அப்ப நீங்க பன்றது ?

அடக் கொடுமையே பிஜேபி ஆட்சிகாலத்திலதான் அந்த பிரம்மச்சாரிய ஜனாதிபதியாக்குனாங்களா? அப்ப இவங்க எல்லாம் எருமைங்களா?
இந்துத்துவ முகத்தை மூடிக்க என்ன மாதிரியெல்லாம் கலாமுக்கு கொடிதூக்குறானுங்கப்பா அதுக்கு இந்த எருமையே பரவாயில்லை

ஹீம் நான் என்னத்த சொல்ல ?

சிவாஜி படம் நான் இன்னும் திருட்டு விசிடிகிடைக்காததால் பார்க்கவில்லை. அதற்குள் சிவாஜி படத்தில் பலரை கேவலப்பட்டுத்தி இருப்பதாக பார்த்த நண்பர்கள் புலம்புகிறார்கள்.

சூப்பர் ஸ்டார் என்று சொல்லிக் கொள்ளும் நடிகர், விவேக்குடன் சேர்ந்து கொண்டு இந்து கோவிலின் புனிதத்தை கெடுத்துவிட்டார். அதாவது கோவில் என்றால் பிகர் பார்க்க வரும் இடம் போல் படத்தில் காட்சியை அமைத்திருக்கிறார்கள். இதைப் பார்த்து இந்துக்கள் கண்ணீர்வடிக்கிறார்களாம்

அடுத்து ஒரு இசை கருவிகள் விற்கும் கடையில் மாபெரும் சண்டை காட்சிகள். இந்த காட்சியில் பல்வேறு இசைக்கருவிகள் உடைக்கப்படுகிறது. இந்த குறிப்பிட்ட காட்சிக்கு இசை அமைத்த ஏ.ஆர்.ரகுமான் நிச்சயம் கலங்கி இருப்பார். மேலும் கலைத்தாய் சரஸ்வதியின் அம்சம் பொருந்திய இசை கருவிகளை பிரமாண்டம் என்ற பெயரில் உடைத்து இந்துக்களை புண்படுத்திவிட்டார்களாம்

கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றச் சொல்லி ஒரு இஸ்லாமியரை குல்லாவுடன் காட்டி இருப்பார்கள். இஸ்லாமியர்கள் என்றாலே கருப்பு பணம் மாற்றுபவர்கள் என்று ஒரு தவறான இமேஜை ஏற்படுத்துவதால் தமிழக இஸ்லாமியர்களுக்கு மத்தியில் பெரும் கண்டன குரல்கள் ஒலிக்கின்றன.

ரஜினி படங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு ஆபசமாக கதநாயகி ஆடைகுறைப்பு செய்து இருக்கிறார். படத்தில் ஷிரேயாவுக்கு பெயர் தமிழ்செல்வி. தமிழ்நாட்டு தமிழ்செல்விகள் அரைகுறை ஆடைகளில் இருப்பவர்களா ? தமிழ்பெண்களையும் படத்தில் கேவலப்படுத்தி இருப்பதாகவும் சொல்கிறார்கள்.


இன்னும் என்னவெல்லாம் இருக்கோ தெரியலையே.... படம் பாத்தாத்தான் தெரியும்.

