சுஜாதாவின் பதவிக்காக நவலை ஒரே மூச்சில் இரண்டாவது முறையாக இன்று படித்து முடித்தேன். தமிழில் வெளிவந்த மிகச் சிறந்த அரசியல் நாவல்களுள் ஒன்றான இதைஎத்தனை முறை படித்தாலும் அலுப்பதே இல்லை..
தன்ராஜின் இடைத்தேர்தல் வெற்றியிலும் சின்னப்பனின் தோல்வியிலும் தொடங்கும் நாவல் எத்தனை சித்துவிளையாட்டுகள், சாதுர்யங்கள், சதிகள், திடீர் திருப்பங்கள் அரசியலில் சாத்தியமோ அத்தனையும் தொட்டுச் செல்கிறது. 1987-88 அரசியல் காலத்தைக் கொண்டு பார்கையில் இது அப்போதைக்கு ஒரு துணிச்சலான நாவலாக இருந்திருக்கலாம்.
நாவலில் எங்குமே தன்ராஜ் வேகம் குறையவில்லை. மாறாக ஆறுமுகனாருக்கும் அரங்கராமானுஜத்துக்கும் நடக்கும் பதவிப் போட்டியில் பலிகடா ஆக்கப் படாமல் சாதுர்யமான வழி நகர்த்தல்கள்,
திலகவதியோடு திருமணம், ஜமுனாவோடு இன்னொரு வாழ்கை என்று கதைதான் ஆனால் சுஜாதாவின் எல்லா நாவல்களில் இருக்கும் அதே ஒரு துளி நேர்மை ஒட்டிக் கொண்டிருக்கும் காதாநாயகன் நம் தன்ராஜ்.
காவல்துறையின் அசுர பலம் அரசாங்கத்தின் உளவுக் கண்கள், மத்திய அரசு மாநில அரசின் மேல் செலுத்தும் அழுத்தம், வெறுப்பு விருப்புகளுக்காக மட்டுமே மாநிலத்தில் அரசியல் தலையீடு அதற்கு வர்மா என்ற ஒரு புத்திசாலித்தனமான குள்ளநரி கவர்னர் என்று கதை எல்லா தளங்களிலும் தட தடக்கிறது.
பாலியல் தொழிலாளி கம் நடிகை கௌரியின் கொலையில் ஒரு சாட்சியாக நுழையும் சாவித்திரி, ஐபிஎஸ் கோகுல் போலீஸின் நேர்மை அநியாயங்கள் எல்லாவற்றுக்கும் ஒரு சாட்சியாக கூடவே வருகிறது.
ஒரு மாநில அரசை மத்திய அரசு என்னவெல்லாம் செய்யலாம் ஒரு முதல்வர் , மாநிலத்தில் என்னவெல்லாம் செய்யலாம் என்று அதன் உச்சம் வரை சென்று பார்க்கிறது நாவல்.
இதேல்லாவற்றையும் விட ஜமுனாவின் கணவனாக வரும் கோவிந்தராவ்..... எமகாதகன். சாருவின் வார்த்தைகளில் சொன்னால் பெட்டிஷ் பெட்டிஷ்.
ஜமுனாவும் பிறந்து இருபதே நிமிடத்தில் இறந்த குழந்தையும் பொட்டில் அறைய தன்ராஜ் விரக்தியின் உச்சியில் முதல்வர் பதவி வேண்டாம் என்க மீண்டும் ஆட்சிக்கு வர முடியாத அரங்கராரும், ஆட்சிக்கு வந்த ஆறுமுகமும் அதையும் காப்பாற்ற முடியாத நிலையில் தேர்தலுக்குள் தள்ளி விடுகிறார் கவர்னர்.
இதை அப்போது நாவலாக இல்லாமல் தொடராக படித்தவர்களுக்கு வாரா வாரம் கண்டிப்பாக காத்திருப்பது ஒரு தண்டனை போல் இருந்திருக்கலாம்.
ஒரு அரசியல் சினிமா ஆவதற்க்கான அத்தனை சாத்தியங்களும் இருக்கும் நாவலை இதுவரை யாரும் சினிமாவாக்காமல் இருப்பதற்க்காக பல கோடி நன்றிகள்