லக்னோவில் உள்ள ஹரிபுர் காரியா என்ற கிராமத்தில் ஒரு பாபா கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கடந்த வாரம் காவி உடையுடன் ஒரு சாமியார் வந்தார்.
கோவில் அருகே இருந்தபடி அவர் பக்தர்களுக்கு ஆசி வழங்க ஆரம்பித்தார். அவரது பெயர் ஈசாலுல்லா என்ற கன்சா பாபா ஆகும்.
தொடக்கத்தில் இவரை யாருமே கண்டு கொள்ள வில்லை. தன்னிடம் ஆசிர்வாதம் பெற வரும் பக்தர்களிடம் `பூ' கொண்டு வரும்படி கூறிவந்தார். அதன்படி சிலர் பூ கொண்டு வந்து கொடுத்து அவரது பாதத்தில் வைத்து வணங்கினர். அவர் அந்த பூவை எடுத்து பக்தர்களிடம் திரும்ப தரும்போது ரூ.500 நோட்டுத்தாளாக மாறியது.
இதைக்கண்டு மெய் சிலிர்த்துபோன பக்தர்கள் அக்கம் பக்கத்தாரிடம் சொல்ல, இப்போது கன்சாபாபா முன்பு நீண்ட கிï வரிசையில் கூட்டம் கூடி நிற்கிறது.
அந்த கிராமம் முழுவதும் `` ஜெய் கோ கன்சா பாபா கீ'' என்ற குரல் முழங்குகிறது.
அவர் மாயாஜாலம் நிகழ்த் துகிறாரா! போலிச் சாமியாராப பூ எப்படி பணமாக மாறுகிறது என்பது பற்றி யாரும் கேள்வி
கேட்கவில்லை.பணத்தை வாங்கிகொண்டு போய் உடனடியாக செலவழித்து வருகின்றனர். இதற்கு காரணம் ரூபாய் நோட்டு மாயமாக மறைந்து விடக்கூடாது என்ற பயம் தான்.
இதற்கிடையே அங்குள்ள நடுநிலைப்பள்ளி ஆசிரியர் ரோசன்லால் என்பவர் இந்த சாமியார் குறித்து விசாரணை நடத்தவேண்டும் என்று போலீசில் புகார் கூறியுள்ளார்.
ஏற்கனவே இதுபோல் ஒரு சாமியார் வந்து நோயைக் குணப்படுத்துவதாக கூறி பிரம்பால் ஒரு சிறுவனை அடித்தபோது அவன் இறந்துவிட்டான். அதேபோல் மற்றொரு சாமியார் தண்ணீரில் விபூதி கலந்துகொடுத்து ஒருபெண் காணாமல் போய்விட்டார். அதேபோல் இவரும் போலிச்சாமியார் தான் என்கிறார் அவர்.
இதுகுறித்து கஞ்சா பாபா கூறும்போது ``நான் கடவுளின் அவதாரமாக வந்திருக்கிறேன். என்னிடம் உண்மை இருக்கிறது. ஏழைகளை சந்தோசப் படுத்தவே நான் இங்கு வந்துள்ளேன். என்னை எப்படி வேண்டுமானாலும் சோதித்துக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
அந்தப் பகுதியை சுற்றிலும் வங்கிகளோ, ஏ.டி.எம். மையங்களோ கிடையாது. இந்த நிலையில் பணம் தரும் சாமியாரை பலர் `ஏ.டி.எம். பாபா' என்று அழைக்கத் தொடங்கி உள்ளனர். பாமரர்கள், படித்தவர்கள் என அனைவருமே கன்சா பாபாவிடம் ஆசிர்வாதம் பெற்றுச்செல்கிறார்கள்.
பக்தர்களுக்கு பணம் தரும் இந்த நவீன சாமியாரால் எட்டுபட்டி சுத்துக்கும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஏராளமான பேர் `எங்க ஊருக்கு வாங்க பாபா' என்று அவரை அன்புடன் அழைத்து வருகின்றனர்
(கண்டிப்பாக 2020 இந்தியா வல்லரசாகிவிடும் என்ற பயத்தில் சீனா அந்த ஆசாமியை நேபாளம் வழியே கள்ள பாஸ்போர்ட்டில் கடத்த முயற்ச்சிப்பதாக காற்றுவழி தகவல் தெரிவிக்கிறது)
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
தலைப்பை தப்பா குடுத்துட்டீங்களே!
திருந்த"வே" மாட்டீங்களா? இது நல்ல இருக்குது.
இவரு சவடால் எல்லாம் ஏழைங்க கிட்டதான் பலிக்கும்போல. என்ன எழவோ?
ஏ.டி.எம். சாமியார்! :-)
பதிவுக்கு நன்றி மகேந்திரன் ஐயா.
//(கண்டிப்பாக 2020 இந்தியா வல்லரசாகிவிடும் என்ற பயத்தில் சீனா அந்த ஆசாமியை நேபாளம் வழியே கள்ள பாஸ்போர்ட்டில் கடத்த முயற்ச்சிப்பதாக காற்றுவழி தகவல் தெரிவிக்கிறது)//
எனக்குக் கிடைத்த இன்னொரு தகவல்: சீனாவின் முயற்சியை முறியடிக்க லக்னோ காவல்துறை அவருக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கியுள்ளது....
அந்த சாமியார் கிட்ட போய் பணம் வரவச்சு இந்தியாவோட கடன அடச்சுடலாந்தானே?
Please provide source of the news, I want to give to northindian friends....
Thanks
Veeran
ICICI வங்கிக்கு தெரிஞ்சா இவர விலைக்கு வாங்கிடுவாங்க போலிருக்கே. . .
என்னங்க மந்திரத்துல மோதிரம் வரும் போது, ரூவா நோட்டு வராதா. . . .
அந்த கூட்டத்துல நம்ம மந்திரி துரை முருகன் இருகாரான்னு பார்த்து சொல்லுங்க. . . .
அட இந்தக் கொடுக்கிற அவதாரம் யூரோ,டாலர்; டினாரில் கொடுக்கக் கூடாதா???
இந்த ஏழைகளும் இரப்போரும் தானே!! அரசியல்வாதிகளுக்கும்; ஆத்மீகவாதிகளுக்கும்
வாழ்வழிப்போர்.
வாழ்க இந்தியா!!
நமது உலகில் மனிதன்,மதம்,கடவுள்,சாமியார்கள் எல்லாவற்றின் ஐனத்தொகையும் சமமாக இருக்கின்றது.
Post a Comment