வணக்கம் அய்யா !

அது ஒரு வித்தியாசமான பள்ளிக்கூடம்... இருபது வயதிலிருந்து எழுபது வயது வரையுள்ள அரசியல்வாதிகள்தான் மாணவர்கள்... வாத்தியார் மருத்துவர் ராமதாஸ்!

பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் பயிலரங்கில்தான் இந்தக் காட்சி! ‘‘மணி, எல்லோரும் வந்துட்டாங்களா?” & கைக் கடிகாரத்தைப் பார்த்தபடியே வகுப்பறைக்குள் ராமதாஸ் நுழைய, அனைவரும் எழுந்து, ‘‘வணக்கம் அய்யா’’ என்கிறார்கள் மரியாதையாக.
வாசலில் ‘‘அய்யா’’ என்ற குரல். அது, பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ. வேல்முருகன். ‘‘ஒரு அலுவலா வெளியில போனேன்... தாமதமாயிடுச்சுங்கய்யா!’’ என்று தயங்கிச் சொல்ல, ‘‘உங்க தேர்வுத் தாளைக் காட்டுங்க’’ என்று கேட்டு வாங்கிப் பார்த்துவிட்டு, ‘‘மதிப்பெண்கள் நல்லாதான் வாங்கியிருக்கீங்க. ஆனா, வகுப்புக்கு ஒழுங்கா நேரத்துக்கு வர்றதுதானே முக்கியம்!’’ என்கிறார் ராமதாஸ், கண்டிப்பான குரலில்!

பின்னர், பல்வேறு சமூக அறிஞர்களும் அரசியல் வகுப்புகளை நடத்துகிறார்கள். ஒவ்வொரு வகுப்பு முடிந்த பிறகும் நடந்த வகுப்பிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டு, தேர்வுகள் நடைபெறுகின்றன. கண்டிப்பான ராணுவப் பள்ளி போல ராமதாஸின் நேரடிப் பார்வையில் நடைபெறுகிறது பாட்டாளி மக்கள் கட்சியின் இந்தப் பள்ளி.
‘‘உழுபவனுக்கு காணி நிலம் இருந்தால் மட்டும் போதாது. விதை நெல்லைப் பக்குவப்படுத்தவும் மண்ணை வளமாக்கவும் தெரிந்திருக்க வேண்டும். அதற்கு அவன் பயிற்சி பெற வேண்டும். அதுபோலதான் எல்லாத் தொழிலுக்கும். அரசுப் பணி, தனியார் பணியாக இருந்தாலும் சிறிய பொறுப்புகளில் இருந்து பெரிய பதவிகள் வரை ஒரு பயிற்சி தேவைப்படுகிறது. ஆனால், அரசியல்வாதிக்கு மட்டும் எந்தவிதமான பயிற்சியும் தேவையில்லை; அப்படியே கிளம்பி வந்து கட்சியில் சேர்ந்துவிடலாம். கையில் பணமும் செல்வாக்கும் இருந்தால் பதவிகளிலும் அமர்ந்துவிட முடியும். கொஞ்ச நாள் இருந்துவிட்டு சரிவரவில்லை என்றால், வேறு கட்சிகளுக்கு மாறிவிடலாம். அப்படியே அனைத்துக் கட்சிகளுக்கும் ஒரு சுற்று போய்விட்டு, மீண்டும் தாய்க் கழகத்துக்கே வந்துவிடலாம். அப்போது, தாயுள்ளத்தோடு ஏற்றுக்கொள்ள தாய்க் கழகமும் தயாராக இருக்கிறது. இப்படியான சீரழிவுகள் பாட்டாளி மக்கள் கட்சியில் இருக்கக் கூடாது. இது வித்தியாசமான ஒரு இயக்கம் என்பதைக் காண்பிக்கவே இந்த அரசியல் பயிலரங்கை நடத்துகிறோம்.
அரசியலில் சீரழிவுகள் என்று 20 விஷயங்களைப் பட்டியலிட்டு, அதைப் பற்றிய விழிப்பு உணர்வை எங்களது உறுப்பினர்களுக்குக் கொடுக்கிறோம். அடிப்படை உறுப்பினர்கள் மட்டும் இல்லாமல் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப் பினர்களும் கட்டாயம் இந்தப் பயிற்சியில் பங்கு பெற வேண்டும். மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருப்ப வர்கள் இவர்கள்தான். இவர்களி லிருந்துதான் அடுத்தடுத்து தலைவர்கள் உருவாகப் போகிறார்கள். சாதாரணத் தொண்டர்கள் தவறு செய்தால் கொடுக்கப்படும் தண்டனையைவிட சட்டமன்ற, நாடாளு மன்ற உறுப்பினர்கள் தவறு செய்யும் போது தண்டனை அதிகம்’’ என்கிறார் ராமதாஸ், கடுமையான வாத்தியாராக!

‘‘சமூக நீதிப் போராட்ட வரலாறு, இடஒதுக்கீடு, அதனுடைய பலன்கள் மற்றும் இட ஒதுக்கீட்டின் மீதான உரிமையை எதிர்காலத்தில் எப்படிப் பாதுகாப்பது என்பதெல் லாம் பற்றி வகுப்புகள் நடத்து கிறோம். இன்றைய தலைமுறை அனுபவிக்கிற சில உரிமைகளும் சலுகைகளும் சும்மா கிடைத்த தில்லை. அதற்காகப் பெரியார், அம்பேத்கர் போன்றோர் எவ்வளவு போராடியிருக்கிறார்கள் என்பதை எதிர்கால சந்ததிக்கு நினைவுபடுத்த வேண்டிய வரலாற்றுக் கடமை நமக்கு இருக்கிறது. அது போல சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப் பினர்களுக்கு நிதிநிலை அறிக்கை பற்றிய பயிற்சிகளும் உண்டு. யோகா, தியானம் என்று உடற் பயிற்சிகளும் கொடுக்கப்படுகின்றன. இந்தியா வில் வேறு எந்தக் கட்சியும் இம்மாதிரி அரசியல் பயிலரங்கை நடத்தியதில்லை.
20 வயதில் என்னிடம் வந்து சேருகிற இளைஞனை

50ஆண்டுகளுக்கு மக்கள் பணி செய்யத் தயார்படுத்துகிறேன். அதற்கான அறிவை அவர்களுக் குப் புகட்டும் வேலையில்தான் இப்போது இறங்கியிருக்கிறேன். நானும் பல நேரங்களில் ஒரு மாணவனாகக் கலந்துகொண்டு பல விஷயங்களைக் கற்றுக்கொள் கிறேன். அவ்வளவு உபயோகமான வகுப்புகள்’’ என்கிறார் ராமதாஸ்.
மதியம் உணவு இடைவேளை முடிந்ததும், முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி மணி யடிக்க, ‘‘வகுப்புக்கு நேரமாச்சு, புறப்படுகிறேன்’’ என்றபடி கிளம்பிப் போகிறார் மருத்துவர் ராமதாஸ்!


நன்றி. விகடன்.காம்

J-Lo

இலங்கையில் போர் மேகங்கள் மீண்டும் சூழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அப்பாவி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதப் பந்தலில் உட்கார்ந்தார் கனிமொழி. தமிழக அரசியலில் மீண்டும் ஓர் பரபரப்பு. முதல்வர் கலைஞரின் மகளை, அவரது சி.ஐ.டி. காலனி வீட்டில் சந்தித்தோம். ஈழப் பிரச்னை தொடர்பாக பல விஷயங்களை நுனிப்புல் மேயாமல் அழகாகவும் அதேசமயம் ஆழமாகவும் அலசினார். எதையும் தெளிவாகப் பேசுகிறார். சற்று ஆத்திரமூட்டும் கேள்விகளுக்கும் அமைதியாகப் பதில் தந்தது, கனிமொழியின் பக்குவத்தைக் காட்டியது.

ராஜிவ் படுகொலைக்குப் பிறகு, இலங்கைப் பிரச்னையில் இருந்த அனுதாபம் போய், அங்கே பிரச்னை தலைதூக்கும்போதெல்லாம் இங்கே போராட்டம், உண்ணாவிரதம் இருப்பது என்பதெல்லாம் வெறும் சம்பிரதாயமாகிவிட்டது என்றால் ஒப்புக் கொள்வீர்களா?

‘‘நிச்சயமாக ஒப்புக் கொள்ளமாட்டேன். ராஜிவ் படுகொலையை இலங்கைத் தமிழ் மக்கள் செய்யவில்லை. ஒரே ஒரு தவறுக்காக அந்த மக்கள் என்ன பாவம் செய்தார்கள்? அதனாலேயே ‘அவர்களுக்கும் நமக்கும் உறவு விட்டுப் போய்விட்டது, அவர்கள் கஷ்டப்பட்டால் நமக்கு கவலையில்லை’ என்பது என்ன நியாயம்? ஒரு காலத்தில் அவர்களைப் பற்றிப் பேசவே பயமாக இருந்தது உண்மை. நடுவில் போர் நிறுத்தம் அமலில் இருந்தது. மக்கள் ஓரளவு பாதுகாப்பாக இருந்தார்கள். இப்போது இலங்கை அரசாங்கமே வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிடுகிறது. ஆகவே, திரும்ப எல்லோரும் பேச ஆரம்பித்துள்ளார்கள். நீங்கள் புலிகளையும், மக்களையும் குழப்பிக் கொள்ளக் கூடாது.’’

சர்வதேச அரங்கில் விடுதலைப்புலிகள் மீதுள்ள அவநம்பிக்கையைப் போக்குவதற்காக ஈழத்தில் ஜெயபாலன் போன்ற சில அறிவு ஜீவிகள், மறைமுகமாக வெவ்வேறு நாடுகளில் தங்களுக்கு ஆதரவாகப் போராட்டத்தை நடத்தச் சொல்வதாகத் தெரிகிறதே?

‘‘ஜெய பாலனோ, பிரபாகரனோ சொல்லி நாங்கள் செய்யப் போவதில்லை. அவர்களுக்காக இங்கே உண்ணாவிரதம் இருந்தால் ‘அந்தத் தமிழர்களுக்கு விடுதலை வந்துவிடப் போகிறது, ஈழம் கிடைக்கப் போகிறது’ என்று யாராவது நினைத்தால், அதைவிட முட்டாள் தனம் இல்லை.

நாங்கள் யாரும் பிரச்னையைத் தீர்க்கப் போவதில்லை. எதுவுமே இல்லாத ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கு நாங்கள் உண்ணாவிரதம் இருந்து அந்த வாழ்க்கையைத் திருப்பித் தந்துவிட முடியுமா? அமைதியைத்தான் கொண்டு வந்துவிட முடியுமா?

எங்களுக்கு என்று ஒரு ஈடுபாடு உள்ளது. நம்பிக்கை இருக்கிறது. உலகத்தில் உள்ள அத்தனை நாட்டு அவதிப்படும் மக்களுக்காகவும் பேசுகிறோம். ஏன் நம் கண் முன்னே, பக்கத்தில் உள்ள நமது இனத்தை, மொழியைப் பேசுகிற மக்களைப் பற்றி, நமது சகோதர சகோதரிகளைப் பற்றிப் பேசக் கூடாது? விடுதலைப் புலிகள் என்கிற ஒரு பயத்தை உருவாக்குவது நிறையப் பேர்களுக்கு வசதியாகப் போய்விட்டது.’’

சிங்கள ராணுவத்தின் அட்டூழியம் ஒரு பக்கம் என்றால், விடுதலைப் புலிகள் மீது அங்குள்ள தமிழர்களுக்குப் பயம். வேறு வழியில்லாமல் புலிகளோடு போகிறார்கள் என்றால் உங்கள் பதில்?

‘‘எப்படிப் பயம்? ஒரு ராணுவம் வந்து அந்த அப்பாவிகள் மீது இவ்வளவு அட்டூழியங்களைக் கட்டவிழ்த்து விடுகிறது. அவர்களுக்கு வேறு கதியோ, விதியோ கிடையாது. அவர்களைக் காப்பாற்ற ஒரே அமைப்பு புலிகள்தான். அவர்களது பிரச்னையில் நுழைந்து, இது சரி, இது தவறு என்று சொல்ல நாம் யார்? எனக்கு விடுதலைப் புலிகள் என்ன செய்கிறார்கள் என்று தெரியாது. அந்த மக்களுக்கும், அவர்களுக்கும் என்ன உறவு என்று நாம் போய்ப் பார்த்ததில்லை! ஆனால் என்னால் புரிந்து கொள்ள முடிவது, புலிகளைத் தவிர அந்த மக்களுக்கு வேறு சரண் கிடையாது.’’

சக போராளிக் குழுக்களையே தீர்த்துக் கட்டியவர்கள் என்ற குற்றச்சாட்டு புலிகளுக்கு உண்டு. விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை ஈழம் அடைய வேண்டும் என்பதைவிட தங்களாலேயே அடைய வேண்டுமென நினைப்பவர்கள்...

(இடைமறிக்கிறார்) ‘‘நீங்கள் சொல்வது முடிந்து போன கதை. அதைத் திருப்பிப் பேசுவதில் அர்த்தம் இல்லை. நான் விடுதலைப்புலிகளுக்கு வக்காலத்து வாங்குவதற்கோ, எதிர்த்துப் பேசுவதற்கோ உங்களிடம் பேசவில்லை. அந்த ஆதரவற்ற மக்களின் பிரச்னைகளைத்தான் பேசுகிறேன். பிரபாகரன் செய்தது தவறா, இல்லையா அல்லது அவரது அமைப்பின் அவசியம், அனாவசியம்
ஆகியவை பற்றிப் பேச எனக்குத் தகுதியோ, அருகதையோ இல்லை. தவிர, நான் களத்தில் நிற்கின்ற போராளியோ, அவதிப்படும் மக்களில் ஒருத்தியோ இல்லை. வெளியில் நின்று பரிதாபத்துடன் அக்கறையுடன் கவனிக்கும் பெண்.’’

சரி, சுற்றி வளைக்க வேண்டாம். நீங்கள் விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறீர்களா? இல்லையா?

‘‘அந்தக் கேள்விக்கே இடமில்லை. நான் எந்த இயக்கத்தைப் பற்றியும் பேசவில்லை. அந்த மக்களைப் பற்றிப் பேசுகிறேன். வேதனைப்படுகிறேன். நான் ஆதரித்தால் ஒரு வண்ணமும், இல்லையென்றால் வேறு வண்ணமும் என் மீது பூசப்படும். நாம் பிரச்னையைத் திசைதிருப்பக் கூடாது.’’
அந்த மக்களுக்கு என்னதான் தீர்வு என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
‘‘எனக்கு எந்தத் தீர்வும் கிடையாது. தீர்வு தமிழ் ஈழமாக இருக்கலாம். வேறாக இருக்கலாம். அங்கே அல்லல்படும் மக்களுக்கும், போராடுபவர்களுக்கும் அந்த உரிமை இருக்கிறது. அதே சமயம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கம், தன் மக்கள் மீதே வன்முறையையும், அட்டூழியத்தையும் கட்டவிழ்த்துவிட்டு, பொருளாதாரத் தடையையும் ஏற்படுத்துவது உச்சகட்டக் கொடுமை. அதனால் மக்கள் பசியாலும், பட்டினியாலும் செத்துப் போவதைப் பார்த்துக் கொண்டு இந்த உலகத்தில் உள்ள அத்தனை நாடுகளும் வாயை மூடிக்கொண்டுள்ளன. இதுபோல வேறு எங்கே நடந்தாலும் சகித்துக் கொள்ளாது.’’

விடுதலைப் புலிகள் மீதுள்ள கோபத்தாலும் இலங்கை ராணுவம் நம் இனத்தைப் பழிவாங்கலாம் இல்லையா?

‘‘அப்படியென்றால், அமெரிக்கா மீது கூடத்தான் எனக்குக் கோபம் இருக்கிறது. அமெரிக்காவை எரிச்சுடலாமா? (குரலை உயர்த்துகிறார்). அமெரிக்கா அட்டூழியம் செய்கிறது என்று உலக நாடுகள் எல்லாம் அமெரிக்காவிலிருந்து விலகி
தனிமைப்படுத்தினால் ஒப்புக் கொள்வோமா? அங்கே இருக்கும் அத்தனை மக்களும் மருந்துகூட இல்லாமல் பசியாலும், பட்டினியாலும் செத்துப் போகட்டும் என்று, ஒரு புஷ்ஷிற்காக விட்டு விடுவோமா? இலங்கையில் ராணுவம் குண்டு போடும்போது இப்போதைக்கு அந்த மக்களுக்கு புலிகள் மட்டுமே பாதுகாப்பாக உள்ளனர்.’’

செஞ்சோலையில் இலங்கை ராணுவம் குழந்தைகளைக்கூட விட்டு வைக்கவில்லை என்றால், புலிகள் அட்டூழியம் செய்யவில்லையா?

‘‘ஸ்ரீலங்கா பிரச்னை பற்றியோ, விடுதலைப் புலிகள் வரலாறு பற்றியோ பேச நான் ஒன்றும் நிபுணர் இல்லை. ஏன் செய்தார்கள் என்று எனக்குத் தெரியாது. எனக்கு அந்த மக்களைப் பற்றியே கவலை. அதற்குத்தான் உண்ணாவிரதம். இன்னொரு விஷயம், சும்மா ‘விடுதலைப் புலிகள், புலிகள்’ என்று அந்த அப்பாவி மக்களிடமிருந்து புலிகள் மீது உலக மக்கள் கவனத்தைத் திருப்புவது ஒரு நாடகம். இந்த நேரத்தில் நீங்களும் தமிழர், நாங்களும் தமிழர் என்ற முறையில் அந்த மக்களுக்காக நம் அக்கறையையும், உணர்வையும் வெளிப்படுத்த வேண்டும்.’’

இலங்கையில் விடுதலைப் புலிகள் தலைமையில் ஓர் ஆட்சி அமைந்தால், அது இப்போது இருப்பதை விட மோசமாக இருக்கும் என்று ஒரு சாரார் சொல்கிறார்களே?

‘‘இப்போது நம்மூரில் ‘இந்தியாவை பிரிட்டிஷ்காரன் ஆண்டபோதுகூடப் பரவாயில்லை’ என்று சொல்பவர்கள் இல்லையா? வெள்ளைக்காரன் விட்டுப் போனால் நாடே உருப்படாமப் போய்விடும் என்று சொன்னவர்கள் உண்டு. எதற்காகப் போராடினார்கள்? என் நாட்டை என் மக்கள் ஆள வேண்டும் என்று சொல்ல அந்த மக்களுக்கு உரிமை இல்லையா?’’

இந்த உண்ணாவிரதப்போராட்டமெல்லாம் நீங்கள் அரசியலுக்கு வர ஒத்திகையா... ஆழம் பார்க்கிறீர்களா?

(சிரிக்கிறார்) ‘‘நிச்சயமாக இல்லை. அரசியலில் எல்லா ஆழத்தையும் பார்த்தாகிவிட்டது. அதற்கு இப்போது அவசியமும் இல்லை.’’

அன்று உங்களுடன் உட்கார்ந்தவர்கள் இலங்கைப் பிரச்னைக்கு உணர்வுபூர்வமான ஆதரவு என்பதைவிட, கனிமொழியுடன் உட்கார்ந்தால் கலைஞரைத் திருப்திப்படுத்தலாம் என்ற எண்ணத்தில்..

(இடைமறிக்கிறார்) ‘‘ஞானக் கூத்தனுக்கு அப்படி அவசியமில்லை. முக்தாவுக்கும் அப்படித் தேவையில்லை. இந்த விஷயத்தில் சுபவீயை விட அதில் அக்கறையுள்ள எத்தனை பேரைப் பார்த்துவிட முடியும்? பொடாவில் எவ்வளவோ கஷ்டப்பட்டு வந்தவர். ரவிக்குமாருக்கு அப்பாவைச் சந்தோஷப்படுத்த வேண்டிய அவசியமில்லை. நான் போஸ்டரில் கூட என் பெயரைப் போடவில்லை. உட்காரும்வரை யாருக்கும் நான் உட்காரப் போவது தெரியாது. இப்படி உணர்வோடு வருபவர்களை, உங்கள் கேள்வியால் கொச்சைப்படுத்தக் கூடாது. எழுத்தாளர்களும், கலைஞர்களும், சிந்தனையாளர்களும் சேர்ந்து செய்தது இது.’’

உங்கள் அப்பா இலங்கை பிரச்னையில் கொஞ்சம் அடக்கி வாசிப்பதாகத் தோன்றுகிறதே?

‘‘ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிற்குப் பல தடைகள், பொறுப்புகள் உள்ளன. அதற்குள் என்னென்ன முடியுமோ அதையெல்லாம் செய்கிறார். ஒரு மாநில அரசு, வெளிநாட்டுக் கொள்கையில் தலையிட முடியாது. ஈழப் பிரச்னை தொடர்பாகப் பல விஷயங்களை மத்திய அரசுக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார். சிலவற்றை வலியுறுத்தியிருக்கிறார். சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். அதைவிட வேறு என்ன செய்ய முடியும்?’’

கருத்துக்கு வரலாம். உங்களுக்குப் பின்னணி இருக்கிறது. எந்தப் பின்னணியும் இல்லாத நம் நாட்டில் ஒருவன், தன் ஏரியாவில் நடக்கும் அநியாயத்தை வெளிப்படையாகப் பேசிவிட்டு வீட்டுக்குப் போய்விடமுடியுமா? ஆட்டோ வந்துவிடாதா?

