‘‘உங்கள் சகோதரர் மு.க.ஸ்டாலினின் அரசியல் பிரவேசம் பற்றி, ‘நானா ஸ்டாலினை அரசியலுக்குக் கொண்டு வந்தேன்? எமர்ஜென்சியின்போது அன்றைய பிரதமர் இந்திராகாந்திதானே மிசாவில் சிறையிலடைத்து ஸ்டாலினை பொது வாழ்க்கைக்குக் கொண்டு வந்தார்!’ என்று தி.மு.க. தலைவர் முன்பொருமுறை சொல்லியிருக்கிறார். மூன்று வருடங்களுக்கு முன்னால் தயாநிதி மாறன் கட்சிக்குள் கொண்டு வரப்பட்டார்... அடுத்து நீங்கள்! கட்சிக்காக பல தியாகங்களைச் செய்த பலர் இருக்கும்போது இப்படி ஒரு வாரிசு திணிப்பு சரியா?’’







‘‘உலகத்தில் எல்லா நாடுகளிலும் வாரிசுகள் அரசியலுக்கு வந்து கொண்டுதான் இருக்கிறார்கள், அமெரிக்கா உட்பட. இப்போது உலக அரசியலில் யாரும் வாரிசு அரசியல் பற்றி பேசுவதில்லை. இங்கே தி.மு.க&வை மட்டும்தான் குறிவைத்துப் பேசுகிறார்கள். தி.மு.க. என்பது மாபெரும் இயக்கம். இதன் வளர்ச்சிக்காக எத்தனையோ பேர் பெரும் துன்பங்களை அனுபவித்திருக்கிறார்கள். தியாகங்களைச் செய்திருக்கிறார்கள். அவர்கள் இல்லாமல் கட்சி இல்லை.அதேசமயம், ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்... ஒரு கட்சியின் தலைவராக இருப்பவர்தான் ஒரு குடும்பத்துக்கும் தலைவராக இருக்கிறார். அவருடைய பொது வாழ்க்கை என்பது கரடுமுரடானது. பொது வாழ்க்கையில் அவருக்கு ஏற்படும் இன்னல்கள் அவரது குடும்பத்தையும் சேர்த்துத்தான் பாதிக்கிறது. வாரிசுகளும் பளுவைச் சுமக்கும் நிலை ஏற்படுகிறது. இருந்தாலும், தி.மு.க. போன்ற ஜனநாயக அமைப்புக்குள் ஒருவரைக் கொண்டு வருவது என்பதை அந்தத் தலைவர் மட்டுமே தீர்மானிப்பதில்லை. கட்சியிலுள்ள மூத்த தலைவர்கள், அனுபவசாலிகள், காலச் சூழல் ஆகியவற்றைப் பொறுத்தே அத்தகைய முடிவுகள் எடுக்கப்படுகின்றன.நீங்கள் குறிப்பிடும் Ôதிணிப்புÕ என்ற வார்த்தையை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. என்னைப் பொறுத்தவரையில் யாரையும் ஒரு உயர்ந்த இடத்தில் திணித்து வெகு காலத்துக்கு உட்கார வைத்துவிட முடியாது. அந்த நபருக்கு கட்சி ஒரு ப்ரொமோஷன் தரலாம். ஆனால், அதை கட்சியின் தொண்டர்கள் முழுமனதாக ஏற்றுக்கொண்டால்தான் அவர் நிலைக்க முடியும். குறிப்பாக, அண்ணனை... அவரை கட்சித் தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளாமல் இருந்திருந்தால் அவர் இத்தனை காலமும் கட்சிக்குள் படிப்படியாக வளர்ந்து, இன்றைக்கு இந்த அளவுக்கு செல்வாக்குடன் இருக்க முடியாது. தொண்டர்களால் ஏற்றுக்கொள்ளப்படாத எவருமே அரசியலில் நீடிக்க முடியாது. இதை ஒவ்வொருவரும் புரிந்து கொண்டாலே, Ôதிணிப்புÕ குறித்த கேள்விக்கே இடமில்லாமல் போய்விடும்.’’






நன்றி : ஜூனியர் விகடன்
ஆனந்த விகடன் புத்தாண்டுச் சிறப்பிதழைச் சற்றுத் தாமதமாகவே படிக்க முடிந்தது. சினிமா சார்ந்த செய்திகளையும் தாண்டிப் பல பொருட்கள் பற்றிய செய்திகளையும் கட்டுரைகளையும் வெளியிடும் ஆரோக்கியமான மாற்றம் ஆனந்த விகடனில் ஏற்பட்டதிலிருந்து தொடர்ந்து வாசிக்க முயன்று வருகிறேன். பயணங்களிலும் வேலை நெருக்கடியிலும் சில இதழ்கள் விடுபட்டுவிடுவதுண்டு. ஆனந்த விகடனில் தொடர்ந்து படிக்கும் பகுதிகளில் ஒன்று ஞாநியின் 'ஓ பக்கங்கள்'. வெகுஜனத் தளத்தில் மாற்றுக் கருத்துகள் புழங்கும் குறைவான தளங்களில் ஒன்று 'ஓ பக்கங்கள்'.

மேற்படி இதழின் 'ஓ பக்கங்கள்' தலைப்பு "சசிகலா நிதி அமைச்சர், கனிமொழி கல்வி அமைச்சர்". இந்த ஒப்பீடு துணுக்குற வைத்தது. உள்ளே செம்மொழிக் குழுவில் கனிமொழி இடம்பெற்றதை ஞாநி கண்டித்திருந்தார். வருங்காலத்தில் ராகுல் காந்தி உள்துறை அமைச்சராகவும் சசிகலா நிதி அமைச்சராகவும் கனிமொழி கல்வி அமைச்சராகவும்கூடும் எனும் சாத்தியப்பாட்டையும் அவர் முன்வைத்திருந்தார்.

இவை நியாயமற்ற வார்த்தைகளாகவும் கலைஞர் மீது ஞாநி சமீபகாலமாக வெளிப்படுத்திவரும் வன்மமும் கோணலும் வெளிப்படும் கண்டனங்களின் உச்சமாகவும் தோன்றின. கலைஞர்மீதான வன்மத்தை அவர் கனிமொழிமீதும் காட்டியிருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. கனிமொழிக்கு ஞாநியின் மனதில் 'கலைஞரின் மகள்' என்பதைத் தாண்டிய எந்தப் பரிமாணமும் இல்லை, அல்லது அது இங்கு வெளிப்படவில்லை என்பது அவரது பெண்ணிய ஆதரவு நிலைப்பாட்டிற்குக் களங்கம் சேர்ப்பதாக உள்ளது. ஏனெனில் கனிமொழியின் பிற தகுதிகளை ஆராய்ந்து ஞாநி தன் கருத்தைப் பதிவுசெய்யவில்லை.

ஞாநியின் எழுத்துகளில் கலைஞர் பற்றிய விமர்சன பூர்வமான மரியாதை ஒரு காலகட்டம் வரை இருந்தது. பா.ஜ.க.வுடன் தி.மு.க. உறவு கொண்ட பின்னர் ஞாநி கலைஞரைக் கருத்தியல் அடிப்படையில் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினார். விரைவில் இக்கருத்தியல் விமர்சனங்கள் தனிப்பட்ட வன்மத்தை வெளிப்படுத்தத் தொடங்கின.
இதற்கு மறுபக்கமும் உண்டு. ஞாநியின் விமர்சனங்களைத் தி.மு.க.வும் அதன் ஊடகங்களும் சகிப்புத்தன்மையற்று எதிர்கொண்டன. எடுத்த எடுப்பிலேயே அவர்மீது சாதியக் குற்றச்சாட்டைச் சுமத்தின. இந்த ஆட்சியில் கண்ணகி சிலை மறுபிரதிஷ்டை செய்யப்பட்டபோது ஞாநி வெளிப்படுத்திய விமர்சனத்தைத் தி.மு.க. தலைமை எதிர்கொண்ட விதம் அச்சத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. ஞாநிமீது பல குற்றச்சாட்டுகளை வைக்கலாம். ஆனால் சாதி உணர்வு கொண்டவர் என நெஞ்சுக்கு நீதி கொண்டு சிந்திப்பவர்கள் சொல்ல முடியாது.
இந்தக் குற்றச்சாட்டு முன்னரும் ஞாநிமீது சுமத்தப்பட்டிருக்கிறது. கருத்து வேறுபாடு கொண்டவுடனேயே மர்ம ஸ்தானத்தில் அடிக்கும் கடைநிலைப் பண்பின் வெளிப்பாடாகவும் பல சமயங்களில் குற்றஞ்சாட்டுபவர்களின் சாதிய உணர்வின் சான்றாகவும் இவை அமைந்துவிடுகின்றன.
செம்மொழிக் குழுவில் முன்னரும் இப்போதும் பங்கு பெற்ற, பெற்றிருக்கும் உறுப்பினர்களின் பலரின் தகுதி என்ன என்பதை ஆராய்ந்து அவற்றோடு கனிமொழியின் தகுதிகளை ஒப்பிட்டு விவாதிப்பதே சரியானது. செம்மொழிக் குழுவிலும் அரசு அமைக்கும் பிற பண்பாட்டுக் குழுக்களிலும் இடம் பெற்றிருப்பவர்களுக்கு அவர்களின் தகுதிதான் அடிப்படையாக உள்ளதா? அல்லது வேறு காரணங்களா? அந்தக் காரணங்கள் 'வாரிசு' என்பதைவிட மேலானவையா? மேலும் ஞாநி 'வாரிசு' என்ற கோணத்தில் மூடத்தனமாக எதிர்ப்பவர் அல்ல.
ஸ்டாலினுக்குத் தி.மு.க.வில் அளிக்கப்படும் பொறுப்புகளை அவருடைய தகுதி மற்றும் அனுபவம் சார்ந்து ஞாநி ஆதரித்து எழுதியுள்ளார். எனவே கனிமொழி விஷயத்திலும் அதே அணுகுமுறையைக் கையாள வேண்டும். கனிமொழிக்குப் பதிலாக அவரைவிடத் தகுதியான ஒருவர் நியமிக்கப்படுவதற்கான வாய்ப்பைச் சமகால அரசியலின் நியமன முறைகள் வெளிப்படுத்தவில்லை. மொழி சார்ந்த நவீனப் பார்வையும் தி.மு.க.வினுள்ளும் அப்பாலும் இருக்கும் அறிவுஜீவிகளுடனான உரையாடலும் கொண்டவர் கனிமொழி. மொழி சார்ந்த பிற்போக்கான பார்வை கொண்ட இன்னொரு தமிழறிஞரைவிட கனிமொழி இடம்பெற்றிருப்பது சாதகமானதாகவே எனக்குப் படுகிறது.
ராகுல் காந்தி மற்றும் சசிகலாவுடனான ஒப்பீடு சிறிது அளவுகூட நியாயம் அற்றது. ராகுல் காந்தி அரசியலில் இயங்கிவரும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். அவரைப் பொறுத்தவரையில் ஒரே கேள்வி 'எப்போது?' என்பதுதான்; 'ஆவாரா?' என்பது அல்ல. சசிகலா தமிழக அரசியலில் பிரதிநிதித்துவப்படுத்தும் குணாம்சங்களுக்குக் கனிமொழி நேர் எதிர். இங்கே எந்த ஒப்பீட்டுக்கும் இடம் இல்லை.
ஞாநியின் இந்த ஒப்பீடுகள் புண்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டவையாகவே தோன்றுகின்றன. கனிமொழி வழி அவர் கலைஞரைத் தாக்குவது, மிக நாகரிகமாகச் சொல்வது என்றால், துரதிருஷ்டவசமானது.
கண்ணன் காலச்சுவடு
தமிழ்க் கலாசாரப்படி வேட்டி, சட்டையணிந்து கொண்டு பொது விழாவொன்றில் சிறப்பு விருந்தினராகப் பேசச் சென்ற காங்கிரஸ் பிரமுகர் அமெரிக்கை நாராயணனை கூட்ட அரங்கின் வாசலிலேயே அங்கிருந்த காவலாளி தடுத்து நிறுத்தி வெளியேற்றிய அசிங்கம், தமிழர்களின் தலைநகரான சென்னையில்தான் நடந்திருக்கிறது.
எப்போதுமே பேண்ட், சட்டையுடன் காட்சியளிக்கும் அமெரிக்கை நாராயணன், கிராமங்களில் தொழிற்சாலைகளை உருவாக்குவதற்கான முயற்சியில் ஆர்வம் காட்டும் தொழிலதிபர்களிடையே பேசுவதற்காக வழக்கத்திற்கு மாறாக வேட்டி, சட்டையணிந்து சென்றபோதுதான் அவமானப்படுத்தப்பட்டிருக்கிறார்.
அந்த நிமிடத்தில் வெட்கித் தலைகுனிந்த தனது வேதனையை வெளிப்படுத்தினார் அவர்.
‘‘மத்திய பஞ்சாயத்து ராஜ் துறையின் கௌரவ ஆலோசகராக நான் பதவி வகித்து வருகிறேன். இந்தியத் திருநாட்டின் பிரதமராக மன்மோகன் சிங் பதவியேற்ற பிறகு, முதல் முறையாக அனைத்து மாநில முதல்வர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே, ‘கிராமங்களின் வளர்ச்சிதான் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும். அதனால், ‘கிராமந்தோறும் கிராமத் தொழில் மையம்’ திட்டத்தை வெற்றியடையச் செய்ய தொழிலதிபர்களும், தொழில் முனைவோரும் ஆர்வம் காட்ட வேண்டுமென்று’’ வலியுறுத்தினார் பிரதமர்.
அவரின் எண்ண ஓட்டத்திற்கேற்பதான், தமிழக அரசும் மத்திய அரசுடன் இணைந்து கிராமங்களில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. நானும் கிராமங்களில் கிராமச் தொழில் மையத்தை உருவாக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். அந்தப் பணியை தீவிரப்படுத்தும் வேகத்தில்தான் சென்னையிலுள்ள பல தொழிலதிபர்களைச் சந்தித்து நான் பேசி வருகிறேன். இதையறிந்த நண்பர்கள் சிலர், ரோட்டரி சங்கக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசுமாறு எனக்கு அழைப்பு விடுத்தனர். நானும் அதற்கு சம்மதம் தெரிவித்தேன்.
சென்னையிலுள்ள மெட்ராஸ் எஸ்பிளனேட், அம்பத்தூர், சென்னை கேலக்ஸி மற்றும் வடமேற்கு ரோட்டரி சங்கங்களின் சார்பில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழுள்ள சென்னை கிரிக்கெட் கிளப் கூட்டரங்கில் கடந்த 19_ம் தேதியன்று சிறப்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். அவர்களின் அழைப்பிற்கேற்ப நானும் கூட்டத்திற்குச் செல்ல புறப்பட்டேன். அமெரிக்காவில் பணிபுரிந்து பேண்ட், சட்டை அணிவதையே வழக்கமாகக் கொண்டவன்தான் நான். என்றாலும் கிராம மக்களின் வளர்ச்சிக்காக பேசச் செல்கிறோமே என்பதற்காக வேட்டி சட்டையணிந்து கொண்டு கூட்டத்திற்குச் சென்றேன். எனது காரிலிருந்து இறங்கி கூட்ட அரங்கிற்குள் நுழைய முயன்ற போது, அங்கிருந்த கிளப் ஊழியர் என்னிடம், ‘வேட்டி, சட்டை அணிந்து கொண்டு உள்ளே செல்லக்கூடாது’ என்று கூறி என்னைத் தடுத்தார்.
அந்த ஊழியரிடம், ‘நான்தான் இந்தக் கூட்டத்தில் பேசப் போகிற முக்கியமான நபர்’ என்றேன். ‘அதுபற்றியெல்லாம் எனக்குத் தெரியாது. வேட்டி, சட்டையணிந்த யாரையும் கிளப்பிற்குள் விடக்கூடாது’ என்று எனக்கு சங்க நிர்வாகிகள் உத்தரவு போட்டுள்ளனர். அதை என்னால் மீற முடியாது!’ என்றார் அந்த ஊழியர். அவர் தொடர்ந்து பேசியதில் மரியாதைக் குறைவான வார்த்தைகள் விழுந்தன.
அதனால் அவமானத்திற்குள்ளான நான் எனது கைபேசி மூலம் ரோட்டரி சங்க நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு எனது நிலையை வருத்தத்தோடு தெரிவித்தேன். அவர்களும் பதறியடித்துக் கொண்டு வெளியே வந்து என்னிடம் மன்னிப்புக் கேட்டனர். பின்பு சங்க நிர்வாகிகளுடன் ரோட்டரி உறுப்பினர்கள் தொடர்புகொண்டு பேசிய பிறகும், வேட்டி, சட்டையுடன் என்னை கூட்டத்திற்குள் அனுமதிக்க மறுத்துவிட்டார் அந்த ஊழியர்.
அங்கு அவமானத்திற்குள்ளான எனக்கு இரண்டே வழிகள்தான் இருந்தன. ஒன்று, தமிழ்க் கலாசாரத்தையும் பண்பாட்டையும் மதிக்காத இடத்திலிருந்து உடனடியாக வெளியேறுவது. மற்றொன்று, கிராம மக்களின் வளர்ச்சி சம்பந்தப்பட்ட விஷயமென்பதால், வேட்டியை மாற்றி பேண்ட் அணிந்து கொண்டு கூட்டத்தில் பேசுவதென்பது தான்.
‘அந்தக் கூட்டத்தில் ஏதாவது ஒரு கிராமத்தில் தொழில் தொடங்கும் ஆர்வத்துடன் வந்திருக்கும் தொழில் அதிபருடன் பேசுகின்ற வாய்ப்பை இழந்து விடுவோமோ?’ என்ற ஆதங்கம் காரணமாக நான் அந்த இடத்தை விட்டு வெளியேறி அருகில் உள்ள கடைக்குச் சென்று பேண்ட் ஒன்றை வாங்கி அணிந்து கொண்டு கூட்டத்தில் பேசினேன். என்றாலும் எனது கலாசாரத்திற்கு ஏற்பட்ட அவமானத்தில் இருந்து என்னால் எளிதாக விடுபடமுடியவில்லை’’ என்றார் அமெரிக்கை நாராயணன்.
இந்த அவலம் பற்றி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த நிர்வாகிகளில் ஒருவரான ரோட்டரி சங்க நிர்வாகி, ஆடிட்டர் துரைராஜ் கண்ணடியரிடம் பேசினோம். அவரும் ‘‘அமெரிக்கை நாராயணனுக்கு ஏற்பட்ட நிலையைக் கண்டு அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட எல்லோரும் வெட்கித் தலைகுனிந்தோம்!’’ என்றார்.
இவர்களின் குமுறல்களுக்கு விடை காண சென்னை கிரிக்கெட் கிளப் பொருளாளர் வினோத்குமாரைத் தொடர்பு கொண்டு பேசினோம்.
‘‘உடையணிவது குறித்து கிளப்பிற்கென்று தனியாக ஒரு விதி இருக்கிறது. இது குறித்து உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரியும். வேட்டி கட்டிக்கொண்டு கிளப்பிற்குள் வரக்கூடாது என்பது ஏற்கெனவே இருந்த நிர்வாகிகள் ஏற்படுத்திய விதிமுறைதான். அதைத்தான் நாங்களும் பின்பற்றி வருகிறோம்.
கடந்த சில நாட்களாக நான் ஊரில் இல்லாததால் கடந்த 19_ம் தேதி என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது. ஆனால், வேட்டி கட்டி வருபவர்களை கிளப்பிற்குள் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பிய சம்பவம் ஏற்கெனவே நடந்துள்ளது!
எப்படி உடையணிந்து வரவேண்டுமென்பது எங்கள் உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரியும். அவர்கள் மட்டுமல்ல, அவர்கள் அழைத்து வரும் நபர்களும் எந்த உடையணிந்து வரவேண்டுமென்பதை நாங்கள் தெளிவாக அறிவுறுத்தியுள்ளோம்.
‘தமிழக முதல்வர், அமைச்சர்கள் எல்லாம் வேட்டியோடு வந்தால் திருப்பி அனுப்புவீர்களா?’ என்பதற்கு நான் பதில் கூற முடியாது.
ஆனால், எங்கள் உறுப்பினர்களின் நிகழ்ச்சிகளில் வேட்டி கட்டிய அர்ச்சகர்களைக் கொண்டு சடங்கு செய்யும் நிலையிருந்தால், அந்த மாதிரி நிகழ்ச்சிகளைக் கிளப்பில் நடத்தாமல் தவிர்த்து விடுங்கள் என்று நாங்கள் முன்கூட்டியே கூறிவிடுவோம்.
உடை அணிவது குறித்து கிளப் கடைப்பிடித்து வரும் நடைமுறையில் எந்த சமரசத்திற்கும் நாங்கள் உடன்படுவதில்லை!’’ என்றார் வினோத்குமார், இறுதியாக.
தமிழ், தமிழர் பாதுகாப்புப் பேரவைகளெல்லாம் இதற்கு என்ன செய்யப்போகின்றன என்பதுதான் கேள்வி.


