சமீபத்தில் ஒரு மூன்று நாட்களாக செந்தழல் ரவியின் பதிவுகளை காணவில்லை. அப்படியே போட்டாலும் வேலைவாய்ப்பு செய்திகளை போட்டுவிட்டு எஸ்கேப் ஆகிவிடுகிறார். என்ன வென்று நம்பத்தகுந்த வட்டாரங்களை விட்டு புலனாய்வு செய்ததில் கிடைத்த தகவல் அதிர்ச்சிகரமாக இருந்தது. அவர் அனுப்பிய ரகசிய மின் அஞ்சல் அம்பலமாகிவிட்டது. எனக்கு ரகசியமாக வந்த மின் அஞ்சல் இங்கே,

ஹாய் ஹாய் ஹாய்,

வரும் சனிக்கிழமை கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ்ஸில் ஹைதராபாத் வருகிறேன், அங்கு ஒரு நாள் தங்கி ஹோட்டலில் ரூம் போட்டு வேலைக்கு ஆள் எடுப்பதாக இருக்கிறேன். படித்த பட்டாத்தாரிகள் கூடும் வலைப்பதிவாளர்கள் சந்திப்பில் போண்டா போடும் வேலைக்கு நல்ல சமையல் ஆட்களை தெரிவு செய்வதற்கும், ரகசிய கேமரா மூலம் பதிவர் சந்திப்பில் கூடும் பதிவர்களை படம் பிடித்து போலியார்களுக்கு அனுப்புபவர்களை கண்கானிக்கும் வேலைக்கு ஆள் எடுப்பதற்கும் எனது கம்பெனி ஆர்வம் காட்டுகிறது. போலியர்களுக்கு தகவல் கொடுப்பவர்களை கண்டுபிடிக்கும் வேலைக்கு நிறைய பதிவர்கள் என் கம்பெனியை அனுகியுள்ளனர். இந்த வேலையைப் பற்றி பத்திரிக்கையில் விளம்பரம் செய்துவிடுங்கள். படித்த ஆண்கள் / பெண்களுக்கு இந்த வேலைக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

மேலும் எனது விஜயத்தில் 3 நாட்கள் கோல்கொண்டாவிற்கு செல்வதாக திட்டம் உள்ளது. ஆர்வம் உள்ள நண்ப/நண்பிகள் எல்லோரும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

ஹைதராபாத் வலைப்பதிவு போண்டா பிரியர்களை/நண்பர்களை சந்தித்துப்பேச ஆசை, பல நண்பர்களுடன் தொலை பேசினேன், தொலைபேசி மட்டுமே பேசியது. என்னை தொடர்பு கொள்ள வேண்டியவர்களுக்கு எனது செல்போன் எண் 98805 97061 மற்றும் அலுவலக எண் 00412987654 தொடர்பு கொண்டு அழைக்கலாம்.

போண்டா போடுவதற்கு ஆள் எடுக்கும் இந்த தகவல் ரகசியமாக இருக்கட்டும், அதிக கூட்டம் சேர்ந்தால் சமாளிக்க முடியாமல் போய்விடும். அப்படியே ஒரு நடுத்தெரு போண்டா நெட் காபே முழுவதையும் மூன்று நாட்களுக்கு முன்பதிவு செய்துவிடவும். வரவிரும்பும் நண்பர்கள் முன்கூட்டியே சொன்னால் போண்டா மற்றும் மசால் தோசை ஆர்டர் செய்ய வசதியாக இருக்கும்.

இப்படிக்கு
செந்தழல் ரவி

இப்பொழுதான அவர் எந்த நோக்கத்தில் இந்த ஆள்தேடும் படலத்தில் ஈடுபட்டிருக்கிறார் என்பது தெரிகிறது. தனது பதிவுகளுக்கு அனானியாக பின்னூட்டம் இடுபவர்கள் மட்டுமே பின்னூட்டம் போடுவதாகவும் அதனால் தான் தமிழ்மணத்தில ப்ளாகர்கள் ஆதரவு இல்லாமல் தனித்து விடப் பட்டதாகவும் ஒரு நாள் என்னிடம் புலம்பினார். மேலும் அனானிகளை ஆதரிப்பது போலவே பதிவர்களுக்கும் ஆதரவு தெரிவிக்கப் போவதாகவும் பதிவர்களுக்கு போண்டா சப்ளை செய்து அவர்களை தனது நிரந்தர பின்னூட்ட சங்க உறுப்பினர்களாக ஆக்க கடும் முயற்சி செய்வது அம்பலமாகி உள்ளது ..


எப்பாடு பட்டாவது தனது சங்கத்தையும் தன்னுடைய பெயரையும் தமிழ்மண முகப்பில் தெரியவைக்க ரவி எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறுமா என்பதை காலம்தான் சொல்ல வேண்டும்

பின்குறிப்பு: சங்கம் ஒன்றை தொடங்கும் முயற்சியில் சம்மந்தப் பட்ட பதிவர் இருப்பதாக இந்த மெயிலை எனக்கு அனுப்பிய அன்பர் தெரிவிக்கிறார்

119 comments:

கோவி.கண்ணன் [GK] said...

//ரவி எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறுமா என்பதை காலம்தான் சொல்ல வேண்டும்
//

மகி...!
என்னைவச்சி காமெடி கீமடி பண்ணலையே...!

காலம் - பதில் தெரியாது என்கிறது
:)

Unknown said...

//மகி...!
என்னைவச்சி காமெடி கீமடி பண்ணலையே...!//

ஆகா ஜிகே இப்படி கண்ணுக்கு தெரியாம குத்து வைக்க மட்டுமில்ல கண்டுபிடிக்கவும் தெரியும்ன்னு காட்டிபுட்டீங்களே வாழ்க குத்து கண்ணன் அவர்கள் ஓங்குக அவர் குத்துக்கள்

Unknown said...

அனானிகளுக்கு அன்பு அழைப்பு விடப்படுகிறது. நம் சங்க தலைவர் ரவியின் இந்த பதிவர்கள் மீதான காதல் போண்டா லஞ்சம் கொடுக்கும் அளவுக்கு ஆகிப்போனதால்தான் நீங்கள் விளையாட இடம் கொடுக்காமல் வேலை வாய்ப்பு அலுவலகமாக தனது பதிவை மாற்றிவிட்டார் இதை கேட்க வேண்டாமா நன்பர்களே ?