‘‘எங்கள் கருத்துக் கூட்டங்களில் நான் பேசுவதையும், கார்த்தி பேசுவதையும் காட்டமாக எதிர்த்துப் பேசிவிட்டுத்தான் போகிறார்கள். அவர்களுக்கு ஒன்றும் ஆகவில்லையே! நம்மூரில் தெருவில் ஒருவர் நியாயத்தைத் தட்டிக் கேட்கும்போது, மற்றவர்கள் ஜன்னலை மட்டும் கொஞ்சமாகத் திறந்துவிட்டு வேடிக்கை பார்ப்பார்கள். தைரியமாகப் பேசறவனுக்குப் பின்னாடி அவன் குடும்பம் மட்டும் நின்றால் போதாது. சமூகமும் நிற்கவேண்டும். தனிக் குரலாக நின்றால்தானே ஒடித்துவிட முடியும்? பத்துப் பேர், ஐம்பது பேர் சேர்ந்தால் பிரச்னை தீர வாய்ப்புண்டு.’’

www.kumudam.com

அய்யய்யோ

சமீபத்தில் ஒரு மூன்று நாட்களாக செந்தழல் ரவியின் பதிவுகளை காணவில்லை. அப்படியே போட்டாலும் வேலைவாய்ப்பு செய்திகளை போட்டுவிட்டு எஸ்கேப் ஆகிவிடுகிறார். என்ன வென்று நம்பத்தகுந்த வட்டாரங்களை விட்டு புலனாய்வு செய்ததில் கிடைத்த தகவல் அதிர்ச்சிகரமாக இருந்தது. அவர் அனுப்பிய ரகசிய மின் அஞ்சல் அம்பலமாகிவிட்டது. எனக்கு ரகசியமாக வந்த மின் அஞ்சல் இங்கே,

ஹாய் ஹாய் ஹாய்,

வரும் சனிக்கிழமை கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ்ஸில் ஹைதராபாத் வருகிறேன், அங்கு ஒரு நாள் தங்கி ஹோட்டலில் ரூம் போட்டு வேலைக்கு ஆள் எடுப்பதாக இருக்கிறேன். படித்த பட்டாத்தாரிகள் கூடும் வலைப்பதிவாளர்கள் சந்திப்பில் போண்டா போடும் வேலைக்கு நல்ல சமையல் ஆட்களை தெரிவு செய்வதற்கும், ரகசிய கேமரா மூலம் பதிவர் சந்திப்பில் கூடும் பதிவர்களை படம் பிடித்து போலியார்களுக்கு அனுப்புபவர்களை கண்கானிக்கும் வேலைக்கு ஆள் எடுப்பதற்கும் எனது கம்பெனி ஆர்வம் காட்டுகிறது. போலியர்களுக்கு தகவல் கொடுப்பவர்களை கண்டுபிடிக்கும் வேலைக்கு நிறைய பதிவர்கள் என் கம்பெனியை அனுகியுள்ளனர். இந்த வேலையைப் பற்றி பத்திரிக்கையில் விளம்பரம் செய்துவிடுங்கள். படித்த ஆண்கள் / பெண்களுக்கு இந்த வேலைக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

மேலும் எனது விஜயத்தில் 3 நாட்கள் கோல்கொண்டாவிற்கு செல்வதாக திட்டம் உள்ளது. ஆர்வம் உள்ள நண்ப/நண்பிகள் எல்லோரும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

ஹைதராபாத் வலைப்பதிவு போண்டா பிரியர்களை/நண்பர்களை சந்தித்துப்பேச ஆசை, பல நண்பர்களுடன் தொலை பேசினேன், தொலைபேசி மட்டுமே பேசியது. என்னை தொடர்பு கொள்ள வேண்டியவர்களுக்கு எனது செல்போன் எண் 98805 97061 மற்றும் அலுவலக எண் 00412987654 தொடர்பு கொண்டு அழைக்கலாம்.

போண்டா போடுவதற்கு ஆள் எடுக்கும் இந்த தகவல் ரகசியமாக இருக்கட்டும், அதிக கூட்டம் சேர்ந்தால் சமாளிக்க முடியாமல் போய்விடும். அப்படியே ஒரு நடுத்தெரு போண்டா நெட் காபே முழுவதையும் மூன்று நாட்களுக்கு முன்பதிவு செய்துவிடவும். வரவிரும்பும் நண்பர்கள் முன்கூட்டியே சொன்னால் போண்டா மற்றும் மசால் தோசை ஆர்டர் செய்ய வசதியாக இருக்கும்.

இப்படிக்கு
செந்தழல் ரவி

இப்பொழுதான அவர் எந்த நோக்கத்தில் இந்த ஆள்தேடும் படலத்தில் ஈடுபட்டிருக்கிறார் என்பது தெரிகிறது. தனது பதிவுகளுக்கு அனானியாக பின்னூட்டம் இடுபவர்கள் மட்டுமே பின்னூட்டம் போடுவதாகவும் அதனால் தான் தமிழ்மணத்தில ப்ளாகர்கள் ஆதரவு இல்லாமல் தனித்து விடப் பட்டதாகவும் ஒரு நாள் என்னிடம் புலம்பினார். மேலும் அனானிகளை ஆதரிப்பது போலவே பதிவர்களுக்கும் ஆதரவு தெரிவிக்கப் போவதாகவும் பதிவர்களுக்கு போண்டா சப்ளை செய்து அவர்களை தனது நிரந்தர பின்னூட்ட சங்க உறுப்பினர்களாக ஆக்க கடும் முயற்சி செய்வது அம்பலமாகி உள்ளது ..


எப்பாடு பட்டாவது தனது சங்கத்தையும் தன்னுடைய பெயரையும் தமிழ்மண முகப்பில் தெரியவைக்க ரவி எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறுமா என்பதை காலம்தான் சொல்ல வேண்டும்

பின்குறிப்பு: சங்கம் ஒன்றை தொடங்கும் முயற்சியில் சம்மந்தப் பட்ட பதிவர் இருப்பதாக இந்த மெயிலை எனக்கு அனுப்பிய அன்பர் தெரிவிக்கிறார்

பைரவன்

கிணத்துக்குள் கிடக்கும் வட்ட நிலவின் பிம்பம் கண்ட பைரவருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை தனது நான்கு கால்களையும் வளைத்து கிணற்றை நோக்கி வாலைக் குழைத்தவாறு குரைக்க ஆரம்பித்தார் . மேலே இருக்கும் நிலவு தண்ணீருக்குள் விழுந்து போனதாக ஒரு எண்ணம் போலும்.
அவருக்கு எப்போதும் இப்படியே நான்கு கால்களும் நான்கு வேதங்கள் போல அவற்றை மடக்கியபடியே நான்முகன் இருக்கும் திசை எதுவென்று தேடிக்கொண்டிருப்பார்.. அது அவர்தான் என்பதே தெரியாமல்.
என்னடா நாயை போய் மரியாதைகொடுத்து அவர் இவர் என்று அழைப்பதாக யாருக்கும் சந்தேகம் வேண்டாம். அவர் பைரவர்.. நான்கு வேதங்களை ஓதிய நான்முகன் பிரம்மன்.
முன்பு ஒரு காலத்தில் மானுடப் பிறவி வழிகாட்டல் இல்லாமல் மகத்தான மகோன்னதம் அடைந்த காலத்தில் இதை வைத்து நாம் கொஞ்சம் தேற்றலாமே என நினைத்த ஒரு பிறவி தங்களுக்கு வழிகாட்டுவதற்காக கடவுளை வேண்டினார்கள். அவர்களுக்கு முன்பு ஒரு நான்கு தலை நாய் தோன்றியது.
அந்த நான்கு தலை நாய் மனிதனைப் பார்த்து மனிதா இங்கே பார் நானே ப்ரம்ம தேவன்... இதோ நான்கு வேதம் ... இதனை சரியாக கேட்டுக் கொண்டு ..மனிதர்களைப் பிரிக்க வேண்டும் அப்படி பிரித்தால் மனிதர்களின் ஒரு பிரிவினர்கள் உங்களுக்கு அடிமையாக இருப்பார்கள்.
மற்ற இருபிரிவினரும் உங்கள் செயல் சந்தேகம் இல்லாமல் இருக்க வேண்டுமென்றால் நீங்கள் மற்ற இருவர்களின் பிறப்பு முதல் இறப்புவரை அவர்கள் மீது அக்கரை செலுத்துவது போல இரு பிரிவினர்களின் வாழ்க்கை முறையை வரையறுக்க வேண்டும்.. இதில் உங்களுக்கு இழப்பு இருக்கும் அதாவது அரசபதவி,வியாபாரம் நீங்கள் செய்யமுடியாது..
ஆனால் அதன் பலன்களை நீங்கள் அடையலாம் ! இப்படிசெய்யும் போது ... இதை நீங்கள் குலத்தொழில் போல அதாவது இந்த நான்கு வேதத்தை உங்களுக்குள் வைத்துக் கொள்ளவேண்டும். இது வேறு எங்காவது செல்லும் போது அதன் சூட்சமம் வெளிப்பட்டு உங்கள் இனத்துக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும். நாய்களை மக்கள் கல்லால் அடிக்க ஆரம்பித்துவிடுவர் என்று கூறி ம்றைந்தார்
அன்று முதல் நாய்கள் நான்முகனாக பார்க்கப்பட்டன . பைரவருக்கு தனது தலைகளை தேடுவதில் அவ்வப்போது சிக்கல் வரும் அப்போதெல்லாம் அவர் தேடி ஓடுவது நீர் நிலைகளுக்குத்தான். அங்கேதான் கண்ணாடி வசதி உண்டு. அதனது முகம் சரியாக பொருந்தி நான்முகம் நாய்முகமாக இருக்கிறதா எனத் தேடி அவர் அலையும் போது எல்லாம் வாலைக் கடிக்கும் பழக்கம் வருகிரது.
நாளு நாளாக அவருக்கு அதுவும் போய் பன்றிகளுக்கு காவல் காக்க ஆரம்பித்துவிட்டார். முன்பெல்லாம் பன்றிகள் மேல் பயங்கரக் கோபம் கொண்டவர்தான் பைரவர். ஆனால் இப்போது அப்படி யில்லை பன்றி வராகமூர்த்தியின் அவதாரம் எனத் தெரிந்து கொண்டு அவர் அதை நேசிக்க ஆரம்பித்து விட்டார். தன் காவலுக்கு இருக்கும் எல்லா பைரவர்களையும் ஒன்றாய் சேர்த்து இப்போது பன்றிக்காவல் மட்டுமே புறிகிறார்.

காரணம் இதுதான். வழக்கமாக பன்றிகள் தான் உண்டு தனது உணவுக்கு வழியுண்டு எனத்தான் இருந்தன ஆனால் கடந்த சில காலமாக ஒரு நல்ல காவலன் இல்லாத காரணத்தால் அடுத்தவர் விளை நிலத்தில் கால்வைத்து அங்கே சந்தனம் என்ற பெயரில் இருட்டில் திருட்டு வேலை செய்ய ஆரம்பித்தன.
இது எப்படி ஆயினும் குலத்துக்கு கேடாக வருமே என நினைத்த பைரவர் அவை இனியும் இப்படியே போனால் ஒரு நாள் அடிப்பட்டே சாகும் என அறிந்து அவை உணவுக்கு மட்டும் உழைத்தால் போதும் என அவர்கள் காலம்காலமாக அரும்பாடு பட்டு அடுத்தவர்மேல் தினிக்க நினைக்கும் குலத்தொழில் மட்டுமே செய்ய தலைப்படவேண்டும் எனப் பணிக்கலானார்.
பன்றிகள் கேட்காத போது சில கட்டுடைத்து வேறு இடம் தேடின, கொஞ்சம் அடிபட்டு வந்து ஓலமிட்டன. பைரவர் என்ன செய்வார். பாவம் அவருக்கும் இப்போது வேலை இல்லை.
வேதங்களை மனிதர்களும் படித்து மணியாட்டலாம் எனச் சொன்னதில் பைரவருக்கு கடும் கோபம். இப்போதெல்லாம் மனிதனை கண்டாலே பைரவருக்கு ஆத்திரம்தான். பன்றி வளர்த்த மனிதன் தானே இவன் நம்மை மீறி ஆலயம் சென்றால் அங்கே முன்பு மணியாட்டிய நமக்கு என்ன மரியாதை என நினைத்தார்.
அவருக்கு தெரியவில்லை பாவம் முன்பு பைரவர்கள் மட்டுமே காவலுக்காய் கோயில் இருந்ததால் மனிதர்கள் போட்டதை சாப்பிட்டு தனது காலத்தை ஓட்டி வந்தனர் ஆனால் இப்போது பைரவர்கள் கோயிலை மட்டும் நம்பி இல்லை..
ஆனால் மனிதர்கள் எப்போதும் போல மணியாட்ட முடியாது என பைரவர்கள் தடுத்ததால் புதிதாய் பொருப்பேற்ற மன்னன் இனி மனிதர்களும் மணியாட்டலாம் எனச் சொல்ல சில நல்ல பைரவர்கள் அதாவது அந்த தொழில் நமக்கு வேண்டாம் இத்தனை காலம் மனிதனை அண்டவிடாமல் செய்தது தவறு என எண்ணியவர்கள் எதுவும் சொல்லவில்லை.
ஆனால் மணியாட்டுவதை தனது மணிமகுடம் எனக் கருதிய சில வெறிகொண்ட பைரவர்கள் இனியும் பொருத்தால் கோயில் மனிதனுக்கு மட்டுமே என்றாகிவிடும் என எண்ணி தவறான முறையில் மனிதர்களை கடிக்க ஆரம்பித்தன.
பன்றிகளுக்கு மட்டும் ஒரு சட்டம் பைரவர்களுக்கு ஒரு சட்டமா என மனிதன் நினைக்காமல் இரண்டும் ஒன்றே எனத் தெரிந்தே வைத்திருந்தான் எல்லா பைரவர்களுக்கும் அவன் தடியெடுத்து அடித்து துறத்தி வைக்கவில்லை சில வெறிபிடித்து மனிதர்களை கடிக்க வந்த பைரவர்களை மட்டும் ஒதுக்கத் துவங்கினான்.
சில நேரம் அமைதிகாத்த அவை சில நேரம் எதற்கென்றே தெரியாமல் எல்லோரையும் கடிக்க ஆரம்பிக்க இவனுக்கு பைரவர்கள் என்றாலே வெறுப்பு வந்தது. அந்த நாயின் அறிவுறையை ஏற்ற ஒரு பிரிவினர் .. நாயின் வாக்கை வேதவாக்கு என்றனர்.

மனிதர்கள் பிரிந்தனர். கால ஓட்டத்தில் அந்த பிரிவில் சிலர் நாயின் பேச்சை மறந்தனர் ... சொந்த இனத்தையே தூற்றினர் ... அவர்கள் மற்ற பிரிவினருக்கு நல்லவராக தெரிந்தனர்... நாயின் வாக்கு செயல்பட ஆரம்பித்தது ....அன்று முதல் நாயைக் கண்டவர்கள் கல்லை எடுக்க ஆரம்பித்தனர் .
மனிதன் எங்கே கண்டாலும் பைரவரை அடிக்க ஆரம்பித்தான் இப்போது பைரவர் அடுத்த ஆள் எப்போது வருமென்று காத்துக் கிடக்கிறார். கடித்து வைக்கத்தான்.

இது ஒரு உள்குத்துப் பதிவு


சென்னை, செப். 9-ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு அ.தி.மு.க.வில் திடீரென முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயற்குழு உறுப்பினராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.அ.தி.மு.க.வில் ஜெயலலிதா அவ்வப்போது அதிரடி மாற்றங்களை செய்து வருவது வழக்கம். ஜெயலலிதாவின் தோழி சசிகலா குடும்பத்தினருக்கு மிகவும் நெருக்கமானவர்கள்தான் நியமிக்கப்படுவதாக அ.தி.மு.க. வினர் கூறி வருகின்றனர். சசிகலாவின் அக்காள் மகன் டிடிவி தினகரன், கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து சசிகலாவுக்கும் கட்சியில் ஜெயலலிதா முக்கியஇடம் அளித்துள்ளார். அ.தி.மு.க.வின் தலைமைச் செயற்குழு உறுப்பினராக வி.கே. சசிகலா (தென்சென்னை மாவட்டம்) நியமிக்கப்பட்டுள்ளதாக ஜெயலலிதா இன்று அறிவித்திருக்கிறார். அவருடன் முன்னாள் மந்திரி வளர்மதி ஜெபராஜ் உள்பட 44பெண்களும் தலைமைச் செயற்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே அ.தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு மற்றும் முக்கிய நிகழ்ச்சிகளில் சிறப்பு அழைப்பாளராக சசிகலா கலந்து கொள்வது வழக்கம். இனிமேல் அங்கீகார பதவியுடன் அவர் கலந்து கொள்வார். ஜெயலலிதாவுக்கு அடுத்தபடியாக சசிகலாவுக்கு உயர்பதவி அளிக்கப்படுவதற்கு முன்னோட்டம் தான் இந்த தலைமைச் செயற்குழு உறுப்பினர் பதவி என்று அ.தி.மு.க. வட்டாரத்தில் கூறப்படுகிறது.ஜெயலலிதாவை அரசியலுக்கு கொண்டு வந்த எம்.ஜி.ஆர்., முதன்முதலாக அ.தி. மு.க. செயற்குழு உறுப்பினராகத்தான் நியமித்தார். அதன் பிறகு கொள்கை பரப்புச் செயலாளர், எம்.பி. என பதவி உயர்த்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

குவாட்டர் கோவிந்தனின் கமெண்ட்: நடராஜனுக்கு பதவி குடுப்பாங்களா? இல்லை வழக்கம்போல அவரு வெளியதானா?

பின்னூட்ட (நயா)நாயகரா?

இந்த பதிவு எழுத காரணம் ஜிகே என என்னாலும் சிலரால், கோவியாரே என்றும், சிலர் GK என்றும், அவரால் கோவி கண்ணன் என்றும், செந்தமிழ் ரவியால் பின்னூட்ட நாயகர் என்றும் துப்பறியும் சாம்புவால் கரோலின் விவகாரத்தில் அடிபட்டவர் என்றும் அழைக்கப்படும் திரு . கோவி.கண்ணன் அவர்கள் தனது பதிவுக்கு வந்த ஒரு பின்னூட்டத்துக்கு ஒரு பதிலில் இவ்வாறு சொல்கிறார்..

"நான் எந்த பதிவையும் உ முதல் உ வரைப் படிப்பதில்லை."

அப்படியென்றால் படிக்காமல் எப்படி எல்லா பதிவுகளுக்கும் பின்னூட்டம் போடுகிரார்? இவருக்கு பின்னூட்ட நாயகர் பட்டம் செல்லுமா? செல்லாதா என்று சொல்லுங்கள்?

குஷ்பு- கற்பு -வெங்காயம்

கோலிவுட்டில் பல கெட்டப்புகளில் பவனி வந்தாலும், வார்த்தைகளுக்கு அரிதாரம் பூசாமல் பேசுவதில் வல்லவர் நடிகர் சத்யராஜ். தற்போது ‘பெரியார்’ படத்தில் தந்தை பெரியார் வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். பெரியார் என்றாலே சர்ச்சைதான். அப்படியிருக்க, அவர் வாழ்வைச் சித்திரிக்கும் சினிமா பற்றியும் சர்ச்சைகள் கிளம்பியிருப்பது ஆச்சர்யமல்ல. இது குறித்து சத்யராஜிடம் சில கேள்விகளைக் கேட்டோம். வழக்கமாக லொள்ளாகப் பதில் சொல்லும் அவர், இம்முறை அதனை முழுமையாகக் குறைத்துக்கொண்டு சீரியஸாகப் பேசினார்.

‘‘கற்பு என்பதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’’

‘‘என்னைப் பொறுத்தவரை, கற்பு என்கிற வார்த் தையே பெண் அடிமைத்தனத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்காக ஆணாதிக்க சக்திகளால் உருவாக்கப் பட்ட சூழ்ச்சிதான்.’’

‘‘பெரியார் படத்துக்கு அரசு 95 லட்சம் கொடுத்த விஷயம் விவகாரமாய் பேசப்படுகிறதே?’’

‘‘இது புதுவிஷயம் ஒண்ணும் கிடையாது. ஏற்கெனவே ‘காந்தி’ படத்துக்கு மத்திய அரசு நிதி கொடுத்திருக்கிறது. ‘அம்பேத்கர்’ படத்துக்கு மகாராஷ்டிர அரசும், மத்திய அரசும் தனித்தனியாக நிதி கொடுத்திருக்காங்க. அப்படியிருக்க, ‘பெரியார்’ படத்துக்குக் கொடுப்பதில் என்ன தப்பு?’’

‘‘மணியம்மையார் கேரக்டரில் நடிகை குஷ்பு நடிப்பது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த கேரக்டருக்கு அவர் ஒருவர்தான் பொருத்த மானவரா?’’

‘‘சினிமாவுக்கு முக அமைப்பு ரொம்பவும் முக்கியம். முக்கோண வடிவில், வட்ட வடிவில், சதுர வடிவில்... மனிதர்களுக்கு இப்படி பலவகையான முக அமைப்புகள் இருக்கு. முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய்க்கு ஏறக்குறைய முக்கோண வடிவ முகம். புரட்சித் தலைவருக்கு, சரத்குமாருக்கு சதுர வடிவ முக அமைப்பு. வட்ட வடிவமான முகம் சிவாஜி சார், ஜெமினிகணேசன், விஜயகாந்த்துக்கெல்லாம் இருக்கும். மணியம்மையாருக்கும் வட்ட முகம்தான். குஷ்புவோட முக அமைப்பு, அப்படியே அச்சுஅசலா பொருந்தியிருக்கு. முக அமைப்பு இருந்தால் மட்டும் போதாது. நடிப்புத் திறமையும் வேணும்... அது குஷ்புவிடம் நிறைய இருக்கு. இந்தியாவிலுள்ள விரல்விட்டு எண்ணக்கூடிய சிறந்த நடிகைகளில் குஷ்புவும் ஒருவர்.

என்னைப் பெரியாராக நடிக்கத் தேர்ந்தெடுத்தப்ப, ‘பெரியாருக்கு உள்ள நீள்வட்ட முக அமைப்பு அப்படியே உங்களுக்குப் பொருந்தியிருக்கு’னு டைரக்டர் ஞானராஜசேகரன் சொன்னார். அப்பவே நான் ‘வேற யார் யாரெல்லாம் படத்தில் நடிக்கிறாங்க?’னு கேட்டேன். ‘குஷ்புவும் நடிக்கிறாங்க’னு சொல்லிட்டு, ‘மணியம்மை கேரக்டருக்கு குஷ்பு பொருத்தமா இருப்பாங்க’னும் சொன்னார்.

குஷ்புவைப் பற்றி இன்னொரு விஷயம்... நானாவது பெரியார் மீதும் அவரது கொள்கைகள் மீதும் பெரிய ஈடுபாடு கொண்டவன். அதனால் ‘பெரியார்’ படத்துக்குப் பணம் வாங்காம நடிக்கிறேன். ஆனால் குஷ்பு, தான் சினிமாவில் நடிக்க வாங்கும் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கைதான் சம்பளமாக வாங்குகிறார். அப்படி என்றால், அவரும் இந்தப் படத்தில் நடிப்பதை எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் பெருமைக்குரிய விஷயமாகவும் எடுத்துக் கொண்டிருக்கிறார் என்பதைப் பாருங்கள். அப்படிப்பட்டவரைத்தான் இன்று விமர்சனங்கள் மூலம் வேதனைப்பட வைக்கிறார்கள்.’’

