கலைஞருக்குப் பிறகு திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு யார் தலைவராக வரவேண்டும் என்ற விவாதம் இப்போதே ஆரம்பித்துவிட்டதை நினைத்தால் கொஞ்சம் வியப்பாய் இருகிறது. ஆனால் இது ஒன்றும் புதிய விசயம் இல்லை.

எல்லா கட்சிகளையும் போலவே திமுகவிலும் குழுக்கள் இருப்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அப்படி தனியாக குழு அதன் பின் கட்சி என்றபின் அதில் மாபெரும் வெற்றி கண்டவர் எம் ஜி ராமச்சந்திரன் மட்டுமே. காரணம் அவரின் கட்சியினரோடான நெருக்கம். " கலைஞர் பேனாவால் மூளையை தீண்டுபவர் என்றால் எம்ஜிஆர் வாய் வார்த்தையால் வயிற்றை தொடுபவர். ஏழைகள் நிறைந்த இந்த மாநிலம் எம்ஜிஆரின் வார்த்தைகளுக்கு தாரை வார்க்கப் பட்டது அப்படித்தான்.

அதன் பின் குறிப்பிடத் தகுந்த அளவில் கட்சியின் உணர்வுகளை கிளப்பி விட்டு கிளம்பிச் சென்றவர் நம் அன்புச்சகோதரியின் அவசர கால அண்ணன் வைகோ. அவரின் மாபெரும் வெற்றி (?) பற்றி நான் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை.

அந்த வரிசையில் சமீப காலத்தில் எல்லா வகையிலும் புயலைக் கிளப்பியவர் மறைந்த மாறனின் இளைய புதல்வர் தயாநிதி மாறன். கட்சிக்குள் தந்தையின் மறைவுக்குப் பின் கலைஞரின் பாசம் மட்டுமே தகுதியாய் கொண்டு, கொண்டு வரப்பட்ட புது முகம் மத்திய சென்னையின் மாபெரும் வெற்றிக்கு கருணாநிதியின் பேரன் என்ற ஒரு தகுதி மட்டுமே போதுமானதாய் இருந்தது. யாருக்கும் தயாநிதியின் பிற ஆளுமைத் தகுதிகள் பற்றிய கேள்வி எழுந்திடவில்லை.

மத்திய அமைச்சரவையில் சக்திமிக்க துறை. சுட்டும் விரலசைவில் சுதந்திர கட்டளைகள் என மிகச் சுதந்திரமாக அனுமதிக்கப் பட்ட எல்லா வழிகளையும் கையாண்டு தகவல் தொழிநுட்பத் துறையில் இதுவரை இருந்த எந்த அமைச்சரையும் விட மிகச் சிறப்பான பணிபுரிய மென்மேலும் கிரீடங்கள் என ஒப்பந்தங்கள் வந்து குவிய அதில் அவரின் சீறிய முயற்சியில் தமிழகத்துக்கும் ஒரு பங்கு கிடைத்தே வந்தது.

எங்கே போனாலும் கலைஞரின் ஊன்று கோலாய் இருந்த ஆற்காட்டார் கொஞ்சம் நம் கண்களில் இருந்து மறைய ஆரம்பித்தார். இளம் கன்றாய் கார்பொரேட் காஸ்ட்யூமில் தயாநிதி தாத்தாவின் எல்லா அசைவுகளுக்கும் அர்த்தம் கொடுக்கும் தலைந்கர தி.முக.வின் இன்னொரு முகமானார்.

கலாநிதி மாறன். முறசொலி மாறனின் மூத்த மகன். தந்தை வழியில் அரசியலுக்குள் வராமல் சரியான காலகட்டத்தில் பூமாலை என்ற ஒரு குட்டியூண்டு விடியோ செய்திப் பிரிவு அனுபவத்தில் ஆரம்பித்த சன் டிவி எனும் விதை இன்று ஆலமரமாய். எல்லா துறைகளிலும் உயரம் தொட்ட அவருக்கு இன்று வானமே எல்லை. திமுகவால் அடைந்த பலனுக்கு கைமாறாக எல்லா தேர்தல்களிலும் திராவிட முன்னேற்ற கழகத்தின் அறிவிக்கப் படாத கட்சி சேனலாக இருந்தது. திமுகவின் தேர்தல் வெற்றிகளில் சன் டிவிக்கும் ஒரு பங்கு உண்டு என்பதை மறுப்பதற்கில்லை.
ஆனால் திமுக எனும் மாபெரும் படைக்குப் பின்னால் அதுவும் ஒரு துணைப்படை ஆனது.

