அந்த தை திருவிழாவுக்குப் பின் கோவிந்தனின் நடவடிக்கைகள் மிக்க மாறிப் போயின. நண்பர்கள் யாருடனும் சேர்ந்து தண்ணியடிப்பதில்லை எனும் தன் கொள்கையை மிக நேர்மையாய் காப்பாற்றினர். மாமூவின் தங்கையுடனான காதல் மிகவும் ஆழமானது ஆனது. எப்போதும் எங்கும் இருவரையும் எதாவது ஒரு இடத்தில் சந்திக்கும் கண்கள் ஆச்சரியம் ஏதும் அறியாதவன்னம் அவர்களின் நட்பு அத்தனை வெளிப்படையாய் இருந்தது. இது இருவரின் வீட்டுக்கும் தெரிந்தே நடந்து வந்ததால் யாரும் அதுபற்றி கேள்வி எழுப்பி கோவிந்தனை சங்கடத்தில் ஆழ்த்தவில்லை.

சுமார் இரண்டு மூன்று மாதங்களுக்கு பிறகு கோவிந்தனின் வீட்டில் மட்டும் அப் பேச்சை எடுத்தார்கள். கோவிந்தன் தன் வேலை ஒன்று இலகுவானது குறித்து மிக மகிழ்ச்சியுடன் தனது சம்மதத்தை தந்தான். நாட்கள் உற்ச்சாகமாய் கழிய நண்பர்கள் அவனோடு பேசுவதை கொஞ்சம் குறைக்க ஆரம்பித்தனர். காரணம் ஏதும் அறியாத கோவிந்தன் மாமூவின் தங்கை மட்டும் தன்னோடு பேசினால் போதும் எனும் முடிவுக்கு வந்தான்.

ஒரு நண்பன் மட்டும் வழக்கம் போலவே கோவிந்தனுடனான நட்பை விடாமல் இருந்தான். அவன் கோவிந்தனின் நட்பு வட்டம் சுருங்க ஆரம்பித்ததில் அந்த ஒருவனாவது நம்மோடு பேசுகிறானே என்று மகிழ்ந்த கோவிந்தன் தன்னோடு மாமூவின் தங்கையை காணும் போதெல்லாம் அவனையும் கூடவே கூட்டிச்செல்ல ஆரம்பித்தான் முதலில் இது அவனின் அந்தரங்க பேச்சுக்கு இடைஞ்சலாய் இருந்தாலும் பின் ஒரு துணையிருப்பது நல்லது தானே எனும் முடிவுடன் இருவரும் ஒன்றாகவே இருக்க ஆரம்பித்தனர்.

சில மாதங்களுக்கு பின்னர் கோவிந்தனின் சகோதரி மகள்களின் காதுகுத்தும் விழாவுக்காக வெளியூர் செல்ல நேர்ந்தது அப்போது அவனின் நண்பனை அழைத்த கோவிந்தன் தன்னோடு வரும்படி அபனையும் அழத்தான் ஆனால் அவனுக்கு ஏதோ முக்கியமான வேலை இருப்பதாக சொன்ன நண்பன் கோவிந்தனை தனியே அனுப்ப தலைப்பட்டான். கோவிந்தன் தன் வாழ்க்கையில் மறக்கமுடியாத நாளாய் அது அமையும் என்பதை அப்போது அறியவில்லை..... (வளரும்)17 comments:

மகேந்திரன்.பெ said...

சோதனைமட்டும்

கப்பி பய said...

நண்பன் கூட இருந்தே குழி பறிச்சுட்டானா? :(

மகேந்திரன்.பெ said...

//நண்பன் கூட இருந்தே குழி பறிச்சுட்டானா//

கப்பி கதைய முழுசா படிச்சுட்டு கேள்வி கேளு .....
சரி பரவாயில்ல கிட்ட வா உனக்கு மட்டும் சொல்றேன் :)

Anonymous said...