‘‘பெரியார் படம் மற்ற வரலாற்று நாயகர்கள் படத்திலிருந்து எந்த வகையில் வேறு பட்டிருக்கும்?’’

‘‘வீரபாண்டிய கட்டபொம்மன் படத்துல சிவாஜி சாருக்குப் படம் முழுக்க ஒரே கெட்டப்தான். ‘காந்தி’யில தென்னாப்பிரிக்க பாரீஸ்டர் காந்தி, அப்புறம் சுதந்திர போராட்ட கால காந்தி என்று ரெண்டே கெட்டப்தான். ஆனால் அறங்காவலர், வியாபாரி, நகரசபைத் தலைவர் இப்படி நிறைய முகங்களும் அனுபவங்களும் பெரியாருக்கு உண்டு. கட்டபொம்மன், வெள்ளைக்காரனுக்கு ‘வட்டி கட்டமுடியாது’ என்று மட்டும்தான் சொல்லியிருப்பான். ஆனால் படத்தில் வீரத்துக்காக ‘வரி, வட்டி, கிஸ்தி’ என்று கம்பீரமாக நம் இஷ்டத்துக்கு டயலாக் எழுதி சேர்த்துக் கொள்ளலாம். ஆனால், இந்த வேலையை ‘பெரியார்’ படத்தில் செய்ய முடியாது. ராஜாஜியோடு பெரியார் பேசியது, பாரதியாரோடு பேசியது, காந்தியோடு பேசியது என்று ஒவ்வொரு பேச்சுக்கும் ஆதாரமிருக்கிறது. அந்த ஆதாரங்களையெல்லாம் முக்கியமாக வைத்துக்கொண்டுதான் படமெடுக்கப்படுகிறது. அதனால், ரொம்பவும் ஜாக்கிரதையோடு படமாக்கப்படுகிறது... நானும் நடிக்கிறேன்.’’

‘‘படத்தில் எம்.ஜி.ஆர். கேரக்டர் வருகிறதா?’’

‘‘பெரியார் தி.க. ஆரம்பித்த காலகட்டத்தில் அவருக்கும் எம்.ஜி.ஆருக்குமான தொடர்பு பெரிதாக ஏதுமில்லை. இதுவரை எம்.ஜி.ஆர். சம்பந்தமான காட்சி எதுவும் எடுக்கவில்லை. அப்படி எதுவும் ஸ்கிரிப்ட்டில் இருக்கிறதா இல்லையா என்பதைப் பற்றி டைரக்டர் இதுவரையில் வெளியில் சொல்லவில்லை. அதனால் அதுபற்றி எனக்கும் தெரியவில்லை. மற்றபடி, இந்த விஷயத்தில் உங்களுக்கு விவரம் எதுவும் தேவையென்றால், அதை டைரக்டரிடம்தான் கேட்க வேண்டும்.’’

‘‘குஷ்புவும் தங்கர்பச்சானும் இணைந்து பணியாற்றுவதில் ஏதாவது பிரச்னை இருக்கிறதா?’’

‘‘சினிமாவுல நிரந்தரப் பகை என்பதே கிடையாது. ‘எனக்குப் ‘பெரியார்’ படம் நல்லா வந்தா போதும்’ என்று தங்கர்பச்சான் தெளிவாகச் சொல்லிட்டார். ஏங்க, 200 வருஷமா இங்கிலீஷ்காரன் நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்தான்... ஜாலியன் வாலாபாக்கில் ஆயிரக்கணக்கான இந்தியர்களை சுட்டுக் கொன்றான். இன்னிக்கு நாம அதையெல்லாம் மறந்துட்டு, லண்டன்லேர்ந்து வெள்ளைக்கார மந்திரி வந்தால் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கவில்லையா? வெள்ளைக்காரன் சண்டையையே நாம கண்டுக்கலை. இந்த தங்கர்&குஷ்பு சமாசாரம் எம்மாத்திரம்? பெரியார் பாஷையில் சொல்வதானால், அது ஒரு வெங்காயம்... விட்டுதள்ள வேண்டிய விஷயம்தான்.’’

‘‘சத்யராஜ் இளம்பெண்களோடு குத்தாட்டம் போடுகிறவர், ஆடுகிறவர்... அவர் எப்படி பெரியார் கேரக்டரில் நடிக்கலாம் என்று ஒருசிலர் விமர்சிப்பது குறித்து..?’’

‘‘ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கும் தனிப்பட்ட குணாதிசயங்கள் வேறு, நடிப்பு வேறு. மதுவைக் கடுமையாக எதிர்த்தவர் மகாத்மா காந்தி. காந்தியாக நடித்த பென் கிங்ஸ்லீக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு என்பார்கள். அதனால் அவர் காந்தி கதாபாத்திரத்தில் நடித்ததே தப்பு என்று சொல்ல முடியுமா? சினிமாவுல நடிகர்கள் எல்லோரும் பலவிதமான கேரக்டர் பண்ணியிருக்காங்க. ஒரு நடிகரோட தனிப்பட்ட கேரக்டரை பார்க்குற நீங்க, அவர் செய்கிற கேரக்டரில் நேர்த்தியும், பெர்ஃபெக்ஷனும் இருக்கா என்பதையும் பாருங்க. அதைவிட்டுட்டு, அவர் இளம்பெண்களோடு குத்தாட்டம் போடுவது பற்றிய ஆராய்ச்சிக்கெல்லாம் ஏன் போறீங்க?’’

நன்றி-ஜூனியர் விகடன்

லிஃப்ட்- தேன்கூடு போட்டி


இது சொந்த கதை. இங்கே துபையில் இருக்கும் ஒரு புகழ்பெற்ற 7 நட்சத்திர விடுதி (பர்ஜ் அல் அராப்) யின் லிஃப்ட்டில் ஒருமுறை செல்லும் வாய்ப்பு கிட்டியது. அது தனியாக அங்கே வேலை செய்பவர்கள் துப்புறவுப் பணியாளர்கள் பயன் படுத்தும் லிஃப்ட்.

அங்கே யாரோ ஒரு குசும்பு ஆசாமி தனது கைவண்ணத்தை காட்டியிருந்தார் ஆங்கிலத்தில்.

"இன் கேஸ் ஆப் எமர்ஜென்ஸி பயர் டு நாட் யூஸ் லிஃப்ட்"

இதற்கு கீழே நம் குசும்பனின் கைவண்ணம்

"யூஸ் வாட்டர் "

A CUT AND PASTE POST- PERIYAR

நான் சாதாரணமான ஆள்தான். என் கூட்டத்தில் வந்து கூடியிருக்கிறீர்கள். சாதாரணமான ஆள்தான் என்றாலும் எப்படிப்பட்டவன் என்று உங்களுக்குத் தெரியும். நீங்கள் கும்பிடுகிற சாமிகளான ராமனையும், பிள்ளையாரையும் உடைத்து தூள்தூளாக ஆக்கினவன்.

பெரும்பாலோர் மதிக்கிற ராமனையும் அவன் ஒரு அயோக்கியன். அவன் மனைவி சீதை ஒரு ஒண்ணா நம்பர் விபச்சாரி; "அவள் சினையானதே' ராவணனால்; அதுவும் இலங்கையில் என்பதை ராமாயணத்திலிருந்தே எடுத்துக்காட்டி வருகிறவன். 20, 30 வருஷத்திற்கு முன்பாகவே நான் சாஸ்திரத்தை, மநுதர்ம சாஸ்திரத்தை நெருப்பிலே போட்டு எரித்தவன். இந்த ராமாயணத்தை எரிக்கணும் என்று சொன்னவன். எல்லோரும் ஜனநாயகம் (மக்களாட்சி) என்று சொல்வதை நான் முழுப் பித்தலாட்டம், மக்களைப் பிடித்த பேய் என்று சொல்லுகிறவன்.


சாதி ஒழியணும் என்பதுதான் எங்களுடைய முதலாவது கொள்கை. பார்ப்பானும் இருக்கக்கூடாது; பறையனும் இருக்கக்கூடாது; மனிதன்தான் இருக்கணும் என்று சொல்லுகிறோம். ஜனநாயக அரசாங்கம் என்று சொல்லுகிறான். சாதி காப்பாற்றப்படும் என்பது, மூலாதார உரிமை என்று அரசமைப்புச் சட்டத்திலே எழுதி வைத்துக் கொள்கிறான். அதில் நாம் சூத்திரன் நாலாஞ்சாதி மக்கள் பார்ப்பானுடைய வைப்பாட்டி மக்கள்! இதுக்குப் பேர் ஜனநாயகமா? நாம் 100க்கு 97 பேர். அவன்கள் 100க்கு 3 பேர். அவனிடம் ஆட்சி இருக்கிறது. அவன் சாதியைக் காப்பாற்ற சட்டம் செய்து வைத்துக் கொண்டிருக்கிறான். இந்த நாட்டிலே இருக்கிற மற்றக் கட்சிக்காரனெல்லாம் அவன் போடுகிற எலும்புத் துண்டைக் கடித்துக் கொண்டு, அந்தச் சட்டத்தின் மீது சத்தியம் பண்ணிக் கொடுத்துவிட்டு அவனுடைய சட்டசபையில் உட்காருகிறான். அவனுக்கு சாதி ஒழிய வேண்டும் என்ற எண்ணம் இருக்க முடியுமா? சட்டத்தை மாற்ற வேண்டும் என்றால், கிளர்ச்சி தவிர வேறு ஏதாவது வழி நமக்கு இருக்கிறதா?

20 கோடி ரூபாய் இந்த வருஷத்து கல்விக்கு செலவாகிறதே! இவையெல்லாம் யாருடைய பணம்? நம் பணம்தான்; ஆனால் இதனால் படிக்கிறவன் நூற்றுக்கு நூறு பார்ப்பான் தானே? நாம் வரி கொடுத்துத்தானே இப்படிப் பணம் செலவிட முடிகிறது? நம்மிடத்தில் வரி வாங்கணும் என்றால், அவன் தேவையை உத்தேசித்து அல்ல. நம்மைப் "பாப்பராக' (பணம் இழந்தவன்) ஆக்கவேணும்; பிச்சையெடுக்கும்படிச் செய்ய வேண்டும் என்பதைத் தவிர வேறு என்ன? ஏன் நமக்குப் படிப்பு வராதா? நம் வாயிலே மாத்திரம் படிப்பு நுழையாதா?
இவற்றையெல்லாம் மீறி நம் பையன்கள் இப்போது படித்து விடுகிறார்கள்.


அதைத் தடுக்கவும் சூத்திரனைப் படிக்க விடக்கூடாது என்பதற்கு என்னென்ன செய்ய வேண்டுமோ, அத்தனையும் பார்ப்பான் செய்கிறான். வெளிப்படையாகச் சொல்லவில்லை. வேறுவிதமாக அதையே சொல்லுகிறான்.

பள்ளிக்கூடத்திலே தகுதி, திறமை அடிப்படையில் இனிமேல் சேர்க்கணும்; ஜாதி அடிப்படையில் பின் தங்கியவர்கள் இவர்கள் என்பதைப் பார்த்து, எந்தவிதச் சலுகையும் கூடாது என்பதாக ஓர் உத்தரவு போடணும் என்கிறான். இன்னும் நூற்றுக்கு 70 - 80 மார்க் வாங்கினவனைத்தான் சேர்க்கணும் என்கிறான்.

பார்ப்பானைத் தவிர மற்றவரைச் சேர்க்கணும் என்றால் திறமை இல்லையே என்று சொல்லி விடுகிறான். நம் பையன்கள் டாக்டருக்குப் படிக்கணும்; எஞ்சினியருக்குப் படிக்கணும் என்றால் நூற்றுக்கு 60 மார்க்கு வாங்கணும் என்கிறான். நம் பையன்கள் 35 மார்க் வாங்குவதே மிகவும் கடினம்; இவனை 60 மார்க் வாங்கு என்றால் அது எப்படி முடியும்? சாதாரணமாகப் பாஸ் பண்ணுவது எதற்கு? யோசிக்க வேண்டாமா? இன்றைக்குப் போத்தனூரிலே ஒரு வீட்டிலே தங்கியிருந்தேன். 70,000 பெறுமான மதிப்புள்ள பெரிய வீடு; கட்டி 30 வருஷமாயிற்று; இன்றும் நன்றாகத்தான் இருக்கிறது; இதை என்ன படிச்சு 60 மார்க் வாங்கிய தகுதி, திறமை உள்ள எஞ்சினியர்தான் கட்டினாரா?

டாக்டர், எஞ்சினியர் என்று ஆயிரம் இரண்டாயிரம் கொள்ளையடிக்கிற உத்தியோகம் எல்லாம் நமக்குக் கிடைக்காதபடி என்னென்ன செய்ய வேண்டுமோ, அத்தனையும் செய்து அவனே படிக்கும்படியான அளவுக்கு வசதி செய்து கொண்டான். வேறு ஒரு நாடாக இருந்தால், இந்த மாதிரி அக்கிரமம் செய்கிற பார்ப்பானைச் சுட்டுத்தள்ளியே இருப்பார்களே!

சாதாரணமாக நாட்டு வைத்தியம் பண்ணணும் என்றால், தனியாகப் பிராக்டீஸ் (தொழில்) செய்கிறவர்கள் ஒரு சர்டிபிகேட் இருந்தால் போதுமானது. ஓமியோபதி டாக்டர் என்கிறான். ஆனால், அலோபதி ஆங்கில மருத்துவர் டாக்டர் படிப்பு படிக்கணும் என்றால் 60 மார்க் வாங்கணும் என்றால் என்ன அர்த்தம்?

3 பேர் வேலைக்கு வரணும் என்றால் 30 வருடமாக நாம் முட்டிக் கொள்ள வேணும். பார்ப்பான் தகுதி போச்சு, திறமை போச்சு என்று கூச்சல் போடுகிறான் என்றால் இது எவ்வளவு அயோக்கியத்தனம்? இந்த அயோக்கியத்தனத்திற்குக் கேள்வி கேட்பாரே இல்லையே! ஒரு பயலும் இதை எடுத்துக்காட்டி இதற்குப் பரிகாரம் தேடணும் என்று வருவதே கிடையாதே! நம்முடைய நிலைமை அப்படி இருக்கிறது.

தகுதியும், திறமையும் தான் முக்கியமா? அதை அளப்பதற்கு தர்மா மீட்டர் பார்ப்பான்தானா? நம்மவன் படித்தால் என்ன, இவன் அப்பன் வீட்டு முதல் குறைந்தா போகிறது? முதலிலே ‘இண்டர்மீடியெட்' படித்தால் போதும் என்றான். இப்போது என்ன என்றால், நீ அது பாஸ் பண்ணியிருந்தாலும் 60 மார்க் வாங்கணும் என்றால் என்ன போக்கிரித்தனம்!

மாடு மேய்க்கிறவனெல்லாம் மந்திரியாகி விடுகிறான்! அவன்தான் பெரிய பெரிய எஞ்சினியரை எல்லாம் நிர்ணயிக்கிறான். சீப் எக்சிகியூடிவ் எஞ்சினியர் போன்ற பலவித உத்தியோகஸ்தர்களையும் நியமிக்கிறான் என்றால் அதற்கு மாத்திரம் தகுதி, திறமை வேண்டாமா?


சேலம் - பொட்டிரெட்டிப்பட்டியில் 25.3.1959 அன்று ஆற்றிய உரை

பார்ப்பன எதிர்ப்பு ஏன்?

பார்ப்பனத் தோழர்களே! நான் மனிதத் தன்மையில் பார்ப்பனர்களுக்கு எதிரி அல்லன். தமிழ்நாட்டிலேயே அநேக பார்ப்பனப் பிரமுகர்கள் - பெரியோர்கள் ஆகியோர்களுக்கு அன்பனாகவும், மதிப்புக்குரியவனாகவும் நண்பனாகவும் கூட இருந்து வருகிறேன். சிலர் என்னிடத்தில் அதிக நம்பிக்கையும் வைத்திருக்கிறார்கள். சமுதாயத் துறையில் பார்ப்பனர்கள் அனுஷ்டிக்கிற உயர்வு, அவர்கள் அனுபவிக்கிற அளவுக்கு மேற்பட்ட விகிதம் - ஆகியவைகளில்தான் எனக்கு வெறுப்பு இருக்கிறது. இது பார்ப்பனர்களிடம் மாத்திரமல்ல, இந்த நிலையில் உள்ள எல்லோரி டத்திலுமே நான் வெறுப்புக் கொள்கிறேன். இந்நிலை என்னிடத்தில் ஏற்பட்டிருப்பதற்குக் காரணம், ஒரு தாய் வயிற்றில் பிறந்த எல்லா மக்களுக்கும் சம அனுபவம் இருக்க வேண்டும் என்று கருதி, ஒன்றுக்கொன்று குறைவு, அதிகம் இல்லாமல் பார்த்துக் கொள்வது எப்படி ஒரு தாய்க்கு இயற்கைக் குணமாக இருக்குமோ, அது போலத்தான் எனக்கும் தோன்றுகிறது.
மற்றும், அந்தத் தாய் தனது மக்களில் உடல் நிலையில் இளைத்துப் போய், வலிவுக்குறைவாய் இருக்கிற மகனுக்கு, மற்ற குழந்தைகளுக்கு அளிக்கிற போஷணையை விட எப்படி அதிகமான போஷணையைக் கொடுத்து மற்ற குழந்தைகளோடு சரிசமானமுள்ள குழந் தையாக ஆக்க வேண்டுமென்று பாடுபடுவாளோ, அது போலத் தான் நான் மற்ற வலுக்குறைவான பின் தங்கிய மக்களிடம் அனுதாபம் காட்டுகிறேன். இந்த அளவு தான் நான் பார்ப்பனர்களிடமும், மற்ற வகுப்புகளிடமும் காட்டிக் கொள்ளும் உணர்ச்சி ஆகும்.
உண்மையிலேயே பார்ப்பனர் கள் தங்களை இந்நாட்டு மக்கள் என்றும், இந்நாட்டிலுள்ள மக்கள் யாவரும் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள் என்றும், தாயின் செல்வத்துக்கும், வளப்பத்துக்கும் தாங்கள் எல்லோரும் சரிபங்கு விகிதத்துக்கு உரிமை உடையவர்கள் என்றும் கருதுவார்களேயானால், இந்நாட்டிலே சமுதாயப் போராட்டமும், சமுதாய வெறுப்பும் ஏற்பட வாய்ப்பே இருக்காது.
நான் காங்கிரஸில் இருந்த காலத்தில் - அதாவது எனது நல்ல நடுத்தர வயதான 40-வது வயது காலத்தில் - நான் ஒரு சுயநலமும் எதிர்பாராமல், எதிர்பார்க்க வேண்டிய அவசியமும் இல்லாமல் (உயர்ந்த அந்தஸ்தில்) இருக்கும் போதே, பார்ப்பன சமுதாயத்தில் இரண்டறக் கலந்து, எவ்வளவு தொண்டு செய்திருக்கிறேன் என்பது எல்லாப் பார்ப்பனர்களுக்கும் தெரியும். நான் காங்கிரஸிலிருந்து பிரிந்ததே, பார்ப்பன வெறுப்புணர்ச்சி ஏற்பட்டுத்தான் பிரிந்தேனேயொழிய, மற்றபடி எந்தவிதமான சுயநலம் காரணமாகவும் பிரியவில்லை. பிரிந்த பிறகு பார்ப்பன வெறுப்புணர்ச்சியோடு தொண்டாற்றுகிறேன் என்றால், அத்தொண்டில் எனக்குச் சுயநலம் என்ன இருக்கிறது? அல்லது எனது தொண்டில் நான் வெளிப்படையாகச் சொல்லுகின்ற கருத்தல்லாமல் வேறு உட்கருத்து என்ன இருக்கிறது?
என்னைப் போலவே என் கருத்துகளுக்கெதிரான கொள்கைகளின் மீது உண்மையாகப் பாடுபடுகிற இராஜாஜி அவர்களுக்கு என்னைப் பற்றி நன்றாகத் தெரியும். எப்படியோ நாங்கள் இரு பிளவாகப் பிளந்து ஒன்றுக் கொன்று ஒட்டமுடியாத அளவு விலகிப் போய்க் கொண்டிருக்கிறோம்.
எனக்கு, "நான் தோல்வியடைய மாட்டேன்; நிதானமாகவாவது வெற்றியடைவேன்" என்கிற நம் பிக்கை உண்டு. இராஜாஜியோ, எப்படியோ யோசனையின்றி ஆத்திரப்பட்டுத் தவறான வழியில் இறங்கிவிட்டார். உண்மையிலேயே வருணாசிரம சாதி முறையைப் புதுப்பித்து நிலைநிறுத்துவது சாத்தியமாகுமா? காந்தி இப்படிச் சொல்லித் தப்பித்துக் கொண்டார் என்றால், அது இன்றைக்கு 35 ஆண்டுகளுக்கு முந்திய காலம். இந்தக் காரணத்தினால் தான், அவர் கொல்லப்பட்டதற்குத் தமிழர்கள் அவ்வளவாக வருந்தவில்லை. இன்றைய இராஜாஜியின் கருத்தை, என்னை அவர் காங்கிரஸில் இழுத்த காலத்தில் சொல்லியிருப்பாரேயானால், அவருக்கு ஏற்பட்ட பெருமையும், பதவி வாய்ப்பும், செல்வ வளர்ச்சியும் ஏற்பட்டு இருக்க முடியுமா? ஆகவே அவருடைய இன்றைய நிலைமை மக்களை ஏய்த்து வளர்த்தவர் என்றுதானே பொருள்? நான் அப்படியொன்றும் ஏய்க்கவில்லையே; உளறவும் இல்லையே?
நான் - எனக்கு ஞாபகமிருக்கிற வரையில் - என்னுடைய 10 ஆவது வயதிலிருந்தே நாத்திகன்; சாதி, சமயச் சடங்கு முதலியவற்றில் நம்பிக்கையில்லாதவன். ஒழுக்க சம்பந்தமான காரியங்களில் கூட, மற்றவர்களுக்குத் துன்பமோ, தொல்லையோ தரப்படாது என்பதைத் தவிர, மற்றபடி வேறு காரியங்களில் ஒழுக்கத்துக்கு மதிப்பு கொடுத்தவனும் அல்லன். பணம், காசு, பண்டம் முதலியவைகளில் எனக்குப் பேராசை இருக்கிறது என்றாலும், அவைகளைச் சம்பாதிப்பதில் சாமர்த்தியத்தையாவது காட்டியிருப்பேனேயொழிய, நாணயக் குறைவையோ, நம்பிக்கைத் துரோகத்தையோ காட்டியிருக்க மாட்டேன். யாரையும் ஏமாற்றலாம் என்பதில் நான் சிறிதுகூட முற்பட்டிருக்க மாட்டேன். வியாபாரத் துறையில் பொய் பேசி இருந்தாலும், பொது வாழ்வுத் துறையில் பொய்யையோ, மனதறிந்த மாற்றுக் கருத்தையோ வெளியிட்டிருக்கமாட்டேன்.
இப்படிப்பட்ட நான், எதற்காக ஒரு சமுதாயத்தாரிடம் விரோதமோ, குரோதமோ கொள்ள வேண்டும்? நான் நமது நாட்டையும், சமுதாயத்தையும் ஆங்கில நாட்டுத் தன்மைக்கும், நாகரிகத்திற்கும் கொண்டு வர வேண்டும் என்கிற ஆசையுடையவன். இதற்கு முட்டுக் கட்டையாகப் பார்ப்பன சமுதாயம் இருக்கிறது என்று சரியாகவோ, தப்பாகவோ கருதுகிறேன்.
தாங்கள் அப்படி இல்லையென்பதைப் பார்ப்பனர்கள் காட்டிக் கொள்ள வேண்டாமா? உண்மையிலேயே எனக்கு மாத்திரம் பார்ப்பனர்களுடைய ஆதரவு இருந்திருக்குமானால் நம் நாட்டை எவ்வளவோ முன்னுக்குக் கொண்டு வர என்னால் முடிந்திருக்கும்.
நம் நாடு இன்று அடைந்திருக்கிற இந்தப் போலி சுதந்திரம் என்பது ஒன்றைத் தவிர - மற்ற எல்லா வளர்ச்சிக்கும் பார்ப்பன சமுதாயம் எதிரியாக இருந்திருக்கிறது. இதுமாத்திரம் அல்லாமல், நாட்டில் சமயம், தர்மம், நீதி, அரசியல் என்னும் பேரால் இருந்து வளர்ந்து வரும் எல்லாக் கேடுகளுக்கும் பார்ப்பன சமுதாயம் ஆதரவளித்தே வந்தி ருக்கிறது, வருகிறது. அவர்களின் எதிர்ப்பையும் சமாளித்துத்தான் இந்த நாடும் இந்தச் சமுதாயமும் இந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது. இனி வளர்ச்சியை மெதுவாக்கலாமே தவிர, யாராலும் தடுக்க முடியாது என்கிற நிலைமையைக் காண்கிறேன்.

