பைரவன்

கிணத்துக்குள் கிடக்கும் வட்ட நிலவின் பிம்பம் கண்ட பைரவருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை தனது நான்கு கால்களையும் வளைத்து கிணற்றை நோக்கி வாலைக் குழைத்தவாறு குரைக்க ஆரம்பித்தார் . மேலே இருக்கும் நிலவு தண்ணீருக்குள் விழுந்து போனதாக ஒரு எண்ணம் போலும்.
அவருக்கு எப்போதும் இப்படியே நான்கு கால்களும் நான்கு வேதங்கள் போல அவற்றை மடக்கியபடியே நான்முகன் இருக்கும் திசை எதுவென்று தேடிக்கொண்டிருப்பார்.. அது அவர்தான் என்பதே தெரியாமல்.
என்னடா நாயை போய் மரியாதைகொடுத்து அவர் இவர் என்று அழைப்பதாக யாருக்கும் சந்தேகம் வேண்டாம். அவர் பைரவர்.. நான்கு வேதங்களை ஓதிய நான்முகன் பிரம்மன்.
முன்பு ஒரு காலத்தில் மானுடப் பிறவி வழிகாட்டல் இல்லாமல் மகத்தான மகோன்னதம் அடைந்த காலத்தில் இதை வைத்து நாம் கொஞ்சம் தேற்றலாமே என நினைத்த ஒரு பிறவி தங்களுக்கு வழிகாட்டுவதற்காக கடவுளை வேண்டினார்கள். அவர்களுக்கு முன்பு ஒரு நான்கு தலை நாய் தோன்றியது.
அந்த நான்கு தலை நாய் மனிதனைப் பார்த்து மனிதா இங்கே பார் நானே ப்ரம்ம தேவன்... இதோ நான்கு வேதம் ... இதனை சரியாக கேட்டுக் கொண்டு ..மனிதர்களைப் பிரிக்க வேண்டும் அப்படி பிரித்தால் மனிதர்களின் ஒரு பிரிவினர்கள் உங்களுக்கு அடிமையாக இருப்பார்கள்.
மற்ற இருபிரிவினரும் உங்கள் செயல் சந்தேகம் இல்லாமல் இருக்க வேண்டுமென்றால் நீங்கள் மற்ற இருவர்களின் பிறப்பு முதல் இறப்புவரை அவர்கள் மீது அக்கரை செலுத்துவது போல இரு பிரிவினர்களின் வாழ்க்கை முறையை வரையறுக்க வேண்டும்.. இதில் உங்களுக்கு இழப்பு இருக்கும் அதாவது அரசபதவி,வியாபாரம் நீங்கள் செய்யமுடியாது..
ஆனால் அதன் பலன்களை நீங்கள் அடையலாம் ! இப்படிசெய்யும் போது ... இதை நீங்கள் குலத்தொழில் போல அதாவது இந்த நான்கு வேதத்தை உங்களுக்குள் வைத்துக் கொள்ளவேண்டும். இது வேறு எங்காவது செல்லும் போது அதன் சூட்சமம் வெளிப்பட்டு உங்கள் இனத்துக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும். நாய்களை மக்கள் கல்லால் அடிக்க ஆரம்பித்துவிடுவர் என்று கூறி ம்றைந்தார்
அன்று முதல் நாய்கள் நான்முகனாக பார்க்கப்பட்டன . பைரவருக்கு தனது தலைகளை தேடுவதில் அவ்வப்போது சிக்கல் வரும் அப்போதெல்லாம் அவர் தேடி ஓடுவது நீர் நிலைகளுக்குத்தான். அங்கேதான் கண்ணாடி வசதி உண்டு. அதனது முகம் சரியாக பொருந்தி நான்முகம் நாய்முகமாக இருக்கிறதா எனத் தேடி அவர் அலையும் போது எல்லாம் வாலைக் கடிக்கும் பழக்கம் வருகிரது.
நாளு நாளாக அவருக்கு அதுவும் போய் பன்றிகளுக்கு காவல் காக்க ஆரம்பித்துவிட்டார். முன்பெல்லாம் பன்றிகள் மேல் பயங்கரக் கோபம் கொண்டவர்தான் பைரவர். ஆனால் இப்போது அப்படி யில்லை பன்றி வராகமூர்த்தியின் அவதாரம் எனத் தெரிந்து கொண்டு அவர் அதை நேசிக்க ஆரம்பித்து விட்டார். தன் காவலுக்கு இருக்கும் எல்லா பைரவர்களையும் ஒன்றாய் சேர்த்து இப்போது பன்றிக்காவல் மட்டுமே புறிகிறார்.