விசயங்களை பகிர்ந்துகொண்ட ப்ரீலான்ஸ் ப்ளாக்கருக்கு நன்றி
கடந்த இரண்டு நாட்களாக எனது இன்னொரு பதிவான கிழுமத்தூர் எக்ஸ்பிரஸிலும் இந்த கதம்பத்திலும் விரும்பத் தகாத பின்னூட்டங்கள் மற்றும் வசவுகள் தனிமனித தாக்குதலின் உச்ச கட்டமாக என்னை தனிப்பட்ட முறையில் தக்குவதால் இந்த பதிவுலகை விட்டு முற்றாய் விலகுகிறேன். இனி என் பதிவுகள் எந்த திரட்டியிலும் வராது. சில கீழ்ப்பாக்க கிறுக்குகள் என் கருத்து சுதந்திரத்தின் அடிநாதத்தினை கேள்விக்குள்ளாக்கும் விதமாக தொடர்ந்து பின்னூட்டியும்தனி மடலிலும் என்னை மிரட்டியும் திட்டியும் வருவதால் இதற்கு மேல் இந்த பாழாய் போன சமூகம் எப்படி ஆனால் என்ன?
இனிமேலும் எழுதி இந்த மாக்களுக்கு என்னதை சாதித்திட போகிறோம், நான் எழுதுவதால் இந்த உறுப்படாத சமூகம் திருந்திவிடவா போகிறது. என்னை தனிப்பட்ட முறையில் தாக்குவதால் எனக்கும் கொஞ்சம் அசிங்கமாக இருக்கிரது அதனால் எதற்கு இந்த பொழுதை காலிசெய்யும் போக்கத்த வேலை என பதிவுலகை விட்டே விலகுகிறேன்.........
..........
இப்படி ஒரு பதிவைத்தான் அந்த முழு லூசு என்னிடம் இருந்து இன்று எதிர்பார்த்திருப்பான் அவன் யாராய் இருந்தாலும் என்னை தனிப்பட்ட முறையில் தாக்கி என்னை மனசளவில் சோர்வடைய வைக்க வேண்டும் என்பது அந்த நபரின் எண்ணமாய் இருப்பின் அய்யோ பாவம் நான் என்ன செய்ய? இந்த மாதிரி அரட்டல் களுக்கும் மிரட்டல்களுக்கும் மிரள்பவனாய் இருந்திருந்தால் இந்த பதிவுலகில் குப்பைகொட்ட நானும் வந்திருக்க மாட்டேன். போராட்ட குணம் எனக்குள் எப்போதும் நிறைந்திருப்பது. எவனுக்காகவும் நான் இந்த பதிவுலகை விட்டு போய்விடுவேன் என்றோ இல்லை நான் எழுதும் கருத்துக்களில் இருந்து என்னை மாற்றிவிடலாம் என்றோ மல்லாக்கப் படுத்து கனவு கானும் பகல் தூக்க வேலைகளை இனி விட்டுவிடவும். என்னை தனிப்பட்ட முறையில் எனது குடும்பத்தை தாக்கி எழுதுவதால் எல்லாம் என்னை நீ சோர்வடையச் செய்ய முடியாது என்மேல் வந்து விழும் உன் கழிவுகள் எல்லாம் என்னை மேலும் மேலும் உரமாக்கும்.
நான் எழுதுவதை நிருத்த வேண்டுமானால் அதற்கு இரண்டே காரணங்கள் தான் இருக்க முடியும் ஒன்று நானாகவே எழுதுவதை விட்டுவிட வேண்டும் இல்லை நான் செத்துப் போக வேண்டும். இது இரண்டுமே இப்போதைக்கு நடப்பதாய் தெரியவில்லை. அதனால் அடுத்த முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள் அனானி.
நீங்க அரசியலுக்கு வருவீங்களா?’

சினிமா நட்சத்திரமா இருக்கிற ஒவ்வொருவரும் இந்தக் கேள்வியைச் சந்திக்க நேரிடும். அதுக்கு நடிகனோ, நடிகையோ சொல்ற பதிலும் அதிரடியான தலைப்புச் செய்தியாவதுதான் இங்கே காமெடி, டிராஜெடி ரெண்டுமே!

‘நாளைய முதல்வரே!’னு போஸ்டர் அடிச்சு அழைக்கப்-படாத பிரபல நடிகனே இங்கு இல்லை. பிறந்த நாளுக்கு இஸ்திரிப் பெட்டி கொடுத்துட்டா, அந்த நடிகர் ஒரு கூட்டத்துக்கு புதுத் தலைவர் ஆகிடுற கலாசாரம் இங்கேதான் ஏனோ அதிகமா இருக்கு. நடிகன் அரசியலுக்கு வரவே கூடாதுன்னு நான் சொல்லலை. ஆனா, நடிகன் என்கிற அடையாளம் மட்டுமே மக்களை வழி நடத்துகிற தகுதியைத் தந்துடாதே?

ரசிகர் மன்றமே எனக்குக் கூடாதுன்னு சொல்ற ஆள் நான். எனக்கு ரசிகர் மன்றம் திறக்கிறேன்னு யார் வந்தா-லும், வாழ்க்கைக்கும் மறக்கமுடியாத மாதிரி திட்டு வாங்கிட்டு தான் போவாங்க. என் நடிப்பு பிடிச்சா, ஜாலியாப் பார்த்துட்டு போயேன். அதுக்கு எதுக்கு ஒரு மன்றம்?

இந்திரா காந்தி படு-கொலை செய்யப்பட்டப்போ, 16 பேர் தற்கொலை பண்ணிக்கிட்டாங்க. அதில் 14 பேர் தமிழர்கள். எம்.ஜி.ஆர். இறந்தப்போ விஷம் குடிச்சவங்க, தீக்குளிச்ச-வங்கன்னு நிறைய அப்பாவிகள் தற்கொலை பண்ணிட்டிருக்-காங்க. ஏன்னா அரசியல், சினிமா இரண்டுமே நம்ம நாட்டுல மதம் மாதிரி ஆகிப்போச்சு!

‘நம்ம எம்.பி.க்கள் போலி பாஸ்போர்ட் மூலமா வெளி-நாட்டுக்கு ஆள் கடத்துற அளவுக்குத் தரம் தாழ்ந்து-போயிட்டாங்-களே’ன்னு ரொம்ப வருத்தப்பட்டார் என் நண்பர். மக்கள் பிரச்னையை மன்றத்-தில் பேசுவாங்கன்னு நம்பித்தான் ஒவ்வொரு மக்கள் பிரதிநிதியையும் நாம ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுக்-கிறோம். ஆனா, நாடாளு மன்றத்தில் கேள்வி கேட்கிறதுக்கே லஞ்சம் வாங்கின அசிங்கமெல்லாம் கண்ணுக்-கெதிரே நடந்து முடிஞ்சிடுச்சு. அதிகார துஷ்பிரயோகம், ஊழல், லஞ்சம், முறைகேடுன்னு தரம் தாழ்ந்த காரியங்கள் பார்த்துப் பார்த்து நமக்கும் பழகிப்போச்சு!

அரசாங்க அலுவலகத்தில் அதிகாரி -கள் வேலை செய்ய லஞ்சம் கேட்டா, நமக்கு ஏன் கோபம் வரமாட் டேங்குது? மாப்பிள்ளைன்னா வர-தட்சணை கேட்பான்தான்னு ஏன் எல்லார் மனசுலயும் சாதாரண-மான விஷயமாப் பதிஞ்சுபோச்சு?

வரதட்சணை கேட்கிற மாப்-பிள்-ளைக்-கும் குற்ற உணர்ச்சி இல்லை; கொடுக்கிற பெண் வீட்டாருக்கும் அது குற்றமாத் தோணலை. வரதட்சணை மாதிரியே லஞ்சம், ஊழல் எல்லாமே நமக்கு கலாசார-மாகி-டுச்சு! லஞ்சம் கொடுக் கிறது தப்புன்னு சும்மா பேசிக்கலாமே தவிர, ‘காசு கொடுத் தாதான் வேலை நடக்கும்’னு நமக்குப் பிரசவ ஆஸ்பத்திரி யி-லேயே தெரிய ஆரம்பிச்சுடுது. தர்ம புரி பக்கம் அரசு மருத்துவமனை-யில், லஞ்சம் தர முடியாத ஏழைப் பெண்ணுக் குப் பிரசவம் பார்க்காம அலட்-சியமா இருந்ததால, தாய் & சேய் ரெண்டு -பேரும் இறந்து போயிட்டதா பேப்-பர்ல படிச்-சதும் மனசு வெடிச்சுப்-போச்சு!

லஞ்சம் வாங்கின குற்றத்துக்குக் கைதானவன், மறுபடி லஞ்சம் கொடுத்து விடுதலை ஆகிடறான். எல்லாத் தப்புக்கும் அரிச்சுவடி அரசியலில்தான் ஆரம்பிக்குது. இயேசுநாதர் இரண்டு மீன்கள், ஐந்து அப்பங்களைக் கொண்டு ஐயாயிரம் நபர்களுக்கு உணவு படைத்--தார்னு பைபிள் சொல்லுது. இன்னிக்கு அஞ்சு லட்சம் மக்களோட பங்கா இருக்க வேண்டிய அப்பங்களையும் மீன் களை-யும் இரண்டே அரசியல்-வாதிகள் பகிர்ந்துக்-கிறாங்க.

