எனக்கு இந்த நூல்படிக்கும் ஆவல் எப்படி வந்தது எனக்கு ஆச்சர்யமே வருவதில்லை. ஏனென்றால் எனது தந்தை திரு கி.செ.பெரியசாமி அவர்கள் நூல் களை தேடிப் படிப்பதிலும் அதை வாங்குவதிலும் ஆர்வம் கொண்டவர், எனது அம்மா செல்லம்மாள் ஐந்தாம் வகுப்பு வரையே படித்திருப்பினும் குமுதம், ஆனந்த விகடன் மற்றும் நாவல்கள் படிக்கிற பழக்கம் உடையவர்.

நான் ஐந்தாம் வகுப்பு எறையூர் நேரு மேல்னிலைப் பள்ளியில் படித்த வேளையில் எனக்கு உணவு சமைத்துப் போடுவதற்க்காக என்னோடே வந்திருந்தார். அப்போது ஆரம்பித்தது. குமுதத்தில் 1987.

பின்னர் நான் தனியாக இருக்கும் சந்தர்பம் கிடைத்தபோது எனது செலவுகளுக்கு என்று தரப்படும் பணத்தில் முதலில் வாங்கியது பூந்தளிர் சிறுவர் இதழ். அதில் வரும் சில காமிக்ஸ் கதைகளுக்கு இன்றும் நான் ரசிகன்.

பின் கோகுலம் என வளர்ந்து மீண்டும் குமுதம் ஆனந்த விகடன் என ஒரு சனரஞ்சக வாசகனாகவே இருந்த என்னை கொஞ்சம் திருப்பியது தராசு வார இதழ்.

எறையூரில் 7ம் வகுப்பு படிக்கும் போது எனது வீட்டுக்கு அடுத்த வீட்டில் தங்கியிருந்த ஒரு ஹோமியோபதி மருத்துவர் (கோவிந்தசாமி என நினைக்கிறேன்) தராசு, வாங்குவார். அதில் வரும் சில அரசியல் செய்திகளும் அதன் பின் அதே சமயத்தில்1989 இல் வி.பி.சிங் ஆட்சியின் போது நடைபெற்ற மண்டல் குழப்பங்களும் அத்வானி கைது சந்திரசேகரின் கலைஞர் ஆட்சி கவிழ்ப்பும் அப்போது நடைபெற்று வந்த ராமர் கோயில் கட்ட கரசேவகர்கள் சேகரித்த செங்கல்லும் எனது பார்வைகளை விரிவாக்கத் தொடங்கின.

பின் 9ம் வகுப்பின் கடைசியில் இருந்து ஜூனியர் விகடனும் ஆரம்பித்தது. பத்தாம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு விடுமுறையில் எனது நல்ல நண்பர்களில் ஒருவரும் சிவப்பு சிந்தனைவாதியும் ஆசிரியருமான மறைந்த கிழுமத்தூர் ராஜேந்திரன் அவர்கள் அறிமுகத்தில் இந்தியா டுடே.

அவரின் மூலமே ரஷ்ய விஞ்ஞான நூல்கள் நன்றாக படம் வரைந்து பாகமிடப்பட்ட விளக்கமான நூல்கள். சிறிய புத்தகங்களில் இருந்து கொஞ்சம் அளவில் தடித்த புத்தகங்கள் படிக்க வேண்டும் என எல்லோறையும் போல் நானும் ஆசைப்பட்டபோது நல்ல தீனி போட்டவை ரஷ்ய நாவல்கள். காரின் அழிவுக்கதிர் முதல்.

பின் 10ம் வகுப்பில் பள்ளியின் இரண்டாவது மாணவனாய் தேர்ச்சி பெற்றதற்கு பரிசாய் எனது அப்பா வாங்கித்தந்த டி.வி.எஸ் எக்ஸ் எல் லில் திட்டக்குடி சுற்றப் போகையில் முதல் அறிமுகம் நூலகத்துடன். (கவனத்தில் கொள்க அதுவரை நான் எனது தந்தையின் நூல்கள் எதையும் படிக்கவில்லை) பின் 11 மற்றும் 12ம் வகுப்புகள் லப்பைக்குடிக்காடு அரசு மேல்னிலைப் பள்ளி.

