என்னோட எய்ட்ஸ் பத்தி முன்னடியே எக்ஸ்பிரஸ்ல கொஞ்சம் சொல்லியாச்சி மீதிய இங்க சொல்றேன் ( எப்படியோ இன்னிக்கு ஒரு லிங்க் போட்டு டெக்னொராட்டில கொஞ்சம் பாயிண்ட் கிடைக்காதா எக்ஸ்பிரஸுக்குன்னு ஒரு நப்பாசைதான்) :)
5. குவாட்டர் கோவிந்தன் மாதிரி எப்பவும் ஏடாகூடமா சிந்திச்சி :) எவன்கிட்டயாவது திட்டு வாங்குறது. எல்லாருக்கும் ஒரு ஒத்த கருத்து இருந்தா யாருமே சொல்லாதத எனக்கே புரியாத அளவுக்கு விளக்கி அவன் நம்மள பாத்து இவன் மண்டைக்குள்ள மசாலா அதிகம்டோய்னு பிரமிச்சி எடத்த காலிபன்ற வரைக்கும் விடாம பேசுறது (தெகா, கவணிக்க) :) பள்ளிக் கூடத்தில 9ம் கிளாஸ் படிக்கும்போது அறிவியல் பாடத்தில ஒரு சந்தேகம் கேட்டு வாத்தியாரையே மண்டைக்காய வச்சது (ஒன்னுமில்லை பெரிசா "நம்ம வயிற்றில இருக்கிற அமிலம் ஒரு ஆணியக் கூட கறைக்கிற சக்தி கொண்டதுடா அதனால தான் நாம் சாப்பிடுவதெல்லாம் செரிக்குதுன்னு சொன்னார்" "அப்ப நம்ம குடல் ஏன் சார் செரிக்காம இருக்குன்னு கேட்டதுக்கு அவரு பேயறஞ்ச மாதிரி ஆயிட்டார். :) ) இந்த மாதிரி பல பெருமைகளுக்கு சொந்தக்காரன். இன்னொன்னு நமக்கு கடவுள் நம்பிக்க அப்பவே இல்லை. ஆனா விநாயகர் சதுர்த்திக்கு பள்ளிக் கூடத்தில நடந்த ஓவியப் போட்டியில கலந்துகிட்டு வித்யாசமா ஒரு புள்ளையார படம் வரைஞ்சு முதல் பரிசெல்லாம் வாங்கியிருக்கேன். 12 ம் வகுப்பில ஏகப்பட்ட லீவு போட்டும் நல்ல மார்க் எடுத்து பாஸ் பன்னினது.
6. 12ம் வகுப்பு முடிஞ்சதும் எல்லாருக்கும் இருக்கும் காதல் எனக்கும் தொத்திக்க யாரப் பாத்தாலும் கொலவெறிக் கவுஜயா அள்ளி விட்டு எங்க கூட படிச்ச பொன்னுங்க எல்லாத்தையும் நாய் சேகர பாத்த ஜோதிர்மயி கணக்கா தொரத்தி யடிச்சது (இப்ப எல்லாருக்கும் கல்யாணம் ஆயிடுச்சி.. ஆனா இதுக்கெல்லாம் கலங்க மாட்டோமில்ல நாங்கன்னு என்னையும் கட்டிகிட்டு வந்ததுதான் என் மனைவிக்கு ரொம்பத் தெகிரியம். ) என்னை மாதிரியே கருத்துக் களத்தில கலக்க(ஐ மீன் மிக்ஸ்) முடியலேன்னாலும் தன்னோட எண்ணம் என்னன்னு எல்லாருக்கும் புரியவச்சி இன்னிக்கு வரைக்கும் நல்ல பேரை அவங்க மாமியார் கிட்ட வாங்குறாங்களே அந்த பெருமை.
7. துபாய் வந்த பிறகு என்ன வேலை செய்தாலும் எவனாவது எனக்கு எதிரா ஆப்படிக்கன்னு மேலதிகாரியா வரும்போது அவனுக்கு சோப்புப் போடாம அடுத்த எடம் தேடி அசராம சேந்துக்குவேன். சோப்புப் போட்டாத்தான் கிடைக்குமின்னா நான் ஊர்லயே சோப்பு போட்டு ஒரு தொழில தொடங்கியிருப்பேன் ஆனா லஞ்சத்தையும் அடிவருடித் தனத்தையும் தனிமனுசனா ஒழிக்க ஒவ்வொருத்தனும் முன்வராத வரைக்கும் யாரும் எதுவும் பன்ன முடியாதுன்னு நம்பி அதுபோல இன்னிக்கு வரைக்கும் ஒத்தை பைசா கூட லஞ்சம்ங்கிற பேர்ல தராமலே இருக்கிரது.( ஒருதடவை இதுக்காக எங்க ஊர் மணியாரர (வி.எ.ஓ) நடு ரோட்டில நிருத்தி அட்வஸ் மழ பொழிஞ்சதில அதுக்கப்புறம் தல என்னைய பாத்தா ஒரு நமுட்டுச் சிரிப்போட எஸ்கேப்பாகும் (இதுல கொடுமை என்னன்னா அவ்ரு எங்க அப்பாவுக்கு நண்பர் பக்கத்து ஊர்க்காரர்) அதுக்கப்புறமா யாருக்காவது கையெழுத்து வாங்கனுமின்னா கையில காசே கொடுத்தாலும் வாங்கரதில்லே அந்த வகையில ஒரு மனுசனயாச்சும் மனசாட்சிக்காக நடக்கவச்ச இந்தியன் நான்.