‘தேர்தல் பரீட்சையில் முட்டாள்-கள் தேர்வு எழுதி னால், குற்றவாளிகள்-தான் வெற்றி பெறுவார்கள்!’னு ஒரு பொன்மொழி உண்டு. அரசியல்-வாதிகள் குற்ற-வாளிகளா இருக்கி றதுக்கும், நமக்கு நல்ல தலைவர் கள் கிடைக்கா-மல் போறதுக்-கும் மக்க ளோட அறி-யாமைதான் காரணம்னு சொன்னா, நான் ஏத்துக்க மாட்-டேன். மனுஷ-னாப் பிறந்த எல் லாருக்குள்ளே-யும் அறியாமை இருக்கு. முயற்சி எடுத்துப் புரிஞ்சுக்-கணும். யாராவது புரியவெச்சா தெரிஞ்சுக்கணும். இல்லேன்னா, அதுக்குப் பேர் அறியாமை இல்லை; முட்டாள்தனம்!

இந்த முட்டாள்தனத்தின் அபாயம் பற்றி ஆண்டன் செக்காவ் ஒரு கதை எழுதியிருக்கார்.

நீதிமன்றத்தில் ஒரு வழக்கு. மீன் பிடிக்கும் தொழில் செய்பவன் மேல் ஒரு புகார். ரயில் தண்ட-வாளத்-தில் இருக் கிற ஒரு இரும்பு நட்டைக் கழற்றினதுதான் அவன் செய்த குற்றம். ரயில் கவிழ்ந்து பல நூறு மக்கள் இறந்துபோகக் கூடிய ஆபத்தான ஒரு காரியத்தை, ரொம்ப அப்பாவித்தனமா செய்துட் டான் அந்த ஆள்.

‘என்னை போலீஸ் வேணும்னே கைது செய்து வழக்கு போட்டிருக்-காங்க. நான் தண்டவாளத்திலிருந்து சின்னதா ஒரேயரு நட்டு மட்டும்-தான் கழட்டி-னேன். மீன் பிடிக்கும்போது வலையைப் படகில் இழுத்துக் கட்டுற-துக்கு அந்த நட்டு வசதியா இருக்கும்னு கழட்டி-னேன். 100 கிராம் எடை கூட இல்லாத அந்த நட்டை நான் கழட்டின தால், அவ்ளோ பெரிய ரயில் கவிழ்ந் துடும்னு போலீஸ் என்னை ஏமாத்துது எஜமான்!’னு அப்பாவியா நீதிபதியிடம் முறையிடு-வான். ஆனா, அவனுக்குஉச்ச பட்ச தண்டனை தருவார் நீதிபதி. ‘தப்பான உள்-நோக்கம் எதுவும் இல்லாமல் அறியாமை-யில் செய்த தவற்றை மன்னித்தோ, அல்லது அபராதமோ விதித்து விடுதலை செய்ய வேண்-டும்’னு அவனு-டைய வழக்கறிஞர் வெச்ச வாதத்தையும் கடு-மையா விமர்சிப்-பார் நீதிபதி. ‘இதுக்குப் பேர் அறியாமை இல்லை, முட்டாள்-தனம். தான் செய்த தவற்றின் விபரீ தத்தை விளக்கியும், அதைப் புரிந்துகொள் ளாமல் இருப்பது
எப்படி அறியாமையாக இருக்க முடியும்?’னு கேட்பார் நீதிபதி.

சமூகத்தில் நடக்கிற எல்லாத் தவறுகளுக்கும் மக்களோட முட்டாள் தனம்தான் மூலகார ணம். உயிருக்குயிரா இருக்கிற உறவுகளையும் நட்பு-களையும் தவிக்கவிட்-டுட்டு, தற்கொலை செய்துக்கிற அள-வுக்குப் போகிற நம்ம தொண்டர்-களையும், ரசிகர்-களையும் அறியாமை-யில் இருக்கிறவங்-கன்னு சொல்ல எனக்கு மனசு வரலை. குழந்தைக்குப் பால் வாங்கித் தர முடியாத அப்பா, அம்மாக்கள் இருக்-கிற ஒரு நாட்டில், ஒரு படம் ரிலீஸ் ஆகிற நாளில் கட்&அவுட்டுக்குப் பாலபி-ஷேகம் செய்கிற காரி-யத்தை, எப்படி
அறியாமைன்னு சொல்லி மன்னிக்க முடியும்?

அறியாமை மனித இனத்தின் அழகு. ஆனா, முட்டாள்தனம் இருக்கே, அது அசிங்கம்!