அவ் வேளைகளில் எனக்கு ராஜேஷ்குமாரும், பாலகுமாரனும் பிடித்தவர்கள் ஆனார்கள். பாலகுமாரனை துரத்தி துரத்தி படித்ததில் நான் தனியே ஒரு பெண்ணிடம் காதல் கடிதமும் அவள் பதிலுக்கு காதலை யும் தந்தது நடந்தது. சுபாவும் அவ்வப்போது துப்பறிய ஆரம்பித்தார். லப்பைக்குடிக்காடு பேருந்து நிலையத்தில் வாங்கிய குமுதம் ஸ்பெஷலில் சுஜாதா கிடைத்தார் பின் நிலா நிழல், ரத்தம் ஒரே நிறம் எனத் தொடர்ந்து இன்று கற்றதும் பெற்றதும் வரை வந்தாயிற்று.

12ம் வகுப்புக்கு பிறகு மீண்டும் 12ம் வகுப்பு .(ஆச்சரியப் படாதீர்கள் பள்ளிக்கு சரியாக செல்லாத காரணத்தால் எனக்கு தேவையான வருகைப் பதிவு இல்லை எனச் சொல்லி தேர் வெழுத விடவில்லை.)

பின் மீண்டும் 12ம் வகுப்பு படிக்கையில் சிவப்புச் சிந்தனை கொண்ட நண்பரும் முன்னாள் இந்திய மக்கள் முன்னனி யின் மாநில செயலாளருமான திரு.கிழுமத்தூர் பி.தயாளன் அவர்களின் அறிமுகத்தில் தனிப் பிரதிகளாக மட்டும் கிடைக்கும் சுட்டும் விழிச்சுடர்.(தற்போது அவர் அரசு அலுவலர்)அதன் பின் அவரின் மிகச்சிறந்த நூலகத்தில் தினசரி எடுத்துப் படித்த பல்வேறுபட்ட இதழ்கள்.

காப்கா முதல் காமசூத்திரம் வரை. என்று விரிகிற வேளையில் சே குவேரா அறிமுகம். . அதன் பின் சில காலம் சிவப்பு சிந்தனை கொண்ட புத்தகக் காதல் தொடர்ந்தது. 12ம் வகுப்பு முடிந்த பின் மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படிக்க சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள எம்.ஐ.இ.டி யில் சேர்ந்தபின் நுங்கம் பாக்கம் லேண்ட்மார்க் புத்தக கடை அறிமுகம். ஹிக்கின் பாதம் அண்ணா சாலையும்.

நிறைய நூல்களை பார்த்ததும் வாங்க வேண்டும் என்ற என் ஆவலுக்கு எந்த எழுத்தாளரும் தப்பவில்லை. பின் பாரத் பில்டிங்க் அருகிலேயே இருக்கும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ். தேடிய எல்லா ரஷ்யர்களும் உறங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் மிக மலிவான விலைகளில் என்னையும் அறியாமல் எடுத்து வைத்த புத்தகங்கள் எண்ணிக்கையில் அடங்கா. சில முத்துக்களும் நிறைய குப்பைகளும்.

திருவல்லிக்கேணி, அண்ணாசாலை பழைய புத்தக கடைகளில் இந்தியன் வங்கி(ஸ்பென்ஸர் அருகே) அருகே இருக்கும் ஒரு கடையில் ஹிட்லர் இருந்தார். பின் எனது காதல் பிரிவின் காரணமாக (பிரிவென்றால் கிழுமத்தூர் - சென்னை) சில காதல் புத்தகங்கள். அப்படித்தான் அறிமுகமானது.

பின் புத்தகம் வாங்க பனம் நிறைய வேண்டுமே என்று எனது கல்லூரி முடிந்து கணிப் பயிற்சி முடிந்து மாலை வேளை நடிகர் செந்திலின் சந்த்ரு என்டர் பிரைஸில் பகுதி நேர ஊழியம் மாதம் 1500 சம்பளத்துக்கு. அப்போது ஆரம்பித்த சில சினிமா நட்பில் எனது திரைப்பட ஆர்வம் அதிகமானது முதலில் இசை.

