யாராவது சொல்லட்டுமே, எனக்குக் கடவுள் பக்தி இருக்கிறதென்று! நான் கடவுள் யோக்கியதையைப் பார்த்துக் கொண்டுதானே வருகிறேன். நானும் கடவுள் பெயரைச் சொல்லி பல செயல்களைச் செய்தவன்தான். புராண காலட்சேபம் செய்து யார் ஒழுக்கமாக வாழ்கிறார்கள்? சங்கராச்சாரி வாழ்கிறாரா? சந்நிதானங்கள் யாராவது வாழ்கிறார்களா?

கடவுள் பக்தி வேண்டும் என்றும், ஆத்மா இருக்கிறதென்றும் நீதிபதி முதல் மந்திரிகள் வரையில் பிரச்சாரம் செய்கிறார்கள். இந்த நாட்டில் பக்தி இல்லையா? எவராவது பக்தி இல்லையென்று சொல்ல முடியுமா? தமிழ் நாட்டில் ஏறக்குறைய இருபதினாயிரம் கைதிகளுக்குமேல் இருப்பார்கள். அவர்கள் காலையில் எழுந்த உடனே பட்டை பட்டையாக அடித்துக் கொள்வார்கள். ஏண்டா என்றால், சீக்கிரம் விடுதலையாக வேண்டும் சாமி என்று கூறுவான். யாராவது ராசா, மந்திரி சாகமாட்டானா, நான் விடுதலையாக மாட்டேனா என்று வேண்டிக் கொள்வான்.
இப்பொழுது திருடாமல், பொய் பேசாமல் யார் இருக்கிறார்கள்? இனிமேலாவது மக்கள் ஒழுக்கத்தை அனுசரிக்க வேண்டும்; அன்பைக் கடைப்பிடிக்க வேண்டும். இப்படியே எல்லோரையும் ஏய்த்துக் கொண்டு போய்க் கொண்டிருந்தால் மிருகமாவது தவிர வேறு என்ன? உயர்தர நீதிமன்றத்தில் இருக்கும் நீதிபதி எத்தனைக் கொலைகாரர்களைப் பார்க்கிறார்; எவ்வளவு திருடர்களைப் பார்க்கிறார். அவருக்குத் தெரியாதா, பக்தியில்லாமல் திருடுகிறானா, பக்தியிலிருந்து கொலை செய்கிறானா என்று?

அவர்களைப் பார்த்துவிட்ட பிறகு, மக்களிடம் பக்தியிருந்தும் ஒழுக்கமில்லை என்றல்லவா சொல்ல வேண்டும்? ஆகவே, மக்களை ஒழுக்கத்தின் பக்கம் திருப்ப வேண்டும். இன்னும் ஒழுங்கீனமாக நடக்கக் கூடாது. எவ்வளவு ஒழுங்கீனமாக நடந்து கொள்ள முடியுமோ அவ்வளவும் நடந்து விட்டோம். ஆகவே, கோயில் கட்டுவதானாலும், உற்சவம் கொண்டாடுவதானாலும் பயனில்லை. லாபமில்லை.

லட்சக்கணக்கான மக்கள் மாமாங்கத்திற்காகக் கூடினார்கள். அது, முட்டாள்தனத்தைக் காட்டுவதைத் தவிர வேறு என்ன? அங்கு போய் அழுக்குத் தண்ணீரில்தானே குளிக்கிறார்கள். குளத்தில் இருக்கும் மேல்தண்ணீரை இரைத்து விடுகிறார்கள். அழுக்குத் தண்ணீர் இருக்கிறது. எல்லோரும் இறங்கினால் தண்ணீர் உயரம் அதிகமாகிறது. யாரும் இல்லாதபொழுது கணுக்காலில் இருக்கும் தண்ணீர், எல்லோரும் இறங்கிய பிறகு கழுத்தளவுவரை வருவதில் ஆச்சரியமென்ன? குளத்தில் இறங்கி விட்ட பிறகு சிறுநீர் வந்தால் எங்கே போவது? அதைக் குளத்திலேயே ஒவ்வொருவரும் விட்டால் நுரை பொங்குகிறது. இதைப் பார்த்த நம் பைத்தியக்கார மக்கள் "பார் சிவன் தண்ணீர் விடுகிறான், நுரை பொங்குகிறது பார்' என்று சொல்லுகிறார்கள். சொல்லுவதோடு மட்டுமல்லாமல் அந்தத் தண்ணீரைத் தலையில் தடவிக் கொள்கிறார்கள்.

