எனது நூலகக் கதையை முன்னறே இங்கே சொல்லிவிட்டதால் இப்போது நூல்களின் பட்டியல் மட்டும். அழைப்பு விடுத்த சிவபாலன் அவர்களுக்கு நன்றி என் நினைவுக்கு எட்டியவரை ஊரில் இருக்கும் நூல்களின் பட்டியல். நிச்சயமாக இது முழுமையானது அல்ல நிறைய விடுபட்டிருக்கும் முழுமையான பட்டியல் இரண்டு மாதம் கழிந்து.
1.கள்ளிக்காட்டு இதிகாசம்-வைரமுத்து *
2.காவி நிறத்தில் ஒரு காதல் - வைரமுத்து
3.சிவப்பு விளக்கு- கண்ணதாசன்
4.கள்ளோ காவியமோ-தி.ஜானகிராமன்
5.பொன்னியின் செல்வன் - கல்கி *
6.சிவகாமியின் சபதம்- கல்கி *
7.நிலா நிழல் 1 & 2- சுஜாதா *
8.என் இனிய இயந்திரா& மீண்டும் ஜீனோ - சுஜாதா
9.ரத்தம் ஒரே நிறம்- சுஜாதா *
10.காந்தளூர் வசந்தகுமாரன் கதை- சுஜாதா
11.கனவுகள் கோடி- சுஜாதா
12.என்றாவது ஒரு நாள்- சுஜாதா *
13.மெர்குரிப்பூக்கள்-பாலகுமாரன்
14.கடலோரக் குருவிகள்-பாலகுமாரன்
15.கற்றுக்கொண்டால் குற்றமில்லை-பாலகுமாரன்
16.இரண்டாவது காதல்கதை- சுஜாதா *
17.தூண்டில் கதைகள்- சுஜாதா
18.திருக்குறள் புதிய உரை - சுஜாதா
19.திருக்குறள் - மு.வ. விளக்க உரை
20.ஏசு காவியம்- கண்ணதாசன்
21.தண்ணீர் தேசம்- வைரமுத்து
22.வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்- தபூ சங்கர்
23.பாயும் புலி பண்டாரக வன்னியன் - கருணாநிதி
24.குறளோவியம்- கருணாநிதி
25.நெஞ்சுக்கு நீதி- கருணாநிதி
26.பெரியபுராணக் கதைகள் -பாலகுமாரன்
27.ஆழ்வார்- பாலகுமாரன்
28.பிற்கால சோழர் சரித்திரம் பாகம் 1,2,3,4- சதாசிவ பண்டாரத்தார் *
29.மனுநீதி ஒரு குலத்துக்கு ஒரு நீதி- பெரியார் *
30.மலேசியாவில் பெரியார்-வீரமணி
31.பெரியாரியல்-வீரமணி
32.கண்சிவந்தால் -பெரியாரின் பெண்ணியம் பற்றி ஜெர்ரி
33.தந்தை பெரியார் காங்கிரஸை விட்டு வெளியேறியது ஏன் -காஞ்சீபுரம் மாநாடு *
34.பெரியாரின் அயல்நாட்டு பயணக்குறிப்புக்கள்- பெரியார்&வே.ஆனைமுத்து *
35.பெரியார் ஆகஸ்டு பதினைந்து- எஸ்.வி.ராஜதுரை
36.தமிழ் வானின் விடிவெள்ளி தந்தை பெரியார்-க.அன்பழகன்
37.தந்தை பெரியார் முழுமுதல் வாழ்க்கை வரலாறு- கருணானந்தம்
38.மரண சாசனம்- பெரியாரின் கடைசி உரை-பெரியார் *
39.விடுதலை - சிறப்பிதழ்
இன்னும் பெரியாரின்/பற்றிய நூல்கள் நிறைய உண்டு நிணைவில் இல்லை இதில் ஏதும் தகவல் பிழை இருப்பின் மன்னிக்கவும்
40. பெரியார்.ஈ.வே.ரா சிந்தனைகள்-வே.ஆனைமுத்து
41. வகுப்புரிமைப் போராட்டம் ஏன் - வே.ஆனைமுத்து *
42. இந்திய அரசு எங்கே போகிறது-வே.ஆனைமுத்து
43. தமிழ் நாட்டில் பண்பாட்டுப் புரட்சி- வே.ஆனைமுத்து
44. இந்திய அரசியல் சட்டம்.ஒரு மோசடி- வே.ஆனைமுத்து *
45. நெஞ்சில் ஒரு முள்- மு.வரதராசன்
46. மணல் வீடு-மு.வரதராசன்
47. தமிழ் இலக்கிய வரலாறு.-மு.வரதராசன்
48. பிரபஞ்சன் கதைகள்- பிரபஞ்சன்
49. வானம் வசப்படும்- பிரபஞ்சன் *