தமிழில் இத்தனை ஆர்வம் இருக்கிறதோ அதே அளவு ஆங்கில இசையிலும் ஆர்வம் ஏற்பட எம் டிவியும் வி சேனலும் பெருங் காரணங்கள். அதுவே ஒரு நூலகம் அளவுக்கு குவிய ஆரம்பித்தது.

அவ்வேளையில் ரீடர்ஸ் டைஜஸ்ட் அறிமுகம் அதன் நிரந்தர வாசகனானேன். அவர்கள் மூலம் களஞ்சியங்கள் எனப்படும் என்சைக்க்ளே பிடியாக்கள் மீது ஆர்வம் ஏற்பட்டு பின் அது 1000 விலைகொண்ட புத்தகங்களை அனாயசமாக வாங்கும் அளவுக்கு ஆபத்தில் முடிந்தது.

கல்லூரி வாசம் முடிந்து மீண்டும் மூன்றாண்டுகள் கிழுமத்தூர். விவசாயம் . காதலும் தனியாக தண்ணீர் இல்லாமலே வளர ஆரம்பித்தது 1998. நஞ்சை வயல் களை உழப் பயன்படும் ஒரு சிறிய டிராக்டருண்டு அதை வாடகைக்கும் விட்டதில்(நானே ஓட்டுனர்) நல்ல வருமாணம் வந்தது.

ரீடர்ஸ் டைஜஸ்டின் மிகச் சிறந்த புத்தகங்கள் வாங்கிய அற்புத தருணம் அது. பின்ன்ர் விடியல் பதிப்பகம் வந்து புத்தக அச்சுக்கலையின் மிக நவீன முகத்தை தமிழுக்கும் அறிமுகப் படுத்தியது ஆனந்த விகடனும் இந்தியா டுடேவும் வனிக நோக்கில் என்றாலும் தரமான புத்தகங்கள் போட ஆரம்பித்தனர்,

இந்தியா டுடேவில் படித்த சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல் அப் புத்தகத்தை முழுதாய் படிக்கும் ஆவலை உண்டாக்கியது. சொல் புதிது, இனி, போன்ற சிற்றிதழ்கள் மூலம் நவீன இலக்கியமும், சுந்தர ராமசாமியும் ,புதுமைப் பித்தனும் ,ஜெயகாந்தனும் உள்ளே வந்தார்கள். சாரு நிவேதிதா பின்வாசல் வழியே உள்ளே வந்தார். இன்றும் அவர் அழையா விருந்தாளி.

உலக அரசியல் தமிழக அரசியல் என்று சில காலம் புத்தகம் படித்தது போய் எனது கவணம் மலைக்கோட்டை முன்னால் மாறியது. சில வரலாற்று நூல்கள் அறிமுகம் அப்போதுதான் எனது தந்தையின் பிற்கால சோழர் சரித்திரமும், பெரியாரும் புறிய ஆரம்பித்தார்கள்

பின்னர் 2002இல் சங்கீதாவுடன் திருமணம். தண்ணீர் இன்றி வளர்ந்த காதல் அறுவடைக்கு தயாரானது. திருமணப் பரிசாக அய்யா வே.ஆனைமுத்து அவர்களின் மண்டல் கமிஷன் பரிந்துரைகள் படித்ததில் சமூக ஏற்றத்தாழ்வுகள் புறிய ஆரம்பித்தன ,

ஆரியம், திராவிடம் அரசியல் எல்லாம் சேர்த்து பெரியாரும் விளங்கினார். கலைஞரை பிடிக்க ஆரம்பித்தது.(முற்றாக அல்ல) ஜெயலலிதாவை வெறுக்க ஆரம்பித்தது.(முற்றாக அல்ல) அம்மாவோடு போன அய்யாவையும் பிடிக்காமல் போனது பின் அவர்களின் சில சரியான முடிவின் காரணமாக உரக்க ஒலிக்க ஆரம்பித்த குரல் அய்யாவையும் எனக்குள் கொண்டு வந்தது.

திருமணத்தின் பின் இரண்டாண்டு பின் பிறந்த பாரிக்காக படிக்க ஆரம்பித்த மருத்துவ நூல்களும் சில காலம் நோயாய் பீடித்திருந்தது.

