பின்னூட்ட (நயா)நாயகரா?

இந்த பதிவு எழுத காரணம் ஜிகே என என்னாலும் சிலரால், கோவியாரே என்றும், சிலர் GK என்றும், அவரால் கோவி கண்ணன் என்றும், செந்தமிழ் ரவியால் பின்னூட்ட நாயகர் என்றும் துப்பறியும் சாம்புவால் கரோலின் விவகாரத்தில் அடிபட்டவர் என்றும் அழைக்கப்படும் திரு . கோவி.கண்ணன் அவர்கள் தனது பதிவுக்கு வந்த ஒரு பின்னூட்டத்துக்கு ஒரு பதிலில் இவ்வாறு சொல்கிறார்..

"நான் எந்த பதிவையும் உ முதல் உ வரைப் படிப்பதில்லை."

அப்படியென்றால் படிக்காமல் எப்படி எல்லா பதிவுகளுக்கும் பின்னூட்டம் போடுகிரார்? இவருக்கு பின்னூட்ட நாயகர் பட்டம் செல்லுமா? செல்லாதா என்று சொல்லுங்கள்?

101 comments:

கோவி.கண்ணன் [GK] said...

மகேந்திரன்.பெ said...
//நான் எந்த பதிவையும் உ முதல் உ வரைப் படிப்பதில்லை.//

மகி ஆமாம் ... !

எந்த பதிவின் உ.கு, உள்விவகாரம் (பாலிட்டிக்ஸ்) இதெல்லாம் படிப்பதில்லை !
:))

செந்தில் குமரன் said...

யாரைக் கேட்கிறாய் கேள்வி.

பதிவிடப் படும் எல்லா பதிவுகளுக்கு சென்றாயா? இல்லை பதிவுகளுக்கு சென்று நக்கல் பதில் கொடுத்தாயா? விடாது கருப்பு அவர்களை ஆறு விளையாட அழைத்தாயா? இல்லை SKவுடன் அவர்களை பாலியல் விழிப்புணர்ச்சி குறித்து பதிவிடத் தான் விளம்பினாயா? புது வாத்தியார் சுப்பையாவின் பதிவுக்காவது சென்றாயா?

மேலும் கட்ட பொம்மன் ஸ்டைலில் அடிக்கத் துடிக்கிறது நெஞ்சம். என்ன அடிப்பது என்று தெரியாததால் அடங்கு அடங்கு என்று அடக்குகிறது மூளை.

மகேந்திரன்.பெ said...

//எந்த பதிவின் உ.கு, உள்விவகாரம் (பாலிட்டிக்ஸ்) இதெல்லாம் படிப்பதில்லை !
:)) //

அதெல்லாம் ஒத்து வராது. நீங்க ஸ்மைலி போட்டாலும் சரி இல்லை நெற்றிக்கண்ணை திறந்தாலும் சரி நான் சொன்னா சொன்னதுதான்

Anonymous said...

அனானிளை வாழ வைக்கும் எங்கள் தங்கம் மகி வாழ்க!!!!

எங்கு சென்றலும் அவருக்கு எங்கள பத்திய எண்ணம் தான்..

GK, கவனமாக இருங்கள், இல்லன்னா எங்க கவனம் ஒங்க பக்கம் திரும்பிட வாய்ப்பு உண்டு...

இப்படிக்கு,
மகி முன்னேற கழகம்
அல்சுர், பெ.

செந்தழல் ரவி said...

அல்சூர்ல இருந்து எல்லாம் போடுறீங்களா...எங்க ஆபீஸ் டொம்ளூர்ல இருக்கு...இனிமே இடத்தை மாத்துங்க...

:))))))))))

மகேந்திரன்.பெ said...

//யாரைக் கேட்கிறாய் கேள்வி.

பதிவிடப் படும் எல்லா பதிவுகளுக்கு சென்றாயா? //

ஒரு முக்கியமானது விட்டுபுட்டீங்க" அனானிமஸாக பின்னூட்டம் போட்டாயா?"

வாத்தியார் வணங்காமுடி said...

இஞ்சினீயரிங் காலேஜில் படிச்சா இஞ்சினீயர் ஆகலாம்...

பிரெசிடென்ஸி காலேஜில படிச்சா பிரசிடெண்ட் ஆக முடியுமா ?

