கிழுமத்தூருக்கு பயர்பாக்ஸில் போக வேண்டுமா என ஓசை செல்லா போட்ட பதிவும் இது தொடர்பாக பாலபாரதி போட்ட பதிவும் என் பெயரை கெடுக்கும் விதமாக என் ஊரின் பெயரை கெடுக்கும் விதமாக இருக்கிறது. உடனே இருவரும் அதனை சரிசெய்ய வேண்டும் என இப் பதிவின் மூலம் எச்சரிக்கை விடுக்கிறேன் என எழுதத் தோன்றினாலும் உண்மை அவர்களுக்கு தெரியாத போது அவர்களை நொந்து கொள்வதில் என்ன நியாயம் இருக்க முடியும். அதனால் முதலில் என் தரப்பு விளக்கத்தினை கொடுத்துவிடலாம் என்பதற்க்காக இந்த பதிவு


"அய்யா சாமிகளா எங்க ஊரு பேருலதான் என்னோட கொலைப்பூவும் இருக்கு அதாவது "கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ்" நீங்க சொல்ற மாதிரி அது கிழு"மா"த்தூர் எக்ஸ்பிரஸ் இல்லை"


இது மொக்கைப் பதிவா என்று யாராவது சொல்லுங்க...


போன பதிவுக்கு வந்து பின்னூட்டம் போட்ட அனானி அய்யா என்னாலயும் "பாப்பான்" பேரு இல்லாம பதிவு போட முடியும் தெரிஞ்சுக்கோங்க....

அடடா இப்ப சொல்லிட்டனோ?


சரி அடுத்த தபா ட்ரை பன்றேன்.
யாராவது சொல்லட்டுமே, எனக்குக் கடவுள் பக்தி இருக்கிறதென்று! நான் கடவுள் யோக்கியதையைப் பார்த்துக் கொண்டுதானே வருகிறேன். நானும் கடவுள் பெயரைச் சொல்லி பல செயல்களைச் செய்தவன்தான். புராண காலட்சேபம் செய்து யார் ஒழுக்கமாக வாழ்கிறார்கள்? சங்கராச்சாரி வாழ்கிறாரா? சந்நிதானங்கள் யாராவது வாழ்கிறார்களா?

கடவுள் பக்தி வேண்டும் என்றும், ஆத்மா இருக்கிறதென்றும் நீதிபதி முதல் மந்திரிகள் வரையில் பிரச்சாரம் செய்கிறார்கள். இந்த நாட்டில் பக்தி இல்லையா? எவராவது பக்தி இல்லையென்று சொல்ல முடியுமா? தமிழ் நாட்டில் ஏறக்குறைய இருபதினாயிரம் கைதிகளுக்குமேல் இருப்பார்கள். அவர்கள் காலையில் எழுந்த உடனே பட்டை பட்டையாக அடித்துக் கொள்வார்கள். ஏண்டா என்றால், சீக்கிரம் விடுதலையாக வேண்டும் சாமி என்று கூறுவான். யாராவது ராசா, மந்திரி சாகமாட்டானா, நான் விடுதலையாக மாட்டேனா என்று வேண்டிக் கொள்வான்.
இப்பொழுது திருடாமல், பொய் பேசாமல் யார் இருக்கிறார்கள்? இனிமேலாவது மக்கள் ஒழுக்கத்தை அனுசரிக்க வேண்டும்; அன்பைக் கடைப்பிடிக்க வேண்டும். இப்படியே எல்லோரையும் ஏய்த்துக் கொண்டு போய்க் கொண்டிருந்தால் மிருகமாவது தவிர வேறு என்ன? உயர்தர நீதிமன்றத்தில் இருக்கும் நீதிபதி எத்தனைக் கொலைகாரர்களைப் பார்க்கிறார்; எவ்வளவு திருடர்களைப் பார்க்கிறார். அவருக்குத் தெரியாதா, பக்தியில்லாமல் திருடுகிறானா, பக்தியிலிருந்து கொலை செய்கிறானா என்று?

அவர்களைப் பார்த்துவிட்ட பிறகு, மக்களிடம் பக்தியிருந்தும் ஒழுக்கமில்லை என்றல்லவா சொல்ல வேண்டும்? ஆகவே, மக்களை ஒழுக்கத்தின் பக்கம் திருப்ப வேண்டும். இன்னும் ஒழுங்கீனமாக நடக்கக் கூடாது. எவ்வளவு ஒழுங்கீனமாக நடந்து கொள்ள முடியுமோ அவ்வளவும் நடந்து விட்டோம். ஆகவே, கோயில் கட்டுவதானாலும், உற்சவம் கொண்டாடுவதானாலும் பயனில்லை. லாபமில்லை.

லட்சக்கணக்கான மக்கள் மாமாங்கத்திற்காகக் கூடினார்கள். அது, முட்டாள்தனத்தைக் காட்டுவதைத் தவிர வேறு என்ன? அங்கு போய் அழுக்குத் தண்ணீரில்தானே குளிக்கிறார்கள். குளத்தில் இருக்கும் மேல்தண்ணீரை இரைத்து விடுகிறார்கள். அழுக்குத் தண்ணீர் இருக்கிறது. எல்லோரும் இறங்கினால் தண்ணீர் உயரம் அதிகமாகிறது. யாரும் இல்லாதபொழுது கணுக்காலில் இருக்கும் தண்ணீர், எல்லோரும் இறங்கிய பிறகு கழுத்தளவுவரை வருவதில் ஆச்சரியமென்ன? குளத்தில் இறங்கி விட்ட பிறகு சிறுநீர் வந்தால் எங்கே போவது? அதைக் குளத்திலேயே ஒவ்வொருவரும் விட்டால் நுரை பொங்குகிறது. இதைப் பார்த்த நம் பைத்தியக்கார மக்கள் "பார் சிவன் தண்ணீர் விடுகிறான், நுரை பொங்குகிறது பார்' என்று சொல்லுகிறார்கள். சொல்லுவதோடு மட்டுமல்லாமல் அந்தத் தண்ணீரைத் தலையில் தடவிக் கொள்கிறார்கள்.