50. மகாநதி- பிரபஞ்சன்
51. நானும் நானும் நீயும் நீயும்- பிரபஞ்சன்
52. கனவு மெய்ப்பட வேண்டும்- பிரபஞ்சன்
53. ஐந்தாவது அத்தியாயம்- சுஜாதா
54. இரும்புக் குதிரை- பாலகுமாரன்
55. ஏன்?எதற்கு?எப்படி?- சுஜாதா 1,&2 *
56. வந்தார்கள் வென்றார்கள்- மதன் *
57.வருசநாட்டு ஜமீன் கதை- வடவீர பொன்னையா *
58.கற்றதும் பெற்றதும்- சுஜாதா
59. குடுவைத் தேன் - அந்தேன் சேகவ் *
60. அவன் விதி- அந்தேன் சேகவ் *
61. மூன்று காதல் கதைகள்- அலெக்ஸாந்தர் குப்ரின் *
62. செம்மணி வளையல்- அலெக்ஸாந்தர் குப்ரின் *
63. யாமா- அலெக்ஸாந்தர் குப்ரின்
64. தாய்- மக்ஸீம் கார்க்கி *
65. மூவர்- மக்ஸீம் கார்கி *
66. காரின் அழிவுக்கதிர்- அலெக்ஸோய் தல்ஸ்தோய் *
67. போரும் அமைதியும்- லியோ தல்ஸ்தோய்
68. சிறந்த ரஷ்யச் சிறுகதைகள் *
69. பீட்டர்ஸ் பர்கின் கதை- வரலாற்று தொகுப்பு
70. முன்னே ஒரு அடி பின்னே இரண்டடி- லெனின் *
71. முதலாளித்துவம்- கார்ல் மார்க்ஸ்
72. தம்மபதம்- ஓஷோ
73. வெற்றுப் படகு- ஓஷோ *
74. ஒரு கோப்பை தேனீர்- ஓஷோ
75. ஓம் சாந்தி சாந்தி சாந்தி- ஓஷோ
76. கீதையில் அர்ஜுனன் கேள்விகளுக்கு கண்ணன் பதில் சொல்வதாய் ஒரு புத்தகம் ( சரியான பெயர் நினைவில்லை யாரும் தெரிந்தால் சொல்லவும்) -ஓஷோ
77. பார்த்திபன் கனவு- கல்கி
78. ஜமீன் தார் மகள்- கல்கி
79. மீண்டும் நாளை வரும்- வாசந்தி *
80. 18வது அட்சய கோடு- அசோகமித்திரன்
81. யுத்தம் வேண்டாம் - கார்ல் மார்க்ஸ்
82. எது நாகரீகம்- கார்ல் மார்க்ஸ்
83. புளிய மரத்தின் கதை- சுந்தர ராமசாமி
84. ஜே.ஜே.சில குறிப்புக்கள்
85. சீரோ டிகிரி - சாரு நிவேதிதா
86. கோணல் பக்கங்கள்- சாரு நிவேதிதா
87. இந்தியாவில் சாதிகள்- அம்பேத்கார்
88. எனது போராட்டம்- ஹிட்லர் *
89. வெற்றி நமதே- சே குவேரா *
90. மோட்டார் சைக்கிள் நாட்குறிப்புக்கள்- சே குவேரா *
91. வாழ்வும் மரணமும்- ஜார்ஜ் ஜி காஸ்டனாடா சே குவேரா வாழ்க்கை வரலாறு *
92. தந்தையும் தனையர்களும்- இவான் துர்கேனவ் *
93. கெரில்லா- காங்கோ நாட்குறிப்புக்கள்- சே குவேரா*
94. ஊமைக் காதல் - இவான் துர்கேனவ் *
95. மாய சன்யாசி- அந்தோன் சேகவ்
96. ஆத்மாநாம் படைப்புக்கள் - பிரம்ம ராஜன்
97. ஜீவனாம்சம்- சி.சு.செல்லப்பா
98. வாடிவாசல்- சி.சு.செல்லப்பா *
99. அகத்தினை- கனிமொழி
100.தமிழ் நாட்டுப்புற இயல் -ஆய்வு
இன்னும் தமிழில் உண்டு மறந்து போயிற்று இப்போதே மண்டைக்குள் மணியடிக்கிறது
நண்பர்களே,,,, இனி ஆங்கிலம்
என்னிடம் இருப்பதில் சிறந்த நூல்கள் பார்ப்போம்: *
1. How did it Really Happened- Readers Digest
2. The Good health Fact Book- Readers Digest
3. Natural Wonders of the World -Readers Digest
4. Discovering the Wonders of our World- Readers Digest