-பெரியார் - நன்றி கீற்று.காம்
முதலில் இச் சந்திப்பு சிம்ரன் ஆப்பக் கடையில் தான் நடைபெறுவதாக இருந்தது பின்னர் அங்கே பிரச்சனைகள் ஏதும் வெடிக்கலாம் எனும் முன் பயம் காரணமாக, யாருக்கும் தொந்தரவில்லாத கூகிள் லேண்டை தேர்ந்தெடுத்தோம்,,, வழக்கம் போல செலவு அனைவராலும் பிரித்துக் கொள்ளப்பட்டது....

இனி பங்குபெற்றவர்கள்:

நெ.ர- அனலை கக்கும் பெயர் பெற்ற இவர் ஆரம்பத்தில் மிகச் சீரியஸாக காமெடி பதிவுகள் எழுதிக் கொண்டிருந்தவர் இப்போது சீரியஸ் பதிவெழுதி காமெடி பன்னுகிறார். இவருக்கு ஒரு ரசிகர்மன்றம் இருப்பதாக கேள்வி. அனானிகளின் காட் ஃபாதர்.

பி.நா.- இவரின் பின்னூட்ட காலடி படாத பதிவுகளே இல்லை எனலாம் இவரின் பதிவுகளை விட பின்னூட்ட குத்துக்கள் பேர்போனவை. காலத்தை விரும்பும் இவர் கவிதை எழுதுவதிலும் வல்லவர்.

உ.க- மொழி தெரியாத ஊரில் இப்போது ஹோலா சொல்லிக்கொண்டிருக்கும் இவருக்கு காமெடியும் காதலும் கைவந்த கலை....சங்கத்துக்கு வெளி ஆதரவு தரும் மைனாரிட்டி தலை.

கி-போ.ர.- எல்லாவற்றையும் கலந்து பதிவுகள் போடும் இவர் தன்னைத்தானே கலகக்காரன் என்கிறார். சூட்டைக் கிளப்பும் இவரின் பதிவுகள் படித்து பலருக்கு புகை கிளம்புவதாக கேள்வி.

உ,ந- இவர் எங்கள் நண்பர் சும்மா நாங்களே விவாதம் செய்தால் போரடிக்குமே என்று அவரையும் ஆட்டத்தில் சேர்த்துக் கொண்டோம்

இனி சந்திப்பில் நிகழ்ந்தவை:


கி.போ.ர : வணக்கம்...


நெ.ர: ...! என்னைய்யா எப்படி இருக்க ?

நெ.ர : ரயிலு... ! எதோ அநானிங்க புண்ணியத்துல 'விழித்திருக்கிறேன்'

கி.போ.ர: இங்க மட்டும் என்ன வாழுதாம். அநானிங்க இல்லாட்டி ரயிலும் நின்னுடும். அது சரி சும்மா ஒன்னு கேட்கனும் ... என்று முடிப்பதற்குள்

நெ.ர : அதூவா!!! ... சும்மா கேட்டகவேண்டாம் ... ஒன்னும் இல்ல விடுய்யா !

உ.க: ஹோலா...என்றபடியே உள்ளே வர...

(நெ.ர கொஞ்சம் மிரண்டு அடேய் இந்த மாதிரி போட்டு கொல்லாத அவன் அவன் கோக்கு குடிக்க முடியாம கொலை வெறியில கிடக்கான் நீங்க கோலான்னு சொல்லி கடுப்பாக்காத அப்புறமா இது நியாயமான்னு ஒரு கேள்வி கேட்டு நாஸ்தி பன்னிடுவேன் என்று மிரட்ட)

உ.க: qué suceso aquí puedo ensamblar con usted?

கி.போ.ர: இல்லைப்பா ஏற்கனவே இடம் இல்லை என்று சொல்லும்போதே.....

நெ.ர: தம்பி நீங்க இருங்க அவன் அவன் ஆளு வரலைன்னு போன் பன்னி கூப்புட்றான் நீ ஏம்பா வந்த ஆளை விடறே நீங்க இருங்க தம்பி.

கி.போ.ர : பெரிய ஆளுய்யா நீ...!

நெ.ர : என்ன ஓய் சொல்ற !

கி.போ.ர : திடீர்னு எல்லோரையும் போட்டு தாக்குறியே !

நெ.ர : இருக்கிற எடம் தெரியாமல் இருந்தா நம்மள யாரு கண்டுக்கப் போறா ?

கி.போ.ர : அதுக்காக ... அந்த பொண்ணப் போயி...!

நெ.ர : யோவ் அதெல்லாம் ஒன்னும் இல்லைய்யா... பாவம் அந்த பொண்ணு போட்டியில் ஜெயிச்சது சச்சரவா போச்சு...! அதுக்கு உள்ள தெறமையை வெளிக் கொண்டுவரனும், எல்லோரும் பாராட்டுனும்னு தான் அப்படி ஒரு பதிவு போட்டேன்.

கி.போ.ர : அப்படியா சொல்றே.. அப்ப நீ எழுதினதெல்லாம் கப்சாவா ?

நெ.ர : ஆமாய்யா ஆமாம்...! இப்ப பாரு அந்த பொண்ணுக்கு எத்தினி பேரு ஆதரவு கொடுத்து நிக்கிறாங்க !

உ.க: qué kayalvizhi de la muchacha?

கி.போ.ர: உக இது வேற ஒன்னு நீ கண்டுக்காம கவிதை எழுது என்னா?

கி.போ.ர : ஆமாய்யா ... திடீர்னு அம்பேத்கார் பேத்தி ரேஞ்சுக்கு கொண்டு போயி உட்டு ... அந்த பொண்ண பறக்க வெச்சிட்டாங்கன்னா பாத்துக்கயேன்.

நெ.ர : அதான் ஓய் ... ! சரியா புரிஞ்சிக்கிட்ட ...! நீ மட்டும் என்னவாம். சரக்கு குமார், ஞானி அது இதுன்னு ஏகப்பட்ட மேட்டரைப் போட்டு தாக்குற!

கி.போ.ர : பின்ன சும்மா கவிதை எழுதிகிட்டே இருந்த நம்பள யாரு பாக்கப் போறாங்க !

நெ.ர : நிறுத்து நிறுத்து பி.நா வும் உ.ந வர்ராங்க நாம பேசுறத கேட்டுவிடப் போறாங்க

பி.நா : யோவ்...! என்ன நாங்க வந்தோன்ன பேச்சு சட்டுன்னு நிக்குது !?

கி.போ.ர : சீரியஸ் ஆக போசினால் மட்டும் அப்படியே வந்து வாழ்த்திவிடப் போறீங்களாக்கும் ரெண்டு பேரும்!

பி.நா : நமக்கு சீரீயஸ் கீரியஸ் மேட்டரெல்லாம் தெரியாதுப்பா ...! கலகலப்பா உள்ள ஆளுங்களை கலாய்கனும் !

உ.ந : ஆமாப்பா ... நமக்கு நேரம் போகனும் ஆனால் யாரும் காயம் படக்கூடாது ...அதுக்கு தானே வர்ரோம் !

நெ.ர: வாங்க உ.ந ஏன் இன்னிக்கு ஒன்னும் பொண்ணுங்க பீச் வாலிபால் இல்லையா?

நெ.ர : பி.நா உங்களுக்கு ஒன்னு தெரியுமா ? நான் காமடியாத்தான் பதிவு போடுறேன் ஆனால் சில ஆளுங்க வந்து சீரியஸ் ஆக்கிபுடுறாங்க ... ! அப்பறம் டென்சன் ஆயிடுது.

கி.போ.ர : யோவ் ! நே.ர நீ காமடியா போடறது சீரியஸ் ஆகிடுது... எனக்கு அப்படியே தலைகீழா நடந்துடுது

உ.ந : ரயிலு என்ன சொல்றிங்க ?

கி.போ.ர : நான் எதாவது சீரியஸ் ஆக எழுதினால் நீயும், பி.நா வும் வந்து காமடி ஆக்கிட்டு போய்டுறிங்க ...!

உ.க : él está sí sí correcto estos dos individuos que hacen como esto

பி.நா : ஹி ஹி நாங்க ரெண்டு பேரும் அதுக்கு தானே இருக்கும் .. எனக்கு உ.ந வுக்கும் சீரியஸ் என்னான்னே தெரியாது ஒய் !

கி.போ.ர : நல்லா இருங்க சாமிகளா ! ... யோவ் நெ.ர எதோ காய்கறி கடைன்னு சொன்னியே எங்கேய்யா திறக்க காணும் ?

நெ.ர : நீ வேற ஞாபகப் படுத்தாதே ... நண்பர்கள் வேண்டுகோளுக்காக காய்காரி கதை ... ஸாரி ... மறுபடியும் 'ஸாரி'க்கு சாரி ... எழவு எழுதி எழுதி பழகிப் போச்சு !.. என்ன சொன்னேன் காய்காரி கதை இல்லை காய்கறி கடை திறக்க வேண்டாம்னு விட்டுவிட்டேன்.

உ.ந : நெ.ர...! 'பொன் பாவம் பொல்லாதது ... ஏற்கனவே வாழும் சிரிப்பை நீ அழவெச்சிட்டதாக எல்லோரும் சொல்றாங்க.

உ.க : tengo gusto de muchachas españolas porque son....

நெ.ர: யப்பா நீ என்ன சொல்றேன்னு நாலுபேருக்கும் தெரியிற மாதிரி சொல்லுப்பா இப்பவே கொழம்பி கிடக்குறேன் ஒன்னு கிடக்க ஒன்னு ஆகிடப் போகுது.

கி.போ.ர: நெ.ர அதெல்லாம் கண்டுக்க வேண்டாம். உ.க நீ சொல்லுகண்னு

நெ.ர : இப்ப எல்லாம் வந்து சொல்லுவிங்கய்யா நல்லா சொல்லுவிங்க !

கி.போ.ர : என்ன ஓய் நெ.ர ! எதாவது காமடி கீமடி பண்ணுவேன்னு பார்த்தேன் பி.நா வையும் உ.ந வையும் பார்த்ததும் சட்டுன்னு மாறிட்டே ?

நெ.ர : ஆமாம் ரயிலு... பி.நா அப்படித் தான் சீரியஸ் ஆக பேசும் போது ஆட்டத்தை மாத்தி வுட்டுவிட்டு போய்டுவாரு. அவரை காய்ச்சி தான் அடுத்த பதிவு.

பி.நா : யோவ் ... அதுக்குள்ள் மறந்துட்டியா ... என்ன தான ஓய் நீர் மொதல்ல டார்க்கெட் பண்ணி பதிவு போட்ட !

நெ.ர : ஓ ... ! 'பி.நா' பட்டம் கொடுத்ததை சொல்றீர் ... !அதில் நான் ஒன்னும் கலாய்க்கலயே !

பி.நா : யோவ் நெ.ர செலக்டீவ் அம்னீசியா உனக்கு !

நெ.ர : பிகருங்க பதிவு பக்கம் வந்ததும் எல்லாம் மறந்துட்டு...! ஞாபகப் படுத்திக்கிறேன் சொல்லு ஓய்!

பி.நா : கேளும்... சிங்கப்பூரிலிருந்து ஒரு இந்தி ஆதரவு பதிவுன்னு ... நான் இந்திக்கு எதிர்ப்பா எழுதுனதை உல்டா பண்ணி போட்டியே மறந்துட்டியா ?

நெ.ர : ஆமாம் அப்ப கடிச்சி விட்டது ஞாபகம் வந்துட்டு !

எ.ந : இரண்டு பேரும் ஏற்கனவே ஆட்டம் ஆடிதான் இப்ப அடங்கியிருக்கிங்களா ?

கி.போ.ர : ஓ இவ்வளவு மேட்டர் நடந்துருக்கா !

பிகர் ஒன்று சாட்டில் வர நெ.ர சைலன்டாக எஸ்கேப் ஆகிவிட்டார்.

உக mi corazón se encenderá பாடிக்கொண்டே எதோ ஒரு பப்பை நோக்கி பறக்க..

போண்டா வருவதற்குள் கரண்ட் கட் ஆக கூகுள் லாண்ட்ஸ் இருட்டாகிவிட சொல்லிக் கொள்ளாமல் மற்ற மூவரையும் காணவில்லை.

சரத்குமாரின் லொள் லொள்ளு

கலைஞரோடு பத்து வருடங்கள்போல் பழகியிருப்பேன். அம்மாவோடு பழகி மூன்று மாதங்கள் ஆகியிருக்கும். அம்மா ஒப்பிட முடியாதவர். தகுதி, திறமையில் அவரை யாரும் மிஞ்ச முடியாது. அவரோடு பேசிக் கொண்டிருந்தால், அவர் தெரிந்து கொண்டிருக்கிற விஷயங்கள் ஆச்சர்யப்படுத்தும். என்ன பேசுகிறோம், எதற்காகப் பேசுகிறோம், யார் யாரிடம் எவ்விதம் பேசவேண்டும் என்று தெரிந்து பேசுவதில், அம்மாவை மிஞ்ச முடியாது. அவசியம் இருந்தால், அவசரம் இருந்தால், தெரிவிக்க வேண்டியதாக இருந்தால், அவரை சுலபமாக சந்திக்க முடியும். அவரோடு சுலபமாக பேச முடியாது என்பது பொறுப்புணர்வு இல்லாத வார்த்தைகள்.
நான் தி.மு.க.வில் இருந்தபோது அவரை ‘அம்மா’ என்று அழைப்பது பற்றி விமர்சனம் செய்தது ஞாபகம் இருக்கிறது. ஆனால் அவரோடு பழகிய பின் ‘அம்மா’ என்ற வார்த்தைக்கு பூரண அர்த்தம் உடையவர் புரட்சித்தலைவி. அவருக்குத் தெரியாத விஷயங்களே கிடையாது. அவருக்குப் பிரதமர் ஆக முழுத் தகுதி இருக்கு. இதை நான் மிகையாகச் சொல்லவில்லை. அம்மா மாதிரி தொண்டர்களிடம் பாசம் கொண்ட தலைவராக இங்கே வேறு யாரையும் பார்க்க முடியாது.


தலைப்பு மட்டும்தான் என்னுடையது : எந்த எழுத்துப் பிழையும் இல்லை

லொள்ளியது குமுதத்தில்

விளம்பரத்துக்காக

நேற்று முதல் ஒரு விவகாரம் காரமாகி வருகிறது லிவிங் ஸ்மைல் வித்யா, செந்தழல் ரவி, லக்கி லுக், ஆழியூரான், பாலபாரதி, பொன்ஸ், இவர்களின் பதிவில் அப்படி என்னதான் நடக்குதென்ன்று எட்டிப் பார்த்ததில் கிடைத்தது இதுதான். இதை வைத்து இனி அரங்கேறப் போகும் நாடகங்கள் (சாத்தியங்கள் 100: 90)
1. நம்ம இட்லி வடையார் இதுகுறித்து தினகரனில் வந்த செய்தி என்று ஒரு பதிவு போடுவார்.
2. கெளதம் அவர்கள் குங்குமத்துக்கு போன் போட்டு இதை எடிட்டோரியலில் சேர்த்து அன்பு வலை நண்பர்கள் இந்த மெயிலுக்கு குங்குமத்தை தொடர்பு கொள்ளுங்கள் என்பார்.
3. டோண்டு அவர்களின் 20ம் தேதி உட்லண்ட் ஓட்டல் சந்திப்பில் இதை விவாதித்ததாக ஒரு பதிவு போடுவார்.
4. பாஸ்டன் பாலாஜி இது போன்ற பதிவுகளின் சுட்டியை எடுத்து ஒன்றாக்கி லிங்க் குடுப்பார்.
5. மாயவரத்தான் வழக்கம் போல இது திமுக அடிவருடிகளின் சதி என்பார்.
6.குழலி பின் நவீனத்துவ பார்வை பார்ப்பார், எல்லாம் மேல்சாதி ஆதிக்க வெறியின் வெளிப்பாடு என்பார்.
7. ராமச்சந்திரன் உஷா திடீரென்று வந்து போகிற போக்கில் பதிவிடுவார்.
8. சாம்பு அண்டு கோ இது எல்லாம் இங்கே தமிழ் மண உறுப்பினர்களின் வேலை என்று கண்டுபிடிக்கவே முடியாத செய்தியை ஸ்கூப் நியூசாக்கும்.
9.ம்யூஸும், ஜெயராமனும், பின்னூட்டம் மட்டும் எல்லா பதிவிலும் இடுவார்கள்.
10.துளசி அவர்கள் வழக்கம் போல எல்லாரிடமும் போய் சமாதான்மாக போகச் சொல்லுவார்.
11.பாலச்சந்தர் கணேசன் வரவர தமிழ் மணம் ரொம்ப ப்ரடிக்டபிளா இருக்குன்னு சொல்வார்.
12. முகமூடி ஒரு நாய்கவிதை போட்டு இதுக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லைன்னு டிஸ்கி போடுவார்.
14. எஸ்.கே இதுக்கு நம்ம மயிலை மன்னார் என்ன சொல்றாருன்னு சொல்வார்
15. வ.வா.சங்கம் இது எதையும் கண்டுக்காம வழக்கம் போல சிரிப்பா சிரிக்கும்.
16. லிவிங் ஸ்மைல் தமிழ் வார்த்தையா என்று G.ராகவன் ஆராய்ச்சி செய்வார்.
15. குமரன் இதெல்லாம் ஆண்டவனுக்கே அடுக்காதுன்னு சொல்லிட்டு அடுத்த அய்யன் பக்தி மாலைக்கு போவார்.
16. மதுரா இதெல்லாம் எதுவுமே தெரியாத மாதிரி யாரும் இல்லாதப்ப ஒரு பதிவ போட்டு யாருக்கும் தெரியாம ஓடிப்போவாங்க.
18. இலவச கொத்தனார் எந்த பேரை வச்சா அதிக பின்னூட்டம் வாங்கலாம்ங்கிற கேள்விகேட்டு 10000 பின்னூட்ட சாதனை செய்வார்.
19. தெக்கிகாட்டான் இதுக்கெல்லாம் காரணம் நாம இயற்கையா இல்லாததுதான் என்பார்.
20. வஜ்ரா ஷங்கர், இது பத்தி இஸ்ரேல் பத்திரிகைல வந்த சேதியவும் இதுக்கு லெபனாந்தான் காரணமுன்னும் சொல்வாரு.
21. கால்கரி சிவா இதெல்லாம் திராவிட மாயைகளின் சதின்னு சொல்வாரு
23. பரமபிதா எதுக்கு பின்னூட்டம்னே தெரியாம நீங்க ஏன் எங்கள சொன்னீங்கன்னு கேப்பாரு.
.25. ரஜினி ராம்கி மிக எளிதாக ஆயிரம் பின்னூட்ட சாதனை புறிவது எப்படின்னு கிழக்கு பதிப்பகத்துக்கு புத்தகம் எழுதுவாரு.
26. மகேந்திரன் - அதைத்தான் இப்ப நீங்க படிக்கறீங்க.
முக்கிய குறிப்பு மேலே இருக்கும் படத்துக்கும் இப்போது நடந்துகொண்ண்டிருக்கும் விவகாரத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை


எல்லோரும் சபரிமலை தந்திரி ஜெயமலா சிதம்பரம் கோவில் சிக்கல்னு பொங்கி புன்னாக்கா போற வேளையில இப்ப இந்த திருப்பதி மேட்டர். என்ன பன்ன எதாவது பரபரப்பா எழுதி கெட்ட பேரு வாங்கறதே நம்ம பொழப்பா போச்சு

அதனால மக்களே இது எதுவும் என்னோட தப்பில்ல. எனக்கு வந்த சேதியை அப்படியே போடப் போறேன் படிச்சுட்டு நீங்களும் அடியுங்க.