வட நாட்டில் கும்பமேளா நடந்தது. சுமார் எண்ணூறு சாமியார்கள் நிர்வாணமாக அங்கு வந்தார்களாம். அவர்களைப் பார்க்கப் போய் ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்தார்கள். புண்ணிய ஷேத்திரத்திற்கு நிர்வாணமாகத்தான் போக வேண்டுமா? இதை வெளிநாட்டான் கேள்விப்பட்டால் என்ன நினைப்பான்? இன்னும் நீ இப்படியே நுரை பொங்குகிறதென்று சொல்லிக் கொண்டிருக்கப் போகிறாயா? எந்தப் பார்ப்பானாவது காவடி எடுத்து ஆடியிருப்பதைப் பார்த்திருக்கிறாயா? எந்தப் பார்ப்பனத்தியாவது திருப்பதி வெங்கடேசா, கோவிந்தா என்று தெருவில் புரண்டு பிச்சையெடுப்பதைப் பார்த்திருக்கிறாயா? இதைக் கண்ட பிறகாவது திருந்த வேண்டாமா நம் மக்கள்?

-பெரியார் 26.8.1956இல் ஆம்பூரில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் கூட்டத்தில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி ‘விடுதலை' 10.9.1956

மாமியும் மசால் வடையும்

இப் பதிவு சூடான இடுகைகளில் வரும் பதிவுகளை கேலி செய்வதற்க்காக அல்ல !!
சென்னை : சேது சமுத்திரதில் இருப்பது மணல் திட்டு தான் என நாசா விண்வெளி மையம் அனுப்பியுள்ள இமெயிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சேது சமுத்திர திட்டத்தில் கால்வாய் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் இருக்கும் ராமர் பாலத்தை இடிக்க கூடாது என பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் சேது சமுத்திர திட்ட மேலாண்மை இயக்குனர் ரகுபதி சென்னையில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார். இதில் சேது சமுத்திரத்தில் இருப்பது வெறும் மணல் திட்டு தான், மனிதனால் உருவாக்கப்பட்ட பாலம் அல்ல என கூறினார். நாசா விண்வெளி மையம் சேது சமுத்திர திட்ட கமிஷனுக்கு அனுப்பியுள்ள இமெயிலில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இந்த செய்தியை கேட்டநடமாடும் ட்ராபிக் சிக்னல் இராம கோபாலன் நாசாவின் நாக்கார சக்திகளை மைனாரிட்டி கருணாநிதியின் கைக்கூலிகள் விலைக்கு வாங்கிவிட்டதாக மூன்றாம் அணித் தலைவி அம்மா விடப்போகும் மொக்கை அறிக்கையில் தன் பெயரையும் சேர்த்துக்கொள்ளுமாறு போயஸ் கார்டனுக்கு பேக்ஸ் அனுப்ப போவதாக அங்கீகரிக்காத தகவல்கள் தெரிவிக்கின்றன

போண்டா பிரியர் தனக்கு யாரும் போண்டா கொடுத்தால் கூட துணைக்கு வரவில்லை என்பதாலும் போண்டா சாப்பிட்ட பலர் ஒரு தொண்டனின் கலாய்த்தலில் கலங்கிக் கிடப்பதாலும் இனி பின்னூட்டம் போட்டுக் கொள்வது போல போண்டாவையும் தாமே தயாரித்துக் கொண்டால் என்ன என்று யோசிக்க ஆரம்பித்திருப்பதாக நம்பத்தகாத வட்டாரங்கள் துண்டை தரையில் போட்டு தாண்டி அணானிமஸாக முரளிமனோகர் மேல் சத்தியம் செய்கின்றன. என்னதான் நமக்கு இடைஞ்சல் செய்தாலும் பகைவனுக்கும் அருள்வதே நம் பண்பாகும் அதனால் இந்த எளியோனின் எ"லி"ய உதவி.

உளுத்தம்பருப்பை இரண்டுமணி நேரம் நீரில் ஊற வைத்து சுத்தம் செய்து நீரை வடித்துக் கொள்ளவும்.
தேங்காய் கீற்றினை சிறு சிறு பற்களாக நறுக்கிக் கொள்ளவும்.
உளுத்தம்பருப்புடன் இரண்டு பச்சைமிளகாய் உப்பு சேர்த்து வெண்ணெய் போல் அரைத்துக் கொள்ளவும்.
பச்சைமிளகாய், இஞ்சியைப் பொடியாக நறுக்கி மாவில் போடவும்.
இதனுடன் மிளகு, சீரகம், தேங்காய் சேர்த்து கலந்து கொண்டு, எண்ணெய் காய்ந்ததும், எலுமிச்சம்பழ அளவு உருண்டைகளாக உருட்டிப் போடவும்.
கண்கரண்டியினால் அடிக்கடி புரட்டிவிட்டு, பொன்னிறமாக வெந்ததும் எண்ணெய் வடியவிட்டு எடுக்கவும்.

கோதுமை மாவில், மஞ்சள் தூள், தேவையான உப்பு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் கலந்து பிசைந்து வைத்துக் கொள்ளவும். இதை ஒரு ஈரத்துணியைப் போட்டு மூடி வைக்கவும். 2 மணிநேரம் இந்த மாவை ஊறவிடவேண்டும்.

உருளைக் கிழங்கை நன்றாக வேக வைத்துக் கொள்ளுங்கள். கிழங்கையும் தேங்காய் துருவலையும் மிருதுவாக அரைத்துக் கொண்டு இத்துடன் சீனியையும் சேர்த்து கனமான ஒரு பாத்திரத்தில் வைத்து நன்றாக கிளறுங்கள். இதில் 2 கரண்டி நெய்யையும் சேர்க்க வேண்டும். ஏலக்காய் பொடியையும் இத்துடன் சேர்த்த பிறகு இறக்கி வையுங்கள்.

ஊறின மாவை சம உருண்டைகளாக்கி ரொட்டிபோல் விரல்களால் தட்டி நடுவில் உருளைக் கிழங்கு பூரணத்தை வைத்து மூடிவிடுங்கள். திரும்பவும் இதை விரல்களல் தட்டி வெறும் தோசைக்கல்லில் போட்டு எடுக்கவேண்டும். விரல்களில் ஒட்டாமல் இருக்க அரிசிமாவைத் தொட்டுக் கொள்ளலாம். இரண்டு புறமும் நெய்விட்டு மறுபடியும் புரட்டி எடுத்தால் மொறுமொறுப்பாக மெத்தென்று இருக்கும்.

