ராமர் பாலம் தொடர்பான ஆதாரங்கள் உள்ளதா என்று தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் கிட்டத்தட்ட 4 மணி நேரம் ஆய்வு செய்து குறிப்புகளையும், நகலையும் சமீபத்தில் எடுத்துச் சென்றார்
நம் மத்திய கப்பல் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு.


ராமர் பாலம் தொடர்பாக எந்தெந்த ஆவணங்களில், நூல்களில் என்னவெல்லாம் பொய்யும் புரட்டும் கூறப்பட்டுள்ளதோ அதையெல்லாம் எனக்குக் காட்டுங்கள் என்று அவர் நூலக நிர்வாக அதிகாரி சாமி
சிவஞானத்திடம் கேட்டார். இதையடுத்து கம்பராமாயணம், வால்மீகி ராமாயணம், மானசராமாயணம், அத்யாத்ம ராமாயணம் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட ஆரிய நூல்தொகுப்புகள் அவரிடம்
காட்டப்பட்டன.

இவற்றில் பெரும்பாலான நூல்கள் சமஸ்கிருதத்தில் இருந்தன. அவற்றை சமஸ்கிருத பண்டிதர் வீரராகவன் தமிழில் மொழி பெயர்த்துக் கூறினார்.

இந்த நூல் தொகுப்புகளிலிருந்து தனக்குத் தேவையான விஷயங்களை குறிப்பெடுத்துக் கொண்டார் பாலு. பின்னர் சில பகுதிகளை ஜெராக்ஸ் பிரதியும் எடுத்துக் கொண்டார். ராமர் பாலம்
தொடர்பான பழங்கால வரைபடங்களையும் அவர் பார்வையிட்டு குறிப்பெடுத்துக் கொண்டார். 23ம் தேதி நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதற்கிடையே சரஸ்வதி மஹால் நூலகத்தில் உள்ள ராமர் பாலம் தொடர்பான ஆதாரங்களை அழிக்க பாலு முயன்றதாக ஜெயா டிவி புரளிச்செய்தி வெளியிட்டது.


சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறினால் செந்தமிழ்நாடும் இந்தியாவும் வளம் கொழிக்கும். அந்த வளம் கொழிக்கக் கூடாது என்று எண்ணுகின்றவர்கள் வேண்டுமானால் இதற்கு குறுக்குப்
பாதையிலே ஏதாவது இடையூறு செய்யலாம், அந்த இடையூறுகள் செய்யாமல் ஒதுங்கியிருந்து உதவிடுங்கள் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.


இந்தத் திட்டத்தினுடைய பயன்கள் என்ன என்பதை திட்டத்தை அறிமுகப்படுத்தியவர்கள் சொன்ன போது, கப்பல்களின் பயண தூரம், நேரம் பெருமளவு குறையும். தமிழகம் மற்றும் அண்டை
மாநிலத் துறைமுகங்களில் சரக்குக் கையாளும் திறன் அதிகரிக்கும். ராமேஸ்வரம் அல்லது மண்டபத்தில் புதிய சிறு துறைமுகம் உருவாகும்.
சேது சமுத்திரத் திட்டத்தால் நம் நாடு மட்டும் அல்ல, தென் கிழக்கு ஆசிய நாடுகளும் கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ள நாடுகள் அனைத்தும் பயன் அடையும். வாணிபமும் தொழிலும்
பெருகும். அன்னிய முதலீடு அதிகரிக்கும். அன்னியச் செலாவணி அதிகம் கிடைக்கும். கப்பலின் பயணத் தூரம் பெருமளவுக்குக் குறையும். எரிபொருளும் பயண நேரமும் மிச்சமாகும்.

