திடீரென்று, அடைமொழிகள் அதிலும் குறிப்பாகத் தமிழக அரசியலின் அடைமொழிக் கலாச்சாரம் தினமணிக்கு ஒருவித ஒவ்வாமையை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால் தினமணிக்கு ஏற்பட்டுள்ள வயிற்றுக் குமட்டல் அதன் தலையங்கத்தில் (04.08.2010) கொட்டிக் கிடக்கிறது.

பார்ப்பனியத்திற்கு எப்போதும் ஒரு ‘சிறப்புப் பண்பு’ உண்டு. எந்தவொன்றும் அதற்கு மட்டுமே ஏகபோக சொத்தாக, உரிமையாக இருக்கும் வரை அது புனிதத் தன்மையுடையது, தனித்தன்மையானது, தெய்வீகமானது, (மநு)நியாயமானது. அதுவே, காலச்சூழலினால் மற்றவர்களுக்கும் உரியதாகும் நிலை ஏற்படும்போது தேவையற்றதா(க்)கிவிடும், மதிப்பில்லாததா(க்)கிவிடும். அதுதான் பார்ப்பனியம்.

அப்படித்தான் அடைமொழிகள் அவாள்களுக்கு மட்டுமே உரியதாக இருந்தவரை, சொல்லச்சொல்ல இனித்தது. இப்போது அடுத்தவர்களுக்கும் அடைமொழிகள் கொடுக்கப்படுகின்ற மாற்றத்தைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை அவர்களால்.

அடைமொழிகள் அர்த்தமில்லாதவையாம்!

அப்படியானால், ‘மகா பெரியவா’, ‘லோக குரு’, ‘ஜெகத் குரு’ போன்ற அடைமொழிகளும் கூட அர்த்தமில்லாதவைகள்தானே? முதலில் லோக குருவையும், ஜெகத் குருவையும் (அடைமொழிகளையாவது) தூக்கிவீசட்டும்.

இன்றும் அவர்கள் ராஜகோபாலச்சாரியாரைப் பற்றிப் பேசும் போதும், எழுதும்போதும் ‘சக்கரவர்த்தி’ ராஜகோபாலாச்சாரியார், ‘மூதறிஞர்’ ராஜாஜி என்றுதானே குறிப்பிடுகிறார்கள். சக்கரவர்த்தியும், மூதறிஞரும் தினமணிகளுக்கு அருவருப்பைத் தரவில்லையே? ஏன்?

மேலே சொன்னதுதான் காரணம். அவாளுக்கு என்றால் அமுதம் அடுத்தவர்களுக்கு என்றால் அசிங்கம்.

“பொதுவாழ்வில் ஈடுபட்டவர்களும் பொறுப்பான பதவிகளில் இருப்பவர்களும் தங்களைப் பெயர் சொல்லி அழைப்பது மரியாதைக் குறைவு என்று கருதும் திராவிடக் கலாச்சார எதிர்பார்ப்பு எந்த பகுத்தறிவுவாதத்தைச் சேர்ந்தது என்பதைப் பெரியாரிடம் தான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்” என்கிறது தினமணி.

தன்னைவிட வயதில் சிறியவர்களையும், சிறு குழந்தைகளையும்கூட வாங்க, சொல்லுங்க என்று மரியாதையுடன் அழைத்தவர் தந்தைபெரியார் - இது திராவிடக் கலாச்சாரம்.

60 வயது முதியவர்களையும் 6 வயது மழலை, ‘அடே’ என்று முகத்தில் அறைந்தாற் போல பெயர் சொல்லி அழைக்க வைத்தது பார்பனியம். அழைப்பது மனைவியையா, மகளையா, சகோதரியையா, மூத்தவரையா, இளையவரையா என்று தெரிந்துகொள்ள முடியாதபடி விளிச் சொற்களைக் கொண்டது அவாளின் பேச்சுவழக்கு - இது ஆரியக் கலாச்சாரம்.

பகுத்தறிவுக்குப் பனியாக்களிடம் விளக்கம் கேட்கவேண்டிய நிலைமை இங்கே இல்லை.

ஒரு முழத் துண்டுத் துணியைக்கூட அடிமைத்தனத்தின் அடையாளமாக்கியது ஆரியம். அதை உடைத்தது திராவிட இயக்கம். அறிஞர் அண்ணா அவர்கள் தி.மு.க.வைத் தொடங்கியபோது அனைவரும் தோளில் துண்டு அணிந்து மேடையில் தோன்றினர். அதிலும் அண்ணா அவர்கள் அணிந்திருக்கும் துண்டு தரையில் புரளும். பிறகு கழகத் தோழர்களைத் ‘துண்டுக்காரன்’ என்று கேலிபேசினர். காரணம் அவாளின் கழுத்தை மட்டுமே சுற்றியிருந்த அங்கவஸ்திரம், அனைவரின் தோளிலும் துண்டாக ஆடியதைச் சகித்துக்கொள்ள முடியவில்லை அவர்களால்.

சென்னை வழக்கறிஞர்கள் சங்கக் கூட்டத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வை இங்கே சொல்வது மிகப்பொருத்தமானதாக இருக்கும். அக்கூட்டத்தில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. அதாவது ‘இனிமேல் வழக்காடத் தொடங்கும் போது நீதிபதிகளைப் பார்த்து என் பிரபுவே என்று பொருள்படும்படியாக, மை லார்டு என்று அழைக்க வேண்டியதில்லை. அது ஆங்கிலேயன் காலத்தில் கொண்டுவரப்பட்டது. எனவே இனிமேல் நீதிபதிகளைப் பார்த்து சார் என்று அழைத்தாலே போதும்’ என்றொரு கருத்து முன்வைக்கப்படுகிறது. அனைவரும் அதனை ஏற்றுக்கொள்கின்றனர். அப்போது அக்கூட்டத்தில் கலந்து கொண்ட வழக்கறிஞர் அருள்மொழி எழுந்து, “ஒரு சின்ன திருத்தம். மை லார்டு என்று அழைப்பதை உடனே நிறுத்த வேண்டாம். இன்னும் கொஞ்ச காலத்திற்கு நீதிபதிகளை மை லார்டு என்றே அழைக்கலாம்” என்று சொல்ல, அதைக் கேட்ட மற்றவர்கள் ஆச்சரியத்துடன், “சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த நீங்கள் எப்படி அந்த அடிமை முறை தொடரவேண்டும் என்று சொல்கிறீர்கள்?” என்று கேட்டனர். அதற்கு வழக்கறிஞர் அருள்மொழி அவர்கள் சொன்ன விடை பார்ப்பனீய சூழ்ச்சியின் உச்சத்தைத் தொட்டுக்காட்டியது. “வேறொன்றுமில்லை, விடுதலைக்கு முன்பு ஆங்கிலேயர்கள் மட்டுமே நீதிபதிகளாக இருந்தார்கள். அப்போது அவர்களை ‘மை லார்டு’ என்று வழக்கறிஞர்கள் அழைத்தனர். அதற்குப்பிறகு ஒரு குறிப்பிட்ட மேல்தட்டு வகுப்பினர் மட்டுமே நீதிபதிகளாக இருந்துவந்தனர். அவர்களையும் ‘மை லார்டு’ என்று அழைத்தோம். அப்போதெல்லாம் உறுத்தாத அடிமைத்தனம், பிற்படுத்தப்பட்டவர்களும், தாழ்த்தப்பட்டவர்களும் நீதிபதிகள் ஆகியுள்ள இக்காலத்தில் மட்டும் ஏன் உறுத்துகிறது? இந்த நீதிபதிகளையும், சிலகாலம் ‘மை லார்டு’ என்று அழைக்கலாம். தங்களை மேல்சாதியினர் என்று கருதிக் கொண்டிருக்கும் வழக்குரைஞர்கள், வெள்ளைக்காரர்களை மை லார்டு என்று அழைத்த நாவால், நம்மவர்களையும் சில காலம் அழைக்கட்டுமே!” என்று விளக்கமாக விடைசொன்னபோது, மெல்ல மெல்லக் கரவொலி, கூட்ட அரங்கை நிறைத்தது.

பார்ப்பன விசமம் எப்படியயல்லாம் விளையாடுகிறது பார்த்தீர்களா?

அப்படித்தான் சூத்திரத் தலைவர்கள் அடைமொழிகளோடு அழைக்கப்படுவதைக் கண்டு குமுறியிருக்கிறது தினமணி. நம்முடைய முதல்வர் அவர்கள் ‘கலைஞர்’ என்று அழைக்கப்படுவது கட்டாயத்தினால் அல்ல, கலைத் துறையிலும், சமுதாயத்திலும் அவருடைய எழுதுகோல் ஏற்படுத்திய மாற்றங்களுக்காக, சுயமரியாதைமிக்க ஒரு சக கலைஞனால் வழங்கப்பட்டதுதான் கலைஞர் என்னும் அடைமொழியே தவிர, வலியப்போய் ஒட்டிக்கொண்டு வந்த புரட்சிப்பட்டமல்ல.

தன்னுடைய மாணாக்கர்களேயானாலும், அண்ணாவையும், கலைஞரையும் அவர்கள் வகித்த பதவிக்கு மதிப்புக் கொடுத்து, நமது முதலமைச்சர் அண்ணா என்றும், கலைஞர் என்றும் மரியாதையோடு அழைத்தவர் தந்தை பெரியார். மறைந்த அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆர். அவர்கள் எந்த இடத்திலும் எப்போதும் கலைஞரை பெயர் சொல்லி அழைத்ததில்லை. கலைஞர் என்றுதான் குறிப்பிடுவார். இன்று இருக்கும் தலைமை, அ.தி.மு.க. தலைமை மட்டுமல்ல பார்ப்பனீயத்தின் அதிகாரப்பூர்வ பிரதிநிதி. அங்கிருந்து சுயமரியாதையை எதிர்பார்க்க முடியாது.

மனிதர்களையே மதிக்கத் தெரியாதவர்களுக்கு, மக்கள் கொடுத்த பதவியை மதிக்கத் தெரியாததில் வியப்பில்லைதான்.

கவுண்டமணி தமிழ் சினிமாவின் கலகல கலைஞன். அவரைப் புறக்கணித்து தமிழ்


சினிமா சிரிப்பு சரித்திரத்தை எழுத முடியாது. கவுண்டமணியின் சில மணியோசைகள் மட்டும் இங்கே...

'சுப்பிரமணி'யாக கவுண்டமணி பிறந்தது உடுமலைப்பேட்டைக்கு அருகில் உள்ள வல்லக்கொண்டபுரம்!

கவுண்டமணிக்குப் பெரிய படிப்பெல்லாம் இல்லை. ஆனால், பேச்சில் ரஜனீஷின் மேற்கோள்கள் தெறிக்கும். 'பார்த்தால் காமெடியன், படிப்பில் அறிவாளி' என்பார் இயக்குநர் மணிவண்ணன்!

பாரதிராஜாதான் 'கவுண்டமணி' எனப் பெயர் மாற்றினார். '16 வயதினிலே'தான் அறிமுகப் படம்!

அம்மாவை 'ஆத்தா' என்றுதான் ஆசையாக அழைப்பார். வீட்டைத் தாண்டினால் ஆத்தா காலடியில் கும்பிட்டுவிட்டுத்தான் நகர்வார். மனைவி பெயர் சாந்தி. இரண்டு மகள்கள். செல்வி, சுமித்ரா. முதல் பெண்ணின் திருமணத்தின்போதுதான் அவருக்கு இரண்டு குழந்தைகள் என்கிற விவரமே தெரிய வந்தது. அவ்வளவு தூரம் மீடியா வெளிச்சம் படாமல் இருப்பார்!

கவுண்டமணியை நண்பர்கள் செல்லமாக அழைப்பது 'மிஸ்டர் பெல்' என்று. கவுண்டமணியே நண்பர்களைப் பட்டப் பெயர் வைத்துத்தான் கூப்பிடுவார். அவை யாரையும் புண்படுத்தாது. நகைச்சுவையாக மட்டுமே இருக்கும். ஆரம்ப கால நண்பர் மதுரை செல்வம் முதல் அனைவரிடமும் இன்று வரை நட்பினைத் தொடர்ந்து வருகிறார்!

மிகப் பிரபலமான கவுண்டமணி - செந்தில் கூட்டணி இணைந்தே 450 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார்கள். இது ஓர் உலக சாதனை!

இவர் மட்டுமே 750 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். இதில் ஹீரோவாக மட்டும் நடித்த படங்கள் 12.

கவுண்டமணிக்குப் பிடித்த நிறம் கறுப்பு. எந்நேரமும் அந்த நிறம் சூழ இருந்தால்கூட 'சரி' என்பார். 'இங்கிலீஷ் கலருடா ப்ளாக்!' என்பவர், எங்கே போவதென்றாலும் ஜீன்ஸ்-கறுப்பு நிற பனியன் அணிந்துதான் செல்வார்!

உணவு வகைகளில் ரொம்பக் கண்டிப்பு. 'பசி எப்போதும் அடங்காத மாதிரியே சாப்பிடுங்கப்பா' என நண்பர்களுக்கு அறிவுறுத்துவார். பக்கா சைவம்!

திருப்பதி ஏழுமலையான்தான் கவுண்டமணி விரும்பி வணங்கும் தெய்வம். நினைத்தால் காரில் ஏறி சாமி தரிசனம் செய்து திரும்புவார். வாராவாரம் நடந்த தரிசனத்தை இப்போதுதான் குறைத்திருக்கிறார் கவுண்டர்!

சினிமா உலகில் அவருக்குப் பெரிய நட்பு வட்டம் கிடையாது. ஆனாலும் சத்யராஜ், அர்ஜுன், கார்த்திக் ஆகிய மூவரிடமும் நெருக்கமாகப் பழகுவார்!

கவுண்டமணிக்குப் பிடித்த நகைச்சுவை நடிகர் சுருளிராஜன்தான். அவரின் நகைச்சுவைபற்றி அவ்வளவு பெருமிதமாகப் பேசுவதைக் கேட்டுக்கொண்டே வயிறு வலிக்கச் சிரித்து வரலாம்!

புகைப் பழக்கம் அறவே கிடையாது. வெளியே விழாக்கள், பார்ட்டிகள், பிறந்த நாள் நிகழ்ச்சிகள் என எதிலும் கலந்துகொள்கிற வழக்கம் கிடையாது. தனிமை விரும்பி!

ஓஷோவின் புத்தகங்களுக்கு ரசிகர். அதே மாதிரி ஹாலிவுட் படங்களைத் தவறாமல் பார்த்து, நல்ல படங்களை நண்பர்களுக்குச் சிபாரிசும் செய்வார்!

கவுண்டரின் தி.நகர் ஆபீஸுக்குப் போனால் சின்ன வயதுக்காரராக இருந்தாலும் எழுந்து நின்று கைகூப்பி வணக்கம் சொல்வார். நாம் அமர்ந்த பிறகுதான் அவர் உட்கார்ந்து பேச்சை ஆரம்பிப்பார்!

கவுண்டருக்கு எந்தப் பட்டங்களும் போட்டுக்கொள்ளப் பிடிக்காது. 'என்னடா, சார்லி சாப்ளின் அளவுக்கா சாதனை பண்ணிட்டோம். அவருக்கே பட்டம் கிடையாதுடா!' என்பார்.

ஒவ்வொரு சனிக்கிழமையும் நிச்சயம் பெருமாள் கோயில் தரிசனமும் விரதமும் உண்டு!

ஷ¨ட்டிங் இல்லை என்றால், எப்பவும் சாயங்காலம் உட்லண்ட்ஸ் டிரைவ் இன் ஹோட்டலில் முன்பு கவுண்டரைப் பார்க்கலாம். இப்போது நண்பர்களைச் சந்திப்பது ஆபீஸ் மொட்டை மாடியில் மாலை நடைப் பயிற்சியின்போதுதான்!

கார்களின் காதலன் கவுண்டர். 10 கார்களை வைத்திருக்கிறார். நெரிசல் நிரம்பிய இடங்களுக்கு சின்ன கார். அகல சாலைகள் உள்ள இடங்களுக்குப் பெரிய கார்களை எடுத்துச் செல்வார். 'நம் சௌகர்யம் பார்த்தா பத்தாது... ஜனங்க நடமாட சௌகர்யம் கொடுக்கணும்' என்பார்!

எண்ணிக்கையில் அடங்காத வாட்ச், கூலிங்கிளாஸ் கலெக்ஷன் வைத்திருக்கிறார். நடிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்தே வந்த பழக்கம் இது!

டுபாக்கூர் சாமியார்களைப் பயங்கரமாகக் கிண்டல் செய்வார். 'மனிதனாகப் பிறந்தவர்களைத் தெய்வமாகச் சித்திரிப்பது ஏமாற்றுவேலை' என்பார். நமக்கும் கடவுளுக்கும் சாமியார்கள் மீடியேட்டரா எனச் சாட்டை வீசுவார். ஆனாலும், தீவிர கடவுள் நம்பிக்கை உடையவர்!

கவுண்டருக்கு, அவர் நடித்ததில் பிடித்த படங்கள் 'ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்' 'வரவு எட்டணா செலவு பத்தணா', 'நடிகன்'. 'அட... என்னடா பெருசா நடிச்சுப்புட்டோம், மார்லன் பிராண்டோவா நானு' என சுய எள்ளலும் செய்துகொள்வார்!

'மறக்க வேண்டியது நன்றி மறந்தவர்களை, மறக்கக் கூடாதது உதவி செய்தவர்களை' என அடிக்கடி குறிப்பிடுவார். ஒருவரை எதிரி என நினைத்துவிட்டால் அவர்களை அப்படியே புறக்கணித்துவிடுவார். ஆனால், நண்பர்கள் கோபித்தாலும், அவரே சமாதானத்துக்குப் போவார்!

சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்ந்து, சிகிச்சைக்குப் பிறகு குணமானார் கவுண்டர். அப்போது மருத்துவமனைக்கு உலகம் முழுவதிலும் இருந்து வந்த போன் கால்கள், இ-மெயில்கள் கணக்கில் அடங்காதவை. அதைப்பற்றிப் பேசினால் சிரிப்பு அரசனின் கண்களில் நீர் சுரக்கும்!

ஒரே ஒரு தடவைதான் விகடனில் மிக நீண்ட பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். மற்றபடி பேட்டி, தொலைக்காட்சி நேர்காணல் என எதிலும் தலை காட்டியது இல்லை!

அறிவும் ஆற்றலும் கொண்ட பெண் இச்சமூகத்தில் தனிமனிதராக மதிக்கப்படுகிறாரா என்ற கேள்விக்கு இன்னும் இல்லை என்றே சொல்லவேண்டிய இடத்தில்தான் நாமிருக்கிறோம். பெண்ணின் இருப்பு வெறும் உடலாகவே கணக்கிடப்படுகிறது. இந்திய குறிப்பாக தமிழ்ச் சமூகத்தின் கலாச்சார நடவடிக்கை என்பது பெண்ணுடல் மீதான கண்காணிப்பாகவும் விசாரணையாகவுமே குறுகிக்கிடக்கிறது. சமூகம், முதலில் தனது அதிகார இயந்திரங்களான மதத்தையும் சாதியையும் கொண்டு பெண்ணின் விருப்பங்களையும் தேர்வுகளையும் கட்டுப்படுத்துகிறது. அடுத்ததாக கற்பு/ தாளிணிமை போன்ற கற்பிதங்களால் பெண்ணின் காதல்/ காமம் ஆகிய உணர்வுகளைக் கட்டமைக்கிறது. தொடர்ச்சியாக குடும்பம், உழைக்குமிடம் தவிர்த்த பெண்ணின் வெளியையும் மறுதலிக்கிறது. இந்த வரையறையிலிருந்து விலகி தனித்த அடையாளத்துடன் ஒரு பெண் தனக்கென பாதையை வகுத்துக்கொள்ள முற்படும்போது அது குருட்டுச்சந்தாகவே முடிகிறது என்பதே கசப்பான உண்மை.

சென்னை லயோலோ கல்லூரியில் கடந்த டிசம்பர் 15 சனிக்கிழமையன்று காட்சி ஊடகவியல் துறையினர், கனாக்களம்-2007 கருத்தரங்கின் கலந்துரையாடலில் ‘சினிமாவும் சமூகமும்’ என்னும் தலைப்பில் என்னைப் பேச அழைத்திருந்தனர். காலை பத்து மணி மணியளவில் கல்லூரி வாசலை அடைந்த என்னை நிறுத்திய கல்லூரியின் காவலர்கள், அடையாள அட்டையைக் காண்பிக்குமாறு கேட்டனர். நான் அழைப்பிதழைக் காட்டினேன். ‘உங்களை உள்ளே அனுமதிக்க முடியாது, ஏனென்றால் நீங்கள் ஜீன்சும் குர்தாவும் அணிந்திருக்கிறீர்கள்- துப்பட்டா அணியவில்லை’ என்றார்கள். ஒரு நிமிடம் எனக்குத் தலைசுற்றியது; நான் தமிழ்நாட்டில்தான் இருக்கிறேனா அல்லது தாலிபான்களின் ஆப்கானிஸ்தானில் இருக்கிறேனா என்ற இடக்குழப்பம் ஏற்பட்டது.