8. இது எல்லாத்துக்கும் மேல எந்த விஷயத்தையும் ஆராய்ஞ்சி அது சரின்னு பட்டா யாரு எத்தனை எதிர்ப்பு வந்தாலும் கொஞ்சம் கூட கவலைப்படாம நான் சொன்னதை செஞ்சே தீருவேன்கிற பிடிவாதம். இன்னைக்கு வரைக்கும் இது எனக்கு ஏகப்பட்ட பலனை கொடுத்திருக்கு. என்னோட கல்யாணத்தில இருந்து நான் விவசாயம் பாத்தது வரைக்கும். நான் படிச்சி முடிச்சதும் எதாவது வேலைக்கு போகனும்கிறது எங்க அம்மாவோட விருப்பம் ஆனா விவசாயம் பாக்கப் போரேன்னு பிடிவாதமா 5 வருசம் தீவிர விவசாயம் பன்னியது. விவசாயம் முன்னேறினா மட்டுமே ஒரு நாடு முழு தன்னிறைவு பெற்ற நாடா மாற முடியும்கிறதில அசைக்க முடியாத நம்பிக்கையோட இன்னும் தீவிர விவசாயக் காதலனா இருக்கிறது. இதுக்கெல்லாம் காரணமான எங்க அப்பா . எங்க அப்பா விவசாயம் பாத்தா என்னவெல்லாம் பன்னலாம்னு சொல்லும்போதும் அது எவ்வளவு கஷ்டம் தருகிற தொழில்ன்னு சொல்லும் போதும் அதுக்கெல்லாம் தயங்காம நீயும் விவசாயம் பாருடான்னு சொல்லும் துணிச்சல். இந்த திராவிடப் பற்று, மாற்றுச் சிந்தனைக்கும் கருத்துக்கும் எப்பவும் ஆதரவு தருகிற அந்த குணம் எல்லாம் எங்க அப்பா மூலமா வந்ததுங்கிர பெருமை.
....இந்த எட்டு ஆட்டம் இத்தோட முடிஞ்சது இல்லை. இன்னும் யாரெல்லாம் எட்டு போடாம இருக்காங்கன்னு தெரியலை அதையெல்லாம் தேடி ஒரு எட்டு பாவப் பட்ட ஆட்களை இங்க புடிச்சிகிட்டு வாரவரைக்கும்
இந்த எட்டு பதிவுக்கு விதிகளாய்...
தன்னை பற்றிய எட்டு சுய தம்பட்டங்களை பப்ளிக்கா சொல்லுங்க.
இன்னும் எட்டு போடாத லைசன்ஸ் வாங்காத எட்டுபேரை இத்துகினு வாங்க
அதை அவங்களுக்கு மயிலோ இல்லை ரயிலோ இல்ல புறாவோ அனுப்பி அவங்களையும் கோதாவுக்கு ரெடி பன்னுங்க

6 comments:
அதிகம்டோய்னு பிரமிச்சி எடத்த காலிபன்ற வரைக்கும் விடாம பேசுறது (தெகா, கவணிக்க) :) //
அது தெரிஞ்சக் கதைதானே... எல்லாம் கிரகமய்யா...
#6 தெறமைதான்... :-))
#7 சபாஷ்... கீப் இட் அப்
# 8 நிறைய பாரட்டணும் இதுக்கு. நிறைய பேரு இது போல சிந்சிச்சி நம் நாட்டுக்கு எது உகந்ததோ அதில ஈடுபடணும். அது அங்கொன்னும் இங்கொன்னுமாகத்தான் ஆரம்பிக்கும். அப்படியே ஆரம்பிக்கிறவங்களும் நிறைய எழுதி மத்த மந்த மக்களை (படிச்சுப் போட்டோம் என்னாத்தா விவசாயம் பாக்கிறதுன்னு இருக்கிற) சென்றடையிற மாதிரி எழுத்து மூலமாகவும், பிரச்சாரங்களின் மூலமாகவும் விழிப்புணர்வேற்றி இருக்கிற விவசாய நிலத்தை பயன்படுத்த ஆரம்பிக்கணும்வோய்.
செய்வீகளா... செய்வீக, நம்புறேன். நன்று நன்று.
//விவசாயம் முன்னேறினா மட்டுமே ஒரு நாடு முழு தன்னிறைவு பெற்ற நாடா மாற முடியும்கிறதில அசைக்க முடியாத நம்பிக்கையோட இன்னும் தீவிர விவசாயக் காதலனா இருக்கிறது. இதுக்கெல்லாம் காரணமான எங்க அப்பா . எங்க அப்பா விவசாயம் பாத்தா என்னவெல்லாம் பன்னலாம்னு சொல்லும்போதும் அது எவ்வளவு கஷ்டம் தருகிற தொழில்ன்னு சொல்லும் போதும் அதுக்கெல்லாம் தயங்காம நீயும் விவசாயம் பாருடான்னு சொல்லும் துணிச்சல்.//
உங்கள் தந்தைக்கு எங்கள் அன்பு கலந்த வணக்கங்கள்.
நன்றி தெகா கண்டிப்பா நான் பாத்த விவசாயத்தை பத்தி ஒரு தொடர் எழுதுவேன்
//விவசாயக் காதலனா இருக்கிறது//
:)
template sariyaa illee/ Post kadhambama theiryuthu. comment section sariya ille. Expressu, hindu maathuri kulaputhaiya un postu
நிறைய 'அட!'
கொஞ்சம் 'ஓ'
கொஞ்சம் 'ம்ம்ம்'
கொஞ்சம் 'தெரிஞ்சதுதானே'! :)
Post a Comment