பட்டய கிளப்புது பா.ம.க

அவ்வப்போது அரசுத் தரப்புக்கு எதிராக அதிரடிகளை அரங்கேற்றிக் கொண்டிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியினர் அடுத்த கட்டமாக தற்போது தனியார் பொறியியல் கல்லூரி அதிபர்களுக்கு எதிராகவும் தங்களின்அஸ்திரத்தை எடுத்திருக் கிறார்கள்.

தமிழகத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி தாளாளர் களுக்கு பா.ம.க&வின் மாவட்ட பொறுப்பாளர்கள் மூலம் எச்சரிக்கை அறிக்கை ஒன்று கொடுக்கப்பட்டு வருகிறது.

அந்த அறிக்கையில் இருப்பது இதுதான்... ‘தமிழக அரசின் தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் பொறியியல் கல்விக்கான நேர்காணலை நடத்தி மாணவர்களை தேர்வு செய்துள்ளது. இப்படி ஒதுக்கீட்டின் மூலம் தேர்ந் தெடுக்கப்பட்டு சேரும் மாணவர்களுக்கு தங்கள் கல்லூரியில் அரசு நிர்ணயித்துள்ள கட்டணங்களை மட்டுமே தங்கள் நிர்வாகம் வசூல் செய்யும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

அரசின் தொழில்நுட்ப இயக்ககம் நிர்ணயித்துள்ள கட்டணத்தை மட்டுமே கல்லூரி நிர்வாகம் மாணவர்களிடம் வாங்க வேண்டும் என்பது மருத்துவர்


அய்யா அவர்களின் நிலைப்பாடு ஆகும். எனவே, தங்கள் கல்லூரி நிர்வாகம் கூடுதலாக எந்தக் கட்டணத்தையும் வாங்க வேண்டாம். மாணவர்கள் செலுத்தும் கட்டணங்களுக்கு உரிய பற்றுச்சீட்டு (ரசீது) வழங்க வேண்டும். இதை எந்தக் கல்வி நிறுவனம் மீறினாலும், பாட்டாளி மக்கள் கட்சி அந்த நிறுவனத்துக்கு எதிராக போராடும் என்பதை தெரி வித்துக் கொள்கிறோம். நீங்கள் இதைக் கட்டாயம் பின்பற்றுவீர்கள் என்று நம்புகிறோம்’ என்று அந்த அறிக்கை முடிகிறது.

அதோடு கல்லூரி மாணவர்களிடம், ‘அரசு அறிவித்துள்ள கட்டணத்தைத் தவிர உங்களிடம் கூடுதலான கட்ட ணத்தை நீங்கள் படிக்கும் கல்வி நிறுவனம் கட்டச் சொல்லி கேட்கிறதா? நீங்கள் கட்டுகிற கட்டணங்களுக்கு உரிய பற்றுச்சீட்டு தரவில்லையா? உடன டியாக கீழ்கண்ட கைபேசி எண்களில் நீங்கள் தொடர்பு கொண்டு உரிய தகவல் அளிக்கவும்’ என்று ஒரு பிட் நோட்டீஸ§ம் விநியோகிக்கப் படுகிறது.

பா.ம.க&வுக்கு மிகவும் ராசியான தர்மபுரி மாவட்டத்தில் தான் இந்த எச்சரிக்கை அறிக்கையின் தொடக்க விழா நடந்திருக்கிறது. தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி பா.ம.க. எம்.பி.யான டாக்டர் செந்திலிடம், ÔÔஇது ஒருவகை மிரட்டல் அல்லவா?ÕÕ என்றோம்.



‘‘மிரட்டல் என்று ஏன் எடுத்துக்கணும்..? அறிவுரைன்னு எடுத்துக்கலாமே..! மாணவர்களிடம் விழிப்பு உணர்வு ஏற்படுத்தவும், எங்க மருத்துவர் அய்யா சொன்னபடி உயர் கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள ஊழலை ஒழிக்கவும் ஒவ்வொரு தனியார் பொறியியல் கல்லூரிக்கும் இதுபோன்ற அறிவுரை அறிக்கைகளை அனுப்பி வருகிறோம். அன்பான அறிவுரையாகத்தான் சொல்றோம். அதைப் பின்பற்றினால் அந்தக் கல்லூரி நிர்வாகங்களுக்கு நல்லது. மாறாக, ‘நீங்க யார் எங்களை கேள்வி கேட்கிறது? நாங்க எங்க விருப்பப்படி அடாவடியாகக் கட்டணம் வசூலிப்போம்’னு தனியார் கல்லூரி நிர்வாகங்கள் அடாவடி வசூலில் ஈடுபட்டால் அதைப் பார்த்துக்கிட்டு சும்மா இருக்க மாட்டோம். அந்தக் கல்லூரி நிர்வாகத்துக்கு எதிராகப் போராடுவோம். எங்களுக்குத் தெரியாம கூடுதல் கட்டணம் வசூலிச்சிடலாம்னு மட்டும் எந்த தனியார் கல்லூரியும் தப்பு கணக்குப் போட்டுட வேண்டாம்! எல்லா இடத்திலேயும், எல்லா மட்டத்திலேயும் ஆளு வச்சுருக்கோம். தப்பு நடந்தா தகவல் அடுத்த நிமிஷமே எங்க காதுக்கு வந்துடும்’’ என்று ‘ரமணா’ ஸ்டைலில் சொன்னார்.