கிணுகிணுத்த கைபேசியைத் தட்டினால் அமைப்பாளர்கள், ‘சிறிது நேரம் பொறுங்கள் நாங்கள் வந்துபேசி அழைத்துச் செல்கிறோம்’ என்றார்கள். நிமிடங்களில், ஒரு மாணவி ஓடிவந்து கறுப்புத் துப்பட்டாவைத் தந்து ‘இதை அணிந்துகொண்டு உள்ளே வாருங்கள்’ எனக் கெஞ்சும் தொனியில் கேட்டபோது எனக்குச் சிரிப்பதா அழுவதா எனத் தெரியவில்லை. “சுதந்திரமாக ஆடையணிந்துகூட வரமுடியாத இடத்தில். சுதந்திரமான சினிமாவை நேசித்து பணியாற்றிக் கொண்டிருக்கும் எனக்கு எந்தப் பணியும் இல்லை” என்று மட்டும் குறிப்பிட்டுவிட்டுத் திரும்பிவிட்டேன். அழைப்பிதழில் இடம்பெற்றிருந்த மற்ற பேச்சாளர்களான பாலுமகேந்திரா, பாமரன், ஞாநி, வசந்தபாலன், எஸ். ராமகிருஷ்ணன், லெனின், அஜயன்பாலா ஆகியோர் ஆண்களாக இருந்ததால், அவர்களுக்குத் துப்பட்டா பிரச்சினை இருந்திருக்காது என்று சிந்தனை ஓடியது.

கல்வி நிலையங்கள் தமிழ்க் கலாச்சாரத்தை துப்பட்டாவில் கட்டிக்காக்கும் அளவுக்குத் தரம் தாழ்ந்துவிட்டனவா என்று கடுங்கோபம் வந்தது. பதினெட்டு வயதில் தங்கள் நாட்டை யார் ஆள வேண்டும் என்று முடிவு செய்யும் ஓட்டுரிமை பெற்ற கல்லூரி மாணவ மாணவியருக்குத் தங்களுக்கான உடையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை மறுப்பதையே பல தளங்களில் நான் எதிர்த்துப் பேசியும் எழுதியும் வந்திருக்கிறேன். எழுத்தும் சினிமாவுமாக விடுதலையைப் பற்றிய சிந்தனையையும் படைப்புகளையும் மட்டுமே சுவாசித்துக்கொண்டிருக்கும் என்னை, நிகழ்ச்சிக்கு விருந்தினராக அழைத்து, துப்பட்டாவைக் கொடுத்து, என் இருப்பையே கேள்விக்குறியாக்கிவிட்ட லயோலா கல்லூரி எனக்கு என்ன பதில் வைத்திருக்கிறது. ஒவ்வொரு வருடமும் தரத்தின் அடிப்படையிலான சர்வேக்களில், இந்தியாவின் சிறந்த கல்லூரிகளின் தரவரிசையில் ஐந்து முதல் பத்தாம் இடத்திற்குள் ஸ்டார் தகுதியில் இடம்பிடிக்கும் லயோலா கல்லூரி, தனி மனித உரிமைக்குத் தரும் மரியாதையில் எந்த இடத்தில் தன்னை நிறுத்திக்கொள்கிறது?

லயோலா கல்லூரியில் நடைமுறையிலிருக்கும் பெண்களுக்கான உடை பற்றிய கோட்பாடுகளின் வரலாறு மிக சுவாரஸ்யமானது. கல்லூரி மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள், மாணவிகளின் உடை விசயத்தால் மிகவும் மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள். படிப்பிலும் கவனம் செலுத்தமுடிவதில்லை. அதனால் கல்லூரி மேலாண்மை மாணவிகளின் உடைகளில் கட்டுப்பாடுகளைக் கொண்டுவர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்களாம். உடனே கல்லூரி நிர்வாகம் மாணவிகளுக்குத் துப்பட்டா கட்டளைகளைப் பிறப்பித்திருக்கிறது; ஜீன்ஸிற்குத் தடா போட்டிருக்கிறது. இதை விசாரித்துக்கொண்டிருக்கும்போது எனது தோழரும், பெண்ணிய சிந்தனையாளரும், எழுத்தாளருமான ஓவியா ஒரு வரலாற்று நிகழ்ச்சியை நினைவுபடுத்தினார்.

சுதந்திரத்திற்கு முன் நமது நாட்டின் முதல் பெண் மருத்துவர் முத்துலெட்சுமி கல்லூரியில் அனுமதி கேட்டபோது மற்ற மாணவர்களின் பெற்றோர்கள் ‘ஒரு பெண் கல்லூரிக்கு வருவதா, எங்கள் பிள்ளைகள் கெட்டுப்போவார்கள்-நாங்கள் விண்ணப்பங்களைத் திரும்பப் பெறுவோம்’ என்று சொன்னார்களாம். அதைக் கேள்விப்பட்டு கலக்கமுற்ற தாளாளர், அன்றைய அரசுப் பிரதிநிதி கவர்னர்- ஒரு வெள்ளை துரையிடம் முறையிட்டாராம். வெள்ளைத்துரை அதற்கு, ‘பரவாயில்லை, அந்தப் பெண் மட்டும் படித்தால் போதும், மாணவர்களை வீட்டுக்கு அனுப்புங்கள்’ என்றாராம். அந்த வெள்ளைத்துரைக்குப் பாவம் நமது கலாச்சாரம் தெரியவில்லை. தவறு செய்துவிட்டார். லயோலா கல்லூரி போன்ற சுதந்திர இந்தியாவின் கல்லூரி நிறுவனர்கள் அந்தத் தவறைச் செய்வார்களா என்ன? அப்புறம் தமிழ்க் கலாச்சாரம், பண்பாடெல்லாம் என்னாவது?

பெற்றோர்களைத் தங்கள் பிள்ளைகளுக்குப் புலனடக்கம் கற்றுத்தரச் சொல்லியனுப்பாமல், மாணவிகளுக்கு உடைக் கோட்பாடுகளைப் பிறப்பித்திருக்கிறது. நிச்சயம் மாணவர்கள் அணியும் உடையில் நமது மாணவிகள் மனக்கிலேசம் அடைய மாட்டார்கள். அப்படியேயிருந்தாலும் சிரிப்பையும் சிறுநீரையும்கூட சிறுவயதிலிருந்து அடக்கப் பழகியிருக்கும் நமது பெண்களுக்கு இதெல்லாம் எம்மாத்திரம்? எது எப்படியோ, துப்பட்டாவை எடுத்துவந்து என்னை அணிந்துகொள்ளச் சொன்ன மாணவியின் முகம் என்னைத் தூங்கவிடாமல் துரத்திக்கொண்டிருக்கிறது. எப்படிப்பட்ட கோழைப் பூச்சிகளாக மாணவ சமுதாயத்தை நாம் உருவாக்கிக்கொண்டிருக்கிறோம்? ‘உனக்குச் சுதந்திரம் வழங்க மறுக்கும் சமூகத்திடம் எந்தச் சமரசமும் செய்துகொள்ளாதே’ என்று ஊக்குவிக்காத கல்வியால் பெண்ணுக்கு என்ன பயன் இருக்க முடியும். குடும்பம், கல்வி நிறுவனம், சமூகம் என எல்லா அமைப்புகளும் பெண்ணின் உடலை, மனதைக் கண்காணிக்கும் காவல் நிலையங்களாக செயல்படுவதால் நட்டமடைவது பெண் மட்டுமல்ல மொத்த சமூகமும்தான்.

அரசோ ஆணையோ நிறுவனமோ ஏன் தனிமனிதனோ உறவோ வாழ்க்கைத்துணையோ சினேகிதனோகூட எதன் பெயராலோ அதிகாரத்தைச் செலுத்தும்போது அதை ஏன் என்று கேள்வி கேட்க முடியாத பூஞ்சைக்காளான்களாக நம்மை உருவாக்கிக்கொள்வதற்கு கல்வி அவசியமே இல்லை. பேசாமல் மாடு மேய்க்கப் போகலாம். யேசு சபை, புரட்சி, கலக இறையியல் என்றெல்லாம் ஊரை ஏமாற்றாமல் லயோலா போன்ற கல்விக்கூடங்களும் தங்கள் வகுப்பறைகளை மூடிவிட்டு துப்பட்டா கடைகள் நடத்தலாம். கலாச்சாரத்தையும் காத்துக்கொள்ளலாம். வருமானத்தையும் பெருக்கிக்கொள்ளலாம்.

- லீனா மணிமேகலை,
கவிஞர், திரைப்பட இயக்குநர்

உடல்மொழி அரசியல்ஒரு பெண் ஏன் எழுத வருகிறாள்? வன்முறையை மறுக்க, சகலவிதமான ஒடுக்குமுறையை எதிர்க்க,விடுதலையைக் கொண்டாட, தன் உடலை-மனதை வியக்க, சமூக மதிப்பீடுகளை மீட்டுருவாக்கம் செய்ய,சுய விமர்சனம் செய்துக் கொள்ள, மாற்று அழகியலுக்கு களம் அமைக்க, பன்மையை நிறுவ என்று பெண் எழுத்தின் செயல்பாடுகள் கூர்மையானது.

வெட்டிவிட்ட பாதையில் செல்வது கலையின் வேலையல்ல. ஆணோ, பெண்ணோ, படைப்புக்கு படைப்பாளி வகுக்கிற கரை தான் அணையாக முடியும். ஆதிக்க கலாசாரத்தின் களனாக பெண் உடல் கட்டமைக்கப்படும் போது, பெண் கவிதை அதை வெளிப்படுத்துகிறது, தர்க்கத்திற்கு உட்படுத்துகிறது, மூர்க்கமாக எதிர்க்கிறது. அதிகாரத்தை கலைத்துப் போடுவது தான் கவிதையின் தலையாய வேலை என்ற முடிவுக்கு உடன்படும் ஆணும், பெண் கவிதையையே எழுதுகிறார். புனிதம்Xதீட்டு என்ற லிங்கமைய இணைமுரண் கலாச்சாரம்,ஆணை பெண்ணுக்கு எதிராக வைத்து, பெண் உடலை உடமையாக்கும், கண்காணிக்கும், ஒடுக்கும் வேலையை செய்கிறது.