நன்றி : குமுதம் ரிப்போர்ட்டர்

சிவாஜி என்ற படத்தில் ரஜினி நடிக்கிறார் என்பது சன் டி.வி.க்குத் தலைப்புச் செய்தி. தினத்தந்தியில் தினம் ஒரு சிவாஜி தகவல் இடம்பெறாமல் இருந்ததில்லை. நாளிதழ்கள், வார இதழ்கள், புலனாய்வு இதழ்கள் என எதைப் புரட்டினாலும் சிவாஜி பற்றி ஆதரவாகவோ எதிராகவோ எழுதப்படும் செய்திகளுக்குத் தனி இடம் தரப்பட்டிருக்கும் (தாகம் உள்பட)
படம் பற்றிய அறிவிப்பு வெளியான சில நாட்களில் தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் அதிமுக்கியமான செய்தி ஒன்றை வெளியிட்டார்.


‘சிவாஜி என்ற தலைப்பை வைப்பதற்காக நடிகர் திலகம் சிவாஜி குடும்பத்தாரிடம் அனுமதி கேட்டோம். அவர்களும் பெருந்தன்மையுடன் ஒப்புதல் அளித்துவிட்டார்கள். அந்தப் பெயரையே டைட்டிலாக வைத்துப் படம் எடுக்கிறோம்" என்பதுதான் தயாரிப்பாளர் தந்த தகவல். அட.. ஙொக்கமக்கா! இதுதாம்ப்பு பில்டப்புக்குப் பிள்ளையார் சுழி.

சிவாஜி என்று பெயர் வைத்ததால் நடிகர் திலகம் சிவாஜி குடும்பத்தின் அனுமதியை வாங்கினார்களாம். ரஜினி ஏற்கனவே பாட்சா என்ற படத்தில் நடித்திருக்கிறார். அதற்காக அல்-உமா பாட்சாவிடம் அனுமதி வாங்கினாரா? முத்து என்ற படத்தில் நடித்தார். அதற்காக மு.க.முத்துவிடமோ, மதுரை முத்து குடும்பத்தாரிடமோ, முத்துராமன் மகன் கார்த்திக்கிடமோ அனுமதி வாங்கினாரா? அவையெல்லாம் எங்கள் தயாரிப்பு அல்ல என்று ஏ.வி.எம். நிறுவனம் சொல்லக்கூடும். ஏ.வி.எம் நிறுவனத்திலேயே வசந்தி என்ற பெயரில் படம் தயாரித்து வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டில் எத்தனையோ வசந்திகள் இருக்கிறார்கள். எந்த ஒரு வசந்தியிடமாவது ஏ.வி.எம். இப்படி அனுமதி கேட்டிருக்குமா? சிவாஜி என்ற தலைப்புக்காக சிவாஜி குடும்பத்தாரிடம் அனுமதி கேட்டதாகக் கட்டுமானப் பணிக்கு அடித்தளம் போட்டார்கள்.

அப்படியே அனுமதி கேட்பது என்றால் யாரிடம் கேட்டிருக்க வேண்டும்? வி.சி. கணேசனாக இருந்த நடிகர் திலகத்திற்குச் சிவாஜி கணேசனாகப் பெயர் சூட்டியவர் தந்தை பெரியார். அவருக்கு நேரடி வாரிசுகள் இல்லை. அவருடைய இயக்கத்திற்கும் உடைமைகளுக்கும் உரிமையுடைய திராவிடர் கழகம் இருக்கிறது. அவருடைய கொள்கைகளை முழங்கும் பெரியார் திராவிடர் கழகம் இருக்கிறது. ஏ.வி.எம்.மின் நிலைப்பாட்டின்படி பார்த்தால் இவர்களிடமல்லவா அனுமதி கேட்டிருக்க வேண்டும்? போக் சாலையில் உள்ள அன்னை இல்லத்திற்குச் சென்று அனுமதி கேட்டவர்கள் வேப்பேரியில் உள்ள பெரியார் திடலுக்குமல்லவா சென்று அதே அனுமதியைக் கோரியிருக்க வேண்டும்? கேட்பவன் கேணையனாக இருப்பான். எழுதுபவன் ஏமாளியாக இருப்பான் என்று கணக்குப் போட்டே ரஜினி+ஷங்கர் கூட்டணி, ஏ.வி.எம்மைப் பயன்படுத்திக் கொண்டு கட்டுமானப் பணிகளை ஈஃபில் கோபுரம் அளவுக்குக் கொண்டு சென்றது. அவர்கள் எதிர்பார்த்தது போலவே ஊடகங்கள் ஏமாளிகளாகி, சிவாஜி படக்குழு கக்கிய வாந்தியையெல்லாம் வழித்தெடுத்து வெளியிட்டன.
(மேலும் சுவாரஸ்ய கழுத்தருப்புக்கள் தொடரும்)

பக்கத்துவீட்டுப் படுக்கையறை யை எட்டிப் பார்ப்பது எவ்வளவு அநாகரிகம்!ஆனால், இரவும் பகலும், ஆண்களும் பெண்களும் ஒரே வீட்டுக்குள் என்னதான் நடக்கும்? பார்க்கலாமா என்கிற வக்கிரமான உணர்வைப் பகிரங்கமான ஒரு நிகழ்ச்சியாக இங்கிலாந்து தொலைக்காட்சி ஒன்று படம் பிடித்துக் காட்டியது.இப்படி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளத் தயாராகும்போதே ஒருவர். எல்லாவற்றையும் உதிர்த்து விட்டுத்தான் புறப்படுவார். இந்தியாவிலிருந்து நடிகை ஷில்பா கலந்து கொண்டார்.இதே போட்டியில் கலந்து கொண்ட இங்கிலாந்து நடிகை ஜேட்கூடி ஒருகட்டத்தில் ஷில்பாவை நாய் என்று திட்டி விட்டாராம்.இது நிறவெறி என்று ஒரு புயல் கிளம்பியது. ஜேட் வெளியேற்றப்பட்டார். ஷில்பா இறுதிவரை நின்று வெற்றி பெற்று விட்டாராம்.இதிலே நமக்கு எழும் ஒரு கேள்வி. இங்கிலாந்து நடிகை நாய் என்று சொன்னதே நிறவெறி என்று கத்துகிறவர்கள், வெள்ளையர்களுக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, பிராமணர்களைத் தவிர மற்றவர்கள் எல்லாம் தாழ்ந்தவர்கள் என்று நிறவெறியை ஆதரித்து, இந்திய மக்களை இழிவு செய்வது குறித்து இன்று வரை எந்த இந்தியனுக்கும் நியாயமாய் வரவேண்டிய கோபம் வரவில்லையே ஏன்?நிறவெறியை உலகுக்கு அறிமுகப்படுத்திய பார்ப்பன சாத்திரங்கள்மீது ஆத்திரம் வராத சுயமரியாதையற்ற இந்தியர்கள் இங்கிலாந்து நிகழ்ச்சிக்காகக் குரைப்பது வேடிக்கை அல்லவா!இப்படியும் ஒரு தொழிலா?
நாத்திகனாவதற்குக் கடவுள் இல்லை என்று கூடச் சொல்ல வேண்டியதில்லை. மதக் கொள்கையைப் பற்றி ஆராய்ச்சி செய்து பேசினாலே போதுமானதாக இருக்கிறது. ஜாதிகள் கடவுளால் உண்டாக்கப்பட்டதாக கடவுளே சொன்னார் என்று மத சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த மத சாஸ்திரங்கள் வேதமாகவும், வேதம் போன்றதாகவும் கருதப்படுகின்றன.

உதாரணமாக, பகவத் கீதை என்பது, இந்துக்கள் என்பவர்களுக்கு மிகப் புனிதமானதும், மேலானதுமான புத்தகம் என்று பெயர். முகம்மதியர்கள் குரானை மதிப்பதைவிட, கிறித்துவர்கள் பைபிளை மதிப்பதைவிட, கீதையை அதிக பக்தியாய் அநேக இந்துக்கள் மதிக்கிறார்கள். நான்கு ஜாதிகளும், நான்கு பிரிவான ஜாதி பெயர்களும், அதற்குத் தனித்தனி வேலைக் கிரமங்களும் சொல்லப்பட்டிருக்கிறது. கீதை என்றாலே ‘பகவான் வாக்கு' என்று அர்த்தம். ஜாதி ஒழிய வேண்டும் என்று பேசுகிறவர்களில்கூட, 100க்கு 99 பேர்கள் கீதையை பகவான் வாக்கு என்று நம்பிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஜாதி வித்தியாசம், உயர்வு - தாழ்வு ஆகியவற்றைப் பற்றிக் கண்ணீர் விட்ட காந்தியார்கூட, கீதைக்குத் தன்னை ஆட்படுத்திக் கொண்டிருப்பதாகச் சொல்லியிருக்கிறார்!இந்நிலையில் இப்படிப்பட்ட மக்களால் ஜாதிப் பிரிவுகளுக்கு உள்ள மேல், கீழ் நிலைகளை எப்படி ஒழிக்க முடியும்? கீதை முறை தவறு என்றோ, கீதை கடவுள் சொன்னது அல்ல என்றோ, அப்படித்தான் கடவுளே சொல்லி இருந்தாலும் அவற்றைப் பற்றி கவலை இல்லை என்றோ சொல்லத் துணியாவிட்டால் சொல்ல தைரியமில்லாத மக்கள் யாவரையும் அந்தப்படி சொல்லத் தயார் செய்யாவிட்டால், ஜாதிப் பிரிவு, ஜாதி வித்தியாசம் ஆகியவை எப்படி ஒழியும்?

ஆகவே, இந்தப்படி சொல்லும்படியான ஒருவன் - கீதையையும், கிருஷ்ணனையும் நம்பும் மக்களால் நாத்திகன் என்று சொல்லப்படாமல் இருக்க முடியாது.ஆதலால், நாத்திகனாகவோ, நாத்திகனாவதற்குத் தயாராகவோ, நாத்திகன் என்று அழைக்கப்படுவதற்குக் கலங்காதவனாகவோ இருந்தால் ஒழிய, ஒருவன் சமதர்மம் பேச முடியவே முடியாது. இதுமாத்திரமல்லாமல், சர்வமும் கடவுள் செயல் என்றும், மனித சமூகத்தில் பிறவி மூலமாகவும், வாழ்வு மூலமாகவும் இன்று இருந்து வரும் பிரிவுக்கும், பேதத்துக்கும், உயர்வு - தாழ்வுக்கும் கடவுளே பொறுப்பாளி என்றும், கடவுள் சித்தத்தினால்தான் அவற்றில் ஒரு சிறு மாற்றமும் செய்ய முடியும் என்றும் சொல்லப்படுமானால் - அதை நம்பாமல் இருப்பது நாத்திகமானாலும் கண்டிப்பாக ஒவ்வொரு மனிதனும் நாத்திகனாகத்தான் வேண்டும்.

ஏனெனில், செல்வவான்களிடம் இருக்கும் செல்வமும், பார்ப்பான் பாராட்டிக் கொள்ளும் உயர்ந்த ஜாதித் தத்துவமும், கடவுள் கொடுத்தது என்றும், கடவுள் சித்தத்தால் ஏற்பட்டது என்றும் சொல்லப்படுமானால், அந்தக் கடவுளை யார் தான் ஏற்றுக் கொள்ள முடியும்? அதை யார் தான் நிலைத்திருக்க விட்டுக் கொண்டிருக்க முடியும்? எந்த மாதிரியான மூடக் கடவுளும், எந்த மாதிரியான அயோக்கியக் கடவுளும் மனிதரில் ஒருவரை மேல் ஜாதியாக்கிப் பாடுபடாத ஊரார் உழைப்பில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் படிக்கும், மற்றொருவனைக் கீழ் ஜாதியாக்கிப் பாடுபட்டுச் சோம்பேறிகளுக்கு அழுதுவிட்டு, பட்டினியாய், நோயாய், கட்டக் கந்தை அற்று இருக்கவும் இடமற்றுத் திரியும்படியும் சொல்லி இருக்கவே இருக்காது.

ஊரார் உழைப்பைக் கொள்ளை கொள்ளாமல் எவனும் பணக்காரனாக முடியாது. நாட்டுக் கோட்டையார்களில் 10 லட்சம், 20 லட்சம், கோடிக்கணக்கான ரூபாய் சொத்துள்ளவர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு இந்தப் பணம் ஏது? இவர்கள் படும்பாட்டிற்கும் இவர்கள் அனுசரிக்கும் முறைக்கும், இவர்கள் நடந்து கொள்ளும் மாதிரிக்கும் எந்தக் கடவுளாவது இவ்வளவு பணம் கொடுத்திருக்க முடியுமா? ஏதோ இதெல்லாம் அவரவர் பிரயத்தனத் தினால், தொழில் முறையினால், மனவலிமையினால், சம்பவங்களால் ஏற்பட்டது என்று சொல்லாமல் வேறு என்ன பொருள் சொல்ல முடியும்?இவ்வளவு பணம் இவர்களுக்குச் சேருவதற்கு ஆதாரமாய் இருந்த முறையை யார் தான் சரியான முறை என்று சொல்லிக் கொள்ள முடியும்? இவ்வளவு பணம் இவர்களுக்குக் கொடுத்தவர்களில் பெரும்பான்மை மக்கள் இன்று இருக்கும் நிலையை யார் தான் நல்ல நிலை என்று சொல்ல முடியும்? இதை எல்லாம் மாற்ற வேண்டும் என்று சொல்லும்போது கடவுளையும், மதக் கொள்கைகளையும் கொண்டு வந்து குறுக்கே போட்டால் - அக்கடவுளையும், மதத்தையும் ஒழிக்காமல் எப்படி இருக்க முடியும்?

மற்றும் கடன்பட்டு வட்டிக் கொடுத்த மக்களுடையவும், பாடுபட்டுப் பயனைக் கொடுத்த மக்களுடையவும், மனமும், வயிறும், வாயும் பற்றி எரிய எரிய, அந்தப் பணங்களைக் கோவில் கட்ட, வாகனம் செய்ய, சாமிக்குக் கிரீடம் செய்ய, கல்யாணம் செய்ய, தாசி வீட்டுக்குப் போக, தாசிகளை வைத்து உற்சவம், வாண வேடிக்கை செய்யப் பாழ்பண்ணப்படுமானால் யார் தான் சகித்துக் கொண்டிருக்க முடியும்? இந்த அக்கிரமங்களைப் பார்த்துக் கொண்டு எந்தக் கடவுள்தான் இருக்க முடியும்?
-பெரியார்

சென்னை: நடிகர் ரஜினியின், "சிவாஜி' பட "சிடி' "அவுட்'டாகி விட்டது என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு ஏற்றார்போல்,சென்னையிலுள்ள இரண்டு "பிரின்டிங் பிரஸ்'களில் இருந்து "சிவாஜி, பெரியார்' படங்கள் மற்றும் ஆபாச பட ஸ்டில்கள் அடங்கிய "சிடி' கவர்கள் பண்டல், பண்டலாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னை திருவல்லிக்கேணி, பார்டர் தோட்டம் பேகம் சாகிப் தெருவில் "அன்னை ஆப்செட் பிரின்டிங் பிரஸ்' செயல்பட்டு வருகிறது. அதில், புதுப்பட மற்றும் ஆபாச "சிடி'க்களின் கவர்கள் ரகசியமாக பிரின்டிங் செய்யப்படுவதாக, வீடியோ பைரசி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. வீடியோ பைரசி உதவி கமிஷனர் மாடசாமி தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர்.பிரின்டிங் பிரசிற்குள் பண்டல், பண்டலாக "சிவாஜி, பெரியார்' மற்றும் ஆபாச பட "சிடி'க்களின் பட கவர்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதனை பார்த்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர். துரைப்பாக்கத்தைச் சேர்ந்த பிரின்டிங் பிரஸ் உரிமையாளர் ஜோசப் செல்வன்(38), போலீசாரை பார்த்ததும் தப்பியோடினார். அவரது சகோதரர் சகாயராஜன்(33), டிசைனர் தமிழரசன், "மிஷின் ஆபரேட்டர்' ஜான்சன் ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் விசாரணை நடத்தினர். திருவல்லிக்கேணி முனியப்பன் தெருவிலுள்ள மற்றொரு பிரின்டிங் பிரசிலும் இதே பாணியில் பிரின்டிங் செய்து வந்தனர். இதையும் போலீசார் கண்டுபிடித்தனர். இரண்டு "பிரின்டிங் பிரஸ்'களில் இருந்து இரண்டு லட்சம் கவர்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.11.60 லட்சம். பின்னர், இரண்டு "பிரின்டிங் பிரஸ்'களுக்கும் சீல் வைத்தனர்.
வீடியோ பைரசி போலீசார் பறிமுதல் செய்த கம்ப்யூட்டர் மற்றும் ரேப்பர் சீட்டுகளை போலீஸ் கூடுதல் கமிஷனர் ஜாங்கிட் பார்வையிட்டு, சோதனை நடத்திய போலீசாரை பாராட்டினார். பெரியார் படம் ஏற்கனவே திரையிடப்பட்டு, தற்போது தமிழகம் முழுவதும் ஓடி வருகிறது. ஆனால், ரஜினியின் "சிவாஜி' படம் வரும் 31ம் தேதி தான் வெளியிடப்பட உள்ளது. ஆனால், அதற்குள் அந்த படத்தின் "சிடி' கவர்கள் பண்டல், பண்டலாக பிரின்ட் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதால், அந்த படத்தின் போலி "சிடி' வெளியாகி விட்டதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து, போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.



நல்ல லெகஸி நாடு எப்படி உறுப்படும்னு ஜல்லி அடிக்க ரெடியாப்பா?
பண்டித ஜவஹர்லால் நேரு ராமாயண்த்தைப் பற்றிக் கற்பனை என்று சொன்னது பொய்யா ?
படித்த அறிஞர்கள் இந்தியாவில் இருக்கிறார்களா?இல்லையா?இதிஹாசம் என்னும் கதைகள் முக்கியமாகத் தமிழ்நாட்டின் வளர்ச்சியை மட்டுங் குறிவைப்பது எதனால்?அதிகப்பிரசங்கித் தனமான கேள்விகட்கு அவர்களுக்கு ஏற்ற பதில்கள்.அட அடி மடையர்களே நாசா பற்றியெல்லாம் உண்மையைப் பேசுங்கள்,அவர்கள் மறுத்துள்ளதை ஏன் பேச மாட்டேன் என்கிறீர்கள்?இந்த அறிவியல் யுகத்தில் வாழ்கிறீர்களா இல்லைக் கற்கால்த்தில் வாழ நினைக்கிறீர்களா?மதவாதிகள் ராம்ராஜ்யம் கேட்கிறார்கள்.அதற்கு எந்த ராமன் ஆட்சியைக் கொடுக்கப் போகிறீர்கள்?வால்மீஹியின் ராமனா?கம்பனின் ராமனா?எந்த ராமன் உங்கள் ராமன்?

