இத் தொடர்ப் பதிவின் முதல் பாகம் இங்கே

மக்கள் மனசு என்ற பெயரில் தினகரனில் ஒரு தொடர் கருத்துக் கணிப்பு வெளியிடப் பட்டது. அதில் திமுகவில் யாருக்கு ஆதரவு அதிகம் எனப்பொருள்படும் விதமாக வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்பின் முடிவு அழகிரி மிகக் குறைவான அளவே ஆதரவோடு இருக்கிறார் எனச் செய்தி வெளியிட்டது. மதுரையில் அழகிரியின் ஆதரவாளர்கள் நடத்திய வன்முறைத் தாக்குதலில் தினகரன் அலுவலகம் கொளுத்தப்பட்டு மற்ற மூன்று ஊழியர்களும் பரிதாபமாக உயிர் இழந்தனர்.

தமிழகம் கொந்தளித்தது. அழகிரியை தூக்கில் போடு என்பதைத் தவிற ஏனைய பிற சொல்லாடல்களோடு தனது சொந்தசெலவில் சூனியம் வைத்துக்கொள்ளும் வேலையை செவ்வனே செய்ய ஆரம்பித்தது சன் டி,வி.
தயாநிதி மாறன் முதல் கட்சியின் கடைசித் தொண்டன் வரை இந்த விவகாரம் தயாநிதிக்கே பூமாரங்காய் வந்து தாக்கும் எனத் தெரிந்திருக்க வில்லை. ஆனால் அதற்கான வேலைகளை தயாநிதிமுன்வந்து செய்தார் என செய்திகள் வெளியானபோது யாரும் நம்பவில்லை.
அழகிரியின் செயலை அன்போடு கண்டித்த திமுக தலைமை, வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்து சன். நிறுவனத்தின் வாயை முதலில் அடைத்தது.

உள்துறைச் செயலரை மிரட்டியது முதல் கட்சியின் அமைதிக்கு குந்தகம் விளைவித்தது வரை திமுக செயற்குழுவால் பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப் பட்ட தயாநிதி அமைச்சர் பதிவியை தானாக துறந்தார். திமுக காரனாக பிறந்தேன் திமுக காரனாகவே இறப்பேன் என தாத்தாவுக்கு ஒரு சூசகத் தகவலைஅனுப்பியதோடு தனது பக்க செயல்பாடுகளை ஓரம் கட்டினார்.

அதன்பின் கட்சியில் அழகிரியை முன்னிலைப் படுத்த ஏதுவாக மதுரை இடைத்தேர்தல். திமுகவின் அங்கீகரிக்கப்பட்ட தேர்தல் பொருப்பாளராக வலம் வந்த அழகிரி தன் சாதூர்யமான காய் நகர்த்தல்களில் திமுக கூட்டணிக்கு வெற்றி தேடித் தந்ததோடு மதுரை மக்கள் ஆதரவு தனக்கு இன்னும் இருப்பதை தெளிவுபடுத்தினார்.

இந்த செய்திகளின் பின்னால் எந்த ஒரு இடத்திலும் திமுக தலைவராக வருவதற்கான சாத்தியக்கூறுகளை நம்மால் தயாநிதியிடம் காணமுடியவில்லை. கட்சித் தலைமையிடம் நெருக்கமாக இருக்கும் ஒரே சாதகத்தினைக் கொண்டு அவர் தாந்தோன்றித் தனமாகவும் தன்னை விட மூத்த தலைவர்களை கொஞ்சம் ஏளனமாக நடத்தியதாகவும் கூறப்படும் குற்றச் சாட்டுக்களுக்கு எல்லாம் காரணகர்த்தா ஆற்க்காட்டார் என இப்போது செய்திகள் வருகின்றன.

கலாநிதிமாறனின் பணபலமும், ஊடக பலமும், தயாநிதி மாறனின் ஆளுமைத் திறமையும் மட்டுமே ஸ்டாலின் இடத்தை திமுகவிடம் இருந்து பறித்து தயாநிதியிடம் கொடுத்துவிடப் போதுமானதில்லை. அனாமதேயமாக ஸ்டாலின் மேல் சுமத்தப் படும் சில குற்றச்சாட்டுகளுக்குள் நுழைந்து பார்க்காமல் ஸ்டாலினை நோக்கினால் கட்சியில் ஸ்டாலின் பங்கு என்னவென்று விளங்கும்.

கல்லூரி காலத்தில் மிசா கைதில் ஆரம்பித்த ஸ்டாலினுடைய கட்சிப் பிரவேசம் தயாநிதிபோல பதவியை கட்சியின் சுகபோகங்களை உள்ளே வந்தவுடன் அனுபவித்துவிடவில்லை. அவரும் அதற்கு தயாராக இல்லை. அடிமட்டத் தொண்டனான தன்னை திமுக தலைமைக்கு தகுதியுடையவராக தன்னை மாற்றிக்கொள்ளும் அளவுக்கு அவருக்கு பொருமையும் அவகாசமும் கடந்த முப்பது ஆண்டுகாலங்களில் கிடைத்திருக்கிறது. வாரிசு அரசியல் எனப் பரப்பப்படும் எந்த குற்றச்சாட்டுக்களும் ஸ்டாலினுக்கு பொருந்தாது.

(தொடரும்)....

0 comments: