கண் முன்னே நடக்கும் ஒரு போரைத் தடுத்து நிறுத்த வக்கற்ற பான் கி மூன் வேறு எதற்குத்தான் இருக்கிறார்?

கைப்புள்ள என்று ஒருவர். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என்று ஒரு அமைப்பை நடத்தி வருகிறார். சங்கத்து ஆளை எவனாவது அடிச்சா போய் தட்டிக் கேட்க வேண்டியது அவர் வேலை. ஆனால், நடப்பதோ தலைகீழ். நியாயம் கேட்கப்போற கைப்புள்ளயே உதை வாங்கி, சட்டை டார் டாரா கிழிஞ்சு... ரணகளமா திரும்பி வருவாரு.

பான் கி மூன் ஒரு கைப்புள்ள. அவர் தலைமையேற்று நடத்தும் ஐ.நா.சபையோ ஒரு லொள்ளு சபா (விஜய் டி.வி.யில வருதே... அதுதான்).

பார்த்துச் சிரிக்கலாம், சீரியசா எடுத்துக்கக் கூடாது.

ராஜபக்சே போர் நிறுத்தம் செய்யாத போதும் உண்ணாவிரதத்தை கருணாநிதி பாதியில் முடித்துக் கொண்டது ஏன்?

மறைந்த நடிகர் சுருளிராஜன் பிச்சையெடுப்பதற்காக தள்ளுவண்டியில் (சக்கர நாற்காலியில் அல்ல) சென்று கொண்டிருப்பார் (படத்தில்தான்). அப்போது எதிர்படும் ஒருவன் “அண்ணே, ஏ.வி.எம். ராஜேஸ்வரியில் ‘ஸ்கார்ச்சி’ படம் (அப்போதைய ஆபாசக் குப்பை) ஓடுதுண்ணே” என்று சொல்ல, பிச்சையெடுப்பதை பாதியில் நிறுத்திவிட்டு டாக்சி பிடித்து தியேட்டருக்கு ஓடுவார் சுருளிராஜன்.

சுருளியைப் போல் ஆபாசப் படம் பார்க்க பாதியில் எழுந்து ஓடினாரென்று அவதூறு சொல்லவில்லை. ‘மானாட மயிலாட’ ஷூட்டிங், டப்பிங், ஏதோவொரு படவிழாவில் ஏதோவொரு நடிகையின் குத்தாட்டம்... போன்ற முதல்வரின் அன்றாட நிகழ்ச்சி நிரல் உண்ணாவிரதப் பந்தலில் அவருக்கு நினைவூட்டப்பட்டிருக்கக்கூடும். கடமையை நிறைவேற்ற கிளம்பியிருப்பார்.

ஆரம்பித்தது ஈழப் பிரச்சனையென்பதால் நிறுத்தப்பட்டதற்கும் அதுதான் காரணமாயிருக்கும் என கருணாநிதியின் ரசனை தெரியாத ஜென்மங்கள் (வேறு யார்... நிருபர்கள்தான்) தவறாகச் செய்தி கொடுத்து ‘போரை நிறுத்தி விட்டார்கள்’.

இந்தக் கற்பனை கொஞ்சம் அதிகம் என முகம் சுழித்தால் உங்களுக்கு மேலும் ஒரு தகவல்:

அம்மா ஆட்சியில் அய்யா ஒரு நள்ளிரவு நேரத்தில் ‘கும்மாங்குத்து’ வாங்கிய பிறகு, இனி காவல் துறையினரின் காட்டுமிராண்டித்தனத்தை எப்படி எதிர்கொள்வது என கவலையோடு கட்சியின் செயற்குழு விவாதித்துக் கொண்டிருந்த வேளையில், டெண்டுல்கர் பூஜ்யத்தில் அவுட்டான சேதி துண்டுக் காகிதத்தில் வந்ததாம். சேதி கண்ட கலைஞர் கர்ச்சீப்பால் கண்கள் துடைக்க, சாடையறிந்த செயற்குழு ‘அம்மா’வை அந்தரத்தில் போட்டு விட்டு இந்தியக் கிரிக்கெட் அணியின் எதிர்காலம் பற்றிய கவலையைக் கையிலெடுத்து விவாதித்ததாம்.

‘இலங்கைக்கு உதவவில்லை’ என்று சொல்லி வந்த இந்தியா இறுதிக் கட்டத் தாக்குதலில் 25,000 தமிழர்களைக் கொன்றொழித்த ராஜபக்சேவுக்கு ஐ.நா.வில் பகிரங்க ஆதரவு தெரிவித்து விட்டதே?

யாருக்கும் தெரியாமல் சோரம் போகும் பெண்ணுக்குத்தான் பத்தினி வேசம் தேவை. புருஷனே கூட்டிக் கொடுக்கத் தயாராகி விட்ட பிறகு வெட்டியா அது எதுக்கு?

தன் தொப்புள் கொடி உறவுக்காக தமிழன் துடித்தெழுவான் என ஈழத்தமிழன் எதிர்பார்த்தான். தங்களுக்கு இதுதான் கடைசித் தேர்தலோ என கதர்சட்டைக்காரன் பயந்து செத்தான்.

ஆனால், நூறோ, இருநூறோ வீசியெறிஞ்சா பொறுக்கிக்கிட்டு சொந்தச் சகோதரனை, சகோதரியை துடித்துச் சாக அனுமதிக்கும் ஈனத் தமிழன் இவன் என்ற உண்மையை தேர்தலுக்குப் பின் புரிந்து கொண்ட அன்னை முகமூடி விலக்கி, சொந்த முகம் காட்டி விட்டார்.

‘தனி ஈழம் கிடைக்குமென்றால் ஆதரிக்கத் தயார்’ என்கிறாரே கருணாநிதி?

அவர் ஆதரிக்காவிட்டாலும் கிடைக்கும் ஈழம்.

‘அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு’ என இவருடைய அறிவு ஆசான் அண்ணா சூளுரைத்தபோது “கிடைத்து விடுமா ஆசானே...?” என கேள்வியெழுப்பாமல் வழிமொழிந்ததோடு, மேடைதோறும் அதை வாந்தி எடுத்தவருக்கு ஈழம் என்றவுடன் பொத்துக்கொண்டு வருகிறது. கருணாநிதியின் இந்த எள்ளலில் கரைந்திருப்பது அய்யப்பாடல்ல, கையாலாகாத்தனம்.

புத்திர பாக்கியத்திற்கு உத்தரவாதம் கொடுத்தால் கோவணத்தை அவிழ்க்கத் தயார் என்பவன் மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லப்பட வேண்டியவன்.

‘இந்தியாவின் உதவியின்றி புலிகளை நாங்கள் வென்றிருக்க முடியாது’ என சரத் பொன்சேகா அறிவித்த பிறகும் ஈழத் தமிழரைக் காக்க சோனியாவுக்கு கருணாநிதி கடிதம் எழுதியது ஏன்?

வலை விரித்தாள் வசந்தசேனை. அதில் மாட்டி சீரழிந்து போனான் ஷோக்குப் பேர்வழி புருசோத்தமன்.

‘மனோகரா’ கதை இது.

‘ஸ்பெக்ட்ரம்’ என்ற பெயரில் அன்னையும் விரித்தார் ஒரு வலை. அப்பன் புருசோத்தமன் என்ன... மகன் மனோகரனே மாட்டிக் கொள்ளும் அளவுக்கு சிக்கலான, ‘அறுபதாயிரம் கோடி’ கண்ணிகளைக் கொண்ட வலை அது. விடுவாரா புருசோத்தமன்! ஒரு காலத்தில் புறங்கையை நக்கியவர் வேறு. புகுந்து விளையாடிவிட்டார்.

‘சொக்கத்தங்கம்’ என்று கொஞ்சுவதும், மடிப்பிச்சை ஏந்தி கெஞ்சுவதும் தனக்காகத்தானே தவிர, தமிழருக்காக இல்லை.

தகவல் தொழில் நுட்பம் நம்ப முடியாத அளவுக்கு வளர்ந்து விட்ட இன்றைய காலக்கட்டத்தில் இனி புலிகளின் கொரில்லா

யுத்த முறைக்கு சாத்தியமே இல்லையென எழுத்தாளர் சாருநிவேதிதா சொல்கிறாரே...

எதையும் அரைகுறையா தெரிஞ்சுக்கிட்டு அவுத்துவிடக்கூடிய ஆளில்லை சாரு.

தகவல் தொழில் நுட்ப விசயத்தில் மைக்ரோ சாப்ஃடு, இன்போசிஸ் முதலாளிகளுக்கே வகுப்பெடுக்கும் அளவு ரொம்ப வெவரமானவரு. பெரிய தில்லாலங்கிடி! அப்படிப்பட்டவரே இவ்வளவு தூரம் அடிச்சுப் பேசினதுக்கப்புறம் கொரில்லா யுத்தம் தொடங்குவது பத்தி கண்டிப்பா புலிகள் மறு பரிசீலனை செய்யத்தான் வேண்டும். இந்தப் பாழாய்ப்போன தகவல் தொழில் நுட்பம் போராளிகளுக்குத்தான் ஆப்பு அடித்தது. வேற சிலருக்கோ பெரிய ஜாக்பாட்டா மாறிவிட்டது. அச்சடிக்குறது எப்படி? போலீசு கண்ணுல மண்ணைத் தூவி விக்குறது எப்படி?ன்னு ரொம்ப நாளா தவியாய் தவிச்சுக்கிட்டிருந்தது ஒரு கூட்டம். ‘சரோஜாதேவி புக்கு போடுறவங்க’ என்று அவர்களை அடையாளப்படுத்துவார்கள். சாரு வியந்து பார்க்கும் புதிய தகவல் தொழில் நுட்பம் அவர்களில் சிலரை இப்போது ‘ஹைடெக்’ புத்தக தயாரிப்பாளர்களாக தரம் உயர்த்தியிருக்கிறது. போலீஸ் தொல்லையில்லை, மாமூல் பிரச்சனையில்லை; ஏஜென்சி கமிஷனுமில்லை. தேவை ஒரேயொரு கணினி. ‘ஒரு பெண் சொல்லும் பாலியல் கதைகள்’... அது இதுன்னு ஆணின் வக்கிரத்தையெல்லாம் ஒரு பெண்ணின் பெயரில் பதிவேற்றி விட்டால் போதும். ‘எங்கே கிளுகிளுப்பு’ என அலையும் வாலிப, வயோதிக அன்பர்களின் அடிமடியில் கை வைத்து விடலாம்.

இப்படியாகத்தான் ஆபாசத்தை புத்தகமாகப் போட்டபோது ‘டாஸ்மாக்கில்’ ஒரு கட்டிங் அடிக்கவே கஷ்டப்பட்டவர், பிரமிக்க வைக்கும் இந்தத் தகவல் தொழில்நுட்பத்தால் லீ மெரிடீன் என்ன... அடையாறு பார்க் என்ன... என்று காரில் பறந்து பறந்து சரக்கடிக்கிறார்.

புலிகளுக்குப் போர் தந்திரம் கற்றுக் கொடுப்பவர், கஷ்டத்திலிருக்கும் சக எழுத்து வியாபாரிகளுக்கும் தான் கடைப்பிடிக்கும் இந்த வித்தையை கொஞ்சம் சொல்லிக் கொடுக்கலாம்.

உலகம் முழுக்க பிரிந்த நாடுகளெல்லாம் சேர முயற்சிக்கையில் இலங்கையிலிருந்து ஈழம் பிரிவது சாத்தியமாகாது என்கிறாரே ஞானி?

இறையாண்மையைச் சொல்லி ஈழத்தை எதிர்க்கிறான் காங்கிரசுக்கார ன்.
ஆர்.எஸ்.எஸ்.சின் அகண்ட பாரதக் கனவை மனசுக்குள் பூட்டி வைத்துக்கொண்டு ‘சாத்தியமில்லை’ என்கிறார் ஞானி.
இருவேறு அலைவரிசைகளில் சிந்தித்தாலும் பேராயக் கட்சியோடு ஒரே திசையில் பயணிக்கிறார் ஞானி.
இந்தியாவோடு சேர பாகிஸ்தானும், பாகிஸ்தானோடு சேர பங்களா தேசமும், இந்தோனேசியாவோடு சேர கிழக்கு திமோரும் துடியாய் துடிப்பதை தகுந்த ஆதாரங்களுடன் முன்பே இவர் விளக்கியிருந்தால் தனி ஈழக் கோரிக்கையை அப்போதே கடலில் தூக்கி வீசியிருப்பார்கள் புலிகள்.
காலம் கடந்த போதனை. சரி, அது போய் தொலையட்டும்; பல்வேறு சமூகங்கள் பிரிந்து போவது ஒரு தேசத்துக்கு, தேசத்தின் மக்களுக்கு நல்லதில்லையென்றால், தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளை இருக்கையில் “இனி நான் புருசனுமில்லை, நீ என் பொண்டாட்டியுமில்லை” என ஒன்றாய் இருந்த குடும்பத்தை இரண்டாக்கி (அல்லது மூன்றாக்கி), ஆளுக்கொரு திசையில் பிய்த்துக் கொண்டு போவது மட்டும் எப்படி சரி?
பல குடும்பங்களை உள்ளடக்கியதுதானே ஒரு தேசம்!
ஒரு நாளில் அதிகபட்சம் வீட்டுக்குள் இருப்பது பத்து மணி நேரமே. அந்தச் சொற்ப நேரத்திலும் சம்சாரத்தின் ரோதனையை (அல்லது இந்த ஆளு சேட்டைகளை அந்தம்மா) தாங்க முடியாம அறுத்துக்கிட்டு ஓடலாம்! ஆனா, பல நூறு ஆண்டுகளாய் அடித்து உதைத்து கறிக்கடையிலே ஆட்டிறைச்சிக்குப் பதில் தமிழ் பெண்களின் மார்புகளை வெட்டித் தொங்க விட்டு ‘இங்கே தமிழச்சியின் கறி கிடைக்கும்’ என எழுதிப் போட்ட சிங்களக் காடையனுடன் தமிழன் ஒண்டுக் குடித்தனம் இருக்க வேண்டும்!
என்ன நெஞ்சுரமடா இவனுங்களுக்கு!
சிங்களனுக்கு ஞானி செய்யும் இந்தப் பாத பூஜைக்கு குமுதம் காசு கொடுக்குதோ இல்லையோ... ராஜபக்சே கண்டிப்பாகக் கொடுப்பார் ‘சிங்களஸ்ரீ’ விருது.

அகிம்சை வழியில் போராடினால்தான் விடுதலை கிடைக்குமென்கிறார்களே.... ஜெயமோகனும், சாரு நிவேதிதாவும்?

அப்படிக் கிடைத்திருந்தால் சுதந்திர இந்தியாவில் இராணுவம், போலீசு கைகளில் காந்தியின் சத்திய சோதனையைக் கொடுத்திருப்பார் நேரு! துப்பாக்கியையும், குண்டாந்தடியையும் கொடுத்திருக்க மாட்டார்.

பிரபாகரனுக்கு அகிம்சை போதிக்கும் இவர்கள் ராஜபக்சேவுக்கு எதுவும் சொல்வதில்லையே... ஏன்?

போராடுபவனுக்கு அகிம்சையும், அவனை ஒடுக்குபவனுக்கு ஆயுதமும் பரிந்துரைப்பதுதான் காந்தியம் என்பதாலா?

போராளிகள் கிடக்கிறார்கள்... இரத்த வெறி பிடித்தவர்கள்! இலக்கியவாதிகள் காந்தியின் கொள்ளுப் பேரன்களாயிற்றே! ஜிப்பா கிழியாமல், வேட்டி அவிழாமல் அகிம்சை வழியில் ஒரேயொரு இலக்கியச் சந்திப்பை நடத்திக் காட்டச் சொல்லுங்கள்.

ஆறாவது சம்பளக் கமிஷனை அமல்படுத்த, அரியர்சை ஒரே தவணையில் வாங்கி சரவணா செல்வரத்தினத்திற்குக் கொண்டு ஓட அரசு ஊழியர்களுக்கு காந்தி விட்டுச் சென்றிருக்கும் சொத்து அகிம்சை. சத்தியாக்கிரகம், தர்ணா, மறியல், தட்டேந்துவது, மொட்டையடிப்பது... போன்ற ‘புரட்சிகர’ வடிவங்களைக் கொண்டது அது. போராளிகளுக்கு சரிப்படாது.

ஈழத் தமிழர்களின் எதிர்காலம் இனி என்ன ஆகும்?

பார்ப்பன ஊடகங்கள் பீதியைக் கிளப்புவதைப்போல் அதோகதி ஆகிவிடாது. அதற்காக சாம்பலிலிருந்து சிலிர்த்தெழும் பீனிக்ஸ் பறவைபோல புலிகள் மீண்டு வருவர் என்ற பகுத்தறிவுக்குப் பொருந்தாத நம்பிக்கைகளையும் ஊட்டத் தேவையில்லை.

எதுவுமற்ற வெற்றிடமே ஒரு புயலை கருக்கொள்ள வைக்கிறது எனும் விஞ்ஞானத்தை நம்பிக்கையாக்கிச் சொல்கிறோம்.

புறநானூறு காட்டும் தமிழனின் வீரம் கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்டதோ என்ற அய்யத்தைப் புரட்டிப் போட்ட ஈழத் தமிழரின் போர்த்திறம், சாவு சிலநூறு மீட்டர் தொலைவிலிருந்த போதும் புரிந்த வீரச்சமர் நமக்கு இப்படி உரத்துச் சொல்கிறது: ‘தங்களின் எதிர்காலம் குறித்து இனி கவலைகொள்ள வேண்டியவர்கள் சிங்களர்கள் மட்டுமே’.

-தீசுமாசு டி சில்வா



அறிவற்றவர்களை அதிகாரத்துக்குள்ளாக்குவது உண்மையான அறிவின் செயல்பாடல்ல. மாறாக, மற்றவர்களையும் அறிவாளியாக மாற்றுவதுதான்!

-கார்ல் மார்க்ஸ்

அம்பேத்கருக்குள் புது கிளர்ச்சியை உண்டாக்கியது அமெரிக்காவின் நியூயார்க் நகரம்.

காரணம், இங்கே அவர் மகர் இல்லை. சாலையில் எதிரே அவரைக் கடந்து செல்பவரிடம் 'இவன் என்ன சாதியாக இருப்பான்' என்கிற சந்தேகப் பார்வைகள் இல்லை. முகச் சுளிப்புகள் இல்லை. விலகி நடந்து, சக மனிதனை அற்பப் பிராணி போன்று நடத்தும் அசிங்கங்கள் இல்லை. இதனாலேயே அவரது நெஞ்சு நிமிர்ந்தது. நடையிலும் மனதிலும் உற்சாகம் பிறந்தது. கைகள் சற்று அகலமாகவே நகரத்தின் வீதிகளை வீசி அளந்தன. என்றாலும், தனது தாய்நாடான இந்திய மண்ணில் இந்த அக சுதந்திரத்தைத் தன்னால் பூரணமாக அனுபவிக்க முடியவில்லையே எனும் ஏக்கம் ஒரு புண்ணாக அவரது நினைவில் வலி ஏற்படுத்திக்கொண்டு இருந் தது. இந்தக் குறைகளிலிருந்து தன் தேசத்தையும் தன் மக்களையும் விடுவிப்பதுதான் எதிர்காலத்தில் தான் செய்யவேண்டிய மிக முக்கியமான காரியம் என்பதை அச்சமயத்தில் முழுமையாக உணர்ந்தார் அம்பேத்கர். 22 வயதில் விரும்பி தன் முதுகில் ஏற்றிக்கொண்ட இந்தச் சுமையுடன், அம்பேத்கர் கொலம்பிய பல்கலைக்கழகத்தினுள் அடியெடுத்து வைத்தார்.