வட நாட்டில் கும்பமேளா நடந்தது. சுமார் எண்ணூறு சாமியார்கள் நிர்வாணமாக அங்கு வந்தார்களாம். அவர்களைப் பார்க்கப் போய் ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்தார்கள். புண்ணிய ஷேத்திரத்திற்கு நிர்வாணமாகத்தான் போக வேண்டுமா? இதை வெளிநாட்டான் கேள்விப்பட்டால் என்ன நினைப்பான்? இன்னும் நீ இப்படியே நுரை பொங்குகிறதென்று சொல்லிக் கொண்டிருக்கப் போகிறாயா? எந்தப் பார்ப்பானாவது காவடி எடுத்து ஆடியிருப்பதைப் பார்த்திருக்கிறாயா? எந்தப் பார்ப்பனத்தியாவது திருப்பதி வெங்கடேசா, கோவிந்தா என்று தெருவில் புரண்டு பிச்சையெடுப்பதைப் பார்த்திருக்கிறாயா? இதைக் கண்ட பிறகாவது திருந்த வேண்டாமா நம் மக்கள்?

-பெரியார் 26.8.1956இல் ஆம்பூரில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் கூட்டத்தில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி ‘விடுதலை' 10.9.1956

13 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அத்தனையும் இன்றும் உண்மை!!!
மாற்றம் வருமென நம்புவோம்.

கோவி.கண்ணன் said...

//"பார்ப்பான் காவடி எடுத்து ஆடியிருப்பதைப் பார்த்திருக்கிறாயா?" ........குளத்தில் இறங்கி விட்ட பிறகு சிறுநீர் வந்தால் எங்கே போவது? அதைக் குளத்திலேயே ஒவ்வொருவரும் விட்டால் நுரை பொங்குகிறது. இதைப் பார்த்த நம் பைத்தியக்கார மக்கள் "பார் சிவன் தண்ணீர் விடுகிறான், நுரை பொங்குகிறது பார்'//

நான் பார்த்தது இல்லை. மற்றவர்கள் தான் உடலில் அலகு குத்தி காவடி எடுப்பார்கள்...

கும்பமேளாவில் தண்ணீர் பொங்குவது சூப்பர்.

பெரியாருக்கு பெரிய 'ஓ'

:)))

TBCD said...

/*பெரியாருக்கு பெரிய 'ஓ'*/
ரீப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பீடேய்

நாமக்கல் சிபி said...

//லட்சக்கணக்கான மக்கள் மாமாங்கத்திற்காகக் கூடினார்கள். அது, முட்டாள்தனத்தைக் காட்டுவதைத் தவிர வேறு என்ன? அங்கு போய் அழுக்குத் தண்ணீரில்தானே குளிக்கிறார்கள். குளத்தில் இருக்கும் மேல்தண்ணீரை இரைத்து விடுகிறார்கள். அழுக்குத் தண்ணீர் இருக்கிறது. எல்லோரும் இறங்கினால் தண்ணீர் உயரம் அதிகமாகிறது. யாரும் இல்லாதபொழுது கணுக்காலில் இருக்கும் தண்ணீர், எல்லோரும் இறங்கிய பிறகு கழுத்தளவுவரை வருவதில் ஆச்சரியமென்ன? குளத்தில் இறங்கி விட்ட பிறகு சிறுநீர் வந்தால் எங்கே போவது? அதைக் குளத்திலேயே ஒவ்வொருவரும் விட்டால் நுரை பொங்குகிறது. இதைப் பார்த்த நம் பைத்தியக்கார மக்கள் "பார் சிவன் தண்ணீர் விடுகிறான், நுரை பொங்குகிறது பார்' என்று சொல்லுகிறார்கள். சொல்லுவதோடு மட்டுமல்லாமல் அந்தத் தண்ணீரைத் தலையில் தடவிக் கொள்கிறார்கள்.
//

:)

Anonymous said...