ஏழையோ பணக்காரனோ. நல்லவனோ கெட்டவனோ கடவுளை நம்புகிர யாரும் அவர்கள் எதையும் காணிக்கையக செலுத்த தயாராகிவிடுகின்றனர். நரபலி பெயரில் உயிர் முதல் மொட்டை என்ற பெயரில் மயிர் வரை. திருப்பதி. மிகவும் பரபரப்பாக எப்போதும் இருக்கும் ஒரு புனித தலம்.

உலகின் மிகப் பணக்கார சாமி. இங்கே நடக்கும் செயல்கள் அத்தனையும் வரும் பக்தர்கள் மற்றும் தேவஸ்தான துனையுடனே நடக்கிரதாம். இது குறித்த சில செய்திகள் இனி....

சென்ற ஆண்டு ஏறுமதி செய்யப் பட்ட முடி 90800 கிலோ இதன் மூலம் பாலாஜிக்கு வருமானம் 33.34 கோடி. உலகிலேயே முடி ஏற்றுமதியில் இந்தியா முத்யலிடத்தில் இருக்க பாலாஜியே காரணம். 665 முடி திருத்துவோரும்(மொட்டை அடிக்கத்தான்) அவர்களில் 20 பெண்களும் சேர்ந்து அடிக்கும் மொட்டை நாளுக்கு 20000.

இருபதாயிரம் தலைகளில் இருக்கும் முடிகள் சேகரிக்க தனியாக வேலை ஆட்கள். பாலாஜிக்கு காணிக்கை வருவதைக் கூட அவர் வைத்துக்கொள்ள வில்லை அதையும் வித்து காசாக்கி விடுகிறார். திருப்பதி முடிகள் அதிகம் ஏற்றூமதியாவது சீனாவுக்கும் ஹாலிவுட்டுக்கும் ஆம் ஏஞ்சலினா ஜோலியில் இருந்து ஜெனிபர் அனிஸ்டன் வரைதிருப்பதி விக்குக்கு வாடிக்கையாள்ர்கள்.

திருப்பதியிலேயே சுத்தம் செய்து கலர், நீளம், சுருள், என்று வகைபிரித்து தனி கண்டெய்னர்களில் அனுப்பிவிடுவர்கள். அங்கே வேலை செய்யும் மொட்டை அடிப்பவர்களுக்கு மாதம் 9000 சம்பளம் அது மட்டுமின்றி நம் பணக்கார பக்தர்கள் மற்றும் மொட்டை போட்ட பொடப் போகிறவர்கள் கொடுக்கும் சில அன்பளிப்புகளிலும் வருமாணத்துக்கு பஞ்சமில்லை.

இதுவும் அப்படியே விற்கப்படுவதில்லை. ஏலத்தில் விட்டு ... 16 அங்குலத்துக்கு மேல் இருக்கும் முடிக்கு கிலோ 9950 ரூபாய் வரை போகும். 8லிருந்து 15 அங்குலத்துக்குள் இருப்பது 3300 ரூபாய் கிலோ. கொஞ்சம் என்போன்ற தலைகளுக்கு (முடிகளுக்கு) 11.50 தான் ஒரு கிலோ. அதிலும் கருப்பை விட செம்பட்டை முடிகளுக்கு ரேட் அதிகம் 10500/கிலோ இதில் நீளமாக இருக்கும் முடிகள் போக விக்குக்கு ஆகாது எனப்படும் குட்டை, உடைந்த, முடிகள் எல்லாம் சீனாவுக்கு அதிக அளவில் ஏற்றுமதி யாகின்றன....

எதற்கென்றால் அதில் இருந்து சாக்லேட் மற்றும் சில இனிப்புகளில் கலக்க பயன்படும் இயற்கை சேர்ப்புக்களுக்காக இதில் இருந்து சில கிடைக்கிறதாம் அதற்காக. .....இனிமேல் மொட்டை அடிக்க போனால் லட்டு இலவசமாக கிடைக்குமா என்று கேளுங்கள்.

உங்கள் முடிகளை விற்றுத்தான் காசு வருகிறதே லட்டு இலவசமாக தந்தால் பாலாஜி ஒன்றும் பிச்சாண்டி ஆகிவிட மாட்டர் .....

ஒரு சின்ன சேதி நம்ம ஜெனிபர் அனிஸ்டன் வச்சிருக்கிற விக்கோட விலை என்ன தெரியுமா? 4000$ கணக்கு போடுங்க இனிமே......

அனைவரும் அர்ச்சகராக தடை மற்றும் சிதம்பரம் கோவிலில் தமிழில் பாட தடை இரண்டு முக்கிய அநீதி தீர்ப்புகள் வெளியாகியிருக்கும் இவ் வேளையில் இப் பதிவு மிக அவசியாமாய் இருக்கிறது

பார்ப்பான் நீதிபதியாய் இருக்கும் நாடு கடும்புலி வாழும் காடேயாகும்

மேன்மை தங்கிய கனம் நீதிபதிகள் அவர்களே சமூகம் கோர்ட்டார் எனக்கு அனுப்பியிருக்கும் நோட்டீசில், சமூகம் கோர்ட்டை அவமதித்ததாகவும், அதற்கு ஏன் நான் தண்டிக்கப்படக் கூடாது என்பதற்குக் காரணம் காட்ட வேண்டுமென்றும் கோரப்பட்டிருக்கிறது. மேலும், ஒரு சிவசாமி (தலியார்) என்பவரால் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகச் சொல்லி, எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பிரமாணப் பத்திரிகையில் (Write petition) ரிட் பெட்டிஷன் நெம்பர் 568 55 இல் சமூகம் கோர்ட்டு தீர்ப்பில், கனம் திருச்சி ஜில்லா கலெக்டரைப் பற்றிச் சொல்லப்பட்டிருப்பவைகளைக் குறித்து, திருச்சி பொதுக்கூட்டத்தில், நான் 4.11.1956 ஆம் தேதியில் மேற்படி தீர்ப்பைச் சொன்ன கனம் நீதிபதிகளைக் குறை கூறியிருப்பதாகவும், அந்த நீதிபதிகளைத் தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசியிருப்பதாகவும், அவர்களுக்கு உள்ளெண்ணம் கற்பித்துத் தாக்கியிருப்பதாகவும், அதனால் சமூகம் கோர்ட்டின் கவுரவம் வெகுவாகப் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், சமூகம் கோர்ட் நீதிபரிபாலனத்திற்கு இடையூறு விளைவிப்பதாகவும் இருக்கிறதென்றெல்லாம் கண்டிக்கிறது.
இந்தக் குற்றச்சாட்டு வார்த்தைகளில், நேரிடையான பொருளுக்கு, ஏற்றமாதிரி நான் யாதொரு குற்றம் செய்தவனல்ல. பொதுவாக, மனித சுபாவத்தைப் பற்றியும், நீண்ட காலமாக அது பிரதிபலித்து வருவதைப் பற்றியுமே எடுத்துச் சொல்லி, அதற்குப் பரிகாரம் தேடவே முயற்சித்து இருக்கிறேன். உதாரணமாக பிரஸ்தாபத் தீர்ப்பில் ரிட் பெட்டிஷன் நெம்பர் 568 55 தீர்ப்பில் பாதிக்கப்பட்டிருப்பவர் ஒரு திராவிடர். அதிலும் தமிழர் (Non-Brahmin) மீது தீர்ப்புக் கொடுத்திருக்கிறவர்கள் பிராமணர்கள் என்று சொல்லப்படுகிற பார்ப்பனர்கள். இந்தத் தீர்ப்பின்மீது என்னுடைய ஆராய்ச்சிக்கு எட்டிய கருத்து, பாதிக்கப்பட்டவர் பார்ப்பனரல்லாதாராய் இருப்பதாலும், தீர்ப்புக் கூறினவர்கள் பார்ப்பனர்களாயிருப்பதாலும் இம்மாதிரி ஏற்பட்டது என்பது எனது தாழ்மையான முடிவு...
மநுதர்ம சாஸ்திரத்தின்படி, ஒரு பார்ப்பனரல்லாதவன் (சூத்திரன்) ஒரு நாட்டிலே (பார்ப்பனர்களும் வாழும் நாட்டிலே) நீதிபதியாகவோ, நிர்வாக அதிகாரியாகவோ, அமைச்சராகவோ, அரசனாகவோ, உயர் பதவியாளனாகவோ இருக்கக்கூடாது என்பது தர்மமாகும். அப்படியிருக்கவிடக்கூடாது என்பதும் பார்ப்பனர் தர்மமாகும். இந்த மநு தர்மந்தான் நீதிபதிகள் கையாளும் இந்துச் சட்டத்திற்கு மூலாதாரமாகும். இதற்கு உதாரணங்கள் அதிகம். கனம் கோர்ட்டார் அவர்களுக்குக் காட்டவேண்டியதில்லை என்றே கருதுகிறேன்... ஆகையினால்தான் பார்ப்பனர்கள் எந்தப் பதவியிலிருந்தாலும், அவர்களுடைய நடத்தையில் சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம், பார்ப்பனரல்லாதார்களை ஒழித்துக் கட்டுவதில், தலையெடுக்கவிடாமல் செய்வதில், சரியாகவோ, தப்பாகவோ, காலாகாலம் பாராமல் தங்கள் முயற்சிகளைச் செய்து கொண்டுதான் வருவார்கள். இப்படி இவர்கள் நீண்ட நாட்களாக செய்து வருகிறார்கள் என்பதற்கு ஏராளமான உதாரணங்கள் எடுத்துக் காட்ட முடியும்...
...என்னுடைய குறிப்பெல்லாம் பொதுவான பார்ப்பன ஜட்ஜுகள் யாராக இருந்தாலும், அவர்களுடைய நடத்தையில் சட்டத்தைப் பொறுத்து எப்படி நடந்து கொண்டாலும், தமிழனுக்குத் தன்னாலான கேடு செய்து அழுத்தவோ, அழிக்கவோ செய்ய வேண்டியது, அவர்கள் ஜாதி மதக் கடமை என்பதும், இதில் யாரும் எந்தப் பார்ப்பனரும், மறந்தும் தவறி நடக்க மாட்டார்கள் என்பதும், இந்த நிலை ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது மற்றவர் கடமை என்பதும்தான்... நான் சொல்வதெல்லாம் எங்களைக் "கீழ் சாதி' என்றும், நாங்கள் மேலே வருவது தங்களுக்கு ஆபத்து என்றும், தங்கள் மதத்திற்குக் கேடு என்றும், தங்களை மேல் ஜாதி என்றும், இந்த ஜாதிப் பிரிவுகள் இப்படியே இருக்க வேண்டும் என்றும் கருதிக் கொண்டிருக்க மநுதர்ம இந்து பார்ப்பனர்கள் ஜட்ஜுகளாகவும், வேறு எந்த உத்தியோகஸ்தர்களாகவும் எங்கள் நாட்டில் எங்களுக்கு வேண்டாம். வேறு நாட்டில் அவர்களுக்கு எவ்வளவு உயர் பதவி வேண்டுமானாலும் கொடுங்கள். அவற்றில் நாங்கள் குறுக்கிடவில்லை. இந்தக் கருத்தை வெளியிடும் வகையில்தான் பிரஸ்தாப வழக்கு பேச்சில் நான் பேசியிருக்கிறேன்...
பார்ப்பான் நீதிபதியாய், ஆட்சியாளராய் இருக்கும் நாடு கடும்புலி வாழும் காடேயாகும். ஆதலால், நாங்கள் புலிவேட்டை ஆடுகிறோம். புலி மேலே பாய்ந்ததில் ஒருவர் இருவர் அடிபட வேண்டியதுதான். "எல்லா பார்ப்பனர்களும் அப்படித்தானா?' என்று கனம் ஜட்ஜுகள் சிந்தித்து, நான் சொல்வதைத் தவறு என்று கருதலாம்...
...இந்த மாதிரி விஷயம் எப்படி இருந்தாலும், உண்மையில் விவாதத்திற்கு இடமில்லாமல், ஒரு நீதிபதி என்பவர் தவறானது என்று சொல்லும்படியான தன்மையில் நடந்து கொண்டால், தீர்ப்பு அளித்தால், அதற்குப் பரிகாரம் தேட வேண்டுமானால், பொதுமக்களுக்கு வழி என்ன இருக்கிறது? அப்பீலுக்கே போய்த் தீரவேண்டுமானால், எல்லோருக்கும் எல்லாக் காரியங்களிலும் அப்பீலில் இடமிருக்குமா? அரசாங்கத்தில் அரசர் ராஷ்டிரபதி பிரதமர் முதலமைச்சர் முதலியவர்களுடைய போக்குகளைப் பற்றியும், உத்தரவுகளைப் பற்றியும், பொதுக்கண்டனங்களும் கிளர்ச்சிகளும் செய்யத் தாராளமாக இடம் சட்ட அனுமதியும் கிடையாது என்றால், மக்களுக்குச் சுதந்திரம் எங்கே இருக்கின்றது? பரிகாரம் எப்படித் தேடுவது? பொதுஜனங்களுடைய உணர்ச்சிகளை எப்படிக் காட்டுவது?

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டதற்கு 23.4.1957 அன்று,சென்னை உயர் நீதிமன்றத்தில் பதிலளித்துப் பேசியதிலிருந்து..

அந்த தை திருவிழாவுக்குப் பின் கோவிந்தனின் நடவடிக்கைகள் மிக்க மாறிப் போயின. நண்பர்கள் யாருடனும் சேர்ந்து தண்ணியடிப்பதில்லை எனும் தன் கொள்கையை மிக நேர்மையாய் காப்பாற்றினர். மாமூவின் தங்கையுடனான காதல் மிகவும் ஆழமானது ஆனது. எப்போதும் எங்கும் இருவரையும் எதாவது ஒரு இடத்தில் சந்திக்கும் கண்கள் ஆச்சரியம் ஏதும் அறியாதவன்னம் அவர்களின் நட்பு அத்தனை வெளிப்படையாய் இருந்தது. இது இருவரின் வீட்டுக்கும் தெரிந்தே நடந்து வந்ததால் யாரும் அதுபற்றி கேள்வி எழுப்பி கோவிந்தனை சங்கடத்தில் ஆழ்த்தவில்லை.

சுமார் இரண்டு மூன்று மாதங்களுக்கு பிறகு கோவிந்தனின் வீட்டில் மட்டும் அப் பேச்சை எடுத்தார்கள். கோவிந்தன் தன் வேலை ஒன்று இலகுவானது குறித்து மிக மகிழ்ச்சியுடன் தனது சம்மதத்தை தந்தான். நாட்கள் உற்ச்சாகமாய் கழிய நண்பர்கள் அவனோடு பேசுவதை கொஞ்சம் குறைக்க ஆரம்பித்தனர். காரணம் ஏதும் அறியாத கோவிந்தன் மாமூவின் தங்கை மட்டும் தன்னோடு பேசினால் போதும் எனும் முடிவுக்கு வந்தான்.

ஒரு நண்பன் மட்டும் வழக்கம் போலவே கோவிந்தனுடனான நட்பை விடாமல் இருந்தான். அவன் கோவிந்தனின் நட்பு வட்டம் சுருங்க ஆரம்பித்ததில் அந்த ஒருவனாவது நம்மோடு பேசுகிறானே என்று மகிழ்ந்த கோவிந்தன் தன்னோடு மாமூவின் தங்கையை காணும் போதெல்லாம் அவனையும் கூடவே கூட்டிச்செல்ல ஆரம்பித்தான் முதலில் இது அவனின் அந்தரங்க பேச்சுக்கு இடைஞ்சலாய் இருந்தாலும் பின் ஒரு துணையிருப்பது நல்லது தானே எனும் முடிவுடன் இருவரும் ஒன்றாகவே இருக்க ஆரம்பித்தனர்.

சில மாதங்களுக்கு பின்னர் கோவிந்தனின் சகோதரி மகள்களின் காதுகுத்தும் விழாவுக்காக வெளியூர் செல்ல நேர்ந்தது அப்போது அவனின் நண்பனை அழைத்த கோவிந்தன் தன்னோடு வரும்படி அபனையும் அழத்தான் ஆனால் அவனுக்கு ஏதோ முக்கியமான வேலை இருப்பதாக சொன்ன நண்பன் கோவிந்தனை தனியே அனுப்ப தலைப்பட்டான். கோவிந்தன் தன் வாழ்க்கையில் மறக்கமுடியாத நாளாய் அது அமையும் என்பதை அப்போது அறியவில்லை..... (வளரும்)சற்றே பெரிய பதிவு

பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார்
( 1919- 25)

தங்களின் உடல், மன, ஒழுக்கத் திறன்களை அனைவரும் வளர்த்துக் கொள்ள அனைத்து ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதே பெரியார் ஈ. வெ. ராமசாமி
( 17-9-1879 - 24-12-1973) அவர்களின் அடிப்படைத் தத்துவம். இந்த இலக்கை எட்ட, மக்களிடையே நிலவும் அனைத்து வகையான வேறு பாடுகளுக்கு முடிவு கட்டி, சமூக நீதி உணர்வையும் பகுத்தறிவுக் கண்ணோட்டத்தையும் வளர்க்க அவர் விரும்பினார்.
தனது கொள்கைளை நடைமுறைப்படுத்த, சென்னை ராஜதானி சங்கத்துடன் 1917- ஆம் ஆண்டில் பெரியார் தன்னை தொடர்பு படுத்திக் கொண்டார். பார்ப்பனல்லாதவர்களுக்கும் , சிறுபான்மை சமூக மக்களுக்கும் இழைக்கப்பட்ட அநீதிகளைக் களையும் நோக்கில் இட ஒதுக்கீடு அளிக்கும் ஜாதி பிரதிநிதித்து வம் அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்று இந்த சங்கம் வேண்டுகோள் வைத்துப் போராடியது.

தேசிய காங்கிர° கட்சியை மகாத்மா காந்தி
( 1869- 1948) வழி நடத்திச் சென்ற
1919- ஆம் ஆண்டில் பெரியார் காங்கிரசில் சேர்ந்தார். ஈரோடு நகராட்சித் தலைவர் பதவி உள்ளிட்ட அப்போது அவர் வகித்து வந்த
29 பொதுப் பதவிகளையும் அவர் துறந்தார். நல்ல லாபம் கிடைத்துக் கொண்டிருந்த தனது மளிகை மற்றும் விவசாயப் பொருள்கள் மொத்த வியாபாரத்தையும் கைவிட்டார்; அப்போதுதான் புதிய தாகத் தொடங்கப் பட்ட தனது நூற்பாலையையும்அவர் மூடிவிட்டார். காதி பயன்படுத்தும் பழக்கத்தை பரப்புவது, கள்ளுக்கடை மறியல் செய்வது அந்நிய நாட்டுத் துணி விற்கும் கடைகளைப் புறக்கணிப்பது, தீண்டாமையை ஒழிப்பது போன்ற ஆக்கபூர்வமான செயல்திட்டங்களைப் பெரியார் முழுமனதுடன் ஏற்றுத் தீவிரமாகச் செயல்பட்டார்.
1921-இல் கள்ளுக் கடை மறியல் செய்ததற்காக அவர் ஈரோட்டில் சிறைத் தண்டனை பெற்றார். அவரின் மனைவி மற்றும் சகோதரி ஆகியோரும இப் போராட்டத்தில் கலந்து கொண்டபோது, பேராட்டத்தின் வேகம் கூடியது; ஏதேனும் ஒரு சமரசத்திற்கு வரவேண்டிய கட்டாய நிலை நிருவாகத்திற்கு ஏற்பட்டது.

திருப்பூரில்
1922-இல் நடந்த தமிழ்நாடு காங்கிர° கமிட்டி கூட்டத்தில் பெரியார் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். பிறப்பினால் மக்களிடையே வேறு பாடு காட்டப்படுவதை முடிவுக்குக் கொண்டு வர, அனைத்து ஜாதிகளைச் சேர்ந்த மக்களும் அனைத்துக் கோயிலுக்குள்ளும் சென்று வழிபட அனுமதிக்க வேண்டும் என்பதே அந்தத் தீர்மானம். வேதம் மற்றும் இந்து சா°திரங்களில் கூறப்பட்டுள்ளவற்றை எடுத்துக் காட்டி கமிட்டியில் இருந்த பார்ப்பன உறுப்பினர்கள் இந்தத் தீர்மானத்தை எதிர்த்து, அது நிறைவேற்றப்பட இயலாமல் தடுத்து நிறுத்தினர். உயர் ஜாதியைச் சேர்ந்த உறுப்பினர்களின் இந்த எதிர்ப்புப் போக்கினால் ஆவேசம் அடைந்த பெரியார் மனுதர்ம சா°திரம், ராமாயணம் ஆகியவற்றைக் கொளுத்தப் போவதாக அறிவித்தார். மக்களின் சமூக, மத, கலாசார அம்சங்களைப் பற்றி இந்த புராண, சா°திரங்கள் கூறுவதை ஏற்றுக் கொள்ளத் தனது எதிர்ப்பைக் காட்டும் முகத்தான் இந்த அறிவிப்பை பெரியார் வெளியிட்டார்.
சமூகக் கலாசாரப்புரட்சி கொண்டு வரப்பட வேண்டும் என்ற பெரியாரின் உறுதியான முடிவு, தனது முன்னேற்றத் திட்டங்களை நடை முறைப் படுத்தியவர்கள் எதிரிகளாக இருந்தபோதும் அவர்களையும் ஆதரிக்கும் நிலைக்கு அவரை ஆளாக்கியது. இந்து கோயில்கள் மற்றும் மத அறக்கட்டனைகளின் நிருவாகத்தில் காலம் காலமாக ஆதிக்கம் செலுத்தி, தங்கள் சுயநலத்திற்காகத் தவறாகப் பயன்படுத்தி வந்த உயர் ஜாதியினரின் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கத்துடன் நீதிக் கட்சி 1923-இல் இந்து மத அறக்கட்டளைக் குழுவை உருவாக்கியதை, ஒரு காங்கிர°காரராக இருந்த போதும் பெரியார் ஆதரித்ததன் காரணம் இதுதான்.
நவீன இந்தியாவின் வரலாற்றில் முதன் முதலாக வரலாற்றுப் புகழ் மிக்க வைக்கம் சத்தியாகிரகப் போராட்டம்

(1924-25) பெரு வெற்றி பெற்றதற்கு பெரியார் ஆற்றிய பங்கு சற்றும் குறைந்ததல்ல. பொதுப் பாதைகளை தீண்டத்தகாத மக்கள் சுதந்திர மாக எந்த விதத் தடையுமின்றிப் பயன்படுத்தவும், அது போன்ற மற்ற சமத்துவம் நிறைந்த சமூக நடவடிக்கை களை மேற்கொள்ளவும் இப் போராட்டம் வழி வகுத்தது.