ஆணுக்கு பெண் கீழானவள் அல்ல, மேலானவளும் அல்ல, சமமானவள் கூட அல்ல, வேறானவள் என்ற புள்ளியிலிருந்து தான், பெண் எழுத்தின் எதிர் கலாச்சார நடவடிக்கையாக உடல்மொழி இயங்குகிறது. எழுதி எழுதி பெண்ணுடல், கலாச்சார காவலிலிருந்து தன்னை விடுவித்திக் கொள்ளும், வெளியேறும், பின் திளைக்கும்.

ஆம் நான்தான்
உலகின் அழகிய முதல் பெண்

ஒரு நாள்
என் தோலைக் கழற்றி வீசினேன்
கூந்தலை உரித்து எறிந்தேன்
துவாரங்களில் ரத்தம் ஒழுகும்
மொழுக்கைப் பெண்ணென
காதல் கொள்ள அழைத்தேன்
காதலர்கள் வந்தார்கள்
கரிய விழிகள் கொணட அவர்கள்
நெய்தலின் நுட்பம் கூடிய சிலந்திகள்
குருதியை நூலாக்கித் திரித்து
செந்நிறத்தின் ஊடுபாவிய வலையை
எட்டுக் கால்களில் விரித்தார்கள்
அந்தியில் வந்த சூரியன் சிவப்பில் விழுந்தான்

அப்பொழுதும் சொன்னேன்
நான் பூரணமாய் காதலிக்கப்பட்டவள்
மறுபடி நானே
உலகின் அழகிய முதல் பெண்

-லீனா மணிமேகலையின் வலைத்தளத்தில் இருந்து
கற்பு பெண்களுக்கே உரியது. ஆண்கள் கற்பாய் இருப்பதற்குத் தமிழில் வார்த்தைகளே கிடையாது. ஏன் ஆரியத்திலும் வார்த்தைகளே கிடையாது.

அதுமாத்திரமா? உலகில் வேறு எந்த மொழியிலும் வார்த்தைகள் இருப்பதாகக் காணப்படுவதில்லை. என்றாலும் இருக்குமோ என்னமோ தெரியாது. நம் நாட்டு ஆண்கள் கற்பாய் இருக்கவேண்டும் என்பதற்கு மதக் கட்டளை இருப்பதாகக்கூடத் தெரியவில்லை. கடவுள்களாவது கற்பாக இருந்தார்களா என்றால் அதையும் காணமுடியவில்லை.

ஆரியர் கற்பும் - தமிழர் கற்பும்

அது எப்படியோ போகட்டும். பெண்கற்பு தமிழர்களுக்குத்தான் தொல்லையாக முடிந்ததே தவிர ஆரியர்க்கு அதில் எவ்விதத் தொல்லையுமில்லை. ஆரியர் கற்புக்கும் தமிழர் கற்புக்கும் தத்துவத்திலேயே (டெபனிஷனிலேயே) அதிக வித்தியாசமிருக்கிறது.

ஆரியர் கற்புக் கு வியாக்கியானம் அதாவது யோக்கியதாம்சம் வெகு சுலபமானது.

எப்படி என்றால் கற்புக்கும் பிற புருஷரைக் கூடுவதற்கும் சம்பந்தம் இல்லை என்பதாகவே தெரிகிறது. எடுத்துக்காட்டாகச் சொல்லப்போனால் அருந்ததி, திரவுபதை, சீதை, அகலியை, தாரை, பிருந்தை முதலியவர்கள் தலை சிறந்த கற்புக்கரசிகள். இவர்களை நினைத்தாலே சகல பாபமும் நாசமாகிவிடும் என்பதோடு இவர்கள் கடவுள்களாகவும் விளங்குகிறார்கள்.

அருந்ததியின் கற்பு

இவர்களுள், அருந்ததியானவள் பெண்களுக்கு விபசாரித்தனம் செய்ய லைசென்சு கொடுத்தவள். உலகத்தில் ஒழிந்த இடமும் ஆண்பிள்ளைகளும் இருக்கிறவரை பெண்கள் கற்பாக இருக்க முடியாது என்று சொன்னவள். அதாவது இயற்கையாக யாரும் கற்பாக இருக்க முடியாது என்பது ஆகச் சொன்னவள். அப்படி இருக்க விபசாரித்தனத்துக்குத் தண்டனை இருக்கவும் நியாயமிருக்காது. திரவுபதையின் கற்புநெறி திரவுபதை அதை நடத்தையில் காட்டினவள். அய்ந்து பேருடன் நான் கலவி செய்து வந்தும், ஆறாவது புருஷன் மீது எனக்குக் காதல் இருந்து வந்தது. என் இருதயம் இவைகளை விபசாரித்தனம் என்று கருதவே இல்லை. ஏனெனில் ஆண் பிள்ளைகள் உலகத்தில் இருக்கும்போது பெண்கள் எப்படிக் கற்பாயிருக்க முடியும் என்பதாகக் கூறிவிட்டாள்.

உடற்சம்பந்தத்தால் கற்பு கெடாது

சீதை என் மனம் ஒருவரிடமும் விருப்பம் கொள்ளவில்லை. என் உடலைப் பற்றி நான் பொறுப்பு ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஓங்கி அடித்து விட்டாள். ஆதலால் உடல் சம்பந்தத்தால் கற்பு கெடுவதில்லை என்று சீதை ஒரு விலக்கு விதி ஏற்படுத்திவிட்டாள்.

விபசாரித்தனத்துக்கு இலக்கியம்

தாரையின் கற்பு சங்கதி விபசாரித்தனத்துக்கு ஏற்படுத்தப்பட்ட ஓர் இலக்கியக் கலையாகும். விபசாரித்தனம்தான் பெண் ஜென்மத்துக்கு இன்பமளிக்கக் கூடிய சாதனம் என்பதாக விளக்கியவள் தாரையே.

அகலிகை கற்பு சங்கதி

நல்ல பெண்களைக் கண்டால் எப்படிப் பட்டவனானாலும் ஆசைப்படுவது இயற்கை யென்றும், கவுரவமும் பெருமையும் உள்ள மனிதன் ஆசைப்பட்டால் பெண்கள் மனம் இளகுவது இயற்கைதான் என்றும், இதனால் தப்பிதம் ஒன்றும் இல்லை யென்றும், புருஷனுக்குக் கோபம் வருவதும் அந்தச் சமயத்தில் இயற்கையென்றும், பிறகு அது மாறிப்போகும் என்றும், அனுபவித்த இன்பம் எந்நாளும் மனத்தில் நிலைத்திருக்கும் என்றும் எடுத்துக்காட்டினவள்.

ஆரியர்களில் இந்தத் தெய்வீகப் பெண்களின் கற்பு இப்படி இருக்குமானால் மற்றச் சாதாரணப் பெண்களின் கற்பைப் பற்றிப் பேசுவது நேரத்தைக் கொலை செய்வதாகும். ஆரியர்களின் கற்பு இந்த விதமான யோக்கியதாம்சங்கள் கொண்டிருப்பதால் அவர்கள் மேலோர்களாகவும் உண்மையான மேன்மையான வாழ்வு வாழ்கின்றவர்களாகவும் இருந்து வருகிறார்கள்.

தமிழர்களின் கற்பு தமிழன் கதியைப்பார்த்தால் பரிதாபகரமாய் இருக்கிறது. கண்ணகி கற்பு அவர்கள் வாழ்வையே கெடுத்துவிட்டது. அவ்வளவுதானா? அவர்கள் அரசர்களையும் கெடுத்தது; அவர்கள் நாட்டையும் கெடுத்தது; ஒரு முலையும் திருகி எடுக்கப்பட்டது. இவ்வளவோடு போகாமல் நிரபராதிகள் எல்லாம் வெந்து சாம்பலானார்கள். அது மாத்திரமா? நினைத்தாலே இரத்தம் கொதிக்கிறமாதிரி பார்ப்பனர்கள் தவிர மற்றவர்கள் வெந்து சாம்பலானார்கள்.

இது தமிழ்க் கற்புக்கரசியின் கண்ணகியின் கட்டளையாம். இப்படிக் கட்டளை இட்டவளுக்குக் கோவிலாம், கொண்டாட்டமாம். இவள் பாண்டிய நாடு பூராவையும் எரித்துச் சாம்பலாக்கி இருந்தால் இன்னும் பெரிய கடவுளாக ஆயிருப்பாள் போலும். ஆகவே ஆரியர்கள் கற்பு முறை அவர்களுக்கு எவ்வளவு இலாபத்தைக் கொடுக்கிறது என்பதும் அவர்களைப் பார்த்துக் காப்பி அடிக்கும் தமிழர்கள் கற்பு முறை நமக்கு எவ்வளவு தொல்லையையும் கேட்டையும் கொடுமையையும் கொடுக்கிறது என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறோம்.

கற்பு மக்களுக்கு வேண்டும், கட்டாயம் வேண்டும் ஆனால் ஆண்களை அயோக்கியர்களாக ஆக்கும் கற்பு அயோக்கியர்களாக ஆவதற்கு வசதி அளிக்கும் கற்பு, தூண்டும் கற்பு, குடும்பத்தை, வாழ்க்கையை, பெண் உரிமையைக் கெடுக்கும் கற்பு, மனித சமுதாயத்து ஆணுக்காகிலும் பெண்ணுக்காகிலும், குழந்தை, குட்டி, பெற்றோர், உற்றார் ஆகியவர்களுக்காகிலும் எவ்விதப் பயனும் அளிக்காது. அளிக்காது என்பதோடு அதற்கு ஒரு மோக்ஷமுண்டு என்பது மகா அயோக்கியத்தனம் என்றே சொல்லுவேன்.