சொல்லாததும் உண்மை பிரகாஷ் ராஜ் நன்றி ஆனந்த விகடன்

குண்டு குண்டு குஷ்பு

லண்டன், மலேசியாவிற்கு தன் போன்ற இடங்களுக்கு குழந்தைகளோடு ஜாலி டூர் போய்விட்டு வந்திருக்கிறார் குஷ்பு. பள்ளியில் செக்ஸ் கல்வியைக் கொண்டுவந்தே ஆகவேண்டும் என்கிறோம்.

இன்று என் குழந்தைகளை ‘ஹாலிடே டூர்’ அங்கே இங்கேன்னு நிறைய வெளிநாடுகளுக்கு அழைத்துக்கொண்டு போகிறேன்னா என் சின்ன வயசில் நான் அதையெல்லாம் அனுபவித்ததேயில்லை. மும்பை அந்தேரியில் ஒரு ‘‘பிலோமிடில் கிளாஸ் ஃபேமலி’’தான் என்னோடது எனக்கு எதெல்லாம் கிடைக்கலையோ அதெல்லாம் என் குழந்தைகளுக்கு கிடைக்கணும்னு நினைச்சேன். அதேசமயம் பொறுப்பு இல்லாமல் வளர்க்கக்கூடாதுன்னு நினைக்கிறேன் என்றவர், தொடர்ந்தார்.

நான் பார்த்த வகையில் நிறைய பசங்கள் சின்ன வயசிலேயே ரூட் மாறி போயிடறாங்க. என்ன காரணம்? அம்மா, அப்பா இரண்டு பேரும் வேலைக்குப் போயிடறாங்க. இல்லேன்னா வெளியூர் போயிடறாங்க. என்ன பிரச்னைன்னா அந்த குழந்தைகளோடு அவங்க நேரத்தை செலவழிக்க முடியலே. அதை சரிகட்டறதுக்கு குழந்தைகள் எது கேட்டாலும் உடனே வாங்கி கொடுத்துடறாங்க. இருக்கும் கொஞ்ச நேரத்தில் அவங்க செஞ்ச தப்புகளை கேட்பதில்லை. கேட்டால் எங்கே அப்செட்டாகி விடுவாங்களோன்னு கண்டுக்காம விட்டுவிடறாங்க. இதனால் பசங்க கெட்டு போறதுக்கு பெத்தவங்களும் காரணமாகிவிடறாங்க.

‘செக்ஸ்’ பற்றிய ஒரு விழிப்புணர்வை குழந்தைகளிடம் சொல்லியே ஆகவேண்டிய கட்டாய சூழ்நிலை விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. சிறுமிகளிடம் செக்ஸ் உணர்வு ரொம்ப பயங்கரமாயிருக்கு தவறுகள் வெளியே மட்டுமில்லை. வீட்டுக்குள்ளேயே நடக்கிறது.
மலேசியாவில் ஒரு எட்டு வயசுப் பெண்ணை அவள் அப்பாவே கெடுத்துவிட்டார். இதை யாரிடமும் சொல்லக்கூடாதுன்னு பயமுறுத்த கொஞ்சநாள் கழித்து அந்த பெண்ணின் அண்ணனுக்கு இது தெரிய, அவன் என்ன பண்ணினான் தெரியுமா? தன் பக்கத்துக்கு வீட்டு நண்பனுடன் தங்கையை பலாத்காரம் பண்ணி இருவருமா சேர்ந்து கெடுத்திருக்காங்க அப்புறம் ஒரு வழியா இது வெளியே தெரிய விஷயம் பரபரப்பாகி மலேசிய கோர்ட்டில் இப்போது வழக்கு நடந்துகொண்டிருக்கிறது. அதனால், குழந்தைகளுக்கு எது நல்லது. எது கெட்டது எந்த டச் நல்லது. எந்த டச் மோசமானதுன்னு புரிய வைக்கணும். நம்ம குழந்தைகளை எப்படி தொடறாங்கன்னு நமக்குத் தெரியாதபோது இந்த மாதிரியான கல்வியமைப்புதான் குழந்தைகளிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும்.
சமீபத்தில் சென்னையில் ஒரு பத்து வயசு சிறுமியை செக்ஸ் கொடுமை செய்து கொண்ணுட்டாங்க. மத்தியஅரசு ஆறாம் வகுப்பிலிருந்தே கொண்டு வர யோசித்துக் கொண்டிருக்கிறது.