ஆங்கிலேய அரசாங்கம் நடத்தும் பள்ளிகளுக்கு ஒரு மாற்றாக தேசிய பயிற்சிப் பள்ளி ஒன்று தமிழ் நாட்டின் தென் பகுதியில் திருநெல்வேலிக்கு அருகில் உள்ள சேரன்மாதேவியில் தொடங்கப்பட்டது. குருகுலம் என்று அழைக்கப்பட்ட அந்த பள்ளியை தமிழ்நாடு காங்கிர° கமிட்டியும், இதர பார்ப்பனரல்லாத புரவலர்களும் இணைந்து தான் உருவாக்கினர். அதனை வி.வி.எ°. அய்யர் என்ற ஒரு பார்ப்பனர் நிருவகித்து வந்தார். அவரது நிருவாகத்தில் பார்ப்பனர் மற்றும் பார்ப்பனரல்லாத மாணவர்களி டையே பாகுபாடு காட்டப்பட்டது. உணவு, தங்கும் இடம் மற்றும் பாடதிட்டம் போன்றவற்றில் மற்ற பார்ப்பனரல்லாத மாணவர்களை விட மேலான முறையில் பார்ப்பன மாணவர்கள் நடத்தப்பட்டனர். தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து பெரியார் இவ்வாறு பாகுபாடு காட்டப்படுவதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து அதனை முடிவுக்குக் கொண்டு வந்தார்.

வர்ண ஜாதி நடைமுறை ஒழிக்கப்படும்போது தான், உலக மக்கள் அனைவரும் அனைத்து உரிமை களையும் சமமாக அனுபவிப்பது என்ற கோட்பாடு நடைமுறையில் வெற்றிபெறும் என்று பெரியார் உறுதியாக நம்பினார். இவ்வாறு ஜாதிகள் அழிந்து, சமூகச் சீரமைப்பு ஏற்படும்வரை, சமூக நீதியை நிலைநாட்ட ஓர் ஆக்க பூர்வமான செயல்பாடாக ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டு முறை தொடர வேண்டும் என்று அவர் விரும்பினார். அதன் காரணமாக
1919- ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டிலும் நடந்த தமிழ்நாடு காங்கிர° கமிட்டிக் கூட்டத்திலும் இடஒதுக்கீட்டுக் கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற தீர்மானத்தைப் பெரியார் கொண்டு வந்தார். ஆனால் அவரது முயற்சிகள் எந்த விதப் பயனையும் அளிக்கவில்லை; காங்கிர° கமிட்டி இந்தத் தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளவேயில்லை. அதனால்
1925- நவம்பரில் நடந்த காஞ்சிபுரம் மாநாட்டின் போது பெரியார் காங்கிர° இயக்கத்தை விட்டு விலகினார். பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வரவும், ஜாதி அமைப்பு முறைக்கு எதிராகப் போராடவும் மகாத்மா காந்தி தயாராக இல்லாத நிலையில், பெரியால் அவரை விட்டுப் பிரிந்து வர நேரிட்டது.

சுயமரியாதை இயக்கம்

நாட்டின் செல்வத்தையும் முன்னேற்றப் பயன்களையும் மக்களின் அனைத்துப்பிரிவினரும் சமமாக நுகரும் வாய்ப்பினைப் பெற்றிருக்க வேண்டும் என்பதும், அரசாட்சியிலும் நிருவாகத்திலும் தங்களின் மக்கள்தொகைக் கேற்ற பிரதிநிதித்துவத்தை அனைத்து சமூக மக்களும் பெற்றிருக்க வேண்டும் என்பதும்தான் பெரியாரின் கோட்பாடாகும். பெரியாருக்கு முன்பும் வேறு பலரும், குறிப்பாக நீதிக் கட்சி என்றழைக்கப்பட்ட தென்னிந்திய நலஉரிமைச் சங்கம் இந்தச் சமூக நீதிக் கொள்கையை வலியுறுத்தி வந்தது. ஒரு ஆரோக்கியமான உலகக் கண்ணோட் டத்தைப் பெற்றிருக்க உதவும் வகையில் தங்களின் அறிவை வளர்த்துக் கொள்ள மக்களுக்குப் பகுத்தறிவுப் பார்வை தேவை என்று பெரியார் வலியுறுத்தியதுதான் அவரது மிகச் சிறந்த ஈடு இணையற்ற பங்களிப்பாகும். ஒரு புதுவகையான சமத்துவம் நிறைந்த சமூக அமைப்பை உருவாக்க முன்னோடியாக பிறப்பின் அடிப்படையில் அமைந்த, ஏற்றத் தாழ்வுகள் நிறைந்த, பாரம்பரியமான ஜாதி அமைப்பு முறை ஒழிக்கப்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார். வேறு சொற்களில் கூறுவதானால், வலிவுபெற்ற வளம் மிகுந்த ஒரு பொருளாதார நிலையையும் சுதந்திரமான அரசியல் அமைப்பையும் உருவாக்கும் முன், ஒரு பலம் பொருந்திய சமூகக் கலாசார அடித் தளம் போடப்படவேண்டும் என்று பெரியார் விரும்பினார்.
இந்த நிலையில்தான்,

1925-இல் தோற்றுவிக்கப் பட்ட சுயமரியாதை இயக்கம், கேலிக்குரிய தீங்கிழைக்கும் மூடநம்பிக்கைகள், பழக்கவழக் கங்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள் ஆகியவற்றுக்கு எதிராக மிகத் தீவிரமான பிரச்சாரம் ஒன்றினை இடைவிடாது மேற்கொண்டது. மக்களின் அறியாமையைப் போக்கி, அவர்களை விழிப்புணர்வு பெறச் செய்ய அவர் விரும்பினார். அர்த்தமற்ற பிரிவினைகளுக்கும், நீதியற்ற பாகுபாடு ககளுக்கும் வழிவகுக்கும் மத அமைப்புகள் மற்றும் மதிப்பீடுகளை மாற்றத் தேவையான நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மாறி வரும் காலத்தின் தேவைக் கேற்றபடி அவற்றை மாற்றிக் கொண்டு, இன்றைய சூழ்நிலையுடன் நடைபோட இயன்றவர்களாகத் தங்களை மாற்றிக் கொள்ள அவர் மக்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

பார்ப்பன புரோகிதர்களும், மதச் சடங்குகளும் அற்ற திருமணங்களைச் சுயமரியாதைக்காரர்கள் நடத்தினர். வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே சமத்துவம் நிலவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினார்கள். ஜாதி மறுப்பு மற்றும் விதவைத் திருமணங்களை அவர்கள் ஊக்குவித்தனர்.
1920-ஆம் ஆண்டு வாக்கிலேயே பெரியார் குடும்பக் கட்டுப் பாட்டு திட்டத்தின் தேவையைப் பற்றி பிரச்சாரம் செய்து வந்தார். கோயில் தேவதாசி முறையினையும், குழந்தைத் திருமணத்தையும் சட்டப்படி ஒழிக்க அவர் ஆதரவு திரட்டினார். அப்போதிருந்த சென்னை ராஜதானி அரசின் பணி வாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டு முறை
1928- இல் நடைமுறைப்படுத்தப் படுவதற்கு பெரியாரின் தொடர்ந்த தீவிரமான பிரச்சாரமே முக்கியக் காரணமாக அமைந்தது.
மாநாடு
சுயமரியாதை இயக்கம்

1925-இல் தொடங்கப் பட்டபோதும்,
1929- பிப்ரவரியில்தான் முதல் சுயமரியாதை இயக்க மாநல மாநாடு செங்கல்பட்டில் பெரியாரால் ஏற்பாடு செய்து நடத்தப்பட்டது. இம் மாநாட்டிற்கு டபிள்யூ. பி. சவுந்தரபாண்டியன் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
1930-இல் ஈரோட்டில் நடைபெற்ற இரண்டாவது மாநில மாநாட்டிற்கு எம்.ஆர்.ஜெயகர் தலைமை வகித்தார். விருதுநகரில் நடைபெற்ற மூன்றாவது மாநாட்டிற்கு சர் ஆர். கே. ஷண்முகம் செட்டியார் தலைமை தாங்கினார். இம் மாநாடுகள் மக்களுக்கு ஆர்வத்தை அளித்தது மட்டுமன்றி, ஜாதி ஒழிப்பு, சமூக ஒருங்கி ணைப்பு, பெண்களுக்கு சமஉரிமைகள் வழங்குவது போன்றவை பற்றிய தீர்மானங்களும் நிறைவேற்றப் பட்டன.
வேதகால சனாதன தர்தமத்தின் அடிப்படையில் அமைந்த, ஏற்றத் தாழ்வுகள் நிறைந்த வர்ண ஜாதி அமைப்பு முறை நீடிக்க வேண்டும் என்ற எந்த வித ஆர்வமும் இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயருக்கு இல்லை என்பதால், இத்தகைய சமத்துவமற்ற சமூக அமைப்பை நீக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அந்திய அரசை சம்மதிக்கச் செய்யவோ அல்லது நிர்பந்திக்கவோ இயலும் என்று பெரியாரும் அவரைப் பின்பற்றியவர்களும் கருதினர். அதன் காரணமாக சுதந்திரப் போராட்டத்தில் அவர்கள் ஒரு மித நிலையையே கடை பிடித்து வந்தனர்.
சமூகக் கலாசார சமத்துவத்திற்குப் போராடுவது என்ற தனது முதல் செயல்திட்டத்துடன் பொருளாதார சமத்துவத்தை ஏற்படுத்தும் திட்டத் தையும் பெரியார்

1930- ஆம் ஆண்டுகளின் தொடக் கத்தில் இணைத்துக் கொண்டார். காம்ரேட் எம். சிங்காரவேலு என்ற முன்னணிக் கம்யூனி°டுத் தலைவ ருடன் சேர்ந்து, மிகப் பெரிய முதலாளிகள், நிலச் சுவான்தார்கள் ஆகியோர் மக்களைச் சுரண்டி வாழ்வதற்கு எதிராகக் போராடுமாறு தொழிலாளர், விவசாயக் கூலிகள் அமைப்புகளைப் பெரியார் உருவாக்கினார். கம்யூனி°டு கட்சியையும், அதன் கொள்கைகளைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொள்ளும் கட்சிகளையும் தடை செய்ய மத்திய, மாநில அரசகள்
1930-ஆம் ஆண்டுகளின் இடையில் நடவடிக்கைகள் மேற்கொண்டன. சுயமரியாதை இயக்கத்தின் செயல்பாடுகளைத் தடுக்கவும் அவர்கள் தொடங்கினர். இந்த நேரத்தில் ஒரு முக்கியமான முடிவை மேற்கொள்ள வேண்டிய நிலையில் பெரியார் இருந்தார். சுதந்திரப் போராட்டத்தையும், தொழிலாளர் அமைப்புகளையும் நடத்திச் செல்ல பலர் உள்ளனர் என்பதை தனது அனுபவத்திலிருந்து பெரியார் அறிந்திருந்தார். பாரம்பரியமான மதக் கேடுகளை வெளிப்படுத்தவும், அதிகாரம் நிறைந்த மேல்ஜாதி பார்ப்பனரை எதிர்த்துப் போராடவும் வெகுசிலரே முன்வந்தனர். இந்தச் சூழ்நிலையில் சமூகத்தில் தாழ்த்தப்பட்ட, வாய்ப்புகள் மறுக்கப்பட்ட வர்களாக சமூகக் கலாசார நிலையில் பின்தங்கியிருந்த மக்களை முன்னேற்றம் பெறச் செய்யும் பணியை மேற்கொள்ள சுதந்திரமாக இருக்க வேண்டி தனது சமதர்மச் செயல்பாடுகளை பெரியார் குறைத்துக் கொண்டார்.

பெரியாரை மீண்டும் காங்கிர° கட்சிக்குக் கொண்டு வர ராஜாஜி என்றழைக்கப்பட்ட சி. ராஜ கோபாலச்சாரியின் தலைமையில்
1934-இல் ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது: ஆனால் அது வெற்றி பெறவில்லை. இடஒதுக்கீட்டின் மூலம் சமூக நீதியை வளர்ப்பது, முக்கியமான பெரிய பெரிய தொழிற் சாலைகள், வியாபார நிறுவனங்களின் செயல்பாடு களில் சமதர்மத்தை நடைமுறைப்படுத்தல், கடன்சுமை நிறைந்த விவசாயிகளின் துயர் துடைத்தல் போன்ற செயல்பாடுகள்கொண்ட ஒரு செயல்திட்டத்தைப் பெரியார் தயாரித்தார். அந்தச் செயல்திட்டத்தை நீதிக் கட்சிக்கும், அப்போது புகழ் பெற்று வளர்ந்து வந்த காங்கிர° கட்சிக்கும் பெரியார் அனுப்பி வைத்தார். இட ஒதுக்கீட்டுக் கொள்கை காங்கிரசுக்கு ஏற்பு இல்லை என்பதால், அது அவரின் செயல் திட்டத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. சமூக நீதியை நிலைநாட்டும் இட ஒதுக்கீட்டு முறை உள்ளிட்ட பெரியாரின் கோரிக்கைகளில் பலவற்றையும் நீதிக் கட்சி ஏற்றுக் கொண்டதால், பெரியார் அதனைத் தொடர்ந்து ஆதரித்தார்.

ஒரு சிறிய கால இடைவெளி நீங்கலாக
1921- ஆம் ஆண்டு முதல்
1937 வரை சென்னை ராஜதானியில் ஆட்சி செய்து வந்த நீதிக் கட்சி தேர்தலில் காங்கிர° கட்சியிடம் தோல்வி அடைந்தது. ராஜகோபலாச்சாரி தலைமையில் அமைந்த காங்கிர° அரசு உயர்நிலைப் பள்ளிகளில் இந்தியைக் கட்டாய பாடமாக அறிமுகப் படுத்தியது. இவ்வாறு இந்தி பேசாத மக்களை இரண்டாம் தரக் குடி மக்களாக ஆக்கும் இந்த முயற்சியை எதிர்த்தவர்கள் பெரியாரின் சீரிய தலைமையின் கீழ் ஒரு மாபெரும் போராட்டத்தைத் மேற்கொண்டனர். பெண்கள்,குழந்தைகள் உள்ளிட்ட
1200 பேருக்கும் மேலானவர்கள்
1938- இல் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறைவாழ்க்கையின் கடுமை காரணமாக அவர்களில் தாளமுத்து மற்றும் நடராசன் என்ற இரு தொண்டர்கள் உயிரிழந்தனர். இந்தப் போராட்டம் வேகம் பெற்றபோது, பெரியாருக்கு இரண்டு ஆண்டு கடுங்காவல் தண்டனைஅளிக்கப் பட்டது. ஆனாலும் அவர் ஆறுமாத காலத்தில் விடுவிக்கப்பட்டார்.
1920 மற்றும்
1930 -க்கு இடைப் பட்ட காலத்தில் பெரியார் அய்ந்து முறை சிறை தண்டனை அடைந்துள்ளார்.
1938 நவம்பரில் சென்னையில் நடந்த பெண்கள் மாநாடு ஒன்றில் ஈ.வெ. ராமசாமியைப் பெரியார் என்று அழைப்பது என்ற தீர்மானம் ஒன்று நிறைவேற் றப்பட்டது.
பெரியார் சிறைவாசத்தில் இருந்தபோது,

1938 டிசம்பர்
29 அன்று நீதிக்கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அன்றைய சென்னை மாகாணத்தில் இந்தி கட்டாய பாடமாக்கப்பட்டதை எதிர்த்த பெரியாருக்கு இரண்டாண்டு கடுங்காவல் தண்டனை வழங்கப் பட்டது. ஆனால் அவர் ஆறுமாதங்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார். விடுதலைக்குப் பின்னும் இந்திக்கு எதிரான போராட்டத்தைத் தான் தொடர்ந்து நடத்தப் போவதாகப் பெரியார் அறிவித்தார்.
நீதிக்கட்சி
சிறையில் இருக்கையில் நீதிக்கட்சியின் தலைவராகப் பெரியார் தேர்ந்தெடுக்கப்பட்டதை நாம் பார்த்தோம். நீதிக்கட்சி எனப்படும் தென்னிந்திய நல உரிமைச் சங்கம்

1938 டிசம்பர்
29, 30 தேதிகளில் சென்னையில் நடைபெற்ற தனது மாநில மாநாட்டில் இவ்வாறு தேர்ந்தெடுத்தது. அடிப்படையில், தனது வாழ்நாள் தொடக்கம் முதல் இறுதி வரை மக்கள் அனைவரின் உரிமைகளுக்காகவும் போரடியவர் பெரியார். இப்போது அவரது இயக்கத்திற்கு ஒரு புதிய தோற்றத்தினை அவர் சேர்த்து, சுதந்திர திராவிட நாடு கோரிக்கையினை முன்வைத்தார். தங்களின் சமூக ஆதிக்கத்திற்காக மற்ற சமூகத்தினரை அடக்கி ஒடுக்கி வைத்திருந்த உயர்ஜாதி பார்ப்பனர்கள் வடஇந்திய முதலாளிகளான பனியாக்களுடன் சேர்ந்து கொண்டு இந்தியைத் திணிக்கவும், தென்னிந்திய மக்களைப் பொருளாதார ரீதியில் சுரண்டவும் செய்வதைக் கண்ட பெரியார்
1938-39 இல் திராவிட நாடு கோரிக்கையை எழுப்ப வேண்டிய கட்டாய நிலைக்கு உள்ளானார்.
திராவிடர்கள் என்று பெரியார் குறிப்பிட்டது, ஒரு இனத்தின் தொடர்புடைய ரத்தத் தூய்மையின் அடிப்படையில் அமைந்தது அல்ல; வாழ்க்கை முறை மற்றும் மதிப்பீடுகளின் அடிப்படையிலேயே பெரியார் திராவிட இனத்தைப் பார்த்தார். வேதங்கள், புராணங்கள், தர்ம சா°திரங்கள் போன்றவற்றில் விதிக்கப்பட்டுள்ள சமூகக் கலாசாரப் பாகுபாட்டுக் கொள்கைகள், பழக்க வழக்கங்கள், சம்பிரதாயங்கள், சடங்குகள், பாரம்பரியத்தைப் பின்பற்றி வந்த உயர்ஜாதி பார்ப்பனர் ஆரியர்கள். சமத்துவ சமூக வாழ்க்கை முறை மற்றும் மதிப்பீடுகளைக் கொண்டவர்கள் திராவிடர்கள்.

1944 டிசம்பரில் உத்திரப் பிரதேச கான்பூரில் நடைபெற்ற பிற்படுததப்பட்ட, தாழ்த்தப்பட்ட பிரிவு மக்களின் மாநாட்டில் பேசும் போது, தங்களை இந்துக்கள் என்று கூறிக் கொள்வதைக் கைவிட்டு தங்களைத் திராவிடர் என்று கூறிக்கொள்ள வேண்டும் என்று வட இந்தியாவில் உள்ள பார்ப்பனல்லாத மக்களுக்குப் பெரியார் வேண்டுகோள் விடுத்ததை இங்கு நினைவு கூறவேண்டும்.
1939 செப்டம்பர் மாதத்தில் இரண்டாம் உலகப் போர் வெடித்தது. காங்கிர° கட்சியின் தலைவரைக் கலந்தாலோசிக்காமலேயே இந்தியா வையும் போரில் ஆங்கிலேயர் ஈடுபடுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை மற்றும் ஏழு மாகாணங்களில் ஆட்சியில் இருந்த காங்கிர° அமைச்சரவைகள் அக்டோபர்

29 அன்று பதவி விலகின. அப்போது எதிர்கட்சியான நீதிக் கட்சியின் தலைவராக இருந்த பெரியாரை அரசு அமைக்கும் படி மாநில ஆளுநரும், கவர்னர் ஜெனரலும்
1940 மற்றும்
1942 ஆண்டுகளில் இருமுறை அழைத்தனர். தனிப்பட்ட முறையில் பெரியாரின் நண்பராக இருந்த காங்கிர°காரர் ராஜபோலாச்சாரியும் இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு அரசு அமைக்க பெரியாருக்கு ஆலோசனை கூறியதுடன், நீதிக் கட்சி அரசுக்குத் தான் வெளியில் இருந்து ஆதரவு அளிப்ப தாகவும் கூறினார். ஆளுநர் மற்றும் அவரது ஆலோசகர்களின் ஆட்சிக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று தான் விரும்புவதாக ராஜாஜி விளக்கம் அளித்தார். ஆனால் இருமுறையும் ஆட்சி அமைக்க பெரியார் மறுத்துவிட்டார். முதலாவது, பொதுமக்களின் பெருவாரியான வாக்குகளைப் பெறாமல் ஆட்சி அமைப்பது சரியற்றது என்று பெரியார் கருதினார். இரண்டாவதாக, ஜாதி அமைப்பு முறையை ஒழிக்கும், மனிதநேயம் மிக்க பகுத்தறிவுக் கொள்கைகளைப் பரப்பும் தனது முக்கியமான பணிக்கு, ஆட்சி அதிகாரத்தை ஏற்றுக் கொள்வது ஒரு பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் பெரியார் கருதினார்.
1940 ஜனவரி

5 அன்று பெரியார் பம்பாய் சென்றார். டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் பெரியாருக்கு மரியாதை அளிக்கும் வகையில் இருமுறை விருந்தளித்தார்.
1940 ஜனவரி 8-ந்தேதியன்று அவர்கள் மு°லிம் லீக் தலவர் ஜின்னாவை அவரது இல்லத்தில் சந்தித்தனர். தனி திராவிட நாட்டிற்காகப் பாடுபடும் தன் முடிவைப் பற்றி அப்போது பெரியார் அவரிடம் விளக்கினார்.
சென்னை மாகாணத்தை ஆண்டு வந்த ஆளுநரும் அவரது ஆலோசகர்களும் பள்ளிகளில் இருந்த கட்டாய பாடமான இந்தியை

1940 ஜனவரி 21 அன்று நீக்கி விட்டார்கள். இந்தித் திணிப்பை எதிர்த்து மேற்கொண்ட பேராட்டத்திற்குக் கிடைத்த வெற்றியைப் பாராட்டி ஜின்னா பெரியாருக்குத் தந்தி ஒன்று அனுப்பினார்.
1921 முதல் நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த நீதிக்கட்சி