ஏற்றுமதி, இறக்குமதி அதிகரிக்கும். குறிப்பாக, ராமநாதபுரம் போன்ற மிகப் பிற்பட்ட தமிழக தென் பகுதி மக்களின் வாடிக்கைத் தரம் மேம்படும். வேலைவாய்ப்பு பெருகும். தூத்துக்குடி
துறைமுகம் சர்வதேச அளவில் விரிவடையும். சுற்றுலா வளர்ச்சி அடையும்.
கடல்சார் பொருள் வர்த்தகம் பெருகி மீனவர்களின் பொருளாதாரம், வாழ்க்கைத்தரம் உயரும். மன்னார் வளைகுடாவிலிருந்து பாக். கடல் சென்று வர மீனவர்களுக்கு வசதியளிக்கும். இலங்கை
உள்ளிட்ட வேறு நாடுகளின் துறைமுகங்களில் இந்தியச் சரக்குகள் பரிமாற்றம் செய்யப்படுவது தவிர்க்கப்படும். நாட்டின் கடலோரப் பாதுகாப்பு வலுப்பெறும். 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு
நேரடி, மறைமுக வேலை வாய்ப்பு கிடைக்கும். ராமேஸ்வரம், தொண்டி, சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், நாகை ஆகிய கடலோர நகரங்களில் மீன்பிடி துறைமுகங்கள் உருவாகும்.

தென் மாவட்டங்கள் பெருமளவிற்கு வளர்ச்சி பெறும் என்ற இந்த நல்ல நோக்கத்தோடு தான் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டது.

10.5.2001 அன்று அ.தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், "இந்தியத் தீபகற்பத்தைச் சுற்றி இதுவரை தொடர்ச்சியான கப்பல் போக்குவரத்திற்கு ஏற்ற பாதைகள் இல்லை.

மேற்கிலிருந்து கடல் வழியாக கிழக்கு நோக்கி கப்பல்கள் செல்ல வேண்டுமானால் இலங்கையைச் சுற்றிக் கொண்டு தான் செல்ல வேண்டியுள்ளது. இதற்கு தீர்வாகத்தான் சேது சமுத்திரத் திட்டம்.
இத்திட்டத்தின்படி ராமேஸ்வரத்திற்கும், "இலங்கையின் தலை மன்னாருக்கும் இடையில் உள்ள ஆடம்ஸ் பிரிட்ஜ் பகுதியில் கப்பல் போக்குவரத்திற்குத் தடையாக உள்ள மணல் மேடுகள், (இது
தான் ஆடம்ஸ் பாலம் - அதாவது ராமர் பாலம்) பாறைகள் இவற்றையெல்லாம் அகற்றி ஆழப்படுத்தி கால்வாய் அமைப்பது தான் சேது சமுத்திரத் திட்டத்தின் தலையாய நோக்கம்'' என்று
குறிப்பிடப்பட்டிருக்கிறது.


இது அ.தி.மு.க.வினுடைய தேர்தல் அறிக்கையிலே கூறப்பட்டிருக்கின்ற தலையாய நோக்கம். அன்று சொன்னதை இன்றைக்கு அதனை மறந்து விட்டு..?

பாவம் அவர்தான் என்ன செய்வார்? பாஜக, விஷ்வஹிந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ், பால்தாக்கரே, சென்னை பார்ப்பன சங்கம், சோ ராமசாமி போன்று
எல்லோரையும் திருப்திப் படுத்த வேண்டி இருக்கிறது.

திடீரென்று மதவாதிகளால் எப்படி அயோத்தியில் மதவாதம் புகுந்த காரணத்தால் அங்கே ராமர் கோவில் என்று சொல்லி பாபர் மசூதியை இடித்தனரோ, அதன் காரணமாக இந்தியாவிலே ரத்த ஆறு
ஓடியதோ, அதைப் போலவே இன்னும் ஒரு வன்முறை நிகழ்ச்சிக்கு வித்திட சில பேர் முயன்று வருகின்றனர். அது ராமர் கட்டிய பாலம், அந்தப் பாலத்தை உடைத்தால் விபரீதம் உண்டாகும்,
ஆகவே இந்தத் திட்டத்தையே நிறுத்த வேண்டுமென்று பார்ப்பனர் இன்றைக்கு கிளம்பி இருக்கிறார்கள்.

