எல்லோரும் சபரிமலை தந்திரி ஜெயமலா சிதம்பரம் கோவில் சிக்கல்னு பொங்கி புன்னாக்கா போற வேளையில இப்ப இந்த திருப்பதி மேட்டர். என்ன பன்ன எதாவது பரபரப்பா எழுதி கெட்ட பேரு வாங்கறதே நம்ம பொழப்பா போச்சு

அதனால மக்களே இது எதுவும் என்னோட தப்பில்ல. எனக்கு வந்த சேதியை அப்படியே போடப் போறேன் படிச்சுட்டு நீங்களும் அடியுங்க.

ஏழையோ பணக்காரனோ. நல்லவனோ கெட்டவனோ கடவுளை நம்புகிர யாரும் அவர்கள் எதையும் காணிக்கையக செலுத்த தயாராகிவிடுகின்றனர். நரபலி பெயரில் உயிர் முதல் மொட்டை என்ற பெயரில் மயிர் வரை. திருப்பதி. மிகவும் பரபரப்பாக எப்போதும் இருக்கும் ஒரு புனித தலம்.

உலகின் மிகப் பணக்கார சாமி. இங்கே நடக்கும் செயல்கள் அத்தனையும் வரும் பக்தர்கள் மற்றும் தேவஸ்தான துனையுடனே நடக்கிரதாம். இது குறித்த சில செய்திகள் இனி....

சென்ற ஆண்டு ஏறுமதி செய்யப் பட்ட முடி 90800 கிலோ இதன் மூலம் பாலாஜிக்கு வருமானம் 33.34 கோடி. உலகிலேயே முடி ஏற்றுமதியில் இந்தியா முத்யலிடத்தில் இருக்க பாலாஜியே காரணம். 665 முடி திருத்துவோரும்(மொட்டை அடிக்கத்தான்) அவர்களில் 20 பெண்களும் சேர்ந்து அடிக்கும் மொட்டை நாளுக்கு 20000.

இருபதாயிரம் தலைகளில் இருக்கும் முடிகள் சேகரிக்க தனியாக வேலை ஆட்கள். பாலாஜிக்கு காணிக்கை வருவதைக் கூட அவர் வைத்துக்கொள்ள வில்லை அதையும் வித்து காசாக்கி விடுகிறார். திருப்பதி முடிகள் அதிகம் ஏற்றூமதியாவது சீனாவுக்கும் ஹாலிவுட்டுக்கும் ஆம் ஏஞ்சலினா ஜோலியில் இருந்து ஜெனிபர் அனிஸ்டன் வரைதிருப்பதி விக்குக்கு வாடிக்கையாள்ர்கள்.

திருப்பதியிலேயே சுத்தம் செய்து கலர், நீளம், சுருள், என்று வகைபிரித்து தனி கண்டெய்னர்களில் அனுப்பிவிடுவர்கள். அங்கே வேலை செய்யும் மொட்டை அடிப்பவர்களுக்கு மாதம் 9000 சம்பளம் அது மட்டுமின்றி நம் பணக்கார பக்தர்கள் மற்றும் மொட்டை போட்ட பொடப் போகிறவர்கள் கொடுக்கும் சில அன்பளிப்புகளிலும் வருமாணத்துக்கு பஞ்சமில்லை.

இதுவும் அப்படியே விற்கப்படுவதில்லை. ஏலத்தில் விட்டு ... 16 அங்குலத்துக்கு மேல் இருக்கும் முடிக்கு கிலோ 9950 ரூபாய் வரை போகும். 8லிருந்து 15 அங்குலத்துக்குள் இருப்பது 3300 ரூபாய் கிலோ. கொஞ்சம் என்போன்ற தலைகளுக்கு (முடிகளுக்கு) 11.50 தான் ஒரு கிலோ. அதிலும் கருப்பை விட செம்பட்டை முடிகளுக்கு ரேட் அதிகம் 10500/கிலோ இதில் நீளமாக இருக்கும் முடிகள் போக விக்குக்கு ஆகாது எனப்படும் குட்டை, உடைந்த, முடிகள் எல்லாம் சீனாவுக்கு அதிக அளவில் ஏற்றுமதி யாகின்றன....

எதற்கென்றால் அதில் இருந்து சாக்லேட் மற்றும் சில இனிப்புகளில் கலக்க பயன்படும் இயற்கை சேர்ப்புக்களுக்காக இதில் இருந்து சில கிடைக்கிறதாம் அதற்காக. .....இனிமேல் மொட்டை அடிக்க போனால் லட்டு இலவசமாக கிடைக்குமா என்று கேளுங்கள்.

