சென்னை, செப். 9-ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு அ.தி.மு.க.வில் திடீரென முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயற்குழு உறுப்பினராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.அ.தி.மு.க.வில் ஜெயலலிதா அவ்வப்போது அதிரடி மாற்றங்களை செய்து வருவது வழக்கம். ஜெயலலிதாவின் தோழி சசிகலா குடும்பத்தினருக்கு மிகவும் நெருக்கமானவர்கள்தான் நியமிக்கப்படுவதாக அ.தி.மு.க. வினர் கூறி வருகின்றனர். சசிகலாவின் அக்காள் மகன் டிடிவி தினகரன், கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து சசிகலாவுக்கும் கட்சியில் ஜெயலலிதா முக்கியஇடம் அளித்துள்ளார். அ.தி.மு.க.வின் தலைமைச் செயற்குழு உறுப்பினராக வி.கே. சசிகலா (தென்சென்னை மாவட்டம்) நியமிக்கப்பட்டுள்ளதாக ஜெயலலிதா இன்று அறிவித்திருக்கிறார். அவருடன் முன்னாள் மந்திரி வளர்மதி ஜெபராஜ் உள்பட 44பெண்களும் தலைமைச் செயற்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே அ.தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு மற்றும் முக்கிய நிகழ்ச்சிகளில் சிறப்பு அழைப்பாளராக சசிகலா கலந்து கொள்வது வழக்கம். இனிமேல் அங்கீகார பதவியுடன் அவர் கலந்து கொள்வார். ஜெயலலிதாவுக்கு அடுத்தபடியாக சசிகலாவுக்கு உயர்பதவி அளிக்கப்படுவதற்கு முன்னோட்டம் தான் இந்த தலைமைச் செயற்குழு உறுப்பினர் பதவி என்று அ.தி.மு.க. வட்டாரத்தில் கூறப்படுகிறது.ஜெயலலிதாவை அரசியலுக்கு கொண்டு வந்த எம்.ஜி.ஆர்., முதன்முதலாக அ.தி. மு.க. செயற்குழு உறுப்பினராகத்தான் நியமித்தார். அதன் பிறகு கொள்கை பரப்புச் செயலாளர், எம்.பி. என பதவி உயர்த்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

குவாட்டர் கோவிந்தனின் கமெண்ட்: நடராஜனுக்கு பதவி குடுப்பாங்களா? இல்லை வழக்கம்போல அவரு வெளியதானா?

17 comments:

உங்கள் நண்பன் said...

டிஸ்கி:இந்தப் பின்னூட்டம் இந்தப் பதிவிறிக்கு அல்ல:)))))))
(கோவி, தாங்களாவது பதிவிற்க்கு சம்மந்தமான பின்னூட்டமிடவும்:))

மகி! எனக்கு உண்மையாகவே தலைவலிக்குது! இன்னைக்கு சனிக்கிழமை,மணிவேற 9:30 ஆச்சு!
இப்"போதை"க்கு வழக்கமா போற இடத்துக்குப் போறேன்.வா!அங்க வந்து போசிக்கலாம்!


அன்புடன்...
சரவணன்.

அன்புடன்...
சரவணன்.

Sivabalan said...

மகி,

அரசியல் முக்கியதுவம் வாய்ந்த நிகழ்வு தான்..

திரையை விளக்கி வெளியே வந்தாங்களே ம்ம்ம்ம்

கோவி.கண்ணன் [GK] said...

//(கோவி, தாங்களாவது பதிவிற்க்கு சம்மந்தமான பின்னூட்டமிடவும்:))//

குருவித் தலையில் பனங்காயா ?
சரி சமாளிப்போம் !

மகி ...!
சின்னாம்மாவுக்கு இவ்வளவு பெரிய பொறுப்பு கொடுத்து ...பாவம் அவுங்க எப்படித்தான் சாமாளிக்கப் போறாங்களோ !
:)

மகேந்திரன்.பெ said...

//மகி! எனக்கு உண்மையாகவே தலைவலிக்குது! இன்னைக்கு சனிக்கிழமை,மணிவேற 9:30 ஆச்சு!
இப்"போதை"க்கு வழக்கமா போற இடத்துக்குப் போறேன்.வா!அங்க வந்து போசிக்கலாம்//

சரா நடத்துங்க நடத்துங்க(புகை) இப்போதைக்கு வரலைன்னாலும் எப்போதைக்கு வருவீங்கன்னு சொன்னா நல்லா இருக்கும்" ஜிகே வருவாரா? தெரியலையே! சரி சரி சீக்கிரமா வாங்க என்னா?

வணக்கத்துடன் said...

திரை விலக்கல் எப்போதும் வரவேற்புக்குறியது.

இதை முழு மனதுடன் வரவேற்கிறேன்.

ஜெயலலிதாவுக்கு என் பாராட்டுக்கள்!

மகேந்திரன்.பெ said...

//அரசியல் முக்கியதுவம் வாய்ந்த நிகழ்வு தான்..

திரையை விளக்கி வெளியே வந்தாங்களே ம்ம்ம்ம் //


உண்மை சிபா இன்னும் என்னவெல்லாம் நடக்கும் என்று பார்க்கலாம்...:))

இனிமேலும் கலைஞர் குடும்பாரசியல் பன்றதா சொல்லுவாங்களா? இதுக்கு பேர் என்னா?

Pot"tea" kadai said...

இனிமே தானுங்கோ வடதமிழ்நாட்டில அரசியலே ஆரம்பிக்க போவுது!

[சதானந்தன் said...

