'விவசாயம் செய்தார் ஜெயலலிதா!''
''நல்லம நாயுடு தலைமையில் செயல்பட்ட தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் என் கட்சிக்காரரின் சொத்து மதிப்பை மிகைப்படுத்தி காட்டினார்கள். ஆனால், அவருக்கு விவசாய நிலத்தில் கிடைத்த வருவாய்களை திட்டமிட்டு வேண்டுமென்றே குறைத்து மதிப்பிட்டு காட்டியிருக்கிறார்கள்.
ஹைதராபாத் திராட்சை தோட்டம் மற்றும் அதே மாநிலத்தில் உள்ள ரங்காரெட்டி மாவட்டத்தில் பஷிராபாத்தில் உள்ள விவசாய நிலங்களில் விளைந்த திராட்சை, கத்திரி, வாழை, தேங்காய், மாம்பழம், சீத்தாபழம், பப்பாளி பழங்கள் விவசாயம் செய்ததில் 1992-93-ம் ஆண்டில் கிடைத்த வருமானம் 9,50,000 ரூபாய். 1993-94-ல் கிடைத்த வருமானம் 10,50,000 ரூபாய். 1994-95- ல் கிடைத்த வருமானம் 11,00,000 ரூபாய். 1995-96-ல் கிடைத்த வருமானம் 10,00,000 ரூபாய். 1996-97-ல் கிடைத்த வருமானம் 11,50,000 ரூபாய். ஆக வழக்கு நடைபெறும் ஐந்து ஆண்டுகளில் விவசாய நிலத்தில் கிடைத்த மொத்த வருமானம் 52,50,000 ரூபாய். ஆனால் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் 5 வருடங்களில் இந்த நிலங்களில் கிடைத்த வருமானமாக 5,78,340 ரூபாயாக குறைத்து மதிப்பிட்டுள்ளனர்'' என்று வாதிட்டார். ஜெயலலிதாவின் வழக்கறிஞர் குமார்.
‪#‎அம்மையார்‬ இந்த காலங்களில் எந்த வருமானமும் இல்லாமல் இருந்ததால் வருமானவரி கட்டாத வழக்கு ஒன்றும் இன்னொரு பக்கம் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தம்மா இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தையும் , குற்றவியல் சட்டத்தையும் மாத்தாம விடாது போல. யோவ் எதாச்சும் ஒன்னுல தூக்கி உள்ள போடுங்கய்யா
நாங்களும் எப்பத்தான் ஓபிஎஸ் ஐ முதல்வரா பாக்குறது?

2 comments:

Anonymous said...

சர்க்காரியா கமிஷன்ல இருந்து அய்யா தப்பிச்ச மாதிரி அம்மாவும் தப்பிப்பாங்க,,, கவலை வேணாம்

கும்மாச்சி said...

எப்படியும் தப்பிப்பாங்க இல்ல எப்படியாவது தப்பிப்பாங்க ஆப் கி பார் மோடி சர்க்கார் வந்திருச்சில்ல.