தந்தை பெரியார் “குடிஅரசு” 9-7-1943
பெரியார் நாகம்மை அறக் கட்டளையின் தலைவர் வே. ஆனை முத்து, ‘பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்’ இரண்டாம் பதிப்பை 20 தொகுதிகளாக, 9000 பக்க அளவில் வெளியிடவிருக்கும் செய்தியை ‘முர சொலி’ உள்ளிட்ட நாளிதழ்களிலும், சிற்றிதழ்களிலும், மக்கள் தொலைக் காட்சியிலும் விளம்பரமாக வெளி யிட்டுள்ளதன் வழியாக அறிந்து, நாம் மகிழ்ச்சி அடைகிறோம். பெரியாரிய சிந்தனைகள் முழுமையாக மக்களிடையே சென்றடைய வேண்டியது மிகவும் அவசியமாகிறது. 35 ஆண்டுகளுக்கு முன் பெரியார் சிந்தனைகளை தோழர் வே. ஆனை முத்து பெரியாரின் ஒப்புதலுடன் வெளியிட்டார். அந்த ஆவணம் மட்டுமே இதுவரை பெரியார் சிந்தனைகளின் ஒரே தொகுப்பாக இருந்து வந்தது. இப்போது வெளி யிடப்பட இருக்கும் தொகுப்புகளின் மொத்த விலை ரூ.5800 என்றும், முன்பதிவாக, ஒரே தவணையில் செலுத்தினால் ரூ.3500 என்றும், இரண்டு தவணைகளில் செலுத்தினால் ரூ.3800 என்றும் டிசம்பர் இறுதிக்குள், “பெரியார் ஈ.வெ. இராமசாமி - நாகம்மை கல்வி, ஆராய்ச்சி அறக் கட்டளை” என்ற பெயரில் பண விடை / காசோலை எடுத்து, 19, முருகப்பா தெரு, சேப்பாக்கம், சென்னை - 600 005 என்ற முகவரிக்கு அனுப்பலாம் என்றும், தோழர் வே. ஆனைமுத்து, தமது அறக்கட்டளை சாhபில் இதழ்களில் வெளியிட்டுள்ள விளம்பரங்கள் தெரிவிக்கின்றன. பெரியாரியலைப் பரப்பும் முயற்சிக்கு, ஆதரவினை வழங்குவது, பெரியாரி யல்வாதிகளின் கடமையாகும்.

வங்கி வரைவோலையாகத் தொகையை அனுப்ப விரும்புவோர்(Bank Draft)

PERIYAR E.V.RAMASAMY-NAGAMMAI EDUCATIONAL AND RESEARCH TRUST என்று ஆங்கிலத்திலோ பெரியார் ஈ.வே,இராமசாமி -நாகம்மை கல்வி,ஆராய்ச்சி அறக்கட்டளை எனத் தமிழிலோ வரைவோலை எடுத்து,

திரு.வே.ஆனைமுத்து,தலைவர்
பெரியார்-நாகம்மை அறக்கட்டளை,
19,முருகப்பா தெரு,
சேப்பாக்கம்,சென்னை-600005,இந்தியா

என்னும் முகவரிக்கு அனுப்பலாம்.

தொலைபேசி எண்: + 91 44 2852 2862

மின்னஞ்சல் முகவரி:
sinthaniyalan@yahoo.in
periyar_era@yahoo.in

நூல் வெளியீடு:
அண்ணா அறிவாலய கலைஞர் அரங்கில் வரும் மார்ச் 23ம் தேதி கலைஞர் அவர்கள் இரண்டாம் பதிப்பையும் வெளியிட்டு சிறப்பிக்கிறார்
நம் தமிழினத் தாய்மார்களை கருத்த எருமை போன்ற தடிச்ச தமிழச்சி என காறித் துப்பிய மலையாளத்துப் பார்ப்பான் ஜெயராமனுக்கு ஆதரவாக சில முற்போக்கு அங்குலி மாலாக்கள் கிளம்பி இருக்கின்றன. ஊரில் எதுவும் நடந்து விடக் கூடாது. நடந்து விட்டால் இந்த அங்குலிமாலாக்களுக்கு எப்படித்தான் அலாரம் அடிக்குமோ தெரியாது. உடனே மார்க்சையும் அழைத்துக் கொண்டு பாசிசத்தினை கழுவ வந்து விடுவார்கள். நல்லவேளை கார்ல் மார்க்ஸ் உயிருடன் இல்லை. இருந்தால் இந்த வெங்காயத் தோல்களை கூட்டி அள்ளிக் கொட்டியிருப்பார் குப்பையில்...

கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நடந்த ஈழத்தின் பேரழிவு உலகத் தமிழ் சமூகத்தின் மீது மிகப் பெரிய சோக அவலமாக கவிழ்ந்திருக்கிறது. உலக வல்லாதிக்க நாடுகளும், இந்தியாவும் குறிப்பாக மலையாளிகளும் காத்திருந்து நம் இனத்தினை காவு கொடுத்து அழித்தார்கள். நம் கண்ணெதிரே நாடு கட்டி வாழ்ந்த நம்மினம் நாதியற்று கம்பி வேலி சிறைகளுக்குள் வெம்பிக் கிடக்கிறது. உயிரைக் காத்துக் கொள்ள உறவைத் தேடி வந்த மீதி சனம் அகதி முகாம் என்ற பெயரில் செங்கல்பட்டு போன்ற இடங்களில் சின்னாபின்னப்படுத்தப்பட்டு சிதைந்து கிடக்கிறது. தமிழர்கள் மிகப் பெரிய உளவியல் போருக்கு மத்தியில் கண்கலங்கி நின்று கொண்டிருக்கிறார்கள். இத்தனை அவலங்களுக்குப் பிறகும் மீள் எழுவதற்கான சாத்தியங்கள் குறித்து பல கேள்விகளோடு தமிழினம் இன்று நின்று கொண்டிருக்கிறது. தாயகத் தமிழர்களை விட இனமான உணர்விலும், வீரத்திலும், தொன்ம இனம் வழி வந்த அறத்திலும் நின்ற ஈழத் தமிழர்களே இன்று தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இங்கோ ஏற்கனவே மார்வாடிகளும், சேட்டுகளும், மலையாள சேட்டன்களும் தமிழகத்தினை தொழில் ரீதியாகவும், வாழ்வியல் ரீதியாகவும் ஆக்டோபஸ் விழுங்குவது போல விழுங்கிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டின் வீதிகளில் தமிழுக்கு இடம் இல்லை. நீதிமன்றங்களில் தமிழ் இல்லை. கல்விக் கூடங்களில் தமிழ் இல்லை. சமூக வாழ்வியலில் தமிழ் இல்லை. பேச்சிலோ,எழுத்திலோ தமிழ் இல்லை. இளைஞர்கள் மீது கவிழும் புதுப்புது பண்பாட்டு வேர்களில் தமிழ்ப் பண்பாட்டிற்கும், மொழிக்கும் இடமில்லை. சென்னை நகரம் மார்வாடிக்களின் கைகளிலும், ஆந்திர, மலையாளிகளின் கைகளிலும் சென்று கொண்டே இருக்கிறது. நடைபாதைகளில் நாதியற்றுக் கிடக்கிறான் விவசாயத்தினை விட்டு, கிராமத்தை விட்டு, பட்டணத்திற்கு பிழைக்கப் போன தமிழன்.

[சீமான்] அதனால் தான் தன்னைக் காத்துக்கொள்ள, தன் பண்பாட்டை காத்துக் கொள்ள தமிழ் தேசிய அமைப்புகள் செயல்படத் துவங்கி உள்ளன. ஜெயராம் வீடு தாக்கப்பட்டது வன்முறை என்றால், அதைத் தாண்டிய வன்முறை மலையாள ஜெயராம் உதிர்த்த சொற்கள். பொருட்கள் மீதான வன்முறையின் தாக்கத்தினை விட கருத்துக்கள் மீதும், ஓட்டு மொத்த இனத்தின் அடிப்படை உருவகங்களின் மீது நிகழ்த்தப்படும் வன்முறை. அவை சொற்களாக இருந்தாலும் கூட அவை மூர்க்கமானவையே. வெகு நாட்களாக ஒடுக்கப்பட்டவன் திமிறி எழுவது அவ்வளவு சுமூகமாக இயல்பாக இருக்காதுதான். அதனால் எதையும் எதிர்த்துக் கேட்காதே, மலையாளத்தான் உன் தாயின் முகத்தில் காறி உமிழ்ந்தால் கூட கண்டன ஆர்பார்ட்டம், மனிதச் சங்கலி, உண்ணாவிரதம் ஆகியவை செய்! காறி உமிழப்பட்ட எச்சிலைத் துடைக்காதே! நீ துடைத்தால் அது மலையாளத்தானுக்கு எதிரான வன்முறை என்று அங்குலிமாலா உள்ளீடான வார்த்தைகளில் அறிவுஜீவித்தனம் பேசுகிறார்.

ஜெயராமின் கருப்பின கருத்தியல் அவரின் ஆரிய மனவியலின் சின்னம். ஆரிய புளுகுப் புராணங்களில் தமிழர்களை அரக்கர்களாகவும், குரங்குகளாகவும் படைத்த ஆரிய படைப்பு மனம் தான் இன்றளவும் உயிருடன் இருந்து தமிழச்சியை கருத்த எருமை என எகத்தாளம் பேச வைக்கிறது.

தமிழ் தேசியவாதிகளுக்கு கருத்தியல் பலம் இல்லையாம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இலக்கிய இலக்கண வளமையைக் கொண்டு, மொழியியல், பண்பாட்டியியல், அரசியல் என அனைத்து சமூகவியல் கூறுகளையும் உலகிற்கு கற்பித்த ஒரு தேசிய இனத்தின் பிள்ளைகளுக்கு கருத்தியல் பலம் இல்லையென்பது ஜெயராம் இழிவுபடுத்திய சொற்களுக்கு நிகரான அரசியல் தன்மை கொண்டவை. என்ன செய்வது எமக்கு எதிராக உதிர்க்கப்பட்ட சொற்களின் ஊடாக இருந்துதான் எங்களுக்கான கருத்தியல் பலத்தினை நாங்களே உண்டாக்கி கொள்ள வேண்டி இருக்கிறது.

இனம் அழியும்போது கூட எதிர்த்துக் கேள்வி கூட கேட்க முடியாத இயலாத அச்ச மன நிலையை அரசு இயந்திரங்கள் மிகச் சரியாக ஏற்படுத்தி இருக்கின்றன. ஏனெனில் மத்திய அரசின் உயர் பதவிகளில் உளவுத் துறைகளின் உச்சப் பதவிகளில் இன்று மலையாளிகளே இருக்கின்றார்கள். முல்லைப் பெரியாறு போன்ற தமிழகத்தின் வாழ்வாதார சிக்கல்களில் நமக்கு மிகப்பெரிய எதிரிகளாக மலையாளிகள் இருக்கின்றார்கள். வேறு எந்த இனத்தினைக் காட்டிலும் நம் ஈழ இனத்தின் ரத்தம் மலையாளிகளின் கரங்களில் தான் படிந்திருக்கிறது. ஜெயராமின் சொல்லாடல்களுக்குள் எங்களை ஈழப் போரில் வீழ்த்திக் காட்டிய மலையாள இனத் திமிர் ஒளிந்திருக்கிறது. மலையாளப்பார்ப்பானை நேரடியாக ஆதரிக்க கூச்சப்பட்டுக் கொண்டு “சும்மா இருந்தவன அவன் காறி துப்புனது தப்புதான் ஆனா இவன் திருப்பி அடிச்சது ரொம்ப ரொம்ப தப்பு” என்று கருணாநிதி பாணியில் அங்குலி மாலா முரசொலித்திருக்கிறார்.