Anonymous said...

ம(க்)கி மன்னாரு,

என்ன பாப்பான், பன்னி, மரம் வெட்டி, கள்ளூ எறக்கறவன், செருப்பு தெக்கறவன், கக்கூஸ் கழுவறவன் அப்படி எல்லாம் பதிவு பொடாம, இப்படி சக பதிவர, வாரரிங்க...

ஒங்க பஜன கும்பல் தல, அதான் அந்த யெஸ்.பால் பாண்டிய கூட 4-5 நாளா காணல....எங்க எத குடிச்சுட்டு விழுந்து கெடக்காரு....அவர பத்தி எழுதரது....

உங்கள் நண்பன்(சரா) said...

//போண்டா லஞ்சம் கொடுக்கும் அளவுக்கு ஆகிப்போனதால்தான் நீங்கள் விளையாட இடம் கொடுக்காமல் வேலை வாய்ப்பு அலுவலகமாக தனது பதிவை மாற்றிவிட்டார் இதை கேட்க வேண்டாமா நன்பர்களே ? //

இவ்வளவு அப்பாவியா இருக்கிற என் நண்பன் மகியை, எப்படித்தான் கலகக் காரன் என்று சிலரால் சொல்ல முடியுதோ! இதற்க்கும் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்!


அன்புடன்...
சரவணன்.

Unknown said...

வாங்க சரா உங்கள எங்கயோ பாத்த மாதிரி இருக்கு ஆனா எங்கன்னு தெரியலியே ராசா :)

Unknown said...

//ம(க்)கி மன்னாரு, //

வாய்யா அனானி உனக்கு ஆதரவு குடுத்தா நீ என்னையும் வாருவே இன்னம் இருக்க எல்லாறையும் வாருவே ஏன்னா ஒனக்கு வாற்றது தான் தொழில் இல்லையா?

... ச்சே பன்னி ,பைரவன்னு சொன்னா ஏந்தான் இப்படி நமக்கு கோவம் வருதோ தெரியலைப்பா நீங்க கோவிச்சுக்காதீங்கய்யா

Anonymous said...

// செந்தழல் ரவியின் ரகசிய ஹைதராபாத் விஜயம் ! //

தலைப்பில் பொருட்குற்றம் உள்ளது.

மூன்று பேர்களுக்கு மேல் தெருந்துள்ள விஷயம் எப்படி ரகசியம் ஆகும்?"

கேள்வி மட்டும் கேட்கத் தெரிந்த
அதிகம் படிக்காத பெரிசு

Unknown said...

//மூன்று பேர்களுக்கு மேல் தெருந்துள்ள விஷயம் எப்படி ரகசியம் ஆகும்?"//


அது ரகசியமாக இருந்தது இப்போது அம்பலமாகி விட்டதைய்யா கண்டுகொண்டு என் மார்க்கை குறைத்துவிட வேண்டாம் :0

Anonymous said...

கோவ படாதீங்க மகி, நான் நீங்க நினைத்த சாதி இல்லை, ஆனா, ஒங்க அந்த பதிவு நல்லா இல்ல....ஸிரியசா கேக்குறன், நீங்க ஏன் மரம் வெட்டிக பத்தி ஒரு பதிவு போட கூடாது?...

அது சரி, பால்பாண்டி வந்துட்டாரு, நான் அங்க போரென்..பொரவு வந்து பாக்கென்.

லக்கிலுக் said...

ஆஹா... ஓஹோ.... பேஷ்... பேஷ்... பின்னிட்டீங்க... அசத்திட்டீங்க.... அடிச்சி ஆடுங்க....

:-)))))))))))))))))))

ஜாபர் அலி கான் said...

போண்டா வாயனுக்கும் போண்டாவுக்கும் அப்படி என்னங்க ஒறவு?? சுத்தி சுத்தி போண்டா பதிவா வருது? :)

ரவி said...

வந்தாச்சு...

போண்டாக்குள்ள உருளைக்கிழங்கு எப்படி போச்சு என்று ஒரு ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்ததால் வர தாமதம்..

உக்காந்து யோசீப்பீங்களோ ?

Anonymous said...

கலக்குறீங்க...அடுத்த பதிவு எப்போ ? இப்போ என்ன மசால்வடையும் லக்கி லூக்குமா ?

Anonymous said...

இது நான் கூறிய செய்தி என்று கூறிவிடாதீர்.

நான் மாயூரத்தில் விழாவை சிறப்பித்துவிட்டு அங்கே உள்ள ஒரு பிரவுசிங் செண்டரில் வண்டிக்காரன் வேடத்தில் அனுப்பிய இமெயில் அது...

நாங்க தலைமை ஒற்றனாக்கும்..

Unknown said...

//அடுத்த பதிவு எப்போ ? இப்போ என்ன மசால்வடையும் லக்கி லூக்குமா ? //

தப்பு லக்கி லுக்கும் 7 அப்பும் ? ஆனா உங்க ஐடியாவும் நல்லா இருக்கு ட்ரைப்பன்னலாம்

Anonymous said...

எல்லாம் என்னிடம் குடித்த ஞானப்பாலடா..

பருத்திப்பால் சாப்பிடுகிறாயா ? அல்லது ஓமத்தம் ?

Unknown said...

//உக்காந்து யோசீப்பீங்களோ ? //


ஹி ஹி போண்டா சாப்பிட்டா மூளை வளருமாம் புதிய கண்டுபிடிப்பு " இல்லிங்க போண்டாவ நினைச்சா தானா வரும் இங்க பப்ளிஷ் பன்னனும் அவ்ளோதான் பாக்கி

Anonymous said...

இதுக்கு பதில் சொன்னீங்கன்னா உங்களுக்கு ஒரு போண்டா இலவசம்.

பன்றிக்கு நன்றி சொல்லி,
குன்றின் மேல் ஏறி நின்றால்,
வென்று விடலாம்..

அது என்ன ?

Anonymous said...

எங்கள் தங்கம் அனானிகளின் சிங்கம் ரவி பற்றிய பதிவுக்கு பின்னூட்டம் எகிற வேண்டாமா?