கல்லூரிப் பருவத்துக்கே உண்டான சக மாணவர்களின் கேளிக்கைகளைக் கண்டும் காணாதவராக விலகி நடந்தார். வராந்தாக்களில் அவர்கள் விடுக்கும் உற்சாகக் கூக்குரல்கள், எங்கோ கிணற்றுக்குள்ளிருந்து ஒலிப்பது போலத்தான் இவருக்குக் கேட்டது. அந்த அளவுக்கு வேறு எது பற்றிய சிந்தனையுமே இல்லாதவராக, எந்நேரமும் கல்வி ஒரு காந்தம் போல இழுத்துக்கொண்டு இருந்தது. இதனாலேயே அவரது கால்கள் கல்லூரிக்கும் அவர் தங்கியிருந்த காஸ்மோபாலிட்டன் கிளப்புக்கும் இடைப்பட்ட தூரத்தை மட்டுமே அளந்துகொண்டு இருந்தன.

அமெரிக்கர்களின் நடை, உடை, பாவனை, பழக்கவழக்கங்கள் அம்பேத்கரைக் கவர்ந்தன. குறித்த நேரத்தில் உணவு மேசைக்கு வரும் ஒழுங்கு, சிந்தாமல் சிதறாமல் உணவு அருந்தும் பாங்கு, அணியும் உடைகளின் நேர்த்தி, தன்னையும் இழக்காமல் பிறரையும் மதிக்கும் அவர்களது பண்பு போன்ற குணங்களை மெள்ள மெள்ள அவர் தனதாக மாற்றிக்கொண்டார். இரண்டு ரொட்டித் துண்டு, ஒரு மீன் துண்டு, ஒரு குவளை காபி... இவ்வளவுதான் அங்கு அவர் மேற்கொண்ட உணவு முறை. இதற்கே ஒரு நாளைக்கு ஒரு டாலரும் பத்து சென்ட்டும் அவர் செலவு செய்ய வேண்டியிருந்தது. அவருக்கு அளிக்கப்பட்ட உதவித்தொகையில் பாதிப் பணம் இதற்கே செலவழிந்ததால், சில சமயம் உணவு விடுதிக்குள் நுழையாமலே கடந்துசென்றுவிடுவார்.

1915ல், கொலம்பிய பல்கலைக்கழகத்தில் எம்.ஏ., பட்டம் வென்ற அம்பேத்கர், அடுத்த ஆண்டிலேயே 'இந்தியாவில் சாதியம்' மற்றும் 'பண்டைய இந்தியாவில் வாணிபம்' என்னும் தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்து, டாக்டர் பட் டங்களைத் தன் பெயரின் அடைமொழியாக இழுத்துக்கொண்டார். அமெரிக்காவில் ஒருவழியாக அவர் வந்த காரியம் பூர்த்தியானது என்றாலும், தான் காண விரும்பும் லட்சிய உலகுக் கான போராட்டத்துக்கு இந்தப் படிப்பெல்லாம் போதாது என உணர்ந்தார். அறிவுத் தேடல் நெருப் பெனக் கொழுந்துவிட்டு எரிய, அடுத்து லண்ட னுக்குப் பயணமானார். லண்டன் நகரத்தின் 'கிரேஸ் இன்' சட்டக் கல்லூரி, பொருளாதாரம் படிக்க அவரை அனுமதித்துக்கொண்டது. 'என்னதான் ஒருவனுக்கு அறிவு நெருப்பு இத்தனை பிரகாசமாக எரிந்தாலும், இப்படியா வெறியுடன் நாடு நாடாக அலைவது' என, அதுவரை அம்பேத்கரின் கல்விக்கு உதவிய மன்னர் சாயாஜி ராவ் கெய்க்வாட்டுக்குத் தோன்றியதோ என்னவோ... 'இனி என்னால் தம்பிடி காசுகூடச் செலவு செய்ய முடியாது' எனக் கையை விரித்துவிட்டார். அதோடு மட்டுமின்றி, இது வரை படிக்க வைத்த செல வுக்குப் பிரதியாக உடனே அம்பேத்கர் அரண்மனை வந்து சேவகம் செய்ய வேண்டும் எனும் கண்டிப்பான உத்தரவு வேறு!

பட்டம் பாதியில் அறுந்து தொங்கியது. அம்பேத்கரின் மனச் சோர்வைப் புரிந்துகொண்ட 'கிரேஸ் இன்' கல்லூரி நிர்வாகம், 'எப்போது வேண்டுமானாலும் நீங்கள் இங்கே வந்து உங்களின் படிப்பைத் தொடரலாம்' என அனுமதி வழங்கி விடை கொடுக்க, அம்பேத்கர் அரை மனதோடு பெட்டி படுக்கைகளை மூட்டை கட்டிக்கொண்டு ஊருக்குப் புறப்படத் தயாரானார். 1917 ஜூலையில், மார்ஷல் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட எஸ்.எஸ்.கெய்ஸர் எனும் கப்பல், அம்பேத்கரை சமாதானம் செய்யும் விதமாகக் கூவியபடி, இந்தியா நோக்கிப் புறப்பட்டது.

இந்தியா திரும்பியதும், அம்பேத்கரின் புகழ் பம்பாய் மாகாணத்தில் சரசரவெனப் பற்றிப் பரவத் தொடங்கியது. அமெரிக்கா சென்று படிப்பது என்பது, இந்தியாவில் அன்றைக்குச் சாதாரண காரியமல்ல.வசதிமிக்க உயர் சாதியினருக்கேகூட அன்றைய நிலையில் ஆகாத காரியம் அது. இச்சூழலில், மகர் இனத்தைச் சேர்ந்த ஒரு மாணவன் அமெரிக்கா சென்று டாக்டர் பட்டம் பெற்றுத் திரும்பியது, பலரையும் பிரமிப்பில் ஆழ்த்தியது. கண்டிப்பாக இதற்கு விழா எடுத்தே தீர வேண்டும் எனஅனைவரும் விரும்பினர். மாகாண முதன்மை நீதிபதி தலைமையில் பாராட்டு விழாவும் சிறப்பாக நடந்தேறியது. விழா முடிந்த பின், பெரும் கூட்டம் வீடு தேடி வந்து முற்றுகையிட்டுப் பாராட்டைக் குவித்தது. ஆனால், அத்தனைப் பாராட்டுக்களும் ஒரே வாரத்தில் அம்பேத்கரின் கண் முன் சரிந்து விழுந்தன.



படிப்பு எப்படியும் தன் கௌரவத்தையும் அந்தஸ்தையும் உயர்த்திவிடும் என நினைத்திருந்த அம்பேத்கரின் எண்ணத்தில் மண் அள்ளிப் போடுவதற்கென்றே பரோடா அரண்மனையில் காத்திருந்தனர் சாதி வெறியர்கள் சிலர். ஆனால், இது தெரியாத பரோடா மன்னரோ, அம்பேத்கரின் உயர்ந்த படிப்பைக் கௌரவப்படுத்தும் வகையில் ராணுவச் செயலாளராக நியமித்துப் பத்தாண்டுகள் பணிபுரியுமாறு கனிவான கட்டளை விடுத்திருந்தார். துவக்கத்தில் அம்பேத்கரும் அந்தப் பதவியை உவப்புடன் ஏற்றுக்கொண்டு, அதற்கான வேலைகளில் மூழ்கினார். ஆனால், அரண்மனையே அவரைக் கண்டதும் ஓடி ஒளிய ஆரம்பித்தது. ஒரு நாள் தனக்குச் சேவகம் செய்ய நியமிக்கப்பட்ட ஒரு கடைநிலை ஊழியனிடம் அம்பேத்கர் தண்ணீர் கொணருமாறு சொன்னார். வெகு நேரம் அந்தப் பணியாளன் சிலை போல நின்றுவிட்டு, பின்பு தயங்கித் தயங்கி அவரையே எடுத்துக் குடித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டான். படிப்பறிவு இல்லாத அந்தப் பாமரனிடம் இருந்த சாதிவெறியை நினைத்து வருந்தியபடியே, அம்பேத்கர் அருகில் இருந்த பாத்திரத்திலிருந்து தண்ணீர் எடுக்கப் போக, சட்டென அங்கு வந்த இன்னொரு பணிப் பெண் பதற்றத்துடன், அம்பேத்கருக்கெனப் பிரத்யேகமாக வேறொரு பானை வைத்திருப்பதாகவும், அதிலிருந்து தண்ணீர் எடுத்துப் பருகுமாறும் கூறினாள். சாதி வெறி எந்த அளவுக்கு ஒரு நோயாக அவர்களுள் ஊறிப்போயிருக்கிறது என்பதை அறிந்து அம்பேத்கர் அடைந்த துயரத்துக்கு அளவில்லை. கூடவே, இந்த நோயிலிருந்து இவர்களை மீட்டாக வேண்டுமே என்கிற கவலையும் சேர்ந்து, அம்பேத்கரின் மனதில் தாங்க முடியாத பாரத்தை ஏற்றிவிட்டது. இந்த வேதனையுடன், தான் தங்கியிருந்த விடுதிக்குச் சென்றார். அங்கோ இதை எல்லாம்விடப் பெரும் வேதனை காத்திருந்தது.

சற்றுத் தொலைவிலேயே பார்த்துவிட்டார்... விடுதிக்கு வெளியே பத்துப் பதினைந்து பேர் கைகளில் தடியோடு, கண்களில் வெறியோடு காத்திருந்தனர்.



-சரித்திரம் தொடரும்
சென்ற இதழ் தொடர்ச்சி...

ஜெய் பீம் என்றால் ஒளி,
ஜெய் பீம் என்றால் அன்பு,
ஜெய் பீம் என்றால் இருளிலிருந்து வெளிச்சத்தை நோக்கிய பயணம்,
ஜெய் பீம் என்றால் பல கோடி மக்களின் கண்ணீர்த் துளி!

-விலாஸ் பி டிலாரெ (மராத்திய கவி)

கிளை பிரிந்து செல்லும் ஆறு, வறண்ட நிலங்களைத் தேடி அலைந்து, இறுதியில் வீணே கடலில் கலக்கிறது.





ஆனால், அம்பேத்கர் எனும் மூல ஆறு, தன் பயணத்தின் துவக்கத்திலேயே ஒடுக்கப்பட்டவர்களுக் கான பயணமாகத் தன் பாதையைத் தீர்மானித்துக் கொண்டு, அதிலிருந்து இம்மியளவும் விலகாமல் இறுதி வரை பயணித்தது.

அந்த நெடிய பயணத் தின் முதல் புள்ளிதான் அன்று விழாவில் கெலுஸ்கர் அவருக்குப் பரிசாகத் தந்தபுத்தகம்.

அந்தப் புத்தகத்தின் பெயர் 'கௌதம புத்தரின் வாழ்க்கை வரலாறு'.

அனைத்து உயிர்களுக்கும் அன்பையும் அமைதியையும் இன்பத்தையும் நல்கும் வாழ்க்கைநெறியான புத்தரது போதனைகள் அம்பேத்கரது உள்ளத்தில் புது வெளிச்சம் பாய்ச்சின. தன்னைச் சூழ்ந்து அழுத்தியிருக்கும் சாதியம் எனும் கற்பாறைகளை அடித்து நொறுக்க, அறிவு ஒன்றுதான் தன் கையில் இருக்கும் ஒரே ஆயுதம் என்பதை அம்பேத்கர் அந்த விழா மேடையில் உணர்ந்தார். இத்தனைக்கும் அவர் அந்த மெட் ரிகுலேஷன் தேர்வில் வெற்றி பெற்றது 750க்கு 282 எனும் மிகக் குறைந்த மதிப்பெண்களில்தான்.ஆனால், அன்று வரை வேறு எவரும் மகர் இனத்தில் இந்தத் தேர்வை எழுதி வெற்றி பெற்றி ருக்கவில்லை.

முந்தைய பகுதிகள்

சென்ற இதழ்...







உயிருக்காகப் போராடிக் கொண்டு இருக்கும் பெரும் கூட்டத்தினரின் நெருக்கடிகளில்இருந்து தப்பித்திருப்பது தான் ஒருவர் மட்டுமே என்பதை உணர்ந்தார் அம்பேத்கர். துன்பத்திலும் துயரிலுமாக இந்தியா முழுக்க உழலும் எத்தனையோ கோடி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தான் ஒரு ஏணியாக மாறி, அவர்களையும் தன்னைப் போல மாற்ற முடியுமா எனக் கனவு கண்டார். அவருக்குள் அந்தக் கனவு ஒரு பொறியாகக் கனன்றது. தான் இன்னும் பல உயர்ந்த படிப்புகளை படித்து, சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைந்தால் மட்டுமே அந்தக் கனவை நனவாக்க இயலும் என அவரது உள்ளம் அறிவுறுத் தியது.

பாய்மரக் கப்பல் கிழக்குத்திசை யில் பயணிக்கும்போது கடல் காற்று மேற்கு நோக்கி அடித்து அதனைத் திசைதிருப்புவதுபோல, அவரது எண்ணங்களுக்கு மாறாக ஒரு திடீர்ச் சம்பவம் அவரது வாழ்வில் நிகழ்ந்தது. அது அவரின் திருமணம். உண்மையில், அம்பேத் கர் தன் தந்தையிடம் இப்போது திருமணம் வேண்டாம் என எவ்வளவோ மன்றாடிப் பார்த் தார். ஆனாலும், ஒரு சம்பந் தத்தை அவரது தந்தையார் பேசி முடித்துவிட, அம்பேத்கர் மறுத்து விட்டார். பஞ்சாயத்து அவருக்கு ஐந்து ரூபாய் அபராதம் விதித்த தோடு, அந்தப் பெண்ணை அவர் திருமணம் செய்துகொண்டே ஆக வேண்டும் எனத் தீர்ப்புச் சொன்னது. அப்போது அம்பேத் கருக்கு வயது பதினாறுதான். மணப் பெண்ணோ ஒன்பதே வயதான சிறுமி. பெயர் ரமாபாய்.டபோலியில் ஒரு சுமை தூக்கும் கூலியின் இரண்டாவது மகள். பம்பாய் பைகுல்லா மார்க்கெட்டில் ஒரு திறந்தவெளி அங்காடியில், சந்தடிகள் ஓய்ந்த இரவு நேரத்தில் கரிய வானும் நட்சத்திரங்களும் உடன் சில நண்பர்கள், உறவினர் கள் சாட்சியாக எளிமையான அவர்களின் திருமணம் நிகழ்ந்தது.கருக்கலில் மீன் விற்கும் பெண்கள் அங்கு வருவதற்குள் மொத்தக் கூட்டமும் கலைந்து சென்றது.

சாயாஜிராவ் கெய்க்வாட். பரோடாவை ஆண்டுகொண்டுஇருந்த சிற்றரசர். கெலுஸ்கர்தான் அவரைப் பற்றி முதன்முதலாக அம்பேத்கரின் தந்தையிடம் எடுத்துக் கூறி, ''அந்த மன்னர் யாராவது ஒரு தாழ்த்தப்பட்ட மாணவனுக்குரிய கல்விக்கான முழுத் தொகையையும் செலவு செய்யச் சித்தமாக இருக்கிறார். நாம் ஏன் அம்பேத்கரின் கல்லூரிப் படிப்புகாக அவரிடம் உதவிகேட்கக் கூடாது?'' என்றார். கெலுஸ்கரின் இந்தக் கேள்வி அடுத்த சில நாட்களிலேயே அம்பேத்கரையும் அவரது தந்தை யையும் பரோடா அரண்மனை யில், மன்னர் சாயாஜி முன் கொண்டு நிறுத்தியது. அம்பேத்கரின் புத்திசாலித்தனத்தைச் சில கேள்விகளின் மூலம் அறிந்து கொண்ட மன்னர், மாதா மாதம் 25 ரூபாய் உதவித்தொகை தருவதாக உத்தரவாதம் அளித்தார்.

பம்பாய் எல்பின்ஸ்டன் கல்லூரி, அம்பேத்கரின் வரவால் சற்றுப் பரபரப்படைந்தது. தன்னைக் கண்டதும் விலகிச் செல்லும் சில உயர்சாதி மாணவர்களைக்கண்டு உள்ளூர நகைத்தார் அம்பேத்கர். கண்ணிருந்தும் குருடர்களாகத் தடுமாறும் அவர்களை அவரது அறிவின் வெளிச்சம் அலட்சியப்படுத்தி அப் பால் தள்ளியது. கல்லூ ரியில் முல்லர் போன்ற ஆசிரியர்கள் அவரது அறிவின் ஆழத்தைக் கண்டு, அவருக்கு அவ்வப்போது அத்தியாவசியமான உதவிகளைச் செய்து, தங்களது பெயரை வரலாற்றில் இணைத்துக்கொண் டனர். அம்பேத்கரின் தந்தையான ராம்ஜிசக்பால் தன் மகனுக்காக பம்பாய் பரேலில் இரண்டு அறை களைக்கொண்ட புதிய வீட்டுக்கு குடிபுகுந்தார். அவற்றில் ஒரு அறை படிப்பதற்கென்றே பிரத் யேகமாக ஒதுக்கப்பட்டது. மகன் இரவு வெகு நேரம் கண்விழித்துப் படித்துக்கொண்டு இருப்பதை வெளியில் இருட்டில் அமர்ந்து, ஜன்னலின் வெளிச்சத்தை பார்த் தபடியே ராம்ஜியும் பூரிப்புடன் கண்விழித்திருப்பார். அம்பேத் கரின் உழைப்பின் பலனாக 1912ல் பி.ஏ., பட்டம், அவரது தலையை அலங்கரித்தது.

படிப்பு முடிந்த பின், மன்னருக்குக் கொடுத்த வாக்கின்படி அம்பேத்கர் அரண்மனையில் வேலை செய்தாக வேண்டும்.ஆனால், தந்தையார் ராம்ஜி

சக்பாலுக்கோ தன் மகன் மேலும் உயர் படிப்புகள் படித்து, அனைவரும் வியக்கத்தக்க உன்னத நிலைக்கு வர வேண்டும் என்பது பிடிவாதமான அவா. ஆனால், அம்பேத்கரோ கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதுதான் கற்ற கல்விக்கு அழகு என்பதில் தீவிரமாக இருந் தார். படைப் பிரிவில் லெப்டி னென்ட் பதவி அவருக்காகவே காத்திருந்தது. தன் மகன் இத்த னைப் படித்தும், மீண்டும் தன் னைப் போலவே மன்னனுக்கு சேவகம் செய்யப் போய்விட்டானே எனும் கவலை ராம்ஜிசக்பாலை உருக்குலைக்கத் தொடங்கியது.

வேலைக்குச் சேர்ந்து சரியாகப் பதினைந்தே நாளில், அம்பேத்க ருக்கு ஒரு தந்தி வந்தது. அடுத்த நாள் காலையில், கட்டிலில் படுத் திருந்த அந்த வயதானவரின் மெல்லிய கரங்கள் நடுங்கியபடி அம்பேத்கரின் முதுகை வாஞ்சை யோடு தடவிக்கொடுத்தன. சுற்றி யிருந்த உறவினர்களின் கேவல் களும் அழுகை ஒலிகளும் ஒரு கட்டத்தில் வெடித்துப்பீறிட, நொடியில் சடலமாகிப்போன தன் தந்தையின் உடலைப் பார்த்து அம்பேத்கர் கதறியழுதார். அந்த வெற்றுடம்புக்கு இப்போது மகனை உயர்ந்த படிப்பு படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை ஏதும் இல்லை. அம்பேத்கருக்குள் அது இடம் மாறியிருந்தது.



