தமிழ்க் கலாசாரப்படி வேட்டி, சட்டையணிந்து கொண்டு பொது விழாவொன்றில் சிறப்பு விருந்தினராகப் பேசச் சென்ற காங்கிரஸ் பிரமுகர் அமெரிக்கை நாராயணனை கூட்ட அரங்கின் வாசலிலேயே அங்கிருந்த காவலாளி தடுத்து நிறுத்தி வெளியேற்றிய அசிங்கம், தமிழர்களின் தலைநகரான சென்னையில்தான் நடந்திருக்கிறது.
எப்போதுமே பேண்ட், சட்டையுடன் காட்சியளிக்கும் அமெரிக்கை நாராயணன், கிராமங்களில் தொழிற்சாலைகளை உருவாக்குவதற்கான முயற்சியில் ஆர்வம் காட்டும் தொழிலதிபர்களிடையே பேசுவதற்காக வழக்கத்திற்கு மாறாக வேட்டி, சட்டையணிந்து சென்றபோதுதான் அவமானப்படுத்தப்பட்டிருக்கிறார்.
அந்த நிமிடத்தில் வெட்கித் தலைகுனிந்த தனது வேதனையை வெளிப்படுத்தினார் அவர்.
‘‘மத்திய பஞ்சாயத்து ராஜ் துறையின் கௌரவ ஆலோசகராக நான் பதவி வகித்து வருகிறேன். இந்தியத் திருநாட்டின் பிரதமராக மன்மோகன் சிங் பதவியேற்ற பிறகு, முதல் முறையாக அனைத்து மாநில முதல்வர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே, ‘கிராமங்களின் வளர்ச்சிதான் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும். அதனால், ‘கிராமந்தோறும் கிராமத் தொழில் மையம்’ திட்டத்தை வெற்றியடையச் செய்ய தொழிலதிபர்களும், தொழில் முனைவோரும் ஆர்வம் காட்ட வேண்டுமென்று’’ வலியுறுத்தினார் பிரதமர்.
அவரின் எண்ண ஓட்டத்திற்கேற்பதான், தமிழக அரசும் மத்திய அரசுடன் இணைந்து கிராமங்களில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. நானும் கிராமங்களில் கிராமச் தொழில் மையத்தை உருவாக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். அந்தப் பணியை தீவிரப்படுத்தும் வேகத்தில்தான் சென்னையிலுள்ள பல தொழிலதிபர்களைச் சந்தித்து நான் பேசி வருகிறேன். இதையறிந்த நண்பர்கள் சிலர், ரோட்டரி சங்கக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசுமாறு எனக்கு அழைப்பு விடுத்தனர். நானும் அதற்கு சம்மதம் தெரிவித்தேன்.
சென்னையிலுள்ள மெட்ராஸ் எஸ்பிளனேட், அம்பத்தூர், சென்னை கேலக்ஸி மற்றும் வடமேற்கு ரோட்டரி சங்கங்களின் சார்பில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழுள்ள சென்னை கிரிக்கெட் கிளப் கூட்டரங்கில் கடந்த 19_ம் தேதியன்று சிறப்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். அவர்களின் அழைப்பிற்கேற்ப நானும் கூட்டத்திற்குச் செல்ல புறப்பட்டேன். அமெரிக்காவில் பணிபுரிந்து பேண்ட், சட்டை அணிவதையே வழக்கமாகக் கொண்டவன்தான் நான். என்றாலும் கிராம மக்களின் வளர்ச்சிக்காக பேசச் செல்கிறோமே என்பதற்காக வேட்டி சட்டையணிந்து கொண்டு கூட்டத்திற்குச் சென்றேன். எனது காரிலிருந்து இறங்கி கூட்ட அரங்கிற்குள் நுழைய முயன்ற போது, அங்கிருந்த கிளப் ஊழியர் என்னிடம், ‘வேட்டி, சட்டை அணிந்து கொண்டு உள்ளே செல்லக்கூடாது’ என்று கூறி என்னைத் தடுத்தார்.
அந்த ஊழியரிடம், ‘நான்தான் இந்தக் கூட்டத்தில் பேசப் போகிற முக்கியமான நபர்’ என்றேன். ‘அதுபற்றியெல்லாம் எனக்குத் தெரியாது. வேட்டி, சட்டையணிந்த யாரையும் கிளப்பிற்குள் விடக்கூடாது’ என்று எனக்கு சங்க நிர்வாகிகள் உத்தரவு போட்டுள்ளனர். அதை என்னால் மீற முடியாது!’ என்றார் அந்த ஊழியர். அவர் தொடர்ந்து பேசியதில் மரியாதைக் குறைவான வார்த்தைகள் விழுந்தன.