ரவி said...

////எங்கள் தங்கம் அனானிகளின் சிங்கம் ரவி பற்றிய பதிவுக்கு பின்னூட்டம் எகிற வேண்டாமா?/////

கலக்குங்க :))

Unknown said...

//பன்றிக்கு நன்றி சொல்லி,
குன்றின் மேல் ஏறி நின்றால்,
வென்று விடலாம்..

அது என்ன ? //


குன்றில் ஏறினின்று வென்றால் பன்றி என்னவாகும் ?

Anonymous said...

நீ முதலில் இதுக்கு பதில் சொல்லு...

தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டைப்பையன் கட்டையால் அடிப்பான் , அது என்ன ?

Unknown said...

//பருத்திப்பால் சாப்பிடுகிறாயா ? அல்லது ஓமத்தம் ? //

நமக்குப் பிடிச்ச ஒரே பால் "பீர்"பால்

ரவி said...

///குன்றில் ஏறினின்று வென்றால் பன்றி என்னவாகும் ?///

மகி, சட்டசபைக்கு போனாலும் போகும்..

Anonymous said...

///குன்றில் ஏறினின்று வென்றால் பன்றி என்னவாகும் ?////

தலை, வலை கூட பதிக்க வரும். இப்போதெல்லாம் தமிழ்மணத்தில் ஒரே பன்றி வாசம்..

Unknown said...

//தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டைப்பையன் கட்டையால் அடிப்பான் , அது என்ன ? //

தட்டானை அடிக்க கட்டை எதுக்கு போண்டா போதாதா?

திராவிடவெறியன் said...

அடுத்தது பெங்களூர் போண்டாவாமே?

Unknown said...

//கலக்குங்க :)) //

ரவி நீங்களுமா?

Unknown said...

//தலை, வலை கூட பதிக்க வரும். //

அது தெரிந்ததுதானே வலைபதிக்கும் பன்றி ஏன் வாய்திறக்க மறுக்கிறது?

Unknown said...

//சட்டசபைக்கு போனாலும் போகும்.. //

சட்டசபைக்கு பன்றி சென்று நாட்கள் பல ஆயின ":))

Unknown said...

//அடுத்தது பெங்களூர் போண்டாவாமே? //அதற்கு தனியாக ஒரு பதிவு போடவேண்டுமா?

Anonymous said...

///அது தெரிந்ததுதானே வலைபதிக்கும் பன்றி ஏன் வாய்திறக்க மறுக்கிறது?///

தலை, நீங்கள் வலைபதிக்கும் பன்றி என்று யாரை சொல்லுகிறீங்க ?

உண்மையில் ஏதாவது பன்றி வலை பதித்துக்கொண்டு தான் இருக்கிறதா ?

பதிச்சாலும் பதிக்கும்..

நாய் மியூசிக் போடும்போது பன்றி வலைபதிக்க கூடாதா என்ன ?

ரவி said...

//அடுத்தது பெங்களூர் போண்டாவாமே? //

பெங்களூர் லால் பாக்கில் போண்டா எல்லாம் விக்க மாட்டாங்க என்று நினைக்கிறேன்...

அருள் வாங்கி சென்றமாதிரி காய்ந்த வடை ஏதாவது கிடைத்தால் தான் உண்டு.

ஆனா பெங்களூர் போண்டா எல்லாம் சென்னாகிதே...(நல்லா இருக்கும்)

Anonymous said...

இப்படி நமக்குள் ஒரு ஒற்றன் இருப்பது தெரியாமல் போனதே தலை விடு என்னை எக்ஸ்பிரஸ்ஸுக்கு குண்டு வைத்துவிடலாம்

Unknown said...

//நாய் மியூசிக் போடும்போது //

அப்படியா குரைக்கவே இல்லை :))

Anonymous said...

இங்கே வடை கிடைக்கும் ஆனால் எதுவும் போண்டாவை விரும்பாது அதே போல் வலைபதிய வராது

Anonymous said...

செந்தழலார் நற்பணி மன்ற உறுப்பினர்களெ....

வேகமா வந்து பக்கத்த நெரப்புங்க.
அப்படியெ ஒரு பெரிய 'ஓஓஓ' பொடுங்க மகிக்கும்....

Anonymous said...

அடுத்த பதிவு எல்லோறாலும் அதிகம் விரும்பப் படுவது போண்டாவா இல்லை பாசந்தியா இல்லை வடையா?

Unknown said...

//பெங்களூர் போண்டா எல்லாம் சென்னாகிதே...(நல்லா இருக்கும்) //

சாப்பிட்டதுண்டா?

Anonymous said...

///தட்டானை அடிக்க கட்டை எதுக்கு போண்டா போதாதா?///

எங்க கடை போண்டாவை தரக்குறைவாக பேசியதை நான் கண்டிக்கிறேன்.

நான்கு நாட்களுக்கு முன் ஒரு வலைப்பதிவர் வந்தார். அவர் இங்கு வழக்கமாக ஒரு போண்டா வாங்கிவிட்டு இரண்டு போண்டா கொசுறு கேட்பவர்.

அவர் சதாப்தியில் பெங்களூர் செல்வதாகவும், அந்த டிரெயினில் விக்க நூறு போண்டா வேண்டும் என்று கேட்டார்.

சரி என்று போட்டு கொடுத்தோம். காசு கேட்டதுக்கு, நான் ஒரு போண்டா வாங்கினா நூறு போண்டா வாங்கினமாதிரி என்று ரஜினி ஸ்டைலில் சொல்லிவிட்டு - நாங்கள் என்ன பேசுகிறோம் என்று காது கொடுத்து கேட்காமல் - இது போலி போண்டா, எலிக்குட்டி சோதனையில் தெரிந்த து என்றார்.

எப்படி சொல்கிறீர்கள் என்று கேட்டதுக்கு, கையோடு கொண்டு வந்திருந்த இஞ்சின் இல்லாத மாருதி ( சமீபத்தில் 1945 ல் வாங்கியது என்றார்) காரில் இருந்து எடுத்த எலிக்கு அந்த போண்டாவை போட்டார்.

அந்த எலி முகந்து பார்த்தவுடன் செத்து சுண்ணாம்பானது.