ஒரு மகனாகத் தந்தைக்கு நிறைவேற்ற வேண்டிய கடமைகள் அனைத்தையும் முடித்ததும்,இனி அரண்மனைக்குத் திரும்புவ தில்லை என அம்பேத்கர் ஒரு தெளிவான முடிவுக்கு வந்திருந்தார். தந்தையின் கனவு என்பது ஒரு காரணம்தான் என்றாலும், அரண்மனையில் இதர சாதியினர் காட்டும் சாதிய வேறுபாடுகளும் அதற்கு முக்கியக் காரணமாக இருந்தது. இந் நிலையில், அடுத்து என்ன செய்வது எனக் குழம்பிய நிலையில் அம்பேத்கர் தன் எதிர் காலத்தின் இருண்ட வாசலில் நின்றுகொண்டு இருந்தபோது, தூரத்து வெளிச்சப் புள்ளியாய் ஒரு தகவல் வந்தது. அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் மேற்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களைத் தன் சொந்த செலவில் படிக்கவைக்கப்போவதாக பரோடா மன்னர் விடுத்திருந்த அழைப்பு அது. எந்த அரண்மனைக்குள் செல்ல வேண்டாம் என முடிவெடுத்திருந் தாரோ, அதே அரண்மனைக்கு தன் கல்வியின் நிமித்தமாகவும் தன் தந்தையின் கனவு நிமித்த மாகவும் மீண்டும் உதவி கேட்டு விண்ணப்பித்தார் அம்பேத்கர். மூன்று முத்துக்களை பரோடா அரண்மனை தேர்வு செய்தது.அவர்களில் ஒருவராக அம்பேத்கர் மீண்டும் அரசரின் முன் நின்றார்.கல்வி முடிந்ததும், பத்தாண்டுக் காலம் அரண்மனைச் சேவகம் எனும் ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் கையெழுத்திட்டார்.

1913 ஜூலை மாதத்தின் மூன்றாவது வாரத்தின் ஒரு காலை நேரம்... நியூயார்க் நகரம் எப்போதும் போல் காபியைச் சுவைத்தபடி பரபரப்பாகத் தன் நாளை ஒரு புதிய இளைஞனுடன் கைகுலுக்கித் துவக்கிக்கொண்டது.அம்பேத்கருக்குள் இனம்புரியாத மன எழுச்சி. என்னவென்றே விவரிக்கத் தெரியாத உற்சாகம்!

காரணம்...
சமத்துவம் என்பது சமமாக நடத்தப்படுவது அல்ல,
சம வாய்ப்புகளைப் பகிர்ந்துகொள்வது!

-ஏங்கல்ஸ்

காலையில் மழை சோவென கொட்டத்துவங்கியது. சதாராவின் வீதியில் பள்ளிக்குப் புறப்படும் தறுவாயில்இருந்த சிறுவர்கள் ஐந்தாறு பேர் மழையையே வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தனர். இதையே சாக்காக வைத்துக்கொண்டு இன்று எப்படியும் பள்ளிக்கு மட்டம் போட்டுவிடுவது என்பது அவர்களுடைய திட்டம். அவர்களுள் ஒருவனாக நின்ற சிறுவன் பீமின் மனதிலோ வேறு எண்ணம். என்னதான் மழை விடாமல் பெய்தாலும், இன்று எப்படியும் பள்ளிக்குச் செல்வது என அவன் முடிவெடுத்திருந்தான். இதைக் கேட்ட மற்ற சிறுவர்கள் பீமைக் கேலி செய்தனர். ''உன்னால்இந்த அடைமழையில் பள்ளிக்குச் செல்ல முடியுமா?'' எனச்சவால் விட்ட.னர். அடுத்த நொடியே, எதையும் பொருட்படுத்தாமல் பீம் தெருவில் இறங்கி நடக்கத் துவங்கினான். எப்படியெல் லாம் தனது புத்தகப் பையை ஈரம் படாமல் பாதுகாக்க முடியுமோ, அதற்கான முயற்சிகள் அனைத்தையும் மேற் கொண்டபடி, பள்ளியை நோக்கி விறுவிறுவென நடந்துசென்றான். ஓரிடத்தில் மழை மிகக் கடுமையாகக் கொட்டத் துவங்க, அருகிலிருந்த வீடொன்றில் அவன் ஒதுங்கி நின்ற சமயம், வீட்டிலிருந்து வெளியே வந்த ஒரு பெண்மணி கோபத்துடன் பீமைப் பார்த்தாள். அடுத்த நொடி, பீம் தெருவில் விழுந்துகிடந்தான். தன் நெஞ்சோடு இறுக்கமாக அவன் பிடித்திருந்த புத்தகப் பையினுள் இப்போது நீர் முழுவதுமாகப் புகுந்திருந்தது. எழுந்து நின்றான். அவனுக்கு எதிரே இன்னமும் அந்தப் பெண்மணி ஆவேசத் துடன் நின்றுகொண்டு இருந்தாள். ''நீ ஒரு மகார்! என்ன தைரியம் இருந்தால் இந்த வீட்டுக்குள் காலடி வைப்பாய்?'' என இரைந் தாள். அந்தக் கொட்டும் மழை ஈரத்தையும் மீறி, தீண்டாமை எனும் கொடிய நெருப்பு சிறுவன் பீமின் இதயத்தை எரித்தது.



தனது குழந்தைகளை எந்தப் பேய் நெருங்கிவிடக் கூடாது என கிராமத்திலிருந்து ராம்ஜி சக்பால் நகரத்துக்கு அழைத்து வந்தாரோ, அங்கேயும் அது வெவ்வேறு வித மான ரூபங்களில் தன் குழந்தை களைப் பயமுறுத்தி வருவதைக் கண்டு அவர் மிகுந்த மன வேதனை கொண்டார்.

பீம் வளர்ந்து பெரியவன் ஆனான். ஆரம்பக் கல்விகள் முடிந்து, உயர்நிலைக் கல்வியில் சேரும் நேரமும் வந்தது. பள்ளி யில் தன் மகனைச் சேர்க்கச் சென்றபோது, இம்முறை ராம்ஜி கூடுதல் கவனத்துடன் புதிய பள்ளியின் சாதியத் தொந்தரவு களிலிருந்து மகனைப் பாதுகாக்க ஒரு புதிய உத்தியை மேற்கொண் டார். அதன்படி, பீம் எனும் அவன் பெயருக்குப் பின்னால் ஒட்டிக்கொண்டு இருக்கும் பட்டப் பெயரான சக்பாலை எடுத்துவிட்டு, பீமின் மேல் பற்று வைத்திருந்த ஆசிரியர் ஒருவரின் பெயரைச் சேர்க்க முடிவு செய்தார். அந்தப் பெயர்தான் அம்பேத்கர். இன்று இந்தியாவின் ஒவ்வொரு கடைசி மனிதனுக்கும் வாழ்வதற்கான நம்பிக்கையையும், போராடுவதற்கான வலிமையையும் ஊட்டும் பெயராக விளங்கி வரும் அந்தப் பெயர் உருவாக்கம் பெற்றது இப்படித்தான். அதுவரை பீமாராவ் சக்பால் என்று அழைக்கப்பட்ட அந்தச் சிறுவன், அன்று முதல் பீமாராவ் அம்பேத்கராக மாறினான்.

ராம்ஜி சக்பாலுக்கு இச்சமயத்தில் மகாராஷ்டிரத்தில் காரேகான் எனும் இடத்தில் காசாளர் வேலை கிடைத்தது. எனவே அவர், தன் பிள்ளைகளை அவர் களின் அத்தையின் பொறுப்பில் விட்டுவிட்டு அங்கே சென்றுவிட் டார். விடுமுறை நாளின்போது அம்பேத்கர், அவரின் சகோதரன் மற்றும் அக்காள் மகன் ஆகிய மூவரும் தங்கள் தந்தையைச் சந்திக்கவேண்டி, காரேகானுக்கு ரயிலில் புறப்பட்டு மசூர் ரயில் நிலையத்தை அடைந்தனர். அங்கே அவர்களுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. குறித்த நேரத்தில் இவர்கள் வரும் தகவல் கிடைக்காத காரணத்தாலோ என்னவோ, இவர்களை அழைத் துப் போக ரயில் நிலையத்துக்குத் தந்தை வரவில்லை. மூவரும் வாட கைக்கு ஒரு மாட்டுவண்டியைப் பிடித்து காரேகான் செல்லத் தயாராயினர். பாதித் தொலைவு சென்றிருப்பார்கள்... வண்டிக்கார னுக்கு தான் மகார் இனச் சிறுவர்களை ஏற்றிச் செல்கிறோம் என்பது தெரிய வர, சட்டென ஆத்திரப்பட்டவன் அப்படியே அந்த வண்டியைக் குடை சாய்த்து மூன்று சிறுவர்களையும் கீழே உருண்டு விழச் செய்தான். அதன் பிறகு மிகுந்த சிரமத்துக்கிடையே மூவரும் தட்டுத் தடுமாறி, ஒரு வழியாக காரேகானுக்குச் சென்று சேர்ந்தனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, தாக மிகுதியால் ஒரு குளத்தில் இறங்கி நீர் குடிக்கச் சென்றபோது ஊரார் ஒன்று சேர்ந்து துரத்தி அடித்த சம்பவம், சிகை திருத்தும் நிலையத்தில் முடி பாதி வெட்டப்பட்ட நிலையில் அரைகுறையாக இறக்கிவிடப் பட்டு அவமானத்தோடு வீடு வந்து சேர்ந்து, சகோதரிகளால் மீதமுள்ள முடி திருத்தப்பட்ட சம்பவம் எனச் சிறுவயதிலேயே தீண்டாமையின் கொடுமை வெந்தணல் கொப்புளங்களாக அவர் உள்ளத்தில் நீர் கட்டி நின்றன. கல்வி ஒன்றுதான் இவை அனைத்துக்கும் தீர்வு என்பதை நன்கு உணர்ந்துகொண்ட அம்பேத்கர், முன்னிலும் தீவிரமாகப் படிப்பில் நாட்டம் செலுத்தத் துவங்கினார்.

பள்ளியில் அம்பேத்கர் தனது ஆழ்ந்த படிப்பாலும், இனிமையான சுபாவத்தாலும், எதனையும் ஆய்ந்தறிந்து வெளிப்படுத்தும் நுண்ணறிவாலும் தனித்துவமான மாணவனாக விளங்கினார். என்றாலும், சில மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் மூளையில் புற்றுநோயாக ஒட்டிக்கொண்டு இருந்த சாதியம் எனும் வெறி, அவரை மனதளவில் பள்ளியிலிருந்து விலகியிருக்கவே செய்தது. இதனால் பள்ளிக்காலங்களில் அம்பேத்கருக்குத் தோழர்கள் என யாரும் இல்லை. ஆனால், அந்தக் குறையைப் புத்தகங்கள் போக்கின. ஒரு நல்ல நூலைக் காட்டிலும் சிறந்த நட்புவேறு எதுவாக இருந்துவிட முடியும்? சமயம் கிட்டும்போதெல்லாம் அந்த நண்பர்களுடன் தனது நேரத்தை முழுமையாகச் செலவிடுவார் அம்பேத்கர். மாலை நேரங்களில் அருகில் இருக்கும் பூங்காக்களுக்குச் சென்று, இந்த உலகத்தையும் மனிதர்களையும் வேடிக்கை பார்க்கத் துவங்குவார்.

இப்படிச் சிறு வயதிலேயே ஆழ்ந்த சிந்தனையும் தனிமை யுமாகக் காணப்பட்ட அந்தச் சிறுவனை, அந்தப் பூங்காவுக்கு வழக்கமாக வரும் ஒரு நபர் நாள்தோறும் கவனிக்கத் துவங்கினார்.அவர் பெயர் கிருஷ்ண அர்ச்சுன ராவ் கெலுஸ்கர். வில்சன் ஹைஸ் கூலின் தலைமை ஆசிரியரான அவர், அப்போதே இந்தச் சிறுவனிடம் அசாத்தியமானதொரு சக்தி இருக்கிறது என்பதை உணர்ந்துகொண்டார்.



அந்த வருட மெட்ரிகுலேஷன் தேர்வுகளின் முடிவுகள் வெளி யானபோது, தாழ்த்தப்பட்ட மாணவர்களில் ஒருவன் முதல்முறையாக மெட்ரிக்கில் தேர்ச்சி பெற்றது மிக முக்கியமான செய்தியாக அங்கிருப்பவர்களால் பேசப்பட்டது. 'நமது சமூகத்தில் முதல்முறையாக ஒருவன் செய்திருக்கும் சாதனையை நாம் கொண்டாடவேண்டும்' என அந்த மக்கள் முடிவு செய்து, அதற்கென ஒரு விழாவை ஏற்பாடு செய்தார்கள். அந்த விழாவுக்கு அவர்கள் சிறப்பு விருந்தினராக ஒருவரை அழைத்தார்கள். அவர் கெலுஸ்கர். பூங்காவில் பார்த்து, எந்த மாணவ னைப் பற்றி ஒரு நல்ல அபிப்ராயம் கொண்டிருந்தோமோ, அதே மாணவனுக்குத்தான் நாம் பரிச ளிக்கப் போகிறோம் என்பதை அறிந்து, அந்த ஆசிரியருக்கு மட்டற்ற மகிழ்ச்சி!

விழாவில், சிறுவன் அம்பேத் கரை மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாய்க் கட்டியணைத்துப் பாராட்டிய கெலுஸ்கர், அவனது உள்ளத்து உறுதியைக் கண்டு, ஒரு புத்தகத் தைப் பரிசாக அளித்தார். பின்னாளில் அந்தப் புத்தகம்தான் அம்பேத்கரின் வாழ்க்கையையே தலைகீழான மாறுதலுக்கு உள்ளாக்கப் போகிறது என்பதை அவர்கள் இருவருமே அப்போது அறிந்திருக்க இயலாது!



-சரித்திரம் தொடரும்
கல்வியின்மையால் அறிவை இழந்தோம்;
அறிவின்மையால் வளர்ச்சியை இழந்தோம்;
வளர்ச்சியின்மையால் சொத்தை இழந்தோம்; சொத்து
இல்லாததால் சூத்திரர்களாக ஆனோம்!

-ஜோதிராவ் புலே (1890)

மகாராஷ்டிராவில் கொங்கன் மாவட்டத்தின் டபோலி எனும் சிறு கிராமம். அதிகாலைப் பனி விலகாத வயல்வெளிக்கிடையே பாம்பு போல வளைந்து செல்லும் ஒற்றையடிப் பாதையில் ஒரு ஜோடிப் பிஞ்சுக் கால்கள் தாவிக் குதித்து ஓடுகின்றன. பின்னாலேயே அவனது தந்தை. அன்றுதான் அந்தச் சிறுவனுக்குப் பள்ளியின் முதல் நாள். அதனாலேயே, தந்தை மகன் இருவருக்குள்ளும் கரை காணாத உற்சாகம்.

ஆனால், பள்ளியில் சேர்ந்த அடுத்த நொடியிலேயே அந்தச் சிறுவனின் உற்சாகம் வடிந்து, வகுப்பறையைவிட்டு வெளியேறியது. காரணம், சக மாணவர்களுடன் சரி சமமாக உட்கார அவனுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அவன் மகார் இனத்தைச் சேர்ந்தவன் என்பதுதான் காரணம். மீறி அந்தச் சிறுவன் தொடர்ந்து படிக்க விரும்பினால், வகுப்புக்கு வரும்போது புத்தகப் பையுடன் ஒரு கோணிச்சாக்கையும் கொண்டுவரும்படி வேண்டா வெறுப்பாக உத்தரவிட்டார் ஆசிரியர்.



அன்று, அந்தச் சிறுவனின் மனதில் ஆயிரம் கேள்விகள். 'நாம் தீண்டத்தகாதவர்கள். நாம் சார்ந்திருக்கும் இந்து மதம் நம்மை அப்படித்தான் மற்றவர்களிடமிருந்து பிரித்து ஒதுக்கி இருக்கிறது' எனத் தன் மகனுக்கு பிற்பாடு விளக்கினார் அவனது தந்தை. அன்று இரவு, அந்தச் சிறுவனின் கன்னங்களில் நீர் வழிந்தது.

மறுநாள், ஆசிரியர் மற்றும் இதர மாணவர்களின் பார்வை வாசலை நோக்கித் திரும்பியது. அங்கே, அந்தச் சிறுவன் கையில் கோணிச்சாக்குடன் நின்றிருந்தான்.

1947... ஐம்பது ஆண்டுகளுக்குரிய வளர்ச்சியுடன் இப்போது அந்தச் சிறுவன் கோட் சூட் அணிந்த மனிதனாக வந்து நின்றான். ஒட்டுமொத்த இந்தியாவே அவனது வருகைக்காக நாடாளுமன்றத்தில் திரும்பிப் பார்த்தது. இப்போது அவன் கையில் கோணிச்சாக்கு இல்லை... மாறாக, கோப்புகள் இருந்தன. இந்தியாவின் எதிர்காலத்தையே தீர்மானித்த இந்திய அரசியல் சாசனச் சட்டம் அந்தக் கோப்பில் இருந்தது.

தாழ்த்தப்பட்டவர்களின் மீதான அடிமைத்தளையைக் கல்விஎனும் வெடி வைத்துத் தகர்த்த வீரனாகவும், இந்து மதத்தின் 2,500 வருட மனக் கசடான மனு எனும் அதர்மத்தை விரட்டியடித்த அறிவுச் சுரங்கமாகவும், இந்தியாவின் அக விடுதலைக்காகத் தனது காலத்தை விதையாக்கிப் போராடி வெற்றித் திருமகனாக வாழ்ந்த தியாகி... டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்.



அம்பேத்கரின் வாழ்க்கை தவிர்க்கவே முடியாமல் இந்தியாவின் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து துவங்குகிறது.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் வாழும் நிமித்தம் நாடோடிகளாக வந்த புதிய இனத்தவரான ஆரியர்கள், பொருளீட்டும் வாழ்வில் மேம்பட்டவர்களாக இருந்தனர். இதனால் இந்தியாவின் பூர்வகுடிகளை அவர்களால் சுலபமாகச் சமாளிக்க முடிந்தது. தங்களை எதிர்ப்பிலிருந்து காத்துக்கொள்ளும் பொருட்டாக, சமூகத்தை நான்காகப் பிரித்தனர். பிராமணர், சத்ரியர், வைசியர், சூத்திரர் என்பதாக அதிகாரத்தின் படிகளை அவர்களே அமைத்தனர். அதற்கான காரணங்களை வடிவமைக்க, கடவுளும் மதமும் உருவானது. அதனை நம்பவைக்க வேதங்களும், புராணங்களும், கதைகளும் உருவாக்கப்பட்டன. சடங்குகளும் சம்பிரதாயங்களும் இறுக இறுக, அதிகாரம் சூத்திரர்களை மேலும் மேலும் ஒதுக்கிக்கொண்டே போனது.

உலகில் எந்த நாட்டிலும், ஒருவன் எத்தனை கீழான குடியில் பிறந்தாலும், வளர்ந்த பிறகு அவன் தன் நிலையை மேம்படுத்திக்கொள்வது அவனது அறிவையும் நடத்தையையும் பொறுத்தே அமைகிறது. ஆனால், இந்தியாவில் மட்டும் கருவில் பிறக்கும்போதே அது தீர்மானிக்கப்பட்டு, வாழ்வில் எத்தனைதான் உயர்ந்தாலும் தாழ்ந்தவனாக கருதப்படும் இழிநிலை கட்டமைக்கப்பட்டது. இதனால், அவர்களின் உரிமைகள் பிடுங்கப்பட்டன; அறிவு பிடுங்கப்பட்டது; அவர்களுக்கான வாழ்நிலம் பிடுங்கப்பட்டது; ஆடைகள் பிடுங்கப்பட்டன; சுதந்திரமும் பிடுங்கப்பட்டு அடிமைகளாக மாற்றப்பட்டனர்.