அதெப்போல...உ ல இருந்து ஊ வரைக்கும் தானே படிக்க கூடாது ??

மகேந்திரன்.பெ said...

//எங்கு சென்றலும் அவருக்கு எங்கள பத்திய எண்ணம் தான்..//

நீயின்றி நானில்லை...... நீரின்றி மழையில்லை... வாங்கப்பா GK இன்னும் ஒன்னு உங்களை சொல்றாரு... ஏமாந்த அனானிகள் தான் வந்து என் பதிவுக்கு பின்னூட்டம் போடுவீங்களாம்? அப்படியா ?

Anonymous said...

இப்போ எல்லாம், அனானியா இருந்த பலர் பதிவை ஆரம்பிச்சி அதுக்கு எவனா பின்னூட்டம் போடுவானா என்று வழிமேல விழிய வச்சி காத்திருக்கோம்...

சாலைப்பணியாளர் சன்முகம் said...

///வழிமேல விழிய வச்சி காத்திருக்கோம//

வழிமேல வைக்காதீங்க, எவனாவது மிதிச்சிட்டு போயிடப்போறானுங்க..

மகேந்திரன்.பெ said...

//இப்போ எல்லாம், அனானியா இருந்த பலர் பதிவை ஆரம்பிச்சி அதுக்கு எவனா பின்னூட்டம் போடுவானா என்று வழிமேல விழிய வச்சி காத்திருக்கோம்... //

அட்ரஸ் மட்டும் சொல்லுங்கப்பா நாங்க எதுக்கு இருக்கோம்?

டெங்கு காய்ச்சல் டொக்டர் said...

பல்வலி வந்தா பல்லை புடுங்கலாம்..

ஆனா கால் வலி வந்தா காலை புடுங்க முடியுமா..

அதனால், உ டூ உ என்பதே சரி.

மகேந்திரன்.பெ said...

//அல்சூர்ல இருந்து எல்லாம் போடுறீங்களா...எங்க ஆபீஸ் டொம்ளூர்ல இருக்கு...இனிமே இடத்தை மாத்துங்க...

:)))))))))) //

பெங்களூர்னு சொன்னாங்க?

சமையல் சங்கரலிங்கம் said...

பாலில் இருந்து கிடைப்பது - பால்கோவா

என்று வைத்துக்கொண்டால்

ரசத்தில் இருந்து கிடைப்பது - ரசகுல்லாவா தலைவா ?

செந்தழல் ரவி said...

///பெங்களூர்னு சொன்னாங்க?///

டொம்முளூர் ஒரு ஏரியாங்க..

அனானிகள் பின்னூட்ட சங்கம் said...

அனானிகளுக்கு கதவை அடைக்கும் ஜிகே அவர்களுக்கு இனி ப்ளாகர் அக்கவுண்ட் ஆரம்பித்தாவது பின்னூட்ட போராட்டம் நடத்துவோம்

அனானிகள் பின்னூட்ட சங்கம்
சிங்கப்பூர்...சிறைச்சாலை,
ஜிகே வீட்டு கடைசி தெரு.
சிங்கப்பூர்

செந்தமிழ் ரவி தற்கொலைப் படை said...

இங்கே வந்த எங்கள் சங்கத்து கொள்கை சிங்கம் செந்தமிழ் ரவி வாழ்க!

Anonymous said...

நான் ஒன்னு டிரை செய்யுறேன் பாருங்க

செல்லுல இருந்து எஸ்.எம்.எஸ் அனுப்பலாம்..

ஆனா, எஸ்.எம்.எஸ் ல இருந்து செல்லை அனுப்ப முடியுமா ?

- சந்தனமுல்லை

மகேந்திரன்.பெ said...

//ஆனா கால் வலி வந்தா காலை புடுங்க முடியுமா//

நெவர் கால் வலியில் காலைப் பிடுங்கினால் "கல்' வலியாகிவிடாதா?

பூந்தியக்கா said...

நாங்க இதை குருவிக்கூடு போட்டிக்கு அனுப்ப போறோம்..

ஜீக்கேவிடம் கேட்டு சொல்லுங்க.

ஒரு ஊர்ல ஒரு பூந்தி..
அது ஒரு மிச்சர் கடையில் இருக்கு..
ஒரு நாள் கோ.வி.கண்ணன் அதை வாங்கிக்கிட்டு போயி திங்குறார்..
அப்போ அந்த பூந்தியோட ஒரே வாணலில் தயாரான பூந்தி அக்கா என்று அழுவுது..