காரணம் இதுதான். வழக்கமாக பன்றிகள் தான் உண்டு தனது உணவுக்கு வழியுண்டு எனத்தான் இருந்தன ஆனால் கடந்த சில காலமாக ஒரு நல்ல காவலன் இல்லாத காரணத்தால் அடுத்தவர் விளை நிலத்தில் கால்வைத்து அங்கே சந்தனம் என்ற பெயரில் இருட்டில் திருட்டு வேலை செய்ய ஆரம்பித்தன.
இது எப்படி ஆயினும் குலத்துக்கு கேடாக வருமே என நினைத்த பைரவர் அவை இனியும் இப்படியே போனால் ஒரு நாள் அடிப்பட்டே சாகும் என அறிந்து அவை உணவுக்கு மட்டும் உழைத்தால் போதும் என அவர்கள் காலம்காலமாக அரும்பாடு பட்டு அடுத்தவர்மேல் தினிக்க நினைக்கும் குலத்தொழில் மட்டுமே செய்ய தலைப்படவேண்டும் எனப் பணிக்கலானார்.
பன்றிகள் கேட்காத போது சில கட்டுடைத்து வேறு இடம் தேடின, கொஞ்சம் அடிபட்டு வந்து ஓலமிட்டன. பைரவர் என்ன செய்வார். பாவம் அவருக்கும் இப்போது வேலை இல்லை.
வேதங்களை மனிதர்களும் படித்து மணியாட்டலாம் எனச் சொன்னதில் பைரவருக்கு கடும் கோபம். இப்போதெல்லாம் மனிதனை கண்டாலே பைரவருக்கு ஆத்திரம்தான். பன்றி வளர்த்த மனிதன் தானே இவன் நம்மை மீறி ஆலயம் சென்றால் அங்கே முன்பு மணியாட்டிய நமக்கு என்ன மரியாதை என நினைத்தார்.
அவருக்கு தெரியவில்லை பாவம் முன்பு பைரவர்கள் மட்டுமே காவலுக்காய் கோயில் இருந்ததால் மனிதர்கள் போட்டதை சாப்பிட்டு தனது காலத்தை ஓட்டி வந்தனர் ஆனால் இப்போது பைரவர்கள் கோயிலை மட்டும் நம்பி இல்லை..
ஆனால் மனிதர்கள் எப்போதும் போல மணியாட்ட முடியாது என பைரவர்கள் தடுத்ததால் புதிதாய் பொருப்பேற்ற மன்னன் இனி மனிதர்களும் மணியாட்டலாம் எனச் சொல்ல சில நல்ல பைரவர்கள் அதாவது அந்த தொழில் நமக்கு வேண்டாம் இத்தனை காலம் மனிதனை அண்டவிடாமல் செய்தது தவறு என எண்ணியவர்கள் எதுவும் சொல்லவில்லை.
ஆனால் மணியாட்டுவதை தனது மணிமகுடம் எனக் கருதிய சில வெறிகொண்ட பைரவர்கள் இனியும் பொருத்தால் கோயில் மனிதனுக்கு மட்டுமே என்றாகிவிடும் என எண்ணி தவறான முறையில் மனிதர்களை கடிக்க ஆரம்பித்தன.
பன்றிகளுக்கு மட்டும் ஒரு சட்டம் பைரவர்களுக்கு ஒரு சட்டமா என மனிதன் நினைக்காமல் இரண்டும் ஒன்றே எனத் தெரிந்தே வைத்திருந்தான் எல்லா பைரவர்களுக்கும் அவன் தடியெடுத்து அடித்து துறத்தி வைக்கவில்லை சில வெறிபிடித்து மனிதர்களை கடிக்க வந்த பைரவர்களை மட்டும் ஒதுக்கத் துவங்கினான்.
சில நேரம் அமைதிகாத்த அவை சில நேரம் எதற்கென்றே தெரியாமல் எல்லோரையும் கடிக்க ஆரம்பிக்க இவனுக்கு பைரவர்கள் என்றாலே வெறுப்பு வந்தது. அந்த நாயின் அறிவுறையை ஏற்ற ஒரு பிரிவினர் .. நாயின் வாக்கை வேதவாக்கு என்றனர்.