இந்த இழிநிலையிலிருந்து தன்னையும் தனது சமூகத்தையும் விடுவிக்கத் தோன்றிய விடிவெள்ளியாக, டாக்டர் அம்பேத்கர், ஏப்ரல் 14, 1891ம் ஆண்டு மத்தியப்பிரதேசத்தில் மாஹ¨ எனும் சிற்றூரில் பிறந்தார். அவரது தந்தையார் ராம்ஜி சக்பால். மகாராஷ்டிரத்தில் கொங்கன் மாவட்டத்தைச் சேர்ந்த அம்பவடே எனும் சிறு கிராமம்தான் அவரது பூர்விகம். ராம்ஜியின் வம்சாவளியினர் மகாராஷ்டிரத்தின் பூர்வகுடிகளான மகார் இனத்தைச் சேர்ந்தவர்கள். துவக்க காலத்தில் இந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இங்கு வசித்த காரணத்தால்தான் மகா(ர்)ராஷ்டிரம் என்ற பெயர் இந்த நிலப்பரப்புக்கு உருவானது.

ஓங்குதாங்கான மகார்களை அப்போது இந்தியாவை ஆட்சி செய்த கிழக்கிந்திய கம்பெனி, தன் படைவீரர்களாகச் சேர்த்துக்கொண்டது. அம்பேத்கரின் தந்தை ராம்ஜி சக்பாலும் அந்தப் படையில் சுபேதாராகப் பணிபுரிந்துவந்தார். இதனாலேயே, ராம்ஜி சக்பாலுக்கு ஓரளவு வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்த பீமா என்ற பெண்ணைத் திருமணம் செய்ய முடிந்தது. ராம்ஜி சக்பாலுக்குத் தனது மனைவியின் மேல் கொள்ளைப் பிரியம். வரிசையாகப் பிறந்தன பதினாலு குழந்தைகள். அதில், பதினான்காவதாகப் பிறந்தது ஓர் ஆண் குழந்தை. குழந்தைக்கு என்ன பெயர் சூட்டுவது என யோசித்த ராம்ஜிக்கு, சட்டெனத் தோன்றியது மகாபாரத பீமனின் உருவம். அடிப்படையில், தீவிர பக்திமானான அவர், ஒரு குத்துச்சண்டை பிரியரும்கூட. அதன் காரணமாக, தனது மகனும் எவருமே அசைக்க முடியாத வீரனாக வருங்காலத்தில் வளர வேண்டும் என்ற எண்ணத்தில் பீம் என அவனுக்குப் பெயர் சூட்டினார்.

பீமுக்கு இரண்டு வயதானபோது, சுபேதார் ராம்ஜி சக்பாலின் வாழ்வில் ஒரு திடீர் சோதனை. இனி மகார்களைப் படைப் பிரிவில் சேர்க்கக் கூடாது என பிரிட்டிஷ் அரசாங்கம் புதிய கட்டுப்பாட்டை விதித்ததால், ராம்ஜியின் வேலை பறிபோனது. மீண்டும் தனது சொந்த ஊரான மகாராஷ்டிரத்தின் டபோலிக்கே குடும்பத்துடன் இடம்பெயர்ந்த ராம்ஜிக்கு அந்த இடமும் கசந்தது. காரணம், அங்கும் தலைவிரித்தாடிய சாதியக் கொடுமை. தீண்டாமை எனும் பேய் அந்த ஊரையே நோய்க்கூறாகப் பற்றியிருந்தது. தனது பிள்ளைகள் பள்ளி சென்று முறையான கல்வியைப் பெறுவதற்குக்கூட அங்கிருந்த ஆசிரியர்களும் இதர சாதிகளைச் சேர்ந்த மக்களும் தடையாக இருப்பதைக் கண்டு ராம்ஜி வேதனைகொண்டார். தன் பிள்ளைகள் தினம்தினம் கோணி சுமந்து பள்ளிக்குச் செல்ல வேண்டிய அவமானத்தை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

குழந்தைகளின் பிஞ்சு இதயங்களில் தீண்டாமையின் வேதனை தீண்டிவிடக் கூடாது என உணர்ந்த ராம்ஜி, சிறிது காலத்திலேயே தனது குடும்பத்தை சதாரா நகரத்துக்கு மாற்றிக்கொண்டார். சதாராவுக்கு அவர்கள் குடி பெயர்ந்ததுமே, குடும்பத்தில் இரண்டு முக்கிய நிகழ்வுகள் நடந்தேறின. ஒன்று, ராம்ஜி சக்பாலின் மனைவி பீமாபாயின் திடீர் மறைவு. ராம்ஜியால் அந்தத் துக்கத்திலிருந்து அத்தனை சுலபமாக வெளிவர முடியவில்லை. இன்னொன்று, அதற்கு ஆறுதலான விஷயம். அது, ராம்ஜிக்குக் கிடைத்த ஸ்டோர் கீப்பர் வேலை. இனி, தனது குழந்தைகளுக்குக் கௌரவமான படிப்பைத் தர முடியும் எனும் நம்பிக்கை வந்தது.

அங்கிருந்த பள்ளி ஒன்றில் ஆங்கில வகுப்பில் தனது மகனைச் சேர்த்தார் ராம்ஜி. என்னதான் இடம் மாறினாலும் சாதி துவேஷம் அங்கும் அதிகம் இருந்தது. தனது பிள்ளைகளுக்கு இங்கும் அந்த வேதனையின் நிழல் படிந்துவிடக் கூடாது என நினைத்தார் ராம்ஜி. அவரது எண்ணத்தை தலைகீழாக மாற்றுவதற்கென்றே அன்று வந்தது ஒரு மழை!



-சரித்திரம் தொடரும்

2011-ன் நிச்சய முதல்வர்


'வருங்கால முதல்வர் கார்த்திக்... 2011-ன் நிச்சய முதல்வர் கார்த்திக்... நாளைய பிரதமர் கார்த்திக்..!' என்னும் வகைதொகையில்லாத கோஷங்களுக்கு நடுவே, வாய் நிறைய சிரிப்போடு மைக் பிடிக்கிறார் நடிகரும் ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் முன்னாள் தமிழகத் தலைவருமான கார்த்திக்.

''கடவுள் இல்லை என்று சொல்பவன் முட்டாள். கடவுள் இருக்கிறார்... இருக்கிறார்... இருக்கிறார்..! கண்ணால் கண்டால் மட்டுமே கடவுள் என்று சொன்னால், கண் இல்லாதவர்களுக்கு அவர் கடவுள் இல்லையா..! நமக்கு ஏற்படும் சோதனைகளுக்குக் கடவுளை நம்ப வேண்டும்!'' என்று அதிரடி ஆத்திகம் பேசுகிறார் கார்த்திகானந்தா! குழுமி நின்ற ரசிகர்களைக் கொஞ்ச நேரம் குழப்பியடித்துவிட்டு, பேட்டிக்குத் தயாரானார்.



''பிஸ்வாஸோட நீண்ட நாள் ஆசை நிறைவேறிடுச்சு! அரசியல்ல என்னோட ஃபாஸ்ட் குரோத் அவருக்குப் புடிக்கலை. அதனாலதான் கட்சியோட தமிழகத் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து என்னை நீக்கியிருக்கார். இதுக்கு மேல ஒரு கட்சியை யார் பொறுப்பா பார்த்துக்குவாங்க? இனி நான் ஃபார்வர்ட் பிளாக்ல இல்லை. நான் இல்லாதது இன்னும் கொஞ்சம் நாள்ல அவங்களுக்குத் தெரியும்! ஆக்சுவலி, இப்போ எனக்கு 'மூடு' சரியில்லை. இருந்தாலும், பேட்டி தரேன். கேள்விகளைக் கேளுங்க..!'' என்று சுறுசுறுப்பானவரிடம், ''முதல்ல... உங்களுக்கு என்னதான் சார் பிரச்னை..?'' என்றோம்.

''எந்தப் பிரச்னையைன்னு சொல்றது? நான் ஒப்புக்கிறேன் சார், எனக்கு அரசியல் தெரியலை, தெரியலை, தெரியலை! அரசியலுக்கு வந்த புதுசுல, அப்பாவியா யார் என்ன சொன்னாலும் தலையாட்டினேன். கொஞ்சம் லேட்டா னாலும், என்னைச் சுத்தி சதி வலை பின்றாங்கன்னு கண்டு பிடிச்சுட்டேன். நான் நம்பின எல்லாரும் என்கூட இருந்தே குழி பறிச்சாங்க சார்! ஐ நெவர் லைக் திஸ், யூ ஸீ! அப்பவும் ரொம்பப் பொறுமையா எல்லாரையும் கூப்பிட்டு வெச்சு, 'ஒத்துமையா நல்லபடியா இருங்க'ன்னு அட்வைஸ் பண்ணிக் கை குலுக்கினேன். அப்படியும் யாரும் என் பேச்சை கேட்கலே. இப்ப கடைசியில பாதிக்கப்பட்டது நான்தான்!''

''அடுத்ததா என்ன செய்யப் போறீங்க..?''

''யூ ஸீ... நான் சும்மா விட்டுடுவேன்னு நினைக்கிறீங்களா..? சான்ஸே இல்லை! தமிழ்நாட்டு மக்களுக்கு இப்பதான் நான் ரொம்ப அவசியம்(!!!). ஒண்ணு சொல்லட்டுமா... தமிழகத்து மக்கள், குறிப்பா தென் மாவட்டங்களில் இருக்கிற என் இன மக்கள் ரொம்பப் பாசம் வெச்சிருக்காங்க! இப்ப கொஞ்ச நாளா நான் சினிமாவிலும் நடிக்கிறதில்லை. ஆனாலும், என் மேல இத்தனைப் பிரியமா இருக்கிற அந்தப் பாசக்கார மக்களுக்கு நான் ஏதாவது செஞ்சே ஆகணும். ஆனா, உடனடியா என்ன செய்யறதுனு ரொம்பக் குழப்பமா இருக்கு! ஆனா, பெருசா ஏதாவது செய்யணும்னு மட்டும் முடிவு பண்ணிட்டேன்!''

''அப்ப புதுக்கட்சி துவக்குறதுனு முடிவே பண்ணிட்டீங்களா?''

''ம்ம்ம்... சீக்கிரமே புதுக் கட்சி பத்தி அறிவிப்பேன். அந்தக் கட்சி தேவர் ஐயா பேர்ல இருக்கும். இத்தனை வருஷ தீவிர அரசியல்ல(!) இருந்ததால, இன்னொண்ணும் நான் தெரிஞ்சுக்கிட்டேன். தனியா கட்சி நடத்துறது ரொம்ப ரொம்பக் கஷ்டம். அதனால கட்டாயம் கூட்டணி வைப்பேன். அது அ.தி.மு.க-வா இருக்கலாம். அல்லது, தி.மு.க-வா இருக்கலாம். அல்லது... ம்... வேற என்ன பெரிய கட்சிங்க இருக்கு... நிச்சயம் அவங்களோட கூட்டணி வைப்பேன். வர்ற பார்லிமென்ட் எலெக்ஷன்ல எப்படியும் என் கட்சிக்கு ஒரு எம்.பி. சீட்டு இருக்குங்க!''

''உலக அரசியலைக் கவனிக்கிறீங்களா?''

''இங்கே ஒரு கார்த்திக் - பிஸ்வாஸ் மாதிரி, உலகம் பூரா அப்பாவி அரசியல்வாதிகளும் மோச மான அரசியல்வாதிகளும் நிறையப் பேர் இருக்காங்க. அந்த புஷ்ஷைப் பாருங்க... இரான் வழியா நாம கேஸ் பைப் லைன் கொண்டு வந்தா அந்தாளுக்கு என்னங்க வந்துச்சு? இண்டியாக்காரன் நெறைய சாப்பிடுறதாலதான் உணவுப் பஞ்சம்னு அந்தாளு சொல்றது சுத்தப் பைத்தியக்காரத்தனம்.

கார்த்திக் சும்மா இருக்கான்னு நிறையப் பேர் நினைச்சுட்டு இருக்காங்க. நான் ஒண்ணும் சும்மா இல்லீங்க பிரதர்! என்னோட 'லேப்-டாப்' மூலமா எல்லாத்தையும் வாட்ச் பண்ணிட் டுதான் இருக்கேன். உலகத்துல எங்கே, எது நடந்தாலும், அது என் கவனத்துக்கு வந்துடும். எல் லாத்துக்கும் ஒரு நாள் வெச்சுக் கிறேன்!''

''அரசியல் இருக்கட்டும்... சினிமா என்னாச்சு?''

''சினிமாவுல கொஞ்சம் பெரிய 'கேப்' விழுந்துருச்சு இல்ல... ஆனா, இந்த 'கேப்'புல படு பிரமாண்டமா மூணு கதை எழுதியிருக்கேன். அப்புறம், சீக்கிரமே பெரிய டைரக்டர் ஒருத்தர்கிட்ட படம் பண்ணப்போறேன். அது சினிமாவுல என்னோட மிகப் பெரிய இரண்டாவது இன்னிங்ஸா இருக்கும். தமிழ் சினிமா இதுவரைக்கும் பார்க்காத ஒரு பெரிய படமா அது இருக்கும்!''

காமக் கிறுக்கன் கொடூரன்

இவன பாத்தா வெட்டிக் கொல்லுவீங்களா..?

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் செக்ஸ் சித்ரவதை மூலம் சிறுமியை கொலை செய்த வாலிபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூரை சேர்ந்த வேல்ராஜ்-பேச்சியம்மாள் தம்பதியினரின் மகள் சந்தனமாலதி (4). கடந்த 27ம் தேதி விளையாடச் சென்ற மாலதி வீடு திரும்பவில்லை.

அக்கம்பக்கத்தில் தேடியும் அவர் கிடைக்காததால் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் சிறுமி மாலதியை தேடிவந்த போது, அப்பகுதியில் உள்ள ஒரு குளத்தில் சிறுமியின் பிணம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

உடனே வாசுதேவநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை மீட்டு பார்த்தபோது, அது காணாமல் போன சந்தனமாலதி எனத் தெரியவந்தது.

பிரேத பரிசோதனையில் மாலதியின் கழுத்தில் காயங்களுடன் செக்ஸ் சித்ரவதை செய்யப்பட்டு கொலையாகி இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த தூத்துக்குடியை சேர்ந்த பாலமுருகன் என்பவர் தான் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து பாலமுருகனை போலீசார் தேடிவந்தனர்.

இந்நிலையில் பாலமுருகன் கிராம நிர்வாக அதிகாரி செல்லப்பாவிடம் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்து நடத்திய விசாரணையில்,

நான் எனது உறவினர் வீட்டுக்கு வந்திருந்தேன். சம்பவத்தன்று மாலதிக்கு மிட்டாய் வாங்கி கொடுத்து அங்குள்ள குளத்து பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தேன்.

பின்னர் கழுத்தை நெறித்தேன். இதில் அவள் இறந்துவிட்டாள். உடனே அவளை குளத்துக்குள் போட்டுவிட்டு வந்து விட்டேன் என்று வாக்குமூலம் அளித்துள்ளான்.

Sujatha... I Love You Sujatha ...

Get this widget | Track details | eSnips Social DNA


படம் : கோடிஸ்வரன் மகள்
பாடியவர் : எஸ்பிபாலசுப்ரமணியம்

எல்லாரும் சுஜாதா பதிவு போட்டு போட்டு, அப்பறம் சும்மா இருக்க முடியுமா ?
குஜராத் மோடியின் நரகல் கக்கும் வாய் நாளுக்கு நாள் தாழ்த்தப்பட்ட , மற்றும் சிறுபான்மை இனத்தை குஜராத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாய் அழித்தொழிக்காமல் விடாது போல் இருக்கிறது. கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்கு பிந்தய கலவரத்தை முன்னின்று நடத்தியதோடு மட்டும் இன்றி அதை ஒரு இனத்தை அழிப்பதற்கான வாய்ப்பாகவும் பயன் படுத்திக் கொண்ட ரத்த வெறி பிடித்த மோடியின் அடுத்த இலக்கு முஸ்லிம்கள் இல்லை.

மனிதக் கழிவுகளை மனிதனே சுமக்கக் கூடாது என உலகம் முழுக்க எதிர்ப்புகள் எழும்பியுள்ள நிலையில் மோடி எழுதியிருக்கும் ஒரு புத்தகம் "கர்மயோக்" (Karmayog) அதாவது துப்புறவாளர்களின் நிலையை நியாயப் படுத்தி இருக்கிறது அதுவும் மதம், கடவுளின் பெயரால்
குஜராத்தின் பெருமையாகவும் அதை சொல்கிறார். மேலும் இந்த தொழிலைச் செய்வதன் மூலம் ஹரிஜன்கள் சமூகக் கடைமையாற்றி சந்தோசம் அடைவதாகவும் கழிவைக் கக்கியிருக்கிறது அந்த மட மோடி.

இதே மோடியின் பார்வை "பார்ப்பனர்கள் டெல்லியில் கழிவரை சுத்தம் செய்பவர்களாய் இருப்பதற்கும் இதே பதிலைத்தான் சொல்லுமா எனத் தெரியவில்லை. "

ஒரு குலத்தை சேர்ந்தவன் அதே தொழிலை தொடர்ந்து செய்வதோடு மட்டும் இன்றி அதன் மூலம் குலத் தொழிலையும் தனது சமூக கடமையாக செய்ய வேண்Dஉம் என சொன்ன "ராஜகோபாலாச்சாரிக்கும் இந்த ரத்த வெரிபிடித்த ஓநாய்க்கும் அதிக வித்யாசம் இல்லை இந்த விசயத்தில்.

ஆன்மீகத் தொண்டாக அனுபவமாக கழிவுகளை சுத்தம் செய்வதைப் பார்க்கவேண்டும் எனச் சொல்லும் மோடி தானும் தன் கொலைக்கும்பல் கூட்டத்தை சேர்ந்த அத்துவானி, போன்றவர்களை ரதயாத்திரை மூலம் ஆன்மீகம் வளர்ப்பதை விடுத்து மலம் சுமந்து ஆன்மீகம் வளர்க்கலாம்.

ஏன் அந்த சமூகக் கடமையை செய்வதன் மூலம் சொர்கதுக்கு நேரடி டிக்கட் கிடைக்கும் என்றால் அந்த வேலையை தனது பாஜக தொண்டர்களை செய்யச் சொல்லலாம் , முதல் காரியமாக மோடியே அதை ஆரம்பித்து வைக்கலாம் . தலித்துக்களும் பிற தாழ்ந்த குலமும் கூடையில் சுமக்கும் மலத்தினை வேண்டுமானால் மோடியின் கும்பல் வாழை இலையில் சுமக்கட்டும் காஞ்சி சுப்புணியின் ஸ்டைலில்.



மேலும் விபரங்களுக்கு

இது தொடர்பான விரிவான பதிவை எவறேனும் இட்டால் நல்லது :(

தசாவதாரம் ட்ரெய்லர்


எங்கெல்லாம் தேடியும் கிடைக்காத இந்த ட்ரெய்லர் இணையத்தில் முதல் முறையாக தசாவதாரம் ட்ரெய்லர். வலையேற்ற முடியாத காரணத்தால் இதை கோப்புகள் பகிரும் தளத்தில் உள்ளிட்டுருக்கிறேன் . தரவிறக்கம் செய்து என்ஜாய் மக்களே என்ஜாய்!

இங்கே க்ளிக்கி டவுன்லோட் செய்யவும் பின்னர் MS Office ல் திறக்கவும்


உங்களைப் பாக்க எக்கச்சக்கமா மனுஷங்க வர்றாங்க.. நிச்சயமா மக்கள் மனம் கவர்ந்த தலைவராத்தான் இருக்கணும்...."

-தன் அருகிலுள்ள படுக்கையில் சிகிச்சை பெற்று வந்த பிரமுகரிடம் கரகரத்த குரலில் கேட்டார் அந்த நடிகர்.

தாம் ஒரு தொழிற்சங்கத் தலைவர் என்றும், தம்மைக் கொல்ல நடந்த தாக்குதலில் தப்பித்து கத்திக்குத்துக்காக சிகிச்சைக்கு வந்த விஷயத்தையும் தமது மாறாத புன்னகையுடன் பதிலாகக் கூறினார் பக்கத்துப் படுக்கையில் இருந்தவர்.