செந்துறை நண்பர்கள் . பாலு, செந்தில், பிரபு இவர்கள் உதவியுடன் ஓஷோவும் வாழ்க்கையும் புறிந்தது. அதன் பின் சம்பாதிக்கவும் எதாவது தொழில் தொடங்கவும் என்பணம் என்று வேணும் என்ற சுயமுயற்சி காரணமாக பீட்டர் எப் டிரக்கரும், பங்கு வணிகமும் தெரிந்துகொண்டேன்.

அமீரகம் வந்தபின் இணையத்தில் கழிக்கும் நேரம் அதிகமானதில் புத்தகம் வாங்கும்/ படிக்கும் ஆர்வம் குறைந்து போனது. இதுதான் எனது (நூலகத்தின் )கதை.

நூல்களை இன்னொரு முறை அனேகமாக இரண்டு மாதம் சென்று ஊரில் (கிழுமத்தூரில் இருந்து) பட்டியல் இடுகிறேன்.

வே.ஆனைமுத்து பற்றிய முழு தகவல்களும் பின்னர் என் தந்தையிடம் முழுதாக கேட்டு பதிவிடுகிறேன்.

இப்பதிவெழுத ஆர்வமூட்டிய சிவபாலன் அவர்களுக்கு மிக்க நன்றி

நல்ல மரங்கள் நல்ல கனிகளைத் தரும் மரங்களை அதன் கனிகளில் இருந்து பிரித்தறியக் கற்றுக்கொள்- ஒரு ஜென் பழமொழி


25 comments:

Unknown said...

நண்பர் சிவபாலனின் அழைப்பு இங்கே
http://sivabalanblog.blogspot.com/2006/07/blog-post_28.html

கோவி.கண்ணன் said...

நினைவுகளை அசைப்போட்டு நாள் குறிப்பு போல் எழுதியிருக்கிறீர்கள் !
மிகவும் நன்றாக உள்ளது !

//நல்ல மரங்கள் நல்ல கனிகளைத் தரும் மரங்களை அதன் கனிகளில் இருந்து பிரித்தறியக் கற்றுக்கொள்- //

மாயவரம்காரர் மரத்தைவைத்து உங்களையும் குழலியையும் துரத்திவருகிறார் தானே !

சும்மா ஒரு வம்பு :))

Sivabalan said...

// திருமணப் பரிசாக அய்யா வே.ஆனைமுத்து அவர்களின் மண்டல் கமிஷன் பரிந்துரைகள் படித்ததில் சமூக ஏற்றத்தாழ்வுகள் புறிய ஆரம்பித்தன ,
ஆரியம், திராவிடம் அரசியல் எல்லாம் சேர்த்து பெரியாரும் விளங்கினார். கலைஞரை பிடிக்க ஆரம்பித்தது.(முற்றாக அல்ல) ஜெயலலிதாவை வெறுக்க ஆரம்பித்தது.(முற்றாக அல்ல) //

மிக அருமையாக தொகுதுள்ளீர்கள்.

படிக்க மிகவும் சுவரசியமாக உள்ளது. மிக்க நன்றி.

Unknown said...

வாங்க பின்னூட்ட நாயகரே! (பின்னூட்ட நாரதர்?:)
அசைபோட்டுத்தான் எழுதினேன் இன்னும் செரிக்காதவை நிறய உண்டு.....
நன்றி திரு.கோவி கண்ணன்

Unknown said...

ஆம் வே.ஆனைமுத்து அவர்களின் எல்லா நூல்களும் இல்லாவிடினும் சிலவற்றின் ஆழமான சிந்தனைகள் எனக்குள் சில புறியாத செய்திகளை புறிந்துகொள்ள உதவின.

இப்பதிவை எழுதி என் வாழ்வின் ஒரு பகுதியை சுயபரிசோதனைக்கு உட்படுத்த தூண்டிய உங்களுக்கு மிக்க நன்றி சிவபாலன்

Thekkikattan|தெகா said...

