உயர்ந்த ஜாதித் தத்துவம்

நாத்திகனாகவோ, நாத்திகனாவதற்குத் தயாராகவோ, நாத்திகன் என்று அழைக்கப்படுவதற்குக் கலங்காதவனாகவோ இருந்தால் ஒழிய, ஒருவன் சமதர்மம் பேச முடியவே முடியாது. இதுமாத்திரமல்லாமல், சர்வமும் கடவுள் செயல் என்றும், மனித சமூகத்தில் பிறவி மூலமாகவும், வாழ்வு மூலமாகவும் இன்று இருந்து வரும் பிரிவுக்கும், பேதத்துக்கும், உயர்வு - தாழ்வுக்கும் கடவுளே பொறுப்பாளி என்றும், கடவுள் சித்தத்தினால்தான் அவற்றில் ஒரு சிறு மாற்றமும் செய்ய முடியும் என்றும் சொல்லப்படுமானால் - அதை நம்பாமல் இருப்பது நாத்திகமானாலும் கண்டிப்பாக ஒவ்வொரு மனிதனும் நாத்திகனாகத்தான் வேண்டும்.

ஏனெனில், செல்வான்களிடம் இருக்கும் செல்வமும், பார்ப்பான் பாராட்டிக் கொள்ளும் உயர்ந்த ஜாதித் தத்துவமும், கடவுள் கொடுத்தது என்றும், கடவுள் சித்தத்தால் ஏற்பட்டது என்றும் சொல்லப்படுமானால், அந்தக் கடவுளை யார் தான் ஏற்றுக் கொள்ள முடியும்? அதை யார் தான் நிலைத்திருக்க விட்டுக் கொண்டிருக்க முடியும்? எந்த மாதிரியான மூடக் கடவுளும், எந்த மாதிரியான அயோக்கியக் கடவுளும் மனிதரில் ஒருவரை மேல் ஜாதியாக்கிப் பாடுபடாத ஊரார் உழைப்பில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் படிக்கும், மற்றொருவனைக் கீழ் ஜாதியாக்கிப் பாடுபட்டுச் சோம்பேறிகளுக்கு அழுதுவிட்டு, பட்டினியாய், நோயாய், கட்டக் கந்தை அற்று இருக்கவும் இடமற்றுத் திரியும்படியும் சொல்லி இருக்கவே இருக்காது.

3 comments:

SP.VR. SUBBIAH said...

சமதர்மத்திர்க்காகப் பாடுபட்ட மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியும், விவேகானந்தரும், அம்பேத்காரும்
எந்தப் பிரிவில் (ஆத்திகர் அல்லது நாத்திகர்) வருவார்கள் என்பதைத்
தெரிவிக்க வேண்டுகிறேன்.

அடங்காத மாணவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள விரும்பும் அடக்கமுள்ள வாத்தியார்

சட்னிவடை said...

பிறப்பின்போது கூடவே வருகிறது ஜாதிவெறி அவர்களுக்கு! இளம் பிராயம் முதலே தூபம் போட்டு வளர்க்கிறார்கள் நஞ்சை அவர்கள் மனதில்.

Unknown said...

//சமதர்மத்திர்க்காகப் பாடுபட்ட மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியும், விவேகானந்தரும், அம்பேத்காரும்
எந்தப் பிரிவில் (ஆத்திகர் அல்லது நாத்திகர்) வருவார்கள் என்பதைத்
தெரிவிக்க வேண்டுகிறேன்.//

இப்படி அவர்கள் சமதர்மத்திர்க்காக பாடுபடும் அளவுக்கு இந்த சமூகத்தில் இருக்கும் ஏற்றத் தாழ்வுக்கான ஆணிவேரை பிடித்து உலுக்குவதே பெரியாரின் கேள்விகளும் சிந்தனைகளும் மற்றபடி விவேகானந்தரும் மகாத்மாவும் செய்ததை விட ஆயிரம் மடங்கு சீறிய சிந்தனைகள், கேள்விகள் பெரியாரிடம் உண்டு வேண்டுமானால் அவர்களை ஏற்றத் தாழ்வுகள் இருப்பதை ஒத்துக் கொண்டு சமரசம் செய்ய வந்தவர்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம்

வாங்க வாத்தியாரய்யா சாப்புடப் போயிட்டேன் அதான் லேட்டு ....

அதே அடங்காத மாணவன்