தன்னலமற்ற அவரின் சேவையைக் கேள்விப்பட்டிருந்த நடிகர்,
"நீங்க அப்படியே செத்துருக்கணும்.. அப்பந்தான் தமிழ் நாட்டில் நல்ல பெயர் எடுக்கமுடியும்.. தியாகத்துக்கு இங்க மதிப்பில்லே..."

-உரத்து கரகரத்த குரலில் உணர்ச்சிவசப்பட்டுக் கூறினார்.

சென்னை ஜி.எச். மருத்துவமனையில் எழுபதுகளின் தொடக்கத்தில் நடைபெற்ற சம்பவம் இது.

அந்த நடிகர் நடிகவேள் எம்.ஆர்.இராதா! பதிலளித்தது CITU தொழிற்சங்கத்தலைவர், மார்க்சிஸ்டு கட்சியின் முன்னணித் தலைவர் வி.பி. சிந்தன்!!

-இப்படி ஒளிவு மறைவின்றி சமூகவிமரிசனம் செய்ய நடிகவேளால்தான் முடியும்!

இராதாகிருஷ்ணனுடைய பெற்றோர்களின் பூர்வீகம் ஆந்திராவானாலும், சென்னை சிந்தாதிரிப்பேட்டையில்தான் பிறந்து வளர்ந்ததெல்லாம்.

தந்தையிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறித் தஞ்சமடைந்து ஜெகன்னாதையரின் நாடகக் கம்பெனியில்தான்.

சிறிய வயதிலேயே ‘பாயசம்' என்ற பாத்திரத்தில் பிரபலமாகி ராஜாஜியால் பாராட்டப்பட்டவர்.

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸின் ‘சந்தனத்தேவன்' படத்தில் கதாநாயகன் வேடம். அதன் அதிபரான டி.ஆர் சுந்தரத்திற்கு - மெட்ராஸ் ராஜகோபால ராதாகிருஷ்ணன் என்கிற நீளமான பெயர் பிடிக்கவில்லை. முன்னும் பின்னும் வெட்டி - எம்.ஆர்.
ராதாவாக்கினார். ராதா கதாநாயகனாக நடித்த முதல் படம். வெளிவந்தது 1939இல்.

திரைப்படத்தில் 1939-ல் நுழைந்தாலும் நாடகத்தை மறக்காது வளர்த்த கலைஞர் இராதா. "உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்" என்ற வாசகங்கள் அவரது நாடகக் கம்பெனியின் திரைச்சீலையில் இடம் பெற்றிருந்தது, அவரது தொடக்க காலத் தொடர்புகளால்தான். கம்யூனிஸ்டு தலைவர் ஜீவானந்தத்தின் நண்பர் எம்.ஆர்.இராதா.
தனது ஒரு பெண்ணுக்கு ரஷ்யா ராணி என்று பெயர் சூட்டியிருந்தார். எம்.ஜி.ஆர். மீது சுட்ட வழக்கில் அவருக்காக வாதாடியவர் கம்யூனிஸ்டு கட்சியின் என்.டி.

வானமாமலை! பெரியாரின் திராவிடர் கழகச் சித்தாந்தத்தில் பிடிப்பு ஏற்பட்டதை இறுதிவரை இராதா விடவில்லை. பெரியாருக்கு ஏற்பட்ட கண்டன விமரிசனங்கள் இராதாவுக்கும் தொடர்ந்தது. அதைப்பற்றிக் கவலைப்படாமல் நாடகங்களை அரங்கேற்றினார். பிரிட்டிஷ் ஆட்சியில் சுதந்திரப் போராட்டம் பற்றிச் சித்தரிக்கத் தணிக்கை முறை இருந்தது. காங்கிரஸ் ஆட்சியில் நாத்திகக் கருத்துக்களைச் சொல்லத் தடை இருந்தது. இராதா நாடகத்தின் பெயரை மாற்றித் திரையிட்டுக் கைதாவார். காங்கிரஸ் ஆட்சியில் 59 முறை கைதானாவர் இராதா!.

கட்டணம் செலுத்தாமல் தனது நாடகங்களைப் பார்க்க வரும் உள்ளூர் பிரமுகர்களுக்கு "ஓசியில் பார்ப்போர்களுக்காக" என்று போர்டு மாட்டி ‘ஒதுக்கிய' பெருமை இராதாவையே சாரும்.

வில்லன்-தந்தை-சமூக விமரிசகர்- நகைச்சுவைப் பாத்திரம் என எல்லாவற்றையும் அவர் ஒருவரே ஏற்று நடித்தது தனிச்சிறப்பு. அவரது ஏற்ற இறக்கமுள்ள, கரகரத்து கீச்சுக்குரலாக மாறும் உச்சரிப்பு அவரது சமூக எள்ளலுக்கு பலம் சேர்த்தது. விளம்பரமின்றி உதவி செய்யும் சுபாவம் அவருக்கு உண்டு. அவர் இப்போது இருந்திருந்தால் ‘ராமர் சேது' விவகாரத்தில் ஊர் ஊராகப் போய் அவரது பாணியில் நாடகம் போட்டிருப்பார்!

லேட்டான தீபாவளி ஷ்பெஷல் !!

தீபாவளி என்கின்ற வார்த்தைக்கு விளக்கு வரிசை அதாவது விளக்குகளை வரிசையாக வைத்தல் என்பது பொருள். இது கார்த்திகை தீபம் என்னும் பெயரில் பண்டிகை நாட்களில் செய்யப்பட்டு வருகிறது. வடநாட்டில் விளக்கு வரிசை வைத்துத்தான் தீபாவளி கொண்டாடப்படுகிறது. தீபாவளிப் பண்டிகை தினத்தை, நரக சதுர்த்தசி என்றும் சொல்வதுண்டு. இதற்குக் காரணம், நரகாசுரன் என்பவன் விஷ்ணுவால் கொலை செய்யப்பட்டநாள் என்பதாலும். இந்தக் கதை விளக்கம் என்னவென்றால், அது மிகவும் ஆபாசமானது என்றாலும் ஆரியர்களின் இழிநிலைக்கும், தமிழர்களின் முட்டாள்தனத்துக்கும் ஆதாரத்துக்காக அதைவும் ஆரியப் புராணப்படியே சற்றுச் சுருக்கமாக விளக்குவோம்.

இரண்யாட்சன் என்ற இராட்சதன் ஒருவன் பூமியைப் பாயாகச் சுருட்டிக்கொண்டு சமுத்ச்திரத்தினடியில் போய் ஒளிந்து கொண்டானாம். மகாவிஷ்ணு என்னும் கடவுள் அவனைச் சமுத்திரத்திலிருந்து வெளியாக்கி, பூமியைப் பிடுங்குவதற்காகப் பன்றி உருவமெடுத்துப் போய் இராட்சதனைப் பிடித்துப் பூமியைப் பிடுங்கி விரித்து விட்டுவிட்டாராம். அந்தச் சமயத்தில் அந்தப் பன்றியைப் பூமாதேவி கலவி செய்ய விரும்பிக் கலந்தாளாம்.

அக்கலவியில் ஒரு குழந்தை பிறந்ததாம். அக்குழந்தைக்குத்தான் நரகாசுரன் என்று பெயராம். இவன் கசேரு என்பவளை யானை உருவத்துடன் சென்று பலவந்தமாய்ப் பிடித்து வந்து மணம் செய்து கொண்டானாம். மற்றும் அவன் தேவர்களுக்கு இடையூறு செய்து வந்தானாம். தேவர்கள் விஷ்ணு இடத்தில் முறையிட்டார்களாம்.

விஷ்ணு கிருஷ்ணாவதாரத்தில் அவனைக் கொன்றாராம். நரகாசுரன், தனது சாவு நாளை உலகம் கொண்டாட வேண்டும் என்று விஷ்ணுவைக் கேட்டுக் கொண்டானாம். அதற்காக விஷ்ணு அந்த நாளை உலகம் கொண்டாடும் படி செய்தாராம். இது தான் தீபாவளியாம்!

தோழர்களே, ஆரியரின் கதை சோடிக்கும் சின்னப் புத்தியைப் பாருங்கள். அதை நம்பி விழாக் கொண்டாடும் உங்கள் மடப் புத்தியை எண்ணி வெட்கப்படுங்கள். ஏனெனில் பூமியை இராட்சதன் பாயாகச் சுருட்டினான் என்றால் அப்போது எங்கிருந்து கொண்டு சுருட்டி இருப்பான். சமுத்திரத்திற்குள் போய் ஒளிந்துகொண்டான் என்றால் அப்போது சமுத்திரம் எதன் மேல் இருந்திருக்கும். கடவுளுக்குச் சக்தி இருந்தால் பூமியையும், நரகாசுரனையும் வா என்று அழைத்தவுடன் வந்திருக்காதா? அப்படித்தான் வரவில்லையானாலும் நல்ல ஆகாரம் சாப்பிடும் ஜீவஉரு எடுக்காமல், மலம் சாப்பிடும் ஜீவஉரு எடுப்பானேன்?

அந்த அழகைப் பார்த்துப் பூமிதேவி அவனைக் கலவி செய்ய ஆசைப்பட்டாள் என்றால் பூமிதேவியாகிய பாரதத் தாயின் யோக்கியதை எவ்வளவு இழிவானது? நம் பாரதத் தாயின் கற்புக்கும் காமத்திற்கும் எதை உதாரணமாகச் சொல்லுவது. அவளுடைய புத்திரர்கள் பரிசுத்த ஆவியினுடைய புத்திரர்களைக் காட்டிலும் எவ்வளவு மோசமானவர்களாக இருந்திருக்க வேண்டும். பூமிதேவியும், சமுத்திரமும் என்றால் இந்தியாவில் உள்ள இந்துக்களின் பாரததேவியும், அரபிக்கடலும், வங்காளக்குடாக் கடலுந்தானா இதை அந்நியர்கள் கேட்டால் என்ன சொல்லுவார்கள்? நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்? இவற்றையெல்லாந் தமிழர்கள் பண்டிதர்கள் முதல் பாமரர்கள் வரை உணர்ந்திருந்தும் தீபாவளிப் பண்டிகை கொண்டாடினால் ஆரியர்கள், தமிழர்களைத் தாசிமக்கள், மடையர்கள், கண்டதைப் புசிப்பவர்கள், புறமுதுகிட்டு ஓடியவர்கள், அடிமைகள் என்றெல்லாம் இன்னும் என்னென்னவோ சொல்வதில் உண்மை இருக்கிறது என்று தானே அர்த்தமாகும்? அப்படித்தானே அன்னிய மக்கள் நினைப்பார்கள்?

ஆகவே, பாமர மக்களுக்குப் புத்தி இல்லாவிட்டாலும், மற்ற தமிழ்ப் பண்டிதர்களும், தங்களை உண்மைத் தமிழ் மக்கள் என்று கருதிக் கொண்டிருப்பவர்களுமாவது இவற்றை நன்றாய்க் கவனித்துப் பார்த்து, பண்டிகை கொண்டாடாமல் இருந்து, மற்ற பாமர மக்களுக்கு வழிகாட்ட வேண்டாமா?

இந்தி ஆரிய மொழி என்றும், ஆரியப் புராணங்களைத் தமிழர்களுக்குப் படிப்பித்து ஆரியக் கதைகளைப் புகுத்தி ஆரிய ஆதிகத்தை நிலைநாட்டவே இந்தியை ஆரியர்கள் கட்டாயமாய்ப் புகுத்துகிறார்கள் என்றும் சொல்லிக் கொள்வது உண்மையானால் அதற்காகத் தமிழ்மக்கள் அதிருப்தியும் மனவேதனையும் படுவது உண்மையானால் தமிழ்மக்கள் பிரதிநிதி என்று சொல்லிக்கொள்ளும் பண்டிதர்கள் தீபாவளி கொண்டாடலாமா?

-(குடிஅரசு கட்டுரை: 31.10.1937)


தீபாவளிப் பண்டிகை என்று கஷ்டமும், நஷ்டமும் கொடுக்கத்தக்க பண்டிகையொன்று வந்துபோகின்றது. அதிலும் ஏதாவது அறிவுடைமை உண்டா என்று கேட்கிறேன். தீபாவளிப் பண்டிகையின் கதையும் மிக்க ஆபாசமானதும், இழிவானதும், காட்டுமிராண்டித் தனமானதுமாகும். அதாவது விஷ்ணு என்னும் கடவுள் பன்றி உருக்கொண்டு பூமியைப் புணர்ந்ததன் மூலம் பெறப்பட்டவனான நரகாசுரன் என்பவன், வருணனுடைய குடையைப் பிடுங்கிக்கொண்டதால் விஷ்ணு கடவுள் நரகாசுரனைக் கொன்றராம். இதைக் கொண்டாடுவதற்காகத் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறதாம்.

சகோதரர்களே! இதில் ஏதாவது புத்தியுள்ள தன்மையோ அறிவோ இருக்கிறதா என்பதைப் பாருங்கள். விஷ்ணுக் கடவுள் பூமியைப் புணரமுடியுமா என்றாவது, பூமியைப் புணர்வதால் பிள்ளை பிறக்குமா என்றாவது யோசித்துப் பாருங்கள். இப்படிப் பொய்யான பண்டிகையினால் எவ்வளவு நஷ்டம், எவ்வளவு கடன், எவ்வளவு அறியாத்தனம், எவ்வளவு பிரயாசை என்பவைகளை நம் மக்கள் நினைப்பதேயில்லை. அப்பண்டிகையைக் கொண்டாட ஒவ்வொருவனும் தேவைக்குமேல் செலவுசெய்து துன்பப்படுகிறான். தன்னிடம் இல்லாவிட்டாலும், கடன் வாங்கியாவது. கடன் என்றால் ஒன்றுக்கு ஒன்றரைப் பங்கு வட்டி ஏற்பட்டுவிடுகின்றது.

பட்டாசு கொளுத்துவது எவ்வளவு துன்பம் என்றும், இதனால் பலவித அபாயங்கள் தோன்றி உபாதைகள் ஏற்பட்டு விடுவதும், துணியில் நெருப்புப் பிடித்து உயிர்போவதாலும், பட்டாசு சுடும்போது திடீரென்று வெடிப்பதால் உடல் கருகி, கண், மூக்கு, கை, கால் ஊனம் வருவதும் அல்லாமல், இந்தப்பண்டிகை கொண்டாடுவதற்கு அறிகுறியாக எவ்வளவு பேர்கள் சாராயம் குடித்து மயங்கித் தெருவில் விழுந்து புரண்டு மானம் கெடுவதும், மேலும் இதற்காக இனாம் என்று எத்தனை பாமரர் பிச்சை எடுப்பது அல்லது தொந்தரவு கொடுத்துப் பணம் வசூல் செய்வது ஆகிய இந்தக் காரியங்களினால் எவ்வளவு பணம், எவ்வளவு நேரம், எவ்வளவு ஊக்கம், எவ்வளவு அறிவு செலவாகின்றது என்றும் எண்ணிப் பாருங்கள். இவைகளை எந்த இந்தியப் பொருளாதார தேசிய நிபுணர்களாவது கவனித்தார்களா என்று கேட்கிறேன்.

-(ஈரோடு உண்மை நாடுவோர் சங்கத்தில் சொற்பொழிவு 'குடிஅரசு' 20.10.1929)

நரகமாகும் நந்திகிராம்

‘‘இந்த விழாவுக்கு யாரெல்லாம் வரவில்லை என்று எனக்குத் தெரியாது. வராதவர்கள் பட்டியலை நீங்கள் எடுத்து உங்கள் அறையின் சுவரில் தொங்க விட்டுக் கொள்ளுங்கள்!’’ &மேற்கு வங்க முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா, செய்தியாளர் களிடம் அளித்த பதில் இது. மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள நந்திகிராமில் நடைபெற்ற வன்செயல்களுக்குக் கண்டனம் தெரிவித்துப் பல திரைக் கலைஞர்கள் கொல்கத்தாவில் நடைபெற்ற திரைப்பட விழாவைப் புறக்கணித்தார்கள். இந்த விழா முதலமைச்சரின் தலைமையில் நடந்தது. இந்த விழாவில் பல கலைஞர்கள் பங்கேற்காதது குறித்து முதல்வரிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டார்கள். அப்போது அவர் இவ்வாறு பதில் சொல்லி யிருக்கிறார்.

இந்தப் பதில் எந்தவிதமான உணர்வை வெளிப்படுத்துகிறது? நந்திகிராம் தொடர்பான சிக்கலில் மாநிலத்தில் நடைபெறும் ஆட்சிக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிப்பதை முதல்வர் விரும்பவில்லை. அதிலும் இந்தப் பிரச்னையை முன்னிட்டு எழுத் தாளர்கள், நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் அறிஞர்கள் ஒரு விழாவைப் புறக்கணிப்பதை முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சகிப்புத்தன்மை இல்லாத இந்தப் பதிலின் விளைவாக என்ன நடந்தது தெரியுமா? அடுத்த நாள் திரைப்பட விழா நடந்த அரங்கத்துக்கு அருகில் உள்ள இன்னொரு இடத்தில் அமைதியாக ஆர்ப்பாட்டம் நடத்திய கலைஞர்கள் மற்றும் அறிஞர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியது.

ஒருபுறம் இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவித்த கலைஞர்கள், காவல்துறையால் தாக் கப்பட்டிருக்கிறார்கள். இன்னொரு புறம் அதே காவல்துறை நந்திகிராமில் ஆயுதம் தாங்கிய ஆளும் கட்சியினர் தங்கள் விருப்பப்படி செயல் படும்போது கைகட்டி வேடிக்கை


பார்த்திருக்கிறது. அல்லது அந்த இடத்தை விட்டு அகன்றிருக்கிறது. அதாவது, ஆளும் கட்சியினர் கைகளில் ஆயுதங்களுடன் வன்செயல்களில் ஈடுபடும்போது காவல்துறை அனுமதிக்கிறது. மற்றவர்கள் சட்டத்துக்கு உட்பட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினால்கூட சட்டம்-&ஒழுங்குக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தடுக்கிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால், அனுமதிக்க வேண்டிய ஜனநாயகரீதியான எதிர்ப்பை காவல்துறை அனுமதிக்க மறுத்திருக்கிறது. ஆனால், ஈவு இரக்கமின்றி ஒடுக்கப்பட வேண்டிய வன்செயல்களை அது அனுமதித்திருக்கிறது.

கடந்த ஜனவரியில் இருந்து பத்து மாதங்களுக்கு மேலாக நந்திகிராம் பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியினரும் அதன் ஆதரவாளர்களும் பலவிதமான துன்பங்களுக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.

‘‘இதுவரை மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 27 பேர் ‘நிலப்பாதுகாப்புக் குழு’வினரால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 1500 பேருக்கும் அதிகமானோர் பத்து மாதங்களாக நிவாரண முகாம்களில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களால் தங்களுடைய வீடுகளுக்குத் திரும்ப முடியவில்லை. அந்தப் பகுதியில் காவல்துறையோ மற்ற நிர்வாகமோ செயல்பட முடியவில்லை. இப்படி ஒரு பகுதி மட்டும் ‘விடுவிக்கப்பட்ட’ பகுதியாக இருக்கும் நிலையை எந்த ஒரு மாநில அரசாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. மீண்டும் அங்கு சட்டத்தின் ஆட்சியை ஏற்படுத்துவதற்குத் தேவை யான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தப் பகுதியை விட்டு வெளியேற்றப்பட்டவர்கள் வீடு திரும்பினார்கள்.’’ &இதுவே நந்திகிராம் குறித்து மார்க்சிஸ்ட் கட்சி தரும் விளக்கம்.

