வெறிநாய்கள் ஜாக்கிரதை !

ஜோஸப் மெய்ஸ்டர் என்பவர் 1885 ஜூலை 4-ம் தேதி ஒரு வெறிநாய் கடியால் கடிப்பட்டார். இங்ஙனம் கடிப்பட்டால் 3 தினங்களில் சாவு நிச்சயம் எனக் கொள்ளலாம். மெய்ஸ்டான் தாய், விஞ்ஞானி லுயிஸ் பாஸ்டரை அணுகினார். அவர் அச்சமயம் வெறிநோய் பற்றி நாய்கள், முயல்கள் மீது பா¢சோதனை செய்து கொண்டிருந்தார். ஜூலை 6-ம் தேதி, அது வரை சோதனைச் செய்யப்படாத ஒரு புது தடுப்பூசி மருந்தை அளித்தார். மெய்ஸ்டர் உயிர் பிழைத்தார். அச்சம் ஊட்டும் வெறிநோய் வெற்றிக் கொள்ளப்பட்டது
நாய்க்கடி என்பது மூளையைத் தக்கும் ஒருவகை நுண்ணுயிரால் (வைரஸ்) ஏற்படும் நோயாகும். அது அதிகமாக நாய்கடியால் ஏற்பட்டாலும் எப்போதாவது அரிதாக பூனைகள், குரங்குகள், ஓநாய், களலும் ஏற்படலாம்.
உலகம் முழுவதும் சுமார் 1 கோடி மக்கள் ஒவ்வோர் ஆண்டும் நாய்கடி தடுப்பூசி போட்டுக் கொள்கிறார்கள். ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் சுமார் 50,000 மக்கள் நாய்க்கடி நோயால் ஒவ்வோர் ஆண்டும் இறக்கிறார்கள். இதில் 20,000 முதல் 25,000 வரை 15 வயதுக்குட்பட்ட சிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.
இந்த நாய்க்கடியில் சுமார் 67% இந்தியாவில் ஏற்படுகிறது. இந்தியாவில் மட்டும் சுமார் 30,000 பேர் நாய்க்கடியால் ஒவ்வோர் ஆண்டும் இறக்கிறார்கள். அதே சமயம் 50 லட்சம் பேர் நாய்க்கடித்த பிறகு தடுப்பூசி போட்டுக்கொள்கிறார்கள். இந்தியாவில் உள்ள நாய்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 2 கோடி!
கடிப்பட்டதில் இருந்து நோய் தொடங்கும் வரையான காலம் 5 நாட்கள் முதல் ஒரு ஆண்டு வரை வேறுபடுகிறது. சராசரியாக இரண்டு மாதங்களில், சதரணமாக இந்த நோய் தொடங்குகிறது.
முதலில், முதல் 2-10 நாட்கள் தெளிவற்ற சில அறிகுறிகள் தென்படும். நோயாளி காய்ச்சல், தலைவலி, பசியின்மை, வாந்தி போன்றவற்றால் அவதிப்படுவார். மேலும் கடிபட்ட இடத்தில் வலி, அறிப்பு, மருத்துப்போதல், நமைச்சல் முதலியன இருக்கும். கடைசிக் கட்டத்தில் நோயாளி விழுங்குவதற்குச் சிரமப்படுவார். சில நோயாளிகள் கலக்கத்துடனும், தடுமாற்றத்துடனும் செயல்படத் தொடங்குவர்.
நோய் வந்த பிறகு இதற்கு வைத்தியம் இல்லை. ஆனால் இந்த நோய் 100% வராமல் தடுக்க தடுப்பூசி உள்ளது.
நாய்க்கடி நோய்க்கு 3 வகையான தடுப்பூசிகள் உள்ளன.
மிருகத்தின் மூ¨ல்திசு அல்லது திசுவிலிருந்து எடுத்த தடுப்பூசி மருந்து (NTV)
ஏ.வியன் தடுப்பூசி (AV)
திசுக்களில் இருந்து பண்ணிய தடுப்பூசி (TCV)
திசுகளிலிருந்து உண்டு பண்ணிய தடுப்பூசியால் பல நன்மைகள் உள்ளன.
கடிபடுவதற்கு முன்பே, எச்சா¢க்கையாக எடுத்துக்கொள்ளும் சிகிச்சை முறைக்கும், கடிபட்ட பின் செய்யும் சிகிச்சைக்கும் இது மிகவும் பயனளிக்கிறது. மிகவும் குறைந்த வலி உடையது. மிகக் குறைந்த அளவு மருந்தே தேவைப்படும். வயிற்றில் ஊசி போட தேவை இல்லை.
நாய்க்கடி நோயின் தாக்குதல் ஏற்படக்கூடிய நிலையில் எவ்வளவு சீக்கிரம் இம்மினோகுளோபிளினும் ஒரு தடுப்பூசியும் எடுத்துக் கொள்ள வேண்டும். அன்றிலிருந்து 3, 7, 14, 28, 90-வது நாட்களில் மேலும் 5 தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள வேண்டும்.
நாய்க்கடி நோயின் தாக்குதல் ஏற்படக்கூடிய நிலையில் எத்தனை விரைவாக முடியுமோ அத்தனை விரைவாக மருத்துவ உதவி நாடவேண்டும்.
உடனடியாக, நாய்க்கடி உள்ள இடங்களையும், நகத்தால் பிராண்டிய இடங்களையும் கவனித்துச் சுத்தப்படுத்த வேண்டியது மிக மிக முக்கியமானதாகும், இது முதலாவதாகவும் செய்ய வேண்டியது ஒன்று.
காயம் பட்ட இடங்களையும், அவற்றைச் சுற்றியுள்ள இடங்களையும் உடனேயே குழாயின் கீழ் ஓடும் நீ¡¢ல் நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். நிறைய சோப்பும் நீரும் உபயோகிக்கவும்.
அதன் பின்னும் இருக்கக் கூடிய கிருமிகளை செயலிழக்கச் செய்ய டிஞ்சர், ஆல்கஹால், டெட்டால், சாவலான் போட்டுக் கழுவ வேண்டும்.
எ¡¢ச்சல் உண்டக்கக்கூடிய செடிகளின் சாறுகள், காப்பிப்பொடி, மிளகாய்ப் பொடி, உலோகங்கள், அமிலங்கள், சுண்ணாம்பு போன்றவற்றைத் தடவக்கூடாது.
கடிப்பட்ட இடத்தைத் தையல் இட்டு உடனடியாக மூடக்கூடாது.
மருத்துவரை உடனே அனுகவும்.
முடிந்தால் கடித்த விலங்கைப் பிடித்து, தனி அறையில் இட்டு, பத்து நாட்கள் உன்னிப்பாகக் கவனித்து, அதற்கு வெறிநோய்க்கான அறிகுறிகள் தோன்றுகின்றனவா என்று பார்க்க வேண்டும்.

நன்றி -குழந்தை மருத்துவர், சைல்ட் டிரஸ்ட் மருத்துவ மனை,
www.attur.com

UAE (அமீரக) நாய் இதுதான்


நான் பேச நினைப்பதெல்லாம்..திருந்த மாட்டீங்களாடா?

லக்னோவில் உள்ள ஹரிபுர் காரியா என்ற கிராமத்தில் ஒரு பாபா கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கடந்த வாரம் காவி உடையுடன் ஒரு சாமியார் வந்தார்.

கோவில் அருகே இருந்தபடி அவர் பக்தர்களுக்கு ஆசி வழங்க ஆரம்பித்தார். அவரது பெயர் ஈசாலுல்லா என்ற கன்சா பாபா ஆகும்.

தொடக்கத்தில் இவரை யாருமே கண்டு கொள்ள வில்லை. தன்னிடம் ஆசிர்வாதம் பெற வரும் பக்தர்களிடம் `பூ' கொண்டு வரும்படி கூறிவந்தார். அதன்படி சிலர் பூ கொண்டு வந்து கொடுத்து அவரது பாதத்தில் வைத்து வணங்கினர். அவர் அந்த பூவை எடுத்து பக்தர்களிடம் திரும்ப தரும்போது ரூ.500 நோட்டுத்தாளாக மாறியது.

இதைக்கண்டு மெய் சிலிர்த்துபோன பக்தர்கள் அக்கம் பக்கத்தாரிடம் சொல்ல, இப்போது கன்சாபாபா முன்பு நீண்ட கிï வரிசையில் கூட்டம் கூடி நிற்கிறது.

அந்த கிராமம் முழுவதும் `` ஜெய் கோ கன்சா பாபா கீ'' என்ற குரல் முழங்குகிறது.

