அம்மணிக்கு ஆவல் இன்னும் அடங்கவில்லை. அரசியலுக்கு வருவதற்கு இன்னும் ஏன் பலர் தயாராக இருக்கிறார்கள் என்பது அம்மணியை கண்டால் தெளிவாகிறது. உடன்பிறவா சகோதரி, மன்னார்குடி மாஃபியாக்கள் மற்றும் குணடரடிவருடிகள் "புடவை" சூழ சிறுதாவூர் பங்களாவில் இருந்து லண்டனில் ஹோட்டல் வரை வாங்கிப் போடுகிறார் இடத்தை. தன் மேல் வீசப்படும் அத்தனை வழக்குகளுக்கும் வாய்தா வாங்கி ஜாமீனிலிலேயே உறைக்காத ஜென்மமாய் இருக்கும் அம்மணிக்கு நிச்சயம் தடித்த தோல்தான். கடந்த மாதம் முழுக்க கொடநாடு எஸ்டேட்டில் வாசம் மேனி அழகுற நடைப்பயிற்சி என முற்றிலும் மாறித்தான் போனார். (வேற ஒன்னும் இல்லை மூளை முன்னே கொஞ்சம் "நஞ்சா" இருந்தது இப்போ சுத்தமா இல்லை :)

கடந்த ஆண்டுகளில் சிறுதாவூர் பங்களா, ப்ளசண்ட் ஸ்டே ஹோட்டல், டாஸ்மாக், எம்ஜிஆர், அதிமுக தலைமை இப்போது கொடநாடு எஸ்டேட் என எந்த சொத்துக்கும் உரிமையாளர் தான் தான் என்பதை சொல்லாமலே மறைக்க அம்மணிக்கு ஏன் ஆசை. இது என்னுடையது எனச் சொல்லாமல் மறைக்கும் விதத்தில் ஒரு சொத்து தேவையா? இதையெல்லாம் எழுதினால் முண்டம் முண்டம் என்றவாறே ஒரு முண்டம் வந்து என் பதிவில் மூத்திரம் அடிக்கிறது.

ஆரம்ப காலத்தில் கொடநாடு எஸ்டேட்டில் எனக்கு தங்கியிருந்ததை தவிர எந்த தொடர்பும் இல்லை என்ற அம்மணி இப்போது அந்த பங்களாவை 50 கோடி செலவில் கட்டவில்லை என்கிறது. என்ன ஜென்மம்டாப்பா?

தலைமை எவ்வழி நாங்களும் அவ்வழி எனும் கொ"ளுகை"க்கேற்ப அம்மணியின் குண்டரடிகளும் இருக்கிறார்கள். ஆனால் அம்மணிக்கு தமிழனுக்கு இருக்கும் செலக்டிவ் அம்னீஷியா பற்றி நல்ல அறிவு இருக்கிறது. கொடநாடு எஸ்டேட்டுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை நான் வாடகைக்கு தங்கியிருந்தேன் என்பவர் ஆதாரங்கள் வந்ததும் அது 50 கோடிகளில் அனுமதி மீறி கட்டப்படவில்லை என்கிறார். ஒரு வேளை வாடகைக்கு தங்கப் போகும் வீடுகளை அது எத்தனை கோடிகளில் கட்டப் பட்டது அதன் அளவு என்ன எல்லாம் பார்த்துத்தான் போவாரோ என்னவோ?

இந்த கதையெல்லாம் சொல்லப் போனால் அம்மணியின் அடிவருடுடிகள் கருணாநிதிக்கு இல்லாத சொத்தா கனிமொழிக்குக் கூட 8 கோடி இருக்கே என குதியில் அரிக்க கோபம் கொள்கிறார்கள், அதுதான் பார்த்தீர்களே? போன தடவை உள்ளே வைத்து விசாரித்தீர்களே ஏன் எதுவும் கிடைக்கவில்லையா? கண்டுபிடித்து தூக்கில் போடவேண்டியதுதானே?

திமுகவை அழிப்பேன் ஒழிப்பேன் என்கிற அந்த தடித்தோல் ஜென்மத்துக்கு அது ஒன்றும் வெறும் கற்களால் கட்டப்பட்ட அதிமுக தலைமை கட்டடமல்ல பல்லாயிரக் கணக்கான தொண்டர்களின் வியர்வைத் துளிகளால் உயிர் பெற்ற ஒரு கோட்டை. சினிமா பவுடர் பூச்சுக்கும், விளக்கு வெளிச்சத்தில் வந்த வியர்வைக்கும் விளைந்த மோசடிக் கும்பல் இல்லை இந்த திராவிட முன்னேற்றக் கழகம் என்பது இன்னும் தெரியவில்லை

அதிமுக தலைமை கட்டிடத்தினை இடிக்க அரசா ஆணையிட்டது ? உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் கட்டுப்பட்டு அதன்படி நடக்கிறது அம்மணிக்கு ஆத்திரத்தில் .......அகங்கா...(?) ரம் வருகிறது போலும். தொலைக்காட்சி பெட்டி வாங்கியதில் இருந்து சுடுகாட்டு கொட்டகை வரை கைவைத்து கமிஷன் பார்த்த கன்னிக்கு இன்னும் ஆசை மட்டும் அடங்கவேயில்லை






4 comments:

Venkatrangan said...

Does'nt Mr.K have so much property being the fifth richest in Asia:-))

Anonymous said...

//கன்னிக்கு இன்னும் ஆசை மட்டும் அடங்கவேயில்லை//

கன்னியா,உண்மையாவா? இன்னும் ஆசை அடங்கவேயில்லையா?

Anonymous said...

wow! very beautiful bungalows

Anonymous said...

hi go and check DMK family assert, it wiill tell ur thalaivan yeppadi pattavan yendru.