நந்திகிராம் பகுதியில் சிறப்புப் பொருளாதார மண்டலம் உருவாக்கி அதை ஒரு விடுவிக்கப்பட்ட பகுதியாக வைத்திருக்கவே முதலில் புத்ததேவ் விரும்பினார். மாநிலத்தின் பிற பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்படும் சில சட்டங்களில் இருந்து அந்தப் பகுதி விலக்களிக்கப்படும் என்ற நிலையே தொடக்கத்தில் இருந்தது. மக்களிடம் இருந்து வந்த எதிர்ப்பு காரணமாக அந்த முயற்சியை அவர் கைவிட்டார். ஆனால், அந்த எதிர்ப்பே வேறொரு வகையில் அந்தப் பகுதியை விடுவிக்கப்பட்ட பகுதியாக மாற்றிவிட்டது. நந்திகிராம் மக்களுக்கு இப்படி ஒரு வீரம் செறிந்த போராட்டத்தை நடத்துவதற்கான சக்தியை யார் கொடுத்திருப்பார்கள்? ‘பெருமுதலாளிகளுக்கும் நிலப்பிரபுக்களுக்கும் சேவை செய்யும் ஓர் அரசு, மக்களுடைய போராட்டத்தை எப்படி ஒடுக்க முயலும்’ என்ற பாடத்தை அவர்களுக்கு யார் கற்றுக் கொடுத்திருக்க முடியும்? அப்படிப்பட்ட ஒடுக்குமுறையை எப்படி எதிர்கொள்வது என்று யார் அரசியல் வகுப்புகளில் சொல்லிக் கொடுத்திருப்பார்கள்? தெலுங்கானா, ஸ்ரீகாகுளம், புன்னப்புரா, வயலார் விவசாயிகளின் போராட்ட வரலாறு குறித்துப் பேசி மக்களை யார் அரசியல்படுத்தி இருக்க முடியும்? அன்று மக்களுக்குப் போர்க்குணத்தை ஊட்டியவர்களே இன்று அவர்களுக்கு எதிராக ஆயுதங்களைத் தூக்கி இருக்கிறார்கள்!

மாநிலத்தில் ஆட்சியில் இருப்பதால் இப்போது அந்தப் போராட்டத்தை ஒடுக்கும் பொறுப்பு மார்க்சிஸ்ட் கட்சிக்கு வந்துவிட்டது. விடுவிக்கப்பட்ட பகுதியை மீட்கும் பணியில் நிர்வாகத்துக்குப் பதிலாக கட்சியே இறங்கிவிட்டது. காவல்துறையும் மத்திய ரிசர்வ் காவல் படையும் செய்ய வேண்டிய வேலையை ஆயுதம் தாங்கிய மார்க்சிஸ்ட் கட்சியினர் செய்து முடித்து விட்டார்கள். ‘நிலப் பாதுகாப்புக் குழு’வின் ஆதரவாளர்களைக் கேடயங்களாகப் பயன்படுத்தி, அவர்களுக்குப் பின்னால் இருந்து துப்பாக்கிகளால் சுட்டுக்கொண்டே மீண்டும் நந்திகிராம் பகுதிகளில் மார்க்சிஸ்ட்கள் நுழைந்தனர். நிலப் பாதுகாப்புக் குழு தன்னுடைய எதிர்ப்பைக் கைவிட்டுப் பின்வாங்கியது. அதன்பிறகு முழுப்பகுதியிலும் கட்சிக் கொடியைப் பறக்க விட்டிருக்கிறார்கள். மோட்டார் சைக்கிளில் செங்கொடியுடன் முகத்தை மூடிக்கொண்டு நகர்வலம் வந்து தங்கள் வெற்றியை உறுதிசெய்து இருக்கிறார்கள். அதுவரை மத்திய ரிசர்வ் காவல் படையை தேசிய நெடுஞ்சாலை 41&ல் நிறுத்தி வைத்திருக்கிறார்கள். அதாவது மார்க்சிஸ்ட்களின் செயல்திட்டம் நிறைவேறிய பிறகே மத்திய ரிசர்வ் படை நந்திகிராம் பகுதிக்குள் நுழைய முடிந்திருக்கிறது.

தொலைக்காட்சி, பத்திரிகைகள் ஆகியவற்றில் வந்திருக்கும் பல செய்திகளில் இருந்து இதுவே அங்கு நடந்திருப்பதாக அறிய முடிகிறது. இந்த விடுவிக்கப்பட்ட பகுதியை மீட்பதற்கு கட்சியினர் செய்த செயலை புத்ததேவ் எப்படிப் பார்க்கிறார்?

‘‘எதிர்க்கட்சிகளுக்கும் நிலப் பாதுகாப்பு குழுவினருக்கும் அவர்களுடைய பாணியிலேயே தகுந்த பாடம் புகட்டப் பட்டுள்ளது’’ என்கிறார். ‘‘இப்போது நந்திகிராமில் நிலவுவது மயான அமைதி என்கிறீர்கள். அப்படியென்றால் இந்த 11 மாதங்களும் அங்கு சொர்க்கத்தின் அமைதி நிலவியதா?’’ என்றும் அவர் கேட்டிருக்கிறார்.

அரசமைப்புச் சட்டரீதியாக ஓர் ஆட்சி செய்ய வேண்டிய ஒரு வேலையை சட்டவிரோதமாக தன்னுடைய கட்சியினர் செய்து விட்டார்களே என்று அவர் கவலைப் படவில்லை. நிர்வாகம் சீர்குலைந்து விட்டதே என்று அவர் வருந்தவில்லை. ஒரு நிலப்பரப்பில் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கு ஆளும் கட்சியினர் ஆயுதங்களுடன் களத்தில் இறங்கலாம் என்ற ‘முன்மாதிரி நீதி’யை உருவாக்கி விட்டோமே என்ற வேதனை அவருக்கு இல்லை. மாறாக எதிர்த்தரப்புக்கு உரிய பாடம் புகட்டப்பட்டது என்று பெருமிதம் கொள்கிறார். மக்களாட்சி தத்துவத்தின் மீது நம்பிக்கை கொண்டிருப்போர்க்கு அவருடைய இந்த அணுகுமுறை ஏமாற்றம் அளிக்கிறது.

தேசிய அரசியலிலும் மாநில அரசியலிலும் ஆட்சியில் இருப்பவர்களின் தவறுகளை மற்ற கட்சியினரைவிட துணிச்சலுடன் சுட்டிக் காட்டுபவர்கள் மார்க்சிஸ்ட்கள் என்ற நம்பிக்கை பரவலாக மக்களிடம் இருக்கிறது. அந்த நம்பிக்கையே மார்க்சிஸ்ட் கட்சியினருக்குத் தொடர்ந்து போராடும் ஆற்றலை அளித்து இருக்கும். ஆனால், மேற்குவங்கத்தில் நடைபெற்றிருக்கக் கூடிய நந்திகிராம் நிகழ்வுகள், அந்தக் கட்சியினரின் தார்மீக வலிமையைக் குறைக்கும் வல்லமை பெற்றவை.

கடந்த வாரத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன், ‘‘சர்வாதிகாரப் போக்கை தி.மு.க. அரசு மேற்கொண்டால் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்’’ என்று மதுரையில் பேசியதாக செய்திகள் வந்தன. மேற்கு வங்க முதல்வராக புத்ததேவ் பட்டாச்சார்யா நீடிக்கும்வரை எந்த மாநிலத்தின் முதல்வரையும் எதிர்க்கும் அற வலிமையை முழுமையான அளவில் மார்க்சிஸ்ட்களிடம் காண முடியாது!

-ஜென்ராம்,ஜூனியர் விகடன்.

Dont do's and donts "are You Fetish"?


Most of the sexual orientations popularly called fetishism are regarded as normal variations of human sexuality by psychologists and medical doctors. Even those orientations that are potential forms of fetishism are usually considered unobjectionable as long as all involved persons feel comfortable. Only if the diagnostic criteria presented in detail below are met, the medical diagnosis of fetishism is justified. The leading thought is that a fetishist is not ill because of his or her addiction but because he or she suffers from it.


The affected person, her object or another person experience impairment or distress in multiple functional areas. Functional area refers to different aspects of life such as private social contacts, job, etc. It is sufficient for the diagnosis if one of the participants is being hurt or mistreated in any other way.


For More info Click here :)


கனிமொழியைக் கவிஞராகவே ஏற்றுக்கொண்டுவிட்டீர்கள், மந்திரியாக ஏற்றுக்கொள்ள முடியாதா?’ என்று சோ உங்களைக் கிண்டலடித்திருக்கிறாரே?

‘‘சாகித்ய அகாடமியின் தலைவராக இருந்த கேரளக் கவிஞர் சச்சிதானந்தன் என்னைக் கவிஞர் என்று ஏற்றுக்கொள்கிறார். ஜெயகாந்தன் ஏற்றுக்கொள்கிறார். எத்தனையோ வளரும் கவிஞர்களுக்கெல்லாம் தராசாக இருக்கும் சுஜாதா ஏற்றுக்கொண்டிருக்கிறார். இவருக்குத் தெரிந்த கவிஞர்களான வாலி, வைரமுத்துவும்கூட என்னைக் கவிஞராக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எல்லாரையும்விட ‘சோ’வுக்கு கவிதை அதிகம் தெரியும் என்று நினைத்துக்கொண்டிருந்தால், அந்த அறியாமைக்காக நான் வருத்தப்படுகிறேன். அர்த்தமற்ற காழ்ப்புணர்ச்சிகளுக்குப் பதில் சொல்வதில் அர்த்தமில்லை.’’
-குமுதம் ரிப்போர்ட்டர்

தத்துவப் புதர் பாரதி

“சேது சமுத்திரத் திட்டத்துக்காகக் கடலடி மணல் திட்டுக்களை உடைக்கும் சர்ச்சையை, போலிபக்திக்கும் போலி பகுத்தறிவுக்கும் இடையில் நடக்கும் போராட்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஏனென்றால், அத்வானி போன்றோர் சுற்றுச் சூழலுக்கு ஆபத்து என்பதால் எதிர்க்கவில்லை. அதுராமர் பாலம் என்கிற, பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட பக்தி அடிப்படையில் சொல்கிறார்கள்.

ராமர் பாலத்தை உடைத்தே தீருவோம் என்று முழக்கமிடும் கருணாநிதி போன்றோரும், பகுத்தறிவு அடிப்படையில் திட்டத்தை அலசத் தயாராக இல்லை. இது தமிழனின் பல நூற்றாண்டு காலக்கனவு என்று இன் னொரு வகையான மூட பக்தி’யை இதில் காட்டுகிறார்கள்.

அசல் பக்திக்கும் அத்வானிக்கும் தொடர்பு இல்லை. அசல் பகுத்தறிவுக்கும் கருணாநிதிக்கும் சம்பந்தம் இல்லை.

-இப்படிச் சொல்கிறார் சங்கரன் ஞாநியார். போலி பக்தியையும் போலி பகுத்தறிவையும் சாடித் தகர்க்கும் இவர் ‘அசல் பக்திக்கும்’ ‘அப்பட்டமான பகுத்தறிவுக்கும் இடையே பாலம் கட்டுவதில் தீவிரம் காட்டும் ஓர் அனுமார் பக்தரேதான்.

அத்வானி ஒரு போலி பக்தர். பகுத்தறிவில்லாதவர் என்று சங்கரன் எழுதுவ தால் அக்கிரகாரமோ, சங்கப் பரிவாரமோ, சாமியார் கூட் டமோ ஞானியின் தலையை வெட்டு, நாக்கை அறு என்று ஆர்ப்பாட்டம் செய்யப் போவதில்லை. அவர்களுக்குத் தெரியும், ‘இவன் நம்ப பிள்ளை’ என்று. என்ன சாதுரியமாய் சூத்திரவாள் மீது தாக்குதல் நடத்துகிறான் என்று ‘அவாள்’ கூட்டம் மெச்சிக்கொள்ளவே செய்யும்.

அத்வானி பற்றிய ஞாநியின் மதிப்பீடு உண்மையாகக் கூட இருக்கலாம். ஆனால் கலைஞரின் பகுத்தறிவு போலித்தனமானது என்று அவரை அறிந்த எவரும் சொல்லத் துணியார்.

ஓட்டு அரசியலில் நம்பிக்கையுள்ள எந்த அரசியல் தலைவரும் ஏட்டில், எழுத்தில், அரசியல் மேடையில், திருமண விழாக்களில் பகுத்தறிவைப் பிரச்சாரம் செய்து கொண்டிருக்க மாட்டார். ஆனால் தனது பிள்ளைப் பருவம் முதல் இன்றுவரை எங்கும் எப்போதும் அறிவை முன்னிறுத்துகிறவர் கலைஞர். “கருணாநிதியைத் திருத்தவே முடியாது’’ என்று இராம கோபாலன் பலமுறை சாபம் இட்டது ஏன்? இராம கோபாலன் போன்றோரின் வகையும் வயிற்றெரிச்சலும் கலைஞரின் பகுத்தறிவுப் பற்றுக்குச் சூட்டப்படும் புகழாரங்கள் அல்லவா!

ஞாநி போன்றோரின் வாதங்கள் பல நேரங்களில், பலரது மனங்களில் இது வன்றோ நடுநிலை வாதம்’ என்கிற எண்ணத்தை ஏற்படுத்தக் கூடும். ஆனால் சிந்திக்கத் தெரிந்த யாருக்கும் இம்மாதிரியான `பெருந்தன்மையான’ பேச்சுக்கள் ஒரு கபடதாரியின் நேர்மையற்ற உளறல் என்பது புரிந்து விடும்.

கருத்துக்கள் மோதுவதும், வர்க்கங்கள் பகைமை கொள்வதும், இனங்கள் எதிரெதிராய் நிற்பதும் அறியாமையாலோ, போலித்தனத்தாலோ அல்ல. அது போலவே கருத்து மோதல்களில், களத்துப் போர்களில் நடுநிலை என்பதும் சமரசம் என்பதும் புனிதமானதோ போற்றுதற்குரியதோ அல்ல.

தாய்வழிச் சமூகத்திலிருந்து, தந்தைவழிச் சமூக உறவுக்கு மாறும்போது, பொது உரிமைக் கருத்திலிருந்து தனிச்சொத்துரிமைக்கு மாறும்போது நேரும் போர்க்களக் காட்சி தான் குருச் சேத்திரம்!

உறவினர்களுக்குள் நேர்ந்த சண்டையில் கூட சமரசமற்ற, கண்டிப்பு மிகுந்த பேராசிரியராகவே காட்சி தருகிறான் கண்ணன். “இந்தப் போரிலே வென்றால் சொத்து கிடைக்கும்; இறந்தால் சொர்க்கம் கிடைக்கும். தயங்காதே துணிந்து போரிடு’’ என்பது தான் கீதோபதேசம்.

எல்லா உயிர்களையும் நேசிப்பதாகச் சித்திரிக்கப்படும் பரமாத்மா, கொலையை ஆதரிப்பது ஏன்? ஒருபக்கம் சார்ந்து நிற்பது ஏன்? போர்க் களத்திலே நடுநிலை சாத்தியமில்லை சங்கரா!

இரண்டாயிரம் ஆண்டு களுக்கும் மேலாக இங்கேயும் ஒரு யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது திராவிட - ஆரியப் போர். இதிலே ஆதிசங்கரனிலிருந்து ஞாநி சங்கரன் வரை ஓர் அணியில் நிற்கிறார்கள். புத்தனிலிருந்து குப்பன்வரை எதிரணியில் நிற்கிறார்கள். ஆரியப் பிரதிநிதியாக அத்வானியும் திராவிடப் பிரதிநிதியாகக் கலைஞரும் களத்தில் நிற்கிறார்கள் என்பதுதான் உண்மை. இங்கே அத்வானியின் பக்தி மெய்யானதா, போலியானதா? கலைஞரின் பகுத்தறிவு மெய்யானதா போலியானதா என்பதல்ல பிரச்னை. மனுதர்மத்துக்கும் சமதர்மத்துக்குமான போராட்டத்தில் யார் எந்தப் பக்கத்தில் என்பதுதான் பிரச்னை.

ஞாநி போன்றவர்கள் அத்வானிகளை - அதாவது ‘போலி பக்தர்களை’ - எதிர்ப்பதுபோல் காட்டிக் கொள்வது கலைஞரையும் அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒடுக்கப்பட்ட மக்களையும் எதிர்ப்பதற்காக நடத்தப்படும் போலித்தனமான காரியங்களே!

இம்மாதிரியான போலி மனிதர்கள் பதுங்கிக் கொள்வதற்குக் கிடைத்த ‘தத்துவப் புதர்’ தான் பாரதி, இவர்களுக்கு, உலகில் இதற்கு முன் இருந்த, இப்போது இருக்கிற, இனிமேல் வரப்போகிற எல்லாப் பிரச்னைகளுக்கும் பாரதிதான் தீர்வு!

சேது சமுத்திரத் திட்டம் குறித்து, பாரதி என்ன சொல்கிறான்?

“சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்; சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்’’ என்கிறான் பாரதி.

பாரதி சொல்வதுபோல் ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்குப் பாலம் அமைக்கலாம்? அப்படி ஒரு திட்டம் கொண்டு வந்தால் ஞாநியார் கூட்டம் அதையும் எதிர்க்கும். விடுதலைப் புலிகள் எளிதாகத் தமிழ் நாட்டுக்குள் வந்து போவார்கள். தமிழகம் தீவிரவாதிகளின் புகலிடமாக மாறிவிடும் என்றுதான் அப்போது கூச்சலிடுவார்கள்.

தமிழகத்துக்கும் இலங்கைக்கும் இடையே கடல் வழிப்பாதை ஏற்படுத்துவதால் வருவாய் அதிகரிக்கிறதா? போக்குவரத்து எளிதாகிறதா? வேலைவாய்ப்பு பெருகிறதா? தொன்மையான ‘வரலாற்றுச் சின்னம்’ அழிகிறதா? இந்துக்களின் மனம் புண்படுகிறதா? என்கிற அறிவு பூர்வமான, அல்லது குருட்டுத்தனமான, மெய்யான, அல்லது போலியான வாதப் பிரதிவாதங்களுக்கு அப்பால், இந்தப் புதிய கடல்வழிப்பாதையை ஆதரிப்போர் யார்? எதிர்ப் போர் யார்? என்று கூர்ந்து கவனித்தால் இது திராவிட - ஆரியப் போராட்டத்தின் தொடர்ச்சி என்பது தெளிவாகப் புரியும். மேம்போக்கான பார்வையில் இது ‘வழக்கொழிந்த’ வர்ண இனப் போராட்டம் என்பது போல் தோன்றினாலும் இதன் சாரப்பொருள் வரலாற்றை இயக்குவது கடவுள் நம்பிக்கையா, மனித முயற்சியா? என்பதுதான்!

கடவுள் நம்பிக்கை எப்போதும் ஆதிக்க சக்திகளுக்கு ஆதரவானதே! மனித முயற்சி எப்போதும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உறுதுணையானதே!

“மெய்யான பக்தர்களும் மெய்யான பகுத்தறிவாளர்களும் கருத்து வேறுபடுவார்கள். ஆனால் ஒருபோதும் மூர்க்கத்தனமான சண்டைகளில் ஈடுபடமாட்டார்கள். காரணம் அசல் ஆன்மீகமும் அசல் பகுத்தறிவும் சந்திக்கும் புள்ளி என்பதே மனிதர்கள் மீதான அன்பு என்பதாகும். போலி பக்தர்களும் போலி பகுத்தறிவாளர்களும் மனிதர்களை நேசிப்ப தில்லை. வெறுமே பயன்படுத்திக் கொள்பவர்கள். அதைத்தான் இப்போது அத்வானியும் கருணாநிதியும் செய்து கொண்டு இருக்கிறார்கள் - என்று ஒரு நடு நிலையாளனின் பாத்திரத்தில் திறம்படவே நடிக்க முயற்சிக்கிறார் சங்கரன்.