அதனால் அவமானத்திற்குள்ளான நான் எனது கைபேசி மூலம் ரோட்டரி சங்க நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு எனது நிலையை வருத்தத்தோடு தெரிவித்தேன். அவர்களும் பதறியடித்துக் கொண்டு வெளியே வந்து என்னிடம் மன்னிப்புக் கேட்டனர். பின்பு சங்க நிர்வாகிகளுடன் ரோட்டரி உறுப்பினர்கள் தொடர்புகொண்டு பேசிய பிறகும், வேட்டி, சட்டையுடன் என்னை கூட்டத்திற்குள் அனுமதிக்க மறுத்துவிட்டார் அந்த ஊழியர்.
அங்கு அவமானத்திற்குள்ளான எனக்கு இரண்டே வழிகள்தான் இருந்தன. ஒன்று, தமிழ்க் கலாசாரத்தையும் பண்பாட்டையும் மதிக்காத இடத்திலிருந்து உடனடியாக வெளியேறுவது. மற்றொன்று, கிராம மக்களின் வளர்ச்சி சம்பந்தப்பட்ட விஷயமென்பதால், வேட்டியை மாற்றி பேண்ட் அணிந்து கொண்டு கூட்டத்தில் பேசுவதென்பது தான்.
‘அந்தக் கூட்டத்தில் ஏதாவது ஒரு கிராமத்தில் தொழில் தொடங்கும் ஆர்வத்துடன் வந்திருக்கும் தொழில் அதிபருடன் பேசுகின்ற வாய்ப்பை இழந்து விடுவோமோ?’ என்ற ஆதங்கம் காரணமாக நான் அந்த இடத்தை விட்டு வெளியேறி அருகில் உள்ள கடைக்குச் சென்று பேண்ட் ஒன்றை வாங்கி அணிந்து கொண்டு கூட்டத்தில் பேசினேன். என்றாலும் எனது கலாசாரத்திற்கு ஏற்பட்ட அவமானத்தில் இருந்து என்னால் எளிதாக விடுபடமுடியவில்லை’’ என்றார் அமெரிக்கை நாராயணன்.
இந்த அவலம் பற்றி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த நிர்வாகிகளில் ஒருவரான ரோட்டரி சங்க நிர்வாகி, ஆடிட்டர் துரைராஜ் கண்ணடியரிடம் பேசினோம். அவரும் ‘‘அமெரிக்கை நாராயணனுக்கு ஏற்பட்ட நிலையைக் கண்டு அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட எல்லோரும் வெட்கித் தலைகுனிந்தோம்!’’ என்றார்.
இவர்களின் குமுறல்களுக்கு விடை காண சென்னை கிரிக்கெட் கிளப் பொருளாளர் வினோத்குமாரைத் தொடர்பு கொண்டு பேசினோம்.
‘‘உடையணிவது குறித்து கிளப்பிற்கென்று தனியாக ஒரு விதி இருக்கிறது. இது குறித்து உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரியும். வேட்டி கட்டிக்கொண்டு கிளப்பிற்குள் வரக்கூடாது என்பது ஏற்கெனவே இருந்த நிர்வாகிகள் ஏற்படுத்திய விதிமுறைதான். அதைத்தான் நாங்களும் பின்பற்றி வருகிறோம்.
கடந்த சில நாட்களாக நான் ஊரில் இல்லாததால் கடந்த 19_ம் தேதி என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது. ஆனால், வேட்டி கட்டி வருபவர்களை கிளப்பிற்குள் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பிய சம்பவம் ஏற்கெனவே நடந்துள்ளது!
எப்படி உடையணிந்து வரவேண்டுமென்பது எங்கள் உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரியும். அவர்கள் மட்டுமல்ல, அவர்கள் அழைத்து வரும் நபர்களும் எந்த உடையணிந்து வரவேண்டுமென்பதை நாங்கள் தெளிவாக அறிவுறுத்தியுள்ளோம்.
‘தமிழக முதல்வர், அமைச்சர்கள் எல்லாம் வேட்டியோடு வந்தால் திருப்பி அனுப்புவீர்களா?’ என்பதற்கு நான் பதில் கூற முடியாது.
ஆனால், எங்கள் உறுப்பினர்களின் நிகழ்ச்சிகளில் வேட்டி கட்டிய அர்ச்சகர்களைக் கொண்டு சடங்கு செய்யும் நிலையிருந்தால், அந்த மாதிரி நிகழ்ச்சிகளைக் கிளப்பில் நடத்தாமல் தவிர்த்து விடுங்கள் என்று நாங்கள் முன்கூட்டியே கூறிவிடுவோம்.
உடை அணிவது குறித்து கிளப் கடைப்பிடித்து வரும் நடைமுறையில் எந்த சமரசத்திற்கும் நாங்கள் உடன்படுவதில்லை!’’ என்றார் வினோத்குமார், இறுதியாக.
தமிழ், தமிழர் பாதுகாப்புப் பேரவைகளெல்லாம் இதற்கு என்ன செய்யப்போகின்றன என்பதுதான் கேள்வி.


