கடந்த இரண்டு நாட்களாக எனது இன்னொரு பதிவான கிழுமத்தூர் எக்ஸ்பிரஸிலும் இந்த கதம்பத்திலும் விரும்பத் தகாத பின்னூட்டங்கள் மற்றும் வசவுகள் தனிமனித தாக்குதலின் உச்ச கட்டமாக என்னை தனிப்பட்ட முறையில் தக்குவதால் இந்த பதிவுலகை விட்டு முற்றாய் விலகுகிறேன். இனி என் பதிவுகள் எந்த திரட்டியிலும் வராது. சில கீழ்ப்பாக்க கிறுக்குகள் என் கருத்து சுதந்திரத்தின் அடிநாதத்தினை கேள்விக்குள்ளாக்கும் விதமாக தொடர்ந்து பின்னூட்டியும்தனி மடலிலும் என்னை மிரட்டியும் திட்டியும் வருவதால் இதற்கு மேல் இந்த பாழாய் போன சமூகம் எப்படி ஆனால் என்ன?
இனிமேலும் எழுதி இந்த மாக்களுக்கு என்னதை சாதித்திட போகிறோம், நான் எழுதுவதால் இந்த உறுப்படாத சமூகம் திருந்திவிடவா போகிறது. என்னை தனிப்பட்ட முறையில் தாக்குவதால் எனக்கும் கொஞ்சம் அசிங்கமாக இருக்கிரது அதனால் எதற்கு இந்த பொழுதை காலிசெய்யும் போக்கத்த வேலை என பதிவுலகை விட்டே விலகுகிறேன்.........
..........
இப்படி ஒரு பதிவைத்தான் அந்த முழு லூசு என்னிடம் இருந்து இன்று எதிர்பார்த்திருப்பான் அவன் யாராய் இருந்தாலும் என்னை தனிப்பட்ட முறையில் தாக்கி என்னை மனசளவில் சோர்வடைய வைக்க வேண்டும் என்பது அந்த நபரின் எண்ணமாய் இருப்பின் அய்யோ பாவம் நான் என்ன செய்ய? இந்த மாதிரி அரட்டல் களுக்கும் மிரட்டல்களுக்கும் மிரள்பவனாய் இருந்திருந்தால் இந்த பதிவுலகில் குப்பைகொட்ட நானும் வந்திருக்க மாட்டேன். போராட்ட குணம் எனக்குள் எப்போதும் நிறைந்திருப்பது. எவனுக்காகவும் நான் இந்த பதிவுலகை விட்டு போய்விடுவேன் என்றோ இல்லை நான் எழுதும் கருத்துக்களில் இருந்து என்னை மாற்றிவிடலாம் என்றோ மல்லாக்கப் படுத்து கனவு கானும் பகல் தூக்க வேலைகளை இனி விட்டுவிடவும். என்னை தனிப்பட்ட முறையில் எனது குடும்பத்தை தாக்கி எழுதுவதால் எல்லாம் என்னை நீ சோர்வடையச் செய்ய முடியாது என்மேல் வந்து விழும் உன் கழிவுகள் எல்லாம் என்னை மேலும் மேலும் உரமாக்கும்.
நான் எழுதுவதை நிருத்த வேண்டுமானால் அதற்கு இரண்டே காரணங்கள் தான் இருக்க முடியும் ஒன்று நானாகவே எழுதுவதை விட்டுவிட வேண்டும் இல்லை நான் செத்துப் போக வேண்டும். இது இரண்டுமே இப்போதைக்கு நடப்பதாய் தெரியவில்லை. அதனால் அடுத்த முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள் அனானி.

38 comments:

கப்பி பய said...

:)))

கப்பி பய said...

இவங்க அக்கப்போர் தாங்க முடியலப்பா :))

நாமக்கல் சிபி said...

!?

:(

மகேந்திரன்.பெ said...

என்ன சிபி நல்லா பாருங்க நீங்களும் சிரிப்பீங்க

மகேந்திரன்.பெ said...

கப்பி ஒனக்கு ஒரு ரகசியம் சொன்னா காப்பாத்த தெரியாதா?

மின்னுது மின்னல் said...

ஒன்னும் சொல்லுரத்துக்கு இல்ல

:)

Anonymous said...