பின்குறிப்பு: இந்த சமையல் குறிப்பில் ஏதும் சந்தேகம் இருப்பின் என்னைக் கேக்க வேண்டாம்.
இதில் சந்தேகம் இருப்பவர்கள் பின்னூட்டத்தில்; தெரிவிக்கவும் மொத்த ஆர்டர்கள் ஏற்றுக்கொள்ளப்படும்(என்னுடைய காரில் டோர் டெலிவரி செய்யப்படும்)

பனி கொட்டும் குளிர் காலைப் பொழுது, ஒரு பச்சிளம் குழந்தையின் அழு குரல் இதயத்தில் முட்டியது. தூக்கம் பிடிக்காமல் குடிசை யிலிருந்து வெளியே வந்தாள் மாரி. குழந்தையின் அழுகுரல் எங்கிருந்து வருகிறது? - சுற்றிலும் பார்த்தாள் மாரி. எதிரிலிருந்த குப்பைத் தொட் டியை எட்டிப் பார்த்தாள். பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தை எறும்புகள் மொய்த்துக் கடிக்க, வலியிலும் குளிரிலும் துடித்துக் கதறிக் கொண்டிருந்தது. பதறிப்போன மாரி குழந்தையை எடுத்தாள். எறும்புக்கடி, குளிர், அதனுடன் காய்ச்சலும் சேர்ந்து குழந்தையை வதைப்பதை உணர்ந்தாள். அள்ளி அணைத்துக் கொண்டு குடிசைக்குத் திரும்பினாள். உடனடியாகக் குழந்தைக்குப் பால்தர வேண்டுமே என்கிற பதைப்புடன் குடி மயக்கத்தில் கிடந்த கணவனை உலுக்கிக் குழந்தையின் கதையைச் சொல்லிப் பால் வாங்குவதற்கு ஏதாவது காசு இருக்கிறதா? என்று கேட்டாள்.

``நான் குடிப்பதற்கே காசு இல்லை. உனக்கென்னடி ஊதாரித்தனம்?’’ என்று திட்டிவிட்டுப் படுத்துக் கொண்டான். இரண்டொரு நாள் எப்படியோ சமாளித்தாள் மாரி. குழந்தைக்கு `சின்னி’ என்று பெயரிட் டாள்.

வயதான காலத்திலும், கட்டடத் தொழிலாளியாக வேலை செய்து குடிகாரக் கணவனையும் இந்த அனாதைக் குழந்தை சின்னியையும் எப்படிக் காப்பாற்றுவது? என்கிற கவலை அவளை அழுத்தியது.

அவளைப் பரிவுடன் பார்க்க அந்தக் குடிசையில் இருந்த ஒரே உயிர், அவள் வளர்த்த நாய் `பாணி’தான்.

ஒருநாள் வேலையிலிருந்து குடிசைக்குத் திரும்பிய மாரி நம்ப முடியாத ஆச்சரியத்தைக் கண்டாள். நான்கு குட்டிகளை ஈன்றிருந்த `பாணி’ குழந்தை சின்னியின் வாய்க்குள் தனது காம்புகளில் ஒன்றைப் புகுத்திப் பாலூட்டிக் கொண்டி ருந்தது.

மானுடத் தாய் போலவே தனது முன்னங்கால் (கை) ஒன்றை குழந்தைமீது வாஞ் சையுடன் போட்டு அணைத் துக் கொண்டிருந்தது. சின்னி ஆனந்தமாகப் பால் குடித்துக் கொண்டிருந்தான்.
`சின்னி’க்கு ஒரு தாய் கிடைத்து விட்ட மகிழ்ச்சி யில், கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொண்டாள் மாரி.

அன்னை `பாணி’க்கும் குழந்தை `சின்னி’க்கும் நாளுக்கு நாள் பந்தமும் பாசமும் செழித்து வளர்ந்தன. தனது நான்கு குட்டிகளை விடவும் இந்தப் பிள்ளை மீது `பாணி’க்குத் தணியாத அன்பு.

அந்தக் குட்டிகளெல்லாம் வளர்ந்து எங்கெங்கோ ஓடி விட்டன. பாணியும் சின்னியும் மட்டும் பிரிக்க முடியாத தாய் சேயாக... அந்தப் பகுதி மக்களே பக்தியுடன் பார்த் துச் செல்லும் விதத்தில் அன்புக்கும் பாசத்துக்கும் காவியமாய்த் திகழ்ந்தார்கள்.

மூன்று ஆண்டுகள் ஓடி விட்டன. ஆனாலும், `சின்னி’ தன் `தாயிடமே’ பால் குடித்துக் கொண்டிருக்கிறான்.

அவன்மீது அன்பு கொண்ட சில குழந்தைகள் சின்னியைத் தங்களுடன் ள்ளிக்கு அழைத்துச் செல் கிறார்கள். கூடவே அவள் தாய் `பாணி’யும் செல்கிறாள். பள்ளி முடியும் வரையிலும் பள்ளியின் வராந்தாவில் ஓர் ஓரமாகப் படுத்துக் கிடந்து விட்டு, பள்ளி விட்டதும் சின்னியை அழைத்துக் கொண்டு மாரியின் குடிசைக்கு வந்து விடுகிறாள் `பாணி.’

இவ்வாறு நாட்கள் நகர்ந்து கொண்டிருந்த போது, மாரி இறந்து விட்டாள். மாரியின் கணவன் அன்றே `பாணி’யையும் `சின்னி’யையும் தன் குடிசையிலிருந்து விரட்டி விட்டான்.

மாரியின் தங்கை சகாயம் இப்போது பாணிக்கும் சின்னிக்கும் தன் குடிசையில் புகலிடம் தந்திருக்கிறாள்.

இந்த உணர்ச்சிமிகு காவி யம் பெங்களூர் தர்சனி பாளையம் பகுதியிலுள்ள குடிசைப்பகுதி மக்களையும் தாண்டி பத்திரிகைகளாலும்கூட விவரிக்கப்படும் போதுகூட ஒரே ஒரு மனிதன் மட்டும் அந்தக் குழந்தையிடம் எந்தப் பரிவும் காட்டாது முகம் திருப்பிச் செல்கிறான்.

அவன் அதே தெருவில் தான் இருக்கிறான். அவன் தான் சின்னியின் இறந்து போன தாயை மோகத்தில் அணைத்து, கோபத்தில் உதைத்துக் கொடுமைப் படுத்திய கணவன். அவனுக்குப் பிறந்த குழந்தையைத் தான் `பாணி’ பாசத்துடன் வளர்த்து வருகிறாள்.
``மற்ற எல்லா மிருகங் களையும் விடப் பசுவைத் தான் கோமாதா என்கிறோம். நாய்ப்பாலைக் குடிக்க முடியுமா?’’ என்று `கிரிமினல்’ சங்கராச்சாரி கேட்டது இப்போது நினைவுக்கு வருகிறது.