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

மகேந்திரன்.பெ said...

//வழிமேல வைக்காதீங்க, எவனாவது மிதிச்சிட்டு போயிடப்போறானுங்க.. //

இந்த ஆண்டுக்கான சிறந்த தற்காப்பு தத்துவம்

மகேந்திரன்.பெ said...

//ரசத்தில் இருந்து கிடைப்பது - ரசகுல்லாவா தலைவா //

அதானே? பீடியில பொகை வருதுங்குறதால எல்லாமே எக்ஸ்பிரஸா ஆயிடுமா?

Anonymous said...

//ஒரு முக்கியமானது விட்டுபுட்டீங்க" அனானிமஸாக பின்னூட்டம் போட்டாயா?"//

தல, GK அனானி எதிரி, எங்கள அவர் பக்கத்தின் உள்ள விடுவது இல்ல...

ராசா, ஒன்ன மாதிரி எல்லொரும் நல்லவகள இருப்பாக?

ஆம் செந்தழலாரெ!....எனக்கு தெரியும் நீங்க பெங்களூர் அப்படின்னு...

சவுத் இண்டியன் said...

என்னால மட்டும்தான் ஆயிரக்கனக்கான பின்னூட்டம் போட முடியும்..

ஹிந்திக்காரன் "சீடானா" என்று சொல்லுவான்..

அந்த கைப்புக்கிட்ட போய் இதை சொல்லுங்க :))))))))))

மகேந்திரன்.பெ said...

ஆகா ஆகா இன்னிக்கு ஒரே தத்துவமா வருதே இதை வச்சி ஒரு புத்தகம் போட்டு அதை நம்ம அனானி சங்க முன்னேற்றத்துக்கு பயன்படுத்துனா என்னா?

செந்தழல் ரவி said...

///ஆம் செந்தழலாரெ!....எனக்கு தெரியும் நீங்க பெங்களூர் அப்படின்னு...///

ஓக்கே ஓக்கே...

மகேந்திரன்.பெ said...

//தல, GK அனானி எதிரி, எங்கள அவர் பக்கத்தின் உள்ள விடுவது இல்ல...//

நம்மை உள்ளே விடவில்லை என்று கலங்கவேண்டாம் தோழர்களே" காலம்" இதற்கு கண்டிப்பாக பதில்சொல்லும் ஒரு நாள் அவருக்கும் அனானிகள் மேல் மதிப்பு வரும்

புலி said...

அனானிகள் என்றால் இளக்காறமா ஜிகே அவர்களே? நான் கேட்கவில்லை எங்கள் சங்க சிங்கம் கேட்கிறது

Anonymous said...

இந்தாங்க இத்தையும் புடிங்க.

பேஸ் வாஷ் னா முகம் கழுவறது.
ஹேண்டு வாஷ் னா கை கழுவறது.

பிரெய்ன் வாஷ் னா மூளையை கழுவறதா ?

இதுக்கு என்ன பதில் ?

கோவியார். பாசறை, said...

படிக்காமல் பின்னூட்டம் போடுபவருக்கு பின்னூட்ட நாயகர் பட்டம் தந்த ரவி அதை என்ன செய்யப் போகிறார்?

கோவியார். பாசறை,
கடிகார கடை சந்து
டைம்ஸ் ஸ்கொயர்..
ஓல்ட் யார்க்

செந்தழல் ரவி said...

///நம்மை உள்ளே விடவில்லை என்று கலங்கவேண்டாம் தோழர்களே" காலம்" இதற்கு கண்டிப்பாக பதில்சொல்லும///

இது மேட்டர்.

மகேந்திரன்.பெ said...

//அந்த கைப்புக்கிட்ட போய் இதை சொல்லுங்க :)))))))))) //

ஆம் யாரங்கே அங்கே நிற்கும் கைப்புள்ளைக்கு கால் என்று சொல்லுங்கள்....ஹா..ஹா கைப்புள்ளை காலிங் அப்போ கைப்புள்ளைக்கே காலிங் இப்போ இதுக்கு பேருதான் அனானி பவர்

மகேந்திரன்.பெ said...