தலைவன் தலைவி என்கிற அந்தஸ்தது
என்பது சும்மாவ...எம்மாம்பெரிரிய்ய்ய்ய்ய்யது
இனி தெருவெல்லாம் நகைக்கடையாய்
தொறக்கப் போகிறங்கோ.
இனி பெரியம்மா பின்னாடி வர
சின்னம்மா முன்னாடிவருவாங்கோ.

மகேந்திரன்.பெ said...

/மகி ...!
சின்னாம்மாவுக்கு இவ்வளவு பெரிய பொறுப்பு கொடுத்து ...பாவம் அவுங்க எப்படித்தான் சாமாளிக்கப் போறாங்களோ !//

ஆமாங்க இனிமேலாவது அவங்க துணைய கூட சேத்துகிட்டா பரவாயில்லை.. தனியா ரொம்ப கஸ்டம்தான்

மகேந்திரன்.பெ said...

//இனிமே தானுங்கோ வடதமிழ்நாட்டில அரசியலே ஆரம்பிக்க போவுது! //

ஆமா இதென்னா புதுக்கணக்கு?

உங்கள் நண்பன் said...

//சரா நடத்துங்க நடத்துங்க(புகை) இப்போதைக்கு வரலைன்னாலும் எப்போதைக்கு வருவீங்கன்னு சொன்னா நல்லா இருக்கும்" ஜிகே வருவாரா? தெரியலையே! சரி சரி சீக்கிரமா வாங்க என்னா?
//

வந்துட்டோம்ல!வந்துட்டோம்ல!

கோவி..தலையில பனங்காயோட வந்ததப் பாக்கலையா நீங்க?
தெளிவா இருங்கப்பா:)))))

அன்புடன்...
சரவணன்.

உங்கள் நண்பன் said...

//குருவித் தலையில் பனங்காயா ?
சரி சமாளிப்போம் !//

ஆமாம் கோவியாரே...தாங்கள் ஏன் குருவி பற்றி ஒரு கவிதை எழுதக்கூடாது?

மகி:டேய் சரா! நீ வேறா ஏண்டா!
அந்த ஆள் தான் நாய்,தவளை, கழுதைனு படுத்துறாரு நீ வேற எடுத்துக் கொடுக்குறியா?:))))

அன்புடன்...
சரவணன்.

மகேந்திரன்.பெ said...

அடுத்து வருது பாருங்க ஒரு உள்குத்து

மகேந்திரன்.பெ said...

//கோவி..தலையில பனங்காயோட வந்ததப் பாக்கலையா நீங்க?
தெளிவா இருங்கப்பா:)))))//


ஜிகே வந்ததுக்கு முன்னாடியே உங்களுக்கு பதில் போட்டாச்சி ஆனா அதுக்கு இடையில அவரு பூந்துட்டார் நான் என்ன பன்ன>?

ஆமா அதுக்குள்ள வந்தாச்சி? :))

மகேந்திரன்.பெ said...

//டேய் சரா! நீ வேறா ஏண்டா!
அந்த ஆள் தான் நாய்,தவளை, கழுதைனு படுத்துறாரு நீ வேற எடுத்துக் //

ஆகா இந்த மாதிரி உங்கள டேய்ன்னு சொல்லுவனா? சரா ? நீங்க எப்போதைல இருந்து இப்படி தப்பா நினிக்கிறீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?

வணக்கத்துடன் said...

//ஆமாங்க இனிமேலாவது அவங்க துணைய கூட சேத்துகிட்டா பரவாயில்லை.. தனியா ரொம்ப கஸ்டம்தான்//

ஆமா யாருங்க அந்த 'அவங்க துணை'? அதுக்கு எதுக்கு நீங்க ரொம்பவே ஆதங்கப்படுறீங்க?

எனக்கு தெரிந்து செல்வி.ஜெயலலிதா அவர்கள் தான் சசிகலாவுக்கு துணை, இவர் அவருக்கு.

நான் அறிந்த வரை, 'செல்வி.ஜெயலலிதாவின் கீழ் உள்ள அண்ணா தி.மு.க' மற்றும் 'சுய மறியாதை இயக்கம்' இவை இரண்டுக்கும் இப்போதைக்கு இருக்கும் ஒரே 'சுயமறியாதை' தொடர்பு இது மட்டும் தான் - ஒரு பெண் மற்றொரு பெண்ணின் துணையுடன் தனித்து இருப்பது சுய மறியாதை அன்றி வேறென்ன?

மற்றபடி, நீங்கள் குறிப்பிடும் துணை ம.நடராஜன் குறித்து என்றால், அவர் சரணடைந்த இடம் (பூஜ்ய குரு அடைபட்டிருந்த) வேலூர் ஜெயில் என்பதையும், 'பூஜ்யர்களின்' சாம்ராஜ்யத்தை கட்டுப்படுத்தியது யார், வக்காலத்து + ஆசீர்வாதம் வாங்குவது யார் என்பதையும் மனதில் கொண்டு மேற்கொண்டு சிந்திக்கவும்.

ம.நடராஜனின் நிழல் சைவ மடாதிபதி மதுரை ஆதீனம், ஒரு காலத்தில் தமிழர் விடுதலை குறித்து பேசியவர், இப்போது இந்துத்துவம் குறித்து பேச ஆரம்பித்திருப்பதையும் கவனத்தில் கொள்ளவும்.

மகேந்திரன்.பெ said...

//மற்றபடி, நீங்கள் குறிப்பிடும் துணை ம.நடராஜன் குறித்து என்றால்//

அவரைத்தான் சொல்கிறேன் அய்யா! மற்ற துணைகளுக்கு எல்லாம் ஆலோசனை சொல்லும் அவர் ஏன் தன் துணைக்கு ஆலோசனை சொல்லக்கூடாது?