அதன் மூலம் ஏதோ பெரிய அறிவியல் கண்டுபிடிப்பை நிகழ்த்திய மாதிரி, ஜெர்மன், பிரஞ்சு, பேஜ் பூரி, நார்வேஜியன் ஆகிய மொழிகளில் எங்களை ஏசினார்.

மலேசியாவில் இருந்து வந்திருந்த எங்கள் கெஸ்ட் ஒருவர் என்ன என்ன என்று கேட்டபடி கிட்டே வந்தது தான் தாமதம்.

போண்டாக்களை அள்ளிக்கொண்டு, இஞ்சின் இல்லாத காரை தள்ளிக்கொண்டு (சமீபத்தில் 1945ல் வாங்கியது), ஓடியே போய்விட்டார்.

போகும்போது மருதநாயகமும் அவனே, நம் விடாதுகருப்புவும் அவனே, என்று புலம்பியபடி சென்றார்.

அவ்ளோதான்.

இந்த பின்னூட்டம் வழங்கி கலாய்ப்பது,
அ.மு.க பொது செயலாளர்,
அல்சூர்,
பேங்களூர்.

ரவி said...

/////சாப்பிட்டதுண்டா?////

ம்ம்ம்ம்...என்ன கொஞ்சம் இனிக்கும்..இனிப்பு இல்லாமல் இவங்களால சாப்பிடமுடியாது..

:))))))))

Unknown said...

// இது போலி போண்டா, எலிக்குட்டி சோதனையில் தெரிந்த து என்றார்.

எப்படி சொல்கிறீர்கள் என்று கேட்டதுக்கு, கையோடு கொண்டு வந்திருந்த இஞ்சின் இல்லாத மாருதி ( சமீபத்தில் 1945 ல் வாங்கியது என்றார்) காரில் இருந்து எடுத்த எலிக்கு அந்த போண்டாவை போட்டார்.//

இதெல்லாம் எப்படி வடை சாப்பிட்டுக்கொண்டே யோசிப்பீர்களோ?

:)))
:))0

Unknown said...

//ம்ம்ம்ம்...என்ன கொஞ்சம் இனிக்கும்..இனிப்பு இல்லாமல் இவங்களால சாப்பிடமுடியாது..//

ஆஆஆஆஆ ரவி என்ன இது கயமை இனிக்கிறது என்றாலும் புளிக்கிறது என்றாலும் போண்டா சாப்பிடலாமா ?

Anonymous said...

சங்கம் சாகிறவரைக்கும் பின்னூட்டம் போடும்.

செத்தபிறகு

மீள்பின்னூட்டம் போடும்.

Anonymous said...

//அ.மு.க பொது செயலாளர்,
அல்சூர்,
பேங்களூர்.//

ஏ எவண்டா அது எம்பதவிய எடுத்துக்கிட்டது...

ரவி said...

////ஆஆஆஆஆ ரவி என்ன இது கயமை இனிக்கிறது என்றாலும் புளிக்கிறது என்றாலும் போண்டா சாப்பிடலாமா ?////

என்னங்க அநியாயமா இருக்கு, இனிமே உலகத்தில் யாருமே போண்டா சாப்பிட கூடாது என்பது போல.....

நல்ல வளமான உளுந்துல செஞ்ச போண்டா...

பெரிய போண்டாவா ஒரு ரெண்டு எடுங்க..

நல்ல அகலமான கிண்ணத்துல போடுங்க..

சாம்பாரை அது முழுகிறவரைக்கும் ஊத்துங்க..

கொஞ்ச நேரம் ஊற விடுங்க...

பிறகு ஒரு ரெண்டு ஸ்பூனை கையில் எடுங்க...

நல்ல பெரிய ஸ்பூனா இருக்கனும்..

சூடு ஆறுமுன்..

சாம்பாரோட வெட்டி எடுங்க..

இன்னோரு ஸ்பூனால கொஞ்சம் சாம்பாரை அள்ளி அதன் தலைமேல ஊத்துங்க..

பிறகு அப்படியே நல்லா வாயில் தள்ளுங்க..

டுர்ர்ர்ர்ர் என்று ஒரு ஸ்பூன் சாம்பாரையும் அதுக்கு பின்னூட்டமா உள்ளே தள்ளுங்க..

என்ன, போண்டா ஆர்டர் செய்ய கை ப்ரபரக்குதா...

:))))))))))))

Anonymous said...

//சங்கம் சாகிறவரைக்கும் பின்னூட்டம் போடும்.//

யாருப்பா அது அபசகுனமா பேசுவது எக்ஸ்பிரஸ் இருக்கும் வரை, சங்கத் தலை ரவி இருக்கும் வரை, சாவே கிடையாது

Anonymous said...

///ஏ எவண்டா அது எம்பதவிய எடுத்துக்கிட்டது...////

சாரி செல்லக்குட்டி..நான் அவுஸ்திரேலியா தான், இருந்தாலும் ஒரு நேட்டிவிட்டி டச்சுக்காக எடுத்தேன்.

மன்னிக்கவும்.

Anonymous said...

////யாருப்பா அது அபசகுனமா பேசுவது எக்ஸ்பிரஸ் இருக்கும் வரை, சங்கத் தலை ரவி இருக்கும் வரை, சாவே கிடையாது////

அட, எதிராளி சாகும் வரைப்பா..

Unknown said...

//என்ன, போண்டா ஆர்டர் செய்ய கை ப்ரபரக்குதா//

ஆகா இந்த மாதிரி பின்னூட்ட மழைபொழியும் நேரம் போண்டா கதை சொல்லி நம் சங்க சின்னங்கள் வடை சாப்பிட போகுமாறு செய்ய நினைக்கும் உங்கள் கயமை புரிகிறது

Anonymous said...

போண்டாவில் இருக்கும் மிளகு வாயில் மாட்டினா துப்புவீங்களா ? துன்னுவீங்களா ?

Unknown said...

அம்பது அடிக்க உதவிய உடன்பிறப்பு அனானிகளுக்கு அண்ணன் செந்தமிழ் ரவி ஹைதராபாத் சந்திப்பில் பிரியானி வாங்கித் தர இசைந்துள்ளார் என்பதை பசியோடு தெரிவித்துக் கொள்கிறேன்

Anonymous said...