//இந்தாங்க இத்தையும் புடிங்க.//

சொல்லுங்க தத்துவானானி புத்தகம் போடலாம் போல இருக்கே ?

செந்தழல் ரவி said...

///படிக்காமல் பின்னூட்டம் போடுபவருக்கு பின்னூட்ட நாயகர் பட்டம் தந்த ரவி அதை என்ன செய்யப் போகிறார்?///

கொடுத்த பட்டத்தை எல்லாம் திருப்பி கேட்க முடியுமா ?

அவர் அனானி பின்னூட்டம் அனுமதிக்கலைன்னவுடன் இவ்வளவு டெண்ஷன் கூடாது...

:)))))))))))))))))))))

Anonymous said...

தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும்...

ஆனா இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வருமா ?

தெரியலியேப்பாபாபா..( சிவாஜி பாணியில் படிக்கவும்)

தம்பி said...

விளையாட்ட ஆரம்பிச்சிட்டிங்களா மகி!!

தம்பி said...

டார்கெட் எவ்வளவு?

மூன்று கிழவர்களின் கதை said...

வலையில் மூன்று கிழவர். ஜீ.கோகவன்

ஒருவர்

சென்னை தமிழில் இருந்து தூய தமிழுக்கு மொழிபெயர்ப்பு

இன்னொருவர்

டைரியில் இருந்து ஒரு பக்கத்தை ஒரு நாளைக்கு கிழித்து வந்து திரும்பி பார்ப்பவர்

இன்னொருவர்

புரியாத பாஷையில் கண்டதை எழுதும் மார்ச்சுவரி ஊழியர்.

இவர்கள் மூவரும் அனானி பின்னூட்டத்தை அனுபதிப்பதில்லை

இதை வன்மையாக கண்டிக்கிறோம்..

சம்பந்தப்பட்ட பதிவர்கள் இந்த கிண்டலை அன்போடு மன்னிப்பார்கள் என்று அனானிகள் முன்னேற்ற கழகம் நம்புகிறது.

தம்பி said...

இன்னிக்கு பொழுது போயிடும் சூப்பரா!!

அனானிகளே நல்லா அடிச்சி ஆடுங்க!!

மகேந்திரன்.பெ said...

//ஆனா இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வருமா ?///


இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் நிக்கும் ஆனா தூக்க மாத்திரை சாப்பிட்டா தூக்கம் நிக்குமா?

மகேந்திரன்.பெ said...

//விளையாட்ட ஆரம்பிச்சிட்டிங்களா மகி!! //

ஆமாங்க ஆட்டத்துக்கு வற்றீங்களா/ இன்னிக்கு ஜிகே தான் மாட்டினாரு :)

செந்தழல் ரவி said...

///இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் நிக்கும் ஆனா தூக்க மாத்திரை சாப்பிட்டா தூக்கம் நிக்குமா?///

அனானியின் கேள்விக்கு அதிரடி பதிலா ? நடத்துங்க..

Anonymous said...

வாழை மரத்தில் இருந்து கிடைப்பது தார்

ஆனா அதை வச்சு ரோடு போட முடியுமா ?

இதுக்கு இன்னா நைனா சொல்லுற..

கோவி.கண்ணன் [GK] said...

// மகேந்திரன்.பெ said... ஆமாங்க ஆட்டத்துக்கு வற்றீங்களா/ இன்னிக்கு ஜிகே தான் மாட்டினாரு :) //

மகி,

வெளையாடுங்க வெளையாடுங்க..!

லக்கியார்பதிவில் மகிக்கு அனானிகள் செய்த மரியாதையை ஞாபகம் வைத்துக் கொண்டு விளையாடுங்க !

:))

Anonymous said...

டார்கெட் அரை மணி நேரத்தில் 50.

கப்பி பய said...

என்ன இது சிறுபுள்ளத்தன்மா சண்டை போட்டுகிட்டு?

ப்யூஸ்போவாஸ்க்கி said...

டேய், நான் ரஷ்ய மொழியில் எழுதியதை எல்லாம் காப்பிரைட் இல்லாம எவண்டா வலைப்பதிவில் வெளியிடுவது ?

கப்பி பய said...

GK,
'மகி அனானிகளின் காட்பாதரா?' ன்னு பதிவு ரெடியா இருக்கு...எடுத்து விடுவோமா?? :))

மகேந்திரன்.பெ said...