எங்கள் ஊர் விழுப்புரத்தில் தெற்கு ரயில்வே காலனியில்
நாங்கள் ஜாதி வித்தியாசமில்லாமல் (பார்ப்பனர்களும்)
காவடி எடுத்து மைலம் போன்ற ஊர்களுக்குச் சென்று
வந்திருக்கிறோம். அதிலும் ஒரு முறை, 3 பையன்கள்
யாருக்கும் தெரியாமல் குளத்தில் குளிக்கச் சென்று
மூழ்கி இறந்து போய், மூவரையும் ஒரே நேரத்தில்
எரியூட்டியதும் நினைவில் நிற்கிறது. இதில் ஒருவன்
பிராமணப்பையன்
இது நடந்தது சுமார் 30 வருஷங்களூக்கு முன்.

Thamizhan said...

செய்யக் கூடாத அநியாயங்களைச் செய்து விட்டு வாழை இலையில் வெளியே போனால் நடமாடும் தெய்வமா?
கொஞ்சம் கூட வெட்கம் மானம் இல்லாமல் இன்னும் திமிருடன் அலைவதைப் பாருங்கள்.
இந்து மகாசபை அமைக்கப் போகிறாராம்.யாரை ஏமாற்ற?

Anonymous said...

ஓநாய் ஆட்டுக்காக கண்ணீர் விட்டுதாம்; அதப்போல இருக்கு ஈவேரா காவாடியப் பத்தி எழுதரது. ஈவேராதான் 'நாத்திகன்' ஆச்சே; யார் காவடிய தூக்கினா என்ன , தூக்காடா என்ன அந்த நாதாரிக்கு?

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

கிழமத்தூர் முண்டம்,

அப்படிப்பாத்தா தமிழர் மாமா தாடிக்காரன் கூட காவடி ஆடி யாரும் பாத்ததில்லை,அதுக்கு என்ன இப்போ?ஏதோ அந்த பொரிக்கி சொன்னதாம்,அதை இந்த முண்டம் எடுத்து போடுதாம்.

Thamizhan said...

உள்ளதைச் சொன்னா உடம்பு எரியுதா?
கருத்துக்கு எதிர் கருத்துச் சொல்ல வக்கில்லாத நாய்களின் குரைச்சலைப் பாருங்கள்.
பரம்பரையாக அவமானங்களை ஜல்த்தால அலம்பிடுவதுகட்கு தனி மனித அதுவும் பெண்குலத்தை அவமானமாக எழுதுவது அல்வா சாப்பிடுவது போல.
பெற்ற தாயையே வாடி போடி என்பதுகளிடம் வேறு என்ன வரும்.
மற்றவர்கள் கோபமாக எழுதினால் மட்டும் ஏன் மூக்கால் அழுகிறர்கள்.

வெட்டிப்பயல் said...

Chanceless...

Anonymous said...

முண்டம் தமிழன்,

//உள்ளதைச் சொன்னா உடம்பு எரியுதா?//

அந்த தாடிக்கார பொரிக்கி காவடி எடுக்கலன்னு உள்ளதை சொன்னா உனக்கு ஏன் எரியுது?உன்னை மாறி பொரிக்கள் எல்லாம் தன்னை தமிழன் என்று சொல்லிக்கொள்வதால் தான் தமிழன் என்று சொன்னாலே கேவலமா பாக்கறாங்க.பேர முதல்ல மாத்து.

Thamizhan said...

அநாமதேயமே!
நன்றாகக் குரை.மொட்டச்சி,முண்டம் எல்லாம் உங்களுக்குத்தான்.
பெரியாரையும்,பதிவர்களையும் பார்த்துக் குரைப்பதனால் எங்களுக்கு ஒன்றும் ஆகிவிடாது,
மாரடைப்பு வந்து சீக்கிரம் தொலைந்து விடாதே.நீ இன்னும் பார்க்க வேண்டியது நிறைய இருக்கிறது.