பிரச்சனை இவர்களுக்கு என்னவென்றால், மலையாளத்தான் திட்டியது அல்ல தமிழன் தட்டிக் கேட்டதுதான். இந்த லட்சணத்தில் மலையாளத்தானுக்கு ஒரு கையில் குடை பிடித்துக் கொண்டு மறு கரத்தால் உழைத்துச் சோர்ந்த கரங்களோடு கைக் கோர்ப்பார்களாம் இவர்கள்.

நம் இனம் அழியும் போது நாம் அசாதாரணமாக கடைப்பிடித்த மவுனம் தான் இந்த மலையாளப் பார்ப்பான் ஜெயராமின் வாய்க் கொழுப்பிற்கு காரணம். ஜெயராமின் கொழுப்பு மிகுந்த வார்த்தைகளை தமிழன் வழமைப் போல மவுனமாக கடந்திருந்தால் இந்த அங்குலிமாலாவிற்கு எவ்வித பிரச்சனையும் இல்லை. தட்டிக் கேட்கிறானே என்ற அச்சமும் தவிப்பும் அங்குலிமாலாக்களை வார்த்தைகளை மாற்றிப் போட்டு வித்தை காட்ட வைக்கின்றன. கேட்டால் வன்முறையாம். இப்போது புதிதாய் புறப்பட்டிருக்கும் இந்த அகிம்சை (?) மார்க்சியவாதி சொல்கிறார். இந்த கொழுப்பினை தட்டிக் கேட்டால் அங்குலிமாலா நாம் தமிழர் இயக்கத்தினையும் சிவசேனாவையும் ஒப்பிடுகிறார். நாம் வெகு தீவிரமாக எதிர்க்கக் கூடிய மதவாத அரசியலின் மராட்டிய முகமான சிவசேனாவிற்கு கூட மராட்டிய மக்களினத்தின் வரலாறு குறித்தும் பண்பாடு குறித்தும் ஆழ்ந்த நம்பிக்கை உண்டு. அங்குலிமாலா போன்ற முற்போக்கு முகமுடிகளுக்கு எவ்விதப் புரிதலும் அறிதலும் இல்லை.

தமிழ்ப் படங்கள் மலையாளப் பெண்களை இழிவுப்படுத்துகின்றன என அங்குலிமாலா வெகுவாக வருந்துகிறார். அதனால்தான் ஜெயராமும் நம்மினப் பெண்களை இழிவுபடுத்த உரிமைப் படைத்தவராகிறார் என சொல்ல வருகிறார் அங்குலிமாலா. இந்தியா முழுவதும் தேசிய இனங்களின் தன்னுரிமை குறித்தான சிந்தனை செழுமைப்படுத்தப்பட்டு வருகிறது. அதனால் தான் பல்வேறு மாநிலங்களில் அந்தந்தப் பகுதி மக்கள் தங்களுடைய மொழியையும், பண்பாட்டினையும் காக்க போராடத் துவங்கியுள்ளார்கள். அதனுடைய ஒரு வடிவம் தான் ஜெயராம் வீட்டு மீதான தாக்குதல்.

தமிழகத்திற்கு யார் வேண்டுமானாலும் வரலாம். வந்து எங்களோடு சகோதரர்களாக அமைதியாக வாழலாம். ஆனால் எங்களை இழிவு படுத்தவும், சிறுமைப்படுத்தவும் எவருக்கும் உரிமை இல்லை. சர்வதேசியம் பேசியவர்களும் பொதுவுடைமை உலகை உருவாக்கக் கிளம்பியவர்களும் சேர்ந்து கொண்டுதான் ஈழப் போரில் தமிழர்களுக்கு எதிரான நிலையை எடுத்தார்கள். இனி எங்களுக்கான அரசியலை எங்களுக்கான தத்துவங்களை நாங்கள் எங்களின் தொன்ம இலக்கிய மரபின் ஊடாகவே அடைய வேண்டிய அவசியம் இருக்கிறது.

நாங்கள் வீழ்ந்தவர்கள்; தோற்றவர்கள். எங்கள் காயத்தின் ரத்தம் கூட இன்னும் உலரவில்லை. எங்களிடம் அறம் பேசும் அங்குலிமாலாக்கள் முதலில் மலையாளிகளிடம் போய் பேசி, கொடுப்பதை வாங்கிக் கொண்டு வரட்டும். எதற்கெடுத்தாலும் எம் தந்தை பெரியாரை இழுப்பதை இந்த மார்க்சியவாதிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும். தமிழ்நாடு தமிழர்களுக்கே என்று தனித்தமிழ் நாடு கேட்ட தந்தை பெரியார் இன்று உயிருடன் இருந்தால் திராவிடத்தின் பேரால் மலையாள பார்ப்பனுக்கு மன்னிப்பு வழங்கி விட்டு தமிழனை தூக்கி சிறைக்குள் போடும் பிழைப்புவாத அரசியல்வாதிகளை தடி கொண்டு அடிப்பார்.

மலையாளிகள் பல்வேறு நிலைகளில் இன்று தமிழர்களின் உழைப்பையும், ஆற்றலையும் சுரண்டும் மிகப் பெரிய சக்தியாக விரிந்திருக்கின்றனர். ஊருக்கு ஊர் ஜோஸ் ஆலுக்காஸ் கிளை பரப்புகிறது. அரசு அதிகாரங்களில், மத்திய அரசின் முடிவெடுக்கும் பதவிகளில் இன்று மலையாளிகளின் கரமே ஒங்கி இருக்கிறது. அதனால் தான் ஜெயராமை வீட்டினை தாக்கியதாக சொல்லப்படும் நாம் தமிழர் இயக்கத் தோழர்களின் கைதுகளுக்குப் பிறகும் எவ்வித முன்னுதாரணங்களும் இல்லாமல் நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமானை எப்படியாவது கைது செய்து விட அரசு துடிக்கிறது. ஒரு இயக்கத்தினரின் செயல்களுக்காக அதன் தலைமையும் கைது செய்யப்பட வேண்டுமென்றால் மதுரை தினகரன் பத்திரிக்கை அலுவலக எரிப்பினில் முதலில் கைது செய்யப்பட வேண்டியவர் யார் ?

திரைப்படங்களில் பெண்களின் நிலை குறித்த பார்வையை மலையாளத்தானுக்கு ஆதரவாக சீமான், தங்கருக்கு எதிரான முரணாக முன் நிறுத்துவது அபத்தம். ஒட்டு மொத்த இனத்திற்கான இனமானக் குரலுக்கு எதிராய் உள் சமூக முரண்களை பெரிதாக்கிக் காட்டும் போக்கு இனத்தின் மேன்மையை இன்னும் வீழ்ச்சிக்கே தள்ளும்.

என் இனம் வீழ்ந்ததும், அழிந்ததும் எனக்கு வலிக்கிறது. எம் தாய்மார்களைப் பற்றி பேசினால் எனக்கு சுடுகிறது. என் நிலமும், வாழ்வும், என் மீதான அதிகாரம் செலுத்தும் உரிமையும் மலையாளத்தான் கரங்களில் சிக்கும்போது நான் பாதிக்கப்படுகிறேன். எம் இனத்தினை எள்ளலுக்கும் கேலிக்கும் மாற்றான் உட்படுத்தும் போது நான் அவமானத்தால் தலைகுனிகிறேன். என் துயரையும், வலியையும் பொறுத்து என் எதிர்வினை அமைகிறது. இதுவும் அறச் சீற்றம் தான்.

வன்முறையை தனது திமிரால் விதைத்தவன் அந்த மலையாளத்துப் பார்ப்பான் ஜெயராம்தான். மலையாளிகளுக்கு ஆதரவாக அரசு செயல்படுகிறது. முடிந்தால் அதை எதிர்த்துக் கேளுங்கள். நாங்கள் வெறும் வன்முறையாளர்கள் அல்ல என்பதை முத்துக்குமாரர்களாக, திலீபன்களாக நிருபித்து இருக்கிறோம். ஏற்கனவே வரலாற்றில், கையில் விமானம் இருந்தும் பொது மக்களை தாக்காமல் ராணுவ நிலைகளை மட்டுமே தாக்கிய தமிழர்களின் அறம் உலகம் அறிந்தது. அங்குலிமாலாக்கள் அறியாதது ஏனோ.?--

- மணி.செந்தில்
எந்தப் பார்ப்பான் தொழிலாளியாக இருக்கிறான்? விவசாயம் செய்யும் பார்ப்பனன் உண்டா? மில்லில் கூலி வேலை செய்யும் பார்ப்பனன் உண்டா? அத்தனைத் தொழிலாளர்களும் தமிழ் மக்கள் தானே?

எனவே, மற்றவர்கள் எக்கேடு கெட்டால் என்ன என்ற எண்ணத்தின் மீது அவர்களிடம் ஆத்திரமூட்டி, தூண்டிவிட்டு முதலாளியிடம் இவ்விதம் வம்புக்குப் போகும்படி செய்துவிட்டு வேடிக்கை பார்க்கிறார்களே பார்ப்பனர்களும் அவர்களுக்குத் துணை புரியும் கம்யூனிஸ்ட்களும். இவர்கள் கம்யூனிஸ்ட்களாக இருப்பதனால், முதலில் ஜாதியை ஒழிக்கப் பாடுபட வேண்டும். ஜாதிப்பாகுபாடு நிலைநாட்டப்பட்டிருப்பதால்தானே, உழைக்கும் தொழிலாளியும், உழைக்காமல் சுகமாக வாழும் பார்ப்பனரும் இருக்கின்றார்கள்.
ஜாதிப் பிரிவு இல்லையானால், தொழிலாளி - முதலாளி என்ற பிரிவும் மறைந்துபோகும். எனவே, ஜாதியின் பெயரால் இருக்கும் சின்னங்களையும், உயர்வு தாழ்வு பாராட்டுவதற்கான எண்ணங்களையும் அழிக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். ஒவ்வொரு கம்யூனிஸ்ட் தோழரும் முதலாவது தன் கையில் கத்திரிக்கோலை எடுத்துக் கொண்டு பார்ப்பாரத் தெருவில் புகவேண்டும். அங்குள்ள பார்ப்பனர்களின் ஒரு உச்சிக் குடுமியோ, பூணூலோ இல்லாமல் அடியோடு கத்திரித்து விட வேண்டும். முதலில் இதில் ஈடுபட்டால்தான் ஜாதியை ஒழிக்க முடியும்.