சரியான நேரம் ஏன்னா? பெண் வயசுக்கு வரும் நேரம் அது. இப்போதுள்ள குழந்தைகளுக்கு எல்லாமே தெரிகிறது. நாமதான் அதுக்கு ஒன்றுமே தெரியாதுன்னு நினைச்சிக்கிட்டிருக்கோம். இன்னிக்கு இருக்கும் எக்ஸ்போஷரை (ணிஜ்ஜீஷீsuக்ஷீமீ) நினைத்தப் பாருங்க. இன்டர்நெட் மீடியா, டி.வி.சேனல் எல்லாத்தையும் பார்க்கறாங்க. அதில் பிளஸ¨ம் இருக்கு. மைனசும் இருக்கு. நல்ல விஷயங்களைவிட இந்த மாதிரி விஷயங்களை டக்குன்னு மனதில் பதிந்துவிடும்.

மேலை நாடுகளில் செக்ஸ் கல்வி இருக்கா?ன்னு என்னிடம் ஒருத்தர் கேட்டார். அதற்கு நான் அவரிடம் சொன்னேன்,‘‘அங்கிருக்கா, இங்கிருக்கான்னு பேசறதைவிட நம்ம நாட்டில் என்ன நடக்கிறதுன்னுதான் பார்க்கணும். அமெரிக்காவில் செக்ஸ் கல்வி எப்போ ஆரம்பிச்சது. ஐரோப்பாவில் எப்போ ஆரம்பிச்சது?ன்னு பேசறதை விடுங்க. ஏன்னா அங்கேயெல்லாம் செக்ஸ் பற்றி பேசும்போது குழந்தைகளை வச்சிக்கிட்டுதான் பேசறாங்க. அங்கே இந்த விஷயத்தில் ஒளிவு மறைவு இல்லை. அங்குள்ள எக்ஸ்போஷரே வேற. அனால், நம்ம ஊர் அப்படியா. செக்ஸ் அந்த மூன்று எழுத்து விஷயத்தை குழந்தைகள் முன்னாடியா பேசறோம். குழந்தைகளை அந்த பக்கம் போங்கன்னு விரட்டிட்டு தானே பேசறோம். காரணம், நமக்குண்ணடான கலாச்சாரம். நாம இப்போ எதை நோக்கி போய்கிட்டிருக்கோம். ஒரு பொண்ணின் உடம்பிலுள்ள பாலியல் உறுப்புகள், அதனோட முக்கியத்துவம் அதை தொடும்போது ஏற்படும் விளைவுகள் இப்படி எல்லாமே ஒரு பொண்ணுக்கு தெரியணும். அதற்கு ஆறாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே சொல்லிக் கொடுக்கணும் என்பது ரொம்ப ரொம்ப சரி.

நொய்டாவில் நிகாரிகேஸில் நிறைய பெண் குழந்தைகளோட சதை மட்டும்தான் கிடைச்சது. எலும்பு மட்டும்தான் கிடைச்சதுன்னு சொல்றாங்க. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அந்த குழந்தைகளுக்கு என்ன எஜூகேஷன் கொடுத்தோம். ஒன்னுமேயில்லை. இத்தனைக்கும் காரணமான மணிந்தர்சிங்கின் மீதான விசாரணை என்ன ஆச்சு! அவர் குற்றவாளின்னு சொல்லிட்டாங்களா! இல்லையே.

அடிப்படை உரிமை அது, இதுன்னு சொல்லிக்கிட்டிருக்கோம். அது இப்போ இங்கே இருக்கா இல்லையான்னு தெரியவில்லை. எது பற்றி கருத்து சொன்னாலும், அதை பிரச்னைப் பண்ணி விளம்பரம் தேடும் வேலை வெட்டி இல்லாத பசங்களைப் பற்றி எனக்கு கவலையில்லை.’’