அவர் மாயாஜாலம் நிகழ்த் துகிறாரா! போலிச் சாமியாராப பூ எப்படி பணமாக மாறுகிறது என்பது பற்றி யாரும் கேள்வி

கேட்கவில்லை.பணத்தை வாங்கிகொண்டு போய் உடனடியாக செலவழித்து வருகின்றனர். இதற்கு காரணம் ரூபாய் நோட்டு மாயமாக மறைந்து விடக்கூடாது என்ற பயம் தான்.

இதற்கிடையே அங்குள்ள நடுநிலைப்பள்ளி ஆசிரியர் ரோசன்லால் என்பவர் இந்த சாமியார் குறித்து விசாரணை நடத்தவேண்டும் என்று போலீசில் புகார் கூறியுள்ளார்.

ஏற்கனவே இதுபோல் ஒரு சாமியார் வந்து நோயைக் குணப்படுத்துவதாக கூறி பிரம்பால் ஒரு சிறுவனை அடித்தபோது அவன் இறந்துவிட்டான். அதேபோல் மற்றொரு சாமியார் தண்ணீரில் விபூதி கலந்துகொடுத்து ஒருபெண் காணாமல் போய்விட்டார். அதேபோல் இவரும் போலிச்சாமியார் தான் என்கிறார் அவர்.

இதுகுறித்து கஞ்சா பாபா கூறும்போது ``நான் கடவுளின் அவதாரமாக வந்திருக்கிறேன். என்னிடம் உண்மை இருக்கிறது. ஏழைகளை சந்தோசப் படுத்தவே நான் இங்கு வந்துள்ளேன். என்னை எப்படி வேண்டுமானாலும் சோதித்துக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

அந்தப் பகுதியை சுற்றிலும் வங்கிகளோ, ஏ.டி.எம். மையங்களோ கிடையாது. இந்த நிலையில் பணம் தரும் சாமியாரை பலர் `ஏ.டி.எம். பாபா' என்று அழைக்கத் தொடங்கி உள்ளனர். பாமரர்கள், படித்தவர்கள் என அனைவருமே கன்சா பாபாவிடம் ஆசிர்வாதம் பெற்றுச்செல்கிறார்கள்.

பக்தர்களுக்கு பணம் தரும் இந்த நவீன சாமியாரால் எட்டுபட்டி சுத்துக்கும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஏராளமான பேர் `எங்க ஊருக்கு வாங்க பாபா' என்று அவரை அன்புடன் அழைத்து வருகின்றனர்

(கண்டிப்பாக 2020 இந்தியா வல்லரசாகிவிடும் என்ற பயத்தில் சீனா அந்த ஆசாமியை நேபாளம் வழியே கள்ள பாஸ்போர்ட்டில் கடத்த முயற்ச்சிப்பதாக காற்றுவழி தகவல் தெரிவிக்கிறது)
இத் தொடர்ப் பதிவின் முதல் பாகம் இங்கே

மக்கள் மனசு என்ற பெயரில் தினகரனில் ஒரு தொடர் கருத்துக் கணிப்பு வெளியிடப் பட்டது. அதில் திமுகவில் யாருக்கு ஆதரவு அதிகம் எனப்பொருள்படும் விதமாக வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்பின் முடிவு அழகிரி மிகக் குறைவான அளவே ஆதரவோடு இருக்கிறார் எனச் செய்தி வெளியிட்டது. மதுரையில் அழகிரியின் ஆதரவாளர்கள் நடத்திய வன்முறைத் தாக்குதலில் தினகரன் அலுவலகம் கொளுத்தப்பட்டு மற்ற மூன்று ஊழியர்களும் பரிதாபமாக உயிர் இழந்தனர்.

தமிழகம் கொந்தளித்தது. அழகிரியை தூக்கில் போடு என்பதைத் தவிற ஏனைய பிற சொல்லாடல்களோடு தனது சொந்தசெலவில் சூனியம் வைத்துக்கொள்ளும் வேலையை செவ்வனே செய்ய ஆரம்பித்தது சன் டி,வி.
தயாநிதி மாறன் முதல் கட்சியின் கடைசித் தொண்டன் வரை இந்த விவகாரம் தயாநிதிக்கே பூமாரங்காய் வந்து தாக்கும் எனத் தெரிந்திருக்க வில்லை. ஆனால் அதற்கான வேலைகளை தயாநிதிமுன்வந்து செய்தார் என செய்திகள் வெளியானபோது யாரும் நம்பவில்லை.
அழகிரியின் செயலை அன்போடு கண்டித்த திமுக தலைமை, வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்து சன். நிறுவனத்தின் வாயை முதலில் அடைத்தது.