5. Intelligence in Animals - Readers Digest
6.1000 Wonders of Nature- Readers Digest
7.Secrests Of Love and Sex- Readers Digest
8.Do It Yourself Manual- Readers Digest
9. 1000 computer Tips and Tricks- Readers Digest
10. The World at war- Readers Digest
11.The worlds last Mystrys- Readers Digest
12.Book of Facts- Readers Digest
13. Word power Dictionary- Readers Digest
14. God of Small Things- Arunthathy Roy
15.Concept Of the Corporation- Peter F Drucker
16. Management Challenges for the 21st Century- Peter F Drucker
17.Dravida: a History of the Tamils and Other Dravidian Peoples.
18.Indian Temple Architecture
19. The Nazi Assault on Humanity
20.Genocide Political Use in the Twentieth Century
21. Understanding the Dravidian movement
இதில் இருக்கும் சில புத்தகங்கள் அயற்ச்சி தரக்கூடியவை சில உங்களை ஆர்வமூட்டக் கூடியவை
*நட்சத்திரக் குறியுடன் இருப்பவை எனக்குப் பிடித்தமானவை
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
நானும் நாலுபேரை ஆட்டத்தில சேத்து விடனுமாம் கோவி அய்யா சொல்றாரு சரி நமக்கு தெரிஞ்ச நாலுபேரு யாருடான்னு பாத்தா எல்லா பயலும் ஊர்ல இருக்கானுவ. சரி வலையுலக நண்பர்களைத்தான் சொல்லியிருப்பார்ன்னு அப்பறமாத்தான் புறீது
1.புதுசா கல்யாணமான மாப்பிளை துபாய் ராசா (நேத்துதான் எனக்கு துபாய் சங்கத்துல சீட்டிருக்கறதா சொன்னாரு:)2.குவாட்டர் கோவிந்தனையே மயங்கி விழ வச்ச நம்ம குழலி
3.அப்பப்ப வந்து அஞ்சுவரி போட்டாலும் சும்மா காரமா கவிதை எழுதுற நம்ம முத்துகுமரன்
இன்னும் யாரு.................500 பின்னூட்டத்துக்கும் மேல வாங்கி சா(சோ)தனை படைச்ச இலவசக்கொத்தனார்
( இதுக்கு மட்டும் எழுதல அப்றமா எல்லா பின்னூட்டமும் நானே போடுவன் ஒவ்வொன்னும் ஒவ்வொரு கேள்வி எல்லாத்துக்கும் பதில்சொல்லியாகனும் நான் வேற உங்க சங்கத்த பத்தி ஆகா ஓகோன்னு புகழ்ந்து வச்சிருக்கேன்)
Subscribe to:
Post Comments (Atom)
139 comments:
ஆகா பெரிய பட்டியல் .. மீண்டும் படித்துவிட்டு மறுபடியும் வருகிறேன் :)
//ஆகா பெரிய பட்டியல் .. //
வாங்க ஜி.கே. நீளமான பட்டியல்தான் இதில பாருங்க ஒரு சோகத்த நாவல் எல்லாம் நாவில இருக்கு தொகுப்புகள், ஆராய்ச்சி, வரலாறு, இலக்கியம், பெரியார் புத்தகம் ஓஷோ புத்தகம் பாதி நினைப்பே வர்ல நான் என்ன பன்ன?
kallo kaviyamo written by T.JanagiRaman
one mistake..i guess its a mistake ..Irumbu kuthirai is written by BalaKumaran.i hope there is no irumbu kuthirai by Sujatha..u plz chk again
தகவல்களுக்கு நன்றி அனானிமஸ்
பிழைகளையும் திருத்திவிட்டேன்
மாப்பு வச்சுட்டான்யா ஆப்பு...