//கல்லூரி வாசம் முடிந்து மீண்டும் மூன்றாண்டுகள் கிழுமத்தூர். விவசாயம் . காதலும் தனியாக தண்ணீர் இல்லாமலே வளர ஆரம்பித்தது 1998. நஞ்சை வயல் களை உழப் பயன்படும் ஒரு சிறிய டிராக்டருண்டு அதை வாடகைக்கும் விட்டதில்(நானே ஓட்டுனர்) நல்ல வருமாணம் வந்தது. //

அங்கே நான் காலி, எவ்வளவு பெரிய விசயத்தை இவ்வளவு எளிமையாக எடுத்துக் கொண்ட பக்குவம். எனக்குப் பிடித்திருக்கிறது.

இப்படிக் கூட எழுதமுடியுமா? தனது நினைவில் நின்றைவகளை தொகுத்து காலம் வாரியாக...

சிவாவின், முயற்சி இந்த பதிவிலேயே தெரிந்திருக்கும் என நம்புகிறேன்.

அருமை மகேந்திரன்.

Sivabalan said...

தெகா,

// சிவாவின், முயற்சி இந்த பதிவிலேயே தெரிந்திருக்கும் என நம்புகிறேன் //

உணமைதான். நீங்கள் சொல்வது மிகச்சரி. அருமையாக பதிவிட்டிருக்கிறார்.

கோவி.கண்ணன் said...

//வாங்க பின்னூட்ட நாயகரே! (பின்னூட்ட நாரதர்?:)//
நாரதர் என்கிட்ட தம்பூர இல்லிங்க ; வம்பு மட்டும் தான் இருக்கு; நாரதர், நாயகர் எதுவேண்டுமானலும் சொல்லலாம். என்னோட பதிவில் ஜெகன் மோகன் என்று ஒருவர் வந்து 'வித்தக பதிவாளர்' என்று இன்று ஒரு பட்டம் கொடுத்துச் சென்றுள்ளார்

ஒன்னுமே பிரியல ஒலகத்தில :))

Unknown said...

//எவ்வளவு பெரிய விசயத்தை இவ்வளவு எளிமையாக எடுத்துக் கொண்ட பக்குவம்//
அப் பக்குவம் என் தந்தை தந்த பரிசு. பூண்டி புஷ்பம் கல்லூரியில் இருந்து வந்ததும் அவர் செய்ததைத்தான் நானும் செய்தேன். அடிப்படையில் நான் ஒரு அழகான (?) விவசாயி.

// தனது நினைவில் நின்றைவகளை தொகுத்து காலம் வாரியாக...//

இப் பதிவிட ஊக்குவித்த/ அழைத்த சிவபாலனுக்கு எனது நன்றிகள்

உங்களுக்கும் தான் தெக்கிக்காட்டான்

Unknown said...

//தம்புரா இல்லை வம்புதான் இருக்கிறது//
நன்மையில் முடிந்தால் சரி:))
//வித்தகப் பதிவாளர்//
அட !:)
//ஒன்னுமே பிரியலே //

பிரியலியா புரியலியா? ஓகோ நீங்களும் வம்பும் மாதிரியா? :))
நன்றி கோவி.கண்ணன்

Unknown said...

//உணமைதான். நீங்கள் சொல்வது மிகச்சரி. அருமையாக பதிவிட்டிருக்கிறார்.//

இப் பதிவை எழுதக் காரணமே நீங்கள்தானே

நன்றி சிவபாலன்

Anonymous said...

மிக அருமையான பதிவு மகேந்திரன்..
காலம் எத்தனை விரைவாக ஓடுகிறது பார்த்தீர்களா? ஒரு பதிவில் உங்களின் பாதி வாழ்க்கையை பட்டியல் போட்டுவிட்டீர்கள் இதுபோல் சிறப்பான பதிவுகள் எழுத வாழ்த்துகிறேன்

Anonymous said...

good work it's just like a diarie

Unknown said...

//காலம் எத்தனை விரைவாக ஓடுகிறது பார்த்தீர்களா//
காலம் பின்னோக்கி போனால் எத்தனை இனிய தருணங்களுக்கு மீண்டும் செல்வேன்? ஆனால் அது நடக்காதே.

//good work it's just like a diarie //
கண்டிப்பாக இது சிறு டைரி முயற்சிதான் நண்பரே!