மதம், கடவுள் பக்தி, இறை நம்பிக்கை என்கிற இந்த சமாச்சாரங்கள் உண்மையில் இயற்கையைக் கண்டு அஞ்சிய மனிதனின் பய உணர்ச்சியின் அடையாளமே அன்றி, அது மனித நேயத்தின் அடையாளமாக வரலாற்றின் எந்தக் காலத்திலும் இருந்ததில்லை.

ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வுகளுக்கு வடிகாலாக மதம் அல்லது கடவுள் நம்பிக்கை இப்போதும் இருக்கிறது என்றால் அது தன்மீதும் தான் சார்ந்திருக்கிற சமூகத்தின் மீதும் மனிதன் நம்பிக்கை இழந்து விட்ட நிலையில் தோன்றும் சுய ஆறுதலே தவிர மனித நேயத்தில் பிறந்த மறு மலர்ச்சித் தீர்வல்ல. சிலுவைப் போர்களும், ரத யாத்திரைகளும், இஸ்லாமியத் தீவிரவாதங்களும் ஆதிக்க சக்திகளின் அரசியல் போராட்டங்களேயன்றி, மனித நேயத்தை வளர்க்கும் செயல் திட்டங்கள் அல்ல.

இவர்கள் போலி பக்தர்கள். உண்மையான பக்தி ஆயுதம் ஏந்தாது. வள்ளலாரைப் பாருங்கள்... என்று பேசுகிறவர்கள், பற்றி எரியும் ஒரு பிரச்னையிலிருந்து விலகிச் செல்லும் கபட தாரிகளே தவிர யோக்கியர்கள் அல்ல.

வள்ளலாரே மனங்கசந்து விரக்தியில் பேசுகிறாரே! “கடை விரித்தேன்; கொள்வாரில்லை!’’ என்கிற அவரது சுயவிமர்சம் என்ன சொல்கிறது? நிலவுகிற சமூக அமைப்புக்கும் நினைப்புக்கும் தொடர்பில்லாமல் இருப்பது பயனற்றது என்பதையே வள்ளலார் வாக்கு ஒளியுறுத்துகிறது. முரண்பாடுகள் நிறைந்த ஒரு சமூக அமைப்பில் வாழ்ந்து கொண்டு தூய அன்பின் பெயரால் துறவிக்கோலம் கொள்வது சுயநலம் மிகுந்த கோழைத் தனமாகும்.

சங்கர ஞாநியார் குறிப்பிடுவது போல் இங்கே ‘போலி பக்தர்’ அத்வானிக்கும், ‘போலி பகுத்தறிவார்’ கலைஞருக்கும் இடையே நடக்கும் ‘யுத்தம்’ போலித் தனமானதல்ல. சாந்தி, சமாதானம், சமதர்மம், என்கிற இந்தக் கருத்துரு வாக்கம் இனியதுதான். ஆனால் அமைதி எப்போதும் அமைதியான முறையில் வந்ததே இல்லை!

உலகில் சாந்தி நிலவ வேண்டும்; சமாதானம் செழிக்கவேண்டும்; சமதர்மம் நிலைக்கவேண்டும். என்றால் வரலாறு கேட்கும் ஒரே கேள்வி இதுதான்: “நீங்கள் எந்தப் பக்கத்தில்!’’

-ஆனாரூனா

ஹே ராம் சிங்கள ரத்னா !

இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் இந்திய அரசாங்கம் பேச்சுகளை நடத்தாது என்று கொழும்பில் "இந்து" பத்திரிகையின் ஆசிரியர் "ராம்" கூறியுள்ளது உண்மையா? என்பதை ஆராய்கிறது இந்த ஆய்வு.

"இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளமையால் புலிகளுக்கு எதிரே அமர்ந்து, அவர்களுடன் உத்தியோகபூர்வமான முறையில் இந்திய அரசாங்கம் எதுவித பேச்சுக்களையும் மேற்கொள்ளாது" என்று தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் "இந்து" ஆங்கில நாளேட்டின் ஆசிரியரும் சிறிலங்கா அரசாங்கத்தின் உயரிய விருதான "சிங்கள ரத்னா" விருது பெற்றவான ராம், கொழும்பில் நடைபெற்ற இந்திய கூட்டரசின் விடுதலை நாள் விழாவில் "திருவாய்" மலர்ந்துள்ளார்.

இவர் இந்திய அரசாங்கத்தின் உயர் அதிகாரியோ அரசியல்வாதியோ அல்ல. ஆனால் இந்தியாவின் கொள்கைகள் அனைத்தும் "பார்ப்பனர்" நலனுக்காக மட்டுமே இருக்க வேண்டும் என்பதில் அக்கறை கொண்டு செயற்படுகிறவர்களில் முதன்மையானவர். இந்த பார்ப்பனரின் கூட்டாளிகள்தான் இந்திய அரசாங்கத்தின் கொள்கைகளைத் தீர்மானிக்கின்றவர்களாக உள்ளனர்.

சரி... தடை செய்யப்பட்ட இயக்கத்தோடு இந்தியா இதுவரையும் பேச்சுவார்த்தையே நடத்தியதே இல்லை என்கிறாரே ராம்? உண்மையா?

இந்திய கூட்டரசின் உள்துறை அமைச்சகத்தின் 2006-07 ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையில் வடக்கு-கிழக்கு இந்திய மாநிலங்களின் நிலைமை தொடர்பில் சில பக்கங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதில் பக.16-இல் "பாரிய ஆயுதம் தாங்கிய கிளர்ச்சி குழுக்கள்" (பக். 16) என்ற தலைப்பின் கீழ் பல அமைப்புக்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

அசாம் தனிநாடு கோரி போராடும் உல்ஃபா, மற்றும் அகன்ற நாகாலாந்து கோரி போராடும் நாகாலாந்து சோசலிஸ்ட் கவுன்சில் (ஐசக்-மூய்வா), நாகாலாந்து சோசலிஸ்ட் கவுன்சில் (கப்லாங்) ஆகிய அமைப்புகளும் இடம்பெற்றுள்ளன.

இந்திய அரசால் வடக்கு கிழக்கு மாநிலங்களிலே "பாரிய ஆயுதம் தாங்கிய கிளர்ச்சி குழுக்கள்" என்று பட்டியலிடப்பட்ட அமைப்புகளில் நாகாலாந்து சோசலிஸ்ட் கவுன்சில் (ஐசக்-மூய்வா), நாகாலாந்து சோசலிஸ்ட் கவுன்சில் (கப்லாங்) இரண்டைத் தவிர அனைத்துமே 1967 ஆம் ஆண்டு சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் சட்டவிரோத அமைப்புக்களாக அறிவிக்கப்பட்டுள்ளன என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நாகாலாந்து சோசலிஸ்ட் கவுன்சில் (ஐசக்-மூய்வா), நாகாலாந்து சோசலிஸ்ட் கவுன்சில் (கப்லாங்) அமைப்புகள் மீதான தடை கூட 2002 ஆம் ஆண்டுதான் நீக்கப்பட்டது.

ஆனால் 1997ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25 ஆம் நாள் இந்த இரு அமைப்புகளுடன் இந்திய அரசாங்கம் "யுத்த நிறுத்த ஒப்பந்தம்" செய்து கொண்டது. 1997 ஆம் ஆண்டு முதல் ஓகஸ்ட் 1 ஆம் நாள் முதல் இது நடைமுறைக்கு வந்தது.

அப்போதும் இந்த நாகா அமைப்புகள் "தடை செய்யப்பட்ட அமைப்புகள்" தான்!

இந்தியாவின் பிரதமராக இருந்த வாஜ்பாய், ஜப்பானின் ஒசாகா நகரத்தில் 2001 ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் நாள் நாகாலாந்து சோசலிஸ்ட் கவுன்சில் (ஐசக்-மூய்வா) அமைப்பின் தலைவர்களான ஐசக் மற்றும் மூய்வா ஆகியோருடன் பேச்சுக்களை நடத்தியதாக திருவாளர் இந்து ராமின் "இந்து"வின் 2001 டிசம்.9 ஆம் நாளிட்ட நாளிதழ்தான் செய்தி வெளியிட்டது.

அப்போதும் இந்த நாகா அமைப்புக்கள் "தடை செய்யப்பட்ட அமைப்புக்கள்" தான்!

அதே நாளிட்ட இந்து நாளிதழில் ஏற்கெனவே நாகாலாந்து சோசலிஸ்ட் கவுன்சில் (ஐசக்-மூய்வா) அமைப்புடன் பாரிஸ் மற்றும் பாங்கொங்க் ஆகிய நகரங்களில் அரசாங்கத் தூதுவர்கள் மூலம் இரகசியப் பேச்சுக்கள் நடத்தப்பட்டதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அப்போதும் இந்த நாகா அமைப்புக்கள் "தடை செய்யப்பட்ட அமைப்புக்கள்"தான்!

நெதர்லாந்தின் அம்ஸ்டெர்டமில் 2002 ஆம் ஆண்டு ஜூலை 9 ஆம் நாள் முதல் 11 ஆம் நாள் வரையிலும்

தாய்லாந்தின் பாங்கொங்கில் 2002 ஆம் ஆண்டு செப்ரம்பர் 21 முதல் 23 வரையிலும்

நாகா அமைப்புக்களுடன் இந்திய அரசாங்கத்தின் சிறப்பு பிரதிநிதி கே.பத்மநாபய்யா நாகா அமைப்புக்களுடன் பேச்சுக்களை நடத்தினார்.

அப்போதும் இந்த நாகா அமைப்புக்கள் "தடை செய்யப்பட்ட அமைப்புக்கள்" தான்!

2002 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் நாள்தான் நாகாலாந்து தனிநாடு கோரும் அமைப்புக்களின் மீதான தடை நீக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்து ராமுக்கு உரித்தான குழும ஏடுகளில் இவைகள் அனைத்துமே பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்திய மற்றும் அனைத்துலக ஊடகங்களும் இதனை பதிவு செய்துதான் உள்ளன.

இந்தியப் பிரதமர்களாக இருந்த பி.வி.நரசிம்மராவ், எச்.டி.தேவகவுடா, ஐ.கே.குஜ்ரால் மற்றும் வாஜ்பாய் ஆகியோரால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளினால்தான் நாகா அமைப்புக்களுடனான யுத்த நிறுத்த ஒப்பந்தம் உருவானது என்று இதே இந்து ராமின் "புரண்ட்லைன்"தான் (Volume 16 - Issue 27, Dec. 25, 1999 - Jan 07, 2000) பதிவும் செய்துள்ளது.

அதேபோல் அசாமில் தனிநாடு கோரி போராடும் உல்ஃபா அமைப்பு ஒரு தடை செய்யப்பட்ட அமைப்பு என்று இந்திய கூட்டரசின் உள்துறை அமைச்சகத்தின் 2006-07ஆம் ஆண்டு அறிக்கை தெரிவிக்கிறது.

இதே உல்ஃபா அமைப்புடன் பேச்சுக்கள் நடாத்த வேண்டும் என்று புகழ்பெற்ற அசாமிய பெண் எழுத்தாளர் இந்திரா கோஸ்வாமி முன்முயற்சிகளை மேற்கொண்டார். இதனையடுத்து உல்ஃபாவினால் மக்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டு 3 சுற்றுப் பேச்சுக்கள் நடத்தப்பட்டன. ஆனால் பேச்சுக்கள் எதுவும் வெற்றி பெறவில்லை.

இப் பேச்சுக்கள் குறித்தும் பதிவு செய்துள்ள இந்திய கூட்டரசின் உள்துறை அமைச்சகத்தின் 2006-07 ஆம் ஆண்டு அறிக்கையானது (பக். 18)

- உல்ஃபா அமைப்பினரின் வேண்டுகோளை ஏற்று தடுத்து வைக்கப்பட்டுள்ள உல்ஃபா அமைப்பினர் 5 பேரை விடுதலை செய்வது தொடர்பாக சாதகமாக பரிசீலிக்கவும இந்திய அரசாங்கம் ஒப்புக் கொண்டிருப்பதாகவும்

- அமைதிப் பேச்சுக்கள் நடத்துவதற்கு ஏதுவான சூழ்நிலையை உருவாகக் 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 13 ஆம் நாள் முதல் 2006 ஆம் ஆண்டு செப்ரம்பர் 20 ஆம் நாள் வரை ஒருதலைபட்சமான நடவடிக்கை நிறுத்த அறிவிப்பை இந்திய அரசு பிரகடனப்படுத்தியிருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளது.

"தடை செய்யப்பட்ட" உல்ஃபா அமைப்புடன்தான் அமைதிப் பேச்சுக்களை நடத்த இந்திய அரசாங்கமே ஒருதலைபட்சமான நடவடிக்கைகள் நிறுத்த வெளியிடுகிறது.

"தடை செய்யப்பட்ட" உல்ஃபா அமைப்பின் உறுப்பினர்களை விடுவிப்பது குறித்து "சாதகமாக" பரிசீலிப்பதாக இந்திய அரசாங்கமே அறிவிக்கிறது.

மேலும் ஆயுதம் தாங்கிய கிளர்ச்சிக் குழுவினருடன் யுத்த நிறுத்த ஒப்பந்தத்துக்கு அப்பால் "நடவடிக்கைகள் இடை நிறுத்தம்" ஒப்பந்தம் என்ற ஒரு ஒப்பந்தத்தையும் இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்திய கூட்டரசின் உள்துறை அமைச்சகத்தின் 2006-07 ஆம் ஆண்டு அறிக்கையின்படி,

- போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி

- அசாமில் செயற்பட்டு வரும் ஐக்கிய மக்கள் ஜனநாயக ஒற்றுமை

- அசாமில் இயங்கி வரும் டி.எச்.டி எனப்படும் டிமா ஹலான் டோஹாஹ்

- மேகாலயாவில் இயங்கி வரும் அசிக் தேசிய தன்னார்வ சபை

ஆகிய அமைப்புடன் இத்தகைய "நடவடிக்கைகள் இடை நிறுத்தம்" என்கிற ஒப்பந்தத்தை இந்திய அரசு செய்துள்ளது.

"சிங்கள ரத்னா" "இந்து" ராம் அவர்களே!

இந்த அமைப்புக்கள் அனைத்துமே தற்போதும் இந்திய அரசாங்கத்தால் "தடை செய்யப்பட்டவைதான்"!-

தடை செய்யப்பட்ட அமைப்புக்களுடன்தான்

இந்தியப் பிரதமர்களும் பேசுகிறார்கள்-

இந்திய சிறப்புப் பிரதிநிதிகளும் பேசுகிறார்கள்-

ஒப்பந்தங்களை உருவாக்குகிறார்கள்-

ஒப்பந்தங்களை நீடிக்கிறார்கள்.

இப்படியான நிலையில் "தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மட்டும் இந்தியா பேசாது" என்று இந்து ராம் "ஒரு தலைபட்சமாக" பிரகடனம் செய்கிறார்.

ஆம்-

இந்திய சிறப்புப் பிரதிநிதியாக ஈழப் பிரச்சனையிலே செயற்பட்டு தமிழர் தரப்பிடம் தோல்வியடைந்து போன அதே "இந்து" ராம்தான் இப்போதும் நஞ்சு கக்குகிறார்!

தமிழர்கள் துன்பப்படுகிறார்கள் என்பதற்காக எங்கோ இருக்கும் நோர்வே நாட்டவர்கள் கடல் கடந்து வந்து தமிழர் தரப்பினருடன் பேசுகின்ற போது இனம், மொழி, பண்பாடு ஆகியவற்றால் தொடர்புபட்ட

தமிழ்நாடு அரசாங்கமும்

இந்திய அரசாங்கமும்

இலங்கைத் தமிழர் துயர் துடைக்க ஏன் அக்கறை கொள்ளக்கூடாது?

ஏன் அக்கறை கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தக்கூடாது?

ஏன் இலங்கைத் தமிழர் பற்றி பேசக்கூடாது?

தடை செய்யப்பட்ட உல்ஃபாவுடன் பேச்சுகள் நடத்த வேண்டும் என்று புகழ்பெற்ற பெண் எழுத்தாளர் இந்திரா கோஸ்வாமி களமிறங்கிய போது அவரை பொடாவில் போடவில்லையே! அவரை பயங்கரவாதியாக சித்தரிக்கவில்லையே!

உல்ஃபா அமைப்புடன் பேச்சுக்கள் நடத்தலாம் என்று புதுடில்லிக்குச் சென்று அசாம் முதல்வர் பேசலாம்- அசாம் எழுத்தாளர் வலியுறுத்தலாம்- அவர் பதவியிலே நீடிக்கலாம்!

ஆனால்

தங்கள் தொப்புள்கொடி உறவு கொண்ட இலங்கைத் தமிழருக்காக தமிழ்நாட்டில் வாழுகின்ற தமிழர்கள் பேசினால்மட்டும் "இந்து" ராமின் கண்களுக்கு "பயங்கரவாத"மாகத் தெரியும்! குய்யோ முறையோ என கூப்பாடு போடுவார்கள்!

பசியாலும், பட்டினியாலும் வாடும் இலங்கைத் தமிழர்களுக்காக தமிழகத் தமிழர்கள் சேகரித்த உணவுப் பொருட்களை அனுப்ப 74 வயது பெரியவர் பழ. நெடுமாறனை சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டம் நடத்தும் சூழ்நிலைக்குத் தள்ளுகின்ற அளவிலே "தடை செய்யப்பட்ட இயக்கம்" என்ற பதத்தை வைத்துக் கொண்டு எழுது கோல்களின் மூலமாக பார்ப்பன லொபிகள் மூலமாக தமிழகத்திலே ஒருவித "அச்ச" நிலையை அல்லவா "இந்து" ராம் குழுக்கள் உருவாக்கி வைத்துள்ளன.

"இந்து" ராமுக்கு எதுவும் தெரியாது என்பதோ

"இந்து" ராம் எதனையும் அறியாதவர் என்பதோ அல்ல.

இலங்கை இனப்பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட்டு

தமிழர்கள் தங்களது உரிமைகளை வென்றெடுத்து விடக் கூடாது என்பதும்

தமிழர் தரப்புடன் இந்தியா பேசிவிடுமோ?

பார்ப்னர்களாகிய நாங்கள் நடமாடுகின்ற போது- இந்தியாவின் கொள்கைகளை தீர்மானிக்கின்ற சக்திகளாக நாங்கள் இருக்கும்போது அப்படி ஒருபோதும் பேசவிட வேமாட்டோம் என்ற பார்ப்பன ஆதிக்க வெறியும்தான் "இந்து" ராமின் "கொழும்பு" கூச்சலுக்குக் காரணம்!

காலம்காலமாக தமிழினத்தின் மீது "பார்ப்பன ஆதிக்கவாதிகள்- வெறியர்கள்" கொண்டிருக்கும் வரலாற்று வன்மப் பகையின் வெளிப்பாடுதான் "இந்து" ராமின் "கொழும்பு" கூச்சல்!.