பதிவு போடுமளவிற்கு ஒன்னும் பெரிய படிப்பாளி இல்லை. நேரம் வரும் போது, வெளியே சொல்லிக் கொள்ளுமளவு வாசித்த பின்பு பகிர்ந்து கொள்கிறேன். நான் இப்போதுதான் வாசிக்க தொடங்கி இருக்கிறேன்.
அழைப்பிற்கு நன்றி மகேந்திரன்.
வாங்க முத்துகுமரன் !.
//பதிவு போடுமளவிற்கு ஒன்னும் பெரிய படிப்பாளி இல்லை.//
இப்ப நாங்கள்ளாம் என்னாத்த படிச்சிபுட்டோம் பாதி புத்தகத்த ஞாபகமே இல்ல அதுவும் இருந்தா நல்ல நீளமான பதிவா இருக்கும் பரவாயில்ல நீங்க படிச்ச வரைக்கும் ஒரு பதிவ போடுங்க :))
//மாப்பு வச்சுட்டான்யா ஆப்பு//
இதுக்கு பேரே ஆப்பா?
அட போங்க..நானும் பட்டியல்-னு பேரை வச்சிட்டு உங்க அளவு இல்லைனாலும் ஒரு சின்ன பட்டியல் போட்டு வச்சிருந்தா அதுக்குள்ள இங்கேயும் பட்டியல்-னு தலைப்பை வச்சிட்டீங்க..இப்போ நான் என்ன பேரு வைக்கறது??? :(
//அட போங்க..நானும் பட்டியல்-னு பேரை வச்சிட்டு உங்க அளவு இல்லைனாலும் ஒரு சின்ன பட்டியல் போட்டு வச்சிருந்தா அதுக்குள்ள இங்கேயும் பட்டியல்-னு தலைப்பை வச்சிட்டீங்க..இப்போ நான் என்ன பேரு வைக்கறது//
அட!
பட்டியல் பாகம் இரண்டுன்னு மாத்திடுங்க :)
இல்லன்னா எதாவது சினிமா படத்து பேர வங்க இப்ப அதுக்குத்தான் டிமான்ட்
//இல்லன்னா எதாவது சினிமா படத்து பேர வங்க இப்ப அதுக்குத்தான் டிமான்ட்
//
பட்டியல் சினிமா பட பேரு தானே :))
அட ஆமா ! இது என் பதிவுக்கும் பொருத்தமா வச்சாச்சு மத்தபடி அது சினிமா பேருங்கிற ஞாபகம் இப்ப நீங்க சொல்லித்தான் வருது
அருமையான பட்டியல்.
அனைத்தையும் படித்துவிட்டு கேள்விகளோடு மீன்டும் வருகிறேன்.
இன்னொரு விசயம்..
பெரியாரின் சிந்தனைகள் என்ற ஒரு பதிவு போட போகிறேன்..
அதை கொஞ்சம் படித்து விட்டு உங்க கருத்தை சொல்ல வேண்டும்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிபா சீக்கிரமா எழுதுங்க பெரியார் பற்றிய பதிவு
மகோ,
நீங்க நாவல்கள் படிச்சிருந்தாலும் ஒரு காலக் கட்டத்திற்கு பிறகு கொஞ்சம் சீரியஸ் ஆன மாதிரி தெரியுது.
நானும் நிறைய வைரமுத்து, அப்துல் ரஹ்மான், ப்ரபஞ்சன் அப்பப்ப பாலா, அப்புறம் ரஷ்ய மொழிப் பெயர்ப்பு கவிதை, கதைகள் படிப்பதுண்டு...
அதில் முக்கியமாக இன்னும் மனத்தினுள் நிற்பது "சோறு" என்ற நாவல்.
உங்களின் புத்தகப் கலப்பு வாசிப்பை வழம்க்கியமைக்கு ரொம்ப நன்றிகள்!