மனிதர்கள் பிரிந்தனர். கால ஓட்டத்தில் அந்த பிரிவில் சிலர் நாயின் பேச்சை மறந்தனர் ... சொந்த இனத்தையே தூற்றினர் ... அவர்கள் மற்ற பிரிவினருக்கு நல்லவராக தெரிந்தனர்... நாயின் வாக்கு செயல்பட ஆரம்பித்தது ....அன்று முதல் நாயைக் கண்டவர்கள் கல்லை எடுக்க ஆரம்பித்தனர் .
மனிதன் எங்கே கண்டாலும் பைரவரை அடிக்க ஆரம்பித்தான் இப்போது பைரவர் அடுத்த ஆள் எப்போது வருமென்று காத்துக் கிடக்கிறார். கடித்து வைக்கத்தான்.

21 comments:

கோவி.கண்ணன் [GK] said...

மகி...!
நான் ஒரு தச அவதார பதிவு போட்டு கதையை வளர்க்க /முடிக்க தலையை பிச்சிக்கிட்டு இருக்கிறேன்... நீங்க என்ன வென்றால் ... வாமன அவதாரம்... பைரவர் அவதாரம் என்று போட்டுகிட்டே இருக்கிறீர்கள்...
அடுத்து என்ன மச்ச அவதாரமா ?

பி.கு: வழக்கம் போல் பதிவைப் படிக்காமால் போட்ட பின்னூட்டம் இது !

:)

Unknown said...

//வாமன அவதாரம்... பைரவர் அவதாரம் என்று போட்டுகிட்டே இருக்கிறீர்கள்...
அடுத்து என்ன மச்ச அவதாரமா //

ஜிகே ரொம்ப புகழாதீங்க :)) அது தானா வருது இந்த பைரவர்களையும், வராகமூர்த்தியையும் பாத்தா :)) தசாவதாரம் நீங்க எழுதும் போது நான் எதோ எனக்கு தெரிஞ்ச அவதாரம் பத்தி எழுதுறனே?

Unknown said...

//பி.கு: வழக்கம் போல் பதிவைப் படிக்காமால் போட்ட பின்னூட்டம் இது //

அப்ப படிச்சி முடிச்சதும் போடுங்க

Anonymous said...

அருந்ததி ராய்., ஆட்டையாம்பட்டி ராய் ஏதாவது எழுதி இருந்தா அதை காப்பி அடிச்சி ஒரு பதிவு போடுவது பலனளிக்கும்.

நான் யாரென தெரியவேண்டுமா ?

எனக்கு பிடித்தது வவ்வால். நான் ஒரு ஆம்பள.

Unknown said...

//நான் யாரென தெரியவேண்டுமா ?//

ஆமாங்க நீங்க யாருங்க நிச்சயமா இங்கிலீஸ் காய்கரி எதுவும் சாப்பிட மாட்டீங்க தெரியும் :))

SP.VR. SUBBIAH said...

யாரு பைரவன், யாரு பன்றி, யாரு மனிதன்?
கொஞ்சம் விவரமாச் சொல்லுங்க தம்பி!
ஒன்னும் பிடிபடலையே?
பெரிசு
அதிகம் படிக்காத பெரிசு

Unknown said...

//யாரு பைரவன், யாரு பன்றி, யாரு மனிதன்?//

அடடா தெரியலைங்களா? ஆகா ஆசிரியருக்கே தெரியாமல் குழப்பமான கதை எழுதியதற்காக என்னை மன்னிக்க வேண்டும்.. யார் யார் எவெர் எவர் என்று அவர் அவருக்கு தெரியும் அய்யா :)

Anonymous said...

இதுவரை நான் என் சொந்த கதை மட்டுமே எழுதினேன் இனிமேல் எனக்கு உலகவங்கி மீது மட்டுமே கவனம் கம்மூனிஸ்டுகள் ஏன் சிரிக்கிறார்கள்? அடுத்த பதிவு

Anonymous said...

//உலகவங்கி மீது மட்டுமே கவனம் கம்மூனிஸ்டுகள் ஏன் சிரிக்கிறார்கள்? அடுத்த பதிவு //

கம்மூனிஸ்டுகள் அழுவதால் நாங்கள் சிரிக்கிறோம் கம்மூனிசம் என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா :) இல்லை அவங்க உங்கள மாதிரி எங்கயாவது பேரிக்காவுல படிச்சி இங்க வந்து என் தேசம் வளருதுன்னு கூப்பாடு போடுறாங்களா?

SP.VR. SUBBIAH said...