திமுகவின் ஆட்சி அமைந்த பின்னரும் மத்தியில் தயாநிதிமந்திரியான பின்னரும் ஒரு புரிந்துணர்வின் அடிப்படையில் பரஸ்பர பயன்பாடுகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

எல்லாமே தினகரனின் அரைப்பக்க கருத்துக் கணிப்பு ஒன்று வரும் வரை.......

(தொடரும்)

7 comments:

சிவபாலன் said...

நன்றாக எழுதியுள்ளீர்கள்!

தொடருங்கள்!

மகேந்திரன்.பெ said...

நன்றி சிபா நேற்று சூரியன் தி பாஸ் எழுதிய பதிவே இதற்கு உந்துதல்

bala said...

உடன் பிறப்புகளே நீங்க ஏன் கழகத்தை கலைத்துவிட்டு மரம்வெட்டி அய்யாவோடு இணைந்து தமிழ் காக்கும் சேவை செய்யக்கூடாது?உலகமே மூக்கில் விரல் வைக்கும் வண்ணம் இந்த அதிரடி முடிவை எடுக்கும் திறம் கழகத்துக்கு வருமா?

பாலா

TBCD said...

உங்கள் கருத்து சுதந்திரம் மெய் சிலிர்க்க வைக்கின்றது...
யாருமே இல்லை என்ற பட்சத்தில் மு.க வின் வாரிசு எவ்வளவு குப்பையாக இருந்தாலும் அவர்க்கு தகுதி உண்டு, அருகதை உண்டு என்று கூவுவீர்கள்... அடச்சே.... ஸ்டாலின் செஞ்ச அட்டகாசதிற்கு அவருக்கு அருகதை உண்டு என்று எல்லாம் சொல்லாதீர்கள்...
தி.மு.கவில் குலதொழில் பின்பற்றப்படுகிறது என்று சொல்லுங்கள்...
ஏன் தி.மு.கவில் சாதி ரீதியாக இருக்கும் போது இதை மட்டும் விடுவானே....

(இந்த பின்னுட்டம் வெளியிடப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை...)

மகேந்திரன்.பெ said...

//அடச்சே.... ஸ்டாலின் செஞ்ச அட்டகாசதிற்கு அவருக்கு அருகதை உண்டு என்று எல்லாம் சொல்லாதீர்கள்...//

என்ன அட்டகாசம் செய்தார் எதேனும் ஆதாரம் இருக்கிறதா அய்யா?
சும்மா இந்த உதார் விடுற வேலை யெல்லாம் வேண்டாம் அந்த கதையெல்லாம் வேலைக்காகாத ஒன்னு.
அப்றம் என்னோட கருத்து சொதந்திரம் இந்த ஒலகத்துக்கே தெரியும் அதனால எந்த ந்-பின்னூட்டத்தையும் மட்டுறுத்தி ரிஜக்ட் பன்னிடுவேன்கிற கவலையே வேண்டாம்

bala said...

மேலே பாலா என்ற பெயரில் பின்னூட்டம் போட்டிருக்கும் கேப்மாரி போலி. நான் தான் ஒரிஜினல் பூணூல் போட்ட சல்மா அயூப் பாலா. வேணும்னா மயிலாப்பூர் குளத்தங்கரையிலே புரோகிதம் பண்ணுற அய்யிரை கீழே போட்டு தாண்டி சத்தியம் பண்ணுறேன்.

TBCD said...

//*என்ன அட்டகாசம் செய்தார் எதேனும் ஆதாரம் இருக்கிறதா அய்யா? *//
அவர் அட்டகாசங்கள் மு.க. ஆட்சியில் இருந்த போது நடந்ததாக் சொல்ல கேள்வி...
இன்றும் அதற்கு யாரும் மறுப்பு தெரிவத்தில்லை...இல்லாமா புகையாது... அள்ளாமா குறையாது...
அவரின் வெறிச் செயல்களை நான் வந்து பட்டியல் இட வேன்டாம்...இதை நீங்க ஆதரமில்லாத குற்றச்சாட்டு எனலாம்...ஆனால் இது 6 கோடி மக்களும் அறிந்த ஒன்று...
கூகிளில் அவர் பெயரையும், அந்த செய்தி வாசிப்பவரின் பேரையும் போட்டு பாருங்களேன்..
//*அப்றம் என்னோட கருத்து சொதந்திரம் இந்த ஒலகத்துக்கே தெரியும் அதனால எந்த ந்-பின்னூட்டத்தையும் மட்டுறுத்தி ரிஜக்ட் பன்னிடுவேன்கிற கவலையே வேண்டாம் *//
அதிர்ஷ்டக்கார பார்வை பதிவர் மு.க. பற்றிய கேள்வி என்றால். வெளியிடுவதில்லை..அது போல் நீங்களும் வெளியிட மாட்டீர்களொ என்ற ஆதங்கம்... என் பார்வயை மாற்றிக் கொள்கிறேன்...