//நீங்க நாவல்கள் படிச்சிருந்தாலும் ஒரு காலக் கட்டத்திற்கு பிறகு கொஞ்சம் சீரியஸ் ஆன மாதிரி தெரியுது.//
ஆம் நான் பன்னிரண்டாம் வகுப்புக்கு பிறகே கொஞ்சம் சீரியஸான புத்தகங்களை படிக்க ஆரம்பித்தேன் அவற்றில் நிறைய புத்தகங்களின் சரியான விபரங்கள் இப்போது நினைவில் இல்லை. ஈழத்து தமிழ் இலக்கியங்களும் நிரய ஆவலுடன் படித்ததுண்டு ஆனால் ஒன்று கூட நினைவில் இல்லை
நன்றி தெகா
என் சிறு பட்டியலுக்கு பெயரை மாற்றிவிட்டேன் மகேந்திரன்..
ஒரு திரைப்படப் பெயர் தான் கிடைக்க வில்லை :(
பரவாயில்ல விடுங்க கப்பி இப்ப இருக்கிற பேரு நல்லா இருக்கு. (சினிமான்னு ஒரு பேச்சுக்கு சொன்னா அத வேத(?)வாக்காவே எடுத்துகிட்டீங்களா?
இதுவரை இன்று யாரும் பின்னூட்டம் போட்டு முன்பக்கத்தில் வர வழியேற்ப்படாததால் குவாட்டர் கோவிந்தன் சார்பாக இப் பின்னூட்டம் .... அட எனக்காகவா போடுக்கிறேன் எல்லாரும் படிச்சு பயம்(ன்)பெற வேண்டாமா அதுக்குத்தான் யாரும் தப்பா நெனைச்சாலும் சரியா நினைச்சாலும் ஒரு வரி எழுதுங்க நமக்கு இனிமே இந்த சமாதான வழியெல்லாம் ஆகாது யாருக்காவது கிட்னி இருக்கான்னு கேட்டுறவேண்ட்டீதுதான் :)
நீங்க நம்ம வீட்டான்ட வந்து உங்க வீட்டு சுட்டியை கொடுத்துட்டு வந்திங்கள்ளெ அதோட தாக்கம் தான் இது, என் வீட்டு சுட்டியை நான் இங்கு கொடுத்து வைக்கிறேன்...
http://thekkikattan.blogspot.com/2006/07/blog-post_30.html
இதை வைத்து ஒரு நாளு பேரு நம்ம வீட்டாண்ட தடுக்கி விழுந்து பார்த்துவைச்ச கசக்கவா பூது....
ரொம்ப நன்றிங்க தெகா. கடுப்புல போட்டது முந்தியுள்ள பின்னோட்டம்
ஆமா நம்ம இலவசக்கொத்தனாருக்கு ஒரு பின்னூட்டம் போட்டேன் இன்னும் ஆளையே காணமே ஓடிட்டாரா?
என்னான்னா அவருக்கு வந்திருந்த 200 பின்னூட்டத்தையும் திருப்பி அனுப்பிவச்ச்சேன் அதுக்கப்புறமா ஆளையே காணமுங்க
மகேந்திரன்..
பேசாம சங்கம்,கட்சி ஏதாச்சும் ஆரம்பிச்சுடுவோமா?? :)))
//பேசாம சங்கம்,கட்சி ஏதாச்சும் ஆரம்பிச்சுடுவோமா//
கப்பி
நான் இந்த ஐடியாவ கே.ஜி அய்யா கிட்ட சொன்னதுக்கு வேண்டாமுன்னு சொல்லிட்டரு..... (எ.ச.இ.ச.)
எந்த சங்கத்திலும் இல்லாத சங்கம் இது எப்பிடி?
//(எ.ச.இ.ச.)
எந்த சங்கத்திலும் இல்லாத சங்கம் இது எப்பிடி?
//
பேரு எசகுபிசகா இருக்கறதா தானே சொன்னாரு? சங்கமே வேணாம்னா சொன்னார்??
இங்க எல்லாம் முயல், பறவை வேட்டை தாங்க...
கேட்டா மத்த விலங்கையெல்லாம் வேட்டையாட தடைச் சட்டம் இருக்காம்...எல்லாம் சின்ன பசங்க...
//கதைய கேட்டுகிட்டு இங்கயே இருந்தா எப்பிடிங்க நம்ம ஊட்டுக்கும் வந்து எதாச்சும் கத சொல்லுங்க//
பெரிவேலி, வெள்ளை வால் மான் இப்படியெல்லாம் அள்ளிப் போட்டுட்டு இருந்தா நான் என்ன கத சொல்றது...