உங்கள் முடிகளை விற்றுத்தான் காசு வருகிறதே லட்டு இலவசமாக தந்தால் பாலாஜி ஒன்றும் பிச்சாண்டி ஆகிவிட மாட்டர் .....

ஒரு சின்ன சேதி நம்ம ஜெனிபர் அனிஸ்டன் வச்சிருக்கிற விக்கோட விலை என்ன தெரியுமா? 4000$ கணக்கு போடுங்க இனிமே......

29 comments:

கோவி.கண்ணன் said...

ஒரு முடி'வோடத் தான் இருக்கிங்கப் போல ... உயிரக் கொடுத்த சாமிக்கு ... குடுக்காட்டி எப்படி ?
:))

Anonymous said...

பாலாஜியை ஓட்டாண்டியாக்க உத்தேசமா ?

மகேந்திரன்.பெ said...

//ஒரு முடி'வோடத் தான் இருக்கிங்கப் போல //

ஜிகே முடி'ஓடத்தான் இருக்கேன் துபாய் தண்ணி அப்படி :)

//உயிரக் கொடுத்த சாமிக்கு ... குடுக்காட்டி எப்படி //

அது சரியான பேச்சு.. ஆமா நம்ம கப்பிய இன்னும் காணோமே?

மகேந்திரன்.பெ said...

//பாலாஜியை ஓட்டாண்டியாக்க உத்தேசமா //

அட நம்ம(பாலாஜியோட)பக்தர்களுக்கு ஒரு லட்டு காச மிச்சம் பன்ன என்னால் ஆன உதவி இதைபோயி குத்தம் சொன்னா நான் என்ன பன்ன?

G.Ragavan said...

சாக்லேட்டுல முடி சேக்குறது முன்னாடியே தெரியும். சைனால மட்டுமில்ல எல்லாவூருலயுந்தான். வெளிநாட்டுச் சாக்லேட்டுன்னாலே அப்படித்தான். ஆனாலும் பாருங்க...அப்பப்ப சாக்லேட்டு கேக்குதே நாக்குக்கு.

Mouls said...

They are giving free laddu, Looks like you never visited or never got a chance to get that. If the other Prasadam's (Puliyodhara, Sweet Pongal etc) are over, they will start the laddu distribution, but it will be small in size as compared to the one that we pay and get.....hehehehe

கப்பி பய said...

யப்பா..மகி..

இந்த பதிவைப் படிச்சுட்டு என் கையில முடியெல்லாம் சிலிர்த்துட்டு நிக்குது..
:))

மகேந்திரன்.பெ said...

//அப்பப்ப சாக்லேட்டு கேக்குதே நாக்குக்கு.//

உங்களூக்குமா :))

ஜீராதான...
ஜீராதான் பிடிக்குமுன்னு இருந்தேன்

மகேந்திரன்.பெ said...

//Looks like you never visited or never got a chance to get that//

yes i never, but if go there it will be a riot there :))

மகேந்திரன்.பெ said...

//சிலிர்த்துட்டு நிக்குது..//


பாத்து கப்பி உருகுவே சிங்கமுன்னு உள்ள தூக்கி வச்சிடப் போறாங்க

Vajra said...

மகேந்திரன்,

திருப்பதி ஒரு முறை சென்று விட்டு வந்து எழுதவும்...

3 வேளை சாப்பாடு கூட உண்டு..தெரியுமா..? தரிசனம் முடிந்த கையுடன் டோக்கன் வழங்கிக் கொண்டிருப்பார்கள்...சாப்பாட்டுட் டோக்கன் தான்...அவர் சொல்லும் விலாசத்தில் போய் கொடுத்தால் சாப்பாடு இலவசம்...

கீழ் திருப்பதியிலிருந்து மேலே போய், குழித்து, சாப்பிட்டு சாமி கும்பிட்டு திரும்பிவர ஒரு பைசா செலவில்லாமல் சென்று வரலாம்...!!

இந்துக்கள் நம்பிக்கையை கிண்டல் செய்யவில்லை என்றால் உங்களுக்கு தூக்கம் வராதா?

சரி, உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் கோவிலிலிருந்து வரும் முடியை வாங்காதீர்கள் என்று ஹாலிவுட்டில் போய் கொடி தூக்குங்கள்..அல்லது சீனாவுக்குப் போய் கொடி தூக்குங்கள்...என்ன ? செய்வீர்களா?

மகேந்திரன்.பெ said...

அது சரி..

//திருப்பதி ஒரு முறை சென்று விட்டு வந்து எழுதவும்... //

வஜ்ரா சங்கர் அவர்களே ஆலோசனைக்கு நன்றி .

