ஹே ராம் சிங்கள ரத்னா !

இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் இந்திய அரசாங்கம் பேச்சுகளை நடத்தாது என்று கொழும்பில் "இந்து" பத்திரிகையின் ஆசிரியர் "ராம்" கூறியுள்ளது உண்மையா? என்பதை ஆராய்கிறது இந்த ஆய்வு.

"இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளமையால் புலிகளுக்கு எதிரே அமர்ந்து, அவர்களுடன் உத்தியோகபூர்வமான முறையில் இந்திய அரசாங்கம் எதுவித பேச்சுக்களையும் மேற்கொள்ளாது" என்று தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் "இந்து" ஆங்கில நாளேட்டின் ஆசிரியரும் சிறிலங்கா அரசாங்கத்தின் உயரிய விருதான "சிங்கள ரத்னா" விருது பெற்றவான ராம், கொழும்பில் நடைபெற்ற இந்திய கூட்டரசின் விடுதலை நாள் விழாவில் "திருவாய்" மலர்ந்துள்ளார்.

இவர் இந்திய அரசாங்கத்தின் உயர் அதிகாரியோ அரசியல்வாதியோ அல்ல. ஆனால் இந்தியாவின் கொள்கைகள் அனைத்தும் "பார்ப்பனர்" நலனுக்காக மட்டுமே இருக்க வேண்டும் என்பதில் அக்கறை கொண்டு செயற்படுகிறவர்களில் முதன்மையானவர். இந்த பார்ப்பனரின் கூட்டாளிகள்தான் இந்திய அரசாங்கத்தின் கொள்கைகளைத் தீர்மானிக்கின்றவர்களாக உள்ளனர்.

சரி... தடை செய்யப்பட்ட இயக்கத்தோடு இந்தியா இதுவரையும் பேச்சுவார்த்தையே நடத்தியதே இல்லை என்கிறாரே ராம்? உண்மையா?

இந்திய கூட்டரசின் உள்துறை அமைச்சகத்தின் 2006-07 ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையில் வடக்கு-கிழக்கு இந்திய மாநிலங்களின் நிலைமை தொடர்பில் சில பக்கங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதில் பக.16-இல் "பாரிய ஆயுதம் தாங்கிய கிளர்ச்சி குழுக்கள்" (பக். 16) என்ற தலைப்பின் கீழ் பல அமைப்புக்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

அசாம் தனிநாடு கோரி போராடும் உல்ஃபா, மற்றும் அகன்ற நாகாலாந்து கோரி போராடும் நாகாலாந்து சோசலிஸ்ட் கவுன்சில் (ஐசக்-மூய்வா), நாகாலாந்து சோசலிஸ்ட் கவுன்சில் (கப்லாங்) ஆகிய அமைப்புகளும் இடம்பெற்றுள்ளன.

இந்திய அரசால் வடக்கு கிழக்கு மாநிலங்களிலே "பாரிய ஆயுதம் தாங்கிய கிளர்ச்சி குழுக்கள்" என்று பட்டியலிடப்பட்ட அமைப்புகளில் நாகாலாந்து சோசலிஸ்ட் கவுன்சில் (ஐசக்-மூய்வா), நாகாலாந்து சோசலிஸ்ட் கவுன்சில் (கப்லாங்) இரண்டைத் தவிர அனைத்துமே 1967 ஆம் ஆண்டு சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் சட்டவிரோத அமைப்புக்களாக அறிவிக்கப்பட்டுள்ளன என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நாகாலாந்து சோசலிஸ்ட் கவுன்சில் (ஐசக்-மூய்வா), நாகாலாந்து சோசலிஸ்ட் கவுன்சில் (கப்லாங்) அமைப்புகள் மீதான தடை கூட 2002 ஆம் ஆண்டுதான் நீக்கப்பட்டது.

ஆனால் 1997ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25 ஆம் நாள் இந்த இரு அமைப்புகளுடன் இந்திய அரசாங்கம் "யுத்த நிறுத்த ஒப்பந்தம்" செய்து கொண்டது. 1997 ஆம் ஆண்டு முதல் ஓகஸ்ட் 1 ஆம் நாள் முதல் இது நடைமுறைக்கு வந்தது.

அப்போதும் இந்த நாகா அமைப்புகள் "தடை செய்யப்பட்ட அமைப்புகள்" தான்!