// அடடா தெரியலைங்களா? ஆகா ஆசிரியருக்கே தெரியாமல் குழப்பமான கதை எழுதியதற்காக என்னை மன்னிக்க வேண்டும்.. யார் யார் எவெர் எவர் என்று அவர் அவருக்கு தெரியும் அய்யா :) //

தலைமை ஆசிரியர் இப்படிப் பேசித்தான் என்னைக் குழப்புவது வழக்கம்
உங்களுக்கு அவரே பரவாயில்லை!
இந்தக்குழப்பத்தோடு பள்ளிக்குப் போக முடியாது!

ஆக்வே லீவு போட்டு விட்டேன்
வாத்தியார்

Unknown said...

//ஆக்வே லீவு போட்டு விட்டேன்//

இப்படி பள்ளியில் மாணவர்கள் கம்மியாக இருக்கும் நாளில் ஆசிரியர் விடுப்பெடுத்துக் கொண்டால் பள்ளிக்கூடம் உருப்படுமா என்று மாவட்ட பள்ளிக் கல்வி இயக்குனர் கேட்கிறார்

பொன்ஸ்~~Poorna said...

மகேந்திரன்,
இந்தக் கதை போன கதையை விடத் தெளிவாகவும் நல்லாவும் இருப்பதாகத் தோணுது.. விட்டா கதைக்குன்னு இன்னுமொரு வலைப்பூ தொடங்கிடுவீங்க போலிருக்கு!!

SP.VR. SUBBIAH said...

// பள்ளிக்கூடம் உருப்படுமா என்று மாவட்ட பள்ளிக் கல்வி இயக்குனர் கேட்கிறார் //

நானே உருப்படமுடியாமல்தான் பல வானரங்களைக் கட்டி மேய்க்கும் இந்த வேலக்கு வந்திருக்கிறென்.

ஆகவே பள்ளிக்கூடம் .............
(Fill up the blanks).Hi.hi.hiiiiiiiiiiiiii..,,

Anonymous said...

நாய் ஏன் பகலில் குலைத்தது பத்தாதென்று இப்போது ப்ளாக்கிலும் குலைக்கிறது பன்றிகள் மேல் பாசம் அதிகமாய் போனதா?

SP.VR. SUBBIAH said...

//ஆசிரியர் விடுப்பெடுத்துக் கொண்டால் பள்ளிக்கூடம் உருப்படுமா என்று மாவட்ட பள்ளிக் கல்வி இயக்குனர் கேட்கிறார் //

என்னிடம் படிதத மாணவர்களில் ஒருவர் SP ஆக இருக்கிறார்
மற்றுமொருவர் பெரிய தாதாவாக இருக்கிறார்.

ஆக்வே எனக்கு ஏற்படும் எந்த சிக்கலையும் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்

வாத்தி (யார்)

Unknown said...

//விட்டா கதைக்குன்னு இன்னுமொரு வலைப்பூ தொடங்கிடுவீங்க போலிருக்கு!! //


அய்யோ அதெல்லாம் வேண்டாங்க என்னமோ தோனுது எழுதறேன் தனியா கதை மட்டும் கொஞ்சம் சிரமம் நான் ஒன்னு காமெடி இல்லை சீரியஸ் இந்த கதை ச்மாச்சாரம் ரொம்ப வேலை கொடுக்குது

Unknown said...

//ஆகவே பள்ளிக்கூடம் ............. //

?????????

Anonymous said...

பூவெல்லாம் கேட்டுப் பார் படத்தில் "பூவே பூவே" என்று பாடிக் கொண்டு வந்த காலத்திலிருந்து எனக்கு ஷகீலாவை பிடிக்கும்..
காக்க காக்க பார்த்ததிலிருந்து கொத்தவரங்கா சுப்புவையும்..
வாழ்த்துக்கள் ஷகீலா..

படங்களுக்கு நன்றி டாஸ்மாக் கொமார்.

Anonymous said...

//என்னிடம் படிதத மாணவர்களில் ஒருவர் SP ஆக இருக்கிறார்
மற்றுமொருவர் பெரிய தாதாவாக இருக்கிறார்//

ஒழுங்கா சொல்லிக் கொடுத்திருந்தா ரெண்டு பேருமே தாதாவா ஆகி உங்க பேரைக் காப்பாத்து இருபாங்கள்ள!

Anonymous said...

நல்ல கதை ,
லொள், லொள் லொள், லொள் :))

Unknown said...

யாருங்க அது டாபர்மேன் வித்யாசமான பேர்ல யெல்லாம் பதிவர்கள் கொலைக்கிறாங்கப்பா :) ச்சும்மா வெளாட்டுக்கு சொன்னேன் வந்துட்டு போங்க