பெங்களூரில் எங்கே போண்டா கிடைக்கும் என "திரும்பிப் பார்க்கிறேன்"

Anonymous said...

//அட, எதிராளி சாகும் வரைப்பா.. //

எதிராளி அதற்குள் இறந்துபோனால் நாம் யாரோடு விளையாடுவது ? நமக்கு ஆட்டம் முக்கியம் அன்பர்களே

Anonymous said...

//பெங்களூரில் எங்கே போண்டா கிடைக்கும் என "திரும்பிப் பார்க்கிறேன்" //

திரும்பிப் பார்த்தது போதும் எக்ஸ்பிரஸிடம் எச்சரிக்கை வேண்டும்

Anonymous said...

//பெங்களூரில் எங்கே போண்டா கிடைக்கும் என "திரும்பிப் பார்க்கிறேன்" //

திரும்பிப் பார்த்தது போதும் எக்ஸ்பிரஸிடம் எச்சரிக்கை வேண்டும்

Anonymous said...

Waw...Its really Intersting to Read this post and anony comments.

Anonymous said...

//மிளகு வாயில் மாட்டினா துப்புவீங்களா ? துன்னுவீங்களா ? //

அது பசியாய் இருப்பதை பொருத்து ருசியாய் இருந்தால் துன்னுவேன் பசியாய் இருந்தால் துப்புவேன்

Unknown said...

//Waw...Its really Intersting to Read this post and anony comments//

அய்யா யாருங்க நீங்க பயணம் புதுசா ?

Anonymous said...

///ஏ எவண்டா அது எம்பதவிய எடுத்துக்கிட்டது...////

சாரி செல்லக்குட்டி..நான் அவுஸ்திரேலியா தான், இருந்தாலும் ஒரு நேட்டிவிட்டி டச்சுக்காக எடுத்தேன்//

ஓ நம்ம தாய் கழகமா?....மன்னிச்சுடுங்க தல...
நீங்க தான் தலைவர், பரவால்ல நான் பெருளாளரா + உப தலைவராக இருக்கேன்.

Anonymous said...

///காலம் - பதில் தெரியாது என்கிறது
:)////

முதலில் ஒரு பின்னூட்டம் போட்டுவிட்டு பதிவு பக்கமே வராத கோவியாரை அனானி முன்னேற்ற கழகம் வன்மையாக கண்டிக்கிறது.

Anonymous said...

ஏங்க செந்தழ,

நீங்க சொல்லறது மைஸுர் பொண்டா...உருளைகிழங்கு பொண்டா பத்தியும் சொல்லுனும்.

Anonymous said...

இங்கே அனானி ஆட்டம் ஆடலாமா?

அனானி அண்ணாமலை
அனானி முன்னேற்றக் கழகம்
அமைந்தகரை

Anonymous said...

//Waw...Its really Intersting to Read this post and anony comments//

i am working with a tamil blogger. but i used to read tamil blogs. basically tamil blogs was boarding (for me), but now a days these anony people making the blogs like fun boxes..

i really enjoyed your posts..

Anonymous said...

////ஓ நம்ம தாய் கழகமா?....மன்னிச்சுடுங்க தல...
நீங்க தான் தலைவர், பரவால்ல நான் பெருளாளரா + உப தலைவராக இருக்கேன்.///

தலைவர் பதவி கொடுத்ததுக்கு நன்றி. சில பல தரமான பின்னூட்டங்கள் வந்துகொண்டே இருக்கிறது.

பாருங்க, பாருங்க, பாத்துக்கிட்டே இருங்க.

dondu(#11168674346665545885) said...

"நான்கு நாட்களுக்கு முன் ஒரு வலைப்பதிவர் வந்தார். அவர் இங்கு வழக்கமாக ஒரு போண்டா வாங்கிவிட்டு இரண்டு போண்டா கொசுறு கேட்பவர்.

அவர் சதாப்தியில் பெங்களூர் செல்வதாகவும், அந்த டிரெயினில் விக்க நூறு போண்டா வேண்டும் என்று கேட்டார்.

சரி என்று போட்டு கொடுத்தோம். காசு கேட்டதுக்கு, நான் ஒரு போண்டா வாங்கினா நூறு போண்டா வாங்கினமாதிரி என்று ரஜினி ஸ்டைலில் சொல்லிவிட்டு - நாங்கள் என்ன பேசுகிறோம் என்று காது கொடுத்து கேட்காமல் - இது போலி போண்டா, எலிக்குட்டி சோதனையில் தெரிந்த து என்றார்.

எப்படி சொல்கிறீர்கள் என்று கேட்டதுக்கு, கையோடு கொண்டு வந்திருந்த இஞ்சின் இல்லாத மாருதி ( சமீபத்தில் 1945 ல் வாங்கியது என்றார்) காரில் இருந்து எடுத்த எலிக்கு அந்த போண்டாவை போட்டார்.

அந்த எலி முகந்து பார்த்தவுடன் செத்து சுண்ணாம்பானது.

அதன் மூலம் ஏதோ பெரிய அறிவியல் கண்டுபிடிப்பை நிகழ்த்திய மாதிரி, ஜெர்மன், பிரஞ்சு, பேஜ் பூரி, நார்வேஜியன் ஆகிய மொழிகளில் எங்களை ஏசினார்.

மலேசியாவில் இருந்து வந்திருந்த எங்கள் கெஸ்ட் ஒருவர் என்ன என்ன என்று கேட்டபடி கிட்டே வந்தது தான் தாமதம்.

போண்டாக்களை அள்ளிக்கொண்டு, இஞ்சின் இல்லாத காரை தள்ளிக்கொண்டு (சமீபத்தில் 1945ல் வாங்கியது), ஓடியே போய்விட்டார்.

போகும்போது மருதநாயகமும் அவனே, நம் விடாதுகருப்புவும் அவனே, என்று புலம்பியபடி சென்றார்."
ரொம்ப ரசித்த வரிகள். ஆமாம், யார் அவர்? நேரில் பார்த்ததேயில்லையே?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

சமீபத்திய எழுத்தாளர்களில் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளர் பாஸந்தி.

