ஜெய் ஸ்ரீராம் !!

புதுடில்லி: " சுதந்திர இந்தியாவில் உயர் ஜாதியினரின் நிர்வாகம் காரணமாகவே ஊழல் பெருத்து விட்டது' என, சீனியர் வக்கீல் ராம் ஜெத்மலானி சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளார். உயர்கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை வலியுறுத்தி மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்களை, தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட பெஞ்ச் விசாரித்து வருகிறது. இந்த பெஞ்ச் முன், இடஒதுக்கீட்டை ஆதரித்து சீனியர் வக்கீல் ராம் ஜெத்மலானி வாதிட்டதாவது: இந்திய சமூகத்தில் பல நுõற்றாண்டுகளாக பின்தங்கிய நிலையில் உள்ள மக்களை மேம்படுத்தவே இடஒதுக்கீடு அவசியமாகிறது. அவர்களின் பழைய காயங்களுக்கு இடஒதுக்கீடு என்ற மருந்தை அரசு தடவி வருகிறது. உயர் ஜாதி வகுப்பைச் சேர்ந்த தற்போதைய தலைமுறையினர், தங்களின் மூதாதையர் செய்த தவறுகளுக்காக சில தியாகங்களை செய்து தான் ஆக வேண்டும். புத்திசாலியான வஞ்சகனை விட, நேர்மையான அப்பாவிக்குத் தான் நான் ஆதரவு தருவேன். ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு மூலம் பெயரளவில் உள்ள அறிவாளிகளையே உருவாக்க முடியும் என இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் இங்கு தெரிவித்த கருத்தே அவர்கள் மனு விவாதத்திற்கு ஏற்றதல்ல என்று எண்ண வைக்கிறது. அதற்காகவே இந்த மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும். ஆதிதிராவிட மக்களிடையே மிகவும் பின்தங்கிய மக்கள் இருப்பது மரபணு ரீதியான விபத்தே. குறிப்பிட்ட ஜாதியில் பிறந்த காரணத்துக்காகவே, பின்தங்கிய நிலையில் இருந்து அவர்களால் மீண்டு வர முடியவில்லை. அந்த அளவுக்கு சமுதாய அமைப்பு உள்ளது.இந்தியாவில் இதர பிற்படுத்தப்பட்ட மக்கள் 36 சதவீதம் பேர் உள்ளனர். இதுவே, அரசின் இடஒதுக்கீடு கொள்கை சரியானது என்பதற்கு ஆதாரம். மண்டல் கமிஷன் வழக்கில் ஒன்பது நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் பிறப்பித்த உத்தரவை மீறி, ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட பெஞ்ச் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்ற சூழ்நிலையை, இடஒதுக்கீடுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் உருவாக்க பார்க்கின்றனர். ஆர்.வெங்கட்ராமன் வழக்கில் ஏழு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு தான், இடஒதுக்கீடு விவகாரத்தில் மிகவும் பழமையான தீர்ப்பு. ஆனால், சுப்ரீம் கோர்ட்டின் அறிக்கையில் இருந்து அந்த தீர்ப்பே நீக்கப்பட்டு விட்டது. உயர் ஜாதி மக்களின் அதிகார செல்வாக்கிற்கு இதுவே சிறந்த உதாரணம். உயர் ஜாதி மக்களின் நிர்வாகம் காரணமாகவே, சுதந்திர இந்தியாவில் ஊழல் பெருத்து விட்டது.இவ்வாறு ராம் ஜெத்மலானி வாதிட்டார்.இந்த வழக்கில், டில்லி மாநில அரசு சார்பில் ஆஜரான சீனியர் வக்கீல் அசோக் பான், " மண்டல் கமிஷன் அறிக்கை அமலான பிறகு டில்லியில் இதர பிற்படுத் தப்பட் டவர்கள் பட்டியலில் 85 புதிய ஜாதிகள் சேர்க்கப் பட்டுள்ளன. டில்லியின் மக்கள் தொகையில் 48 சதவீதம் பேர் இதர பிற்படுத்தப்பட்டவர்களாகவே உள்ளனர். எனவே, டில்லி மாநில அரசின் இடஒதுக்கீடு கொள்கை சரியானதே' என்றார்.

0 comments: