கனிமொழியைக் கவிஞராகவே ஏற்றுக்கொண்டுவிட்டீர்கள், மந்திரியாக ஏற்றுக்கொள்ள முடியாதா?’ என்று சோ உங்களைக் கிண்டலடித்திருக்கிறாரே?

‘‘சாகித்ய அகாடமியின் தலைவராக இருந்த கேரளக் கவிஞர் சச்சிதானந்தன் என்னைக் கவிஞர் என்று ஏற்றுக்கொள்கிறார். ஜெயகாந்தன் ஏற்றுக்கொள்கிறார். எத்தனையோ வளரும் கவிஞர்களுக்கெல்லாம் தராசாக இருக்கும் சுஜாதா ஏற்றுக்கொண்டிருக்கிறார். இவருக்குத் தெரிந்த கவிஞர்களான வாலி, வைரமுத்துவும்கூட என்னைக் கவிஞராக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எல்லாரையும்விட ‘சோ’வுக்கு கவிதை அதிகம் தெரியும் என்று நினைத்துக்கொண்டிருந்தால், அந்த அறியாமைக்காக நான் வருத்தப்படுகிறேன். அர்த்தமற்ற காழ்ப்புணர்ச்சிகளுக்குப் பதில் சொல்வதில் அர்த்தமில்லை.’’
-குமுதம் ரிப்போர்ட்டர்

7 comments:

உடன்பிறப்பு said...

சோவுக்கு சோப்பு போடும் இட்லி வடை இந்த பேட்டியை எல்லாம் போடுவான் என்று எதிர்பார்ப்பது தவறு அன்பு உடன்பிறப்பு அவர்களே. கனிமொழியிடம் இடுக்கும் பக்குவம் கூட முட்டாப்பயல் சோவிடம் இல்லை என்பதில் ஆச்சர்யம் இல்லை

Anonymous said...

அட பாவிங்களா! உங்களால் சோவை ஒரு மனிதனாக மதிக்க முடிகிறதா? அது ஒரு
அரைவேக்காட்டு ஜென்மம். விட்டுத்தள்ளுங்க.
மனுசனாக இருந்தால் மனச்சாட்சி இருக்கவேண்டும்.

Anonymous said...

அட பாவிங்களா! உங்களால் சோவை ஒரு மனிதனாக மதிக்க முடிகிறதா? அது ஒரு
அரைவேக்காட்டு ஜென்மம். விட்டுத்தள்ளுங்க.
மனுசனாக இருந்தால் மனச்சாட்சி இருக்கவேண்டும்.

வெ. ஜெயகணபதி said...

/*
‘சோ’வுக்கு கவிதை அதிகம் தெரியும் என்று நினைத்துக்கொண்டிருந்தால், அந்த அறியாமைக்காக நான் வருத்தப்படுகிறேன்.
*/
நெத்தியடி பதில்...

RATHNESH said...

'சோவை பத்திரிக்கையாளனாகவே ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள்; ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக ஏற்றுக் கொள்ள முடியாதா?' என்று பி.ஜே.பி. செய்த அபத்தம் உறுத்துகிறதோ என்னவோ சோவுக்கு.

jollupandi said...

சோ எல்லாம் ஒரு மனுஷன்னு .. அட போங்க...

Anonymous said...

அழகை ஆராதிப்பவர் கவிஞர்.
கவிஞருக்கு எல்லை கிடையாது.
கவிஞரின் கற்பனை வானத்தை வசப்படுத்தும் திறன் வாய்ந்தது.
கவிஞர் மொழி, நாடு, இனம் கடந்தவர்.
கவிஞரை எந்தச் சிமிழிக்குள்ளும் அடைக்கமுடியாது.
-இந்த வரையறைக்குள் உட்பட்டால், கனிமொழி கவிஞர்தான்.