கனிமொழி அமைச்சராகிறார்?

கனிமொழி எம்.பி. நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார். இந்திய தொழில்கள் கூட்டமைப்பு கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்த அவரை நிருபர்கள் சந்தித்து பேட்டி கண்டனர். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-


கேள்வி:- நீங்கள் கவிஞராகவும், எம்.பி.யாகவும் ஆகிவிட்டீர்கள். மத்திய மந்திரியாக ஆவது எப்போது?


பதில்:- மத்திய மந்திரியாக ஆவேன் என்று ஆரூடம் கூறுவதில் எனக்கு நம்பிக்கை கிடையாது. மத்திய மந்திரியாக ஆவேனா? மத்திய மந்திரியாக ஆக மாட்டேனா? என்பதை என்னால் இப்போது கூறமுடியாது. ஆனால் இப்போதுள்ள இந்த பதவி எனக்கு மகிழ்ச்சியை தருகிறது.


பதில்:- பாராளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வேண்டும் என்பதை வலியுறுத்த பெண் எம்.பி.க்களை கொண்டு ஒரு அமைப்பை உருவாக்கலாமா?


பதில்:- நல்ல ஆலோசனை தான். பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை வலியுறுத்த பெண் எம்.பி.க்கள் கொண்ட ஒரு அமைப்பை உருவாக்க முயற்சி செய்வேன்.


கேள்வி:- ஆண்கள், பெண்கள் சம உரிமையால் நிறைய பேர் விவாகரத்து செய்யும் நிலைமை உருவாகி வருகிறது. அது பற்றி உங்கள் கருத்து என்ன?


பதில்:- ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமஉரிமை என்று வரும்போது இது போன்ற பிரச்னைகள் வருகின்றன. இதற்கு காரணம் ஒருவரை ஒருவர் சரியாக புரிந்து கொள்ளாமல் நடப்பதால் தான். எனவே ஆண்களும், பெண்களும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நடந்தால் இத போன்ற பிரச்சினைகள் வராது.


கேள்வி:- தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவீத பெண்கள் தலைவர்களாக வந்து விட்டனர். இருந்தாலும் அவர்கள் பின்னால் ஆண்கள் இருந்து இயக்குவதாக கூறப்படுகிறதே?


பதில்:- உள்ளாட்சி அமைப்புகளில் ஒரு சில இடங்களில் தலைவிக்கு பின்னால், அவரது கணவர் செயல்படுகின்றனர். நாளடைவில் பெண்கள் தனியாக சிறந்த தலைவியாக செயல்படும் நிலைமை உருவாகும்.

0 comments: