சற்றுமுன் தளத்தில் நாசர் ரஜினி காந்தின் சிவாஜி குறித்து சொன்ன விமர்சணத்துக்கு பின்னூட்டமாக தனது பரந்துபட்ட அறிவை வெளிப்படுத்தும் விதத்தில் ஒரு பின்னூட்டத்தை போட்டிருந்தார் நம் எல்லாம் தெரிந்த செல்வன். அந்த பின்னூட்டம் இங்கே
"நீங்கள் சொல்லும் காப்பியடிப்பது தமிழ்சினிமாவில் ஏராளமாக நடக்கிறது..அதை ஒரு
குறைபாடாக வைத்தால் கமலும், நாசருமே முதலில் குற்றவாளி கூண்டில் ஏறவேண்டும்.
மருதநாயகம் ட்ரெய்லர் அப்படியே க்ளாடியேட்டர் மாதிரியே இருக்கிறது:)தேவதை எந்த
ஆங்கிலபடத்து காப்பி என மறந்துவிட்டது..."
இப் பின்னூட்டத்துக்கு மறுப்பும் விளக்கமும் எதிர்பும் தெரிவித்து நான் இட்ட பின்னூட்டம்
"//மருதநாயகம் ட்ரெய்லர் அப்படியே க்ளாடியேட்டர் மாதிரியே
இருக்கிறது:)//செல்வன் என்ன இது பித்தலாட்டம் மருதநாயகம் எடுத்தது 1997 ல்
கிளாடியேட்ட்ர் வந்தது 2000ல் இப்படியிருக்க மருதநாயகம் கிளாடியேட்டரை பார்த்து
காப்பியடித்தது என்று எந்த மடயனும் சொல்லமாட்டான் நீங்கள் சொல்கிறீகள்,
கிளாடியேட்டர் பார்த்தீர்களா? இல்லை வேறு ஏதாவது பார்த்துவிட்டு உளறுகிறீகளா?
வேண்டுமானால் நாளை இது குறித்து பதிவிடுகிறேன்"
இதுகுறித்தே செல்வன் அதே பதிவில் இட்ட இன்னொரு பின்னூட்டம்
இதே போல காலம் குறித்த விவகாரம் அதில் அவரின் பின்னூட்டம்
"அப்படி என்ன தரமான படத்தை இவர் கொடுத்து அதை மதிக்காமல் போய்விட்டார்கள்
என்பதுதான் கேள்வி. நாசர் உளறுவதுபோல் அவதாரத்துக்கு பதில் அருணாச்சலத்துக்கு
விருது தரவில்லை. அவதாரம் வந்தது 1995ல்.அருணாசலம் வந்தது 1998 அல்லது 1999.மனிதர்
எந்த உலகில் வாழ்கிறார் என்பதே தெரியவில்லை."
நடந்தது என்னவென்றே தெரியாமல் ரஜினி காந்துக்கு தாங்குவதற்க்காக, மருதநாயகம் படத்தை க்ளாடியேட்டரோடு ஒப்பிட்டிருப்பது அவர் கொண்டிருக்கும் வலைப் பதிவர்களின் அறிவைப் பற்றிய எண்ணம் வெளிச்சத்துக்கு வருகிரது. இதை தனிப்பதிவாக போடவேண்டிய தேவை இல்லை ஆனால் இப் பதிவை எழுதும் இந்த நேரம் வரை எந்த பதிலும் சற்று முன்னில் வெளிவராத காரணத்தாலும் (ஒருவேளை சன்னாசி அவர்கள் புரட்டி புரட்டி அடித்த பின்நவீனத்துவ பின்னூட்ட அடி இன்னும் வலிக்கிறதோ என்னவோ" ) ஏற்கனவே உடைந்து வலைப்பதிவில் சின்னாபின்னமாகிக் கிடக்கும் ரஜினிகாந்தின் மாயாவாத பிம்பத்தின் மேல் மேலும் கொஞ்சம் எக்ஸ்பிரஸை ஏற்றி காலிசெய்யும் விதமாகவும் இப்பதிவு தேவைப் படுகிறது.
ரஜினி காந்தை யார்வேண்டுமானாலும் தாங்கட்டும் ஆனால் நல்ல கலைஞர்கள் என மதிக்கப்ப்டும், தான் சார்ந்திருக்கும் துறைக்கு கொஞ்சமாவதுநல்ல தனங்களை விட்டுவிட்டுப் போகவேண்டும் என நினைக்கும் கமல், நாசர், போன்றவர்கள் மேல் கல்லாவது எறியாமல் இருக்கட்டும் ரஜினிகாந்தை தாங்குபவர்கள் "இதே பதில் எல்லா விஜய் அஜீத் சிம்பு ரசிகர்களுக்கும் பொருந்தும்."
படப்பெட்டியை விற்று கல்லாப் பெட்டியை நிறப்புவதுதான் தொழில் என்றால் நல்ல படம் என்று குறைந்த பட்ஜெட்களில் எடுக்கப் படும் பிரைவேட் விடியோஸ், விவிட் விடியோஸ், மற்றும் ஷகீலாவின் தாராள மார்பை காட்டும் மலையாளப் படங்களை எடுக்கச் சொல்லலாம். உலகலாவிய பெரிய மார்க்கெட் அந்த படங்களுக்கு உண்டு. ரஜினி காந்தின் படங்களும் அந்த தரத்தில் இருக்கவேண்டும் என விரும்புபவர்கள் சிவாஜியை கொஞ்சநாள் ஏறக்கட்டிவிட்டு மிலோஸ் போர்மென்னின் மேன் இன் தி மூன் பார்க்கலாம் , ட்ரூ மேன் ஷோ பார்க்கலாம். இல்லாவிட்டால் பதிவுகளுக்கு உளரல் பின்னூட்டங்கள் போடாமல் இருக்கலாம்
6 comments:
எக்ஸ்ப்ரஸ் அவர்களே,
நான் அப்பொழுதே செல்வன் எதை சொல்ல வருகிறார் என்பதை பின்னூட்டமிட்டு சொல்லிவிட்டேன், அதையும் கொஞ்சம் பார்த்து விட்டு பதிவு போட்டு இருக்கலாமே!
//மருத நாயகம் , பிரேவ் ஹார்ட் என்ற மெல் கிப்ஸனின் படத்தை ஒற்றி எடுக்க முயற்சிக்கப்பட்டது. அதை தான் கிளாடியேட்டர் என்று சொல்லி இருக்கிறார் செல்வன் என நினைக்கிறேன்.//
//நாசர் உளறுவதுபோல் அவதாரத்துக்கு பதில் அருணாச்சலத்துக்கு
விருது தரவில்லை. அவதாரம் வந்தது 1995ல்.அருணாசலம் வந்தது 1998 அல்லது 1999.மனிதர்
எந்த உலகில் வாழ்கிறார் என்பதே தெரியவில்லை."//
இந்த பின்னூட்டம் இட்டது செல்வந்தானே? அவர் எந்த உலகில் இருக்கிறாராம்
நாசருக்கு ரஜினி மேல் என்ன பொறாமையோ - என்ன கோபமோ இப்படி எல்லாம் பெனாத்துகிறார்.
'அவதாரம்' வெளியானது 09.06.1995-ல். அந்த ஆண்டுக்கான சிறந்த படமாகத் தமிழக அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டது புதுமை யக்குநர் பாரதிராஜாவின் 'அந்திமந்தாரை'. நிச்சயம் இந்தப் படம் விருதுக்குரிய திரைப்படம்தான். இதில் சந்தேகமில்லை. இரண்டாவது சிறந்த திரைப்படமாக 'கோலங்கள்' என்ற திரைப்படமும், மூன்றாவது சிறந்த திரைப்படமாக 'அவதாரம்' திரைப்படமும் தேர்வு செய்யப்பட்டிருந்தது.
நாசர் சொல்ல வந்தது என்னவெனில் தனக்குச் சிறந்த நடிகருக்கான விருது கொடுக்காமல் ரஜினிக்கு கொடுத்துவிட்டார்களே என்பதாகத்தான் இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
ஏனெனில் 1995-ம் ஆண்டு வெளி வந்த திரைப்படங்களில் சிறந்த நடிகருக்கான மாநில அரசின் விருதைப் பெற்றவர் ரஜினிதான். படம் 'முத்து'. இந்தக் கோபத்தில்தான் நாசர் இதை சொல்லியிருக்க வேண்டும்.
மற்றபடி 'அருணாச்சலம்' திரைப்படம் 10.04.1997-ல் வெளி வந்தது. 1997ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படத்திற்கான மாநில அரசின் விருதை 'அருணாச்சலம்' திரைப்படம், 'சூர்யவம்சம்' திரைப்படத்தோடு இணைந்து பெற்றது.
நான் என்ன நினைக்கின்றேன் என்றால்... அருணாச்சலம் படத்திற்கெல்லாம் அவார்டு கொடுக்கின்றார்கள் ஆனால், என்னுடைய அவதாரம் கண்டு கொள்ளப்படவில்லையே என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடாக இருக்கும்.
Maruthanayagam release ayiduchaa sollava illiyee
Post a Comment