//அனானியின் கேள்விக்கு அதிரடி பதிலா ? நடத்துங்க..//

பின்ன அசந்தா வேற யாராவது பட்டம் தட்டுறாங்கப்பா ஏற்கனவே ஒரு க்ரூப்பு கிளம்பி ஆபத்தான, குழப்பம் விளைவிக்கும் அனானி, அதர் ஆப்ஸன் இருப்பதால் ப்ளாகர் வெடித்துவிடும் என்று எச்சரிக்கை அவங்களுக்கு முதல்ல பாடம் சொல்லி குடுக்கனும் அனானியோ இல்லை, அதரோ எல்லாம் நம்ம நடந்துக்குர விதம்தான் காரணம்

கொத்தவரங்கா எதிரிக்காலம் said...

நானே ரசிக்காத அளவில், வாந்தி வரும் அளவுக்கு, நாறிப்போன கதி களை எழுதிக்கொண்டு இருக்கிறேன்..

:)))))))))))))))))))))

புரியவேண்டியவங்களுக்கு புரிந்தா சரி.
அதுலயும் இந்த ஜீ.கே படிக்காம பின்னூட்டம் போட்டா,

லக்கிலூக் தற்கொலைப்படையை அனுப்பி அவரை உடலெல்லாம் சொறியும் வகையில் செய்து விடுவோம்..

சுனில் கவாஸ்கர் பேரன் said...

//அனானிகளே நல்லா அடிச்சி ஆடுங்க!! ///
ஆமா எல்லாம் சின்னதா இருந்தாலும் சிக்ஸ்ரா இருக்கட்டும்பா

சுனில் கவாஸ்கர் பேரன்

மகேந்திரன்.பெ said...

//டார்கெட் எவ்வளவு//

//அனானிகளே நல்லா அடிச்சி ஆடுங்க//

டார்கட்வைக்க இது கிரிக்கட்டும் இல்லை,,,,, அடிச்சி விளையாட அனானிங்க ஒன்னும் விளையாட்டுப் புள்ளைகளும் இல்லை ஆமா ... டேக் ரெஸ்பெக்ட்..அன்ட் கிவ் ரெஸ்பெக்ட்....

செந்தழல் ரவி said...

////பின்ன அசந்தா வேற யாராவது பட்டம் தட்டுறாங்கப்பா ஏற்கனவே ஒரு க்ரூப்பு கிளம்பி ஆபத்தான, குழப்பம் விளைவிக்கும் அனானி, அதர் ஆப்ஸன் இருப்பதால் ப்ளாகர் வெடித்துவிடும் என்று எச்சரிக்கை அவங்களுக்கு முதல்ல பாடம் சொல்லி குடுக்கனும் அனானியோ இல்லை, அதரோ எல்லாம் நம்ம நடந்துக்குர விதம்தான் காரணம்/////

அதானே...ஒழுக்கமா இருந்தா எவன் திட்டி பின்னூட்டம் போடபோறான்..

எவனுக்குமே வேலை வெட்டி இல்லையா என்ன ?

அதர் ஆப்சனை எடுக்க சொல்லி அமெரிக்க அதிபருக்கு மடல் அனுப்பினேன்..

காங்கோ அதிபருக்கு போன் செய்தேன்..

நீங்க புலிக்குட்டி சோதனை செய்தீங்களா..

இது பயங்கரமான ஆப்சன்..

அதர் ஆப்சன் வழியா வைரஸ் வரும் என்று

"வேப்பமரத்து உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுது" மாதிரி

பயந்து நடுங்கினா எப்படி ?

தம்பி said...

//சுனில் கவாஸ்கர் பேரன்//

சுனில் கவாஸ்கர் மகனுக்கே வழி இல்லாம போச்சு, இதுல பேரன் வேறயா!!

பேராண்டி நீயாச்சும் நல்லா அடிச்சி ஆடுப்பா, செல்லம் தாத்தா மானத்த காப்பாத்து!!

செந்தழல் ரவி said...

///எந்த பதிவின் உ.கு, உள்விவகாரம் (பாலிட்டிக்ஸ்) இதெல்லாம் படிப்பதில்லை !
:))///

ஏங்க, கோவியார் முதலிலேயே பதில் கொடுத்துவிட்டாரே...