மகேந்திரன்,

உங்கள் பதிவிலும் கோவி பதிவிலும் அப்படி ஆபாசமாக திட்டியவன் கண்டிப்பாக பாப்பானாகத்தான் இருக்க வாய்ப்பு உண்டு!!!

மாயன் said...

மகி

மறுமொழி மட்டுறுத்தல் பயன்படுத்துங்க...

நேற்றைக்கு அந்த மறுமொழிகளை படிக்க நேர்ந்துடுச்சு.. ரொம்ப வருத்தமாயிருந்தது... தனிமனிதரை பற்றிய அருவருப்பான விமரிசனத்தோட உச்சக்கட்டம் இது...

Anonymous said...

இலவசக் கொத்தனாருக்கு நன்றி (ஏற்கனவே இதேபோல் ஒரு உப்புமா கிண்டியதற்காக)

மகேந்திரன்.பெ said...

//மறுமொழி மட்டுறுத்தல் பயன்படுத்துங்க...

நேற்றைக்கு அந்த மறுமொழிகளை படிக்க நேர்ந்துடுச்சு.. ரொம்ப //

அதெல்லாம் பயன்படுத்தி படிச்சி பாத்துதான் பப்ளிஷ் பன்னினேன் பின்னே என்னை நம்பி எழுதின ஒரு அனானியோட ஆசைய யாருக்கும் தெரியாம மூடி மறைச்சா நான் என்ன அமுக தலைவர்?

மகேந்திரன்.பெ said...

மாயன் இந்த பதிவு கூட அந்தாளுக்கு என்னோட பதிலை எப்படி சொல்றதுன்னு தெரியாமத்தான் ஏன்னா அனானியால்ல வந்திருக்கு

மின்னுது மின்னல் said...

பதிவுலகை விட்டு முற்றாய் விலகுகிறேன்"
//

யார...??

இத இப்பதான் பார்தேன்... :)

விடாதுகருப்பு said...

மகேன்,

இந்த வெட்டி பரதேசிக் கூட்டங்களுக்கு பகுத்தறிவோடு மூளையைப் பயன்படுத்தி யாரேனும் பதிவுகள் இட்டால் பிடிக்காது. சமஸ்கிருதம் வாழ்க என்பான், ஆனால் பதிவுகள் எல்லாம் தமிழில் போடுவான். வீட்டிலும் கோவிலுலும் தமிழ் பேசுவான். கடவுளிடம் பேசும்போது மட்டுமே பயன்படும் வடமொழியை உயர்வாய்ச் சொல்வான்.

இவர்களிடம் இருந்து தனித்து வந்து சுய உணர்வோடு பகுத்தறிவாக எழுதியதுதான் தாங்கள் செய்த தவறு. இந்த வெட்டிக் கூச்சலுக்கெல்லாம் பயப்படும் ஆள் அல்ல நீங்கள். கொக்கென நினைத்தானா அந்த கேனையர்கள்?

அவர்களின் பொய்களும் புரட்டுக்களும் இனிமேல் செல்லுபடி ஆகாது என்பது தெரிந்தே இழிமொழிகளில் இறங்கி உள்ளனர்!

அப்படி திட்டக்கூட எம் தமிழையே பயன்படுத்திய அந்த வீனர்களை என் செய்வது?

மகேந்திரன்.பெ said...

//யார...??

இத இப்பதான் பார்தேன்... :) //

இப்பவாச்சும் விளங்கிச்சே மின்னலு :)

ongommala_othavan said...
This comment has been removed by a blog administrator.
செந்தழல் ரவி said...

:)))))))))))

Its a Good Shot !!!!!!!!

Anonymous said...

அடக்கருமமே, ஏதோ வலைநாட்டில் ஒரு நல்லது நடக்கப்போகுதுன்னு பார்த்தேன், அது உண்மையில்லையா?...

சரி, சரி, நீங்க சொன்ன 2 விதத்தில் முதல் விதம் சீக்கிரம் நடக்க ஏக இறைவனைப் பிரார்த்திக்கிரேன்....

Anonymous said...

இதென்ன கொடுமை! விடாது கருப்பு/போலி டோண்டு கேம்பிலே இருக்கற மகேந்திரனாலயே சகிக்க முடியாத அசிங்கப் பின்னூட்டங்களா? ஆரப்பா அது மோசக்காரனுக்கு மோசக்காரன்?
கண்ணம்மாப்பேட்டை கதிரேசன்

Anonymous said...

A really good publicity stunt.

மகேந்திரன்.பெ said...

அய்யா அனானி பதிவுலகத்துக்கு புதுசாய்யா நீங்க வாங்க "வாங்க"

நல்லா பாருமய்யா ::)

Anonymous said...

//அய்யா அனானி பதிவுலகத்துக்கு புதுசாய்யா நீங்க வாங்க "வாங்க"

நல்லா பாருமய்யா ::) //


you are pointing at me??

thiyagu said...

அன்புள்ள மகேந்திரன் உங்க பதிவுகளை நீண்டநாளாக படித்து வருகிறேன் .

அனானிகள் தொல்லைகெல்லாம் பயந்து நீங்கள் பதிவுலை விட கூடாது

தந்தை பெரியார், அம்பேத்கார் போன்ற தலைவர்களை எண்ணி பாருங்கள் தமது வாழ்நாளில் எத்தனை எதிர்புகளை அவர்கள் சந்தித்து இருக்க கூடும்

Anonymous said...

//அனானிகள் தொல்லைகெல்லாம் பயந்து நீங்கள் பதிவுலை விட கூடாது//
அதானே, ஒங்க குரூப் அந்தக் கிழட்டுப்பயலைத் திட்டாததா? அவனே நிலைச்சு நின்னு போடா டோமர்னு சொல்லிட்டு நிக்கறான், கொமரன் ஒனக்கென்ன? அதுவும் விடாதுகருப்பு/போலி டோண்டுவோட அல்லக்கை ஒன்னை எவனாலே நீங்க எல்லாம் அசிங்கமா மத்தவனை திட்டறதவிட திட்டிட முடியப்போவுது? அதுலேயும் நீதாண்டா ராஜா.
கண்ணம்மாப்பேட்டை கதிரேசன்

Anonymous said...

//தந்தை பெரியார், அம்பேத்கார் போன்ற தலைவர்களை எண்ணி பாருங்கள் தமது வாழ்நாளில் எத்தனை//

அடப்பாவி தியாகு,

கிழமத்தூரானை பெரியார்,அம்பேத்கர் ரேஞ்சுக்கு உயர்த்திட்டியே.அது சரி திருப்பூர் பனியன் முதலாளிகளுக்கு சாதகமா தொழிலாளர் யூனியன் நடத்தும் தியாகு தானே நீ?மேல் வர்க்கத்தினருக்காக பனியன் தயாரிக்கும், அரை நிலபுரபுத்துவ,மறு காலனி ஆதிக்க சக்திகளான திருப்பூர் முதலாளிகளுக்கு உன்னைப் போன்றவர்கள் ஜல்லி அடித்து தொழிலாளர் போர்வையில் போலி கம்யூனிசம் பேசும் ம க இ க கும்பலை சேர்ந்தவன் தானே நீ?கோமணம் கூட இல்லாத நிலையில் எம் மக்களை வைத்திருக்கும் போது, டி ஷர்ட்,பனியன் பண்ணுவோருக்கு விளக்கு பிடித்து, காசு பார்க்கும் நீ கம்யூனிசம் பேசுவது வியப்பை அளிக்கவில்லை.

Anonymous said...

உங்களை திட்டி பின்னூட்டம் போட்ட ஆபாச அனானி திருச்சி அருண் என்ற பெயரில் சதுர்வேதி பதிவுகளில் பின்னூட்டம் போடுவதையும் கவனித்திருக்கலாம்.

Anonymous said...

ithellam dondu mamavoda velai

Anonymous said...

//கிழமத்தூரானை பெரியார்,அம்பேத்கர் ரேஞ்சுக்கு உயர்த்திட்டியே.அது சரி திருப்பூர் பனியன் முதலாளிகளுக்கு சாதகமா தொழிலாளர் யூனியன் நடத்தும் தியாகு தானே நீ?மேல் வர்க்கத்தினருக்காக பனியன் தயாரிக்கும், அரை நிலபுரபுத்துவ,மறு காலனி ஆதிக்க சக்திகளான திருப்பூர் முதலாளிகளுக்கு உன்னைப் போன்றவர்கள் ஜல்லி அடித்து தொழிலாளர் போர்வையில் போலி கம்யூனிசம் பேசும் ம க இ க கும்பலை சேர்ந்தவன் தானே நீ?கோமணம் கூட இல்லாத நிலையில் எம் மக்களை வைத்திருக்கும் போது, டி ஷர்ட்,பனியன் பண்ணுவோருக்கு விளக்கு பிடித்து, காசு பார்க்கும் நீ கம்யூனிசம் பேசுவது வியப்பை அளிக்கவில்லை.//

சரி சரி, காவி முக்காட்டை கழட்டிட்டு பேசுங்கோ குமரிக் கண்டர்.

கோவி.கண்ணன் said...

சொறிநாய் துறத்தியதற்காக தற்கொலை செய்து கொள்வது கோழைத்தனம்.

:)

பிரபு ராஜதுரை said...

உற்சாகமும், கேலியும், கிண்டலுமாகத்தான் உங்கள் பதிவுகளைப் பார்த்திருக்கிறேன். இப்படிப் பார்ப்பதற்கு வருத்தமாகத்தான் இருக்கிறது.

நீங்கள் புனைப் பெயரில் எழுதிவருவதாக நினைத்தேன்!

மனதின் ஓசை said...

அது...

மகேந்திரன்.பெ said...

//உற்சாகமும், கேலியும், கிண்டலுமாகத்தான் உங்கள் பதிவுகளைப் பார்த்திருக்கிறேன். இப்படிப் பார்ப்பதற்கு வருத்தமாகத்தான் இருக்கிறது.//

அட இந்த பதிவு கூட நகைச்சுவை நையாண்டின்னு வகைப்படுத்தி யிருக்கே கவணிக்கலையா? என்ங்க போங்க

//நீங்கள் புனைப் பெயரில் எழுதிவருவதாக நினைத்தேன்!//
பூணைப் பெயரா புலிப்பெயர் என்றல்லவா நினைத்திருக்க வேண்டும் :))

Anonymous said...

ஆமாம் உம்மை ஒருவன் திட்டினானாம் அதுக்கு இவரு பதில் அடியாம். வேலை ஏதும் இல்லை போல இரண்டு பேருக்கும்

வவ்வால் said...

நல்ல நகைச்சுவை அய்யா உம்மோடு!

உங்கள் நண்பன்(சரா) said...

//வவ்வால் said...
நல்ல நகைச்சுவை அய்யா உம்மோடு
//
மகேந்திரனின் இந்தப் பதிவு சீரியஸானது. யாரும் இதை காமெடி பண்ணிவிடவேண்டாம்!

அன்புடன்...
சரவணன்.

உங்கள் தமிழன் said...

எனக்கென்னமோ உண்மைத்தமிழன் மேலதான் டவுட்டா இருக்கு.

மகேந்திரன்.பெ said...

//மகேந்திரனின் இந்தப் பதிவு சீரியஸானது. யாரும் இதை காமெடி பண்ணிவிடவேண்டாம்!//

என்ன கொடுமை சரவணன் இது? நகைச்சுவை நையாண்டின்னு வகைப்படுத்தியிருக்கேனே கவணிக்கலையா?
மேட்டர் உண்மைதான் ஆனா நீங்க பாதிய மட்டும் படிச்சிருக்கீங்க,
வெளுத்ததெல்லாம் வெற்றிடம் இல்லை
:)

வடிவேல் said...

திரு.மகேந்திரன்,
உங்கள் பதிவிற்கும் பின்னூட்டங்களுக்கும் இருக்கும் பெரிய இடைவெளியை நீங்களே விளக்கிவிடுங்களேன். பாவம் நிறைய பேர் ஏமாந்து போய்விட்டார்கள்.

உங்கள் நண்பன்(சரா) said...

//என்ன கொடுமை சரவணன் இது? நகைச்சுவை நையாண்டின்னு வகைப்படுத்தியிருக்கேனே கவணிக்கலையா?
மேட்டர் உண்மைதான் ஆனா நீங்க பாதிய மட்டும் படிச்சிருக்கீங்க,
வெளுத்ததெல்லாம் வெற்றிடம் இல்லை
:) //

என்ன கொடுமை மகேந்திரன்,எனக்குத்தெரியாதா? உமது நகைச்சுவை உணர்வு பற்றி!:))

மீண்டும் சொல்லுகிறேன், இந்த சீரியஸ் பதிவை யாரும் காமெடி பண்ண வேண்டாம்:)


அன்புடன்...
சரவணன்.