உள்துறைச் செயலரை மிரட்டியது முதல் கட்சியின் அமைதிக்கு குந்தகம் விளைவித்தது வரை திமுக செயற்குழுவால் பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப் பட்ட தயாநிதி அமைச்சர் பதிவியை தானாக துறந்தார். திமுக காரனாக பிறந்தேன் திமுக காரனாகவே இறப்பேன் என தாத்தாவுக்கு ஒரு சூசகத் தகவலைஅனுப்பியதோடு தனது பக்க செயல்பாடுகளை ஓரம் கட்டினார்.

அதன்பின் கட்சியில் அழகிரியை முன்னிலைப் படுத்த ஏதுவாக மதுரை இடைத்தேர்தல். திமுகவின் அங்கீகரிக்கப்பட்ட தேர்தல் பொருப்பாளராக வலம் வந்த அழகிரி தன் சாதூர்யமான காய் நகர்த்தல்களில் திமுக கூட்டணிக்கு வெற்றி தேடித் தந்ததோடு மதுரை மக்கள் ஆதரவு தனக்கு இன்னும் இருப்பதை தெளிவுபடுத்தினார்.

இந்த செய்திகளின் பின்னால் எந்த ஒரு இடத்திலும் திமுக தலைவராக வருவதற்கான சாத்தியக்கூறுகளை நம்மால் தயாநிதியிடம் காணமுடியவில்லை. கட்சித் தலைமையிடம் நெருக்கமாக இருக்கும் ஒரே சாதகத்தினைக் கொண்டு அவர் தாந்தோன்றித் தனமாகவும் தன்னை விட மூத்த தலைவர்களை கொஞ்சம் ஏளனமாக நடத்தியதாகவும் கூறப்படும் குற்றச் சாட்டுக்களுக்கு எல்லாம் காரணகர்த்தா ஆற்க்காட்டார் என இப்போது செய்திகள் வருகின்றன.

கலாநிதிமாறனின் பணபலமும், ஊடக பலமும், தயாநிதி மாறனின் ஆளுமைத் திறமையும் மட்டுமே ஸ்டாலின் இடத்தை திமுகவிடம் இருந்து பறித்து தயாநிதியிடம் கொடுத்துவிடப் போதுமானதில்லை. அனாமதேயமாக ஸ்டாலின் மேல் சுமத்தப் படும் சில குற்றச்சாட்டுகளுக்குள் நுழைந்து பார்க்காமல் ஸ்டாலினை நோக்கினால் கட்சியில் ஸ்டாலின் பங்கு என்னவென்று விளங்கும்.

கல்லூரி காலத்தில் மிசா கைதில் ஆரம்பித்த ஸ்டாலினுடைய கட்சிப் பிரவேசம் தயாநிதிபோல பதவியை கட்சியின் சுகபோகங்களை உள்ளே வந்தவுடன் அனுபவித்துவிடவில்லை. அவரும் அதற்கு தயாராக இல்லை. அடிமட்டத் தொண்டனான தன்னை திமுக தலைமைக்கு தகுதியுடையவராக தன்னை மாற்றிக்கொள்ளும் அளவுக்கு அவருக்கு பொருமையும் அவகாசமும் கடந்த முப்பது ஆண்டுகாலங்களில் கிடைத்திருக்கிறது. வாரிசு அரசியல் எனப் பரப்பப்படும் எந்த குற்றச்சாட்டுக்களும் ஸ்டாலினுக்கு பொருந்தாது.

(தொடரும்)....
கலைஞருக்குப் பிறகு திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு யார் தலைவராக வரவேண்டும் என்ற விவாதம் இப்போதே ஆரம்பித்துவிட்டதை நினைத்தால் கொஞ்சம் வியப்பாய் இருகிறது. ஆனால் இது ஒன்றும் புதிய விசயம் இல்லை.