1937 தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட பின், அதன் தலைவர்களில் பலரும் சோர்வடைந்திருந்தனர். அதனால் அவர்கள் செயல்படாமல் இருந்தனர். இத்தகைய நெருக்கடியான ஒரு நேரத்தில், கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள பெரியார் சம்மதித்தார். சமூகத்தில் பின்தங்கியிருந்த மக்களின் முன்னேற்றத்திற்காகத் தீவிரமாகப் பணியாற்றும் அரசியல் கட்சி ஒன்று அவசியம் தேவை என்பதை பெரியார் உணர்ந்திருந்ததுதான் இதன் காரணம். அந்த நெருக்கடியான நேரத்தில் நீதிக்கட்சியின் தலைவர்களில் இருவர் பெரியாருக்குத் துணையாக உறுதியுடன் நின்றனர். சர். ஆர்.கே. ஷண்முகமும், ஏ.டி. பன்னீர்செல்வமும்தான் அந்த இரு தவைர்கள். அப்போது முன்னவர் கொச்சி சம°தானத்தின் திவானாக இருந்தார். பின்னர்
1947-இல் சுதந்திர இந்தியாவின் முதல் நிதிஅமைச்சராக ஆனார். பின்னவர் ஆளுநரின் ஆலோசனைக் குழுவில் ஓர் உறுப்பினராக இருந்து, பின்னர் 1930-இல் சென்னை மாகாணத்தில் ஒரு அமைச்சராக இருந்தவர். ஆங்கில அரசின் உள்துறை அமைச்சரின் ஆலோசகராகப் பொறுப்பேற்றுக் கொள்வதற்காக ஓமன் கடலுக்கு மேல் விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் திரு பன்னீர்செல்வம் உயிரிழந்தார். இத்தகைய திடீர் விபத்தினால் பன்னீர் செல்வம் உயிரிழந்தது தமிழ் நாட்டுக்குப் பேரிழப்பு என்று பெரியார் புலம்பினார்.
நீதிக்கட்சியின்

15-வது மாநில மாநாடு
1940 ஆக°ட் மாதத்தில் திருவாரூரில் நடைபெற்றது. இந்த மாநாட்டின்போதுதான், பின்னர் அறிஞர் அண்ணா என்று அன்புடனும் மரியாதையுடனும் அழைக்கப் பட்ட சி (ன்ன காஞ்சிபுரம்) ந (டராஜன்) அண்ணா துரை கட்சியின் இணைச் செயலாளராக ஆனார். தனது ஈடுஇணையற்ற எழுத்தாற்றலாலும், பேச்சாற் றலாலும் அவர் இளைஞர்களைக் கவர்ந்திழுத்தார். பெரியாரின் கொள்கைகள், கோட்பாடுகள், செயல் திட்டங்களைத் தனது கட்டுரைகள், சிறுகதைகள், புதினங்கள், நாடகங்களின் மூலம் பரப்புவதில் அவர் பெரும்பங்காற்றினார்.
1941 பிப்ரவரி மாதத்தில் புரட்சி ஜனநாயகக் கட்சியின் நிறுவனத் தலைவர் எம். என். ராய் சென்னைக்கு வந்து பெரியாரின் விருந்தினராகத் தங்கினார். காங்கிர° கட்சிக்கு எதிராக அனைத்திந்திய அளவில் ஒரு மாபெரும் கூட்டணியை உருவாக்குவ தில் அவர் பெரியாரின் உதவியை நாடினார். பாசிச வாதியான முசோலனி, நாசிசவாதியான ஹிட்லர், இராணுவ வெறி கொண்ட டோஜோ ஆகியோரை விட ஆங்கில ஏகாதிபத்தியமே மேலானது என்று கருதிய இவருவரும் இங்கிலாந்து நாட்டின் போர் முயற்சிக ளுக்கு ஆதரவு அளித்தனர்.
தொடர்ந்து பெரியார் கோரி வந்ததின் விளைவாக, ரயில் நிலையங்களிலம் மற்ற உணவு விடுதிகளிலும் பார்ப்பனர்களுக்குத் தனியாகவும் மற்றவர்களுக்குத் தனியாகவும் உணவு பரிமாறப்படும் வழக்கம்

1941 மார்ச் மாதத்தில் ஒழிக்கப்பட்டது.
நீதிக்கட்சியில் இருந்த பிற்போக்கு மனம் கொண்ட ஒரு பிரிவினர் பெரியாரின் புரட்சிகரமான சமூக சீர்திருத்த திட்டங்களையும், மதஇலக்கியங்களை கடுமையாக விமர்சித்ததையும் பகுத்தறிவுக் கொள்கை களைப் பிரச்சாரம்செய்தததையும் விரும்பவில்லை. இத்தகைய எதிர்ப்புகளை எல்லாம் பற்றி சிறிதும் கவலைப்படாத பெரியார் தன்னைச் சுற்றி இளைஞர்க ளும் பொதுமக்களும் கொண்ட ஒரு பெரும் கூட்டத்தினைத் திரட்டிக் கொண்டு தன் பாதையில் தொடர்ந்து சென்று கொண்டிருந்தார். இந்த

1942-43 ஆம் ஆண்டு காலத்தில்தான் மணியம்மையார் இயக்கத்திற்கு வந்து சேர்ந்தார்; அத்துடன் பெரியார் அவர்களின் தனிப்பட்ட தேவைகளையும் அவர் கவனித்துக் கொண்டார். தன் தலைவரிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்த அவர் அவருக்கு மிகுந்த விசுவாசத்துடன்சேவை செய்தார். பின்னர்
1949-இல் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.

திராவிடர் கழகம்
1944 - 1973

1944 ஆக°ட்
27 அன்று சேலத்தில் நடைபெற்ற நீதிக் கட்சியின் மாநில மாடு பெரியாரின் இயக்கத்தின் ஒரு பெரும் திருப்பு முனையாக அமைந்தது. கட்சியின் பெயர் திராவிடர் கழகம் என மாற்றப்பட்டது ஆங்கில ஆட்சியினால் அளிக்கப்பட்ட பதவிகள், பட்டங்கள்,அனைத்iயும் கைவிடும்படி அதன் உறுப்பினர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டார்கள். தங்கள் பெயருக்குப் பின்னிருந்த ஜாதிப்பட்டங்களை யும் கூட கைவிடும்படி அவர்கள் கேட்டுக் கொள்ளப் பட்டனர். இயக்கத்தின் உறுப்பினர்கள் தேர்தல்களில் போட்டியிடக்கூடாதென்பதும் முடிவு செய்யப்பட் டது. வேறு சொற்களில் கூறுவதானால், இது வரை ஓர் அரசியல் கட்சியாக இருந்த நீதிக் கட்சி திராவிடர் கழகமாக மாறி அரசியல் சார்பற்ற சமூகக் கலாசார இயக்கமாக ஆனது. இன்றும் கூட அது இவ்வாறுதான் உள்ளது.
இப்போது திராவிடர் கழகத்தின் தலைவராக உள்ள திரு வீரமணிக்கு 11 வயதாக இருக்கும்போது அவரை மேசை மீது நிற்கவைத்து வரலாற்றுச் சிறப்பு மிக்க சேலம் மாநாட்டில் பேச வைக்க பெரியார் அனுமதித்தார். சுயமரியாதை இயக்கத்தின் திருஞானசம்பந்தர் என்று வீரமணியை பார்வையாளருக்கு அறிஞர் அண்ணா அறிமுகப் படுத்தினார். (ஆழ்ந்த பக்தி கொண்ட திருஞான சம்பந்தர் சைவப் புராணப்பாடல்கள் இயற்றியவர்.)
1944 ஆம் ஆண்டு டிசம்பர் இறுதி வாரம் முதல் ,

1945 ஆம் ஆண்டு ஜனவரி முதல் வாரம் வரை பெரியார் வடஇந்தியப் பயணம் ஒன்று மேற்கொண்டார்.
1944 டிசம்பர்
27 அன்று கொல்கத்தா தீவிர ஜனநாயகக் கட்சி மாட்டில் பெரியார் பேசினார். அப்போது தனது நாத்தீகக் கருத்தின் ஆசான் என்று கூறி கூட்டத்தினருக்கு பெரியாரை எம்.என். ராய் அறிமுகப் படுத்தினார்.
3 : 2 என்ற் அளவில் கருப்புப் பின்னணியின் நடுவே சிவப்பு வட்டம் கொண்டதாக திராவிடர் கழகத்தின் கொடி

1946-இல் வடிவமைக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்து மத ஆதிக்கத்தின் கீழ் திராவிடர்கள் பட்ட இழிவுகளுக்கும், ஒடுக்கு முறைக்கும் அடையாளமாக கருப்பு விளங்கியது. மக்களிடையே இருக்கும் அறியாமையையும், மூட நம்பிக்கையையும் நீக்கவும், அனைத்து வகையான, குறிப்பாக சமூகக் கலாசாரச் சுரண்டல்களிலிருந்தும் அவர்களைக் காக்கவும், உறுதியான முயற்சிகள் மேற் கொள்வதைக் காட்டுவதாக சிவப்பு அமைந்திக்கிறது.
மதுரையில்

1946 மே மாதத்தில் கருஞ்சட்டைப் படை இருநாள் மாநாடு ஒன்று ஏற்பாடு செய்து நடத்தப்பட்டது. பார்ப்பன இந்து சனாதனிகளின் தூண்டுதலால், மாநாடு நடந்த பந்தல் இரண்டாம் நாள் எரிக்கப்பட்டது. அதே ஆண்டு
9-ஆம் தேதியன்று,. இந்திய அரசமைப்புச் சட்ட மன்றம் அமைக்கப்பட்ட முறைக்கு எதிராகப் பெரியார் உறுதியாகக் குரல் எழுப்பினார்.
1947ஆக°ட் 15 அன்று இந்தியா சுதந்திரம் அடைந்ததை பெரியார் துக்க தினமாக அறிவித்தார். பொருளாதாரச் சுரண்டல் மட்டுமன்றி, சமூகக் கலாசார ஆதிக்கம் நிறைந்த பார்ப்பன - பனியா கூட்டணியிடம் அரசு அதிகார மாற்றம் செய்யப்பட்டதே இந்த நிகழ்ச்சி என்று பெரியார் கருதியதுவே இதன் காரணம். ஆங்கிலேயர் ஆட்சியை விட இந்த ஆட்சி மிக மோசமானதாக இருக்கும் என்றுஅவர் கருதினார்.

1950-இல் இந்தியா குடியரசாக அறிவிக்கப்பட்டபோது, ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பற்றியும் பெரியார் இது போன்ற கருத்தையே கொண்டிருந்தார்.மகாத்மா காந்தியுடன் பெரியார் சில அடிப்படைச் செய்திகளில் கருத்து மாறுபட்டவ ராக இருந்தபோதும், இந்துத்வ மதவெறியர்களின் குண்டுக்கு காந்தி இரையான
1948 ஜனவரி
30 அன்று பெரியார் பெரிதும் வருந்தினார். இந்தியாவுக்கு காந்தி நாடு என்று பெயர் சூட்டப்பட வேண்டும் என்றும் அப்போது அவர் ஆலோசனை கூறினார்
1948 மார்ச் மாதத்தில் சென்னை மாகாண அரசு கருஞ்சட்டைப் படை தொண்டர்களுக்கு தடை விதித்தது. இதனால் திராவிடர் கழகத்துக்கு மேலும் பரவலான விளம்பரம் கிடைத்தது.அதன் விளைவாக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள், அவர்களில் பெரும்பாலோர் கருஞ்சட்டை அணிந்து 1948 மே

8,9 தேதகளில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் கலந்து கொண்டனர்.
1948 ஜுன் மாதத்தில் மறுபடியும் பள்ளிகளில் இந்தி அறிமுகப்படுத்தப்பட்டபோது, பெரியார் அதற்கு எதிரான தனது போராட்டத்தை மறுபடியும் தொடங்கினார். தொடக்க கட்டத்தில் அதிகாரிகள் உறுதியாக இருந்து, இந்தப் போராட்டத்திற்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொண்ட போதும்., பொதுமக்களின் விருப்பத்துக்கு விட்டுக் கொடுக்க வேண்டிய நிலைக்கு உள்ளான அவர்கள் கட்டாய இந்தி பாடத் திட்டத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டனர்.
இந்தியாவில் மிக ஆழமாகவும், உறுதியாகவும் வேரூன்றியிருந்த சமூகக் கேடுகள் அனைத்தும் வர்ணஜாதி என்னும் ஜாதி நடைமுறையைக் பின் பற்றுவதையே மய்யமாகக் கொண்டவையாகும். சமத்துவமற்ற அடுக்கு முறை ஜாதி அமைப்புக்கு புனிதத் தன்மை அளிக்கும் இந்து மதக் கோட்பாட்டி லிருந்தும், அதனைப் பின்பற்றுவதிலிருந்தும் பிரிக்க முடியாத ஓர்அடிப்படை அம்சமாகவே இந்த ஜாதி அமைப்புமுறை அமைந்ததாகும். இந்த ஜாதி அமைப்பு முறையால் பயனடைபவர்கள் உயர் ஜாதி பார்ப்பனர்கள் மட்டுமே; நியாயமற்ற சலுகைகள் மற்றும் பாரம்பரியமாகப்பெற்று வரும் அனுகூலங்கள்ஆகியவற்றின் மூலம் அவர்கள் அளப்பரிய செல்வத்தையும், மன ஆற்றலையும் பெற்றிருந்தனர். இத்தகைய சமூக நடைமுறையை முற்றிலும் மாற்றவேண்டும் என்று போராடுவோர் சமமற்ற ஒரு போரில் ஈடுபடவேண்டிய நிலையில் இருந்தனர். இந்தயாவில் நிலவும் சமூகக் கேடுகளை ஒழிக்கும் பணியை ஏற்றுக் கொண்டிருக்கும் தனிப்பட்டவர்களும், இயக்கங்களும் எதிலும் சமரசம் செய்து கொள்ளாமல் தங்கள் பாதையை விட்டு விலாகாமல் முழு ஈடுபாட்டுடனும்,தியாக உணர்வுடனும் செயல்படவேண்டும் என்பதைப் பெரியார் தனது பட்டறிவினாலும், தீவிர சிந்தனை யாலும் உணர்ந்திருந்தார். அரசியல் அதிகாரம் பெற அவர்கள் தேர்தலில் போட்டியிட்டால், தங்கள் நோக்கத்திற்காப் போராடும் ஆர்வத்தை அவர்கள் இழந்து விடுவார்கள் என்று பெரியார் கருதினார். ஆனால் அவரைப் பின்பற்றியவர்களில் பலரும் வேறுவிதக் கருத்து கொண்டிருந்தனர்; அரசியலில் ஈடுபட்டு அரசாட்சியில் பங்கேற்க வேண்டும் என்று விரும்பினர். பெரியாரிடமிருந்து பிரிந்து செல்லத் தேவையான ஒரு வாய்ப்பினை அவர்கள் எதிர் நோக்கியிருந்தனர். தனது

70-வது வயதில்
30 வயதான மணியம்மையை மணந்து கொண்டதன் மூலம் பெரியார் ஒரு மோசமான முன் உதாரணத்தை உருவாக்கி விட்டார் என்று கூறிக்கொண்டு அவர்கள்
1948 ஜுலை
9 அன்று திராவிடர் கழக்தை விட்டு வெளியேறினார்கள். பிரிந்து சென்ற அவர்கள் சி.என். அண்ணாதுரை (அறிஞர் அண்ணா) தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை உருவாக்கினர்.
இதுபோன்று வேண்டுமென்றே வேறொரு நோக்கத்துடன் உணர்ச்சி பூர்வமாக எழுந்த எதிர்ப்பு களைப் பற்றி சிறிதும் சஞ்சலம் அடையாத பெரியார் விழிப்புணர்வு கொண்ட சமத்துவ சமூகம் ஒன்றை உருவாக்க இரட்டை மடங்கு வேகத்துடன் தொடர்ந்து செயலாற்றினார்.
1950 ஜனவரி

26 அன்று இந்திய அரசமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்தபின், வரலாற்று ரீதியாக வாய்ப்புகள் மறுக்கப்பட்ட சமூகப் பிரிவு மக்களுக்கு கல்வி நிறுவனச் சேர்க்கையிலும், அரசுப் பணி வாய்ப் பிலும் இட ஒதுக்கீடு அளிக்கும் சென்னை அரசின் சட்டத்தை எதிர்த்து பார்ப்பனர்கள் சென்னை உயர் நீதி மன்றத்திற்கும், உச்ச நீதிமன்றத்திற்கும் சென்றனர். வேறுபாடு காட்டக் கூடாது என்ற அடிப்படை உரிமை இதனால் மீறப்படுவதாக அவர்கள் கூறினர். நீதிமன்றங்களும் அவர்களின் கருத்தை ஏற்றுக் கொண்டு, சமூக நீதியை வளர்க்கும் இட ஒதுக்கீட்டு முறை அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று அறிவித்தன. இத் தீர்ப்பை எதிர்த்து பெரியார் பொதுக் கூட்டங்களையும், மாநாடுகளையும் ஏற்பாடு செய்து நடத்தினார். நாளாக ஆக இந்தப் போராட்டம் தீவிர மடைந்தது. இதன் விளைவாக
1951-இல் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கான முதல் திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேறி அரசமைப்பு சட்டத்தில் பிரிவு
15-இல் விதி 2 சேர்க்கப்பட்டது; “தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்கள் அல்லத சமுக அளவிலும் கல்வி நிiயிலும் பின்தங்கியுள்ள இதரப் பிரிவு மக்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பான சட்டங்கள் இயற்றுவதை இந்த விதியிலோ அலலது
29-ஆம் பிரிவின் 2-வது விதியிலோ கூறப்பட்டிருப்பது எதுவும் அரசுக்குத் தடையில்லை.”
1952 செப்டம்பார் 23 அன்று பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் பதிவு செய்யப் பட்டது.

1953-இல் பெரியால் அறிவுறுத்தியபடி, மாநிலம் முழுவதிலும் புத்தர்தினம் கொண்டாடப் பட்டது. பகுத்தறிவு வழியுடன் கூடிய ஒரு வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திய பெரியார் கற்றவர்களும், கல்வியறிவற்ற மக்களும் வழிபடும் எண்ணற்ற தெய்வங்களின் செயலற்ற தன்மையை எடுத்துக் காட்டும் முறையில் விநாயகர் சிலைகளை உடைத்தார்.
இதற்கிடையே

1952-54 ஆண்டுகளுக்கிடையே ராஜகோபாலாச்சாரி இரண்டாவது முறையாக சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக பதவிக்கு வந்தார். பள்ளிகளில் காலையில் மட்டுமே வகுப்புகள் நடத்தும் திட்டத்தை கொண்டு வந்த அவர், பிற்பகலில் தங்களின் பெற்றோரின் குலத்தொழிலை அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். முதல் கட்டமாக இத் திட்டம் மாநிலத்தின் கிராமப் புறப் பகுதிகளில் நடைமுறைப் படுத்தப்பட்டது. சூத்திர, பஞ்சம ஜாதி மக்கள் கல்வி யறிவற்றவர்களாகவும், அரைகுறையாகப் படித்தவர் களாகவும் வைத்திருக்கும் தந்திரம் மிக்க ஒரு வழியே இத் திட்டம் என்பதை திராவிடத் தலைவர்கள் சரியாக மதிப்பிட்டனர். பல நூறு ஆண்டு காலமாக கல்வி வாய்ப்புகள் மறுக்கப்பட்ட பின் அவர்களது பிள்ளைகள் இப்போதுதான் பள்ளிகளுக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர். ராஜகோபாலாச்சாரியாரின் இக் கல்வித் திட்டத்தைக் குலக்கல்வி திட்டம் என்று கண்டனம் செய்த அவர்கள் இதனைத் திரும்பப் பெற வேண்டுமென்ற போராட்டத்தை பெரியார் தலைமையில் தொடங்கினார்கள். இதன் விளைவாக 1954 மார்ச் மாதத்தில் ராஜகோபலாச்சாரி முதல் முதலமைச்சர் பதவியிலிருந்து விலக நேர்ந்தது.; ஏப்ரல்
14 அன்று காமராஜர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.
அரைநாள் படிக்கும் கல்வித் திட்டத்தை காமராஜர் நீக்கினார். மாநிலத்தின் மூலை முடுக்களில் எல்லாம் மக்கள் கல்வி கற்கும் வசதிகளை அரசு விரிவுபடுத்தும் என்று பெரியாருக்கு அவர் உறுதி அளித்தார். வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு கல்வி மற்றும் நிருவாகத்தில் வாய்ப்புகள் அளிக்கும் இட ஒதுக்கீட்டு முறையை நேர்மையுடன் நடைமுறைப் படுத்தவும் அவர் உறுதியளித்தார். காமராஜர் தனது உறுதிமொழிகளை நிறைவேற்றியதால், பெரியார் காமராஜருக்கு தடையின்றி ஆதரவு அளித்தார்.