நாய்ப்பால் குடித்து வளர்ந்தவன்தான் ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தின் தந்தை, அவன் பெயர் ரோமுலஸ். அவன் பெயரால்தான் ரோமாபுரி நிர் மாணிக்கப்பட்டது.

சங்கராச்சாரி குடிப்பது திருட்டுப்பால். எந்தப் பசுவும் மனிதர்களுக்காகச் சுரப்ப தில்லை. ஆனால், `பாணி’யோ தாயினும் சாலப் பரிந்தூட்டுகிறது.

சங்கராச்சாரி கூட்டம் சின்னியை அவதார புருஷனாக்காமல் இருந்தால் போதும்

தமிழ்ச் சான்றோர் பேரவை செய்திமடல் - ஆகஸ்ட் இதழிலிருந்து
நண்பர் லக்கிலுக் பதிவில் போண்டா புகழ் பதிவர் (தேவையின்றி மூக்கு நுழைப்பவர்) வழக்கம்போல உளரி வைத்திருக்கிறார். இதோ அவரே சொல்கிறார் பாருங்கள்.

பொது நோக்கு ஒரு விஷயத்தில் இருக்கும்போது அதற்கு எதிராக எழுத தில் வேண்டும். இப்பதிவில் உங்களிடம் அதைப் பார்க்கிறேன். ரமேஷ் மீது பாலியல் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவ்வளவே.

காஞ்சி சங்காராச்சாரி காமகேடி சுப்ரமணி மீதும் குற்றச்சாட்டுதான் உள்ளது. அதனால் குற்றவாளி இல்லை என்று தீர்ப்பாகி விடுமா? அனுராதா ரமணன் கொடுத்த செக்ஸ் புகார் பொய் என்று ஆகிவிடுமா? சங்கரராமனை கொலை செய்தது பொய் என்று ஆகிவிடுமா? சரி உங்கள் வாதப்படி இவர்கள் குற்றவாளிகள் இல்லை என்றே ஒப்புக் கொள்கிறேன். மதுரையில் தினகரன் ஊழியர்களை கொலை செய்தது அழகிரி என்று தினமலரும் "நீங்களும்" சொல்கிறீர்களே, அதற்கு ஏதேனும் இந்த மாதிரி தில் வைத்திருக்கிறீர்களா?


அதை விசாரிப்பது இப்போது நடந்து கொண்டிருக்கிறது. என்னைப் பொருத்தவரை ரமேஷ் பற்றி நல்ல செய்திகளை பலர் கூறிவிட்டனர்.

ரமேஷ் ஒரு பார்பானன். தினமலர் ஓனரின் பையன். எனவே அவர் என்னதான் குற்றங்கள் கொடுமைகள் புரிந்தாலும் பாராட்டப்பட வேண்டியவன் உங்கள் ப்ராமண பாஷையில். கீதையிலும் மனுவிலும் வேதத்திலும்கூட சொல்லி இருக்கின்றனர். பாப்பான் எந்த தவறு செய்தாலும் அவனை தண்டிக்கக் கூடாது, மன்னித்து விட்டுவிட வேண்டும் என்று! எனவே அந்த பக்கங்களை எடுத்துச் சென்று நீதிபதியிடம் காட்டினால் குற்றமற்றவர் என விட்டாலும் விடுவார். முயற்சி செய்து பாருங்கள் .

சில நாட்களுக்கு முன் பழம்பெரும் எழுத்தாளர் பஞ்சாபகேசன் அவர்கள் தேவையில்லாமல் ஒரு நல்லவரை அவதூறு செய்கிறார்கள் என இந்த நிகழ்ச்சி பற்றிப் பேசும்போது கூறினார். அது உண்மையா பொய்யா என்பது விசாரணையில் தெரிய வரட்டும்.

குற்றமே இப்போதுதான் வெளியே வந்திருக்கிறது. ஆனால் சிலநாட்களுக்கு முன்பே இதுபற்றி பஞ்சாபகேசன் என்ற பாப்பானுக்கு தெரிந்து இருக்கிறது! அது எப்படி பார்பனர்களுக்கு மட்டும் முன்பே தெரியும்? குற்றம் செய்வதற்கு முன் எல்லோரிடமும் சொல்லி விட்டுத்தான் செய்தாரோ? அவர் செய்த செக்ஸ் டார்ச்சருக்கு மற்ற சென்னைப் சென்னை பார்ப்பன எழுத்தாளர் சங்கமும் உடந்தையா?

ஆனால் எனது இப்பின்னூட்டம் உங்கள் நன்றியுணர்ச்சியைப் பாராட்டி போடப்பட்டது. அதிலும் நீங்கள் தாக்கப்படுவீர்கள் என்பது தெரிந்தும் தைரியமாகப் போட்டது மிகவும் பாராட்டுக்குரிய செயல்.

ஆமாம். பாப்பானை நல்லவன் என்று வாழ்த்தினால் அவர் நல்ல பதிவர். பாப்பான் செய்த திருடு. கொலை, கொள்ளை, கற்பழிப்பு பற்றி எழுதினால் அவர் தூஷணப் பதிவர்! நல்லா இருக்கயா உம்ம நியாயம்!

ப்ளஸ் டூவுக்கு மேல் பல காரணங்களால் படிக்க முடியாது வாழ்நாள் முழுதும் மனம் மருகுபவர்களுக்கு தன்னம்பிக்கை அளிப்பதே அந்துமணியின் அப்பதிலுக்கு நோக்கமாக இருந்திருக்க வேண்டும். கணிசமான பேர் கடனோ உடனோ வாங்கி தொழிற்கல்வியில் சேர்ந்து அவதிப்படுகின்றனர். ஏனெனில் அவை இல்லாவிட்டால் வாழ்க்கை இல்லை என்று அவர்களுக்கு போதிக்கப்படுகிறது. பலர் பாதியிலேயே படிப்பை விடுகின்றனர். என்ன இழப்பு சம்பந்தப்பட்டவருக்கெல்லாம் ஆகிறது என்று கணக்கு போட்டால் தலையே சுற்றும்.