நாம் வீண் கும்மி அடிப்பது போல் உள்ளது :))))))))))

Johan-Paris said...

சரி!
அண்ணன் மனைவி அண்ணி!; தம்பி மனைவி தண்ணியா???!!!!

என்ன?,சொல்லுறீங்க!
யோகன் பாரிஸ்

Anonymous said...

////"வேப்பமரத்து உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுது" மாதிரி.///

மேற்க்கொண்டு என்ன வரும் ?

- முகில்

மகேந்திரன்.பெ said...

ஆனா அதை வச்சு ரோடு போட முடியுமா ?

இதுக்கு இன்னா நைனா சொல்லுற.. //

தார் ரோட்டுல இருக்க வாழைமரம் பழம் கொடுக்குமா?

தம்பி said...

//... டேக் ரெஸ்பெக்ட்..//

எடுத்துகிட்டேன்!

அன்ட் கிவ் ரெஸ்பெக்ட்....

குடுத்துகிட்டுதான் இருக்கேன்!!

மகேந்திரன்.பெ said...

//லக்கியார்பதிவில் மகிக்கு அனானிகள் செய்த மரியாதையை ஞாபகம் வைத்துக் கொண்டு விளையாடுங்க !//


ஜிகே நீங்க அதுக்கு பிறகு நாங்க சமாதானமா போனது பத்தி படிக்கலையா/ ?

மகேந்திரன்.பெ said...

//'மகி அனானிகளின் காட்பாதரா?' ன்னு பதிவு ரெடியா இருக்கு...எடுத்து விடுவோமா?? :)) //
கப்பி எடுத்து விடுங்க எடுத்து விடுங்க

Anonymous said...

//நம்மை உள்ளே விடவில்லை என்று கலங்கவேண்டாம் தோழர்களே" காலம்" இதற்கு கண்டிப்பாக பதில்சொல்லும் ஒரு நாள் அவருக்கும் அனானிகள் மேல் மதிப்பு வரும்//

அந்த நன்னாள் வரட்டும்...நாமும் பாடுவோம்....'அந்த நாள் முதல் இந்த நாள் வரை அனானி மாருவதில்லை'

மகேந்திரன்.பெ said...

//அண்ணன் மனைவி அண்ணி!; தம்பி மனைவி தண்ணியா???!!!!
என்ன?,சொல்லுறீங்க!//


அண்ணன் மனைவிய அண்ணினு கூப்பிடலாம் ஆனா தம்பி மனைவி தாகத்துக்கு இல்லை

மகேந்திரன்.பெ said...

//ஏங்க, கோவியார் முதலிலேயே பதில் கொடுத்துவிட்டாரே...

நாம் வீண் கும்மி அடிப்பது போல் உள்ளது :)))))))))) //

அவ்ரோட பதிலை நான் நிராகரித்து விட்டேன் (வசூல் ராஜா ஞாபகம் வருமே?)

நாமக்கல் சிபி said...

என்னதான் 4 காக்கா சேர்ந்து வந்து கத்தினாலும் அதை முழுக்கான்னு சொல்ல முடியுமா?

நாமக்கல் சிபி said...

என்னதான் 4 காக்கா சேர்ந்து வந்து கத்தினாலும் அதை முழுக்கான்னு சொல்ல முடியுமா?

மகேந்திரன்.பெ said...

//டார்கெட் அரை மணி நேரத்தில் 50.
//

இன்னிக்கும் ஒரு சைபர விட்டாச்சா?

மகேந்திரன்.பெ said...

யாருப்பா அது கொத்தவரங்கா நீ இப்ப இன்னாதான்பா சொல்றே?

மகேந்திரன்.பெ said...

//என்னதான் 4 காக்கா சேர்ந்து வந்து கத்தினாலும் அதை முழுக்கான்னு சொல்ல முடியுமா? //

காக்கா என்னிக்குங்க காக்கான்னு கத்துச்சி? அதுக்கு ஒரு கா மட்டும்தான் முடியும்

மகேந்திரன்.பெ said...

//குடுத்துகிட்டுதான் இருக்கேன்!! //

அதானே அடுத்த ஆட்டம் யாராவது கூப்பிட்டா போகவேனாமா? ரெஸ்பெக்ட்தான் முக்கியம்

மகேந்திரன்.பெ said...

//அந்த நன்னாள் வரட்டும்...நாமும் பாடுவோம்....'அந்த நாள் முதல் இந்த நாள் வரை அனானி மாருவதில்லை'//

வேற பாட்டே கிடைக்கலியாப்பா? இந்த பாட்டை கேட்டா தொறந்த கேட்டையும் சாத்தி சீல் வச்சிடுவாரு

மகேந்திரன்.பெ said...

//மேற்க்கொண்டு என்ன வரும் ?//

நிச்சயாமா பின்னூட்டம் வரும் அதுமட்டும் இப்போதைக்கு தெரியும்

வள்வள் ஜீனியார் said...

லைப்ல ஒன்னும் இல்லைன்னா போர் அடிக்கும்.

தலையில் ஒன்னும் இல்லைன்னா கிளார் அடிக்கும்.

இது தாண்டா வாழ்க்கை.

கல்யானத்துக்கு முன்னாடி ஒரு பதிவு போடுவோம் நாங்க.

அதுல சொல்லுவோம்...அடேய் படு பாதகர்களா ? ஏன் விபச்சாரிகளிடம் செல்லுகிறீர்கள் ? அபச்சாரம் அபச்சாரம் என்று..

பிறகு அதை வருங்கால பொண்டாட்டிக்கு அனுப்பி - நான் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவன் என்று தெரியப்படுத்துவோம்...

இது எப்படி இருக்கு ?

Anonymous said...

//யாருப்பா அது கொத்தவரங்கா நீ இப்ப இன்னாதான்பா சொல்றே?//

பீன்ஸுக்கு மாற்று தான் கொத்தவரங்கா.

Anonymous said...

//அனானிகளே நல்லா அடிச்சி ஆடுங்க!! //

யார?, GK வயசானவரு, தப்பா பேசப்படாது!!!

Anonymous said...

////கப்பி எடுத்து விடுங்க எடுத்து விடுங்க////

கப்பி....

அப்பி(டி) ஒரு பதிவு போட்டீங்கன்னா

குப்பு குப்புன்னு உங்களை ஒரு நூறடிக்க வைப்போம்

மகேந்திரன்.பெ said...

//பிறகு அதை வருங்கால பொண்டாட்டிக்கு அனுப்பி - நான் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவன் என்று தெரியப்படுத்துவோம்...

இது எப்படி இருக்கு //

அப்போ நீங்க நல்லவரா இல்லை கெட்டவரா?

Anonymous said...

அரை மணி நேரத்தில் 50. ஒரு மணி நேரத்தில் 100. நாங்க நினைத்தால் கவுதம் ஜி யின் சாதனையையும் மிஞ்சுவோம்.

Anonymous said...

//அனானிகளே நல்லா அடிச்சி ஆடுங்க!! //

யார?, GK வயசானவரு, தப்பா பேசப்படாது!!!

Anonymous said...

///அப்போ நீங்க நல்லவரா இல்லை கெட்டவரா?///

அதை ஜீனியாரிடம் அல்லவா கேட்கவேண்டும்...

பின்னூட்டக் கணக்காளர் said...

இன்னாபா! 75லயே நின்னு போச்சு!

செந்தழல் ரவி said...

////காக்கா என்னிக்குங்க காக்கான்னு கத்துச்சி? அதுக்கு ஒரு கா மட்டும்தான் முடியும்////

கா என்று கத்தி அதுக்கு பின்னூட்டமா இன்னொருமுறை கத்தும்...

சோ...கா...கா....காக்கா...

இலவச சித்தாள் said...

/டார்கெட் அரை மணி நேரத்தில் 50.
//

இன்னிக்கும் ஒரு சைபர விட்டாச்சா?///

ஒரு மொக்கை பதிவுக்கு 500 ? அப்போ எங்க பிரீ மேஸ்திரியைத்தான் கூப்பிடனும்..

திராவிடன் said...

நான் சொல்கிறேன் திராவிடன் என்றாலே எனக்கு பலபயம் அய்யா..

விஜயகாந்த் மட்டும் அல்ல, ரஜினி காந்தும் திராவிடன் தான்.

Anonymous said...

டீ கப்புல டீ இருக்கும்...

வேர்ல்ட் கப்புல வேர்ல்ட் இருக்குமா மகி ?

