சென்னை : சேது சமுத்திரதில் இருப்பது மணல் திட்டு தான் என நாசா விண்வெளி மையம் அனுப்பியுள்ள இமெயிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சேது சமுத்திர திட்டத்தில் கால்வாய் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் இருக்கும் ராமர் பாலத்தை இடிக்க கூடாது என பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் சேது சமுத்திர திட்ட மேலாண்மை இயக்குனர் ரகுபதி சென்னையில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார். இதில் சேது சமுத்திரத்தில் இருப்பது வெறும் மணல் திட்டு தான், மனிதனால் உருவாக்கப்பட்ட பாலம் அல்ல என கூறினார். நாசா விண்வெளி மையம் சேது சமுத்திர திட்ட கமிஷனுக்கு அனுப்பியுள்ள இமெயிலில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இந்த செய்தியை கேட்டநடமாடும் ட்ராபிக் சிக்னல் இராம கோபாலன் நாசாவின் நாக்கார சக்திகளை மைனாரிட்டி கருணாநிதியின் கைக்கூலிகள் விலைக்கு வாங்கிவிட்டதாக மூன்றாம் அணித் தலைவி அம்மா விடப்போகும் மொக்கை அறிக்கையில் தன் பெயரையும் சேர்த்துக்கொள்ளுமாறு போயஸ் கார்டனுக்கு பேக்ஸ் அனுப்ப போவதாக அங்கீகரிக்காத தகவல்கள் தெரிவிக்கின்றன

3 comments:

Anonymous said...

//, மனிதனால் உருவாக்கப்பட்ட பாலம் அல்ல என கூறினார். நாசா விண்வெளி மையம் சேது சமுத்திர திட்ட கமிஷனுக்கு அனுப்பியுள்ள இமெயிலில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்//

இப்போதாவது தெரிகிறதா ? அது மனிதானால் உருவாக்காப்பட்ட பாலமே இல்லை, இறைவனால் உருவாக்கப்பட்டது என்று நாசாவே சொல்லி விட்டது. திம்மிகளுக்கு இனிமேலாவது உறைக்குமா ? இராமர் பாலத்தை இடிப்பதை நிறுத்திவிட்டு, தோஷ நிவர்த்திக்காக பரிகார பூஜை செய்ய இந்திய சர்கார் முன்வரவேண்டும். ஏழை பிராமனர்களுக்கு தானம் வழங்கினால் தான் தெய்வ குற்றத்திலிருந்து தப்பமுடியும்.

சாலிசம்பர் said...

பாவியர் திட்டம் பொடிபடவே
காவியர் படை திரண்டிடுவோம்.

இப்படிக்கு,
நடமாடும் பிணம்
இராசகோபாலன்.

Thamizhan said...

ராமர் பாலம் இப்போது இந்திய உச்ச நீதி மன்ற்த்தில் தொங்க விடப்பட்டுள்ளது.
இதில் உண்மையாகப் பல் உண்மைகள் வெளி வர வேண்டும்.ஆனால் மத வாதிகள் நிறைந்த மன்றத்திலே உண்மைகள் வெளி வருமா?
முதலில் மக்கள் மன்றத்திலே வெளியிடுவோம்.
ராமர்,ராமர் என்கிறார்களே எந்த ராமர்?
60003 மனைவிகளுடன் ஒரு குழந்தையும் பெற்றுக் கொள்ள முடியாத தசரதன் அசுவமேத யாகம் செய்ததை வால்மீஹி வர்ணித்திருப்பதை அப்படியே மொழி பெய்ர்த்து இந்த ராமனா பாலங் கட்டினான்? என்று முதலில் கேட்போம்.