இந்தியாவின் பிரதமராக இருந்த வாஜ்பாய், ஜப்பானின் ஒசாகா நகரத்தில் 2001 ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் நாள் நாகாலாந்து சோசலிஸ்ட் கவுன்சில் (ஐசக்-மூய்வா) அமைப்பின் தலைவர்களான ஐசக் மற்றும் மூய்வா ஆகியோருடன் பேச்சுக்களை நடத்தியதாக திருவாளர் இந்து ராமின் "இந்து"வின் 2001 டிசம்.9 ஆம் நாளிட்ட நாளிதழ்தான் செய்தி வெளியிட்டது.

அப்போதும் இந்த நாகா அமைப்புக்கள் "தடை செய்யப்பட்ட அமைப்புக்கள்" தான்!

அதே நாளிட்ட இந்து நாளிதழில் ஏற்கெனவே நாகாலாந்து சோசலிஸ்ட் கவுன்சில் (ஐசக்-மூய்வா) அமைப்புடன் பாரிஸ் மற்றும் பாங்கொங்க் ஆகிய நகரங்களில் அரசாங்கத் தூதுவர்கள் மூலம் இரகசியப் பேச்சுக்கள் நடத்தப்பட்டதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அப்போதும் இந்த நாகா அமைப்புக்கள் "தடை செய்யப்பட்ட அமைப்புக்கள்"தான்!

நெதர்லாந்தின் அம்ஸ்டெர்டமில் 2002 ஆம் ஆண்டு ஜூலை 9 ஆம் நாள் முதல் 11 ஆம் நாள் வரையிலும்

தாய்லாந்தின் பாங்கொங்கில் 2002 ஆம் ஆண்டு செப்ரம்பர் 21 முதல் 23 வரையிலும்

நாகா அமைப்புக்களுடன் இந்திய அரசாங்கத்தின் சிறப்பு பிரதிநிதி கே.பத்மநாபய்யா நாகா அமைப்புக்களுடன் பேச்சுக்களை நடத்தினார்.

அப்போதும் இந்த நாகா அமைப்புக்கள் "தடை செய்யப்பட்ட அமைப்புக்கள்" தான்!

2002 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் நாள்தான் நாகாலாந்து தனிநாடு கோரும் அமைப்புக்களின் மீதான தடை நீக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்து ராமுக்கு உரித்தான குழும ஏடுகளில் இவைகள் அனைத்துமே பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்திய மற்றும் அனைத்துலக ஊடகங்களும் இதனை பதிவு செய்துதான் உள்ளன.

இந்தியப் பிரதமர்களாக இருந்த பி.வி.நரசிம்மராவ், எச்.டி.தேவகவுடா, ஐ.கே.குஜ்ரால் மற்றும் வாஜ்பாய் ஆகியோரால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளினால்தான் நாகா அமைப்புக்களுடனான யுத்த நிறுத்த ஒப்பந்தம் உருவானது என்று இதே இந்து ராமின் "புரண்ட்லைன்"தான் (Volume 16 - Issue 27, Dec. 25, 1999 - Jan 07, 2000) பதிவும் செய்துள்ளது.

அதேபோல் அசாமில் தனிநாடு கோரி போராடும் உல்ஃபா அமைப்பு ஒரு தடை செய்யப்பட்ட அமைப்பு என்று இந்திய கூட்டரசின் உள்துறை அமைச்சகத்தின் 2006-07ஆம் ஆண்டு அறிக்கை தெரிவிக்கிறது.

இதே உல்ஃபா அமைப்புடன் பேச்சுக்கள் நடாத்த வேண்டும் என்று புகழ்பெற்ற அசாமிய பெண் எழுத்தாளர் இந்திரா கோஸ்வாமி முன்முயற்சிகளை மேற்கொண்டார். இதனையடுத்து உல்ஃபாவினால் மக்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டு 3 சுற்றுப் பேச்சுக்கள் நடத்தப்பட்டன. ஆனால் பேச்சுக்கள் எதுவும் வெற்றி பெறவில்லை.

இப் பேச்சுக்கள் குறித்தும் பதிவு செய்துள்ள இந்திய கூட்டரசின் உள்துறை அமைச்சகத்தின் 2006-07 ஆம் ஆண்டு அறிக்கையானது (பக். 18)

- உல்ஃபா அமைப்பினரின் வேண்டுகோளை ஏற்று தடுத்து வைக்கப்பட்டுள்ள உல்ஃபா அமைப்பினர் 5 பேரை விடுதலை செய்வது தொடர்பாக சாதகமாக பரிசீலிக்கவும இந்திய அரசாங்கம் ஒப்புக் கொண்டிருப்பதாகவும்

- அமைதிப் பேச்சுக்கள் நடத்துவதற்கு ஏதுவான சூழ்நிலையை உருவாகக் 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 13 ஆம் நாள் முதல் 2006 ஆம் ஆண்டு செப்ரம்பர் 20 ஆம் நாள் வரை ஒருதலைபட்சமான நடவடிக்கை நிறுத்த அறிவிப்பை இந்திய அரசு பிரகடனப்படுத்தியிருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளது.

"தடை செய்யப்பட்ட" உல்ஃபா அமைப்புடன்தான் அமைதிப் பேச்சுக்களை நடத்த இந்திய அரசாங்கமே ஒருதலைபட்சமான நடவடிக்கைகள் நிறுத்த வெளியிடுகிறது.

"தடை செய்யப்பட்ட" உல்ஃபா அமைப்பின் உறுப்பினர்களை விடுவிப்பது குறித்து "சாதகமாக" பரிசீலிப்பதாக இந்திய அரசாங்கமே அறிவிக்கிறது.

மேலும் ஆயுதம் தாங்கிய கிளர்ச்சிக் குழுவினருடன் யுத்த நிறுத்த ஒப்பந்தத்துக்கு அப்பால் "நடவடிக்கைகள் இடை நிறுத்தம்" ஒப்பந்தம் என்ற ஒரு ஒப்பந்தத்தையும் இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்திய கூட்டரசின் உள்துறை அமைச்சகத்தின் 2006-07 ஆம் ஆண்டு அறிக்கையின்படி,

- போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி

- அசாமில் செயற்பட்டு வரும் ஐக்கிய மக்கள் ஜனநாயக ஒற்றுமை

- அசாமில் இயங்கி வரும் டி.எச்.டி எனப்படும் டிமா ஹலான் டோஹாஹ்

- மேகாலயாவில் இயங்கி வரும் அசிக் தேசிய தன்னார்வ சபை

ஆகிய அமைப்புடன் இத்தகைய "நடவடிக்கைகள் இடை நிறுத்தம்" என்கிற ஒப்பந்தத்தை இந்திய அரசு செய்துள்ளது.

"சிங்கள ரத்னா" "இந்து" ராம் அவர்களே!

இந்த அமைப்புக்கள் அனைத்துமே தற்போதும் இந்திய அரசாங்கத்தால் "தடை செய்யப்பட்டவைதான்"!-

தடை செய்யப்பட்ட அமைப்புக்களுடன்தான்

இந்தியப் பிரதமர்களும் பேசுகிறார்கள்-

இந்திய சிறப்புப் பிரதிநிதிகளும் பேசுகிறார்கள்-

ஒப்பந்தங்களை உருவாக்குகிறார்கள்-

ஒப்பந்தங்களை நீடிக்கிறார்கள்.

இப்படியான நிலையில் "தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மட்டும் இந்தியா பேசாது" என்று இந்து ராம் "ஒரு தலைபட்சமாக" பிரகடனம் செய்கிறார்.

ஆம்-

இந்திய சிறப்புப் பிரதிநிதியாக ஈழப் பிரச்சனையிலே செயற்பட்டு தமிழர் தரப்பிடம் தோல்வியடைந்து போன அதே "இந்து" ராம்தான் இப்போதும் நஞ்சு கக்குகிறார்!

தமிழர்கள் துன்பப்படுகிறார்கள் என்பதற்காக எங்கோ இருக்கும் நோர்வே நாட்டவர்கள் கடல் கடந்து வந்து தமிழர் தரப்பினருடன் பேசுகின்ற போது இனம், மொழி, பண்பாடு ஆகியவற்றால் தொடர்புபட்ட

தமிழ்நாடு அரசாங்கமும்

இந்திய அரசாங்கமும்

இலங்கைத் தமிழர் துயர் துடைக்க ஏன் அக்கறை கொள்ளக்கூடாது?

ஏன் அக்கறை கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தக்கூடாது?

ஏன் இலங்கைத் தமிழர் பற்றி பேசக்கூடாது?

தடை செய்யப்பட்ட உல்ஃபாவுடன் பேச்சுகள் நடத்த வேண்டும் என்று புகழ்பெற்ற பெண் எழுத்தாளர் இந்திரா கோஸ்வாமி களமிறங்கிய போது அவரை பொடாவில் போடவில்லையே! அவரை பயங்கரவாதியாக சித்தரிக்கவில்லையே!