ஆனால், இந்த முயற்சியில் புகுந்தீர்களானால் முதன் முதலில் தங்களுக்குத் தலைவர்களாக உள்ள பார்ப்பனர்களின் பூணூலைக் கத்தரித்துவிட்டுத்தான் மற்ற பார்ப்பனர்களிடம் போக நேரிடும். ஆனால், இவற்றால் ஜாதி ஒழியும் என்று கூறுவதற்கில்லை.
இன்னமும் கூறவேண்டுமானால் திராவிடர் கழகத்தைத் தவிர மற்ற யாருடைய முயற்சியாலும் ஜாதி ஒழிவதற்கு வழியே கிடையாது. இதுவரை கீழ்ஜாதி என்பவர்களுக்கும் ஏதாவது கொஞ்சம் மரியாதை இருந்திருக்குமானால், அவர்களுடைய முயற்சினால் தான் வந்திருக்கும்.

காந்தியார் கூட மேல் ஜாதிக்காரனுக்கு என்று தனியாக கோயிலும் குளமும் வேண்டும், கீழ் ஜாதிக்காரனுக்கென்று தனியாகக் கோவிலும் குளமும் வேண்டும் என்றார். நாங்கள் பிறகு கூப்பாடு போட்டு இரண்டு பேருக்கும் தனித்தனியே இருக்குமானால் அந்தக் கோவிலும் குளமும் பறையன் கோவில், பறையன் குளம் என்று பெயரிடப்பட்டு அவை உள்ளவரை அந்த ஜாதியும் மறைவதற்கு வழி இல்லை என்று சொன்னோம்.

அதன் பிறகுதான் ஒரே கோவிலில் எல்லோரும் சாமி கும்பிடலாம் என்று சொன்னார்கள். ஆனால், இன்னமும் பார்ப்பான் கோவிலில் அனுபவிக்கும் சுதந்திரம் சூத்திரனும் பறையனும் அனுபவிக்க முடியாது. பார்ப்பான் மட்டும்தான் சாமிக்கு பக்கத்தில் போகமுடியும். அந்த இடத்தில் நாம் போக முடியாது.

இப்படிக் கோவிலுக்குப் போக வேண்டிய அவசியம் தான் என்ன இருக்கிறது? இன்னமும் இந்த மூடங்கள் அவிழ்த்துக் கொடுக்கின்றன. பார்ப்பான் வாங்கி இடுப்பில் சொருகிக் கொண்டே இருக்கிறான். 1956 ஆம் ஆண்டிலும் இந்த அக்கிரமம் நடக்கலாமா? இதையல்லவா கம்யூனிஸ்ட்கள் ஒழிக்க வேண்டும்?

எந்த நாட்டில் கம்யூனிஸ்ட்களுக்குப் பாதிரி தலைவனாக இருக்கிறான்? கம்யூனிஸ்ட் என்றாலே பாதிரிக்கு வேலை இல்லை. இந்தப் பாதிரியை விட மகாக் கொடுமையும், பித்தலாட்டமும் செய்யும் முதல்தரப் பார்ப்பனர்கள் கம்யூனிஸ்ட்க்குத் தலைவராக இருக்கின்றனர். ஏன்? நம்முடைய ஆளுக்கு யோக்கியதையும் திறமையும் இல்லையா? பார்ப்பனர் கம்யூனிஸ்ட்களின் தலைவராக இருக்க என்ன யோக்கியதை உடையவர்கள்? எப்படியாவது உண்மை கம்யூனிசம் நம் நாட்டில் பரவினால் பார்ப்பனர்களுக்குச் சீட்டுக் கொடுத்தனுப்பும் நிலையைக் கொண்டு வந்துவிடுவார்கள் என்பதற்காகப் போலி கம்யூனிசம் நாட்டில் பார்ப்பனர்களால் பரவச் செய்யப்படுகிறது.

உண்மைக் கம்யூனிசம் இந்த நாட்டில் பரவுமானால் இங்கே பார்ப்பனருக்கும், மதம் சாஸ்திரம் புராணங்களுக்கும், கடவுள்களுக்கும் வேலையே இருக்காது. எனவே, இந்த மதமும் ஜாதியும் ஒழிய வேண்டுமானால், எங்களைத் தவிர வேறு யாரும் கவலை கொள்பவர்கள் கிடையாது. நாங்கள் தான் முதன் முதலில் ஜாதி ஒழியவேண்டும் என்றும் கூறியவர்கள்.

காந்தியார் கூட செத்துப் போவதற்குப் பத்து நாட்களுக்கு முன்பாகத்தான் ஜாதி ஒழியவேண்டும் என்று கூறினார். அதற்கு முன் ஜாதியைப் பற்றிய கவலை காந்திக்கு இருந்ததேயில்லை. ஜாதியைக் காப்பாற்றியதால்தான் அவர் "மகாத்மா" என்று போற்றப்பட்டார்.

ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வள்ளுவரும், புத்தரும் ஜாதி ஒழியவேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். இதைத் தவிர இப்போது முதன் முதலில் எங்களைத் தவிர வேறு யாரும் ஜாதி ஒழிய வேண்டும் என்று கூறினதுமில்லை. நாங்கள் சொன்ன பிறகு, டாக்டர் அம்பேத்கர், காந்தியின் தவறுகளை உணர்ந்தபின் தான் அவரும் ஜாதி ஒழிய வேண்டும் என்று கூறினார். அதற்கு முன் அவரும் காந்தியுடன் சேர்ந்து ஏமாற்றப்பட்டவர்தான். காந்தியார் ஜாதியைக் காப்பாற்றத்தான் முயற்சிக்கிறார் என்ற உண்மை தெரிந்த பின்னர் ஜாதி ஒழியவேண்டும் என்று கூறினார்.

இப்போது தென்னாட்டில் நாங்களும், வடநாட்டில் டாக்டர் அம்பேத்கரும் தான் ஜாதியை ஒழிக்கப் பாடுபடுகிறோம்.

முன்பு ஜாதி ஒழிப்புச் சங்கம் என்று ஒன்று இருந்தது. அதற்கு பிர்லா தலைவர். நேருவின் உறவினர்களில் ஒரு பெண் செக்ரெட்டரியாக இருந்தார். இப்படி இவர்கள் சேர்ந்து ஜாதி ஒழிப்புக்குத் திட்டமிட்டால் உருப்படுமா? அந்த சங்கத்தின் மாநாட்டிற்கு டாக்டர் அம்பேத்கரைப் பேசுவதற்கு அழைத்தனர். இவரும் ஒப்புக் கொண்டார். மாநாடு நடத்தும் தினம் நெருங்குவதற்கு ஆரம்பித்தது. அம்பேத்கரை, "நீங்கள் எதைப் பற்றிப் பேசுவதாக இருக்கின்றீர்கள்? அதன் குறிப்பு முதலில் வேண்டும்" என்று கேட்டார்கள். இவர் கொடுத்த குறிப்பில் மத சாஸ்திர புராணம் மற்றும் கடவுள்கள் இவற்றின் யோக்கியதையை வெளியிடுவதாக எழுதி இருந்தார். உடனே அதை மாளவியா மற்றும் பெரிய ஆட்கள் எல்லாம் எதிர்த்தார்கள். "நீ எதை வேண்டுமானாலும் பேசு. ஆனால் மதத்திலும், ஜாதியிலும் கடவுள்களின் மீதும் கையை வைக்காதே" என்று கூறினர்.

ஆனால், அம்பேத்பர் ஓங்கி அடித்துக் கூறிவிட்டார். "நான் மாநாட்டில் பேசுவதாக இருந்தால், இதைத் தவிர வேறு எதையும் பேச முடியாது. என்னுடைய பேச்சு தேவைப்படுமானால், இதைத் தான் பேசுவேன். ஆனால் நீங்கள் இதை மறுத்து மாநாட்டின் இறுதியில் என்னுடைய பேச்சைச் சங்கம் ஏற்க மறுக்கிறது என்று வேண்டுமானாலும் தீர்மானித்துக் கொள்ளுங்கள்! அதற்கு ஆட்சேபனை இல்லை" என்று கூறிவிட்டார். பிறகு அம்பேத்கர் தம் எண்ணப்படியே பேசினார்.

இவ்விதம் ஜாதியை ஒழிக்கும் வீரர்கள் மதத்திலும், சாஸ்திர புராணத்திலும், கடவுள்களிடமும் கைவைக்காமல் ஒழித்து விடலாம் என்று பார்க்கிறார்கள். இப்போது கூட அரசியல் தலைவர்கள் எல்லாம் ஜாதி ஒழியவேண்டும் என்று கூறிக்கொண்டு திரிகிறார்கள். ஆனால், ஜாதி ஒழிய எவை தேவையோ அந்தக் காரியங்களில் பிரவேசிப்பதில்லை. நேரு ஜாதி ஒழிய வேண்டும் என்று அடிக்கடியும் கூறுகிறார். ஆனால், முதலில் அவருடைய உச்சிக் குடுமியையும் பூணூலையும் அப்படியே வைத்துக் கொண்டு ஜாதி ஒழிய வேண்டும் என்று கூறுகிறார். ஆகக்கூடிய காரியமா?

சர்வ அதிகாரங்களையும் கையில் வைத்துள்ள நேரு ஜாதி ஒழிய வேண்டும் என்று உண்மையில் நினைப்பாராகில் அதற்கென்று சட்டமே இயற்றிவிடலாம். "இனிமேல் யாரும் ஜாதிச் சின்னம் அணியக்கூடாது பூணூலை அறுத்து எறியவேண்டும். இல்லையேல் இந்தச் சட்டப்படி போலீசார் கத்தரித்து விடுவார்கள். கோவில்களில் பார்ப்பனர் மட்டுமல்லாது பறையன், சக்கிலியன் யாவரும் மணி அடிக்கலாம்" என்று சட்டமியற்றி விட்டால் சீக்கிரமாகவே ஜாதியை ஒழிக்கலாம். அதன்றி வாயினால் சொன்னால் மட்டும் போதாது.

ஆனால், நேரு அப்படிக் கூறுவதற்கு அவருக்குப் பைத்தியம் பிடித்தால் ஒழியக் கூறமுடியாது. பச்சைப் பார்ப்பனராக இருந்து கொண்டு அப்படிக் கூறுவாரா? அவருடைய ஆட்சியே பார்ப்பனர்களின் நன்மைக்கென்று இருக்கையில் பார்ப்பனர்கள் விஷயத்தில் கை வைக்க மாட்டார்.