அந்துமணி ரமேஷ் சொன்னதுக்கும் பார்பனர் ராஜாஜி சொன்னதுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை! ராஜாஜி குலக்கல்வி வேண்டும்னு சொன்னார். அந்துமணி ரமேஷ் 12ம் வகுப்போட ஊத்தி மூடிட்டு மாடு மேய்க்க போங்கடாங்கிறார். இதனை பார்ப்பன இளைஞர்களிடம் சொல்வாரா அந்துமணி ரமேஷ்? படிக்க வைக்க வசதி இல்லைன்னா பையனின் அப்பா, அம்மா அல்லவா யோசிக்க வேண்டும். 12ம் வகுப்போடு நிறுத்திக்கச் சொல்ல அந்துமணி ரமேஷ்க்கு என்ன அருகதை இருக்கு? அந்துமணி ரமேஷை யாரும் காசு கேட்டாங்களா படிக்க வைக்க? அவருக்கு ஏன் இந்த கெட்ட எண்ணமும் கெடு புத்தியும்? சம்பந்தப் பட்டவர்கள் அல்லவா முடிவு செய்ய வேண்டும் படிப்பைப் பற்றி? அதனைச் சொல்ல அந்துமணி ரமேஷுக்கோ உங்களுக்கோ என்ன அருகதை இருக்கிறது. ?

இத்தனை நாள் எத்தனை எத்தனையோ பணியாளர்களை ரமேஷ் தொட்டிருக்கிறான். மறுத்தவர்களை இடம் மாற்றி விடுவேன் அல்லது பணியில் இருந்து தூக்கி விடுவேன் என்று சொல்லி மிரட்டியே பெண்டாண்டு இருக்கிறான் என்று செய்திகள் வருகிறது. உமா என்கிற பெண் தன் கால்செருப்பு கொண்டு நையப் புடைத்திருக்கிறாள்.

ரமேசுக்கு அரிப்பு எடித்தால் விலைமாதர்களிடம் செல்லவேண்டியது தானே அல்லது அறுத்து நாய்க்கோ காக்காய்க்கோ போடட்டுமே.
இந்த படத்துக்கும் சற்றுமுன்னில் வந்த இந்தப் பதிவுக்கும் அதன் பின்னூட்டங்களுக்கும் ஏதாவது தொடர்புபடுத்தி நீங்கள் அர்த்தப் படுத்திக்கொண்டால் அதற்கு நான் பொருப்பல்ல. !!


‘‘காலம் காலமாக வேறொரு மொழி கோயில்களில் இருந்து வருகிறது என்று சொல் வதால் மட்டுமே தமிழ் வழி பாடு கூடாது என்று சொல் வது தவறு. ஏழாம் நூற்றாண்டி லேயே தமிழின் மந்திர சக்தியை சமணர்களிடம் அனல் வாதம், புனல் வாதம் செய்து நிரூபித்தார் திருஞானசம்பந்தர். பாம்பு கடித்து இறந்தவனை உயிர்ப்பித்ததும், இறந்த பெண்ணை சாம்பலிலிருந்து மீட்டெ டுத்ததும் தமிழின் மந்திர சக்தியை உலகுக்கு எடுத்துக் காட்டிய சம்பவங்கள். திருக்கோயில் கதவை மூடவும், திறக்கவும் செய்த அந்த மந்திரத் தமிழ், கும்பாபிஷேகங்கள் செய்ய உதவாதா? சகலமும் தெரிந்த சாமிக்குத் தமிழ் தெரியாதா’’

-குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்.

உயர்ந்த ஜாதித் தத்துவம்

நாத்திகனாகவோ, நாத்திகனாவதற்குத் தயாராகவோ, நாத்திகன் என்று அழைக்கப்படுவதற்குக் கலங்காதவனாகவோ இருந்தால் ஒழிய, ஒருவன் சமதர்மம் பேச முடியவே முடியாது. இதுமாத்திரமல்லாமல், சர்வமும் கடவுள் செயல் என்றும், மனித சமூகத்தில் பிறவி மூலமாகவும், வாழ்வு மூலமாகவும் இன்று இருந்து வரும் பிரிவுக்கும், பேதத்துக்கும், உயர்வு - தாழ்வுக்கும் கடவுளே பொறுப்பாளி என்றும், கடவுள் சித்தத்தினால்தான் அவற்றில் ஒரு சிறு மாற்றமும் செய்ய முடியும் என்றும் சொல்லப்படுமானால் - அதை நம்பாமல் இருப்பது நாத்திகமானாலும் கண்டிப்பாக ஒவ்வொரு மனிதனும் நாத்திகனாகத்தான் வேண்டும்.

ஏனெனில், செல்வான்களிடம் இருக்கும் செல்வமும், பார்ப்பான் பாராட்டிக் கொள்ளும் உயர்ந்த ஜாதித் தத்துவமும், கடவுள் கொடுத்தது என்றும், கடவுள் சித்தத்தால் ஏற்பட்டது என்றும் சொல்லப்படுமானால், அந்தக் கடவுளை யார் தான் ஏற்றுக் கொள்ள முடியும்? அதை யார் தான் நிலைத்திருக்க விட்டுக் கொண்டிருக்க முடியும்? எந்த மாதிரியான மூடக் கடவுளும், எந்த மாதிரியான அயோக்கியக் கடவுளும் மனிதரில் ஒருவரை மேல் ஜாதியாக்கிப் பாடுபடாத ஊரார் உழைப்பில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் படிக்கும், மற்றொருவனைக் கீழ் ஜாதியாக்கிப் பாடுபட்டுச் சோம்பேறிகளுக்கு அழுதுவிட்டு, பட்டினியாய், நோயாய், கட்டக் கந்தை அற்று இருக்கவும் இடமற்றுத் திரியும்படியும் சொல்லி இருக்கவே இருக்காது.
கடந்த இரண்டுநாட்களாக நடைபெற்று வந்த அறிக்கை போர்களும் அக்கப் போர்களும் கட்டாங் கடைசியாக ஒரு முற்றிய நிலைக்கு வந்திருக்கின்றன. தம்பி பாவனா பிரிவினைவாத போருக்குப் பின் சிபிக்கும் நயன் தாராவுக்கும் சண்டை முற்றியது இது இரண்டுக்கும் ஏதோ சம்மந்தம் இருப்பதாகவும் இதனால் மணமுவந்த சிபி லீ மெரிடியன் ஓட்டலுள் தனி பார்ட்டி அரேஞ்செய்து பாவனாவை அழைப்பதாக திட்டம் தீட்டியிருந்தார், குசும்பன் பாவனாவின் உண்மையான முகத்தை பாசக்கார குடும்பத்துக்கு காட்டிவிட்டதால் பதிவுலகில் இருப்பதை விட பாழாய் போகலாம் என எக்ஸ்பிரஸ் மேல் தலையை கொடுத்து எக்ஸ்பிரஸை கொல்லவும் திட்டம் தீட்டினார். ஆனா இது எதுவும் நடக்காமல் போனது காரணம் வரமாட்டார் என எதிர்பார்த்த நயன் வந்து சிபியின் சட்டையை பிடித்து உலுக்கி என்னை விட்டு ஓடி போக முடியுமா என்றதும் ஆப் ஆன சிபி இன்னொரு புல்லுக்கும் ஆர்டர் தந்ததாக அங்கிகரிக்கப் படாத வட்டாரக் குசும்புகள் தெரிவிக்கின்றன. ஒரு வழியாக சண்டை "முற்றியது"