எத்தனை சீதைகள் நெருப்பில் குளிப்பார்கள்?அரசியல் சீதைகளை என்ன செய்வது?"

இறுதி வரை திமுக

சிலரது தவறான ஆலோசனையால் கருணாநிதி தன் மீது நடவடிக்கை எடுத்திருப்பதாக மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ள தயாநிதி மாறன் கூறியுள்ளார்.
சென்னையில் தனது இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், திமுகவுக்கு களங்கம் ஏற்படுத்தும் எந்த நடவடிக்கையிலும் தாம் ஈடுபடவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
தனக்கு எதிராக கருணாநிதிக்கு தவறான ஆலோசனை கூறியது யார் என்பதை தெரிவிக்க மறுத்துவிட்ட தயாநிதி மாறன், கருணாநிதிக்கு தன் மீது ஏற்ட்ட சந்தேகம் தம்மை மிகவும் பாதித்ததாக கூறினார்.
மந்திரி பதவி பற்றி தாம் கவலைப்படவில்லை என்றும், தாம் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தம்மை வருத்தமடையச் செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
திமுக தொண்டராக பிறந்த தாம் திமுக தொண்டராகவே இறக்கவும் விரும்புவதாக கூறிய தயாநிதி மாறன், கட்சியில் இருந்து தாம் நீக்கப்பட்டாலும், தொடர்ந்து கட்சியின் ஆதரவாளராக இருக்கப் போவதாகவும் கூறினார்.
பதவி விலகல் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் தாம் பேசியதாகவும், இந்த முடிவு குறிதது அவர்கள் அதிரச்சி அடைந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

//கோபால கிருஷ்ணுடு என்ற பெயரில் டோண்டு வந்து இங்கு கமெண்டு போட்டிருந்தார். ஏற்கெனவே கோவி.கண்ணன் பதிவில் சென்று சொந்த பெயருடனும் அனானியாகவும் கலைஞரைத் திட்டித் தீர்த்து விட்டுக் கடைசியாக இங்கு வந்து என் பதிவில் தன் கோவணத்தைக் கழட்டி பேழ முயன்று இருக்கிறார்.

இன்னொரு கண்டுபிடிப்பும் சொன்னார். அதாவது போலி, கருப்பு, சிவமுருகன், நான், மகேந்திரன் எல்லோரும் ஒன்றாம்.

ஆரியனையும் அவனின் குடுமிகளையும் பற்றி எழுதினால் போலியாகத்தான் இருக்க வேண்டும்.

ஹாஹாஹா...சூப்பர் கண்டு பிடிப்பு.

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் மிஸ்டர் கிழட்டு ஓல்டுமேன் டோண்டு.

பெயரை மாற்றி மாற்றி உங்கள் பதிவுகளிலேயே கழிந்து கொள்ளுங்கள். என் பதிவுக்கு உங்கள் வறட்டு வாதங்களும் கழிசடை எழுத்துக்களும் தேவை இல்லை!//

வால்டர் வெற்றிவேலின் பதிவில் இருந்த பின்னூட்டம் இதற்கு எனது பதில் ....

நோ கமெண்ட்ஸ்

:))


டாகுமெண்ட்டரி கொஞ்சம் நீளம் பொறுமையாக பார்க்கவும்

ராமர் பாலம் தொடர்பான ஆதாரங்கள் உள்ளதா என்று தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் கிட்டத்தட்ட 4 மணி நேரம் ஆய்வு செய்து குறிப்புகளையும், நகலையும் சமீபத்தில் எடுத்துச் சென்றார்
நம் மத்திய கப்பல் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு.


ராமர் பாலம் தொடர்பாக எந்தெந்த ஆவணங்களில், நூல்களில் என்னவெல்லாம் பொய்யும் புரட்டும் கூறப்பட்டுள்ளதோ அதையெல்லாம் எனக்குக் காட்டுங்கள் என்று அவர் நூலக நிர்வாக அதிகாரி சாமி
சிவஞானத்திடம் கேட்டார். இதையடுத்து கம்பராமாயணம், வால்மீகி ராமாயணம், மானசராமாயணம், அத்யாத்ம ராமாயணம் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட ஆரிய நூல்தொகுப்புகள் அவரிடம்
காட்டப்பட்டன.

இவற்றில் பெரும்பாலான நூல்கள் சமஸ்கிருதத்தில் இருந்தன. அவற்றை சமஸ்கிருத பண்டிதர் வீரராகவன் தமிழில் மொழி பெயர்த்துக் கூறினார்.

இந்த நூல் தொகுப்புகளிலிருந்து தனக்குத் தேவையான விஷயங்களை குறிப்பெடுத்துக் கொண்டார் பாலு. பின்னர் சில பகுதிகளை ஜெராக்ஸ் பிரதியும் எடுத்துக் கொண்டார். ராமர் பாலம்
தொடர்பான பழங்கால வரைபடங்களையும் அவர் பார்வையிட்டு குறிப்பெடுத்துக் கொண்டார். 23ம் தேதி நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதற்கிடையே சரஸ்வதி மஹால் நூலகத்தில் உள்ள ராமர் பாலம் தொடர்பான ஆதாரங்களை அழிக்க பாலு முயன்றதாக ஜெயா டிவி புரளிச்செய்தி வெளியிட்டது.


சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறினால் செந்தமிழ்நாடும் இந்தியாவும் வளம் கொழிக்கும். அந்த வளம் கொழிக்கக் கூடாது என்று எண்ணுகின்றவர்கள் வேண்டுமானால் இதற்கு குறுக்குப்
பாதையிலே ஏதாவது இடையூறு செய்யலாம், அந்த இடையூறுகள் செய்யாமல் ஒதுங்கியிருந்து உதவிடுங்கள் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.


இந்தத் திட்டத்தினுடைய பயன்கள் என்ன என்பதை திட்டத்தை அறிமுகப்படுத்தியவர்கள் சொன்ன போது, கப்பல்களின் பயண தூரம், நேரம் பெருமளவு குறையும். தமிழகம் மற்றும் அண்டை
மாநிலத் துறைமுகங்களில் சரக்குக் கையாளும் திறன் அதிகரிக்கும். ராமேஸ்வரம் அல்லது மண்டபத்தில் புதிய சிறு துறைமுகம் உருவாகும்.
சேது சமுத்திரத் திட்டத்தால் நம் நாடு மட்டும் அல்ல, தென் கிழக்கு ஆசிய நாடுகளும் கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ள நாடுகள் அனைத்தும் பயன் அடையும். வாணிபமும் தொழிலும்
பெருகும். அன்னிய முதலீடு அதிகரிக்கும். அன்னியச் செலாவணி அதிகம் கிடைக்கும். கப்பலின் பயணத் தூரம் பெருமளவுக்குக் குறையும். எரிபொருளும் பயண நேரமும் மிச்சமாகும்.

ஏற்றுமதி, இறக்குமதி அதிகரிக்கும். குறிப்பாக, ராமநாதபுரம் போன்ற மிகப் பிற்பட்ட தமிழக தென் பகுதி மக்களின் வாடிக்கைத் தரம் மேம்படும். வேலைவாய்ப்பு பெருகும். தூத்துக்குடி
துறைமுகம் சர்வதேச அளவில் விரிவடையும். சுற்றுலா வளர்ச்சி அடையும்.
கடல்சார் பொருள் வர்த்தகம் பெருகி மீனவர்களின் பொருளாதாரம், வாழ்க்கைத்தரம் உயரும். மன்னார் வளைகுடாவிலிருந்து பாக். கடல் சென்று வர மீனவர்களுக்கு வசதியளிக்கும். இலங்கை
உள்ளிட்ட வேறு நாடுகளின் துறைமுகங்களில் இந்தியச் சரக்குகள் பரிமாற்றம் செய்யப்படுவது தவிர்க்கப்படும். நாட்டின் கடலோரப் பாதுகாப்பு வலுப்பெறும். 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு
நேரடி, மறைமுக வேலை வாய்ப்பு கிடைக்கும். ராமேஸ்வரம், தொண்டி, சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், நாகை ஆகிய கடலோர நகரங்களில் மீன்பிடி துறைமுகங்கள் உருவாகும்.

தென் மாவட்டங்கள் பெருமளவிற்கு வளர்ச்சி பெறும் என்ற இந்த நல்ல நோக்கத்தோடு தான் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டது.

10.5.2001 அன்று அ.தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், "இந்தியத் தீபகற்பத்தைச் சுற்றி இதுவரை தொடர்ச்சியான கப்பல் போக்குவரத்திற்கு ஏற்ற பாதைகள் இல்லை.

மேற்கிலிருந்து கடல் வழியாக கிழக்கு நோக்கி கப்பல்கள் செல்ல வேண்டுமானால் இலங்கையைச் சுற்றிக் கொண்டு தான் செல்ல வேண்டியுள்ளது. இதற்கு தீர்வாகத்தான் சேது சமுத்திரத் திட்டம்.
இத்திட்டத்தின்படி ராமேஸ்வரத்திற்கும், "இலங்கையின் தலை மன்னாருக்கும் இடையில் உள்ள ஆடம்ஸ் பிரிட்ஜ் பகுதியில் கப்பல் போக்குவரத்திற்குத் தடையாக உள்ள மணல் மேடுகள், (இது
தான் ஆடம்ஸ் பாலம் - அதாவது ராமர் பாலம்) பாறைகள் இவற்றையெல்லாம் அகற்றி ஆழப்படுத்தி கால்வாய் அமைப்பது தான் சேது சமுத்திரத் திட்டத்தின் தலையாய நோக்கம்'' என்று
குறிப்பிடப்பட்டிருக்கிறது.


இது அ.தி.மு.க.வினுடைய தேர்தல் அறிக்கையிலே கூறப்பட்டிருக்கின்ற தலையாய நோக்கம். அன்று சொன்னதை இன்றைக்கு அதனை மறந்து விட்டு..?

பாவம் அவர்தான் என்ன செய்வார்? பாஜக, விஷ்வஹிந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ், பால்தாக்கரே, சென்னை பார்ப்பன சங்கம், சோ ராமசாமி போன்று
எல்லோரையும் திருப்திப் படுத்த வேண்டி இருக்கிறது.

திடீரென்று மதவாதிகளால் எப்படி அயோத்தியில் மதவாதம் புகுந்த காரணத்தால் அங்கே ராமர் கோவில் என்று சொல்லி பாபர் மசூதியை இடித்தனரோ, அதன் காரணமாக இந்தியாவிலே ரத்த ஆறு
ஓடியதோ, அதைப் போலவே இன்னும் ஒரு வன்முறை நிகழ்ச்சிக்கு வித்திட சில பேர் முயன்று வருகின்றனர். அது ராமர் கட்டிய பாலம், அந்தப் பாலத்தை உடைத்தால் விபரீதம் உண்டாகும்,
ஆகவே இந்தத் திட்டத்தையே நிறுத்த வேண்டுமென்று பார்ப்பனர் இன்றைக்கு கிளம்பி இருக்கிறார்கள்.

அவர்களில் பெரும் பகுதியினர் இந்தியாவின் வடக்குப் பகுதியைச் சேர்ந்த பார்ப்பன மதவாதிகள். அவர்களுடைய எண்ணம் எல்லாம் இந்தத் திட்டம் நிறைவேறி தென்னகம் வளம் கொழிக்கும்
பூமியாக - பசுமைத் தாயகமாக ஆகி விட்டால் என்ன செய்வதென்று எரிச்சலால் தான் இது வரக் கூடாது என்பதற்காக துணைக்கு ராமரை அழைத்து வருகிறார்கள். வடமாநில ஆரிய மிருகங்களின்
கெட்ட எண்ணத்திற்கு இங்குள்ள தமிழக பார்ப்பனர்களும் துணை போகின்றனர்!

இந்தத் திட்டத்தை நிறுத்தாவிட்டால், ராமர் பாலத்தை இடிப்பதை நிறுத்தாவிட்டால் சட்ட ரீதியான நடவடிக்கையை உடனடியாக அ.தி.மு.க. எடுக்கும் என்று அறிக்கை ஒன்று ஜெயலலிதா
வெளியிட்டுள்ளார். "நான் ஒரு பாப்பாத்தி!" என்று சட்டசபையிலே மார்தட்டியவருமான ஜெயலலிதா இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

சேது சமுத்திரத் திட்டத்திற்கு தனது முயற்சியே
காரணம் என்று சொல்லி இருக்கிறார் தன் அறிக்கையில்!
இதில் வேடிக்கை என்னவென்றால் - இந்த திட்டம் வருவதற்கும் ஜெயலலிதா காரணமாம், வருவதை தடுப்பதற்கும் ஜெயலலிதா காரணமாம்!


ராமர் பாலத்தை இடிக்கக் கூடாது என்று சொல்கிறோமே தவிர சேது சமுத்திரத் திட்டம் வேண்டாமென்று சொல்லவில்லையே என்று கூட அவர் சொன்னாலும் சொல்வார். சொல்வதற்கு அவர்களுக்கு
இடம் இருக்கிறது. ஆரியன் வாய் என்றைக்கு தனது சொல்லில் இருந்து வழுவாமல் இருந்திருக்கிறது?


பழமைவாய்ந்த ராமர் பாலம் இடிக்கப்படுவதை தடுக்க வழக்கு தொடரப்போவதாக முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா கூறியிருக்கிறார்.

1. ராமனால் கட்டப்பட்டதாக சொல்லி ஆடம்ஸ் பாலத்தை இடிக்க தடை கோரும் பாஜக, மற்றும் இந்து மத வெறியர்கள் ஏன் பாபரால் உண்மையிலேயே கட்டப்பட்ட மசூதியை இடிக்க ஆசைப்படுகிறார்கள்?


2. ராமன் என்பவன் உண்மையில் இருந்தான் என்பதற்க்கு என்ன ஆதாரம்? கற்பனையான ராமாயணம் உண்மை என்றால் ஏன் அது ஒரு பண்டைக்கால தமிழ் மன்னனால் கட்டப்பட்ட பாலமாக்வே இருக்கக் கூடாது?


3. இந்த பார்ப்பனர்களுக்கு வேறு உருப்படியாக எதுவும் சிந்திக்கவே தெரியாதா?




அரசியலுக்கு வருவதற்கான எல்லா நல்ல தகுதிகளும் இருக்கும் இவருக்கு எனது முதல் வரவேற்பு




இவரும் வருவதால் திமுக ஒரு வாரிசு அரசியல் கட்சி என்பது உறுதியாகிறது என்றுகூறி ஜல்லியடிக்கப்போகும் அம்மாவின் தொண்டரடி குண்டர்களுக்கு இப்போதே கதவை திறந்து வைக்கிறேன்

வட்டமிடும் கழுகுகள்

கலைஞர் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் ‘எதைக் கொண்டு’ இந்த ஆட்சியை அசிங்கப்படுத்தலாம்; அப்புறப்படுத்தலாம். என்று ஆதிக்க சக்திகள் தீவிர சிந்தனையிலும் செயலிலும் இறங்குவதுண்டு.‘அவசர நிலை’ அறிவிக்கப்பட்டிருந்தும் கூட, ஜனநாயகத்துக்கு ஆதரவாளர் களையெல்லாம் சென்னைக்கு வரவழைத்துப் பேச வைத்தார் என்கிற கோபத்தில் முதலில் ஆட்சி கலைக்கப்பட்டது.

தம்மை ஒரு திரையாகப் பயன்படுத்தி ஆதிக்க சக்திகள் நடத்திய திரைமறைவு வேலைகளைப் புரிந்து கொண்ட இந்திரா அம்மையார் ‘அவசர நிலை’க் காலத்தில் நடந்த அத்துமீறல்களுக்கு வருத்தம் தெரிவித்தார்.ஆளுநர் பரிந்துரையோ, சட்ட விதிமுறைகளோ தேவையில்லை. ‘அதர்வைஸ்’ - அதாவது எனக்குப் பிடிக்க வில்லை. என்று தனது சொந்த விருப்பத்தை, அதி காரத்தைப் பயன்படுத்தி மறு முறை ஆட்சியைக் கலைத்தார் யோக்கியர் வெங்கட ராமன். அதை நியாயப்படுத்துவதற்காகத் தேடிப்பிடித்து வெகு நாட்களுக்குப் பின் சொல்லப்பட்ட காரணம், ‘ஈழத்துக் கவிஞர் காசி ஆனந்தன் கலைஞரைச் சந்தித்தார்’ என்பதுதான்.

‘அகதி’ யாகத் தமிழகம் வந்த கவிஞர் காசி ஆனந்தன் தனது மகளின் படிப்புக்கு உதவ முடியுமா? என்று கேட்கவே கலைஞரைச் சந்தித்தார்.ஆனால், காசி ஆனந்தன் கலைஞரைச் சந்தித்ததால் அவர் மூலம் இந்தியாவின் ரகசியங்களெல்லாம் இலங்கைக்குக் கடத்தப்பட்டிருக்கும் என்று ஆதிக்க சக்திகளின் மூளைகளெல்லாம் பொய்விரித்தன.இப்போது அதே காசி ஆனந்தனின் கவிதைகளை, பேட்டிகளை, காதல் விவ காரங்களை, அவருடைய மகள் திருமண நிகழ்ச்சியை ஆதிக்க சக்திகளின் ஏடுகள் ஆரவாரத்துடன் வெளியிடுகின்றனவே, இம்முறை ஈழத்து ரகசியங்களையெல்லாம் இவர்களுக்குக் கடத்திக் கொண்டுவந்து தந்தாரா?

இந்த ஏடுகளின் நாடகம் நமக்குப் புரியாததல்ல.எத்தனை முறை கவிழ்த்தாலும் மீண்டும் மீண்டும் இந்தச் ‘சூத்திரன்’ வெற்றி பெறுகிறானே... விடலாமா? இம்முறை எத்தனையோ, புனைவுகள்! ஐந்தாவது முறையாகக் கலைஞர் ஆட்சிக்கு வருகிறார் என்று தெரிந்த நாள் முதலே புதிய புதிய பொய்கள் போர் தொடுக்கும் வியூகங்கள் அதன் தொடர்ச்சியாகத் தான் நீதிபதிகளை ஆர்க் காடு வீராசாமி விமர்சித்தார்; கலைஞர் அதை வர வேற்கிறார். இந்த ஒரு கார ணத்தை வைத்தே சூத்திரன் ஆட்சியை ஒழித்து விடலாம் என்று அதிக்க சக்திகளின் மூளைகளெல்லாம் கச்சை கட்டிக் கொண்டு கிளம்பியிருக்கின்றன.நீதிபதிகளைக் கஞ்சா வழக்கில் சிக்கவைக்கலாம்; காரைவிட்டு மோதவிடலாம், எங்களுடன் மோதினால் தீர்ப்புரைப் போருக்கும் இதுதான் கதி என்று. எச்சரிப்பதுபோல் கல்லூரி மாணவிகளைப் பேருந்திலேயே பூட்டி வைத்து உயிருடன் எரிக்கலாம், காவல் துறையைப் பயன்படுத்தி நீதிபதி மீது வழக்கு போட் டுக் கைது. செய்ய முடியுமா என்று ஆலோசிக்கலாம்...

