ராவணன் பிராமணன்

ராமர் என்பது கற்பனைக் கதாபாத்திரம். ராமர் பாலம் என்று ஒன்று இல்லை’ என்பது தொல்லியல் துறையின் கருத்து என்று ராமர் பாலம் தொடர்பாக ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தொடுத்த வழக்குக்கு பதில் மனு தாக்கல் செய்தது மத்திய அரசு. இதைக் கண்டித்து நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சியும் பிற இந்து அமைப்புகளும் இந்துக்களை மத்திய அரசு இழிவுபடுத்தி விட்டதாகப் போராட்டங்களை நடத்தியது. எதிர்ப்பின் வலுகண்டு மறுநாளே, மனுவைத் திரும்பப் பெற்றுக்கொண்ட மத்திய அரசு, மாற்றுப்பாதையில் சேதுசமுத்திரத் திட்டத்தை செயல்படுத்துவதாகவும் சொல்லியிருக்கிறது.

இந்நிலையில் முதல்வர் கருணாநிதி, ஈரோடு முப்பெரும் விழாவில் பேசும்போது, ‘‘யார் ராமன்? அவன் எந்தப் பொறியியல் கல்லூரியிலே படித்து பொறியாளராக ஆனவன்? எப்போது அந்தப் பாலத்தைக் கட்டினான்? ஆதாரம் உண்டா?’’ என்றெல்லாம் கேள்விகள் எழுப்பியிருந்தார்.


முதல்வரின் இந்தப் பேச்சைக் கண்டித்து அவர் மீது வழக்கு தொடுக்கப் போவதாக அறிவித்-திருக்கும் சுப்பிரமணியன் சுவாமி, ‘ராவணன் பிராமணன், ராமன் சத்திரியன்’ என்று இன்னொரு திரியையும் பற்றவைத்திருக்கிறார்.

சுவாமியை சந்தித்தோம். ‘‘கருணாநிதி ஆவேசப்படவும், ஆத்திரப்படவும் காரணம் இருக்கிறது. மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் சொன்ன பொய்யை மறுநாளே வாபஸ் பெற்றுவிட்டதால், அதிர்ச்சியடைந்திருக்கும் கருணாநிதிக்கு என்ன பேசுகிறோம் என்றே புரியவில்லை. இனிமேல் பகுத்தறிவுக் கதைகள் பேசி அரசியல் செய்ய முடியுமா? கவலை வந்துவிட்டது. ‘ராமர் எந்தக் கல்லூரியில் பொறியியல் படித்தார்?’ என்று கேட்கும் இவரால், ‘கன்னிமேரிக்கு கர்த்தர் எப்படிப் பிறந்தார்’ என்று கேட்க முடியுமா? கருணாநிதி, இந்துக்களை இழிவுபடுத்துவதை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது. அதனால், கவர்னரிடம் அனுமதி வாங்கி அவர்மேல் வழக்கு தொடரப் போகிறேன்’’ என்றவரிடம், ‘ராவணன் பிராமணன் என்று சொல்லியிருக்கிறீர்களே?’ என்றோம்.

‘‘ராமாயணத்திலேயே ராமன் சத்திரியன் என்பது தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது. ராம சேது பாலத்தை அமைத்த ராமன் தன் குருவான வசிஷ்டரிடம், ‘யாரைக்கொண்டு ராம சேதுவைத் திறக்க யாகம் நடத்தலாம்?’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு ‘அந்தப் பகுதியில் யாகம் செய்யத் தகுதியான பிராமணன், ராவணன் மட்டுமே. அவனை அழைத்து யாகம் நடத்துங்கள்’ என்று வசிஷ்டர் அறி-வுறுத்த, ராமனும் ராவணனை அழைத்திருக்கிறான். ராவணனும் யாக பூஜையில் கலந்துகொண்டான். அதனால் இனி, திராவிடக் கட்சிகள் சத்திரியனான ராமனுக்கு விழா எடுக்குமா?’’ என்றார்.