அந்த சரித்திரப் புகழ்பெற்ற படம் இங்கே :

சற்றுமுன் தளத்தில் நாசர் ரஜினி காந்தின் சிவாஜி குறித்து சொன்ன விமர்சணத்துக்கு பின்னூட்டமாக தனது பரந்துபட்ட அறிவை வெளிப்படுத்தும் விதத்தில் ஒரு பின்னூட்டத்தை போட்டிருந்தார் நம் எல்லாம் தெரிந்த செல்வன். அந்த பின்னூட்டம் இங்கே


"நீங்கள் சொல்லும் காப்பியடிப்பது தமிழ்சினிமாவில் ஏராளமாக நடக்கிறது..அதை ஒரு
குறைபாடாக வைத்தால் கமலும், நாசருமே முதலில் குற்றவாளி கூண்டில் ஏறவேண்டும்.
மருதநாயகம் ட்ரெய்லர் அப்படியே க்ளாடியேட்டர் மாதிரியே இருக்கிறது:)தேவதை எந்த
ஆங்கிலபடத்து காப்பி என மறந்துவிட்டது..."


இப் பின்னூட்டத்துக்கு மறுப்பும் விளக்கமும் எதிர்பும் தெரிவித்து நான் இட்ட பின்னூட்டம்


"//மருதநாயகம் ட்ரெய்லர் அப்படியே க்ளாடியேட்டர் மாதிரியே
இருக்கிறது:)//செல்வன் என்ன இது பித்தலாட்டம் மருதநாயகம் எடுத்தது 1997 ல்
கிளாடியேட்ட்ர் வந்தது 2000ல் இப்படியிருக்க மருதநாயகம் கிளாடியேட்டரை பார்த்து
காப்பியடித்தது என்று எந்த மடயனும் சொல்லமாட்டான் நீங்கள் சொல்கிறீகள்,
கிளாடியேட்டர் பார்த்தீர்களா? இல்லை வேறு ஏதாவது பார்த்துவிட்டு உளறுகிறீகளா?
வேண்டுமானால் நாளை இது குறித்து பதிவிடுகிறேன்"
இதுகுறித்தே செல்வன் அதே பதிவில் இட்ட இன்னொரு பின்னூட்டம்


இதே போல காலம் குறித்த விவகாரம் அதில் அவரின் பின்னூட்டம்


"அப்படி என்ன தரமான படத்தை இவர் கொடுத்து அதை மதிக்காமல் போய்விட்டார்கள்
என்பதுதான் கேள்வி. நாசர் உளறுவதுபோல் அவதாரத்துக்கு பதில் அருணாச்சலத்துக்கு
விருது தரவில்லை. அவதாரம் வந்தது 1995ல்.அருணாசலம் வந்தது 1998 அல்லது 1999.மனிதர்
எந்த உலகில் வாழ்கிறார் என்பதே தெரியவில்லை."
நடந்தது என்னவென்றே தெரியாமல் ரஜினி காந்துக்கு தாங்குவதற்க்காக, மருதநாயகம் படத்தை க்ளாடியேட்டரோடு ஒப்பிட்டிருப்பது அவர் கொண்டிருக்கும் வலைப் பதிவர்களின் அறிவைப் பற்றிய எண்ணம் வெளிச்சத்துக்கு வருகிரது. இதை தனிப்பதிவாக போடவேண்டிய தேவை இல்லை ஆனால் இப் பதிவை எழுதும் இந்த நேரம் வரை எந்த பதிலும் சற்று முன்னில் வெளிவராத காரணத்தாலும் (ஒருவேளை சன்னாசி அவர்கள் புரட்டி புரட்டி அடித்த பின்நவீனத்துவ பின்னூட்ட அடி இன்னும் வலிக்கிறதோ என்னவோ" ) ஏற்கனவே உடைந்து வலைப்பதிவில் சின்னாபின்னமாகிக் கிடக்கும் ரஜினிகாந்தின் மாயாவாத பிம்பத்தின் மேல் மேலும் கொஞ்சம் எக்ஸ்பிரஸை ஏற்றி காலிசெய்யும் விதமாகவும் இப்பதிவு தேவைப் படுகிறது.
ரஜினி காந்தை யார்வேண்டுமானாலும் தாங்கட்டும் ஆனால் நல்ல கலைஞர்கள் என மதிக்கப்ப்டும், தான் சார்ந்திருக்கும் துறைக்கு கொஞ்சமாவதுநல்ல தனங்களை விட்டுவிட்டுப் போகவேண்டும் என நினைக்கும் கமல், நாசர், போன்றவர்கள் மேல் கல்லாவது எறியாமல் இருக்கட்டும் ரஜினிகாந்தை தாங்குபவர்கள் "இதே பதில் எல்லா விஜய் அஜீத் சிம்பு ரசிகர்களுக்கும் பொருந்தும்."
படப்பெட்டியை விற்று கல்லாப் பெட்டியை நிறப்புவதுதான் தொழில் என்றால் நல்ல படம் என்று குறைந்த பட்ஜெட்களில் எடுக்கப் படும் பிரைவேட் விடியோஸ், விவிட் விடியோஸ், மற்றும் ஷகீலாவின் தாராள மார்பை காட்டும் மலையாளப் படங்களை எடுக்கச் சொல்லலாம். உலகலாவிய பெரிய மார்க்கெட் அந்த படங்களுக்கு உண்டு. ரஜினி காந்தின் படங்களும் அந்த தரத்தில் இருக்கவேண்டும் என விரும்புபவர்கள் சிவாஜியை கொஞ்சநாள் ஏறக்கட்டிவிட்டு மிலோஸ் போர்மென்னின் மேன் இன் தி மூன் பார்க்கலாம் , ட்ரூ மேன் ஷோ பார்க்கலாம். இல்லாவிட்டால் பதிவுகளுக்கு உளரல் பின்னூட்டங்கள் போடாமல் இருக்கலாம்


