிழ் என முதலில் போராடுங்கள்.

தமிழ் இனத்தை பிரிப்போர் தமிழின் துரோகிகள்!!!