இவ்வாறு எத்தனையோ ஜனநாயக முறையிலான, சட்டபூர்வமான சாத்வீக மான, ஆரோக்கியமான வழிமுறைகள் இருக்கும் போது நீதித் துறையின் மீது அதிருப்தி தெரிவித்து ஆர்க்காடு. வீராசாமி பேசலாமா?கருத்துச் சுதந்திரமா?அதைப் பயன்படுத்த சூத்திரர்களுக்கு அருகதை உண்டா?அவாள் ஏடுகள் எல்லாம் துள்ளிக் குதிக்கின்றன.ஜனநாயக முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் அதிகாரம் பெரிதா?ஜனநாயகத்தின் அடிப்படையே சட்டத்தின் ஆட்சி தான் என்பதைப் புரிந்து கொண்டு சட்டங்களையும் நீதிமுறைகளையும் காப்பாற்றும் பொறுப்பில் அமர்த்தப் பட்டுள்ள நீதிமன்றங்களின் உரிமைகள் பெரிதா? வெகுகாலமாகவே இப்படியொரு அதிகாரப் போட்டி அமைதியாகவும் உறுத்தல்களுடனும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.இந்தியா பல தேசிய இனங்களையும் பண்பாட்டு முறைகளையும், கொண்ட நாடு என்பதால் ‘ஆயுதங்களே வலிமை வாய்ந்ததவை என்பதை அறியாத அற்பர் கள். நாங்கள் நினைத்தால்...’’ என்கிற அதிகார ஆசை பாதுகாப்புத் துறைகளுள்- ராணுவத்துக்குள்- வலிமை பெறாமல் போய்விட்டது.யோசித்துப் பார்த்தால்,

1. முடிவெடுக்கும் அதிகாரம்
2. அதனை மக்கள் நம்பும் விதத்தில் நடைமுறைப்படுத்தும் சாதுரியம்
3. சாதுரியம் சாத்தியமாகாத போது மூர்க்கமான முறையில் அடக்கும் ஆயுத பலம்.இந்த மூன்றும் சேர்ந்த பலாத்கார நிறுவனம்தான் அரசு என்பது.பல நூற்றாண்டுகளாக இந்த மூன்று ‘அணிகலன்’ களோடும் ‘முடியரசு’ அரியணையில் இருந்தது. வாரிசுரிமை, தெய்வீக உரிமை என்கிற பெயரில் அரசனே எல்லாமுகமாக இருந்தான்.காலம் மாறியது. வாளின் இடத்தை செல்வம் பற்றியது. பணம் இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதை முதலாளித்துவம் மெய்ப்பித்தது.இப்போது மூலதனத்துக்கு முன் எல்லாத் திறமை களும் பணிப்பெண்களே! மார்க்சின் சொற்களில் சொல்வதனால் - ‘‘எங்கெல்லாம் முதலாளித்துவ வர்க்கம் ஆதிக்க நிலை பெற்றதோ; அங்கெல்லாம் அது மனிதனது மாண்பினைப் பரிவர்த்தனை மதிப்பாய் மாற்றியிருக்கிறது.

இது காறும் போற்றிப் பாராட்டப்பட்டு பணிவுக்கும் பக்திக்கும் உரியதாய்க் கருதப் பட்ட ஒவ்வொரு பணித் துறையையும் முதலாளித்துவ வர்க்கம் மகிமை இழக்கச் செய்துள்ளது.மருத்துவரையும், வழிக்கறிஞரையும், சமய குருவையும், கவிஞரையும், விஞ்ஞானியையும் அது தனது கூலி உழைப்பாளர் ஆக்கிவிடாது.’’ஒரு கோடீஸ்வரன், இங்கே நான்தான் ராஜா என்று முடிசூட்டிக் கொள்ள வேண்டும் என்பதில்லை. உண்மையில் அவனே ‘குடி யரசின்’ வேந்தன். நாடாளு மன்ற ஜனநாயகம், சட்டத் தின் ஆட்சி, சட்டம் ஒழுங்கு, ஆன்மீகம், அரசியல் எல்லாமே மூலதனத்துக்கு முன் கூலி அடிமைகளே!சரியாகச் சொல்வதனால் இங்கே உண்மையான ஜனநாய கம் இருக்க முடியாது. சுதந்திரமான நீதித்துறை இருக்க முடியாது. கட்டுப் பாடுள்ள ராணுவம் கூட இருக்க முடியாது.இது ஒரு பொது விதி என்றாலும், இந்திய சமூகக் கட்டமைப்பில் முதலாளித்துவ உள்ளடம்கூட இதர நாடுகளிலிருந்து தனித் தன்மை பெற்றிருக்கிறது.

ஏடறிந்த வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறராகவே இருந்தாலும் இந்திய வரலாறு என்பது கூடுதல் பரிமாணமாகத் திராவிட ஆரியப் போராட்டங்களின் தொகுப்பாகவே இருக்கிறது.சுதந்திர(!) இந்தியாவின் அரசியல் சாசனத்தை விடவும் மனுதர்மமே இன்றும் இங்கே மதிப்பு வாய்ந்ததாய், செல்வாக்கு மிகுந்ததால், ஆதிக்கம் செலுத்துவதாய் இருக்கிறது.இங்கே தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து ஒருவர் குடியரசுத் தலைவராக முதல் குடிமகன் என்கிற இடத்தில் அமரமுடியும். ஆனால் அவர் எத்தனை உயர்ந்த இடத்தில் இருந்தாலும் ஆரிய சனாதன சாத்திரங்களுக்குக் கட்டுப்பட்டவரே! காசிப் பல்கலை நிறுவனர் சிலையை ஜெகஜீவன்ராம் திறந்தால் சனாதன தர்மமே தீட்டாகிவிட்டதாய்த் துடித்த பிறபோக்குவாதிகள் அவர் சிலையைக் கழுவி வேதமந்திரங்களால் புனிதப் படுத்தினார்கள். காந்தி சிலை ‘புனிதமான’ அன்று முதல் குடிமகனின் மானமும் தகுதியும் இழிவு செய்யப்பட்டதே! மனுதர்மத்துக்குமுன் அரசியல் சாசனம் தலை குனிந்து நின்றதே!எனக்குச் சமமாக அதே விமானத்தில் ஒரு தாழ்த்தப்பட்டவன் பயணப் செய்வதா என்று ஓர் ஆரியப் பெண்மணி சினந்த பொழுது அந்த மத்திய அமைச்சர் விமானத்திலிருந்து இறக்கப்பட்டார்.

தீண்டாமைச் சட்டம், மத்திய அமைச்சருக்கான, பாதுகாப்பு எல்லாம் இருந்தும் எப்படி இந்தக் கொடுமை நடந்தது? வானத்தில் பறக்க வாய்ப்பளித்தாலும் சூத்திரனும் பஞ்சமனும் பணிந்து நிற்கவேண்டியவர்களே என்பதை மறந்துவிடக் கூடாது என்று மனுதர்மம் ஆணையிடுகிறது. அரசியல் சாசனம் பகிரங்கமாகமான பங்கம் செய்யப்படுகிறது.நந்தன் காலத்திலிருந்து இன்று வரை சிதம்பரம் கோயிலுக்குள் உழைக்கும் மக்கள் நுழைய முடியவில்லை. தமிழன் கட்டிய கோயிலில் தமிழில் ஆராதனை செய்ய முடியவில்லை. கிளர்ந்தெழும் மானமுள்ளோர் தாக்கப்படுகிறார்கள். அரசியல் சாசனத்தின் உறுதி மொழிகள் எல்லாம் மாய மாய் மறைந்து விடுகின்றன. ஏன்?

ஏனென்றால் மனுதர் மத்தைப் பகைத்துக் கொள்ளும் அளவிற்கு அரசியல் சாசனம் ஒன்றும் பாமரத்தனமானது அல்ல.இந்த நாட்டில் எரியும் பிரச்னை எதுவாக இருந்தாலும் அதன் பின்னணியில் மனுதர்மத்துக்கும் மனித தர்மத்துக்குமான போராட்டமே மறைந்திருக்கும்.மூன்று சதவிகிதமே உள்ள ஒரு பிரிவினர் முழு தேசத்தையே முடக்கிவைக்க முடியுமா? என்று கேட்கலாம். எவ்வளவுதான் அறிவும் ஆற்றலும் உள்ள இனமாக இருந்தாலும் அது பண்பாடுள்ள இனமாக இருந்தால் எதிரிகள் அதை எளிதில் வெற்றி கொண்டுவிடுவார்கள் என்பதுதான் வரலாறு.வரலாற்றாசிரியரும் தத்துவ மேதையுமான ராகுல சாங்கிருத்தியாயன் எழுதுகிறார்.

‘‘முரடர்களும் சண்டைப் பிரியர்களுமான ஜெர்மானியர்கள், நாகரிகமும் பண்பாடும் மிகுந்த ரோமானியர்களையும் கி.பி. நாலாம் நூற்றாண்டில் அழித்து விட்டார்கள். அதைப் போலவே ஆரியர்களும் சிந்து நதி தீரத்தில் வாழ்ந்திருந்த மக்களைத் தோற்கடித்து தமது அதிகாரத்தை நிலை நிறுத்தினர்.’’இதோ நேரு எழுதிய ‘உலக சரித்திரம்’ நம் கண் முன்னே விரிகிறது.‘‘ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்தபோது அது ஏற்கனவே நாகரிகம் வாய்ந்த நாடாக இருந்தது. மொகஞ்ஜோதாரோவில் நமக்குக் கிடைத்திருக்கும் சான்றுகளிலிருந்து ஆரியர்களின் வருகைக்கு நெடுங்காலத்துக்கு முன்னரே இந்தியாவின் வட மேற்குப் பாகத்தில் திராவிடர்களின் நாகரிகம் மிகவும் சிறப்புற்றிருந்தது என்று தெளிவாகத் தெரிகிறது. ஆரியர்கள் புற்றிலிருந்து ஈசல்கள் புறப்படுவதுபோல் ஆசியாவின் எங்கோ ஒரு பகுதியிலிருந்து புறப்பட்டுப் பரவினார்கள்.

‘‘இந்திய ஆரியர்களையும் கிரேக்க ஆரியர்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது பல வேற்றுமைகளும் ஒற்றுமைகளும் காணப்படுகின்றன. இரண்டு இடங்களிலும் ஒருவித ஜனநாயகம் இருந்தது.ஆனால் இந்த ஜனநாயக உரிமைகள் ஆரியர்களுக்கு மட்டுமே என்பதை நாம் நினைவில் வைக்க வேண்டும். அவர்களின் (ஆரியர்களின்) கீழ் அடிமைகளாக இருந்தவர்களுக்கும் அவர் களால் தாழ்ந்த சாதிகள் என்று ஒதுக்கி வைக்கப்பட்டவர்களுக்கும் ஜனநாயகமோ, சுதந்திரமோ கிடையாது.‘‘தாங்களால் வெற்றி கொள்ளப்பட்ட மக்களிட மிருந்து பிரிந்து வாழ்வதற்காக சாதி முறையை ஏற்படுத்தியிருக்கலாம். ஆரியர்கள் தங்களைத் தவிர மற்றவர்கள் இழிந்தவர்கள் என்று கருதி இறுமாப்பும் வீண் பெருமையும் கொண்டிருந்த தோடு, மற்றவர்களோடு தாங்கள் கலப்பதையும் விரும்பவில்லை...’’நேரு மேலும் எழுதுகிறார்:

‘‘தங்களை ஆளும் அரசர்கள் ‘தவறி’ நடக்க அவர்கள் (ஆரியர்கள்) விடுவதில்லை. தவறு செய்யும் மன்னன் உடனே நீக்கப்படுவான்...’’சரி; அரசர்களின் ‘சரி’ ‘தவறு’களை முடிவு செய்வது யார்? அவர்கள்தான்.அனைத்தையும், அனைவரையும் கட்டுப்படுத்தும் உரிமை தனக்கு உண்டு என்றே அவர்களில் ஒவ்வொருவரும் நம்புகிறான்.இந்த நம்பிக்கையோடு அவன் அரசியலைக் கண்காணிக்கிறான்.கலைஞரை அவனுக்குப் பிடிக்கவில்லை; உடனே கழக அரசு கலைக்கப்படுகிறது.வி.பி. சிங்கை அவனுக்குப் பிடிக்கவில்லை; அவ்வளவு தான்; சட்டம் ஒழுங்கு கெட்டுவிடுகிறது. தேசமே தீப்பற்றி எரிகிறது.இன்று போல் அன்றும் தான். பல தமிழ் மன்னர்கள் வஞ்சத்தால் வீழ்த்தப்பட்டார்கள். மனுதர்மத்துக்குப் பயந்து ஒருவன் தன் மகனைத் தேர்க்காலில் இட்டுக் கொன்றான்.

இன்னொரு மன்னன் தன் கையையே வெட்டிக் கொண்டான்.‘நீதி’ காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காகத் தன்னையும் தன் வம்சத்தையும் வருத்திக் கொண்டவர் வரலாறுதான். திராவிடர்களின் தமிழர்களின் வரலாறு.தனக்கு எது சரி என்று தோன்றுகிறதோ, தனக்கு எது வெற்றியைத் தருகிறதோ அதுதான் ‘சரி’, அதுதான் ‘நீதி’ என்று சாதிப்பதுதான் மனுவாதிகளின் வரலாறு.சாணக்கியனின் சந்தர்ப்ப வாதங்களும், சதிகளும் ராஜ தந்திரம் அர்த்த சாஸ்திரம் - என்று கொண்டாடப்படு கிறதென்றால் அவர்களின் நீதி நேர்மை பற்றிய உச்சாடனங்களுக்கு என்ன பொருள்?ஈராயிரம் ஆண்டுகளுக்கும், மேலாக நடக்கும் இந்தக் கருத்து முரண்பாடுகளின், இனப் போராட்டங்களின் உள்ளடக்கத்தை இந்திய சமூக அமைப்பின் ஒவ்வொரு, அம்சத்திலும், ஒவ்வொரு அசைவிலும் பார்க்கலாம். இப்போது ‘நீதிபதிகளின் கௌரத்துக்காகக் குரல் கொடுக்கும் ஏடுகளும் போராட்டங்களும் கூட ‘வர்ணாஸ்ரம தர்மத்தின் அடிப்படையில் ஏற்படுத்தப் பட்டவையே!

நீதித்துறை விமர்சனத்து அப்பாற்பட்டது என்கிற பார்வை கூட சனாதன தர்மத்தைக் காக்கும் முயற்சியே! அமைச்சர் ஆர்க்காடு வீராசாமியின் விமர்சனம் நீதித் துறைக்குக் களங்கம் ஏற்படுத்தும் என்று வாதிடுகிறவர்கள் நீதி மன்றங்களின் புனிதத்தையும் கௌரவத்தையும் காப்பாற்றப் புறப்பட்டவர்கள் என்று பொருளல்ல. உண்மையில் நீதிபதிகளை மயக்குகிறார்கள்; வஞ்சகவலை விரிக்கிறார்கள்; அந்தச் சூத்திரர்களைப் பழிவாங்கு என்ற உசுப்பி விடுகிறார்கள் என்று குற்றம் சாற்றினால் அது தவறா?நீதித்துறைமீது ஒரு விமர்சனம் எழுந்து, அது தொடர்பாக ஏடுகள் கருத்துகளைப் புனைந்துருவாக்கிக் கொண்டிருக்கும் வேளையில், நீதிமன்ற, நடைபாதையில் நீதிபதிகளுக்கு மலர்ப்படுக்கைபோட்டு வரவேற்புத் தருவது நீதிபதிகளை வளைத்துப் போடும் குற்ற நடவடிக்கையாகாதா?வம்பர்களின் கொம்பு சீவும் நரித்தனத்துக்கு ஆதரவாக ஆர்க்காட்டாரின் மீதும் கலைஞர் மீதும் கடுமை காட்டும் பல முன்னாள் நீதிபதிகளும் ‘புகழ் பெற்ற’ வழக்கறிஞர்களும் ‘சோ’ குருமூர்த்தி போன்ற சட்டவியல் அறிஞர்களும் ‘மலர்க் கம்பளம்’ விரித்து நீதிபதிகளை மயக்கும் இந்தப் ‘மோகனாஸ்திரம்’ குறித்து விமர்சிக்காதது ஏன்?

ஆர்க்காட்டாரின் விமர்சனத்துக்கும், போட்டியாளர்களின் மாய்மாலத்துக்கும் அப்பால், சிந்திக்கத் தெரிந்த சாதாரண மக்களின் கேள்வி இதுதான்!‘‘ஆர்க்காடு வீராசாமி ஒரு மனுவாதியாக இருந்தால் அவருடைய பேச்சு ஏடுகளாலும் எடுபிடிகளாலும் இந்த அளவுக்கு எதிர்ப்புக்கு இலக்காகியிருக்குமா?’’ஆர்க்காட்டார் ‘அவாளாக’ இருந்திருந்தால் நீதித் துறை தாக்கப்பட்டிருக்கும்.முன்பு அளவுக்கு அதிகமாகத்தான் வீட்டிற்கு நாற்காலி வாங்கிப் போட்டார் என்பதற்காக ஒரு நீதிபதி ஏளனத்துக்கும் கண்டத்துக்கும் ஆளானார். அவர் பொதுப் பணத்தை விரயம் செய்தார் என்பதற்காக அல்ல, சூத்திரர் என் பதற்காகவே ‘கண்ணிய வான்கள்’ கூட்டத்தால் கண்டிக்கப்பட்டார்.நாட்டில் நடக்கும் சம்பவங்களிலிருந்து அறியப்படும் உண்மை என்னவென்றால், நடைமுறையில் உள்ள சமூக அமைப்பில் மார்க்ஸ் சொல்வதுபோல் நீதித்துறைப் பணியாளர்களும் கூலி உழைப்பாளர்களே!நீதிபதி என்பது ஒரு குணச்சித்திரம் - ‘கேரக்டர்’ - அல்ல; அது ஊதியம் தரும் ஒரு மேட்டிமைத்தனமான தொழில்...முரண்பாடுகளும் போராட்டங்களும் மிகுந்த ஒரு சமூக அமைப்பில் ‘மேட்டிமைத்தனமான தொழில்’ என்பது அபாயகரமானதே.

இதில் மனுவாதி மாத்திரமல்ல, அடிமட்டத்திலிருந்து வரும் சூத்திரன்கூட புனிதனாக இருக்க முடிவதில்லை.‘‘மார்க்ஸ் எழுதுகிறார்: ‘‘பழைய சமுதாயத்தின் அடி மட்டத்து அடுக்குகளிலிருந்து எறியப்பட்டுச் செயலற்று அழுகிக் கொண்டிருக்கும் சமூகக் கசடாகிய ‘அபாயகரமான வர்க்கம்’ பாட்டாளி வர்க்கப் புரட்சியால் (நாம் ‘சூத்திர எழுச்சியால்’ என்றும் சொல்லலாம் - கட்டுரையாளர்) எங்கேனும் ஒரு சில இடங்களில் இயக்கத்துக்குள் இழுக்கப்படலாம். ஆனால் அதன் வாழ்க்கை நிலைமைகள் பிற்போக்குச் சக்தியின் கைக் கருவியாய் லஞ்சம் பெற்று ஊழியம் புரியவே. மிகப் பெரும் அளவுக்கு அதைத் தயார் செய்கின்றன’’ (மார்க்ஸ் எங்கெல்ஸ் - கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை)மூலதனத்துக்குக் கீழ்ப்பட்டிருக்கும் அடிமை நிலையானது. பாட்டாளிகளை மாத்திரமல்ல, மருத்துவவரையும், மதகுருக்களையும், கவிஞர்களையும் கூட ஆசையின் பின்னே ஓடு கிறவர்களாய் மாற்றிவிடுகிறது. மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையே அப்பட்டமான ‘பணப்பட்டு வாடா’வைத் தவிர வேறு ஓட்டுமில்லை உறவும் இல்லை என்று ஆக்கிறது.