//இந்துக்கள் நம்பிக்கையை கிண்டல் செய்யவில்லை என்றால் உங்களுக்கு தூக்கம் வராதா?//

இந்துக்களின் நம்பிக்கை இங்கே எந்த இடத்தில் எல்லாம் கிண்டல் செய்யப் பட்டுள்ளது என்று தெளிவாக விளக்குவீர்களா?

//என்ன ? செய்வீர்களா? //
எனக்கு நம்பிக்கை இல்லை இருகிறது
அது வேறு இதில் இருக்கும் செய்திகள் பொய்யா ?

Muse (# 5279076) said...

வஜ்ரா,

என்ன இது? சாமி பெயரைச் சொல்லி பணம் சம்பாதிப்பது தவறில்லையா?

எத்தனையோ ஏழைகள் இந்தியாவில் சாப்பாட்டிற்கே வழியில்லாமல் இருக்கிறார்கள். அவர்களது குடும்பங்களை வாழ வைக்க அரபு நாட்டில் சம்பாதித்த பணத்தையெல்லாம் தானம் செய்துவருகின்ற நாங்கள் இந்தக் கேள்விகூட கேட்கக்கூடாது என்று கூறுகிற உங்களது திட்டம் எங்களுக்குத் தெரியாது என்று நினைத்தீர்களா?

மகேந்திரன்.பெ said...

//குடும்பங்களை வாழ வைக்க அரபு நாட்டில் சம்பாதித்த பணத்தையெல்லாம் தானம் செய்துவருகின்ற நாங்கள் //

வாங்க ம்யூஸ் இதென்ன திடீர்னு உள்குத்து ஆனாலும் குரும்பு...

அட அந்த மாதிரி குடுத்தா இஸ்ரேல்காரங்க குண்டு போடறதை நிருத்துவானா நாங்க தற்றமுங்க.

மகேந்திரன்.பெ said...

ஒருத்தர் வந்து வீராப்பா சவால் விட்டாரு ஆளையே கானோமே யாராவது இஸ்ரேல் பக்கம் பாத்தா அனுப்பி வைங்கப்பா:))

சந்தோஷ் aka Santhosh said...

//உங்கள் முடிகளை விற்றுத்தான் காசு வருகிறதே லட்டு இலவசமாக தந்தால் பாலாஜி ஒன்றும் பிச்சாண்டி ஆகிவிட மாட்டர் .....//
அவர்கள் தான் பல இலவச சேவை செய்துகொண்டு வருகிறார்களே. ஏன் லட்டை காசு குடுத்து வாங்கிட்டா நீங்க ஒண்ணும் பிச்சாண்டி ஆக மாட்டிங்க இல்ல. ஏன் எங்க போனாலும் இலவசத்தை எதிர் பாக்குறீங்க. அதுல இருந்து வருகிற பணத்தில் தானே அவங்க அங்க இருக்கிற Infrastructure எல்லாம் கவனிக்கிறாங்க.

மகேந்திரன்.பெ said...

இன்ப்ரா ச்டரக்சருக்கு எவ்வளௌ செலவு ஆகுது? லட்டு குடுத்தா என்னா ஆகும்? இலவசம் இல்லீங்க அதான் ஆளுங்க முடியக்கூட விடாம விக்கிறமே லட்டு இல்வசமா கொடுத்தா என்ன?

Vajra said...

மகேந்திரன்,

உங்களுக்கு என்ன வேணும்...லட்டு தானே...அதுவும் இலவசமா...

ஏற்கனவே கொடுக்கிறார்கள்...அதற்காகத்தான் ஒரு முறை சென்று பார்த்துவிட்டு வரவும்...என்று சொன்னேன்..
//
மொட்டை என்ற பெயரில் மயிர் வரை. திருப்பதி. மிகவும் பரபரப்பாக எப்போதும் இருக்கும் ஒரு புனித தலம்.
//

இது கிண்டல் இல்லாமல் என்ன ? பக்தியா ?

அது சரி, அவனவன் நம்பி மொட்டை போட்டுக்கிறான்...உங்களுக்கு ஏன் வலிக்குது... நீங்க வழுக்கையா ?

மகேந்திரன்.பெ said...