‘கீதாச்சார்யன்’ பத்திரிகையின் ஆசிரியர் டாக்டர் எம்.ஏ.வேங்கடகிருஷ்ணன் நம்மிடம், ‘‘ராவணன் பிராமணன்தான். அவன் சாம வேதத்தில் நிபுணன். ஏகப்பட்ட யாகங்கள் செய்தவன். தேவ குலத்தில் பிறந்து தீய செயல்களில் ஈடுபடுபவனை அசுரன் என்றும், மற்ற இனத்தில் பிறந்து தீமைகள் செய்பவர்களை ராட்சதன் என்றும் சொல்வார்கள். அப்படித் தீமை செய்தவன்தான் ராவணன். மற்றபடி வால்மீகி ராமாயணத்திலோ, கம்ப ராமாயணத்திலோ ராமர் பாலத்துக்கான யாகத்துக்கு ராவணன் வந்ததாகத் தகவல் இல்லை. அதேநேரம், ஆனந்த ராமாயணம், அற்புத ராமாயணம் என்று நிறைய ராமாயணங்கள் உண்டு. சுவாமி குறிப்பிடும் சம்பவம் எதில் இருக்கிறது என்று தெரியவில்லை’’ என்றார்.

தி.மு.க. அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ் இளங்கோவனிடம் இந்த விவகாரம் தொடர்பாகப் பேசினோம். ‘‘ராவணன் பிராமணன் என்று சுப்பிரமணியன் சுவாமி சொல்வது சரியென்றால் வர்ணாசிரம தத்துவப்படி அவன் எப்படி ஆட்சி நடத்தியிருக்க முடியும்? சத்திரியன்தானே ஆட்சி நடத்த முடியும்? எங்களைப் பொறுத்தவரை ராமனை ஆரிய இனத்தின் அடையாளமாகவே பார்க்கிறோம். இப்போது பிரச்னை ராமன் சத்திரியனா, ராவணன் பிராமணனா என்பதல்ல. தமிழ்நாட்டுக்கு நன்மை தரக்கூடிய சேதுசமுத்திரத் திட்டம் முழுமையாக நிறைவேற வேண்டும் என்பதுதான்’’ என்றார்.

நன்றி: ஜூனியர் விகடன்

4 comments:

Anonymous said...

உங்க திராவிட பகுத்தறிவு வெங்காயத்துக்கு வேறு என்ன தெரியும்? இப்படித்தான் எதையாச்சும் உளறும்.

என்ன இருந்தாலும் எங்களைப் போல் மூளை வருமா?

Anonymous said...

Person like Karunanidhi as oppprutunist and can noway comment anything on any hindu. If he wants let him comment on Muslims and Christians. If he respects the sentiments of Christians and Muslims Why not the same for Hindus. All he talks is bullshit. If he qustions about Ram's Intelligence and Engineering, what about the Engineering of The man who built Kallanai in Tamil Nadu, and the Man who built The Great Tanjore Temple and those Buildings which stand in sea shores of Mahabalipuram. Where does all get their Engineering

Thamizhan said...

கீதையில் நான்கு வரிகள் தெரிந்து கொண்டு உளறுபவர்களைப் போல உளறிக் கொட்ட வேண்டியது.இதிலே இந்தக் கூழைக் கும்பிடு கூட்டத்திற்கு மூளையாம்!
அட மூளையே உங்கள் கதைப் படியே பாரதம் எழுதினவர்,ராமாயணம் எழுதியவர்,இந்திய அரசியல் சட்டம் எழுதினவர் எல்லாம் மூளையுள்ள தாழ்த்தப் பட்டவர்கள் தான்.

போனால் போகிறதே என்று பொறியியலோட நிறுத்திவிட்டார்,இல்லாவிட்டால் பிறந்த கதையைப் பாடி,குதிரைகளை உச்ச நீதி மன்றத்திற்கு இழுத்திருப்பார்.

கல்லணை கட்டியவர் கணக்கில் வல்லுநர்கள்,பொறியியலில் வல்லுநர்கள் ஆனால் மனித இனமே இல்லாத 17,50,000 ஆண்டுகளில் வாழ்ந்ததாக இணையத்திலேயே பொய் பேசும் அசிங்கங்கள் இல்லை.

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

ராவணன் தமிழனா?
ராவணன் எதற்காக சீதையை கடத்தினான்?
ராவணன் காதல் உண்மையானதா?
ராவணன் நல்லவனா கெட்டவனா ?

எல்லாவர்றுக்கும் விடை இங்கே….
http://sagotharan.wordpress.com/2010/05/05/%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a3%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%ae%95%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95/