நாதாறி, பேமானி, மொள்ளமாரி, கருங்கொரங்கு, ஜாட்டான், இழிபிறவி, பரதேசி, பன்னாடை, சைக்கோ, அடிவருடி, கொட்டைதாங்கி, பிரியாணி குஞ்சு, அடியாள், ஒத்தைக்கு ஒத்தை வாடா, சோறுதானே துன்ற, நாறப் பயலே....*******,சே சே நான் நல்லவன்,*********** (அட இந்த வேலையுமா? ),-***************(போடாங்),************* (அட),**********(அய்யோ சந்தேகமா இருந்தா ரெண்டுபேரும் வாங்க)***********, ச்சீய்ய் யூ ஆர் நாட்டி, எனக்கு வெக்கமா இருக்கு.


இன்னும் என்னவெல்லாம் நல்ல நல்ல கெட்ட வார்த்தைங்க இருக்கு போட்டுக்கோங்க இந்த வார்த்தைகளை வச்சி என்ன நான் ஆராச்சியா பன்னப் போறேன் , இல்லே நம்ம எதாவது தமிழ்மண கெட்டவார்த்தை டிக்ஸனரி போட போறோமா, எந்த பதிவை போட்டாலும், யாராவது வந்து புதுப்புது வார்த்தைய போட்டு எனக்கு தெரியாத வார்தைய சொல்லிட்டு போறாங்க. அதுக்குதான் mahendhiranp@gmail.com இருக்குல்ல அங்க வந்து பேசிக்கலாம்யா எதுக்கு டைப்பன்னி நேரத்த வீனாக்குறேன்னா கேக்க மாட்டேங்கிறானுவ. என்னமோ போங்க.


"என்னடா ரொம்ப சவுண்ட் உட்றே ?" " இதுதான் என்னோட லேட்டஸ்ட் கமெண்ட்"

பின்னூட்டம் போடாத பிரச்சனைதான் கண்ணைக் கட்டுத்துன்னு பார்த்தால், ஆளாளுக்கு 'மகி நீ இன்னும்மா "அதிலிருக்க" அவரு கூட என்ன தொடர்பு , நீயும் கேங் ஆளா மொத்தம் எத்தனை பேரு என்பதில் ஆரம்பித்து அட்வைஸ், துக்கம் என ரெண்டு நாளாக போட்டு சாகடிக்கிறாங்க.

உங்களுக்கு என்னதான்யா வேணு ம், இவ்வளவு நாளு கூடி கூத்தடிச்சதெல்லாம் நீங்க, உங்களுக்கு ஆகலைன்னா, நானும் மாஞ்சா கயித்தால் அறுக்கிற மாதிரி படக்குன்னு அறுத்துக்கனுமா ?

மூக்கும் மூக்கும் ஒரசிக்குவிங்க, ஓசி டி குடிச்சிப்பிங்க, எதாவது உங்களுக்குள்ள சண்டைன்னா சொல்றவனைவிட்டுட்டு, எலே ஒன்னாலதாண்டா அவன் ஆடுறான் ன்னு எங்கிட்ட ஒப்பாரி.

அட போங்கப்பபா, நாளைக்கே ஓசி போண்டா பங்கசனுக்கு கூப்பிட்டு பொறையும், டீயும் துண்ணுப்புட்டு தோழா நீ தான் போர்வாள் னு ஒட்டிக்கிட்டா, உங்கள நம்பி முகத்தை திருப்பி வச்சக்கிட்ட நான் அப்பால எங்கிட்டு போய் முட்டிகிறது. ஆங் இன்னொன்னு போலிக்கும் எனக்கு என்ன தொடர்பா ? சாயங்காலம் நண்பர் கொண்டுவந்து கொடுத்தார் கருப்பு போலி, சாரி பருப்பு போலி. போலிக்கு சுண்டெலிக்கு போடுகிற சின்ன 'லி' போடனுமா இல்லாட்டி பெருச்சாளிக்கு போடுகிற பெரிய 'ளி' போடனுமா ? ஒன்னும் தெரியலையா ?

வருகடலையை போட்டுட்டுட்டு போங்கப்பா.

என்னோட எய்ட்ஸ் பத்தி முன்னடியே எக்ஸ்பிரஸ்ல கொஞ்சம் சொல்லியாச்சி மீதிய இங்க சொல்றேன் ( எப்படியோ இன்னிக்கு ஒரு லிங்க் போட்டு டெக்னொராட்டில கொஞ்சம் பாயிண்ட் கிடைக்காதா எக்ஸ்பிரஸுக்குன்னு ஒரு நப்பாசைதான்) :)

5. குவாட்டர் கோவிந்தன் மாதிரி எப்பவும் ஏடாகூடமா சிந்திச்சி :) எவன்கிட்டயாவது திட்டு வாங்குறது. எல்லாருக்கும் ஒரு ஒத்த கருத்து இருந்தா யாருமே சொல்லாதத எனக்கே புரியாத அளவுக்கு விளக்கி அவன் நம்மள பாத்து இவன் மண்டைக்குள்ள மசாலா அதிகம்டோய்னு பிரமிச்சி எடத்த காலிபன்ற வரைக்கும் விடாம பேசுறது (தெகா, கவணிக்க) :) பள்ளிக் கூடத்தில 9ம் கிளாஸ் படிக்கும்போது அறிவியல் பாடத்தில ஒரு சந்தேகம் கேட்டு வாத்தியாரையே மண்டைக்காய வச்சது (ஒன்னுமில்லை பெரிசா "நம்ம வயிற்றில இருக்கிற அமிலம் ஒரு ஆணியக் கூட கறைக்கிற சக்தி கொண்டதுடா அதனால தான் நாம் சாப்பிடுவதெல்லாம் செரிக்குதுன்னு சொன்னார்" "அப்ப நம்ம குடல் ஏன் சார் செரிக்காம இருக்குன்னு கேட்டதுக்கு அவரு பேயறஞ்ச மாதிரி ஆயிட்டார். :) ) இந்த மாதிரி பல பெருமைகளுக்கு சொந்தக்காரன். இன்னொன்னு நமக்கு கடவுள் நம்பிக்க அப்பவே இல்லை. ஆனா விநாயகர் சதுர்த்திக்கு பள்ளிக் கூடத்தில நடந்த ஓவியப் போட்டியில கலந்துகிட்டு வித்யாசமா ஒரு புள்ளையார படம் வரைஞ்சு முதல் பரிசெல்லாம் வாங்கியிருக்கேன். 12 ம் வகுப்பில ஏகப்பட்ட லீவு போட்டும் நல்ல மார்க் எடுத்து பாஸ் பன்னினது.

