.கடந்த சில நாட்களாகவே இணையம் அதிலும் வலைப்பூ எழுத்தாளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக சிந்திக்கும் திறனையோ அல்லது வேறு எதையோ இழந்து கொண்டு வருகிறோம். அல்லது மிக அதிக அளவில் உணர்ச்சி வசப் படுகிறோம். இது இரண்டில் எதுவோ ஒன்று உண்மை. அதில் நானும் அடங்குவேன். எனது ரஜினி ரசிகர்களுக்கு மூளை இருக்கிறதாம் எனும் பதிவுக்கு வந்த பின்னூட்டங்களே அதற்கு சாட்சி. அதிலும் சிலர் என்னவோ நான் மட்டும் பின்னூட்டம் பெறுவதற்க்காக எழுதுவது போலவும் பிறவலைப் பதிவர் எல்லோரும் பின்னூட்டம் வந்தால் தூக்கி குப்பைதொட்டியில் போட்டுவிட்டு அடுத்த பதிவை பார்க்கப் போய்விடுவது போலவும் ஒரு வெற்று தோற்றத்தை உருவாக்க முயன்றுள்ளனர் அதற்கு நான் முன்னறே எழுதிய பின்னூட்டங்களை முன்வைத்து எனும் பதிவுக்கு சுட்டி வேறு . . வலைப் பதிவர்களின் புரிந்துகொள்ளும் தன்மை இதன் மூலம் தெள்ளத் தெளிவாக தெரிகிறது. எனது வலையில் பின்னூட்ட நுட்பம் சரியாக வேலை செய்கிறதா என சோதிக்க பின்னூட்டம் கோரி பதியப்படும் ஒரு பதிவுக்கும் தவறான வார்த்தைப் பிரயோகம் என கடைசியில் சொல்லப்பட்ட கோபம் கொண்ட ஒரு பதிவுக்கும் வேறுபாடுகளை தெரிந்துகொள்ளாமல் தான் இன்னும் இருக்கிறோம். இதில் ஒரு வேதனைக்குரிய விஷயம் பின்னூட்டம் இட்டு கேள்விகளை எழுப்பும் நண்பர்கள் அவர்கள் எதிர்பார்க்கும் பதில் வராத போது கருத்துரிமை பரிக்கப் படுவதாக தனியே புலம்புகின்றனர். அதாவது ஒரு சில தரங்கெட்ட கேள்விகள், எழுதுபவரை நோக்கி சக வலைப்பதிவர் பின்னூட்டம் இட்டால் அதை வெளியிடுவதன் மூலம் யாருக்கு அவமானம் அசிங்கம் அதை எழுதியவருக்கா அல்லது அத்தகைய கருத்தை தனது பின்னூட்ட பக்கத்தில் வெளியிட்டவருக்கா?. தனிமனித தாக்குதல் நடத்துவதாக என்னிடம் புலம்பும் அவர்களே தங்களது வலைப்பூவில் தனிமனித தாக்குதல் நடத்தலாம் அது கருத்துரிமை ஆனால் அதை நான் எனது வலையில் பயன்படுத்தக் கூடாது . மேலும் நான் இதுவரை எழுதிய எந்த பதிவிலும் எனது சாதி இன்னது என்றோ அல்லது நான் இந்த சாதியை வெறுக்கிறோன் என்றோ எழுதுவதில்லை. எழுதப் போவதும் இல்லை. ஆனால் சில விடாகண்டர்கள் "புதுப் பட பெட்டியை "என்று சொன்னதன் மூலம் என் சாதியை தெரிந்து கொண்டார்களாம். அதில் ஒரு நக்கல் வேறு. என் சாதியை சொல்லும் உனக்கு இருக்கும் ஆணவம் அகம்பாவம் எதிலும் எனக்கு நாட்டமில்லை என்பதாக மீண்டும் ஒரு கவிதை எழுதப்பட்டது . நான் எழுதிய பதிவில் எனது கருத்து என்ன என்பதை மிகச் சரியாக உணர்ந்தவர் திரு வசந்தன் அவர்கள் மட்டுமே. மற்ற அனைவரின் கருத்தும் வெருமனே அந்த நடிகரையும் அவரின் புகழ்களையும் எனக்கு சொல்வதாகவும். அல்லது கலைஞர் , ஜெயலலிதா, ராமதாஸ், வைகோ, திருமாவளவன் ஆகியோர் என்ன செய்துவிட்டார்கள் என்பதாகவும் அமைந்திருந்தது. எனது கேள்வி அது அல்ல. இப்படி கருத்து சொன்ன ஒருவரை மன்னிப்பு கேட்க வலியுருத்தும் ரசிகர்களுக்கு மூளை இருக்கிறதா எனக் கேட்டிருந்தேன் ஆனால் இந்த அமீரகப் பொடியனுக்கு எதுவுமே தெரியாது என்பது போல் பத்மனாபா முதல் திருச்சி ஓட்டல் வரை வரித்துக் கட்டி பதிவு போடுவதில் சிந்திக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்க ஆரம்பிக்கின்றனர். இது போல் பதிவுகள் எழுதினால் பின்னூட்டம் வரும் என்பதற்க்காக நான் எழுதுவதாக குற்றச்சாட்டு வேறு. சமூகப் பொறுப்புள்ள நான் எழுதிய பதிவுகளுக்கு எத்தனை பேர் பின்னூட்டம் இட்டீர்கள் என்று என்னால் விரல் விட்டே சொல்லமுடியும் ஆனால் உங்களால் ஒதுக்கப் பட வேண்டும் என நான் கருதி எழுதும் பதிவுகளுக்கு பின்னூட்டம் இடுவதில் இருந்து ஒன்று மட்டும் தெரிகிறது நமக்கு கருத்துக்களை விட பரபரப்பு எழுத்துக்களை படிப்பதில்தான் விருப்பம் என்று. ஆனால் முந்தைய பதிவின் என் வார்த்தைகளின் தொனி வேண்டுமானால் அது உங்களுக்கு கடினமாகவும் ஏற்றுக் கொள்ள முடியாமலும் போகலாம் அக் கருத்தில் இருக்கும் நேர்மையை இல்லை எனக் கூற இயலாது. தங்கர்பச்சானின் கருத்தும் அப்படியெ. ஒஷோ சொன்னது போல வார்த்தைகளில் தொங்கிக்கொண்டிருக்கிறது உலகம். எனது பதிவில் எனது கருத்துக்களுக்கு ஆதரவாக பின்னூட்டம் இட்டிருப்பவர்களை தங்களது பதிவில் தரக் குறைவான விமர்சனங்களை வைப்பது. இது எல்லாம் சில எடுத்துக் காட்டுகளே. இப்படியே போனால் ஆரோக்கியமான ஒரு வலைப்பூ சூழல் ஏற்படும் என்பதாக எனக்குத் தெரியவில்லை இங்கே யாரும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை. என்னையும் சேர்த்து . இப்படியே போனால் இதுவெல்லாம் நடக்கும்.....