எல்லா கட்சிகளையும் போலவே திமுகவிலும் குழுக்கள் இருப்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அப்படி தனியாக குழு அதன் பின் கட்சி என்றபின் அதில் மாபெரும் வெற்றி கண்டவர் எம் ஜி ராமச்சந்திரன் மட்டுமே. காரணம் அவரின் கட்சியினரோடான நெருக்கம். " கலைஞர் பேனாவால் மூளையை தீண்டுபவர் என்றால் எம்ஜிஆர் வாய் வார்த்தையால் வயிற்றை தொடுபவர். ஏழைகள் நிறைந்த இந்த மாநிலம் எம்ஜிஆரின் வார்த்தைகளுக்கு தாரை வார்க்கப் பட்டது அப்படித்தான்.

அதன் பின் குறிப்பிடத் தகுந்த அளவில் கட்சியின் உணர்வுகளை கிளப்பி விட்டு கிளம்பிச் சென்றவர் நம் அன்புச்சகோதரியின் அவசர கால அண்ணன் வைகோ. அவரின் மாபெரும் வெற்றி (?) பற்றி நான் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை.

அந்த வரிசையில் சமீப காலத்தில் எல்லா வகையிலும் புயலைக் கிளப்பியவர் மறைந்த மாறனின் இளைய புதல்வர் தயாநிதி மாறன். கட்சிக்குள் தந்தையின் மறைவுக்குப் பின் கலைஞரின் பாசம் மட்டுமே தகுதியாய் கொண்டு, கொண்டு வரப்பட்ட புது முகம் மத்திய சென்னையின் மாபெரும் வெற்றிக்கு கருணாநிதியின் பேரன் என்ற ஒரு தகுதி மட்டுமே போதுமானதாய் இருந்தது. யாருக்கும் தயாநிதியின் பிற ஆளுமைத் தகுதிகள் பற்றிய கேள்வி எழுந்திடவில்லை.

மத்திய அமைச்சரவையில் சக்திமிக்க துறை. சுட்டும் விரலசைவில் சுதந்திர கட்டளைகள் என மிகச் சுதந்திரமாக அனுமதிக்கப் பட்ட எல்லா வழிகளையும் கையாண்டு தகவல் தொழிநுட்பத் துறையில் இதுவரை இருந்த எந்த அமைச்சரையும் விட மிகச் சிறப்பான பணிபுரிய மென்மேலும் கிரீடங்கள் என ஒப்பந்தங்கள் வந்து குவிய அதில் அவரின் சீறிய முயற்சியில் தமிழகத்துக்கும் ஒரு பங்கு கிடைத்தே வந்தது.

எங்கே போனாலும் கலைஞரின் ஊன்று கோலாய் இருந்த ஆற்காட்டார் கொஞ்சம் நம் கண்களில் இருந்து மறைய ஆரம்பித்தார். இளம் கன்றாய் கார்பொரேட் காஸ்ட்யூமில் தயாநிதி தாத்தாவின் எல்லா அசைவுகளுக்கும் அர்த்தம் கொடுக்கும் தலைந்கர தி.முக.வின் இன்னொரு முகமானார்.

கலாநிதி மாறன். முறசொலி மாறனின் மூத்த மகன். தந்தை வழியில் அரசியலுக்குள் வராமல் சரியான காலகட்டத்தில் பூமாலை என்ற ஒரு குட்டியூண்டு விடியோ செய்திப் பிரிவு அனுபவத்தில் ஆரம்பித்த சன் டிவி எனும் விதை இன்று ஆலமரமாய். எல்லா துறைகளிலும் உயரம் தொட்ட அவருக்கு இன்று வானமே எல்லை. திமுகவால் அடைந்த பலனுக்கு கைமாறாக எல்லா தேர்தல்களிலும் திராவிட முன்னேற்ற கழகத்தின் அறிவிக்கப் படாத கட்சி சேனலாக இருந்தது. திமுகவின் தேர்தல் வெற்றிகளில் சன் டிவிக்கும் ஒரு பங்கு உண்டு என்பதை மறுப்பதற்கில்லை.
ஆனால் திமுக எனும் மாபெரும் படைக்குப் பின்னால் அதுவும் ஒரு துணைப்படை ஆனது.

திமுகவின் ஆட்சி அமைந்த பின்னரும் மத்தியில் தயாநிதிமந்திரியான பின்னரும் ஒரு புரிந்துணர்வின் அடிப்படையில் பரஸ்பர பயன்பாடுகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

எல்லாமே தினகரனின் அரைப்பக்க கருத்துக் கணிப்பு ஒன்று வரும் வரை.......