மகேந்திரன் இதை விட முன்பெழுதிய பேச்சுத் தமிழ் வடிவம் மிக நன்றாக இருக்கிறது

கப்பி பய said...

கதை சொன்ன அப்புறம் தான் 50-ன்னு நினைச்சேன்..இப்பவுமேவா?? ;)

மகேந்திரன்.பெ said...

பின்னே காதல் கதைன்னா சும்மாவா? :))
சரி விளையாட்ட இன்க வச்சுக்கவா இல்லை அங்கயா?

நாமக்கல் சிபி said...

பிகரை பார்த்ததும் ஃபிரண்ட கட் பண்ணனும்னு கொவிந்தனுக்கு தெரியாதா???

மகேந்திரன்.பெ said...

முடிவே பன்னிட்டீங்களா? அதெல்லாமில்லை அதைவிட ஒரு பெரிய விஷயம் இருக்கு தொடர்ந்து படிங்க

நாமக்கல் சிபி said...

ஓ!!! நான் அவசரப்பட்டுட்டனா???
சரி சீக்கிரம் அடுத்த பாகத்தைப் போடுங்க :-)

மகேந்திரன்.பெ said...

//பிகரை பார்த்ததும் ஃபிரண்ட கட் பண்ணனும்னு //

முடிவே பன்னிட்டீங்களா? அதெல்லாமில்லை அதைவிட ஒரு பெரிய விஷயம் இருக்கு தொடர்ந்து படிங்க

மகேந்திரன்.பெ said...

கண்டிப்பா அதுக்கு பிறகு நடந்ததை எழுத எனக்கு இப்பவே கை துடிக்குது ஆனா நேரமில்லை அதனால வேரெ எந்த அரசியல் பாதிப்பும் இல்லைன்னா கு.கோ.கா.க 3 ரிலீஸ் :)

Anonymous said...

//ச�452005

கப்பி பய said...

//சரி விளையாட்ட இன்க வச்சுக்கவா இல்லை அங்கயா///

எங்க இருந்தாலும் ஓகே..இங்க போட்டா கோவிந்தன் கதையோட உங்க கதையும் சேத்து படிச்சு மக்கள் புண்ணியம் சேத்துப்பாங்க :))

/இது நான் சென்னைல படிக்கும் போது நடந்தது நான் டி.எம்.இ முதல் வருஷம் அவங்க (?) MBBஎஸ் இரண்டாம் வருசம் //

வயசுல பெரியவங்களோ?? கணக்கு இடிக்குதே?

ம்ம்..அப்புறம்

மகேந்திரன்.பெ said...

//வயசுல பெரியவங்களோ?? கணக்கு இடிக்குதே//

கப்பி எனது நூலகத்தோட கதைல படிச்சு பாரு நான் பிளஸ் டூ வே ரெண்டு வருசம் படிச்சேன் :)

மகேந்திரன்.பெ said...

நானும் காதல் கவிதை ரசினிகாந்து கணக்கா போயி அந்த வண்டில இருக்க கிக்கரை திருப்பி(அதுல அப்ப செல்ப் ஸ்டார்ட் வேலை செய்யலை) பஜாஜ் ஸ்டார்ட் பன்னுர வாக்குல திரும்பி நின்னு விட்டேன் ஒரு உதை மெதுவாத்தான் என் நல்ல நேரமாட்டுக்கு அது காலோட வந்திருச்சி

மகேந்திரன்.பெ said...

என்னடா இது ஆளையே கானோம்? கப்பி ஏஏஏஏஏஏஏஏஏஏஏஎ கப்பி எங்கயாவது லத்தீன் பிகர பாத்துட்டயா?

மகேந்திரன்.பெ said...

நாளைக்கு இதையே ஒரு தனிப்பதிவா போடலாம் ஏன்னா அவங்க இதை படிச்சா ரொம்ப ரசிப்பாங்க நான் இன்ன்மும் அவங்க ப்ரண்டு