சமயத்துறைப் பக்திப் பரவசம், பேராண்மையின் வீராவேசம், சிறுமதியோரது உணர்ச்சிப் பரப்பு ஆகிய ‘புனிதப் பேரானந்தங்களை’ எல்லாம் தன் னலக் கணிப்பெனும் உறை பனிக்குளிர் நீரில் மூழ்கடித்துவிட்டது... சுருங்கச் சொல்வதெனில் சமயத்துறைப் பிரமைகளாலும், அரசியல் பிரமைகளாலும் மூடி மறைக்கப்பட்ட, சுரண்டலுக்குப் பதிலாக வெட்க உணர்ச்சியற்ற அம்மண மான, நேரடியான, மிருகத்தனமான சுரண்டலை நிலை நாட்டியிருக்கிறது.வெட்க உணர்ச்சி தேவையற்ற ஒரு சமூகத்தில் யாரையும் விலைக்கு வாங்கலாம். நீதிபதிகளும் இதற்கு விலக் கானவர்கள் அல்லர்.இங்கே லஞ்சம் கொடுத்தால் நீதியை விலைக்கு வாங்கலாம் என்று நிரூபணம் ஆகியிருக்கிறதே! ரூபாய் முப்பதாயிரம் லஞ்சம் வாங்கிக் கொண்ட ஒரு நீதிபதி இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமையே கைது செய்யும் படி ஆணை பிறப்பித்தாரே! இந்த லஞ்ச விவகாரம் நாடெங்கும் கேவலமாய்ப் பேசப்பட்டு காறித் துப்பப்பட்டதே! நீதியின் காவலர்கள்’ புனிதப் போராளிகள் - யாரும் வெட்கித் தலை குனிந்து தற்கொலை செய்து கொள்ளவில்லையே!லஞ்சம் வாங்கிக் கொண்டு ஒரு நீதிபதி குடியரசுத் தலைவரைக் கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிப்பது இவர்களுக்கு ஒரு சாதாரண நிகழ்வு. நீதித்துறையின் மீது மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்படுத்தும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் வெளிவரக் கூடாத அசம்பாவிதங்கள்; அவ்வளவுதான்.இதுபோன்ற சம்பவங்களில் ரகசியம் காப்பாற்றப்பட்டு திடும்என ஒரு நாள் கைது செய்யப்பட்டிருந்தால் நமது உளவுத்துறை, காவல் துறை, நீதித்துறை அனைத்துக்கும் விழா நடத்தியிருப்பார்கள். அடடா, எத்தனை ஏமாற்றம்!இந்து சாம்ராஜ்யம், ராம ராஜ்யம், அகன்றபாரதம் என்றெல்லாம் இவர்தம் பரிவாரங்களுக்கு எத்தனை கனவுகள்! இந்தக் கனவுகளைக் குத்திக் கிழிக்கும் முட்களாக எத்தனை தொந்தரவுகள்!மனுதர்மத்துக்கும், சாணக்கியன் சபதத்துக்கும் விரோதமாகக் குடியரசுத் தலைவர், பிரதமர், முதல்வர் போன்ற உயர் பதவிகளில் சூத்திரர்களும் இஸ்லாமியர்களும் இருக்கலாமா?

‘‘எத்தனை சூழ்ச்சிகள் செய்தாலும், எத்தனை முறை ஆட்சியைக் கவிழ்த்தாலும் இந்த இராவணன் கலைஞர் பீனிக்ஸ் பறவையாய் எழுகிறானே...’’ இந்த ஆற்றாமைக் குரூரத்திலிருந்து கிளம்பும் சனாதனக் சகிப்பின்மை தான் இவர்களின் எழுத்தில், பேச்சில், பொங்கி வழிகிறது.அவர்கள் அறியாததா?நமது நீதித் துறையின் செயல்பாடுகள் குறித்து நீதிபதிகள் மனநிறை வுடன்தான் இருக்கிறார்களா?

தன் வாழ்நாளில் ஒரே ஒருமுறையாவது நீதித் துறையின்மீது கண்டனம், அல்லது வருத்தம், அல்லது திருப்தி தெரிவிக்காத நீதிபதி உண்டா?நீதித்துறையில் ஊழல் மலிந்துவிட்டது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகளே வருந்தியிருக்கிறார்கள்.முல்லை பெரியாறு நதிநீர் வழக்கில், காவிரி நதிநீர் வழக்கில் நீதிமன்றத் தீர்ப்பு கேலிக்குரியதானது; பகிரங்கமாக மீறப்பட்டது. அந்த நீதிபதிகளின் உருவப் பொம்மைகள் எரிக்கப்பட்டன. நீதி மன்றத்தில் என்ன செய்ய முடிந்தது? போக்கிரிகள் நினைத்தால் நீதித்துறையை மீற முடியும் என்று நிரூபிக்கிறார்கள்.வலுத்தவன் ஜெயிப்பான் என்பதுதான் ‘கட்டப் பஞ்சாயத்தின்’ விதி.இம்மாதிரியான போக்குகள் தலைதூக்குமானால், நீதிமன்றங்களுக்கும் கட்டப் பஞ்சாயத்துக்கும் வித்தியாசம் இருக்காது. நீதிமன்றங்கள் கட்டப்பஞ்சாயத்தின் நிலைக்கு மாறக் கூடாது என்பது தவறா?

-இளவேனில்
ஆண் நாவிதர்களின் எதிர்ப்புகளை மீறி திருப்பதியில் பெண் பக்தர்களுக்கு மொட்டை போட 20 பெண் நாவிதர்களை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் நியமித்துவிட்டது. சாரதாபீடத்தின் தலைவர் சுவருபானந்தா உட்பட பல பார்ப்பனர்கள் ஆகமத்துக்கு எதிரானது என்று எதிர்த்தார்கள். மடாதிபதிகளும் சுவாமிஜிகளும் விமானத்திலும்இ குளிரூட்டப்பட்ட பேருந்துகளிலும் பயணம் செய்கிறார்களே; இதை எந்த ஆகமம் அனுமதிக்கிறது என்று கேட்டார் நாவிதர் சங்கத் தலைவி ராதாரவி! தமிழ்நாட்டில் இதுவரை பெரியார் இயக்கங்கள் எழுப்பிய கேள்விகள் - இப்போதுஇ பல்வேறு முகாம்களிலிருந்து ஒலிக்கத் துவங்கியுள்ளது.

பிரிட்டனில் - அயிஷா ஆஸ்மி என்ற முஸ்லீம் பள்ளி ஆசிரியை வகுப்பில் முகத்தை ‘பர்தா’ போட்டு மூடிக் கொண்டு பாடம் நடத்தியிருக்கிறார். தனது பர்தாவை வகுப்பறையில் நீக்க மறுத்துவிட்டார். அதற்காக அவர்இ தற்காலிக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். முஸ்லீம் பெண்கள் பர்தா அணிவதுஇ அவரவர் விருப்பம். அதை மதத் தலைவர்கள் கட்டாயப்படுத்தக் கூடாது என்று அகில இந்திய முஸ்லீம் மதச் சட்டங்களுக்கான வாரியம் முடிவு செய்துள்ளது. இது பற்றி முஸ்லீம் மதகுருமார்களிடையே கருத்து வேறுபாடுகள் உண்டு என்று வாரியத்தின் அதிகாரபூர்வ பேச்சாளர் குயாசிம் ரசீல்இ ‘அவுட் லுக்’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். வடமாநிலங்களிலும்இ வடகிழக்கு மாநிலங்களிலும் கிராமப்புற முஸ்லிம் பெண்கள்இ தினக் கூலிகளாகவும்இ உழைப்பாளிகளாகவும் இருக்கிறார்கள். அவர்கள் பர்தாவை அணிந்து கொண்டு வேலை செய்ய வேண்டும் என்று எப்படிக் கட்டாயப்படுத்த முடியும்? என்பது நியாயமான கேள்வி.

இசுலாம் மார்க்கத்தின்படிஇ பர்தா அணிவது கட்டாயமில்லை என்று சமூக சீர்திருத்தவாதியும்இ சிறந்த நடிகையுமான சப்னா ஆஸ்மி கூறினார். இதற்கு அவர் எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியிருந்தது. சீக்கிய இளைஞர்களிடமும் தலைப்பாகை அணியும் மதப் பழக்கம் குறைந்து வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் கிராமப்புறங்களில் - 80 சதவீத இளைஞர்கள் முடிவெட்டி கிராப் வைத்துக் கொள்வதாக சீக்கியர்களின் மதத் தலைமை அமைப்பான சீரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டித் தலைவரே கூறுகிறார். இந்த மத அடையாளங்களில் பெண்ணடிமையும்இ மூட நம்பிக்கைகளும் - வசதிக் குறைவுகளும் அடங்கியுள்ளன. ஆனால்இ பார்ப்பனர்கள் இன்னமும் தங்களின் மத அடையாளம் என்று கூறிக் கொண்டு ‘பூணூல்’ போட்டுக் கொண்டு பார்ப்பனரல்லாத ‘இந்துக்களை’ இழிவுபடுத்துகின்றனர். அதாவது தன்னை ‘பிராமணன்’ என்று பிரித்துக் காட்டுகிறார்கள்.

பெரியார் கூறிய உதாரணத்தைக் கூற வேண்டுமானால் ஒரு வீதியில் - ஒரே ஒரு வீட்டில் மட்டும்இ ‘இது பத்தினியின் வீடு’ என்று பெயர்ப் பலகை எழுதி மாட்டுவது போல்தான்இ பார்ப்பனர்கள் பூணூல் போடுவதும். அப்படியானால் அதே வீதியில் உள்ள ஏனைய வீடுகள் ‘தாசிகள்’ வீடு என்று தானே பொருள்?

“பிராமணர்களின்” தாசி புத்திரர்கள்தான் சூத்திரர்கள் என்று தான் - மனுதர்மமும் கூறுகிறது! பர்தாஇ தலைப்பாகை பற்றி எல்லாம் விவாதித்து வரும் பார்ப்பனர்கள் பார்ப்பன எடுகள் அவர்களின் ஆசிரியருக்குக் கடிதப் பகுதிகளில் ‘பூணூல்’ போடுவதை மட்டும் விவாதத்துக்கே உட்படுத்த மறுப்பதை கவனிக்க வேண்டும்! பூணூல் அறுப்பு தொடங்கினால்தான் பிரச்சினை விவாதத்துக்கு வருமோ?

நன்றி கீற்று இணையதளம்

ஆன்மீகமும் ஆரியர்களும்

ஒரு சாரரில் உள்ள பிரபலமானவர்களை தாக்கி எழுதினாலே தெரிந்து விடும் அவர் எச்சார்புடையவர் என்று. இத்தமிழ்மணத்தில் யாரும் எச்சார்பினரையோ அதில் பிரபலமானவர்களையோ தாக்கி எழுதுவதே கிடையாது. பார்ப்பனர்களைத் தவிர!

எச்சார்பினரிலும் தீவிரவாதம், மிதவாதம் மற்றும் வாதமின்மை என்ற மூன்று வகையுண்டு. தீவிரவாதிகள் அடித்துக்கொன்டு நாறுவதைத்தான் நாம் அன்றாடம் பார்க்கின்றோமே. அந்த தீவிரவாதத்தைதான் பார்ப்பனர் எதிர்க்கின்றீர்கள் என்றால், ஆன்மீகம் மற்றும் ஆன்மீக வாதிகளின் வெட்க்ககேடான செயல்களையும் சொல்லலாமே. காஞ்சி காமகேடி சுப்பிர மணி செய்யாத லீலைகளா? அதனை ஏன் இந்த பார்ப்புகள் எழுதுவது இல்லை? தமிழ்மணம் தீவிரவாதிகளுக்கானது அல்ல என்றுதான் நானும் சொல்வேன்.
உலகத்தில் பகுத்தறிவு இயக்கம் இறக்கவில்லை. இறைவனை அடைவதற்கு எந்த ஒரு பார்ப்பன இடைத்தரகரும் எங்களுக்கு தேவையில்லை என்பதை மக்கள் நன்றாக உணர்ந்து விட்டனர். அதன் விளைவாகத்தான் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம், கோவிகளில் தமிழ் பூசை போன்ற ஆரம்பங்கள். உண்மையில் பகுத்தறிவு என்பது என்ன? பெரியாரின் பகுத்தறிவுக் கருத்துக்களில் நான் உணர்ந்து கொண்டது இதுதான்.
உன் மனத்தில் தோன்றுவதை, சரியென்று நினைத்தால், தைரியமாக செய், உன்னை அமுக்க நினைத்து, யாராவது சொல்லும் வேத புருடாக்களை நம்பாதே. யார் சொல்வதையும், பகுத்து அறிந்துகொள். போலியான தகவல்கள் மூலம், தன்னை பெரியாளாக காண்பித்து தவறான முறையில், உன்னை ஆட்கொள்ள நினைப்பவர்களின் பிரசங்கங்களையும், செயல்களையும் பகுத்து அறிந்துகொள்.
தன்னிகரில்லா தமிழர் பண்பாட்டினையும் அவர்கள்தம் உணர்வினையும், காக்கும் தீச்சுவராகத்தான் பெரியாரையும், கருனாநிதியையும் நாங்கள் இன்று பார்க்கின்றோம்.இதுதான் எங்களுக்கான இறை நம்பிக்கை.

கண்டிப்பாக இறை நம்பிக்கை ஒரு மனிதனுக்கு வேண்டும். மனிதனை நல்வழிப்படுத்துவதில் இறை நம்பிக்கை இன்றியமையாத பங்கு வகிக்கின்றது, ஆனால் அந்த இறைநம்பிக்கை இயல்பாக இருக்க வேண்டும். மனமுவந்து செய்யும் செய்யும் காரியங்களை தடை செய்ய பார்ப்பனர்களான இவர்கள்யார்? இப்படித்தான் செய்யவேன்டும், இந்த மொழியில் செய்யக்கூடாது என்று தடைபோட இவர்கள் என்ன இறைத்தூதர்களா?.
உழைக்கும் மக்கள் கடவுளை ஒரு எட்டாக் கனியாகவே பார்க்கவில்லை. தனக்கு பிடித்ததையெல்லாம் இறைவனுக்கு படைத்து மகிழ்ந்தான். தான் குடிக்கும் கள், தான் உன்னும் புலால் அனைத்தையும் கடவுளுக்கு ஆசையோடு கொடுத்து மகிழ்ந்தான். அதை சட்டம் போட்டு தடுக்கப்பார்த்தனர்.

மக்கள் நல்ல பதிலடி கொடுத்தார்கள்.
99.99 சதவிகித மக்கள் , இறை நம்பிக்கை உடையவர்கள்தான். அவர்கள் அனைவரும் அய்யா பெரியாரை எதிர்க்கவில்லை.
0.001 சதவிகித பார்ப்பன மக்கள் மட்டும்தான், பெரியாரையும், அவர் கருத்துக்களையும், தொண்டர்களையும் வெறுக்கின்றனர். திமுக, திக, இவர்களுக்கு ஓட்டுப்போடும் எல்லோரும் இறைநம்பிக்கை இல்லாதவர்கள் என்றா நினைக்கின்றீர்கள்? தவறு, திமுக, ஓட்டுப்போடும்
99.99 சதவிகிதத்தினர் மற்றும் திகவை ஆதரிக்கும்
99.99 சதவிகிததினர் இறைநம்பிக்கை உள்ளவர்களே.பெரியாரை போன்று ஆயிரம் பேர்கள் வந்தாலும், தமிழனை இனி தட்டியெழுப்புவது கடினம்தான். அந்த அளவுக்கு அமுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு தூக்கத்தில் ஆழ்த்தப்பட்டு இருக்கின்றான் மனிதன். இந்த அளவுக்கு பெரியார் செய்ததினால்தான் கொஞ்சமாவது சூடு சொரணை வந்திருக்கிறது நம் மக்களுக்கு.
ஆன்மீகவாதிகள் சாதித்தது என்ன? பெரியார் சிலையை உடைத்தனர். பெரியார், கருனாநிதி, வீரமனி, டாக்டர் ராமதாஸ், திருமாவளவன் கருத்துக்களை இழிவாக பேசினர். தலைவர்களுக்கு சிலை வைப்பதை முட்டாள் தனம் என்கிறார்கள்.தலைவர்களுக்கு மாலையிடுவதை முட்டாள் தனம் என்கிறார்கள். வேறு என்ன தெரியும் இந்த மிருகங்களுக்கு?
திராவிடர்கள் தங்கள் உழைப்பாலும் நல்ல மந்ததலும் தங்கள் வாழ்க்கையில் மேல்நோக்கிச் சென்று கொண்டே இருக்கின்றனர். உங்களளப் போன்ற பாப்பான்களை நாங்கள் தீண்டத்தாகதவர்கள் என ஆக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. நீயே திருந்தினால் உண்டு. நாங்களாக திருத்தினால் நிச்சயம் அந்நிலை உருவாகும்

தர்மயுத்தம்



எமது திசைவழியையும்
தந்திரோபாயங்களை உறுதி
செய்வதற்கு எதிரியின்
மூலோபங்களை முதலில் சரியாக
அடையாளம் கண்டிருக்க
வேண்டும். தந்திரோபாயங்கள்
குறித்து எப்போதும் விழிப்பாக
இருக்க வேண்டும். ஒரு சிவில்
யுத்தத்தின் போது, எதிரி
பொதுவாக தனித்தனியாக
குழுக்களை பிரித்தழிக்க முனையும்
அதே வேளை தனிநபர்களாகவும்
கையாளும். எதிரியின் இந்த
முயற்சிக்கு வாய்ப்பான சூழல்
குறித்து நாம் எப்பொழுதும்
ஆராய்ந்தவண்ணமிருப்பது
அவசியமாகும். மக்கள் பலம்,
விநியோகம், போக்குவரத்து,
தொடர்புமுறை, போர்க்கருவிகள்,
வழிநடத்தக்கூடிய தலைமை
போன்ற அனைத்துமே இந்த
வாய்ப்பான சூழலுக்குள்
அடக்கலாம். எமது இறுதி
இலக்கை நோக்கிய
பயணத்திற்கென எமது
ஆராய்வுக்கு கிட்டிய எமக்கேயுரிய
போர்த்தந்திரோபாயங்களை
நாங்கள் வகுத்துக்கொள்ள
வேண்டும்.

(கெரில்லா போர் முறை பற்றிய
நூலில் சே குவேரா) இப்போது நடக்கும் "போலி"ச் சண்டைகளை பார்த்தபோது காரணமின்றி நினைவுக்கு வந்ததில்


மேலிருக்கும் பின்னூட்டம் பாருங்கள் அப்படியே கேட்டிருக்கும் கேள்வியையும் பாருங்கள்
விடாது கருப்புவும் இன்ன பிற திராவிட நண்பர்களும் பிராமணீயம் பற்றி கடின வார்த்தைகள் கூறி விமர்சிப்பதில் தவறென்ன உள்ளது? மகாத்மா காந்தியை தேசத் தந்தை என்பதுவும் நேருவை மாமா என்பதும் ..... இவ்வளவு ஏன் ஜெயலலிதாவை அம்மா என்பதும் இதுபோன்ற உறவுமுறைகளால் தானா?