இப்போது கூட நான் அரசாங்கத்திற்கு எதிரானவன் என்ற காரணம் என்ன? அரசாங்கம் பார்ப்பனருடையது.... பார்ப்பனரை ஒழிக்க வேண்டும் என்று நான் கூறுகிறேன். ஆகையால்தான் நான் அரசாங்கத்திற்கு எதிரானவன்.

நான் என் வேலையை விட்டு, "இனிமேல் காங்கிரசில் சேர்ந்து விட்டேன். ஏதோ இதுவரை தெரியாமல் பார்ப்பனர்கள், சாஸ்திரம், கடவுள் இவை எல்லாம் ஒழிய வேண்டும் என்று கூறினேன். இப்போது பகவான் என்முன் தோன்றி இதுவெல்லாம் கூடாது என்று சொன்னார். ஆகவே பார்ப்பனர்கள் 'பூலோகத் தேவர்கள்' என்று காமராசருக்கு மட்டுமல்ல. நேருவுக்கும் தந்தி கொடுத்தேனாகில், உடனே மறு தந்தியில் உனக்கு ஒரு மந்திரி மட்டும் போதுமா? அல்லது இரண்டு மந்திரி உத்தியோகம் வேண்டுமா? சென்னை அரசாங்கத்தில் வேண்டாம். மத்திய அரசாங்க மந்திரியாகவே அமர்ந்துவிடலாம். எந்த இலாகாவுக்கு என்று கவலைப்பட வேண்டாம் இலாகா பொறுப்பு இல்லாத இலாக்கா என்று ஒன்று அமைத்து அந்த இலகாவுக்கு மந்திரியாக இருக்கலாம் என்று தெரிவிப்பாரே."

ஏனெனில், என்னைவிட இப்போதுள்ள மந்திரிகளில் ஒருவர் கூட காங்கிரசில் அதிகம் பாடுபட்டவர்கள் அல்லர். என்னைப் போன்று ஜெயிலுக்குப் போய் காங்கிரஸ் கொள்கைகளை நிலை நாட்டப் பாடுபட்டவர்கள் யாருமே இல்லை. முதல் மந்திரி காமராசர் நான் காங்கிரசில் இருந்தபோது எனக்கு வாலன்டியராக இருந்தாராம். அவர் அப்போது இருந்த இடமே தெரியாது. விருதுநகர் மாநாடு ஒன்றுக்கு நான் தலைவராக இருந்தபோது எனக்கு வாலன்டியராக இவரை அமர்த்தினதாக அவர் கூறக் கேட்டிருக்கிறேன். அதற்கு நான் அவரிடம் சரியாக ஞாபகம் இல்லை என்றும் கூறியிருக்கிறேன். எனக்கு வாலன்டியராக இருந்தவர் சென்னை முதன் மந்திரியாக இருக்க நான் இந்தியாவின் பிரதம மந்திரியாகக் கூட ஆகமுடியும்.

ஆனால், இப்போது என் முயற்சி எல்லாம் இந்த ஆட்சி ஒழிய வேண்டும் என்பதுதான். ஜாதியின் கொடுமை அடியோடு ஒழிய வேண்டும். நான் மற்றவர்களைப் போல் சும்மா பணக்காரன் ஒழிய வேண்டும் என்று கூறுகிறவன் அல்ல. ஆனால் இதுவும் என்னால் ஆக முடியாத காரியம் என்று அல்ல. கடவுளையே ஒழிக்க முற்படுபவனாகிய எனக்கு இந்தப் பணக்காரர்களை ஒழிப்பதா பெரிய காரியம்?

மேலும் இப்போது கூறுகிறேன். மந்திரிகளைப் போல் ஜாதி ஒழிய வேண்டும் என்று வாயினால் சொல்லுகிறவன் இல்லை. சட்டத்தின் மூலம் ஜாதி ஒழியவேண்டும் சட்டத்தில் உள்ள ஜாதிப் பாகுபாடுகள் எல்லாம் ஒழிந்தால்தான் நான் கொஞ்சம் அயர்வேன்.

பார்ப்பனத்தி நமக்குப் பெண்டாட்டி மட்டுமல்ல, வைப்பாட்டியாக இருந்தாலும் அவருக்குச் சொத்து கொடுக்க வேண்டும். ஆனால் பார்ப்பானுக்கு நம் ஜாதிப் பெண் பெண்டாட்டியாக இருந்தால் கூட கணவனிடம் சொத்து கேட்க உரிமை இல்லை. இப்படிப்பட்ட சட்டத்தை வைத்துக் கொண்டே ஜாதியை ஒழிக்க முடியுமா? முதலில் இந்தச் சட்டத்தைக் கொளுத்திவிட்டு பிறகு நேரு 'ஜாதி ஒழிய வேண்டும்' என்று சொன்னால், அதை ஒருவாறு உண்மை என்று நம்பலாம்.

காமராசராவது ஓரளவு தம்மால் இயன்ற அளவு ஜாதியினால் ஏற்பட்ட கொடுமைகளையாவது உணர்ந்திருக்கிறார். வேறு யாருடைய ஆட்சியிலும் இல்லாத முறையில் நல்லவர்களுக்கு உதவி செய்கிறார். தேவஸ்தான இலாகா மந்திரியாக பஞ்சம ஜாதி என்று இகழப்படுபவரை (பரமேஸ்வரன்) அமர்த்தினார். அர்ச்சகப் பார்ப்பனர் எல்லாம் இவரைக் கண்டால் கை கட்ட வேண்டும். இந்த அளவுக்காவது பார்ப்பனத் திமிரை ஓரளவு அவரால் அடக்க முடிந்தது. மேலும் அவர் காலியாகிற உத்யோகங்களை எல்லாம் தமிழர்களுக்கே கொடுத்து வருகிறார். இதைவிட இன்னமும் அவர் எப்படி தமிழர்களுக்கு நன்மை செய்வார் என்று எதிர்பார்க்க முடியும்?

மேலும் அவரும் வடநாட்டுப் பார்ப்பனத் தலைமை பீடத்திற்கு அடங்கி நடக்க வேண்டியவர். வடநாட்டினர் கிழித்த கோட்டைத் தாண்ட முடியாத நிலையில் ஆட்சியில் இருந்து கொண்டு நமக்கு இவ்வளவாவது நன்மை செய்கிறார் என்பதைக் கொண்டு நாம் சந்தோஷமடைய வேண்டும்.

அதைவிட அவருடைய ஆட்சிக்குக் கேடு விளைவிக்க சிலர் முயற்சிப்பது மிகவும் அறிவீனமாகும். அவரைப் பற்றி ஏதேதோ இல்லாதவைகளைச் சேர்த்துப் பேசி அவர் மேல் மக்களுக்கு வெறுப்பூட்ட நினைக்கிறார்கள். இதுவரை அவர் அந்த இடத்தில் இருக்கவில்லையானால் அந்த இடத்தில் நண்பர் ஆச்சாரியார் அவர் அவருடைய தொழிலாளியான ஜாதி வளர்ப்புத் தொழிலையே பார்த்துக் கொண்டிருப்பார். அவரும் இல்லையேல் பூணூல் இல்லாத பார்ப்பனர்களாகிய சுப்ரமணியனோ அல்லது
பக்தவத்சலமோ அந்த இடத்தில் இருப்பார்கள்.

பூணூல் உள்ள பார்ப்பனர்களாவது கொஞ்சம் நம்பலாம். இந்த பூணூல் இல்லாத பார்ப்பனர்களைக் கொஞ்சமும் நம்பக் கூடாது. பார்ப்பனர்களாவது பதவியின் பேரால் கொஞ்சம் கோழைத்தன்மை உடையவர்கள். தன்னைப் பார்ப்பான் என்று நினைத்துக் கொண்டிருக்கும் மானம் கெட்ட தமிழர்கள் எந்தக் கொடுமையும் துணிந்து செய்வர்.

உங்கள் குல வேலையை நீங்கள் பார்த்த பிறகல்லவா பிறருக்குப் புத்தி சொல்ல வேண்டும்? என்றேன். இதைக் கேட்டு அவர் ராமசாமிக்கு ஜாதித் துவேஷம் ரொம்பவும் முத்திப் போச்சுது என்றாராம்.

பிறகு இந்த ஆள் ஒழுங்குபடமாட்டார் என்று தெரிந்து அதற்காக கத்தியும், பெட்ரோலும் தயாரா இருக்கும்படி செய்திருந்தேன். அதன் பிறகுதான் ஒரு வழிக்குச் சரியாக வந்தது. அவரும் ஆட்சியை விட்டுப் போனார். மறுபடியும் காமராசர் வர முடிந்தது.

இவருக்குத் தொல்லை கொடுப்பவர்கள் இப்போது மலிந்து போய்விட்டார்கள். அவர்கள் எல்லாம் பீர்மேடு, தேவிகுளம் என்று தாண்டிக் குதிக்கிறார்கள். தேவிகுளம், பீர்மேடு வேண்டாம் என்ற ஆட்களெல்லாம் இப்போது விளம்பரத்திற்காக மாற்றிக் கூறுகிறார்கள். தேவிகுளம், பீர்மேடு நம்முடையதாக வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்ட போது, இதே கம்யூனிஸ்ட்கள் நடுநிலைமை வகித்தார்கள். சோஷலிஸ்ட்கள்தான் இதன் சம்பந்தமாக என்ன யோக்கியதை உடையவர்கள்? பட்டம் தாணுவின் சர்க்கார் நடக்கும் சமயத்தில் தேவிகுளம், பீர்மேடு வேண்டுமென்று கேட்ட தமிழர்களைச் சுட்டுக் கொன்றதைப் பார்த்து "இப்படித்தான் சுட்டுக்கொல்ல வேண்டும். தேவிகுளம், பீர்மேட்டைக் கேட்க தமிழர்கள் தகுதியற்றவர்கள்" என்றெல்லாம் இங்குள்ள சோஷலிஸ்டுகள் கூறினார்கள். அப்படிப்பட்ட கம்யூனிஸ்ட்டும், சோஷலிஸ்டும் இன்றைக்குத் தேவிகுளம், பீர்மேடு வேண்டும் என்று கிளர்ச்சி செய்கிறார்களாம்.

-----------------------------

17.02.1956 இல் மணல்மேட்டில் தந்தைபெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு. "விடுதலை", 05-03-1956

அனுப்பி உதவியவர்: தமிழ் ஓவியா