இவரது எழுத்துக்க்ளை மொத்தம் பத்து பேர் படித்துள்ளதாக மு.மா.மே ஆய்வு தெரிவிக்கிறது.

Unknown said...

முதலில் ஒரு விளம்பரம் " அனானி , மற்றும் ப்ளாக் உள்ள இல்லாத சும்மா கூகிள் கொண்டுவந்து உட்டதால இந்த பக்கம் வந்து எட்டிப்பாத்த யாரா இருந்தாலும் ஒரு பின்னூட்டம் போடுங்க..... உங்கள் பின்னூட்டம் உடனடியாக சம்மந்தப் பட்ட பதிவில் வெளியாக வேண்டுமா உடனே பின்னூட்டமிடுங்கள்" இங்கயே

Unknown said...

//இங்கே அனானி ஆட்டம் ஆடலாமா?//

இதென்னா புதுக்கேள்வி அடிச்சி ஆடுங்க ... இதுவரைக்கும் முக்கால்வாசிப் பேரு அதான செய்ராங்க இங்க

Anonymous said...

மீண்டும் கோயிந்தையே உதாரனமாக எழுக்கிறேன்.

கோலபாரதியிடம் கடன் வாங்கி.

கோயிந்து பாண்டிச்சேரி அரசு கள்ளுக்கடையில் ( கடை நெ 2 - வில்லியனூர் கொம்யூன்) முட்டை போண்டா போடும் பொன்னாத்தாவிடம் சரண் அடைந்துவிட்டதாக தெரிகிறது.

மேலதிக தகவல்கள் விரைவில்.

Unknown said...

//i really enjoyed your posts.. //

Thanks Chaithanya but if u read all of my posts i think U will Change your Mind :))

ரவி said...

///ரொம்ப ரசித்த வரிகள். ஆமாம், யார் அவர்? நேரில் பார்த்ததேயில்லையே?

அன்புடன்,
டோண்டு ராகவன்////

பாருங்க மகி, டோண்டுவே ரசிக்கும்படி பின்னூட்டம் போட்டு இருக்கும் அனானிக்கு ஒரு

ஓஓஓஓஓஓஓஓஒ

Anonymous said...

//நீங்க சொல்லறது மைஸுர் பொண்டா//

மைசூர் போண்டாவை பெங்களூர் போண்டா என கதைவிட்ட ரவிக்கு இரண்டுகிலோ பெங்களூர் போண்டா (ஊசியது) பார்சலில் அனுப்பி வைக்கப் படும்

லால்பாக் போண்டாகடை

Anonymous said...

/////Thanks Chaithanya but if u read all of my posts i think U will Change your Mind :))/////

maGe...

my Friend is Suggesting very Few posts for me, becos basically i am telugu, i am reading tamil using tamil blogs. i can read 4 to 5 posts per day..

in those your post must be there.

:) keep posting. as of my knowledge around 20 people in my office are reading your posts.

- Chaithanya

ரவி said...

///மைசூர் போண்டாவை பெங்களூர் போண்டா என கதைவிட்ட ரவிக்கு இரண்டுகிலோ பெங்களூர் போண்டா (ஊசியது) பார்சலில் அனுப்பி வைக்கப் படும்///

உருளைக்கிழங்கு போண்டாவில் உருளைக்கிழங்கு இருக்கும்..

மைசூர் போண்டாவில் மைசூர் இருக்குமா ?

அதனால் தான் மைசூர் போண்டா பற்றிய பேச்சு எடுப்பதில்லை.

ரவி said...

////மேலதிக தகவல்கள் விரைவில்.///

இதில் தொடர்ச்சி வேறா ?

Anonymous said...

மாலாவை சந்திக்க வாங்க.

எங்கே என்று கேட்கிறீங்களா ?

அங்கே தான்.

நான் பீன்ஸோடு அங்கே ஆஜராவேன். பிறகு பீன்ஸோடே அப்பீட் ஆவேன்.

எவனும் கேக்கப்படாது..

Unknown said...

//my Friend is Suggesting very Few posts for me, //

அந்த நண்பருக்கும் எனது நன்றிகளை சொல்லிவிடவும் :))

(((மகி நீ பெரியாளா ஆயிட்ட போல :)))

Anonymous said...

கோவியார் நமது (அனானிகள்) எதிரி.....அவர பற்றி எதுவும் பேச வேண்டாம்......அவர் வயதிற்காக இந்த கண்டனத்துடன் அவரெ விட்டுவிடுவொம்...

Unknown said...

//இதில் தொடர்ச்சி வேறா ? //


ஏன் ரவி உங்களுக்கு பொறாமை --- நீங்க சந்தோஷப் படவேண்டிய விஷயம் தானே

Unknown said...

//மைசூர் போண்டாவில் மைசூர் இருக்குமா ?//

அதாவது பரவாயில்லை இங்க ஒருத்தர் பாஸந்திக்குள் வாஸந்தி இருக்குமான்னு கேக்குறார்பா

Unknown said...

மாலனுக்கு ஏன் ஐ? மெட்ராஸ் ஐ ஆ?

Anonymous said...

பீன்ஸோடு ஒரு பதிவர் குன்ஸாவாக இருப்பது (நட்புதான்) பல வலைப்பதிவர்களுக்கு எரிச்சலாம்.

மாலை மங்கும் நேரங்களில் காத்துவாக்கா கிளம்பி இரண்டு பேர் மட்டும் பார்க்கும் ஆர்ட் பிலிம்களுக்கு அப்பீட் ஆகுறாங்களாம்.

இதில் மற்ற வலைப்பதிவர்களை தேடித்தேடி போய் உன் கவிதை நல்லாருக்கு, உன் கதை நல்லா இருக்கு என்று வெட்டி அரட்டை அடித்து அலுவலக நேரத்தை வீணடிக்கிறாங்களாம்.

இதில் கடுப்பான அருள் வந்த ஒரு வாலிபர் மற்ற வலைப்பதிவரிடம் புலம்பி தள்ளிவிட்டாராம்.

யாருன்னு கேக்காதீங்க. விரைவில் எங்கள் தலைவர் சாம்பு பதிவிடுவார், அப்போ பாத்துக்கோங்க.

Unknown said...