எங்கள் யாழ்ப்பாணம்

"என்ன பறுவதம் ஆச்சி நீங்களும் வந்து கியூவிலை நிக்கிறியள்".
"ஓமடா மேனை கந்தசஷ்டி விரதத்திற்கு ஒரு நேரம் இரவிலை சாப்பிடுகிறது".
"பாணே சாப்பிடப் போறியள்"
" வேறு என்ன இருக்கு இஞ்சை சாப்பிட"
"ஆச்சி இப்ப காலை எட்டுமணி. மூண்டு மணி செல்லும் பாண் தர"
"அறுவாங்கள் பாதையை மூடிப்போட்டு சாமான்கள் அனுப்பாமல் விட்டால் சனம் என்ன சாகிறதே?"
"இல்லையாச்சி கப்பலிலை சாமான்கள் வருகுதெண்டு சொல்லுகினம்"
"உது எங்களை ஏமாத்த இப்படிச் சொல்லுறான்கள்".
"இல்லை ஆச்சி சாமான்கள் வருகுது தான். ஆனால், வியாபாரியள் பதுக்கி வைச்சு கொள்ளை இலாபம் அடிக்கிறாங்கள்;" மோசக் காரர்கள்.
"அநியாயமாய் போவார் ஏன் இப்படிச் செய்யினம்".
"வேறு என்ன பண ஆசைதான்; பெரிய முதலாளிகளாகத் தான் பாக்கினம்"
"இஞ்சை எங்கடை சனம் சாப்பாடு இல்லாமல் சாகக்கிடக்குதுகள். நாசமாய் போவார் சாமான்களின்ரை விலையைக் கூட்டிவித்து சொர்க்கத்திற்கே போகப் போயினம்".
"ஏலாத நேரத்தில ஆச்சி கந்தசஷ்டி விரதம் பிடிக்க வேணுமோ?"
"எட மேனை எப்ப பாதையை மூடினாங்களோ அண்டைக்குத் தொடக்கம் கந்தசஷ்டி விரதம் தானே? ஒரு நேரம் தான் சாப்பிட வழி இருந்தது. இப்ப எல்லாம் முடிஞ்சு போச்சு. அது தான் ஒரு இறாத்தல் பாண் வாங்கினால் இரண்டு நாளைக்குக் காலந்தள்ளலாம் எண்டு வந்தனான்".
சூரியனும் புதினம் பார்க்கப் புறப்பட்டு மேலெழுந்து கொண்டிருந்தான். நேரம் ஏற ஏறச் சூடு நிரம்பிய செங்கதிர்களை பரப்பிக் கொண்டிருந்தான்.
நேரம் பன்னிரண்டைத் தாண்டிவிட்டது. வெப்பம் தாங்க முடியாமல் பாண் கியூவில் நின்றவர்கள் நன்றாகச் சோர்ந்து போனார்கள்.
பறுவதம் ஆச்சி தலையிலை சீலைத் தலைப்பைப் போட்டுக் கொண்டு வெய்யிலில் வெதும்பிக் கொண்டு நிற்பதைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது.
"ஆச்சி நீங்கள் கியூவிலை நிற்க வேண்டாம். போய் அந்த குந்திலை இருங்கோ. கொடுக்கத் தொடங்கேக்கை வந்து வாங்குங்கோ நாங்கள் விட்டுத் தாறம்".
"பிள்ளையள் கவனமாய் நில்லுங்கோ. வெள்ளை வான் திரியுது எண்டு கேள்வி."
"சரி ஆச்சி"
பறுவதம் ஆச்சி நிண்டு நிண்டு சரியாகக் களைச்சுப் போனா. மற்றப் பக்கத்திலுள்ள கடைக்குந்தில் போய் இருந்தவ படுத்துத் தூங்கிவிட்டா.
****
பறுவதம் ஆச்சி கோண்டாவிலில் தான் இருக்கின்றா. புருசன் கந்தப்பு பத்து வருடங்களுக்கு முன்பு ஷெல் விழுந்து செத்துப்போனார். இரண்டு ஆம்பிளைப் பிள்ளைகள் இத்தாலிக்குக் களவாய் போகப் போனவங்கள் போனவங்கள் தான். இற்றைவரை எதுவிதமான தகவலும் இல்லை.
கணவன் இறந்த வேதனையாலும் பிள்ளைகளைக் காணாமலும் பறுவதம் ஆச்சி நல்லாய் நொந்துபோனர்.
ஊரில் உள்ள சில வீடுகளுக்குச் சென்று அரிசி இடித்து மாவாக்கி வறுத்துக் கொடுப்பதன் மூலம் கிடைக்கும் சொற்ப பணத்தில் வயிற்றைக் கழுவி வந்தார். அதனாலை `மா இடிக்கும் பறுவதம் ஆச்சி' என்று எல்லோரும் அழைப்பார்கள். வேலைச் சுத்தம், மனச் சுத்தம் அதனால் எல்லோருடைய மரியாதைக்கும் உரியவராக வாழ்ந்து வந்தா.
கல்யாண வீடு, சாமத்திய வீடு என்று வந்தால் பலகாரம் சுடுவதற்கு பறுவதம் ஆச்சி கட்டாயமாகக் கூப்பிடப்படுவா. அரியதரம், முறுக்கு, பால்றொட்டி, சிப்பி, பயித்தம் பலகாரம் என்று எல்லாவற்றிலும் தேர்ச்சி பெற்றிருந்தா.
****
"எடி வள்ளியம்மை வெறுந்தேத்தண்ணி குடிக்கேலாமல் கிடக்கு கொஞ்சச் சீனி தாறியே!
"உண்ணாணை அக்கா ஒரு சொட்டு சீனியும் இல்ல. அறுவான்கள் ஏழை எளியதுகள் வாங்க முடியாமல் நானூறு ரூபாயல்லே விக்கினம். அதுக்கும் கியூவாம்".
"பொன்னம்பலத்தாற்றை பெண்சாதி சொன்னா பேரப்பிள்ளைக்குக் கொடுக்க பால்மா இல்லையாம். அரிசி, மா, சீனி காசிருந்தாலும் வாங்கேலாமல் கிடக்காம். உள்ளிப்பூடு மூவாயிரம் ரூபாவுக்கு விக்கினமாம்."
"ஓமக்கா அவ சொல்லுகிறது உண்மை தான். எங்கடை இவரும் போய் கியூவிலை நிண்டு விட்டுத் திரும்பி வந்தவர். "
"இப்ப வேலைவெட்டி தொழில் துறையள் ஒண்டும் இல்லை. கியூவிலை நிற்கிற வேலை ஒண்டு மட்டும் தான் நடக்குது."
"நல்லாச் சொன்னியள் அக்கா".
"சாப்பாட்டுக்கு வழியில்லாமல் சனம் பட்டினியாலை சாகப் போகுதுகள்."
"அது ஒண்டுதான் இஞ்சை மலிவாய் கிடைக்கும் போலை தெரியுது".
"ஓமடி பிள்ளை தலையைச் சுத்துது நான் வாறன்" நாட்டு நிலைமை காரணமாக பெருந்தொகையான மக்கள் சொல்லொணாத் துயரங்களைச் சுமந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களில் ஒருவராகப் பறுவதம் ஆச்சியும் இருக்கின்றார்.
****
"ஆச்சி ஒழும்பெணே பாண் கொடுக்கத் தொடங்கி விட்டாங்கள்" என்று அவரின் கையில் மெல்லமாகத் தட்டுகிறன்.
அவ எழும்பவே இல்லை. நானும் என்னுடன் பாண் கியூவில் நின்ற வேறு சிலரும் சேர்ந்து முகத்திற்குத் தண்ணீர் தெளித்துப் பார்த்தோம். அவ அசைவதாய்த் தெரியவில்லை.
அவ போய்ச் சேர்ந்துவிட்டா. நாங்கள் பதறிப்போனோம். ஒரு ஏழைக்கிழ பரிதாபமாக மரணத்தைத் தழுவிக் கொண்டார்.
யாழ். பெரியாஸ்பத்திரி சவச்சாலையில் பறுவதம் ஆச்சியின் உடல் வைக்கப்பட்டுள்ளது.
அநாதைப் பிணம்.
அரசாங்க செலவில் அவரின் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஊருக்கு உழைத்த பறுவதம் ஆச்சியை ஊரே மறந்துவிட்டது.
பட்டினிச் சாவை எதிர்நோக்கும் மக்களிடையே மனிதாபிமானத்தை எப்படிக் காண முடியும். யாழ்ப்பாணப் பட்டினத்தில் இருந்து சயிக்கிளில் வீடு நோக்கி வந்து கொண்டிருந்தேன். வழியில் ஒருவர் வழி மறித்து "கொக்குவில் சம்பியன் ஒழுங்கையடியிலை இரண்டு பெடியங்களைச் சுட்டுப்போட்டாங்களாம்" என்றார்.
நான் கே.கே.எஸ். வீதி வழியால் போகாமல் நாச்சிமார் கோயிலடியாலை திருப்பி தின்னவேலிச் சந்திக்கு வந்து பலாலி றோட்டாலை போய் உரும்பிராய் சந்தியாலை திரும்பி மருதனார்மடத்தடிக்கு வந்து கே.கே.எஸ். வீதி வழியாக வீட்டை வந்து சேர்ந்தேன்.
வீட்டில ஒரே கூக்குரல் சத்தம். என்ன என்று வாசலில் நின்றவரிடம் கேட்டேன்.
"உன்ரை அப்பாவை வெள்ளை வானில் வந்தவர்கள் கடத்திச் சென்று விட்டார்களாம். அதுதான் கொம்மா குளறி அழுகிறா" என்று சொன்னார். அம்மா என்னைக் கண்டதும் கட்டிப்பிடித்து அழத் தொடங்கிவிட்டா.
"அம்மா அழாதேங்கோ நான் பொலிஸிலும் போய் என்றி போட்டுவிட்டு வாறன்"
"தம்பி நீர் பொலிஸுக்குப் போக வேண்டாம். பணம் கறக்க ஆட்கடத்தல் வேலையில சிலர் ஈடுபட்டுள்ளார்கள். அவையின்ரை வேலையாகத்தான் இருக்கும்" என்று மாமா கூறினார்.
வடபுலத்து நிலைமை படுமோசமாகப் போய்க்கொண்டிருக்கிறது என்று என் மனத்தில் தோன்றியது.
"அருந்தவன் அப்பான்ரை பாடு என்னவாம்"
"ஒண்டுமாய்த் தெரியேல்லை குஞ்சி"
"சனம் இஞ்சை சாப்பாடு இல்லாமல் சாகக்கிடக்குதுகள் அதுக்குள்ளை கப்பம் பெறுகிறதற்கு கடத்தலும் நடக்குது"
"யார் கடத்தினதெண்டு தெரிஞ்சால் போய்ப் பேசிப்பார்கலாமெண்டால் ஒண்டுமாய் தெரியேல்ல குஞ்சி."
"மனித உரிமைகளுக்கான கந்தோரிலை போய் அறிவிச்சனிங்களே?"
"ஓம் குஞ்சி, எல்லா வழியாலும் போய்ப்பார்த்தம் ஒண்டும் சரிவரேல்ல."
"தம்பி எங்களுக்கு ஏன் இந்தக் கஷ்டம் வரவேணும். விளக்கெரிக்க மண்ணெண்ணெய் இல்லை. அதுக்கிள்ளை மின்சாரத்தை நிப்பாட்டி ஆறு மணித்தியாலம் தான் தாறாங்கள். வெளிச்சம் இல்லாத நேரத்தில களவுகளல்லே நடக்குது. மூண்டு சங்கக்கடை உடைச்சு சாமான் எல்லாம் களவெடுத்துப் போட்டாங்களாம். வேறுகடையளும் உடைச்சிருக்காம் எண்டு சொல்லுகினம்."
"வருத்தக்காறரை அவசரமாய் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகவும் வாகன வசதி இல்லை. பெற்றோல், டீசல் இல்லாதபடியால் கார், ஓட்டோ ஒண்டும் ஓடுறேல்ல. எரிபொருள் தட்டுப்பாட்டால் பஸ் போக்குவரத்தும் ஒழுங்கில்லை. பொதுசனம்தான் நல்லாய் கஷ்டப்படுதுகள். யாரை நொந்து என்ன பயன். காசு உள்ளவங்கள் எல்லாம் வெளிநாடெண்டு ஓடிவிட்டாங்கள். நாங்கள் ஏழையள்தான் இஞ்சையிருந்து கஷ்டப்படுகிறம். எங்களுக்கும் யமதர்மராஜன் தேதி குறிச்சிருப்பான் எண்டு நினைக்கிறன்."
என்று குஞ்சி தனது ஆதங்கத்தை பொரிந்து கொட்டினார்.
சற்று நேரத்தில சயிக்கிளில் வேகமாக ஓடிவந்த அருந்தவத்தின் நண்பன் தியாகு....
"இஞ்ச மச்சான் உன்ரை அப்பாவை உடுவில் மல்வம் றோட்டிலை சுட்டுப் போட்டிருக்கு. நான் போய்ப் பார்த்துவிட்டுத்தான் வாறன்."
"ஐயோ அப்பா உங்களுக்கு ஏன் இந்த நிலை வர வேண்டும். எங்களை அநாதையாக்கிவிட்டுப் போய்விட்டீங்களே" என்று அழுதேன்.
"வா மச்சான் சயிக்கிள்ளை ஏறு போவம்."
நாங்கள் இருவரும் அங்கு போய்ச் சேர்ந்தபோது பொலிஸார் அங்கு காவலுக்கு நிற்கின்றார்கள். அவர்களிடம் போய் "இறந்திருப்பவர் எனது தந்தை என்று சொன்னேன்."
நீதிவான் வந்து விசாரணை முடிந்ததும் பிரேதத்தை யாழ். ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லுகின்றார்கள். நானும் தியாகுவும் வீட்டுக்கு வந்து விபரங்களைச் சொல்லிவிட்டு சின்னத்துரையற்றை காரிலை யாழ். ஆஸ்பத்திரியை நோக்கிச் செல்கின்றோம்.
இக்கொடுமைகளைப் பார்த்து சகிக்க முடியாமல் சூரியனும் மேற்கில் போய் மறைந்து கொண்டான்.

சிறுகதை- இணுவை வசந்தன்

ஜெய் ஸ்ரீராம் !!

புதுடில்லி: " சுதந்திர இந்தியாவில் உயர் ஜாதியினரின் நிர்வாகம் காரணமாகவே ஊழல் பெருத்து விட்டது' என, சீனியர் வக்கீல் ராம் ஜெத்மலானி சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளார். உயர்கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை வலியுறுத்தி மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்களை, தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட பெஞ்ச் விசாரித்து வருகிறது. இந்த பெஞ்ச் முன், இடஒதுக்கீட்டை ஆதரித்து சீனியர் வக்கீல் ராம் ஜெத்மலானி வாதிட்டதாவது: இந்திய சமூகத்தில் பல நுõற்றாண்டுகளாக பின்தங்கிய நிலையில் உள்ள மக்களை மேம்படுத்தவே இடஒதுக்கீடு அவசியமாகிறது. அவர்களின் பழைய காயங்களுக்கு இடஒதுக்கீடு என்ற மருந்தை அரசு தடவி வருகிறது. உயர் ஜாதி வகுப்பைச் சேர்ந்த தற்போதைய தலைமுறையினர், தங்களின் மூதாதையர் செய்த தவறுகளுக்காக சில தியாகங்களை செய்து தான் ஆக வேண்டும். புத்திசாலியான வஞ்சகனை விட, நேர்மையான அப்பாவிக்குத் தான் நான் ஆதரவு தருவேன். ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு மூலம் பெயரளவில் உள்ள அறிவாளிகளையே உருவாக்க முடியும் என இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் இங்கு தெரிவித்த கருத்தே அவர்கள் மனு விவாதத்திற்கு ஏற்றதல்ல என்று எண்ண வைக்கிறது. அதற்காகவே இந்த மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும். ஆதிதிராவிட மக்களிடையே மிகவும் பின்தங்கிய மக்கள் இருப்பது மரபணு ரீதியான விபத்தே. குறிப்பிட்ட ஜாதியில் பிறந்த காரணத்துக்காகவே, பின்தங்கிய நிலையில் இருந்து அவர்களால் மீண்டு வர முடியவில்லை. அந்த அளவுக்கு சமுதாய அமைப்பு உள்ளது.இந்தியாவில் இதர பிற்படுத்தப்பட்ட மக்கள் 36 சதவீதம் பேர் உள்ளனர். இதுவே, அரசின் இடஒதுக்கீடு கொள்கை சரியானது என்பதற்கு ஆதாரம். மண்டல் கமிஷன் வழக்கில் ஒன்பது நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் பிறப்பித்த உத்தரவை மீறி, ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட பெஞ்ச் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்ற சூழ்நிலையை, இடஒதுக்கீடுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் உருவாக்க பார்க்கின்றனர். ஆர்.வெங்கட்ராமன் வழக்கில் ஏழு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு தான், இடஒதுக்கீடு விவகாரத்தில் மிகவும் பழமையான தீர்ப்பு. ஆனால், சுப்ரீம் கோர்ட்டின் அறிக்கையில் இருந்து அந்த தீர்ப்பே நீக்கப்பட்டு விட்டது. உயர் ஜாதி மக்களின் அதிகார செல்வாக்கிற்கு இதுவே சிறந்த உதாரணம். உயர் ஜாதி மக்களின் நிர்வாகம் காரணமாகவே, சுதந்திர இந்தியாவில் ஊழல் பெருத்து விட்டது.இவ்வாறு ராம் ஜெத்மலானி வாதிட்டார்.இந்த வழக்கில், டில்லி மாநில அரசு சார்பில் ஆஜரான சீனியர் வக்கீல் அசோக் பான், " மண்டல் கமிஷன் அறிக்கை அமலான பிறகு டில்லியில் இதர பிற்படுத் தப்பட் டவர்கள் பட்டியலில் 85 புதிய ஜாதிகள் சேர்க்கப் பட்டுள்ளன. டில்லியின் மக்கள் தொகையில் 48 சதவீதம் பேர் இதர பிற்படுத்தப்பட்டவர்களாகவே உள்ளனர். எனவே, டில்லி மாநில அரசின் இடஒதுக்கீடு கொள்கை சரியானதே' என்றார்.

கனிமொழி அமைச்சராகிறார்?

கனிமொழி எம்.பி. நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார். இந்திய தொழில்கள் கூட்டமைப்பு கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்த அவரை நிருபர்கள் சந்தித்து பேட்டி கண்டனர். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-


கேள்வி:- நீங்கள் கவிஞராகவும், எம்.பி.யாகவும் ஆகிவிட்டீர்கள். மத்திய மந்திரியாக ஆவது எப்போது?


பதில்:- மத்திய மந்திரியாக ஆவேன் என்று ஆரூடம் கூறுவதில் எனக்கு நம்பிக்கை கிடையாது. மத்திய மந்திரியாக ஆவேனா? மத்திய மந்திரியாக ஆக மாட்டேனா? என்பதை என்னால் இப்போது கூறமுடியாது. ஆனால் இப்போதுள்ள இந்த பதவி எனக்கு மகிழ்ச்சியை தருகிறது.


பதில்:- பாராளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வேண்டும் என்பதை வலியுறுத்த பெண் எம்.பி.க்களை கொண்டு ஒரு அமைப்பை உருவாக்கலாமா?


பதில்:- நல்ல ஆலோசனை தான். பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை வலியுறுத்த பெண் எம்.பி.க்கள் கொண்ட ஒரு அமைப்பை உருவாக்க முயற்சி செய்வேன்.


கேள்வி:- ஆண்கள், பெண்கள் சம உரிமையால் நிறைய பேர் விவாகரத்து செய்யும் நிலைமை உருவாகி வருகிறது. அது பற்றி உங்கள் கருத்து என்ன?


பதில்:- ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமஉரிமை என்று வரும்போது இது போன்ற பிரச்னைகள் வருகின்றன. இதற்கு காரணம் ஒருவரை ஒருவர் சரியாக புரிந்து கொள்ளாமல் நடப்பதால் தான். எனவே ஆண்களும், பெண்களும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நடந்தால் இத போன்ற பிரச்சினைகள் வராது.


கேள்வி:- தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவீத பெண்கள் தலைவர்களாக வந்து விட்டனர். இருந்தாலும் அவர்கள் பின்னால் ஆண்கள் இருந்து இயக்குவதாக கூறப்படுகிறதே?


பதில்:- உள்ளாட்சி அமைப்புகளில் ஒரு சில இடங்களில் தலைவிக்கு பின்னால், அவரது கணவர் செயல்படுகின்றனர். நாளடைவில் பெண்கள் தனியாக சிறந்த தலைவியாக செயல்படும் நிலைமை உருவாகும்.