நன்றி அனானிமஸ் &அனானிமஸ் :)

Anonymous said...

//சாரு நிவேதிதா பின்வாசல் வழியே உள்ளே வந்தார். இன்றும் அவர் அழையா விருந்தாளி.//

சாரு நிவேதிதாவின் சிறப்பு அதுதான் பின்வாசல் வழியாக வந்தாலும் நிரந்தரமாய் ஒரு பாதிப்பை வாசகனிடம் ஏற்ப்படுத்துவார் சர்ச்சைக்குரிய எழுத்துக்கள் எழுதுபவர் என்றாலும் அதுவே நிஜமாக இருக்கும் என்பதை மறுக்க முடியாது
நல்ல பதிவு தொடருங்கள்

Unknown said...

சாரு நிவேதிதா பற்றிய எனது பதிவின் ஒரு சுட்டி இங்கே:
http://kilumathur.blogspot.com/2006/05/blog-post_114857011995728095.html
ஆமா நீங்க எந்த வனிதா? எனக்கு ஒரு தோழி உண்டு மும்பையில் விரும்பினால் சொல்லுங்கள்?

துளசி கோபால் said...

அருமையான பதிவு.

வாசிப்பு அனுபவம் என்பது எவ்வளவுதான் விளக்கினாலும் அந்த
விவரிப்புலே அடங்கிடாது இல்லையா?

Unknown said...

//வாசிப்பு அனுபவம் என்பது எவ்வளவுதான் விளக்கினாலும் அந்த
விவரிப்புலே அடங்கிடாது இல்லையா?//

உண்மை துளசி அம்மா,
நல்ல சினிமா பார்ப்பது போல் , நல்ல இசை கேட்பதுபோல், காதலியுடன் பழகுவது போல் நல்ல வாசிப்புக்களையும் விளக்க வார்த்தைகளால் முடிவதில்லை
தங்கள் வருகைக்கும் விமர்சனத்திற்கும் நன்றி !!

Unknown said...

நண்பர் சிவபாலன் அவர்களின் நல்முயற்சியை நிணைவூட்ட
அழைப்பு இங்கே:
http://sivabalanblog.blogspot.com/2006/07/blog-post_28.html

Unknown said...

இதுவரை இன்று யாரும் பின்னூட்டம் போட்டு முன்பக்கத்தில் வர வழியேற்ப்படாததால் குவாட்டர் கோவிந்தன் சார்பாக இப் பின்னூட்டம் .... அட எனக்காகவா போடுக்கிறேன் எல்லாரும் படிச்சு பயம்(ன்)பெற வேண்டாமா அதுக்குத்தான் யாரும் தப்பா நெனைச்சாலும் சரியா நினைச்சாலும் ஒரு வரி எழுதுங்க நமக்கு இனிமே இந்த சமாதான வழியெல்லாம் ஆகாது யாருக்காவது கிட்னி இருக்கான்னு கேட்டுறவேண்ட்டீதுதான் :)

பாலசந்தர் கணேசன். said...

சரியா லிஸ்ட் போட்டிருக்கீங்க மகேந்திரன் அவர்களே,

Unknown said...

//சரியா லிஸ்ட் போட்டிருக்கீங்க //
நன்றி பாலச்சந்தர் கணேசன் அவர்களே
பட்டியல்னே ஒன்னு போட்டிருக்கேனே அதப் பாக்கலியா?

Anonymous said...

உங்களது பதிவு அருமை. இத்தகைய ஒரு பதிவை முன்பு ஒரு சமயம் எழுதியது நினைவுக்கு வந்தது. உங்களுடன் அதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.
http://paari.weblogs.us/archives/93
அன்புடன்
பாலாஜி-பாரி

Unknown said...

நன்றி பாலாஜி பாரி - புத்தகக் காதல் மறையாத ஒன்று ஒரு சக புத்தக நேசனை கண்டதில் மகிழ்ச்சி
என் மகன் பெயரும் பாரி

Sivabalan said...

மகேந்திரன்,

இன்னும் பல பேர் பதிவிட வேண்டியுள்ளது..

வேறு ஏதேனும் ஆலோசனை கூறுங்களேன்..