அவர்களில் பெரும் பகுதியினர் இந்தியாவின் வடக்குப் பகுதியைச் சேர்ந்த பார்ப்பன மதவாதிகள். அவர்களுடைய எண்ணம் எல்லாம் இந்தத் திட்டம் நிறைவேறி தென்னகம் வளம் கொழிக்கும்
பூமியாக - பசுமைத் தாயகமாக ஆகி விட்டால் என்ன செய்வதென்று எரிச்சலால் தான் இது வரக் கூடாது என்பதற்காக துணைக்கு ராமரை அழைத்து வருகிறார்கள். வடமாநில ஆரிய மிருகங்களின்
கெட்ட எண்ணத்திற்கு இங்குள்ள தமிழக பார்ப்பனர்களும் துணை போகின்றனர்!

இந்தத் திட்டத்தை நிறுத்தாவிட்டால், ராமர் பாலத்தை இடிப்பதை நிறுத்தாவிட்டால் சட்ட ரீதியான நடவடிக்கையை உடனடியாக அ.தி.மு.க. எடுக்கும் என்று அறிக்கை ஒன்று ஜெயலலிதா
வெளியிட்டுள்ளார். "நான் ஒரு பாப்பாத்தி!" என்று சட்டசபையிலே மார்தட்டியவருமான ஜெயலலிதா இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

சேது சமுத்திரத் திட்டத்திற்கு தனது முயற்சியே
காரணம் என்று சொல்லி இருக்கிறார் தன் அறிக்கையில்!
இதில் வேடிக்கை என்னவென்றால் - இந்த திட்டம் வருவதற்கும் ஜெயலலிதா காரணமாம், வருவதை தடுப்பதற்கும் ஜெயலலிதா காரணமாம்!


ராமர் பாலத்தை இடிக்கக் கூடாது என்று சொல்கிறோமே தவிர சேது சமுத்திரத் திட்டம் வேண்டாமென்று சொல்லவில்லையே என்று கூட அவர் சொன்னாலும் சொல்வார். சொல்வதற்கு அவர்களுக்கு
இடம் இருக்கிறது. ஆரியன் வாய் என்றைக்கு தனது சொல்லில் இருந்து வழுவாமல் இருந்திருக்கிறது?


பழமைவாய்ந்த ராமர் பாலம் இடிக்கப்படுவதை தடுக்க வழக்கு தொடரப்போவதாக முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா கூறியிருக்கிறார்.

1. ராமனால் கட்டப்பட்டதாக சொல்லி ஆடம்ஸ் பாலத்தை இடிக்க தடை கோரும் பாஜக, மற்றும் இந்து மத வெறியர்கள் ஏன் பாபரால் உண்மையிலேயே கட்டப்பட்ட மசூதியை இடிக்க ஆசைப்படுகிறார்கள்?


2. ராமன் என்பவன் உண்மையில் இருந்தான் என்பதற்க்கு என்ன ஆதாரம்? கற்பனையான ராமாயணம் உண்மை என்றால் ஏன் அது ஒரு பண்டைக்கால தமிழ் மன்னனால் கட்டப்பட்ட பாலமாக்வே இருக்கக் கூடாது?


3. இந்த பார்ப்பனர்களுக்கு வேறு உருப்படியாக எதுவும் சிந்திக்கவே தெரியாதா?

6 comments:

Anonymous said...

machi.. indha ramar palaththai mattum idichchi vuttaangnu vachchikkiyen.. appadiyE indiavula thangaum vairamum kottOnnu kottumbaarEn... athu pudikkaama innaannaamO panRaanunggO padupaavinggO

Anonymous said...

I think you have a deep sense of insecurity and inferiority complex. You have a right of opinion, but in what way is a brahmin ("paarpaan" as you would prefer to call it) related to this issue? Be reasonable man, if you can think with a sane mind!

Anonymous said...

ஆதம் பாலத்தை ராமர் பாலமாக மதமாற்றி சேதுக்கால்வாய் திட்டத்தை தடுக்க நினைக்கும் கும்பலுக்கு இந்தியா முன்னேறுவது, குறிப்பாக தமிழகம் முன்னேறுவது பிடிக்காது.