Anonymous said...

//பீன்ஸுக்கு மாற்று தான் கொத்தவரங்கா.//

யாரது, கூப்பிடுங்க திரு-யும் கருப்பை -யும்!!!

திராவிட காய் கொத்தவரங்கா தான் முதல், அதுக்கு மாற்று தான் பீன்ஸு....

இது எல்லாம் பாப்பார சதி!! பெரியார் 1957-ல் சொன்னது தெரியாமல் பேசாதிர்!!!

Anonymous said...

இன்னா மகி திருப்தியா?....100 ஆச்சா?

டீச்சர்... said...

எங்க எல்லோரும் கோரசா என் பின்னாடியே சொல்லுங்க...

'அ' னா...
'ஆ' னா
'இ' னா
'ஈ' னா
.....

உங்கள் நண்பன் said...

ஹைய் மகி!
ஊரிலிருந்து இன்றைக்குத்தான் வந்தேன்,
இன்னைக்கு கருப்பொருளே அந்த கோவியார் தானா கலக்கு கலக்கு!

மகி வழக்கம் போல் அனானிங்க பின்னிப் பெடலெடுக்குறாங்க போல?


அன்புடன்...
சரவணன்.

Thekkikattan said...

ஆமை வேகத்திலே நகருதே, அனானிமார்களா, நல்லா ஸ்விங் பண்ணுங்க பேட்-அ...

சிரிப்பு தாங்கலை... அனானிகளே உங்களுக்கு ஒரு ரிகொஸ்ட் உங்க பெயர மறந்துடமா போடுங்க... அதிலதான் நெறைய மேட்டரே இருக்கு, *சிரிப்பு வெடி*... புரியும்தானே ;-)))

SP.VR.சுப்பையா said...

கண்ணுங்களா -
சாமிங்களா -
வகுப்புக்கு நேரமாகுதுய்யா!
வர்றீங்களா - இல்ல லீவ் டெக்ளேர் பண்ணிரட்டுமா?
வகுப்பு வாத்தியார்

கோவி.கண்ணன் [GK] said...

//யார?, GK வயசானவரு, தப்பா பேசப்படாது!!!//

யாரய்யா எனக்கு வய்சாச்சின்னு சொன்னது எனக்கும் அஜித் வயசுதானுங்க !
:)

மகேந்திரன்.பெ said...

//யாரய்யா எனக்கு வய்சாச்சின்னு சொன்னது எனக்கும் அஜித் வயசுதானுங்க !
:) //

ஆமா நல்லா கேட்டுக்கோங்க நண்பர்களே அய்யா அஜீத் வயசுதான் ... அதனால நல்லாவே அடிச்சி ஆடலாம் போட்டு தாக்குங்க :))

அனானிகள் முன்னேற்ற கழகம் said...

அனானிகளின் அடைக்கலராஜா இப்படி 93 மூன்றில் நின்றுகொண்டிருப்பதா? 100 அடிக்க உதவுங்கள்

ஐடியா அனானி said...

தல ஒனக்கு நூறு போதுமா?

இன்னும் அஞ்சுதான் பாக்கி இரு ஆளுங்கள கூட்டி வரேன்

கப்பி பய said...

//யாரய்யா எனக்கு வய்சாச்சின்னு சொன்னது எனக்கும் அஜித் வயசுதானுங்க !
//

ஏதோ ஒரு சரத்குமார் படத்துல நாடக நடிகர் அஜித் வருவாரே அவரா?? :))

மகேந்திரன்.பெ said...

//ஏதோ ஒரு சரத்குமார் படத்துல நாடக நடிகர் அஜித் வருவாரே அவரா?? //

கப்பி இப்படி நம் கேப்டனை கிண்டல் செய்வதை நான் வன்மையாக ஆமோதிக்கிறேன் :))

நாமக்கல் சிபி said...

//ஏதோ ஒரு சரத்குமார் படத்துல நாடக நடிகர் அஜித் வருவாரே அவரா?? //

சூரியவம்சம்!

நாமக்கல் சிபி said...

//100 அடிக்க உதவுங்கள் //

இது 99.

நாமக்கல் சிபி said...

//100 அடிக்க உதவுங்கள் //

அம்புட்டுதேன்.

மகேந்திரன்.பெ said...

அம்புட்டுதேன். :)