படத்தின் மேல் சுட்டி பெரிதாக பாருங்கள்

பின்னூட்டம் இடம்பெற்ற பதிவின் சுட்டி இது
ஆகஸ்ட் மாதத்தில் ஓலைச்சுவடி இதழில் அந்த அதிசயம் நிகழ்ந்தது. ஆனால் அதன் தேதியைத் துல்லிதமாகச் சொல்ல முடியவில்லை. ஆகஸ்டின் முற்பகுதியாகத்தான் இருக்க வேண்டும். அருமையான அச்சு வார்ப்புள்ள அந்த இதழில் அந்தக்கதை தோற்றம் பெற்றிருந்தது. மிகுந்த உயிர்த் துடிப்புடன் இருந்தது அந்தக் கதை. அதன் நடை சுண்டி வசீகரிக்கும் அழகு. அந்தக் கதையை முதன் முதலில் படித்தவர்கள் அது ஒரு பெரும் மாயத் தோற்றம் என்றும் அதன் பின் பெரும் மர்மங்கள் அடங்கியிருப்பதாகவும் நம்பினார்கள். மிகவும் படித்தவர்களும் இலக்கிய ரசிகர்களாக உள்ளவர்களையுமே அந்தக் கதை கவர்ந்தது. அந்தக் கதையைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிலர் தங்கள் காலண்டர்களைத் திருப்பிப் பார்த்துவிட்டு அந்தக் கதை வெளிப்படுவதற்கு இது சிறந்த மாதமே என்றார்கள். இந்த மாதத்தில்தான் பல காலனித்துவ நாடுகள் சுதந்திரம் அடைந்ததெனவும், அதுவும் பல சுதந்திரங்கள் நள்ளிரவில் பெறப்பட்டன என்றும் அதற்கும் இதற்கும் மிக நெருக்கமான தொடர்புகள் உள்ளன என்றும் அவர்கள் தங்கள் இளைய தலைமுறையினருக்கும் வாசக சகாக்களுக்கும் தெரிவித்துக் கொண்டார்கள். சிலர் அந்தக் கதையைப் படித்து கண்கள் கலங்கினார்கள். இப்படியும் ஒரு கதை இருக்க முடியுமா என அழுது குரல் கம்மிப் பிறருக்குச் சொன்னார்கள். அவர்கள் கண்கள் கதையில் நிலைகுத்தி இருந்ததோடு படபடக்கும் மார்பை வலது கைகளினால் அழுத்திப் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.

நாளுக்கு நாள் அதைப் படிப்பவர்கள் அதிகரித்துக் கொண்டே இருந்தார்கள். அடைபட்ட கால்வாயினால் வெள்ளம் வீதியில் பெருக்கெடுப்பதுபோல் இண்டு இடுக்கிலுள்ள வாசகர் குழாத்திடையே செய்தி பரவியது. வாசகர்கள் பதறியடித்துக் கொண்டு ஓலைச்சுவடி இதழை வாங்கிப் பார்க்க ஓடினார்கள். அவர்கள் ஓடிய வேகம் சாலை விபத்தைக் காண ஓடுபவர்களின் வேகத்தை ஒட்டியதாக இருந்தது. மோட்டார் சைக்கிள்களிலும் கார்களிலும் விமர்சகர்களும் இலக்கிய இதழ் துணையாசிரியர்களும் பெரும் பாய்ச்சலாக வந்துகொண்டிருந்தனர். எப்படி அவர்களுக்கு அதற்குள் வாசம் எட்டியது எனத் தெரியவில்லை.

"ஐயா, கதையைப் படிப்பதை நிறுத்திவிட்டுக் கொஞ்சம் எங்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்" என்று வாசகர்களைப் பார்த்து விமர்சகர்கள் கேட்டுக் கொண்டிருந்தனர். இந்தக் கதையை முதன் முதலாகப் படிக்கக் கொடுத்துவைத்தவர் யார் என்ற தேடலும் கிளம்பிற்று. கண்கள் கலங்கி உடல் வியர்த்திருந்த ஒரு தீவிர வாசகர் அவர்கள் கேள்விகளுக்கு பதில் சொல்லுகையில் அவரது சொற்களில் தானியங்கியாகக் கற்பனையின் ஜிகினாத் துகள்களும் உயர்ந்த செண்ட் வாசனையும் வரத் தொடங்கின. தன்னால் இவ்வாறு கற்பனா வளத்துடன் வருணிக்க முடிவதை எண்ணி அவருக்குப் பெருமிதம் பொங்கிற்று. சொல்தடுமாற்றத்துடன் மட்டுமே பேச முடிந்த அந்த இளம் வாசகர் இதனால் சிறுவயது முதலே தனக்கு இருந்து வந்த பேச்சுத் தயக்கத்தை மறந்தவராகப் பேசினார். பேச்சு அவருக்குச் சரளமாக வர ஆரம்பித்தது. அவரது பேச்சில் தீர்மானமும் நிச்சயமும் தன்னம்பிக்கையும் இருந்தன.

அவருக்கும் ஆச்சரியமாகத்தான் இருந்தது. ஏன் இத்தனை பேர் இப்படி ஆர்வமாகக் கேட்கிறார்கள்? அவர்கள் படிக்க முடிந்த விடயம்தானே? அதையும் நான் ஏன் விவரித்துச் சொல்ல வேண்டியிருக்கிறது? நான் சொல்வது அத்தனையும் அடுத்த மாதம் எல்லா இலக்கிய இதழ்களிலும் வரப் போகிறதா?

விமர்சகர்கள் அவர்களின் தொழில் தந்திரப்படி அரும்பு விட்டுக்கொண்டிருந்த வாசகரின் கற்பனைகளை நுட்பமான கேள்விகள் வழியாக இதழ் மலர்ச் செய்துகொண்டிருந்தனர். அவர்கள் உருவாக்க விரும்பும் கருத்துக்களை அவர் வாய்வழியே வரவழைக்க முடிந்துவிட்டது அவர்களுக்கு வெற்றிதானே! ஒரு பிரபல இலக்கியப் பத்திரிகையின், பிடரி முடிவளர்த்திருந்த ஒரு இளம் விமர்சகர் - அவரை ஏன் சக விமர்சகர்கள் 'கூகை' என அழைக்கிறார்கள் என்பது தெரியவில்லை - ஆங்கிலத்தில் கேட்டார்: "ஐயா, நீங்கள் முதன்முறையாக இதைப் படித்தபோதும் இதன் கரு இப்படித்தான் மறைந்திருந்ததா?" திடீரென வாசகருக்கும் தனக்குத் தெரிந்த ஆங்கில மொழித் திறனைக் காட்ட வேண்டும் என்னும் ஆவல் உண்டாயிற்று. அவர் தன் தொண்டையைக் கனைத்தபடி ஆங்கிலத்திலேயே பதில் சொன்னார்: "Yes, it is as opaque as a deep coat of tar." இந்த பதிலில் விமர்சகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். அவர் ஆங்கிலத்தில் பேசியது நம்பகத் தன்மைக்கு அதிகப்படியான ஒரு சான்றாகவும் அவர்களுக்குத் தோன்றியது.

அந்தக் கதையின் உச்சம் ஒரு முழுமையான மறைவுதான் என்பது எல்லா மனங்களிலும் பட்டது. மிகுந்த விட்டம் கொண்ட ஒரு இதழில் அக்கதை தன் மொழியை மட்டும் வெளிப்படையாகக் காட்டி நின்றது. சிரியரின் மொழித்திறன் அந்த அளவுக்குத்தான் அவருக்குச் சுதந்திரம் அளித்திருந்தது போலிருக்கிறது.

இறைவா, அந்த மறைவு, படைப்புத் தன் சிகரத்தைக் கண்ட வெற்றியில் கெக்கலித்துக் கொண்டிருக்கிறது. அதன் சிறப்பு அதன் கெட்டியும் திடத்தன்மையும்தான். புரிதல் என்னும் வெளிச்சம் ஊடுருவ முடியாத கருமைதான் அதை ஸ்திரப்படுத்தியிருக்கிறது. பாம்புகளின் கண்களின் கருமையையொத்த ஓர் உண்மையை முற்றாக மறைத்துக் கொண்டு அந்தக் கதை நெருங்கத் துடித்துக் கொண்டிருக்கும் புரிதலை அண்ட விடாமல் காத்தது.

கதை வெளிவந்த முதல் சில நாட்களிலேயே ஓலைச்சுவடிப் பிரதிக்குக் குவியத் தொடங்கிய கூட்டம் தடித்துக் கொண்டே வந்தது. அதன் அடர்த்தியைச் சமாளிக்க முடியாமல் அனைவரையும் கொடுக்குப் பிடித்து நிற்க வைக்கும் முயற்சியும் தோற்றது. அலையலையாகப் பிரதிகள் லாரிகளில் வந்து குவிந்தும் பலர் பொறுமை காக்க முடியாமல் பிடுங்கிக் கொண்டு ஓடினர். பல பிரதிகள் இழுபறியில் கசங்கிக் கிழிந்தன.
புத்தகக் கடைகளுக்குக் காவல் துறையினரின் உதவி தேவைப்பட்டது. எனினும் அவர்களின் வாகனங்கள் கூட்டத்தை நெருங்க முடியாமல் தெருவிலேயே நிறுத்தி வைக்கப் பட்டன. திரண்டு வந்த கூட்டம் காவல்துறையினரை மதிக்காமல் தள்ளிக் கொண்டு முன்னேறிக் கொண்டே இருந்தது. விமர்சகர்கள் தங்கள் குறிப்புக்களில் இந்தச் சூழல்களையும் குறித்துக் கொண்டனர். விமர்சனம் என்பது உணர்ச்சி பொங்காது எழுதப்படவேண்டும் என்னும் விதியை அறிந்தவர்களாக இருந்தாலும் இந்தச் சூழலின் உணர்வுகள் அவர்களைத் தாக்குவதை அவர்களின் நாளைய எழுத்துப் பிரதிபலிக்கும் என்றே தோன்றியது.

வாசகர் கூட்டம் என்பது விரிவடைந்துகொண்டே போனது. மாணவர்கள், ஜேப்படித் திருடர்கள், சிரியர்கள், திரைப்படத் துறையினர், எத்துவாளிகள், அரசியல்வாதிகள், குண்டர்கள், சாமியார்கள், வியாபாரிகள், முடிச்சுமாறிகள், எழுத்தாளர்கள், வேசிகள், ஓவியர்கள், தொழிலாளர்கள், மாணவிகள், சகல ஊடகங்களையும் சார்ந்த பணியாளர்கள்... யார்தான் அங்கில்லை? அரசாங்கச் சேவகர்களும் கோப்புகளுக்குச் சிவப்பு நாடா கட்டி வைத்துவிட்டு விரைந்து வரத் தொடங்கினர்.

பார்க்கப் பார்க்க அந்தக் கதை ஒரு பிரமைதானோ என்ற சந்தேகம் பலர் மனங்களிலும் முளைத்து வலுப்பட்டு வந்தது. திடத்தன்மை கொண்ட நீரும், இருளும், கரு மேகங்களும் முடை நாற்றமுடைய காற்றும் கல்லும் இணைந்து ரசாயன மாற்றத்தால் இந்தக் கதை உருவாக்கப்பட்டதோ என்று அவர்கள் சந்தேகம் கொண்டனர். இந்தச் சந்தேகம் அடக்கி வைத்துக் கொள்ள முடியாத மன அரிப்பானபோது இவை பற்றிய பேச்சுக்கள் தொடங்கின. இந்தப் பேச்சு பரவத் தொடங்கியதும் அவர்கள் சொன்னவற்றை ஏற்றுக் கொள்ளாதவர்கள் அவர்களுக்குக் கத்தி பதில் சொல்லத் தொடங்கினர். ஒரு காகிதத்தின் மேல் இத்தனைக் கெட்டியான கதையை உருவாக்க முடியுமா என அவர்கள் கேட்டனர். ஆம்! அந்தக் கதையின் கனம் அவ்வப்போதாவது கைகளில் தாங்க முடியாத அளவுக்குக் கனக்கத்தான் செய்தது. தொடர்ந்து கைகளில் தாங்கியிருந்தால் அது கனம் அதிகரித்தும் குறைந்தும் துடிப்பதும் உணரப் பட்டது. அதன் கனபரிமாணம் பற்றி வாதங்கள் வெடித்தன. கத்துதலும் சலசலப்பும் ஏற்பட்டன. அந்தச் சலசலப்பு கைகலப்பாக மாறலாம் என்ற செய்தி வெட்டவெளியில் அச்சுறுத்துவதுபோலப் பரவிற்று
.
ஆனால் அந்தக் கனத்துக்கும் அதில் ஒளிந்துள்ள மறைவுண்மைக்கும் யாராலும் விளக்கம் கொடுக்க முடியவில்லை. உளவியல் அறிஅர் ஒருவர் தான் சொல்வது ஒரு ஊகம்தான் என்னும் முன்னுரையுடன் தன் மாணவர்களுக்கு விளக்கம் தந்தார். இப்படி மறைந்துள்ள ஒரு பொருளுக்கு வாசகர்கள் இப்படி சைப்படுவது ஏன் என்பது அந்தக் கதாசிரியருக்கே ஒரு புரியாத புதிராக இருக்கலாம். இப்படி ஒரு கூட்டம் மறை பொருளை எண்ணிக் கலவரப் படுவது சிரியருக்கு மிகப் பெரிய கேள்வியாகி அது பூதாகரமாக வளர்ந்திருக்கலாம். இதை மனதில் கொண்டு இந்த மக்களுக்கு ஒரு மறை பொருளைத் தெரிந்து கொள்ளும் சை இப்போதுதான் முதன் முறையாகத் தோன்றியிருக்கிறது என்ற தவறான எண்ணத்திற்கு அவர் வரலாம். அந்த ஆசிரியர் மனதில் என்னென்ன எண்ணங்கள் ஓடுகின்றன என்பதை யாராலும் துல்லியமாகச் சொல்ல முடியாது என்று தன் பேச்சை முடித்தார் பேராசிரியர்.

இலக்கிய இதழ்கள் அன்றி நாளிதழ்களும் சினிமா இதழ்களும் பொழுது போக்கு இதழ்களும் காட்டிய ஆர்வத்தில் அந்த அலுவலகங்களில் பதற்றம் கூடிக்கொண்டே போயிற்று. தொலைபேசிகள் இடைவிடாது இயங்கிக் கொண்டிருந்தன. சகல இதழ்களின் நிருபர்களும் குறைந்தது நான்கு பக்கத்திற்கு இதைப்பற்றிய ஸ்டோரி எழுதுமாறு பணிக்கப்பட்டார்கள். அவர்கள் அனைவரும் கதையைப் பத்திபத்தியாகப் பிரித்து அவற்றுள் ஒளிந்துள்ள பொருளுக்கு சமூக/ அறிவியல்/ உடற்கூறு/ ஜோதிட/ இலக்கிய அறிவுறுத்தல்கள் என்ன என்பதைப் பின்னிப் பின்னி எழுதிக் கொண்டிருந்தனர். இதை சிரியர்கள் படித்து ஓகே சொல்லவேண்டும். ரசம் ஊறியது காணாதென்று சிரியர்களுக்குத் தோன்றிவிட்டால் மீண்டும் முழுமையாக எழுதிவிடும்படி கிவிடும்.

ஆசிரியர்களுக்கு இதுபோன்ற ஒரு நாள் விடிந்ததே இல்லை. அவர்களுடைய மூளைகள் கொதித்துக் கொண்டிருந்தன. தமிழ் இலக்கிய வரலாற்றில் என்றும் நிகழ்ந்திராத அதிசயம் இன்று தேடி வந்திருக்கிறது. அதனைப் படிக்கக் கொடுத்து வைத்திருக்கிறார்கள் தமிழ் மக்கள். நாளை உலக இதழ்கள் அனைத்திலும் இக்கதை வெளிவரும். அதனைச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளுவது ஒரு சிரியனின் திறனைப் பொறுத்தது; கற்பனையைப் பொறுத்தது. வாய்ப்பு வாசலில் வந்து நிற்கிறது.

மறைப்பு பெரிய விடயமில்லை. ஆனால் அதன் கனமும் இருண்மையும். அந்த அபூர்வ நிலைமைதான் ரத்தத்தைச் சூடேற்றுகின்றது. ஆக அதுதான் ஸ்டோரியின் மையம். இதில் விமர்சகர்களுக்குக் கருத்து வேற்றுமை இல்லை. எப்போது மறைவு மையம் கொண்டுவிட்டதோ அப்போதே அந்த ஸ்டோரிக்குக் கருத்துப் படிமம் எழுத்தைவிட முக்கியமாகிவிடுகிறது. ஆனால் இந்தப் பார்வையில் விமர்சகர்களுக்குக் கருத்து வேற்றுமை இருந்தது. கருத்துப் படிமம் முக்கியம் என்றாலும் எழுத்துத்தான் அதிக ரசத்தை உறிஞ்சும் திறன்கொண்டது என்று அவர்கள் அன்றாடம் சந்திக்கும் பாரில் விவேகமான சில விமர்சகர்கள் வாதிட்டிருக்கிறார்கள். வாழ்க்கையின் சகல மன இயற்கைகளையும் சகல மனப் பிறழ்வுகளையும் பச்சையாகச் சித்திரிக்கும் மாத நாவல்களை விடவும் இடுக்குகளில் கற்பனைத் திறன் கொழிக்கும் தட்டையான எழுத்துக்கள் ஏன் அதிக விமர்சனப் பாராட்டுக்கள் பெறுகின்றன என்று அவர்கள் கேட்டதற்கு யாராலும் பதில் சொல்ல முடியவில்லை.

படைப்பைப் படித்த பலர் - முக்கியமாக இளைஞர்கள் - படைப்பாளரை நோக்கிப் பல கேள்விகளைக் கேட்டார்கள். அவருக்குப் புரியும் மொழி எதுவாக இருப்பினும் அந்தப் பெருங் கூட்டத்தில் அதையும் கற்றுத் தேர்ந்தவர்கள் சிலரேனும் இருந்ததில் ச்சரியப்பட என்ன இருக்கிறது? ஆனால் அந்தப் படைப்பாளர் எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லாமலும் முகத்தில் எளிய பாவ பேதங்களைக் கூடக் காட்டாமலும் இருந்தார். அன்பு செய்வோரை அலட்சியம் செய்வதாகக் கூட்டத்தினர் புரிந்து கொண்டதைத் தவறு என்று எப்படிச் சொல்ல முடியும்? பொறுமையிழந்த கூட்டத்தினர் முரட்டுத் தனமான கேள்விகளைக் கேட்கத் தொடங்கினர். சொல்லவோ எழுதவோ இயலாத மிக பாசமான சொற்களில் அவரைக் கேலி செய்யவும் சென்சிட்டிவான அவருடைய கற்பனா மனத்தைப் புண்படுத்தவும் தொடங்கிவிட்டார்கள். பாசச் சொற்களை மேலும் தோண்டி பாசமாக்குவதில் கற்பனைத்திறன் கொண்டவர்களிடையே ஒரு போட்டாபோட்டி ஏற்பட்டுவிட்டதை துரதிருஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும்.

கூகையின் அலுவலகத்தில் நிருபர் தொகுத்துத் தந்த இந்தக் கேள்விகளைக் கூகை பார்வையிட்டுக்கொண்டிருந்தார். ஆணித்தரமான கேள்விகள் என்றாலும் அவற்றை அப்படியே வெளியிட்டால் காகிதம் அழுகத் தொடங்கிவிடும் என்று தோன்றியதால் அவற்றை சிரியரிடம் கொண்டு சென்றார். ஆசிரியர் புரட்டிப்பார்த்துவிட்டு இவற்றை நாம் கவனமாகக் கையாள வேண்டும் என்றார். திடீரென்று தன் நினைவுக்கு வந்ததுபோல் அவர் ஏன் அந்தக் கதை இன்னும் தன் மேஜைக்கு வந்து சேரவில்லையென்று கத்தத் தொடங்கினார்.

கூகை தன் மனதில் உள்ளதைச் சொன்னார். இந்தக் கதையில் சில இடைப்பட்டவர்களின் குறுக்கீடு இருக்கக் கூடும் என்ற தனது சந்தேகம் அடங்குவதாக இல்லை என்றார். இந்தக் கதையைப் பற்றிப் பெண்ணிய விமர்சகர்கள் எவரும் ஒன்றும் சொல்லவில்லை என்று சொன்ன கூகையின் முகம் இறுகிப் போயிருந்தது. விடயத்தை விசாரித்துத் தெரிந்து கொள்ளவேண்டியதுதானே என்றார் ஆசிரியர். தொனி குற்றம் சாட்டுவது போல இருந்தது. "எனக்கு மேல் தகவல் தெரிந்தால் சொல்லுகிறேன் சார்!" என்று அவர் வெளியே வந்தார்.