6. 12ம் வகுப்பு முடிஞ்சதும் எல்லாருக்கும் இருக்கும் காதல் எனக்கும் தொத்திக்க யாரப் பாத்தாலும் கொலவெறிக் கவுஜயா அள்ளி விட்டு எங்க கூட படிச்ச பொன்னுங்க எல்லாத்தையும் நாய் சேகர பாத்த ஜோதிர்மயி கணக்கா தொரத்தி யடிச்சது (இப்ப எல்லாருக்கும் கல்யாணம் ஆயிடுச்சி.. ஆனா இதுக்கெல்லாம் கலங்க மாட்டோமில்ல நாங்கன்னு என்னையும் கட்டிகிட்டு வந்ததுதான் என் மனைவிக்கு ரொம்பத் தெகிரியம். ) என்னை மாதிரியே கருத்துக் களத்தில கலக்க(ஐ மீன் மிக்ஸ்) முடியலேன்னாலும் தன்னோட எண்ணம் என்னன்னு எல்லாருக்கும் புரியவச்சி இன்னிக்கு வரைக்கும் நல்ல பேரை அவங்க மாமியார் கிட்ட வாங்குறாங்களே அந்த பெருமை.

7. துபாய் வந்த பிறகு என்ன வேலை செய்தாலும் எவனாவது எனக்கு எதிரா ஆப்படிக்கன்னு மேலதிகாரியா வரும்போது அவனுக்கு சோப்புப் போடாம அடுத்த எடம் தேடி அசராம சேந்துக்குவேன். சோப்புப் போட்டாத்தான் கிடைக்குமின்னா நான் ஊர்லயே சோப்பு போட்டு ஒரு தொழில தொடங்கியிருப்பேன் ஆனா லஞ்சத்தையும் அடிவருடித் தனத்தையும் தனிமனுசனா ஒழிக்க ஒவ்வொருத்தனும் முன்வராத வரைக்கும் யாரும் எதுவும் பன்ன முடியாதுன்னு நம்பி அதுபோல இன்னிக்கு வரைக்கும் ஒத்தை பைசா கூட லஞ்சம்ங்கிற பேர்ல தராமலே இருக்கிரது.( ஒருதடவை இதுக்காக எங்க ஊர் மணியாரர (வி.எ.ஓ) நடு ரோட்டில நிருத்தி அட்வஸ் மழ பொழிஞ்சதில அதுக்கப்புறம் தல என்னைய பாத்தா ஒரு நமுட்டுச் சிரிப்போட எஸ்கேப்பாகும் (இதுல கொடுமை என்னன்னா அவ்ரு எங்க அப்பாவுக்கு நண்பர் பக்கத்து ஊர்க்காரர்) அதுக்கப்புறமா யாருக்காவது கையெழுத்து வாங்கனுமின்னா கையில காசே கொடுத்தாலும் வாங்கரதில்லே அந்த வகையில ஒரு மனுசனயாச்சும் மனசாட்சிக்காக நடக்கவச்ச இந்தியன் நான்.

8. இது எல்லாத்துக்கும் மேல எந்த விஷயத்தையும் ஆராய்ஞ்சி அது சரின்னு பட்டா யாரு எத்தனை எதிர்ப்பு வந்தாலும் கொஞ்சம் கூட கவலைப்படாம நான் சொன்னதை செஞ்சே தீருவேன்கிற பிடிவாதம். இன்னைக்கு வரைக்கும் இது எனக்கு ஏகப்பட்ட பலனை கொடுத்திருக்கு. என்னோட கல்யாணத்தில இருந்து நான் விவசாயம் பாத்தது வரைக்கும். நான் படிச்சி முடிச்சதும் எதாவது வேலைக்கு போகனும்கிறது எங்க அம்மாவோட விருப்பம் ஆனா விவசாயம் பாக்கப் போரேன்னு பிடிவாதமா 5 வருசம் தீவிர விவசாயம் பன்னியது. விவசாயம் முன்னேறினா மட்டுமே ஒரு நாடு முழு தன்னிறைவு பெற்ற நாடா மாற முடியும்கிறதில அசைக்க முடியாத நம்பிக்கையோட இன்னும் தீவிர விவசாயக் காதலனா இருக்கிறது. இதுக்கெல்லாம் காரணமான எங்க அப்பா . எங்க அப்பா விவசாயம் பாத்தா என்னவெல்லாம் பன்னலாம்னு சொல்லும்போதும் அது எவ்வளவு கஷ்டம் தருகிற தொழில்ன்னு சொல்லும் போதும் அதுக்கெல்லாம் தயங்காம நீயும் விவசாயம் பாருடான்னு சொல்லும் துணிச்சல். இந்த திராவிடப் பற்று, மாற்றுச் சிந்தனைக்கும் கருத்துக்கும் எப்பவும் ஆதரவு தருகிற அந்த குணம் எல்லாம் எங்க அப்பா மூலமா வந்ததுங்கிர பெருமை.

....இந்த எட்டு ஆட்டம் இத்தோட முடிஞ்சது இல்லை. இன்னும் யாரெல்லாம் எட்டு போடாம இருக்காங்கன்னு தெரியலை அதையெல்லாம் தேடி ஒரு எட்டு பாவப் பட்ட ஆட்களை இங்க புடிச்சிகிட்டு வாரவரைக்கும்
இந்த எட்டு பதிவுக்கு விதிகளாய்...

தன்னை பற்றிய எட்டு சுய தம்பட்டங்களை பப்ளிக்கா சொல்லுங்க.
இன்னும் எட்டு போடாத லைசன்ஸ் வாங்காத எட்டுபேரை இத்துகினு வாங்க
அதை அவங்களுக்கு மயிலோ இல்லை ரயிலோ இல்ல புறாவோ அனுப்பி அவங்களையும் கோதாவுக்கு ரெடி பன்னுங்க