உல்ஃபா அமைப்புடன் பேச்சுக்கள் நடத்தலாம் என்று புதுடில்லிக்குச் சென்று அசாம் முதல்வர் பேசலாம்- அசாம் எழுத்தாளர் வலியுறுத்தலாம்- அவர் பதவியிலே நீடிக்கலாம்!

ஆனால்

தங்கள் தொப்புள்கொடி உறவு கொண்ட இலங்கைத் தமிழருக்காக தமிழ்நாட்டில் வாழுகின்ற தமிழர்கள் பேசினால்மட்டும் "இந்து" ராமின் கண்களுக்கு "பயங்கரவாத"மாகத் தெரியும்! குய்யோ முறையோ என கூப்பாடு போடுவார்கள்!

பசியாலும், பட்டினியாலும் வாடும் இலங்கைத் தமிழர்களுக்காக தமிழகத் தமிழர்கள் சேகரித்த உணவுப் பொருட்களை அனுப்ப 74 வயது பெரியவர் பழ. நெடுமாறனை சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டம் நடத்தும் சூழ்நிலைக்குத் தள்ளுகின்ற அளவிலே "தடை செய்யப்பட்ட இயக்கம்" என்ற பதத்தை வைத்துக் கொண்டு எழுது கோல்களின் மூலமாக பார்ப்பன லொபிகள் மூலமாக தமிழகத்திலே ஒருவித "அச்ச" நிலையை அல்லவா "இந்து" ராம் குழுக்கள் உருவாக்கி வைத்துள்ளன.

"இந்து" ராமுக்கு எதுவும் தெரியாது என்பதோ

"இந்து" ராம் எதனையும் அறியாதவர் என்பதோ அல்ல.

இலங்கை இனப்பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட்டு

தமிழர்கள் தங்களது உரிமைகளை வென்றெடுத்து விடக் கூடாது என்பதும்

தமிழர் தரப்புடன் இந்தியா பேசிவிடுமோ?

பார்ப்னர்களாகிய நாங்கள் நடமாடுகின்ற போது- இந்தியாவின் கொள்கைகளை தீர்மானிக்கின்ற சக்திகளாக நாங்கள் இருக்கும்போது அப்படி ஒருபோதும் பேசவிட வேமாட்டோம் என்ற பார்ப்பன ஆதிக்க வெறியும்தான் "இந்து" ராமின் "கொழும்பு" கூச்சலுக்குக் காரணம்!

காலம்காலமாக தமிழினத்தின் மீது "பார்ப்பன ஆதிக்கவாதிகள்- வெறியர்கள்" கொண்டிருக்கும் வரலாற்று வன்மப் பகையின் வெளிப்பாடுதான் "இந்து" ராமின் "கொழும்பு" கூச்சல்!.

10 comments:

Anonymous said...

தமிழ்செல்லன் இரந்ததுக்கு இந்து போட்ட தலயங்கம் பாத்தீர்களா?

Thamilchelvan was involved in many attacks: Colombo

He carried out attacks on IPKF

Anonymous said...

ஆனா ஒரு விஷயம்... இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தும் எந்த ஒரு இயக்கமும் மு.இந்திய பிரதமரை போட்டுத் தள்ளிவிட்டு ஸ்வீட் கொடுத்துக் கொண்டாடவில்லை.

-இந்தியத் தமிழன்

Anonymous said...

மிகச் சிறந்த பதிவு. ராம் கூலிக்கு மாரடிப்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.
இதில் வேடிக்கை என்னவென்றால் ராம் மற்றவர்களை முட்டாள் ஆக்குகின்றார் என்பதுதான். இலங்கைத் தமிழன் படும் துன்பம் தெரியவில்லை.

எனது கேள்வி:

இலங்கையில் இந்துப் பத்திரிகை விற்பனைகூட இல்லை. இந்தியாவில் செய்யாத எந்த‌ சாதனையை இந்து ராம் இலங்கையில் செய்து "லங்கா ரத்னா" பெற்றார்?

புள்ளிராஜா

Anonymous said...

யப்பா இந்தியத்தமிழா ஸ்ரீரங்கன் ப்ளாக்கிலேருந்து எடுத்து கதைச்சுருக்கம் குடுக்கறத விட்டுட்டு என்னிக்கு சொந்தமா காழ்ப்ப காட்ட போறே. அன்னிக்கிருந்து இன்னிக்குவர அடுத்தவன் பீடிலயே ஓசி தம் இழுக்கிறியேபா

வித்யா said...

அனானியாக முகம்காட்டமறுக்கும் இந்தியத் தமிழனுக்கு:
உனக்கு யார் கூறியது ஈழத்தமிழர்கள் ஸ்வீட் கொடுத்தார்கள் என?
அப்ப‌டியொரு நிக‌ழ்வு ந‌ட‌க்க‌வே இல்லை. நீயும் உன் பார்ப்ப‌ர‌ ப‌ர‌தேசிக‌ளும் ம‌ட்டும் இப்ப‌டிப் புல‌ம்பித்திரிகிறீர்க‌ள்.

இன்னொரு த‌மிழ‌ச்சி

Anonymous said...

//ஆனா ஒரு விஷயம்... இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தும் எந்த ஒரு இயக்கமும் மு.இந்திய பிரதமரை போட்டுத் தள்ளிவிட்டு ஸ்வீட் கொடுத்துக் கொண்டாடவில்லை.

-இந்தியத் தமிழன்//

அமைதி காக்கப் போவதாக கூறிக்கொண்டு அடுத்த நாட்டுக்கு போய் காக்கவேண்டிய மக்களையே கற்பழித்து கொன்றால் அதுக்கு காரணமானவனை போட்டுத் தள்ளாமல் 'மாமா பிஸ்கோத்து' என்று கேடுகெட்ட வேலையா 'பார்ப்பான்'?

-தமிழகத் தமிழன்

இந்தியத் தமிழன் said...

மகேந்திரண்ணே நான் இரண்டாவதாய் போட்ட பின்னூட்டம் எங்கண்ணே?

//இந்தியத் தமிழனுக்கு:
உனக்கு யார் கூறியது ஈழத்தமிழர்கள் ஸ்வீட் கொடுத்தார்கள் என?
அப்ப‌டியொரு நிக‌ழ்வு ந‌ட‌க்க‌வே இல்லை. //

அதான் அனானி சொல்ராரில்ல... சீறி ரங்கன் பதிவுல போய்ப்பாரு தமிழ்ச்சி.

//நீயும் உன் பார்ப்ப‌ர‌ ப‌ர‌தேசிக‌ளும் ம‌ட்டும் இப்ப‌டிப் புல‌ம்பித்திரிகிறீர்க‌ள்.//


பார்ப்பனப் பரதேசியா..ஹா ஹா..

தமிழ்செல்வனோட இறந்து போன வாகைக்குமரன் ஒரு ஐயர் அதாவது உங்க பாஷையில் சொன்னால் பார்ப்பனப் பரதேசி தெரியுமோ????

Anonymous said...

சூப்பர்டா இந்தியத்தமிழா
ஒனக்கு எல்டிடியையும் திராவிட இயக்கக்காரனுகளயும் ஒண்ணா அடிக்கனும். இல்லீயா?
மவனே நீயி வெட்டி ஒட்டத்தான் லாயக்குன்னு எத்தன வாட்டி சொல்லிருக்கானுவ.
முழுசா ஒண்ணும் தெர்யாத முண்டம்லாம் ஸ்ரீர்ரங்கன் பதிவுல இன்னொரு முண்டம் வுட்ட கதய வெட்டி இந்த குழியுல போடுமாம்.

டுபுக்கு ஈழத்துல அய்யனுங்க மத்தவனுங்கள ஒன்னோட்ட ஆத்தா தாத்தா மாரி வெட்டி துன்னாங்களான்னு ஒரு டுபுக்கும் பின்னூட்டம் போடல. வெட்டி ஒட்டவும் வெபரம் புரியாம தமிழ்நாட்டு அய்யனையும் இலங்கை அய்யனையும் ஒண்ணா வெச்சி ரவுண்டு கெட்டி அடிக்க வர்றே. நீல்லாம் ஒரு ஆளு அரைவேக்காடு

Anonymous said...

யன்னா தமிழ்நாட்டு அய்யனும் இலங்கை அய்யனும் வேற வேறயா..அட திராவிட பொறம்போக்கே அப்புறம் எதுக்குடா பாரிஸ்ல நீங்கல்லாம் கூடி இலங்கை தலித் மாநாடு நட்த்துனீங்க,,,இப்பத் தெரியுதுடா உங்க சுயரூபம்....

Anonymous said...

டாய் அரலூசு பாரிசு தலித் மாநாட்டுக்கும் இலங்கை அய்யனும் என்னடா சம்பந்தம். ரசனி கமலோட ஒன்னோட உலக்க அறிவு நின்னுபோச்சுன்னா அந்த அரலூசு விழயத்த ஆச்சும் புரிஞ்சுசுக்கடா