நன்றி குமுதம்

அம்மணிக்கு ஆவல் இன்னும் அடங்கவில்லை. அரசியலுக்கு வருவதற்கு இன்னும் ஏன் பலர் தயாராக இருக்கிறார்கள் என்பது அம்மணியை கண்டால் தெளிவாகிறது. உடன்பிறவா சகோதரி, மன்னார்குடி மாஃபியாக்கள் மற்றும் குணடரடிவருடிகள் "புடவை" சூழ சிறுதாவூர் பங்களாவில் இருந்து லண்டனில் ஹோட்டல் வரை வாங்கிப் போடுகிறார் இடத்தை. தன் மேல் வீசப்படும் அத்தனை வழக்குகளுக்கும் வாய்தா வாங்கி ஜாமீனிலிலேயே உறைக்காத ஜென்மமாய் இருக்கும் அம்மணிக்கு நிச்சயம் தடித்த தோல்தான். கடந்த மாதம் முழுக்க கொடநாடு எஸ்டேட்டில் வாசம் மேனி அழகுற நடைப்பயிற்சி என முற்றிலும் மாறித்தான் போனார். (வேற ஒன்னும் இல்லை மூளை முன்னே கொஞ்சம் "நஞ்சா" இருந்தது இப்போ சுத்தமா இல்லை :)

கடந்த ஆண்டுகளில் சிறுதாவூர் பங்களா, ப்ளசண்ட் ஸ்டே ஹோட்டல், டாஸ்மாக், எம்ஜிஆர், அதிமுக தலைமை இப்போது கொடநாடு எஸ்டேட் என எந்த சொத்துக்கும் உரிமையாளர் தான் தான் என்பதை சொல்லாமலே மறைக்க அம்மணிக்கு ஏன் ஆசை. இது என்னுடையது எனச் சொல்லாமல் மறைக்கும் விதத்தில் ஒரு சொத்து தேவையா? இதையெல்லாம் எழுதினால் முண்டம் முண்டம் என்றவாறே ஒரு முண்டம் வந்து என் பதிவில் மூத்திரம் அடிக்கிறது.

ஆரம்ப காலத்தில் கொடநாடு எஸ்டேட்டில் எனக்கு தங்கியிருந்ததை தவிர எந்த தொடர்பும் இல்லை என்ற அம்மணி இப்போது அந்த பங்களாவை 50 கோடி செலவில் கட்டவில்லை என்கிறது. என்ன ஜென்மம்டாப்பா?

தலைமை எவ்வழி நாங்களும் அவ்வழி எனும் கொ"ளுகை"க்கேற்ப அம்மணியின் குண்டரடிகளும் இருக்கிறார்கள். ஆனால் அம்மணிக்கு தமிழனுக்கு இருக்கும் செலக்டிவ் அம்னீஷியா பற்றி நல்ல அறிவு இருக்கிறது. கொடநாடு எஸ்டேட்டுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை நான் வாடகைக்கு தங்கியிருந்தேன் என்பவர் ஆதாரங்கள் வந்ததும் அது 50 கோடிகளில் அனுமதி மீறி கட்டப்படவில்லை என்கிறார். ஒரு வேளை வாடகைக்கு தங்கப் போகும் வீடுகளை அது எத்தனை கோடிகளில் கட்டப் பட்டது அதன் அளவு என்ன எல்லாம் பார்த்துத்தான் போவாரோ என்னவோ?

இந்த கதையெல்லாம் சொல்லப் போனால் அம்மணியின் அடிவருடுடிகள் கருணாநிதிக்கு இல்லாத சொத்தா கனிமொழிக்குக் கூட 8 கோடி இருக்கே என குதியில் அரிக்க கோபம் கொள்கிறார்கள், அதுதான் பார்த்தீர்களே? போன தடவை உள்ளே வைத்து விசாரித்தீர்களே ஏன் எதுவும் கிடைக்கவில்லையா? கண்டுபிடித்து தூக்கில் போடவேண்டியதுதானே?

திமுகவை அழிப்பேன் ஒழிப்பேன் என்கிற அந்த தடித்தோல் ஜென்மத்துக்கு அது ஒன்றும் வெறும் கற்களால் கட்டப்பட்ட அதிமுக தலைமை கட்டடமல்ல பல்லாயிரக் கணக்கான தொண்டர்களின் வியர்வைத் துளிகளால் உயிர் பெற்ற ஒரு கோட்டை. சினிமா பவுடர் பூச்சுக்கும், விளக்கு வெளிச்சத்தில் வந்த வியர்வைக்கும் விளைந்த மோசடிக் கும்பல் இல்லை இந்த திராவிட முன்னேற்றக் கழகம் என்பது இன்னும் தெரியவில்லை