கூகை மறுபடியும் தன் கையில் இருந்த பிரதியை உற்றுப் பார்த்தார். அதற்குள் அலுவலகம் முழுக்க அதைப் பற்றிச் சலசலவெனப் பேச்சுக்கள் பரவின. மற்றவர்களை அவர் கலந்தாலோசித்தார். அவர்கள் பிரதிகளிலும் அப்படித்தான் இருப்பதாகச் சொன்னார்கள். கையிருப்புத் தீர்ந்து போனதால் ஓலைச்சுவடி புதிய எடிசன் போட்டிருப்பதால் அதில் இந்த விஅயம் சரி செய்யப் பட்டிருக்கலாம் என சிலர் மீண்டும் தங்கள் மோட்டார் சைக்கிள்களை எடுத்துக் கொண்டு புதிய பதிப்பு வாங்க கடைகளுக்கு விரைந்தனர்.

அப்போதுதான் உக்கிரமாக மழை பெய்யத் தொடங்கியிருந்தது. ஆசிரியருக்கு விஅயம் எட்டியவுடன் "ஏன் மழையில் போக வேண்டும்? என் காரைக் கொடுத்திருப்பேனே!" என்றார்.

கூகை தெருவைப் பார்த்தபோது இப்படித் தொடர்ந்து பெய்தால் நெடுஞ்சாலையில் கூடத் தோணியில்தான் போக வேண்டும் என நினைத்துக் கொண்டார். செல்போன் வழியாகத் தன் அலுவலக நண்பர்களைத் தொடர்பு கொள்ள முயன்றார். கிடைக்கவில்லை. சிறிது நேரத்தில் மின்சாரமும் நின்றுவிட்டது. தம்மைச் சிறிது சுவாசப் படுத்திக் கொள்ள அப்படியே ஏணிப்படியில் உட்கார்ந்து விட்டார்.

சிறிது நேர இடைவெளிக்குப் பின் அவரின் செல்போன் கிணுகிணுத்தது. பெரிய ஏமாற்றம் சார் என்று சொன்னார்கள். என்னவென்று கேட்டார். புதிய எடிசன் வந்துவிட்டது. ஆனால் அதில் இந்தக் கதையைக் காணோம் என்று சொன்னார்கள்.

"ஏன், ஏன்?" என்று கத்தினார் கூகை. "தெரியாது சார்! பக்கங்களெல்லாம் சரியாகத்தான் இருக்கின்றன. ஆனால் அந்தக் கதை இடம் பெற்ற 6 பக்கங்களிலும் ஒரு முலையில்லாத சிலையின் கோட்டுச் சித்திரம் மட்டும் திரும்பத் திரும்ப அச்சிடப் பட்டுள்ளது. எழுத்துக்களையே காணோம்! என்றனர். கூகை மீண்டும் கேள்விகள் கேட்க முயன்றபோது தொடர்பு அறுந்துவிட்டது; அல்லது முறிக்கப் பட்டிருக்கலாம் எனவும் அவருக்குச் சந்தேகம் தட்டியது.
கூகை ஏணிப்படிக் கைப்பிடியில் தன் கைகளை வழுக்கியவாறே இறங்கி முதல் தளத்துக்கு வந்தபோது ஆசிரியரின் கத்தல் கேட்டது. கூகை மெதுவாக அவர் அறைக்குள் நுழைந்தார். அடுத்த பதிப்பில் கதை இல்லாதது பற்றியும் கோட்டுச் சித்திரம் மட்டும் இருப்பது பற்றியும் சொன்னார். "பெரிய மர்மமாக இருக்கிறது சார்!" என்றார்.

"இதில் என்ன பெரிய மர்மம்? புதிய எடிசனில் கதை இல்லாதது மர்மமா?" என்றார்.

"இல்லை!"

"கோட்டுச் சித்திரத்தில் பெண்ணுக்கு முலையில்லாதது மர்மமா?"
"இல்லை"

"அப்புறம்?"

"பெண்ணும் முலையும் மையமாக உள்ள இந்தக் கதை முழுவதிலும் ஒரு பெண் கூட இல்லை. அதுதான் மர்மம்!" என்றார் கூகை.
ரெ.கார்த்திகேசு
[நன்றி: சுந்தர ராமசாமி மற்றும் காலச்சுவடு ஆகஸ்ட்
2004]

புலி வருதுடோய்!

யப்பாடா வருது வருதுன்னு இத்தனை நாளா சொல்லி சொல்லி நமக்கும் அலுத்துபோச்சி இன்னைக்குத்தான் கடேசியா இந்த புலி வருது சரி இப்போதைக்கு உலகமெங்கும் இருக்கும் புலிகளை பிடிக்க என்ன நடவடிக்கை எடுக்கிறாங்களோ யாருக்கும் தெரியாது. இந்தியாவில அதுக்கு தடை, இலங்கைல தடை, அமெரிக்காவுல தடை இப்படி இருக்க கனடா அய்ரோப்பா எல்லாம் ஒருகாலத்தில் சுதந்திரமா சுத்துன புலிக்கு இப்ப தடை.
இன்னிக்கு எனக்கு தெரிஞ்ச இந்த பெரியவங்க புலியப் புடிக்க என்ன மாதிரி ஐடியாவெல்லாம் சொல்லுவாங்க பாக்கலாமா?
சர் ஐசக் நியூட்டன்: புலி வரும்போது நீங்க அதைப் பிடிக்க வேண்டாம் அது உங்களை பிடிக்க விடுங்க ஏன்னா ஒவ்வொரு செயலுக்கும் எதிர் செயல் விணை உண்டு அது உங்களை பிடிச்சா நீங்க அதை பிடிச்ச மாதிரி.

ஐன்ஸ்டைன்: புலி வற்ற திசைக்கு எதிர் திசையில புலி ஓடிவர வேகத்தில ஓடுங்க அதுவும் ஓடும் பிறகென்ன அது களைச்சுபோன சமயம் பாத்து E=MC2 (ஸ்கொயர்) சூத்திரத்தை சொல்லுங்க ஒன்னும் தெரியாம மண்டைய போடும்

ஜார்ஜ் புஷ்: அட இதுக்கென்னா பெரிசா வேணும் அந்த புலி சதாம் உசேனுக்கும் பின் லெடனுக்கும் நெருக்கமானது அதனால அதை பிடிச்சு கொடுத்தா அந்த நாட்டு மேல படைய்டுக்க மாட்டேன்னு சொல்லுங்க எல்லாம் சகட்டுமேனிக்கி அதை பிடிக்க அலைவாங்க அத சாட்டி ரெண்டு புது ஜெட் விமானத்தில குண்டு போட்டு நம்ம பலத்தையும் டெஸ்ட் பண்ணிக்கலாம்.
கருணாநிதி : அந்தப் புலிக்கு என்னா வேனும்னு கேளுய்யா அதுல ஒரு பாதியாவது கொடுத்து செட்டில் பன்னு இல்லையா நம்ம ராம நாராயண்னுக்கு சொல்லி அடுத்த படத்தில் ஹீரோவாக்கு அது தன்னால படியும்
ஜெயாக்கா : என்னது புலியா ஒடனே அதுமேல கஞ்சா கேச போடு அப்புறம் அதுவாவே வந்து கால்ல விழும் அப்போ புடி.
ராமதாஸ்: நல்லா பிரியானி பன்னிப் போடுங்கய்யா ... இல்லையா அதை பிடிக்க யாரெல்லாம் அலையிறான்னு பாரு அவனுக்கு எதிரா ஒரு அறிக்கை விடு அடங்கலையா ஒரு வாரம் தமிழ் நாட்டில பந்த் ஏன் வெளிய இருக்கவன் அதை பிடிக்க போறான்.
ரஜினி காந்த் : ந்-தா வந்து புடிக்கிறேன் இன்னிக்கு வெற்றேன் நாளேக்கு வற்றேன்ன்னு பிரஸ்ஸை கூப்பிட்டு பேட்டி கொடுத்தா அது ஏன் வருது உள்ளேயே கிடந்து சாகும்.
அஜித் : ஏஏஏஏஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்...... நான் தனி ஆளு இல்லை எனக்கு பின்னால ஒரு கூட்டமே இருக்குன்னு ஒரு சவுண்டு சும்மான்னாச்சும் வுட்டா அது இவர பாத்து பயத்தில தற்கொலை பன்னிக்காது?



இங்கு, கடவுளாகவும் கடவுளுக்கு நெருக்கமானவராகவும் இருந்தால், நீங்கள் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும்... ‘எதை வேண்டுமானாலும்'!
புட்டபர்த்தி சாய்பாபா ‘சாதித்தது' அப்படித்தான். கோடிக்கணக்கான மக்களைத் தனது பக்தர்களாகக் கொள்ள சாய்பாபா அப்படியொன்றும் சிரமப்படவில்லை. பயிற்சி எடுத்தால் உங்களுக்கும் எனக்கும்கூட சாத்தியப்படும் தந்திரங்களைக் கற்றுக் கொண்டு, அதை ஆன்மிக லீலையாக மாற்றியதுதான் சாய்பாபாவின் தொழில். காற்றிலிருந்து மோதிரம், சங்கிலி, திருநீறு வரவழைப்பது, வாயிலிருந்து லிங்கம் எடுப்பது என அவருடைய திறமைகளைக் காட்டி மக்களை வியப்பில் ஆழ்த்தினார். சாய்பாபா மட்டும் காவி உடைக்கு பதில் சார்லி சாப்ளின் மாதிரியான உடை அணிந்து, பம்பை முடியை வெட்டி தொப்பி அணிந்து, கையில் கோலோடு ஒரு மேடையில் இத்தகைய தந்திரங்களை நிகழ்த்தியிருந்தால் - சிறந்த ‘மேஜிக் மேனாக' அறியப்பட்டிருப்பார். ஆனால், இவ்வளவு செல்வத்தையும் செல்வாக்கையும் அடைந்திருக்க மாட்டார்.
கடவுள் என்ற கருவே தந்திரமானதாகவும், ஆய்வுக்கு அப்பாற்பட்டதாகவும் இருக்கையில் - தன்னுடைய மாய தந்திரத் திறமையை அதோடு இணைத்ததுதான் இன்று சாய்பாபா அடைந்திருக்கும் நிலைக்குக் காரணம். குடும்ப பாரங்களை சுமக்கும் துணிவற்று வீட்டை விட்டு ஓடிப்போய் சந்நியாசம் புகும் சாதாரண சாமியார்களைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் மக்களைக் கொண்ட ஒரு சமூகத்தில், சாய்பாபா போன்ற மோசடிப் பேர்வழிகளுக்குக் கிடைக்கக்கூடிய வரவேற்பு அளப்பரியது.
பதினான்கு வயதில் ஒரு சிறுவன் ‘நான் கடவுள், இவ்வுலகைக் காக்க அவதாரம் எடுத்தவன்' என்று பிதற்றினால், அவன் முதுகில் நாலு போடு போட்டு ஒழுங்காகப் படியென்று பள்ளிக் கூடத்துக்கு அனுப்பி வைக்காமல், அவன் உளறல்களை ஊக்குவித்ததன் விளைவு சாய்பாபாவாக, சமூகத்தின் சீரழிவாக வளர்ந்து வேரூன்றி விட்டது. இந்த மாதிரி தன்னை கடவுளாக அறிவித்துக் கொண்டவர்கள் இந்தியாவில்தான் அதிகம். அதாவது சுமார் அய்நூறு பேர். அவர்களில் சாய்பாபா அளவுக்குப் பணமும் புகழும் பெற்றிருப்பவர்கள் வெகு சிலரே! அந்த வெகுசிலர்தான் இந்தியாவின் நான்கு தூண்களுக்கும் அடித்தளம். இவர்கள் விரும்பினால் நான்கு தூண்களும் சரியும்... எழும்...
உலகம் முழுக்க 165 நாடுகளில் சாய்பாபாவின் பக்தர்கள் என்ற பெயரில் ஏமாளிகள் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் இந்தியா என்பது மண்ணில் இருக்கும் ‘சொர்க்கம்'; சாய்பாபாவோ மனித உருவில் உள்ள தெய்வம்! வேற்று மத - பண்பாட்டைச் சேர்ந்தவர்களே இப்படி ஏமாறுகின்றனர் எனில், இந்து மதத்தின் பிடியிலிருக்கும் இந்தியர்களை கேட்க வேண்டுமா?! பிள்ளையார், முருகன் படத்தோடு சாய்பாபா படமும் இல்லாத வீடுகளைப் பார்ப்பது அரிது. குடியரசுத் தலைவர், பிரதமர், அமைச்சர்கள், நீதிபதிகள், காவல் துறையினர், உயர் அதிகாரிகள் என சாய்பாபாவைப் பார்த்து சிலிர்க்காதோர் இல்லை. இவர்கள் சாய்பாபாவின் மேஜிக் நிகழ்ச்சிகளுக்கு போவதையும் அவர் மோதிரம் வரவழைத்துத் தருவதைப் பார்த்தும் வாய்பிளந்து நிற்கின்றனர். அது எப்படி சாத்தியம் என்று ஆராய, இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானிகள்கூட துணிவதில்லை.
சாய்பாபா தரும் நவரத்தினக் கற்கள் பதித்த மோதிரத்தை அணிந்தால், தனக்கு கிடைத்திருக்கும் பணம், புகழ், பதவி எதுவும் தன்னை விட்டுப் போகாது என அவர்கள் நம்புகின்றனர். அதற்கு கூலியாக மக்களைச் சுரண்டி அரசாங்கத்தை ஏய்த்து சம்பாதித்த பணத்தில் கோடிக்கணக்கில் சாமியாரின் காலடியில் கொட்டுகின்றனர். அளவற்ற பணமும், புகழும் சட்டத்துக்கு கட்டுப்படாத சுதந்திரமும் - ஒரு மனிதன் தொடர்ந்து குற்றமிழைக்கத் துணை போகின்றன. சாய்பாபா மீது அவ்வப்போது எழும் குற்றச்சாட்டுகளை அவரது பக்தர்களான அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. பல சாமியார்களைப் போலவே சாய்பாபா மீதும் பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. சாய்பாபா ஓரினச் சேர்க்கையாளர் என்றும் அவர் இளம் வயது சிறுவர்களை தனது பாலியல் இச்சைக்கு பலியாக்குகிறார் என்றும், பாதிக்கப்பட்டவர்களே புகார் அளித்தும் அதை யாரும் கண்டு கொள்ளவில்லை. புகார் கூறப்பட்டது இங்கல்ல, அமெரிக்காவில்.
பி.பி.சி. தொலைக்காட்சி, சாய்பாபா பற்றி தயாரித்த ஆவணப்படத்தில் பாதிக் கப்பட்டவர்களை பேட்டி கண்டு வெளியிட்டிருக்கிறது. அலாயா என்பவர் தன்னை 17 வயதிலிருந்தே சாய்பாபா பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியதாகக் கூறியுள்ளார். ‘குணப்படுத்தும் மருந்து என்றும், இதை வெளியில் சொன்னால் வலியும் வேதனையும் உன் வாழ்க்கை முழுவதும் வந்தடையும்' எனவும் மிரட்டியதால், அலாயா இதைத் தன் பெற்றோரிடம்கூட சொல்லாமல் மறைத்திருக்கிறார். இதனால் கடும் உளைச்சலுக்கு ஆளாகி மனோ ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தவரை, பெற்றோர் வற்புறுத்திக் கேட்க உண்மையை உடைத்திருக்கிறார். இத்தனை ஆண்டு காலம் சாய்பாபாவுக்காக உழைத்ததற்காக வெட்கப்பட்டதோடு, மகனைத் தீரா துன்பத்தில் தள்ளிய குற்ற உணர்வோடு சாய்பாபா சர்வதேச நிறுவனத்தின் அதிகாரியை சந்தித்து அவர்கள் புகார் அளித்தனர். ஆனால், புகார் பரிசீலனைக்குக்கூட எடுத்துக் கொள்ளப்படவில்லை.
ஓரினச் சேர்க்கை சட்ட ரீதியாகவும் சமூக ரீதியாகவும் அங்கீகரிக்கப்பட்ட அந்நாட்டிலேயே, ஒரு சிறுவன் இத்தகைய மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கும்போது, அதை கேவலமாகவும் குற்றமாகவும் மனித நாகரிகத்துக்கு அப்பாற்பட்டதாகவும் பார்க்கும் இந்தியாவில், பாதிக்கப்படும் சிறுவர்களின் மனநிலையை எண்ணிப் பாருங்கள். சாய்பாபாவை புனிதக் கடவுளாகவும் மனித உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டவராகவும் வணங்கும் பெற்றோர், இந்த உண்மையை ஏற்றுக்கொள்ள மறுத்து, தங்கள் பிள்ளைகளோடு ஆசிரமமே கதியென்று கிடக்கின்றனர். சாய்பாபா விருப்பப்பட்டு எந்த சிறுவனை கைகாட்டி தனது தனியறைக்கு அழைக்கிறாரோ, அவனை பாக்கியம் செய்தவனாகக் கருதுகின்றனர். உள்ளே என்ன நடக்கிறது என்று விசாரிக்கும் அறிவு பெற்றோருக்கும் இல்லை; அதைச் சொல்லும் துணிவு சிறுவர்களுக்கும் இல்லை. உண்மை - சுவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாக உறைந்து போகிறது.
சில ஆண்டுகளுக்கு முன் ஆசிரமத்தைச் சேர்ந்த நான்கு சிறுவர்களே சாய்பாபாவைக் கொலை செய்ய அவரது அறைக்குள் கத்தியோடு பாய்ந்தனர். அவர்களை காவல் துறையினர் சுற்றி வளைத்து சமூக விரோதிகளைக் கொல்வதைப் போல சாதாரணமாக சுட்டுக் கொன்றனர். ஒருவேளை அந்த சிறுவர்கள் நீதிமன்றக் கூண்டில் ஏறியிருந்தால், ஆசிரம மர்மங்கள் வெளி வந்திருக்கக்கூடும். சாய்பாபாவுக்கு சிக்கல் வருவதைத் தடுக்கவே அந்த காவலர்கள் சற்றும் தாமதிக்காமல் தாக்குதல் நடத்தியதாகத் தெரிகிறது. இன்றுவரை அந்த வழக்கு விசாரணைக்கு வரவில்லை. எதற்காக அந்த சிறுவர்கள் சாய்பாபாவைக் கொல்லத் துணிந்தனர் என்ற மர்ம முடிச்சு அவிழ்க்கப்படவில்லை.
இந்தியாவில் ஓர் ஆன்மிகவாதிக்கு இருக்கும் செல்வாக்கு வேறு யாருக்குமே கிடையாது. அரசியல் தலைவர்கள் எல்லோருமே ஏதோவொரு சாமியாரின் காலில் விழுந்து ஆசி வாங்கும் புகைப்படங்களை பத்திரிகைகளில் நாம் அடிக்கடி பார்த்து வருகின்றோம். முக்கிய அரசு முடிவுகள்கூட, இந்த சாமியார்களின் விருப்பு வெறுப்பு சார்ந்தே எடுக்கப்படுகின்றன. இந்நிலையில் ஆன்மிகவாதிகள் இழைக்கும் குற்றங்களுக்கான நீதியை எப்படி எதிர்பார்க்க முடியும்? கடவுளின் பெயரால் எல்லா குற்றங்களையும் செய்துவிட்டு, சமூக சேவைக்காக பணத்தை வீசிவிட்டால் போதும், அந்த அருஞ்செயலின் மகத்துவத்தைப் பரப்ப அரசே விழா எடுக்கிறது.
ஆந்திராவில் இருக்கும் அமெரிக்கத் தூதரகம், தங்கள் நாட்டிலிருந்து ஆந்திராவுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு சாய்பாபா பற்றி நேரிடையாகவே எச்சரிக்கை விடுத்திருக்கிறது. அதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, மக்களிடம் கொள்ளையடித்த பணத்திலிருந்து செலவழித்த 200 கோடிகளுக்கு, ஒரு குற்றவாளிக்கு மேடை போட்டுப் பாராட்டியிருக்கிறது தமிழக அரசு. பெரியாரின் பகுத்தறிவுப் பாசறையில் பயிற்சி பெற்ற தமிழக முதல்வர் கருணாநிதி, எதற்காக இப்படி இரட்டை வேடம் போடுகிறார் என்பது நாமறிந்ததே!
அதெப்படி? ‘கடவுளை நான் ஏற்றுக் கொள்கிறேனா என்பது பிரச்சினை அல்ல; கடவுள் என்னை ஏற்றுக் கொள்கிறபடி நடக்கிறேனா என்பதுதான் முக்கியம்' என்று தன் செயலுக்கு அவர் நியாயம் கற்பிக்கிறார். கடவுளை மறுக்கிற ஒரு பகுத்தறிவாளர் ‘இல்லாத கடவுள்' ஏற்றுக் கொள்கிறபடி நடந்துகொள்ள விளைவதன் காரணம் ஒன்றே ஒன்றுதான். அது மக்களைக் குழப்புவது! சாய்பாபாவோடு மேடையில் கைகோத்து, வீட்டுக்கு வரவழைத்து தன் மனைவி தயாளு அம்மாள் அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவதை வேடிக்கை பார்த்ததன் மூலம் - பகுத்தறிவுச் சமூகத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்திவிட்டார் கருணாநிதி.
பகுத்தறிவு முதல்வர் கருணாநிதி சாய்பாபாவோடு உறவாட, அமைச்சர்கள் துரை முருகனும் தயாநிதி மாறனும் நடந்துகொண்ட விதம் அருவருப்பானது. சாய்பாபா இவர்களின் கண் முன்னாலே கையை ஆட்டி ஆட்டி ஆளுக்கொரு மோதிரம் வரவழைத்துக் கொடுத்தாராம். பகவான் சாய்பாபாவால் முடியாத காரியமே இல்லையாம்! அரசு நிகழ்ச்சி ஒன்றில், உதவியாளர் கொண்டு வந்த தட்டுக்கு அடியில் மறைத்து வைத்திருந்த சங்கிலியை சாய்பாபா துழாவி எடுப்பதும் அதன்பின் கையை ஆட்டி காற்றிலிருந்து வரவழைப்பது போல நடிப்பதும் அப்படியே வீடியோவில் பதிவாகியிருக்கிறது.
தூர்தர்ஷனில் ஒளிபரப்பாக இருந்த இந்த நிகழ்ச்சி, கடைசி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டது. பி.பி.சி. தொலைக்காட்சி தனது ஆவணப்படத்தில் அந்த காட்சிகளைப் பெற்று இணைத்துள்ளது. சாய்பாபாவின் ஆன்மிக ஏமாற்று வித்தைப் புகார் பற்றியெல்லாம் சற்றும் கவலைப்படாமல் காற்றிலிருந்து மோதிரம் வந்ததற்காக இந்த அமைச்சர்கள் சிலாகிக்கிறார்கள். அது சரி, ‘முரசொலி' தவிர இவர்கள் எந்த பத்திரிகையும் படிப்பார்களா? ‘சன் டிவி' தவிர எந்த சேனலாவது பார்ப்பார்களா என்பது சந்தேகம்தானே!
ஆன்மிகமா? பகுத்தறிவா? என்ற விஷயத்தில் கருணாநிதிதான் சமரசமாக நடந்து கொள்கிறார் என்றால், குடும்பத்திலேயே பகுத்தறிவுவாதியாகவும் பெரியாரை முன்னிறுத்துபவராகவும் அறியப்பட்ட கனிமொழியும் - தன்னை இப்படி அடையாளப்படுத்திக் கொண்டது ஏமாற்றமளிக்கிறது. அண்மைக்காலமாக அவரும் குழப்பமான ‘நடுநிலை'க் கருத்துகளை உதிர்க்கத் தொடங்கியிருக்கிறார். ஒரு சாமியாரை சமூகத்தின் எல்லா துறைகளிலும் உயர் பதவியிலிருப்பவர்கள் போற்றித் துதிபாடுவது அவரை கோபப்படுத்தவில்லை; மாறாக ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. அவரும் பார்த்து வியந்து போனாராம். எந்தவொரு தீமை - கேள்விப்படுத்தாமல், கோபப்படுத்தாமல் உங்களை ஆச்சரியப்படுத்துகிறதோ, அங்கேயே நீங்கள் மறைமுகமாக தீமைக்கு ஆதரவளித்து விடுகிறீர்கள். ‘சாய்பாபா கூட்டத்தில் கனிமொழியா?' என்ற கேள்வி எழும் என்பதால், அவரே அதற்கு இப்படி பதில் சொல்கிறார்... ‘‘உடனே எனக்கு கடவுள் நம்பிக்கை வந்து விட்டதா என்று கேட்காதீர்கள். அப்படி வந்தால் ஊரைக் கூட்டி சொல்வேன்.''
நல்லது... ஒவ்வொரு பூனையாக வெளியே வந்து கொண்டிருக்கிறது.
ஆன்மிகம் தன் பெருவாய் திறந்து பகுத்தறிவை விழுங்குவதை வேதனையோடு பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆம்! ஒரு பொய், உண்மையை எளிதாக அகற்றுவதைத் தடுக்க வழியற்றுத் திணறுகிறோம். சங்கராச்சாரிகளும் சாய்பாபாக்களும் அமிர்தானந்தமயிகளும் எண்ணிக்கையில் பன்மடங்காகப் பெருக, ‘பெரியார்'கள் உருவாகவுமில்லை, உருவாக்கப் படவுமில்லை. ஆயிரக்கணக்கான மக்கள் காவல் துறையின் பாதுகாப்போடு சனிதோஷ பரிகார பூஜைக்கு படையெடுக்கின்றனர். நம் கூடாரத்திலிருந்து ஒவ்வொருவராக வெளியேறுகின்றனர். பணம், புகழ் பெரும் பதவியே ஆன்மிகத்தின் உடைமை என்பதால், மக்கள் அதை நோக்கியே ஈர்க்கப்படுகின்றனர். அதன் பளபளப்பின் முன் பகுத்தறிவின் எளிமை கேலிக்குள்ளாக்கப்படுகிறது. பகுத்தறிவென்பது வெறுமனே கடவுள் மறுப்பல்ல; அது தனிமனித ஒழுக்கத்தையும் சமூக ஒழுங்கையும் வலியுறுத்துவது. அதனாலேயே இங்கு அதற்கு மதிப்பில்லை. செய்கிற பாவங்களுக்கு பரிகாரங்கள் வைத்திருக்கிறது ஆன்மிகம். அதனாலேயே பெரிய பெரிய குற்றங்களையெல்லாம் செய்துவிட்டு உண்டியல்களை நிரப்பிவிடுகின்றனர். மனித உயிரை நேசிக்கச் சொல்லும் பகுத்தறிவு. நரபலியை நியாயப்படுத்தும் ஆன்மிகம்.
ஒரு மனிதன் பிறக்கிற போதே ஆன்மிகம் அவன் மீது திணிக்கப்படுகிறது. முதல் நாளிலேயே மதச் சடங்குகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. பெயர் வைப்பதில் தொடங்கி எல்லாவற்றுக்கும் ஜோசியம், ஜாதகம் என ஒரு குறுகிய அடிமை வட்டத்துக்குள் சுழலவிட, திட்டமிட்ட அட்டவணை கையில் திணிக்கப்பட்டு விடுகிறது. மழலையில் மழுங்கடிப்படும் அந்த மூளை சுயமாக சிந்திக்க மறுக்கிறது. இவ்வளவு வீரியமான மதங்களுக்கு எதிரான பகுத்தறிவுப் புரட்சி பெரியாரோடு முடிந்தது என்றே சொல்ல வேண்டும். கடவுள், மதம், மூடநம்பிக்கை ஆகியவற்றை ஒழிப்பதை தன் வாழ்நாள் கடமையாக எடுத்து தீரமாகச் செய்ய, இங்கு எவருமிலர். பெருகும் சாமியார்களால் இந்த சமூகம் சீரழிந்து மூழ்குவதை நாமும் பார்த்துக் கொண்டிருக்கிறோம், வேதனை யோடு. ஆன்மிகத்தை வேரோடு பிடுங்கியெறிய தெளிந்த தீர்வு நம் கையில் இருக்கிறது. என்ன செய்தால் இந்து மதத்தை ஒழிக்க முடியும் என்பதற்கு, நம் கையிலும் பெரியார் கொடுத்துச் சென்ற திட்டமிடல் அட்டவணை இருக்கிறது. கையில் எடுப்பதும் களத்தில் இறங்க வேண்டியதுமே
மிச்சம்!