ஜெயலலிதாவுக்கு வந்திருக்கும் ராமர் பக்திக்குப் பின்னால் கருணாநிதிக்கு முட்டுக்கட்டையிட வேண்டும் என்ற நல்லெண்ணமும், RSS கும்பலுக்கு இருபது வருடத்திற்கு ஒருமுறைத் தோன்றும் ராமர் பக்திக்குப் பின்னனியில் பாராளுமன்றத்தில் பஜனை பாட வேறு விசயம் இல்லாததுமே காரணம்.

தமிழகத்தின் பின்தங்கிய கடற்கரைப் பகுதிகள் அதாவது சேதுசாலையோர ஊர்கள் பெரும்பாலும் கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் நிறைந்துள்ளவை. இது ஒன்று போதாதா RSS கும்பல், சேதுக் கால்வாய் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட! அவர்களுக்கென்ன ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் அரசியல் அடுப்பு புகைந்து கொண்டுதான் இருக்கும்.

கற்பனையான மணற்திட்டுகளை ராமன் பாலம் என்று வைத்துக் கொண்டாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் மணல் திட்டுக்களில் தாவித் தாவித்தான் இலங்கைக்குச் செல்ல முடியும் :-)

ராமாயணத்தில் சொல்லப்பட்ட பாலத்தை? அமெரிக்காவின் நாசா ஒப்புக் கொண்டால், அம்பெய்து பாலம் கட்ட முற்பட்ட ராமன் முன் சமுத்திர ராஜன் தோன்றி மன்னிப்புக் கேட்டதையும், கடலை சுருட்டி கக்கத்தில் வைத்துக் கொண்டதையும் நாசா ஒப்புக்கொண்டதாகவும் அர்த்தம்.

சந்திர பகவானை மிதித்த கிறித்தவ நாசாவின் பேச்சை மெய்யென நம்பும் பார்ப்பனப் பண்ணாடைகள் அமெரிக்கா எதைச் சொன்னாலும் நம்பவேண்டும்.

பாவமய்யா இந்தியா. இந்த பார்ப்பனப் பண்ணாடைகள் கையில் மாட்டிக் கொண்டு தவிப்பதைப் பார்த்தால் கி.பி3020 இல் கூட வல்லரசாகும் வாய்ப்பு இல்லையென்றே தெரிகிறது.

சேதுக்கால்வாய் திட்டம் சில மாதங்கள் தள்ளித் தொடங்கினாலும் பரவாயில்லை. திருட்டு விசிடி வெளியிட்ட பா.ஜ.கவை தடை செய்யும் வழியை வேகப்படுத்த வேண்டும். கோமாளி சுப்ரமணிய சாமியுடன் சேர்ந்து கொண்டு கூத்தடிக்கும் ஜெயா தானாகவே அரசியல் அநாதை ஆக்கப்படும் காலம் வெகு தூரமில்லை.

மாசிலா said...

//கோமாளி சுப்ரமணிய சாமியுடன் சேர்ந்து கொண்டு கூத்தடிக்கும் ஜெயா தானாகவே அரசியல் அநாதை ஆக்கப்படும் காலம் வெகு தூரமில்லை.//
;-)
இதையே நானும் மறுமொழிகிறேன்.

Anonymous said...

//தமிழகத்தின் பின்தங்கிய கடற்கரைப் பகுதிகள் அதாவது சேதுசாலையோர ஊர்கள் பெரும்பாலும் கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் நிறைந்துள்ளவை. இது ஒன்று போதாதா RSS கும்பல், சேதுக் கால்வாய் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட!//

//சந்திர பகவானை மிதித்த கிறித்தவ நாசாவின் பேச்சை மெய்யென நம்பும் பார்ப்பனப் பண்ணாடைகள் அமெரிக்கா எதைச் சொன்னாலும் நம்பவேண்டும்//

என்னமா எழுதராருயா... ரும் போட்டு யோசிப்பாங்களோ?

கோவி.கண்ணன் said...

//தவிப்பதைப் பார்த்தால் கி.பி3020 இல் கூட வல்லரசாகும் வாய்ப்பு இல்லையென்றே //

3020ல் தானா ?
:(