இது நடந்தது 16.06.2006 இல் ஆனால் வலையிலும் வெளியிலும் யாரும் இதை கண்டுகொண்டதாக தெரியவில்லை. நான் உடன் இருந்து பழகிய ஒரு நல்ல மனிதாபிமானி எனும் அளவில் இதை தெரிவிக்கும் கடமை உண்டெனக்கு. ஆம். தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடமும் தன் முத்திரை குத்தும் டைமிங் வசனங்களும் மூடப் பழக்க வழக்கங்களை தனது நகைச்சுவை நடிப்பில் எப்போதும் தாக்கி வந்த, பழமை வாதிகளுக்கு தனது பேச்சிலேயே பட்டப்பெயர் சூட்டி மகிழ்ந்த நம்மை சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனது நடிப்பால் மகிழ்வித்த திரு. கவுண்டமணி அவர்களின் மகள் திருமணம் சென்னையில் 16.06.2006 இல் நடந்தது. கமல், விஜயகாந்த், செந்தில், சத்யராஜ் மற்றும் ஏறக்குறைய எல்லா நட்சத்திரங்களும் வந்திருந்து வாழ்த்தி மகிழ்ந்தனர். கவுண்டமணியின் முகத்தில் இருந்த மகிழ்ச்சி இது தான் ஒரு குடும்பத்தலைவனின் மகிழ்ச்சி என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. நாளாகிப் போனாலும் வாழ்த்துகிறோம். தம்பதிகள் எல்லா மகிழ்ச்சிகளையும் பெற்று பெருவாழ்வு வாழட்டும் !

13 comments:

கோவி.கண்ணன் said...

கவுண்டர் சீக்கரமே தாத்தாவாக ஆகி அவர் பேரனோ பேத்தியோ வந்து செமத்தியாக அவரை உதைக்க வாழ்த்துக்கள்.

மகேந்திரன்.பெ said...

நன்றி கோவி.கண்ணன்... அவருடன் பழகிய வரையில் திரையுலகின் நல்ல மனிதாபிமானி அவர்....
ஆமா நீங்க போலீஸ்காரரா? ஜூனியர் விகடன்ல ஒன்னு படிச்சேன் :))))

(துபாய்) ராஜா said...

மகி!கோவி.கண்ணனின் வாழ்த்தை நானும் வழிமொழிகிறேன்.

மகேந்திரன்.பெ said...

உதை கொடுத்த கவுண்டமணியார் அப்புறம் எப்போதுதான் உதை வாங்குவதாம்?..... எப்படியிருந்தாலும் பேரன்/பேத்தி உதைப்பது எத்தனை சந்தோசமான விஷயம் ? நன்றி துபாய் ராஜா

Sivabalan said...

மனமக்களை வாழ்த்துக்கிறேன்.


//தன் முத்திரை குத்தும் டைமிங் வசனங்களும் மூடப் பழக்க வழக்கங்களை தனது நகைச்சுவை நடிப்பில் எப்போதும் தாக்கி //

இது உண்மைதான்.

மகேந்திரன்.பெ said...

உண்மை சிபா அவரின் எல்லா படங்களிலும் மூட நம்பிக்கைகளை சாடியிருப்பார் நாம் நகைச்சுவையை மட்டும் கவணிப்பதால் அதை கவனிக்க மறந்துபோகிறோம்

நிலா said...

ஓ... இந்தப் பதிவினை முன்னமே பார்க்கவில்லை.... கவுண்டருக்கும் தம்பதியினருக்கும் வாழ்த்துக்கள்

கவுண்டமணி வாழ்க என்று பதிவு போடுமளவுக்கு அவரின் தீவீர ரசிகை நான்:-)

மகேந்திரன்.பெ said...

கவுண்டமணி என்னும் நடிகரை விட கவுண்டமணி எனும் மனிதனை மிக நெருக்கத்தில் இருந்து பார்த்தவன் என்பதால் எனக்கு இதை படித்ததும் தெரியப்படுத்தவேண்டும் என்ற ஆவல் உண்டானது . நானும் அவரின் ரசிகனே. என்னைபோல் நீங்களும் என்கையில் மகிழ்ச்சி நன்றி நிலா

கப்பி பய said...

தம்பதியினருக்கு வாழ்த்துக்கள்!

சில வாரங்களுக்கு முன் fwd-ல் இந்த புகைப்படத்தைப் பார்த்தபோதே மகள் திருமணத்தில் கவுண்டரின் எளிமையான அசால்டான கெட்டப் இம்ப்ரெஸ் பண்ணிடுச்சு :)

தமிழ் பாட்காஸ்டர் said...

மகேந்திரன்,

கவுண்டமணியின் நகைச்சுவை பற்றி அனைவரும் அறிவோம். அவரது மனிதாபிமானம் பற்றி அறிந்துகொள்ள வாய்ப்பு குறைவே. அவரது பேட்டியோ, நேர்காணலோ எந்த ஊடகத்திலும் வந்ததில்லை. நீங்கள் அவருடன் பழகியவர் என்பதால் அதற்குரிய நிகழ்ச்சிகளைச் சொன்னால் நாங்களும் மகிழ்வோமே...

மகேந்திரன்.பெ said...

//எளிமையான அசால்டான கெட்டப் இம்ப்ரெஸ் பண்ணிடுச்சு//

நன்றி கப்பி , கவுண்டரையும் செந்திலையும் மிக அருகில் இருந்து பார்த்தவன் நான் சுமார் ஒன்றறை ஆண்டுகாலம் பத்து ஆண்டுகளுக்கு முன்னால். எனக்குத் தெரிந்த கவுண்டர் செந்தில் இருவரையும் சினிமாவில் பார்க்கவே முடியாது. அது வேறு உலகம் கவுண்டர் ஒரு சமயத்தில் ஒரு செட்யூலுக்கு இவ்வளவு தொகை என்று வாங்கிய போதும் வீட்டில் அவரின் எளிமை அபாரமானது. அதே போல் செந்திலும் பார்க்கும் முதல் பார்வையில் ஒட்டிக்கொள்ளும் தன்மை கொண்டவர்கள்

//அதற்குரிய நிகழ்ச்சிகளைச் சொன்னால் நாங்களும் மகிழ்வோமே...//
நன்றி தமிழ்பொட்காஸ்டர், விரைவில் ஒரு பதிவு எழுதுகிறேன்

மகேந்திரன்.பெ said...

நிலா
என்னால் இயன்ற அளவு உதவுகிறேன் ஆனால் நிறைய விஷயங்களுக்கு நான் மிகச் சரியான தகவலினை தர இயலுமா எனத் தெரியவில்லை ஏனென்றால் நான் அவ்ருடன் இருந்தது சுமார் 1996ல் இப்போது நிறைய ஞாபகத்தில் இல்லை என்னால் முடிந்தவரை உதவுகிறேன்
நன்றி

PRABHU RAJADURAI said...

சாருநிவேதிதா தனது கோணல் பக்கங்களுடன் கவுண்டமணியுடனான தனது அனுபவம் ஒன்றினை எழுதியிருக்கிறார். அதனை படித்ததில் இருந்து எனது மதிப்பில் அவர் உயர்ந்துள்ளார்...மேலும் கவுண்டர் என்பது அவரது ஜாதியினை குறிப்பதல்ல என்பதையும் அறிகிறேன்.