பெயர் குறிப்பிட விரும்பாத தனியார் பொறியியல் கல்லூரி தாளாளர் ஒருவர் இந்த விவகாரம் பற்றி நம்மிடம் பேசினார். ‘‘உண்மையை சொல்லப்போனா அரசு நிர்ணயிச்சிருக்கிற கட்டணம் எங்களுக்குக் கட்டுபடியாகாது. ஏன்னா, அரசுக் கல்லூரிகளைவிட எங்கக் கல்லூரிகளில் பொறியியல் மாணவர்களுக்கு நவீன உபகரணங்களை வெளிநாடுகளில் இருந்தெல்லாம் வாங்கி வெச்சிருக்கோம். அந்தக் கணக்கு எல்லாம் பார்த்தா எங்களுக்கு நஷ்டம்தான் ஏற்படுது. இருந்தாலும் கல்வி என்பது சேவை என்பதால் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை மட்டுமே வாங்குகிறோம். எனக்குக்கூட பா.ம.க&விடமிருந்து ஒரு அறிக்கை வந்தது. அந்த அறிக்கைக்கு தேவையே இல்லை. தப்பு நடந்தால்தானே கண்காணிப்பு தேவை!’’ என்றார்.

பா.ம.க&வின் தலைவர் ஜி.கே. மணியிடம் பேசினோம். ‘‘எங்கள் மருத்துவர் அய்யாவின் ஆணைக்கு இணங்க இந்த நல்ல செயலை செய்து வருகிறோம். தர்மபுரி பின்தங்கிய மாவட்டம் என்பதால், இந்த நடவடிக்கையை முதலில் அங்கு செயல்படுத்தியுள்ளோம். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கும் விரைவில் இது போன்ற அறிவுரை அடங்கிய அறிக்கை அனுப்பப் படும்’’ என்றார்.

அவரிடமும், ‘‘பா.ம.க&வின் நடவடிக்கை மிரட்டல் தொனியில் இருக்கிறதே?’’ என்று கேட்டோம். ‘‘மடியில கனம் இருக்கிறவன்தான் பயப் படணும். உயர் கல்வித்துறையில கூடுதல் கட்டணம் வசூலிக்கிறாங்க... கல்வி வியாபாரமாகிடுச்சுன்னு எங்க மருத்துவர் அய்யா நல்லதுக்கு சுட்டிக்காட்டினா, ‘புகார் யாரும் தரலை’ங்கிறாங்க. புகார் கொடுத்தா அந்த மாணவனை அந்தக் கல்லூரி நிர்வாகம் சும்மா விடுமா? அதுக்குதான் Ôமாணவர்களே, பெற்றோர்களே வாங்க! நாங்க இருக்கிறோம்Õனு அவங்களை பா.ம.க. அரவணைச்சுக்குது. மிரட்டல்னு எடுத்துக்கிட்டா மிரட்டல்தான். நல்லதுக்குன்னு எடுத்துக்கிட்டா நல்லதுதான்’’ என்று அதிரடியாக முடித்தார்.

நன்றி- ஜூனியர் விகடன்

2 comments:

bala said...

கிழமத்தூர் அய்யா,
ஜாதி வெறி பிடித்த வன்னிய க்ரீமிலேயர் ஓபிசி கும்பல்,ஜாதிவெறி பிடித்த மஞ்சதுண்டு அய்யாவின் க்ரீமி லேயர் ஓபிசி கும்பலுக்கு ஆப்பு வைக்க எடுத்திருக்கும் ஆயுதம் இது.
சோழர்களா,பல்லவர்களா என்று தீர்மானிக்கும் போர் இது.நான் பல்லவன் கட்சி.
நீங்களும் பல்லவன் கட்சியில சேர்ந்துடுங்க.
பாலா

விஜயன் said...

நான் கூட என்னுடைய பெரியப்பா பெண்ணை ஆசிரியர் கல்லூரியில் சேர்க்க 85,000 ரூபாய் கொடுத்துள்ளேன் நன்கொடையாக. இதற்கான ரசீது கேட்டபோது "தேவையில்லை" என்று பதில் சொன்னார்கள்.

அல்லது நாம் வலியுறுத்திக் கேட்டால் அனுமதி மறுப்பார்கள் என்று தெரிந்ததால் வேறு வழியின்றி ஒத்துக் கொள்ள வேண்டோம்.

இதே போல் எல்லா மாணவர்களிடமும் வசூல் வேட்டை நடைபெறுகிறது.

மாணவர்களின் எதிர்காலம் கருதியே பெற்றோர்கள் மௌனமாக இருக்கிறார்கள் என்பது திண்ணம். புகார் கொடுக்கும் மாணவர்களின் கல்வி கேள்விக் குறியாகிவிடும் நிலமை நம் நாட்டில்!!!

பூனைக்கு யார் மணி கட்டுவது???

கெளப்புங்க பட்டய......