(தொடரும்)

பட்டய கிளப்புது பா.ம.க

அவ்வப்போது அரசுத் தரப்புக்கு எதிராக அதிரடிகளை அரங்கேற்றிக் கொண்டிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியினர் அடுத்த கட்டமாக தற்போது தனியார் பொறியியல் கல்லூரி அதிபர்களுக்கு எதிராகவும் தங்களின்அஸ்திரத்தை எடுத்திருக் கிறார்கள்.

தமிழகத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி தாளாளர் களுக்கு பா.ம.க&வின் மாவட்ட பொறுப்பாளர்கள் மூலம் எச்சரிக்கை அறிக்கை ஒன்று கொடுக்கப்பட்டு வருகிறது.

அந்த அறிக்கையில் இருப்பது இதுதான்... ‘தமிழக அரசின் தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் பொறியியல் கல்விக்கான நேர்காணலை நடத்தி மாணவர்களை தேர்வு செய்துள்ளது. இப்படி ஒதுக்கீட்டின் மூலம் தேர்ந் தெடுக்கப்பட்டு சேரும் மாணவர்களுக்கு தங்கள் கல்லூரியில் அரசு நிர்ணயித்துள்ள கட்டணங்களை மட்டுமே தங்கள் நிர்வாகம் வசூல் செய்யும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

அரசின் தொழில்நுட்ப இயக்ககம் நிர்ணயித்துள்ள கட்டணத்தை மட்டுமே கல்லூரி நிர்வாகம் மாணவர்களிடம் வாங்க வேண்டும் என்பது மருத்துவர்


அய்யா அவர்களின் நிலைப்பாடு ஆகும். எனவே, தங்கள் கல்லூரி நிர்வாகம் கூடுதலாக எந்தக் கட்டணத்தையும் வாங்க வேண்டாம். மாணவர்கள் செலுத்தும் கட்டணங்களுக்கு உரிய பற்றுச்சீட்டு (ரசீது) வழங்க வேண்டும். இதை எந்தக் கல்வி நிறுவனம் மீறினாலும், பாட்டாளி மக்கள் கட்சி அந்த நிறுவனத்துக்கு எதிராக போராடும் என்பதை தெரி வித்துக் கொள்கிறோம். நீங்கள் இதைக் கட்டாயம் பின்பற்றுவீர்கள் என்று நம்புகிறோம்’ என்று அந்த அறிக்கை முடிகிறது.

அதோடு கல்லூரி மாணவர்களிடம், ‘அரசு அறிவித்துள்ள கட்டணத்தைத் தவிர உங்களிடம் கூடுதலான கட்ட ணத்தை நீங்கள் படிக்கும் கல்வி நிறுவனம் கட்டச் சொல்லி கேட்கிறதா? நீங்கள் கட்டுகிற கட்டணங்களுக்கு உரிய பற்றுச்சீட்டு தரவில்லையா? உடன டியாக கீழ்கண்ட கைபேசி எண்களில் நீங்கள் தொடர்பு கொண்டு உரிய தகவல் அளிக்கவும்’ என்று ஒரு பிட் நோட்டீஸ§ம் விநியோகிக்கப் படுகிறது.