1925 -இல் காங்கிரசை விட்டு விலகி
30 ஆண்டுகள் கழிந்த பின் பெரியார் காங்கிரசை ஆதரித்தார் என்ற போதிலும், அவர் அளித்த ஆதரவு தனிப்பட்ட காமராஜர் என்பவருக்காகத்தானே அன்றி காங்கிர° கட்சிக்காக அல்ல.
1954 நவம்பர் டிசம்பர் மாதங்களிலும்,

1955 ஜனவரியிலும் பெரியாரும் அவரின் மனைவி மணியம்மையாரும் பர்மா மலேசிய நாடுகளுக்குப் பிரச்சாரச் சுற்றுப் பயணம் சென்றனர். தற்போது மியான்மார் எனப்படும் பர்மாவில், புத்த மத நாடாடு ஒன்றில் கலந்து கொண்ட பெரியார், டாக்டர் பி. ஆர். அம்பேத்காருடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.
1956 டிசம்பர்
6 அன்று அம்பேத்கார் மரணமடை வதற்கு முன் இந்த இரு பெரியவர்களும் சந்தித்துப் பேசிக் கொண்டது இதுவே இறுதி முறாயகும். இந்தியாவில் நிலவும் சமூக மதப் பிரச்சினைகள் தொடர்பாக அவர்கள் இருவரும் ஒத்த கருத்தையே கொண்டிருந்தனர்.
பட்டுக்கோட்டை அழகிரிசாமிக்கு அஞ்சலி செலுத்த பெரியார்

1955 மார்ச்
28 அன்று தஞ்சாவூரில் இடுகாட்டுக்குச் சென்றார். அஞ்சா நெஞ்சன் என்றழைக்கப்படும் அழகிரி திராவிடர் கழகக் கொள்கைகளில் தீவிரப் பற்று கொண்டவரும், பொறி பறக்கும் பேச்சாற்றல் கொண்டவரும் ஆவார்.
1949-ஆம் ஆண்டு இதே நாளில் அவர் உயிர் நீத்தார். சூத்திரர்களுக்குத் தனியாகப் புதைக்கும் இடம் உள்ளது என்பதைக் குறிக்கும் ஓர் அறிவிப்புப் பலகை அங்கிருப்பதைப் பெரியார் கண்டார். இவ்வாறு இறந்தபின் புதைக்கும், எரிக்கும் இடுகாட்டிலும் கூட வர்ணதர்மத்தைக் கடைபிடிப்பதை அறிவிக்கும் பலகை வைத்திருப்பதை ஆட்சேபித்து அவர் மாவட்ட ஆட்சியருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதன் விளைவாக அந்த அறிவிப்புப் பலகை நீக்கப்பட்டு, அந்த நடைமுறையும் கைவிடப்பட்டது.
வர்ண தர்மம் காப்பாற்றப்படுவதன் அடையாளமாக ராமன் இருப்பதால், ராமனின் படத்தை எரிக்கும் போராட்டம் ஒன்றை திராவிடர் கழகம் 1956 ஆக°ட்

1 அன்று மேற்கொண்டது. அச் சமயம் பெரியார் தடுப்புக் காவலில் கைது செய்யப் பட்டார்.
1956 நவம்பர்

1 அன்று மொழிவாரி மாநிலங்கள் இந்தியாவில உருவாக்கப்பட்டன; பெரியார் இந்த நடவடிக்கையை வரவேற்றார்.
சைவ உணவு மட்டுமே வழங்கப்படும் என்பதைத் தெரிவிப்பதற்காக பார்ப்பனர்கள் கொடுத்த யோசனைப்படி உணவு விடுதிகளில் பார்ப்பனர் உணவுவிடுதி என்ற பெயர்ப்பலகைகள் அக்கலாத்தில்இருந்தன. இவ்வாறு வர்ணதர்மத்தைக் குறிக்கும் செயலுக்கு திராவிடர் கழகம் எதிர்ப்பு தெரிவித்து,

1957 மே மாதம்
5-ந்தேதியன்று சென்னையில் உள்ள ஓர் உணவு விடுதியின் முன் ஓர் அடையாளப் போராட்டத்தைத் தொடங்கியது. தினமும் அங்கு சென்று போராடிய தொண்டர்கள் நாளொன்றுக்கு
10 பேர் வீதம் கைதாயினர்.
1958 மார்ச் 22 அன்று கழகத்தின் கோரிக்கை வெற்றி பெறும் வரை இது தொடர்ந்து நடந்தது.
1957 நவம்பர்

26 அன்று வர்ணஜாதி முறைக்குப் பாதுகாப்பு அளித்து உதவும் அரசமைப்பு சட்டப் பிரிவின் நகல்களைத் திராவிடர் கழகத்தின்
10,000 தொண்டர்கள் கொளுத்திப் போராட்டம் நடத்தினர். வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில்
3000-க்கும் மேற்பட்டோருக்கு 2 மாதம் முதல்
3 ஆண்டு வரை கடுங்காவல் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டது.
1957 டிசம்பர்

4 அன்று, காவல் துறை தினப் பதிவேடுகளில், பார்ப்பனர்களுக்கு எதிராக வன்முறை காட்ட தனது தொண்டர்களைத் தூண்டினார் என்று பெரியாரின் மீது குற்றம் சாட்டி பொய்யாகப் பதிவு செய்யப் பட்ட வழக்கில் பெரியாருக்கு ஆறு மாதக் கடுங்காவல் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டது; பெரியார் இக் குற்றச்சாட்டை மறுத்தார்.
ஜாதிநடைமுறையை ஆதரிக்கும் அரசமைப்புச் சட்டப் பிரிவு நகல்களை எரித்ததற்காக சிறை தண்டனை பெற்ற ராமசாமி, வெள்ளைச்சாமி என்ற இரண்டு தொண்டர்கள் சிறையில் இருக்கும்போதே உயிர் நீத்தனர். அவர்களின் உடல்களை கழகத்தினரிடம் அளிக்க விரும்பாத சிறை அதிகாரிகளின் எதிர்ப்பை மீறி பெருமுயற்சியின் பேரில் அவற்றைப் பெற்ற மணியம்மையார் திருச்சியின் முக்கிய வீதிகளின் வழியே நடந்த ஒரு உணர்ச்சி வயப்பட்ட மாபெரும் ஊர்வலத்தில் அவற்றை எடுத்துச் சென்று உரிய மரியாதைகளுடன் அடக்கம் செய்தார். சிறை தண்டனையின் கடுமையினால், சிறைவாசம் செய்த

15 தொண்டர்கள் விடுதலை அடைந்தபின் உயிர் நீத்தனர்.
பெங்களூரில்

1959 ஜனவரியில் அரசு சார்பில் நடைபெற்ற அனைத்திந்திய மொழிகள் மாநாட்டில் பெரியார் கலந்து கொண்டார். ஜெனரல் கரியப்பா மற்றும் மேடப்பா ஆகியோருடன் சேர்ந்து ஆங்கிலத்தை இந்திய அரசின் ஆட்சி மொழியாக நீடிக்க வேண்டிய அவசியத்தைப் பெரியார் வலியுறுத்தினார். பிப்ரவரி மாதத்தில் வடஇந்திய சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்ட பெரியார், பகுத்தறிவு, சமூக நீதி, சுயமரியாதை வாழ்க்கை முறை ஆகிய கொள்கைகள் பற்றி பிரச்சாரம் செய்தார்.
ஜாதி நடைமுறையினை மத்திய அரசு பாதுகாத்து கடை பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்க இந்திய வரை படத்தை எரிக்குமாறு

1960 ஜுன் மாதத்தில் பெரியார் மக்களைக் கேட்டுக் கொண்டார். இப் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக
4000-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.வளம் சேர்க்கும் தனது வழக்கறிஞர் தொழிலைக் கைவிட்டு விட்டு இயக்கத்தின் முழுநேரத் தொண்டராகப் பணியாற்ற முன்வந்த இன்றையக் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களை வரவேற்றுப் பகுத்தறிவு நாளேடான விடுதலையில் ஒரு சிறப்புக் கட்டுரையை
1962-இல் பெரியார் எழுதினார்.
முழு நேரக் கட்சிப் பணியாற்ற விருப்பம் தெரிவித்து தமிழக முதல்வர் பதவியை விட்டு விலக காமராஜர் முன்வந்தபோது, இச்செயல் அவருக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் தற்கொலை செய்து கொள்ளும் செயலுக்கு ஒப்பாகும் என்று பெரியார் ஒரு தந்தியை காமராஜருக்கு அனுப்பினார். என்றாலும் காமராஜர் தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை; அதன் விளைவாக

1963 அக்டோபர்
3 அன்று எம். பக்தவத்சலம் முதல்வர் பொறுப்பேற்றார்.
சர். சி.பி. ராமசாமி அய்யர் தலைமையிலான தேசிய ஒருங்கிணைப்புக் கமிஷன் பரிந்துரைத்தபடி, இந்திய நாட்டிலிருந்து பிரிந்து செல்லும் கோரிக்கை யினைப் பரப்புவதைத் தடை செய்யும் சட்டம் ஒன்று

1963-இல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. பெரியார் மிகத் தீவிரமாக இந்த சட்டத்தை எதிர்த்தார்.
நில உச்சவரம்பு நிர்ணயித்து தமிழ்நாடுஅரசு இயற்றிய சட்டத்திற்கு எதிராகத் உச்ச நீதி மன்றம் அளித்த தீர்ப்பினை எதிர்த்து ஏப்ரல்

1964-இல் மாநில மெங்கும் கண்டனக் கூட்டங்களைத் திராவிடர் கழகம் நடத்தியது.
இந்தித் திணிப்பிற்கு எதிராக

1965 ஜனவரி
25 முதல் பிப்ரவரி
15 வரை தமிழ் நாட்டில் கொழுந்து விட்டு எரிந்த போராட்டத்தில் பலர் உயிரிழந்தனர்; எந்த திசையில் போராடுவது என்ற நோக்கமின்றி நல்ல முறையில் ஏற்பாடு செய்யப்படாத இந்தப் போராட்டத்தைப் பெரியார் குறை கூறினார்.
பசுப் பாதுகாப்பு என்ற பெயரில், இந்துத்வக் கோட்பாடினால் வெறியூட்டப்பட்ட ஒரு வன்முறைக் கும்பல்

1966 நவம்பர்
7 அன்று டில்லியில் இருந்த காமராஜர் வீட்டினை எரித்து அவரைக் கொலை செய்யவும் முயன்றனர். காட்டாண்டித்தனமாக இச் செயலைக் கண்டித்த பெரியார் அனைத்து வகைகளிலும் காமராஜரைக் காப்பாற்ற விழிப்புடன் இருக்குமாறு மக்களைக் கேட்டுக் கொண்டார்.
1957, 1962 மற்றும்

1967 பொதுத் தேர்தல்களிக்ல திராவிடர் கழகம் காங்கிர° கட்சியை ஆதரித்தது; 1967 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பெரியா எதிர்த்தார். ஆட்சி அமைத்தவுடன், அறிஞர் அண்ணா தனது அமைச்சர்கள் அனைவருடனும் திருச்சி சென்று தனது ஆசானான பெரியாருக்கு மரியாதை செலுத்தினார். சென்னை மாகாணத்தைத் தமிழ்நாடு என்று திமுக பெயர் மாற்றம் செய்தபோதும், சுயமரியதைத் திருமணங்கள் சட்டப்படி செல்லும் என்று அறவித்தபோதும் பெரியார் மகிழ்ச்சி அடைந்தார்.
1967 வரை இதுபோன்ற திருமணங்கள் சட்டப்படி அங்கீகரிக்கப்படவில்லை என்றாலும், சுயமரியாதைக் கொள்கைகள் காரணமாக ஆயிரக்கணக்கானவர்கள் இத்தகைய திருமணங்களை நடத்தி வந்தனர்.
1967-இல் பெரியார் வடஇந்தியச் சுற்றுப் பயணம் ஒன்று மேற்கொண்டு, ஜாதி முறையை ஒழிக்கப் பாடு படுமாறு மக்களைக் கேட்டுக் கொண்டார். லக்னோவில் அக்டோபர்

12, 13 தேதிகளில் நடைபெற்ற தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட பிரிவினர், சிறுபான்மையினர் மாநாடு ஒன்றில் பெரியார் பேசினார்.
லட்சக்கணக்கான தமிழ் இளைஞர்களின் தன்னிகற்றத் தலைவராக விளங்கிய அறிஞர் அண்ணா

1969 பிப்ரவரி
3-ந்தேதி தனது
60-வது வயதில் காலமானார்.தன் முக்கியச் சீடர்களில் ஒருவரான அறிஞர் அண்ணா இறந்தபோது பெரியார் மிகமிக வருந்தினார்.
வர்ண ஜாதியின் மூல காரணங்களில் ஒன்றான ஆகமக் கோயில்களில் பார்ப்பனர்களை மட்டுமே அர்ச்சகர்களாக நியமிப்பது என்று கடைபிடிக்கப் பட்டு வந்த வழக்கத்தை முடிவுக்குக் கொண்டு வரக் கோரி ஒரு போராட்டத்தை நடத்துவது என்று திராவிடர் கழகம் தனது செயல் குழுக் கூட்டத்தில் முடிவு செய்தது.
அனைத்துலக நாடுகளின் கல்வி, அறிவியல்,காலச்சார அமைப்பினால் பெரியாருக்கு விருது ஒன்று வழங்கப்பட்டது.

1970 ஜுன் மாதம்
27-ந்தேதி இந்த விருதை மத்தியக் கல்வி அமைச்சர் திரிகுணாசென் பெரியாரிடம் வழங்கினார். “புது யுகத்தின் தீர்க்கதரிசி, தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீ°, சமூகச் சீர்திருத்த இயக்கத்தின் தந்தை, அறியாமை, மூடநம்பிக்கை, அர்த்தமற்ற சடங்குகள், இழிவான பழக்க வழக்கங்கள் ஆகியவற்றின் கடும் பகைவர்” என்று பெரியாரைப் பற்றி இந்த விருதில் புகழ்ந்து உரைக்கப்பட்டுள்ளது.
உண்மை என்ற தமிழ் மாத இதழையும் (தற்போது இது மாதமிரு இதழாக வெளிவருகிறது) மாடர்ன் ரேஷனலி°ட் என்ற ஆங்கில மாத இதழையும பெரியார் முறையே

1970 மற்றும்
1971 ஆம் ஆண்டுகளில் தொடங்கினார். பகுத்தறிவு மனிதநேயக் கொள்கைகளைத் பரவலாகப் பரப்பும் நோக்கத்துடன் இப் பத்திரிகைகள் தொடங்கப்பட்டன. ராமாயணத் தைப் பற்றி பெரியார் எழுதிய நூலின் இந்தி மொழி பெயர்ப்புக்கு அரசு விதித்திருந்த தடையை அலகாபாத் உயர்நீதி மன்றம்
1971-இல் நீக்கியது. சென்னை காங்கிர° அரசினால் தடை செய்யப்பட்டி ருந்த ராவண காவியம் என்ற நூலுக்கு விதிக்கப்பட்டி ருந்த தடையும்
1971-இல் விலக்கிக் கொள்ளப்பட்டது. எந்த ஜாதியில் பிறந்தவர்களாக இருந்தாலும் சரி, தகுதி படைத்த அனைவருக்கும் சம வாய்ப்பு அளிப்பதற்கான சட்டம் ஒன்றை திமுக அரசு
1971 ஜனவரி
12 அன்று நிறைவேற்றியது. மூடநம்பிக்கை ஒழிப்பு மாபெரும் பேரணி ஒன்று சேலத்தில் ஜனவரி
23 அன்று நடத்தப்பட்டது. புராணங்களிலும், இதிகாசங்களிலும் வர்ணிக்கப் பட்ட கடவுள்களின் உண்மையான உருவங்களைச் சித்தரிக்கும் படங்களையும், சித்திரங்களையும் பேரணியினர் எடுத்துச் சென்றனர். இவற்றைப் பார்த்த சகிப்புத் தன்மை அற்ற சனாதனிகள் சிலர் கூட்டத்தினர் மீது செருப்புகளை வீசி எறிந்தனர். ஆழ்ந்த தவத்தில் இருந்த சூத்திரன் சம்புகன் தலையை வெட்டிக் கொன்ற ராமனின் படத்தை அடிப்பதற்கு பேரணியிர் அந்த செருப்புகளையே பயன்படுத்திக் கொண்டனர். பெரியார் தொண்டர் களின் இச்செயல் செய்தித் துறையினால் அளவுக்கு அதிகமாக பெரிதுபடுத்தப்பட்டு இந்தியா முழுவதும் பரப்பப்பட்டது. பேரணியினர் எடுத்துச் சென்ற ஆண், பெண் கடவுள்களின் படங்களையும் அவர்கள் வெளியிட்டிருந்தனர்.
1971 மார்ச் மாதத்தில் நடைபெற்ற தேர்தலில் இந்த நிகழ்ச்சி திமுக காங்கிர° கூட்டணிக்கு எதிராகப் பயன்படுத்தப் பட்டது. என்றாலும் இரு கட்சிகளும் பெருவெற்றி பெற்றன; திமுக தமிழ்நாடு சட்டமன்றத்திலும், காங்கிர° மத்தியிலும் அறுதிப்பெரும்பான்மை பெற்று ஆட்சிஅமைத்தன.
உண்மை என்ற தமிழ் மாத இதழையும் (தற்போது இது மாதமிரு இதழாக வெளிவருகிறது) மாடர்ன் ரேஷனலி°ட் என்ற ஆங்கில மாத இதழையும பெரியார் முறையே

1970 மற்றும்
1971 ஆம் ஆண்டுகளில் தொடங்கினார். பகுத்தறிவு மனிதநேயக் கொள்கைகளைத் பரவலாகப் பரப்பும் நோக்கத்துடன் இப் பத்திரிகைகள் தொடங்கப்பட்டன. ராமாயணத் தைப் பற்றி பெரியார் எழுதிய நூலின் இந்தி மொழி பெயர்ப்புக்கு அரசு விதித்திருந்த தடையை அலகாபாத் உயர்நீதி மன்றம்
1971-இல் நீக்கியது. சென்னை காங்கிர° அரசினால் தடை செய்யப்பட்டி ருந்த ராவண காவியம் என்ற நூலுக்கு விதிக்கப்பட்டி ருந்த தடையும்
1971-இல் விலக்கிக் கொள்ளப்பட்டது. எந்த ஜாதியில் பிறந்தவர்களாக இருந்தாலும் சரி, தகுதி படைத்த அனைவருக்கும் சம வாய்ப்பு அளிப்பதற்கான சட்டம் ஒன்றை திமுக அரசு
1971 ஜனவரி
12 அன்று நிறைவேற்றியது. மூடநம்பிக்கை ஒழிப்பு மாபெரும் பேரணி ஒன்று சேலத்தில் ஜனவரி
23 அன்று நடத்தப்பட்டது. புராணங்களிலும், இதிகாசங்களிலும் வர்ணிக்கப் பட்ட கடவுள்களின் உண்மையான உருவங்களைச் சித்தரிக்கும் படங்களையும், சித்திரங்களையும் பேரணியினர் எடுத்துச் சென்றனர். இவற்றைப் பார்த்த சகிப்புத் தன்மை அற்ற சனாதனிகள் சிலர் கூட்டத்தினர் மீது செருப்புகளை வீசி எறிந்தனர். ஆழ்ந்த தவத்தில் இருந்த சூத்திரன் சம்புகன் தலையை வெட்டிக் கொன்ற ராமனின் படத்தை அடிப்பதற்கு பேரணியிர் அந்த செருப்புகளையே பயன்படுத்திக் கொண்டனர். பெரியார் தொண்டர் களின் இச்செயல் செய்தித் துறையினால் அளவுக்கு அதிகமாக பெரிதுபடுத்தப்பட்டு இந்தியா முழுவதும் பரப்பப்பட்டது. பேரணியினர் எடுத்துச் சென்ற ஆண், பெண் கடவுள்களின் படங்களையும் அவர்கள் வெளியிட்டிருந்தனர்.

1973 மார்ச் மாதத்தில் நடைபெற்ற தேர்தலில் இந்த நிகழ்ச்சி திமுக காங்கிர° கூட்டணிக்கு எதிராகப் பயன்படுத்தப் பட்டது. என்றாலும் இரு கட்சிகளும் பெருவெற்றி பெற்றன; திமுக தமிழ்நாடு சட்டமன்றத்திலும், காங்கிர° மத்தியிலும் அறுதிப்பெரும்பான்மை பெற்று ஆட்சிஅமைத்தன.
ஜாதி வேறுபாடின்றி தகுதி படைத்த அனைத்து ஜாதி மக்களையும் கோயில் அர்ச்சகர்களாக நியமிக்க தமிழ்நாடு அரச

1971-இல் நிறைவேற்றிய சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றம் குழப்பம் நிறைந்த தீர்ப்பு ஒன்றை
1972 மார்ச்
14 அன்று வழங்கியது. தற்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டும் என்று கோரும் பிற்போக்காளர்களுக்கு ஆதரவாக அதிகாரிகள் இத் தீர்ப்புக்கு விளக்கம் அளித்தபோது, சமூக, மத மற்றும் கலாசாரத் துறை உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் சம மனித உரிமைகளுக்காகப் போராட மக்களை வேண்டி பெரியார் ஒரு போராட்டத்தை அறிவித்தார். இந்து மதம் என்றழைக்கப்படும் வேத, பார்ப்பன சனாதன தர்மத்தின்படி சூத்திரர்கள் என்றும் பஞ்சமர்கள் என்றும் இழிவுடுத்தப்பட்ட திராவிட இன மக்களுக்கு ஏற்பட்ட இழிவை நீக்குவதற்கு இப் போராட்டம் தேவையானதாக இருந்தது.
1973 டிசம்பர் 8 , 9 தேதிகளில் சென்னையில் ஒரு மாநாடு நடத்த பெரியார் ஏற்பாடு செய்தார். தமிழரின் சமூக இழிவு ஒழிப்பு மாநாடு என்று அது அழைக்கப்பட்டது. கோயில்களின் கருவறையில் அனைத்து ஜாதிகளைச் சேர்ந்த மக்களும் நுழைவதற் சம உரிமைகளும் வாய்ப்புகளும் பெறப் போராடுவதற்காக கருவறை நுழைவுப் போராட்டம் என்ற ஒரு போராட்டத்தை மேற்கொள்ள இந்த மாநாடு முடிவு செய்தது. சமத்துவத்தின் அடிப்படையில் ஒரு சமூக நடைமுறையை மாற்றியமைப்பதற்கு இன்றியமையாத நடவடிக்கையாக, பூஜாரிகள் நியமனம் மற்றும் இதர மதச் சடங்குகள்,சம்பிரதாயங்களில் பார்ப்பனர் பெற்றுள்ள ஆதிக்கத்தினையும், உரிமையற்ற சலுகைகளையும் முடிவுக்குக் கொண்டு வர வேண்டியதன் அவசியத்தை விளக்க பெரியார் ஒரு பெரும் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார்.
கடவுளை மறுத்து, கடவுள் வழிபாட்டையும், பிரச்சாரத்தையும் எதிர்த்து 1967-இல் பெரியார் கூறிய புகழ்பெற்ற பொன்மொழிகளை பெரியாரின் சிலை மேடையில் பொறித்ததற்கு எதிரான வழக்கு ஒன்று அக்டோபர் 11அன்று நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.
1973 டிசம்பர்

19 அன்று சென்னை தியாகராயர் நகரில் நடைபெற்ற தனது இறுதிக் கூட்டத்தில் சமூகச் சமத்துவத்தையும், தன்மானம் நிறைந்த வாழ்க்கை முறையையும் பெறத் தக்க நடவடிக்கை மேற்கொள்ள மக்களுக்கு ஆர்வமளிக்கும் பேரழைப்பு ஒன்றை பெரியர் விடுத்தார்.
பெரியாரின் வாழ்க்கை, வரலாற்றில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தி, ஒரு புது யுகத்தின் தொடக்க மாக அமைந்ததாகும்.


நன்றி: பெரியார்.ஓஆர்ஜி