என்ன கோவியார் சரியான கிழம் என்று முடிவே பன்னியாச்சா அய்யோ... இது தெரியாமல் நான் அவரை ஜிகே என கூப்பிட்டு விட்டேனே... சரி இனிமேல் ஜிகே அய்யா என அழைக்கிறேன்... ஆனால் என்ன சொன்னாலும் அனானிகளுக்கு ஆதரவு தரமாட்டேங்கிறார் என்ன பன்னலாம் ஐடியா குடுங்க

Anonymous said...

//ஏங்க செந்தழ,//

ஏ யாரது எங்க தங்க தலைவரை தழ, கொழன்னு 5 அறிவு மர(மா) (மண்டையா) குப்பிடரது?

ரவி said...

////கோவியார் நமது (அனானிகள்) எதிரி.....அவர பற்றி எதுவும் பேச வேண்டாம்......அவர் வயதிற்காக இந்த கண்டனத்துடன் அவரெ விட்டுவிடுவொம்...///

ஒரு நாளைக்கு ஆயிரம் பின்னூட்டம் போடும் அபூர்வ சிந்தாமணி அவர்.

அவர் பதிவுகளில் அனானி ஆப்சன் அளிப்பார், கவலைப்படாதீங்க.

அதுக்காக அவரை திட்டாதீங்க.

அப்படி என்ன வயசாயிடுத்து அவருக்கு..

2007 ஜனவரியோட 19 ஆகுது...

Unknown said...

அய்யா வாத கோடாரி சமயம் பாத்து இத சாம்பு பதிவா மாத்த பாக்குறீங்க ? என்னத்த நான் சொல்ல ?

ரவி said...

///மாலனுக்கு ஏன் ஐ? மெட்ராஸ் ஐ ஆ?///

எனக்கு ஒரு சந்தேகம், மெட்ராஸ் ஐ சிங்கப்பூர்ல என்ன பேருல கூப்பிடுறாங்க ? அமேரிக்காவுலயும் அது மெட்ராஸ் ஐ யா ?

Anonymous said...

//மகி...!
என்னைவச்சி காமெடி கீமடி பண்ணலையே...!//

ஆமா இவரு பெரிய கால கண்ணாடி...அனானி எதிரி GK வா/ஓ ழ்/ழிக... (GK, விளையாட்டிற்காக, தயவு செய்து மன்னிக்கவும்)

ரவி said...

////ஏன் ரவி உங்களுக்கு பொறாமை --- நீங்க சந்தோஷப் படவேண்டிய விஷயம் தானே////

ரொம்ப ஸந்தோஸம் போங்க.

Anonymous said...

////அய்யா வாத கோடாரி சமயம் பாத்து இத சாம்பு பதிவா மாத்த பாக்குறீங்க ? என்னத்த நான் சொல்ல ?////

நாங்க அப்படித்தான் மாற்றுவோம். நீர் ஜஸ்ட் படித்து சிரியும் ஐயா.

உமக்கு பின்னூடம் போடும்போது எமது மடிக்கணினியே துள்ளுகிறது.

Unknown said...

//எனக்கு ஒரு சந்தேகம், மெட்ராஸ் ஐ சிங்கப்பூர்ல என்ன பேருல கூப்பிடுறாங்க ? அமேரிக்காவுலயும் அது மெட்ராஸ் ஐ யா ? //

எல்லா இடமும் என்ன பேரில் என்று புது வினா எழுப்பிய பின்னூட்ட கயமை எனும் பு வார்த்தை கண்ட ரவிக்கு இந்த பதிவின் சிறந்த பின்னூட்டம் எனும் பட்டமும்.. பின்னூட்டம் இன் எ நட்ஷெல் எனும் ஓரியல்லி புத்தகமும் மின்னஞ்சலில் அனுப்ப படுகிறது

Unknown said...

//உமக்கு பின்னூடம் போடும்போது எமது மடிக்கணினியே துள்ளுகிறது//

கெட்டியா புடிச்சி போடுங்க ஒடைஞ்சிபோனா காம்பன்சேசன் குடுக்க நான் ஒன்னும் இங்க கிழுமத்தூர் பதிப்பகம் நடலைங்க :))

ரவி said...

மகி, பின்னூட்ட கயமை என்ற வார்த்தை கண்டவர் லக்கி லூக்..

அறிவாலய லைப்ரரியில் இருந்தி அள்ளியதா என்று தெரியவில்லை...

அவரை கேட்டால் தான் தெரியும்..

Unknown said...

//ரொம்ப ஸந்தோஸம் போங்க. //

இவரு இப்ப ஆரம்பிச்சி எப்ப முடிப்பாரோ எல்லாம் புதுஸா வந்திருக்க ப்ரொபைல் பெரியாருக்குதான் வெளிச்சம்

கோவி.கண்ணன் [GK] said...

///ஆமா இவரு பெரிய கால கண்ணாடி...அனானி எதிரி GK வா/ஓ ழ்/ழிக... (GK, விளையாட்டிற்காக, தயவு செய்து மன்னிக்கவும்) //

எதுன்னாலும் பண்ணிக்கிங்க ஓய்...!
அசிங்கமாக சொல்லாமல் இருந்தால் போதும் !

எனக்கு யாரோ வயச்சாச்சின்னு சொல்றாங்களாம் யாரு அது ?

நான் மேஜர் ! எனக்கு 18 வயசு ஆகி ... அதுக்கபறம் மறுபடியும் மேஜர் தான்
:))

Unknown said...

//மகி, பின்னூட்ட கயமை என்ற வார்த்தை கண்டவர் லக்கி லூக்..//

அய்யோ லக்கி தப்பு நடந்து போச்சிங்கோ சரி பரவாயில்ல இதுக்கு அடுத்த பதிவு உங்கள பத்தி போட்டு சரி பன்னிடலாம்

Anonymous said...

//கிழுமத்தூர் பதிப்பகம் நடலைங்க :))/
//

பத்ரிக்கு போட்டியா வடக்கு பதிப்பகம் ஆரம்பிக்கலாம் என்று இருந்தால் நீர் என்ன இப்படி திட்டம் போடுகிறீர்..

(பத்ரி கோச்சுக்கமாட்டார் என்று இந்த அனானி என்னுகிறது )

Anonymous said...