1.தி.மு.க. அதிமுக, பா.ம.க, மதிமுக, பா.ஜ.க, விடுதலை சிறுத்தைகள், தே.மு.தி.க, கருணாநிதி , ஜெயலலிதா, வைகோ, திருமா, ராமதாஸ், ரஜினி, கமல், விஜய், திராவிடம், ஈழம், தமிழ், பார்ப்பனீயம், இஸ்லாம், கிருஸ்த்துவம், இன்னும் கவுண்டமணி செந்தில் விவேக், மகேந்திரன் என யாரைப் பற்றியும் எதைப் பற்றியும் யாராலும் எழுத முடியாமல் போகும்.

19 comments:

பாலசந்தர் கணேசன். said...

கருத்துரிமை என்பது ஒரு சிலரால் தவறாக பயன்படுத்த படலாம். அதற்காக கருத்துரிமையை கயன்வானித்தனம் என்றெல்லாம் கூறுவது தவறு மகேந்திரன். நானும் தான் சில சமயங்களில் தவறாக புரிந்து கொள்ள பட்டேன். சில சர்ச்சைகளுக்கு உள்ளானேன். விளக்கம் கொடுத்த பிறகு எல்லாம் சரியாகி விட்டது.

கொஞ்சம் பாசிட்டிவாகவே நீங்கள் இந்த விஷயத்தை எடுத்து கொள்ள வேண்டும் என்பது அபிப்ராயம். டோண்டு அவர்களை ஒரு எடுத்துகாட்டாக வைத்து கொள்வோம். அவரின் பல கருத்துக்களில் உடன்பாடில்லை. ஆனால் அவர் அனுபவங்கள் கட்டுரைகள் இனிக்கும் பாடங்கள். பல்வேறு பிரச்சினைகளை சந்தித்த பின்னரும் , அவர் அதனை எவ்வாறு எதிர் கொண்டுள்ளார் என்பதை பாருங்கள். அவர் என்ன மாதிரியான அனுபவசாலி என்பதை அவர் வெளி காட்டும் விதமே தனி. பின்னூட்டங்கள் மட்டுறுத்தலை பற்றி கொஞ்சம் கூட சளைக்காமல் சொல்லி, சொல்லி அனைவரும் அதனை அறிந்து கொள்ள வைத்தார். பிரச்சினைகளை மட்டும் காணாமல், தீர்வுகளை தேடி ஒடுபவர் அவர் என்பது அவர் பதிவுகளில் வெளிப்படுகிறது.

மனதில் பட்டதை சொல்கிறேன்....

மகேந்திரன்.பெ said...

திரு பாலச்சந்தர் கணேசன் தங்களின் கருத்தில் எனக்கும் உடன்பாடே ஆனால் கருத்துரிமை இருக்கிறது எனச் சொல்லும் நீங்கள் உங்களின் கருத்துக்களை யாருடைய பதிவிலும் பின்னூட்டமாக இடும் போது அல்லது உங்களின் பதிவில் எழுதும் போது உங்களின் கருத்துக்களை நிரூபிப்பதாக இருக்கவேண்டும் அதற்க்காக கொஞ்சம் விலை கொடுக்கவேண்டித்தான் இருக்கிறது ஆனால் மிரட்டிப் பணியவைப்பேன் எனும் கொள்கை கொண்டவர்கள் கருத்து சுதந்திரம் பற்றி பேசுவதை களவானித்தனம் என்ற சொல்லாலன்றி அழைக்க வேறு சொல் அறியேன்.

வசந்தன்(Vasanthan) said...

மகேந்திரன்,
அண்மையில் நான் சந்திக்கும் பிரச்சினை, விளக்கம் பற்றியது. நான் எழுதுவது சிலருக்கு விளங்குவதில்லை அல்லது சிலருக்கு விளங்குவது போல நான் எழுதுவதில்லை. குறிப்பாக தமிழ்மணத் திரட்டி பற்றிய விசயத்தில். இப்போது பார்த்தால் பலருக்கும் இதே பிரச்சினை இருக்கிறது.
கொஞ்ச நாள் பொறுத்தால் சரியாகப் போகுமென்று நினைக்கிறேன். எவரிலும் குற்றம் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறேன்.
இதெற்கெல்லாம் அடிப்படை பிரச்சினை இப்போது எனக்கு நேரம் அதிகமாகக் கிடைப்பது தான். அதனால் தான் தேவையற்ற இடங்களிற்கூட மூக்கை நுழைக்கத் தோன்றுகிறது. இன்னும் இரு வாரத்தில் விடுமுறை முடிந்துவிடுமென்பதால் அதுவரை பல்லைக்கடித்தால் போயிற்று.

பாலசந்தர் கணேசன். said...