//கடவுளை நம்புகிர யாரும் அவர்கள் எதையும் காணிக்கையக செலுத்த தயாராகிவிடுகின்றனர். நரபலி பெயரில் உயிர் முதல் மொட்டை என்ற பெயரில் மயிர் வரை. //

//மொட்டை என்ற பெயரில் மயிர் வரை. திருப்பதி. மிகவும் பரபரப்பாக எப்போதும் இருக்கும் ஒரு புனித தலம்.//

இப்படி பாதியில் படித்தால் எல்லாம் தப்பாகத்தான் தெரியும்

வஜ்ரா மயிரை வேரு எப்படிச்
சொல்ல? உயிர்ப்பலி இல்லை என்கிறீர்களா? நரபலி செய்திகளை படிக்கவே யில்லையா? லட்டு போடுவது இலவசம் என்று இங்கே எத்தனை பேருக்கு தெரியும்? கேட்டால் திருப்பதி போயிட்டு வா என்பீர்கள், நீங்கள் இஸ்ரேல் பற்றி எழுதுவதை எத்தனை அளவு நம்புகிற்றீர்களோ அதே அளவுக்கு கடவுள் மறுப்பை பற்றி எழுதவும் எனக்கு உரிமை இருக்கிரது. அதுபோலவே, லெபனான், பாலஸ்தீனமெல்லாம் போய் வந்துதான் அந்த நாடுகளின் செதிகளை பதிகின்றீர்களா? இல்லையே?. லட்டு இலவசம் என்று யார் சொன்னது அது ஒன்றும் உண்டியல் காசில் இருந்து எடுக்க வில்லை, அதற்க்கும் தனியாக வசூல் வேட்டை நடக்கிரது, வேண்டுமானால் அவர்களைன் இணையத்தளத்தில் இருக்கும் உபயம் செய்ய இருக்கும் அட்டவனை பாருங்கள், 25 கிராம் லட்டு ஒரு நாளைக்கு ஒருவர் வீதம் வசூல் செய்துதான் தருகீரார்கள்,

//உங்களுக்கு ஏன் வலிக்குது... நீங்க வழுக்கையா ? //

இதுதான் எனக்கு பிடிக்காத ஒன்னு நான் எதைப்பத்தி பேசரஓ அதைப் பத்தி பேசனும் நான் மொட்டையா இல்லை முடியான்னு ஒங்க கவலையெல்லாம் வேலைக்கு ஆகாது

மகேந்திரன்.பெ said...

என் கேள்விக்கென்ன பதில்?

லக்கிலுக் said...

தலைவா!

எப்பிடி இந்த மாதிரி நியூஸ் எல்லாம் கேதர் பண்ண முடியுது?

மகேந்திரன்.பெ said...

//எப்பிடி இந்த மாதிரி நியூஸ் எல்லாம்//

யப்பா லக்கி நீங்க மட்டுமாவது இதை நியூஸ்தான்னு ஒத்துகிட்டீங்களே நான் பதிவு போட்டதுக்கு பலன் இருக்கு.

// கேதர் பண்ண முடியுது? //

அது ரகசியம்

லக்கிலுக் said...

/////வஜ்ரா மயிரை வேரு எப்படிச்
சொல்ல?//////

யப்பா.... சிரிச்சி... சிரிச்சி.... வயிறு வலிக்குது.... மகேந்திரன் கலக்குறிங்க.....

மகேந்திரன்.பெ said...
This comment has been removed by a blog administrator.
மகேந்திரன்.பெ said...

//சிரிச்சி... சிரிச்சி.... வயிறு வலிக்குது.... மகேந்திரன் கலக்குறிங்க..... //

யப்பா லக்கி அவரு ஏற்கனவே கொழம்பிப்போயி இடவெளி எது கமா எது புல்ஸ்டாட் எதுன்னு தெரியாம பொக்கையா சேத்து பின்னூட்டம் போட்டாரு இப்ப இது வேறையா கஷ்டம்தான் :)


http://paarima.blogspot.com/2006/08/blog-post_115563705057645800.html#115566764675892249

மகேந்திரன்.பெ said...

சிரிச்சி வயரு வலிக்குதுன்னு சொன்னவரு அங்க போயி சிங்கமா சீற்றாரு, என்னாச்சி லக்கி? என்ன நடக்குது இங்க? ஒன்னுமே பிரியலே உலகத்தில

aaradhana said...

உங்கள் முடிகளை விற்றுத்தான் காசு வருகிறதே லட்டு இலவசமாக தந்தால் பாலாஜி ஒன்றும் பிச்சாண்டி ஆகிவிட மாட்டர் .....//////
சரியாக சொன்னீர்கள்...

மகேந்திரன்.பெ said...

//பாலாஜி ஒன்றும் பிச்சாண்டி ஆகிவிட மாட்டர் .....//////
சரியாக சொன்னீர்கள்//

பாலாஜி இப்பவே லட்டு பிரியாத்தான் குடுக்காறு இன்ன்முமா அப்புறம் அவர் ஓட்டான்டி ஆயிடுவாருன்னு சொல்றாங்க நீங்க வேற:))

மகேந்திரன்.பெ said...

நன்றி ஆராதனா :)