‘‘காலம் காலமாக வேறொரு மொழி கோயில்களில் இருந்து வருகிறது என்று சொல் வதால் மட்டுமே தமிழ் வழி பாடு கூடாது என்று சொல் வது தவறு. ஏழாம் நூற்றாண்டி லேயே தமிழின் மந்திர சக்தியை சமணர்களிடம் அனல் வாதம், புனல் வாதம் செய்து நிரூபித்தார் திருஞானசம்பந்தர். பாம்பு கடித்து இறந்தவனை உயிர்ப்பித்ததும், இறந்த பெண்ணை சாம்பலிலிருந்து மீட்டெ டுத்ததும் தமிழின் மந்திர சக்தியை உலகுக்கு எடுத்துக் காட்டிய சம்பவங்கள். திருக்கோயில் கதவை மூடவும், திறக்கவும் செய்த அந்த மந்திரத் தமிழ், கும்பாபிஷேகங்கள் செய்ய உதவாதா? சகலமும் தெரிந்த சாமிக்குத் தமிழ் தெரியாதா’’

-குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்.

3 comments:

Sridhar said...

உண்மை.ஏன் இந்த அயல்மொழி தாக்கம். ஒரு சமுகம் தன் தவறை திருத்திகொள்ள வேண்டும்.(அந்த சமுதாயத்தை சேர்ந்த நான் இதுவரை கோயில்களில் தமிழ் மொழியில்தான் அர்சனை செய்யவேண்டும் என்று கண்டிப்புடன் இருப்பேன்.அப்படி செய்யாத கோயில்களுக்கு செல்வதில்லை. நாமே நம் பெற்ற தாயிற்க்கும் மேலான தாய்மொழியை மறுப்பது நாம் செய்யும் மிகப்பெரிய துரோகம்)

முரளிகண்ணன் said...

சாமியே வேண்டாம்பா எதுக்கு இதில தமிழ் அர்ச்சனை வேற

Anonymous said...

தமிழ்னாடு என்று பெயர் சூட்டிவிட்டோம். இனி எதற்கு தமிழ்? பள்ளியில் தமிழ் பேசினால் குப்பை பொறுக்கும் தண்டனை அளிக்கும் நாடு. சினிமா போல தமிழில் அர்ச்சனை செய்தால் வரி விலக்கு அளித்தால் தமிழில் அர்ச்சனை தொடரலாம்!!!!

புள்ளிராஜா