மிரட்டிப் பணியவைப்பேன் எனும் கொள்கை கொண்டவர்கள் கருத்து சுதந்திரம் பற்றி பேசுவதை களவானித்தனம் என்ற சொல்லாலன்றி அழைக்க வேறு சொல் அறியேன்.

இது சரியென்று நான் ஒத்துக் கொள்கிறேன். ஆனால் உங்கள் தலைப்பு பொதுப்படையானதாக இருக்கிறது என்பதை நீங்கள் கவனித்தீர்களா?

மகேந்திரன்.பெ said...

இல்லை திரு பாலச்சந்தர் கணேசன் இவ் விஷயத்தில் நானும் கூட மிக யோக்கியமாக நடந்துகொள்ள முடியவில்லை. அதனால் தான் பொதுப்படையாக வைக்க வேண்டி வந்தது

வசந்தன் நான் சொன்னது "நான் எழுதியது உங்களால் மட்டும் தான் சரியாக புறிந்துகொள்ளப் பட்டதென்று" மற்றபடி உங்கள் பதிவுகளின் எனக்கு இதுவரை எந்தகுழப்பமும் இல்லை

Vajra said...

இது போல் தலைப்பு வைத்து எழுதுவதற்குக் கூடத்தான் அந்த களவாணித்தனம் பயன்படுகிறது...!!

மகேந்திரன்.பெ said...

அது களவாணித் தனமா இல்லையா என்பது அக் களவானித் தனத்தை பயன்படுத்தும் அனைவருக்கும் தெரியும் நன்றி வஜ்ரா சங்கர். (வஜ்ரான்னா என்னா?)

Vajra said...

//
வஜ்ரான்னா என்னா?
//

புத்த மத அர்த்தம்

நாகை சிவா said...

//உங்கள் தலைப்பு பொதுப்படையானதாக இருக்கிறது என்பதை நீங்கள் கவனித்தீர்களா? //
இத தாங்க அவர் புரிந்து கொள்ள மாட்டேங்கிறார். பொத்தாம் பொதுவாக அனைவரையும் சொல்கின்றார்.
ரஜினி குறித்த பதிவிலும் அவர் சொல்ல வந்த கருத்தை விட அந்த தலைப்பை குறித்த விவாதம் தான் அந்த பதிவு முழுவதும் நடந்தது. தலைப்பை மாற்றுங்கள் என்று கூறியதற்கு அவர் மாற்றியது மூளை இருக்கின்றாதா? என்பதில் இருந்து மூளை இருக்கிறதாம்? என்று.

விடாக் கண்டன் என்பவரின் பதிவிலும் தலைப்பை மாற்றுங்கள் என்று கூறினேன். அவரும் பொத்தாம் பொதுவாக தமிழர்கள் என்று மாற்றுகிறார். அதுக்கு மேல என்னத்த சொல்லனு விட்டாச்சு.

நாகை சிவா said...

//வஜ்ரான்னா என்னா?//
வைரம் என்று நினைக்கிறேன்.

அது வஜ்ரம் பாஞ்ச கட்டை,
இது வஜ்ரம் பாய்ந்த உடம்புடா என்று பெரியவர்கள் கூறி கேட்டு இருக்கின்றேன். அதை வைத்து வைரம் என்று நினைக்கின்றேன்.

அது சரி, நீங்க சீரியஸாக கேட்டீர்களா, இல்ல ஏதும் உள்குத்துக்கா?

வசந்தன்(Vasanthan) said...

நீங்கள் இந்தப்பதிவில் என்னைப்பற்றிச் சொல்லியது நன்றாகவே புரிந்தது.
நான் சொன்னது அதையன்று. வேறிடங்களில் எனக்கு ஏற்பட்டவை.

மகேந்திரன்.பெ said...

//இத தாங்க அவர் புரிந்து கொள்ள மாட்டேங்கிறார். பொத்தாம் பொதுவாக அனைவரையும் சொல்கின்றார். //
நாகை சிவா அவர்களே
இதில் நானும் அடக்கம் அதனால் தான் பொதுப்படையாகவே இருக்கிறது.