பிரார்த்தனை

பிரார்த்தனை என்பது இன்று உலகில் மக்கள் சமூகம் எல்லோரிடத்திலும் - அதாவது கடவுளால் மக்கள் நடத்தப்படுகிறார்கள் என்று நம்பும் எல்லோரிடத்திலும் இருந்து வருகிறது. இது எல்லா நாடுகளிலும் எல்லா மதக்காரர்களிடத்திலும் இருந்து வருகிறது. பிரார்த்தனை என்பதற்கு ஜபம், தபம், வணக்கம், பூசனை, தொழுகை முதலிய காரியங்களும், பெயர்களும் சொல்லப்படுவதுண்டு. இவை எல்லாம் கடவுளை வணங்கித் தங்களுக்கு நன்மை அளிக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்வதேயாகும்.
தனக்கு வேண்டியவற்றை எல்லாம் - அதாவது இம்மையில் - இவ்வுலகில் புத்தி, செல்வம், சுகம் இன்பம், ஆயுள், கீர்த்தி முதலியவைகளும்; மறுமையில் - மேல்லோகத்தில் பாவ மன்னிப்பு, மோட்சம், நல்ல ஜென்மம் முதலியவைகளும் கிடைக்கவேண்டும் என்கின்ற ஆசையே பிரார்த்தனையின் முக்கிய நோக்கமாக இருந்து வருகிறது.
இந்தப் பிரார்த்தனையின் அஸ்திவாரம், உலகத்தைப் படைத்துக் காத்துவரும் கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதும்; அவர் சர்வ வல்லமையும், சர்வ வியாபகமும், சர்வமும் அறிவும் ஞானமும் உடையவர் என்பதும், அப்படிப்பட்ட அக் கடவுளை வணங்குவதால் ஒருவனுக்கு வேண்டிய சகல காரியங்களிலும் சித்தி பெறலாம் என்பதுமானவைகள்தாம் பிரார்த்தனைக்காரர்களின் கருத்தாயிருக்கின்றது. இப்படிப்பட்ட பிரார்த்தனைக்கு அக்கடவுளை வணங்குவது, தோத்திரம் செய்வது, புகழ்வது, பஜனை செய்வது முதலிய காரியங்கள் ஒருபுறமிருக்க, பொருள்களைக் கொண்டும் கடவுளைத் திருப்தி செய்து அவற்றால் பயன்பெறலாம் என்பதும் இந்தப் பிரார்த்தனையில் சேர்ந்ததாகும்.
அதாவது, கடவுளுக்கு இன்ன இன்னது செய்வதாக நேர்ந்துகொள்வது, ஜீவப் பலி கொடுப்பது, கோவில் கட்டுவது, உற்சவம் செய்வது முதலிய காரியங்கள் செய்யப் படுவனவாகும். ஆகவே, இப்படிப்பட்ட பிரார்த்தனை என்பதற்கு வேறு வார்த்தையில் ஒரு மாறு பெயர் சொல்ல வேண்டுமானால் ‘பேராசை’ என்றுதான் சொல்லவேண்டும். பேராசை என்றால் தகுதிக்குமேல் விரும்புவது, வேலை செய்யாமல் கூலி பெறுவது என்பதே ஆகும்.
படித்துப் ‘பாஸ்’ செய்யவேண்டியவன் பிரார்த்தனையில் பாஸ் செய்வது என்றால்; பணம் வேண்டியவன் பிரார்த்தனையில் பணம் சம்பாதிக்க வேண்டுமென்றால்; மோட்சத்துக்குப் போகவேண்டும் என்கின்றவன் பிரார்த்தனையில் மோட்சத்துக்குப் போக வேண்டும் என்றால் இவைகளெல்லாம் பேராசை என்று சொல்லுவதோடு, வேலை செய்யாமல் கூலி கேட்கும் பெரும் சோம்பேறித்தனமும் மோசடியும் ஆகும் என்று சொல்லுவதுதான் மிகப் பொருத்தமாகும்.
பேராசையும், சோம்பேறித்தனமும், ஏமாற்றும் தன்மையும் இல்லாவிட்டால் பிரார்த்தனைக்கு இடமே இல்லை.மற்றும், முன் குறிப்பிட்ட தேவைகளுக்காகப் பிரார்த்தனை செய்வதும், பிரார்த்தனையில் அவைகளை அடையப் பார்ப்பதும், முன் குறிப்பிட்ட சர்வ வல்லமை, சர்வ வியாபகம் உள்ள கடவுளைச் சுத்த முட்டாள் என்று கருதி அவனை ஏமாற்றச் செய்யும் சூழ்ச்சி என்று கூடச் சொல்லியாக வேண்டியிருக்கிறது. எந்த மனிதனும் தகுதியினால் எதையும் அடையலாம். அதற்கு வேண்டிய காரியங்கள் செய்து தகுதியாக்கிக்கொண்டு பலனடைய எதிர்பாராமல் - காரியத்தைச் செய்யாது பிரார்த்தனையில் பலன் அனுபவிக்க வேண்டும் என்று கருதினால், கடவுள் வேலை செய்யாமல் கூலி கொடுக்கும் ஒரு அறிவாளி என்றும், தன்னைப் புகழ்வதாலேயே வேண்டியதைக் கொடுக்கும் ஒரு தற்புகழ்ச்சிக்காரனென்றுந் தானே சொல்லவேண்டும்?
தவிர, இந்தப் பிரார்த்தனையின் தத்துவமானது மனிதனைச் சோம்பேறியாக்குவதோடு, சகலவித அயோக்கியத்தனமான காரியங்களுக்கும் ‘லைசென்சு’ (அனுமதிச் சீட்டு) கொடுப்பது போலாகிறது. விதை நட்டுத் தண்ணீர் பாய்ச்சாமல் அறுப்பு அறுக்க அரிவாள் எடுத்துக் கொண்டு போகிறவனுக்கும், யோக்கியமான காரியங்களைச் செய்யாமல் கடவுள் கருணையை எதிர்பார்ப்பவனுக்கும் என்ன வித்தியாசம் என்பது விளங்கவில்லை.
ஏனென்றால், சகல காரியங்களும் கடவுளால்தான் ஆகும் என்று நினைத்துக் கொண்டு, கடவுள் யாருடைய முயற்சியும் கோரிக்கையும் இல்லாமல் அவனவன் செய்கைக்கும், எண்ணத்திற்கும், தகுதிக்கும் தகுந்தபடி பலன் கொடுப்பதற்குத் தகுந்த ஏற்பாடும் செய்துவிட்டார் என்றும் (அதாவது விதியின்படி தான் முடியும் என்றும்) தெரிந்திருக்கும் ஒருவன் அந்தத் தெளிவில் நம்பிக்கை இருந்தால் பிரார்த்தனை செய்வானா என்று யோசித்துப் பார்க்க வேண்டுகிறோம். சாதாரணமாக, மக்களில் 100-க்கு 90 பேர்களிடம் பிரார்த்தனை வெகு கேவலமான - அறிவற்ற வியாபாரத்தனமான முறையில் இருந்து வருகிறது.
அதாவது, ‘எனக்கு இன்ன பலன் ஏற்பட்டால் உனக்கு நான் இன்ன காரியம் செய்கிறேன்’ அல்லது ‘உனக்கு நான் இன்ன காரியம் செய்கிறேன்; அதற்குப் பதிலாக நீ இன்ன காரியம் எனக்குச் செய்’ என்கின்ற முறையிலேயே பிரார்த்தனை இருந்து வருகின்றது. இவர்கள் எல்லோரும் - அதாவது இந்தப் பிரார்த்தனைக்காரர்கள் எல்லோரும் கடவுளைப் புத்திசாலி என்றோ, சர்வசக்தி உள்ளவன் என்றோ, பெரிய மனிதத் தன்மையுடையவன் என்றோ கருதவில்லை என்றுதான் சொல்லியாக வேண்டும்.
சிலர் சொல்லுகிறார்கள், “மனிதன் பாபி; அவர்கள் பாப கர்மத்தைச் செய்துதான் தீருவான்; ஆதலால் மன்னிப்புக் கேட்டுத்தான் தீரவேண்டும்” என்று. “நான் பாபம் செய்துதான் தீருவேன்; நீ மன்னித்துத்தான் ஆகவேண்டும்” என்று பிரார்த்திப்பதைக் கடவுள் ஏற்றுக் கொள்ளுவதானால், மனிதன் எந்தப் பாவத்தைச் செய்வதற்கும் ஏன் பயப்படவேண்டும் என்பது நமக்குப் புலப்படவில்லை. பாபத்துக்கு எல்லாம் மன்னிப்பு இருக்குமானால் புண்ணியம் என்பதற்கு அர்த்தம் தான் என்ன?
ஆகவே, ‘கடவுள்’ கற்பனையைவிட இந்தப் பிரார்த்தனைக் கற்பனையானது மிக மிக மோசமானது என்றுதான் சொல்லவேண்டும். பிரார்த்தனைக் கற்பனை இல்லாவிட்டால் கடவுள் கற்பனை ஒரு பிரயோசனத்தையும் கொடுக்காமல் போய்விடும். மனிதன் பூசையும், பிரார்த்தனையும் செய்வதற்குத்தான் கடவுள் ஏற்படுத்தப்பட்டதே ஒழிய, கடவுளுக்காகப் பூசையும், பிரார்த்தனையும் ஏற்படுத்தப்படவில்லை. குரு (பாதிரி), புரோகிதன் (பார்ப்பான்) ஆகியவர்கள் பிழைப்புக்காகவே பிரார்த்தனையும் கடவுள் மன்னிப்பும் ஏற்படுத்தப்பட வேண்டியதாய் விட்டது.
இந்த இரண்டு காரியங்களும் இல்லாவிட்டால் பாதிரிக்கோ, முல்லாவுக்கோ, புரோகிதனுக்கோ ஏதாவது வேலை உண்டா என்பதை யோசித்துப் பாருங்கள். ஆத்திகர்கள் கொள்கைப்படி, மனிதனுடைய செய்கையும் எண்ணமும், ‘சித்திரபுத்திரனுக்கோ’ ‘கடவுளுக்கோ’ தெரியாமல் இருக்கவே முடியாது. இதற்காகப் பலன் கொடுக்கத் ‘தீர்ப்பு நாளும்’, ‘எமதர்ம ராஜாவும்’ இருந்தே இருக்கிறார்கள். மத்தியில் பிரார்த்தனை, பூசனை என்பவை - மேற்கண்ட இரண்டையும் ஏமாற்றவா அல்லது குருவும், புரோகிதனும் பிழைக்கவா என்பது யோசித்தால் விளங்காமல் போகாது.
பிரார்த்தனையில் செலவாகும் நேரத்தைப் போல் மனிதன் வீணாய்க் கழிக்கும் நேரம் வேறு இல்லை என்றே சொல்லுவோம். சில சோம்பேறிகள் பிழைப்பதற்காக மக்கள் புத்தி எவ்வளவு கெடுகிறது? மக்களுக்கு அயோக்கியத்தனமானவைகளைச் செய்ய எவ்வளவு தைரியம் ஏற்பட்டு விடுகிறது? பொருள்கள் எவ்வளவு நாசமாகின்றன என்பவைகளை எல்லாம் சிந்தித்துப் பார்த்தால் பிரார்த்தனை என்பது ஒரு புரட்டான காரியம் என்றோ, பயனற்ற காரியம் என்றோ, அறிவீனமான காரியம் என்றோ விளங்காமல் போகாது.

பளப்பளா