அதிமுக தலைமை கட்டிடத்தினை இடிக்க அரசா ஆணையிட்டது ? உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் கட்டுப்பட்டு அதன்படி நடக்கிறது அம்மணிக்கு ஆத்திரத்தில் .......அகங்கா...(?) ரம் வருகிறது போலும். தொலைக்காட்சி பெட்டி வாங்கியதில் இருந்து சுடுகாட்டு கொட்டகை வரை கைவைத்து கமிஷன் பார்த்த கன்னிக்கு இன்னும் ஆசை மட்டும் அடங்கவேயில்லை


நான் இப்போது ஒரு இணைய சேவை வழங்கும் நிலையம் ஒன்றில் வேலை பார்த்து வருவது உங்களில் சிலருக்கு தெரியாது. இங்கே தினசரி வாடிக்கையாக தமிழ்க் குடும்பங்கள் வருவதுண்டு இன்றும் அதே போல ஒரு குடும்பம் வந்தது. ஒரு கணவன், மனைவியும் அவர்களின் 2 வயதான மகளும் நான் வழக்கம்போல் தமிழ் மணத்தை மேய்ந்துகொண்டிருந்த போது அந்த தம்பதிகள் தங்கள் தாயக குடும்பத்துடன் அளாவிக் கொண்டிருந்தனர், அந்த குழந்தை என் அருகே அமர்ந்து நான் மேயும் வலைகளை அது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. இடையிடையே கேள்விகளும் திடீரென ஒரு பதிவை படித்து அதில் இருந்த லிங்கை க்ளிக் செய்தேன் வந்தது விணை. அந்த குழந்தை பயத்தில் அலற ஆரம்பித்து விட்டது பெற்றோர் என்னவோ ஏதோவென பயந்து என்னிடம் வந்து கேட்க நான் காரணத்தை விளக்கினேன் அதற்கு அவர்கள் பாவம் இது சின்னக் குழந்தை, அதுகிட்ட போய் இதை காட்டினதும் பயந்து போச்சி என சொல்லி குழந்தையையும் என்னையும் சமாதானம் செய்து வைத்தனர் ஆனால் அந்த குழந்தை மனசில் இருந்த பயம் போனபாடில்லை .

அப்படி அந்த குழந்தை எதைப் பார்த்து பயந்திருக்கும்?

அய்யா சாமிகளா எம்மாங் காசு பணம் கிடக்கு அந்தாள இழுத்துகிட்டு போய் வெட்டிவிடப்படாதா ?
துபாய்க்கு வந்து இந்த ரெண்டு வருசத்தில நான் இதை எத்தனையோ தடவை கேள்விப் பட்டிருக்கேன், அப்போ அப்போ சொல்லுவாங்க, அங்க அடிக்க கூடாது இங்க அடிக்க கூடாது , ஷாப்பிங் மால்ல தடை, பஸ்டாப்பில தடைன்னு, இந்தா அந்தான்னு சொன்ன அந்த புலி கடைசியா வந்தே விட்டதையா. இன்னைல இருந்து, தெருவில பப்ளிக்கில தம்மடிக்க கூடாதுன்னு தடை போட்டாய்ங்களாம், என்ன பன்றதுன்னு ஒன்னும் தெரியலை, நம்ம முத்துக் குமரனும் இதுபற்றி பதிவு போடுவாருன்னு எதிர்பார்க்கிறேன் :)

இப்போ என்னா ஆச்சு பாருங்க இதுக்கு இருக்கிற சுதந்திரம் கூட எனக்கு இல்லாம போயிடும் போல இருக்கேய்யா :(
சிவாஜி திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமை தங்களுக்கே தரவேண்டும் என ஏவிஎம்மிடம் பேரம் பேசி படத்தை வாங்கியதால் மைனாரிட்டி கலைஞரின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டுப் போனது. அதனால் மைனாரிட்டி கருணாநிதி பதவி விலகவேண்டும்.

ஜெயலலிதாவிடம் இருந்து இப்படி ஒரு அறிக்கையை எதிர்பார்க்கலாம். விரைவில்

ஒரு வேளை இப்படி மிரட்டியிருப்பாரோ?

கிராபிக்ஸ் நல்லாருக்கான்னு பின்னூட்டம் போடுங்க இன்னும் வரும் :)