நன்றி : குமுதம் ரிப்போர்ட்டர்

3 comments:

Anonymous said...

சிவாஜி திரைபடத்தை பார்க்க தவறாதீர்கள்..

உங்களுக்காக

These are the list of theatres screening Shivaji.

THEATRE

NO OF SHOWS

Expected Ticket Rates
Abirami
(Abirami, Bala, Annai, Sakthi Abirami)

(Jun 15,16,17) � 20 shows (includes 9:00 am show)
Other days 16 Shows

50,40,10
Albert (Albert, Baby Albert)

(Jun 15,16,17) � 10 shows (includes 9:00 am show)
Other days 8 Shows

50,45,10
AVM Rajeshwari

(Jun 15,16,17) � 5 shows (includes 9:00 am show)
Other days 4 Shows

50,45,10
Bharath
* Not confirmed

(Jun 15,16,17) � 5 shows (includes 9:00 am show)
Other days 4 Shows

50,45,10
Inox
(Inox 1,2,3)

(Jun 15,16,17) � 16 shows (includes 9:00 am show in all 4 screens)
Other days 12 Shows

120,20
Jayapradha
(Jayapradha, Raj)

(Jun 15,16,17) � 10 shows (includes 9:00 am show)
Other days 8 Shows

50,10
Mayajaal


(Jun 15,16,17) � Shows from 8:00 am to 11:30 pm Nonstop screening approximately 25 shows or more.

80,70,10
Sathyam
(Sathyam, Santham/Sree)

(Jun 15,16,17) � 14 shows (includes 9:00 am show in Sathyam, Santham, Seasons, Sree, Studio 5,Six Degrees)
Other days 8/12 Shows

120,100,90,85, 75,60,10
Shanthi
(Shanthi, mini Shanthi)

(Jun 15,16,17) � 10 shows (includes 9:00 am show)
Other days 8 Shows

50,45,10
Sri Brindha

(Jun 15,16,17) � 5 shows (includes 9:00 am show)
Other days 4 Shows

50,45
Udhayam
(Udhayam, Sooriyan, Chandran, mini Udhayam)

(Jun 15,16,17) � 20 shows (includes 9:00 am show)
Other days 16 Shows

48,50,10


* Note that Sathyam will not update the thecinema.in website on the first day of reservation. You got to check the tickets at theatre only.
* Inox Preference will be given for internet, SMS and Bulk booking to avoid crowd at City Center
* Theatre Agastya may also screen Shivaji

Other theaters in suburbs with expected minimum number of shows on first three days

Ambathur Raaki (15)
Chromepet Vettri (10 shows)
Thiruvanmiyur Thyagaraja (5)
Adyar GanapathyRam (5)
Prathana dive in (7)
Kolthur Ganga (15)
St Thomas Mt Jothi (5)
Karapakkam Aravind (5)
Poondhamalli Sundar (15)
Virugambakkam Sridevi (15)
Nanganallur Velan (15)
Kanchipuram Aruna (10)
Koyembedu Rohini (20 )
Thiruvottiyur Odean Mani (5

Anonymous said...

"America" Narayanan, I thought he is a American living in India....

Oh he may be tamilan....

I thought most of tamil interested can have tamil names....

suppan

Anonymous said...

well, he did not go in Kovanam.