//அது சரி, நீங்க சீரியஸாக கேட்டீர்களா, இல்ல ஏதும் உள்குத்துக்கா? //
உள்குத்தெல்லாம் இல்லீங்க எனக்கு தெரியாமத்தான் கேட்டேன் ஏன்னா வஜ்ரம் எனும் பசைபோன்ற ஒரு பொருளுக்கு கிராமங்களில் வேறு ஒரு அர்த்தம் உண்டு

நன்றி வசந்தன்

Anonymous said...

//கருத்துரிமை என்பது ஒரு சிலரால் தவறாக பயன்படுத்த படலாம். அதற்காக கருத்துரிமையை கயன்வானித்தனம் என்றெல்லாம் கூறுவது தவறு மகேந்திரன்//
i agree with him u have to think about it

SENTHIL

G.Ragavan said...

கருத்துரிமையா! அதுதான் அடுத்தவன வம்புக்கிழுக்கிறது. திட்டுறது. சாதி, மதம் சொல்லி அசிங்கப்படுத்துறது. வீட்டுல இருக்குறவங்க..இல்லாதவங்க...எல்லாத்தையும் சந்திக்கு இழுக்குறது.....இப்பிடித்தானங்க இப்பப் போயிக்கிட்டு இருக்கு.

அதையெல்லாம் விட்டுட்டு அவங்கவங்க வேலையப் பாக்குறதுதான் நல்லதுன்னு நெனைக்கிறேன்.

செந்தழல் ரவி said...

கருத்துரிமையை - கூட்டுக்களவானித்துவம் என்றுகூட சில கட்டைகள் கூறும்...மரத்திற்க்கேது உணர்ச்சி எல்லாம்...

நாகை சிவாவின் வார்த்தைகளை உள்குத்த பயன்படுத்திக்கிட்டேன்...

சூடானில் இருந்து சூடான கன்னி வெடிவராம இருந்தா சரி..

கன்னி வெடின்னு சொல்லி நமீதாவை அனுப்பிடாதீங்க...

ஆமாம்...

மகேந்திரன்.பெ said...

அட அந்த கூட்டு களவானித் தனத்தயும் என்னோட வார்த்த அத அடுத்தவங்க பயன்படுத்துறாங்கன்னு ஒருத்தர் பின்னூட்டம் போட்டிருக்கார்? சூடு ச்சே சுட்டி அப்பறம் தாரனுங்க"
ஆமா இப்டி சினேகாவ நட்டாத்தில விட்டது நாயமா? நமீதாவ கன்னிவெடியாக்கிட்டீங்க?

மகேந்திரன்.பெ said...

//ஒருத்தர் பின்னூட்டம் போட்டிருக்கார்? சூடு ச்சே சுட்டி அப்பறம் தாரனுங்க"//

http://muthuvintamil.blogspot.com/2006/07/blog-post_14.html#115284224050919867

போலிஸ்காரன் said...

17 பின்னூட்டங்களில் வலைப்பதிவாளரே 6 பின்னூட்டங்கள் போட்டிருக்கிறார். பின்னூட்ட கயமைத்தனம் கொஞ்சமாக தான் இங்கே நடக்கிறது.

மகேந்திரன்.பெ said...

இப்படி எந்த வித சர்ச் வாரண்டும் இல்லாமல் எனது வலைத்தளத்தில் இருக்கும் பின்னூட்ட கணக்கை ஆராயும் பின்னூட்ட கயமை கண்காணிப்பு குழுவின் நடவடிக்கைக்கு எதிர்கட்சிகளின் தூண்டுதலே காரணம் என நான் ஆணித்தரமாக குற்றம் சாட்டுகிறேன் (ஆகா இதுக்கும் ஒரு பின்னூட்டம் போடுவாங்களே.... எப்பிடிய்யா இதெல்லாம் தனியா இருந்தா தோனாதுன்னு ஒன்னா ஒக்காந்து யோசிப்பீங்களோ?)

:))