பா.ம.க&வுக்கு மிகவும் ராசியான தர்மபுரி மாவட்டத்தில் தான் இந்த எச்சரிக்கை அறிக்கையின் தொடக்க விழா நடந்திருக்கிறது. தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி பா.ம.க. எம்.பி.யான டாக்டர் செந்திலிடம், ÔÔஇது ஒருவகை மிரட்டல் அல்லவா?ÕÕ என்றோம்.‘‘மிரட்டல் என்று ஏன் எடுத்துக்கணும்..? அறிவுரைன்னு எடுத்துக்கலாமே..! மாணவர்களிடம் விழிப்பு உணர்வு ஏற்படுத்தவும், எங்க மருத்துவர் அய்யா சொன்னபடி உயர் கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள ஊழலை ஒழிக்கவும் ஒவ்வொரு தனியார் பொறியியல் கல்லூரிக்கும் இதுபோன்ற அறிவுரை அறிக்கைகளை அனுப்பி வருகிறோம். அன்பான அறிவுரையாகத்தான் சொல்றோம். அதைப் பின்பற்றினால் அந்தக் கல்லூரி நிர்வாகங்களுக்கு நல்லது. மாறாக, ‘நீங்க யார் எங்களை கேள்வி கேட்கிறது? நாங்க எங்க விருப்பப்படி அடாவடியாகக் கட்டணம் வசூலிப்போம்’னு தனியார் கல்லூரி நிர்வாகங்கள் அடாவடி வசூலில் ஈடுபட்டால் அதைப் பார்த்துக்கிட்டு சும்மா இருக்க மாட்டோம். அந்தக் கல்லூரி நிர்வாகத்துக்கு எதிராகப் போராடுவோம். எங்களுக்குத் தெரியாம கூடுதல் கட்டணம் வசூலிச்சிடலாம்னு மட்டும் எந்த தனியார் கல்லூரியும் தப்பு கணக்குப் போட்டுட வேண்டாம்! எல்லா இடத்திலேயும், எல்லா மட்டத்திலேயும் ஆளு வச்சுருக்கோம். தப்பு நடந்தா தகவல் அடுத்த நிமிஷமே எங்க காதுக்கு வந்துடும்’’ என்று ‘ரமணா’ ஸ்டைலில் சொன்னார்.

பெயர் குறிப்பிட விரும்பாத தனியார் பொறியியல் கல்லூரி தாளாளர் ஒருவர் இந்த விவகாரம் பற்றி நம்மிடம் பேசினார். ‘‘உண்மையை சொல்லப்போனா அரசு நிர்ணயிச்சிருக்கிற கட்டணம் எங்களுக்குக் கட்டுபடியாகாது. ஏன்னா, அரசுக் கல்லூரிகளைவிட எங்கக் கல்லூரிகளில் பொறியியல் மாணவர்களுக்கு நவீன உபகரணங்களை வெளிநாடுகளில் இருந்தெல்லாம் வாங்கி வெச்சிருக்கோம். அந்தக் கணக்கு எல்லாம் பார்த்தா எங்களுக்கு நஷ்டம்தான் ஏற்படுது. இருந்தாலும் கல்வி என்பது சேவை என்பதால் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை மட்டுமே வாங்குகிறோம். எனக்குக்கூட பா.ம.க&விடமிருந்து ஒரு அறிக்கை வந்தது. அந்த அறிக்கைக்கு தேவையே இல்லை. தப்பு நடந்தால்தானே கண்காணிப்பு தேவை!’’ என்றார்.

பா.ம.க&வின் தலைவர் ஜி.கே. மணியிடம் பேசினோம். ‘‘எங்கள் மருத்துவர் அய்யாவின் ஆணைக்கு இணங்க இந்த நல்ல செயலை செய்து வருகிறோம். தர்மபுரி பின்தங்கிய மாவட்டம் என்பதால், இந்த நடவடிக்கையை முதலில் அங்கு செயல்படுத்தியுள்ளோம். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கும் விரைவில் இது போன்ற அறிவுரை அடங்கிய அறிக்கை அனுப்பப் படும்’’ என்றார்.

அவரிடமும், ‘‘பா.ம.க&வின் நடவடிக்கை மிரட்டல் தொனியில் இருக்கிறதே?’’ என்று கேட்டோம். ‘‘மடியில கனம் இருக்கிறவன்தான் பயப் படணும். உயர் கல்வித்துறையில கூடுதல் கட்டணம் வசூலிக்கிறாங்க... கல்வி வியாபாரமாகிடுச்சுன்னு எங்க மருத்துவர் அய்யா நல்லதுக்கு சுட்டிக்காட்டினா, ‘புகார் யாரும் தரலை’ங்கிறாங்க. புகார் கொடுத்தா அந்த மாணவனை அந்தக் கல்லூரி நிர்வாகம் சும்மா விடுமா? அதுக்குதான் Ôமாணவர்களே, பெற்றோர்களே வாங்க! நாங்க இருக்கிறோம்Õனு அவங்களை பா.ம.க. அரவணைச்சுக்குது. மிரட்டல்னு எடுத்துக்கிட்டா மிரட்டல்தான். நல்லதுக்குன்னு எடுத்துக்கிட்டா நல்லதுதான்’’ என்று அதிரடியாக முடித்தார்.

நன்றி- ஜூனியர் விகடன்