//எனக்கு யாரோ வயச்சாச்சின்னு சொல்றாங்களாம் யாரு அது ?

நான் மேஜர் ! எனக்கு 18 வயசு ஆகி ... அதுக்கபறம் மறுபடியும் மேஜர் தான்//

ஆமா பாகிஸ்தான் பார்டர்ல துப்பாக்கி புடிச்சி சுட்ருறாரு போங்கப்பா இவரு மேஜருன்னா நாங்க மைனருங்க

Anonymous said...

எங்க தாத்தா கூட ஜம்புலிங்கத்தை எதிர்த்து - கட்டிலுக்கு அடியில் ஒளிந்தவர்தான்.

:)))))))))))))))))))))))))))

ஸரியா ?

Unknown said...

இந்த பின்னூட்டங்களை பாத்தா எனக்கு "ஒன்னு தெரியுது " நான் நூறடிச்சிருக்கேன் இன்னொன்னு அதி "எண்ண"ன்னு சொல்ல மாட்டேன் போங்க

Anonymous said...

//சரி இனிமேல் ஜிகே அய்யா என அழைக்கிறேன்... ஆனால் என்ன சொன்னாலும் அனானிகளுக்கு ஆதரவு தரமாட்டேங்கிறார் என்ன பன்னலாம் ஐடியா குடுங்க//

அனானி முன்னேற்ற கழகத்திலிருந்து ஒரு போட்டி கோவியாரை உருவாக்க முடிவு செய்துள்ளோம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்...

பொருளாளர்அ மு க;
செந்தழலார் பாசறை,
அல்ஸுர், பெங்களூர்.

Anonymous said...

எல்லோரும் வாங்க பெங்களூருக்கு போய் போண்டா சாப்பிடுவோம்.

Unknown said...

//எல்லோரும் வாங்க பெங்களூருக்கு போய் போண்டா சாப்பிடுவோம்//

இதற்கான ஏற்பாடுகள் செய்ய இசைந்த பெங்களூர் வலைஞானி செந்தமிழ் ரவிக்கு ஒரு ஓஓஓஓஒ

Anonymous said...

//எல்லோரும் வாங்க பெங்களூருக்கு போய் போண்டா சாப்பிடுவோம். //

செந்தழ சார்பில் எல்லொரயும் வருக வருக என்று வரவெற்கிறோம்...ஆனா GK மெஜர் மட்டும் கூடாது,

Unknown said...

என் எண்ணம் சரியாக இருப்பின் இக்காலம் மட்டுமல்ல எப்போதைக்கு வருவார் என்று தெரியாது :)))

Unknown said...

ஆமா ரவிதான் எல்லாத்துக்கும் பொறுப்பு அவரின் கணக்கின் எல்லாறும் சாப்பிடலாம் "தனித்திரு, விழித்திரு, பசித்திரு ...."

போலிஸ்காரன் said...

////மகி, பின்னூட்ட கயமை என்ற வார்த்தை கண்டவர் லக்கி லூக்..//

ஆனால் அதை வைத்து கும்மி அடிப்பது நாங்க தான்.

Anonymous said...

எப்படியோ இந்த நாள் இனிய நாள் ஆனது. நாளைக்கு யாரோட பதிவுலே நம்ம கொலைவெறியை காட்டுறது?

ரவி said...

ஊருகாயாகிட்டேன் போல நானு...

:)))))))))

போட்டி கோவியாரா...ஒரு பின்னூட்ட நாயகர் பத்தாதா இங்கே ?

Anonymous said...

இங்க எட்டிப் பாக்குறவங்கள கட்டி வச்சி, பின்னூட்டம் தட்டி விட்டாதான் வெட்டி விடறீங்களாம். உண்மையா?

Anonymous said...

"அனானிகள் சார்பில் கோவியாருக்கு இங்கும் ஒரு கண்டனம்...."

அவர் பதிவில் எங்களுக்கு இடம் தரும்வரை, அவர் பின்னுட்ட்ங்களிடும் இடங்களில் நாங்க மேல சொன்ன கண்டன வாக்கியங்களை இடுவதாக அ மு க பாசறை தீர்மானம்....பதிவர்கள் தாங்களாகவே தங்கள் பதிவுகளில் மேலெ கூறிய வாக்கியங்களை சேர்த்திட அ மு க அறிவுருத்துகிறது.


அ மு க பாசறை
அல்சுர், பெங்களூர்

Anonymous said...

எல்லாறுக்கும் வணக்கம் அனானிகளுக்கு ஒரு தனி பதிவு தொடங்கி இருக்கோம் எல்லாரும் அங்க வந்து ஆலோசனை சொல்ல அன்போடு அழைக்கிறோம்

http://amkworld.blogspot.com

ரவி said...

யூனானிமஸ் என்று யாரும் பதிவு ஆரம்பிக்காம இருந்தா சரி....

Anonymous said...

He want to start a KUBU Club in HyD. pls. watch him. He colect Money to build a Kusbu Temple.
he search aiyar.

கதிர் said...

மகி!
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்!!

உங்க ஒவ்வொரு பதிவிலயும் மொத போணி GK தான் பண்றாரு, எப்படி?

எப்போ பதிவு போடுவீங்கன்னு அவர் காத்துகிட்டு இருக்காரா? இல்ல, பதிவு போடறதுக்கு முன்னாடி அவருக்கு சொல்லிருவிங்களா?

Anonymous said...

Hi Mahi...

I dont thing someone will start a Rasigar Manram for Dondu. its Surly Mr.Dondu, Started his (Poli) Raigar Manram.

More then that, Some one Called Vizalatchi is Giving a Pinnootam for Mr.Dondu. that is his Wife, and Mr.Dondu only running that website also.

ஆவி அம்மணி said...

//சங்கம் ஒன்றை தொடங்கும் முயற்சியில் சம்மந்தப் பட்ட பதிவர் இருப்பதாக இந்த மெயிலை எனக்கு அனுப்பிய அன்பர் தெரிவிக்கிறார்
//

ஆவியுலக ஆராய்ச்சியாளர்கள் சங்கம்தானே! ஆரம்பிக்கட்டும். ஆரம்பிக்கட்டும்.

(நேற்றைய அனானி, இன்றைய ஆவி, நாளை....!?)