நீங்க அங்க வந்து கதை சொல்லுங்க..நான் இங்க வந்து 'உம்' கொட்டறேன் :)))
//ரைபில் ஃபோர்ட் ரோட்ல இருந்து ப்ளாக் ரோடு வரைக்கும் ஆனா ஒரு வருச வேட்டை லைசன்ஸ் வேனும்ங்க //
அந்த குவாட்டர் கோவிந்தன் சிலைக்கு பின்னாடி இருக்கே..அந்த ரோட்டை தானே சொல்றீங்க..
லைசன்ஸ் இல்ல..எதுனா அன்பளிப்பு கொடுத்து கரெக்ட் பண்ண முடியுமா?
//நான் ஏதோ பொய்சொல்றதா நீங்க நினைக்கிறீங்கல்ல நிஜமாவே நான் ஒரு தடவை உருகுவே வுக்கு வந்தனுங்க //
இங்க இருக்கவனுங்களைக் கேட்டா நீங்க சொல்ற ஏரியா எதுவுமே தெரியாதுன்னு சொல்றானுங்களே..
சொஞ்சம் விவரமா சொல்லுங்க..மாண்டிவிடியோலயேவா? இல்ல பக்கத்து பட்டி எதுனாவா??
//அட இது உங்களுக்கு இல்லைங்க கப்பிக்கு மான்வேட்டையாட கத்து குடுக்கிறேன்..//
தப்பான ஆளுக்கிட்ட வந்து மானு கீனுன்னு பேசிக்கிட்டு இருக்கீங்க, நமக்கு இன்னொரு முகம் இருக்குது மறந்துட்டீங்கள "நேசி - இயற்கை நேசி" ... என்டேஞ்ஜர் வகை மானூல எதுவும் கைவச்சுப்புடாதீங்க ஐ.யு.சி.என் ல மாட்டி வுட்டுப்புடுவேன்...
மான் வேட்ட பத்தி பேசுன என்ன சல்மானா மாத்திடாதீங்க இங்க இன்னும் நான் ஒட்டகத்தையே முழுசா பாக்கல
/இந்த ஏரியாவ கேட்டு பாருங்க அப்பிடி தெரியிலன்னா நீங்க கேக்கர ஆளு கு.ச.கு வா யிருக்கும் :)
//
இங்க இருக்கவனுங்க பெரும்பாலும் கு.ச.கு தான்..ஆனா
//301-924-2127//
இது இந்த நாட்டு போன் நம்பரா இருக்க வாய்ப்பே இல்லைனு உள்ளூர் காரன் தலை மேல அடிச்சு சத்தியம் பண்றானே ?
அது... அது... அப்படி ஒரு பையம் இருக்கணும், ஒட்டகத்தையே பார்த்ததில்லையா, ஆமா, அப்படின்னு எப்படி உங்களுக்கு தண்ணியெல்லாம் கிடைக்குது :-))))
//இது இந்த நாட்டு போன் நம்பரா இருக்க வாய்ப்பே இல்லைனு உள்ளூர் காரன் தலை மேல அடிச்சு சத்தியம் பண்றானே ? //
இருங்க கூகிள் காரன் மாண்டிவிடியோவில மான் வேட்டைன்னா என்ன அட்ரஸ் தர்ராணு பாக்கலாம் இல்லன்னா இந்த அட்ரஸ் எங்க இருக்கோ அங்கயே வேட்டைய ஆரம்பிக்கலாம் :)_
தெகா said //உங்க வீட்டான்டை இருக்கிற, Wildlife Conservation Force, 1458A Igdipa yusup Rd, Dubailங்கிற முகவரிக்கு இப்பத்தான் தெரிவிச்சுருக்கேன் எதுக்கும் தலமறைவு ஆகாம அங்கேயே இருங்க... ;-)
//
எனக்கு மான்வேட்டை கத்து கொடுக்கறேன்னு இப்போ நீங்க மான் கராத்தே யூஸ் பண்ணனும் போல..
மகேந்திரன்..உஜார்..
http://www.treksafaris.com/HuntingUruguay.asp
தெகா-வுக்கு இந்த லிங்கை காட்டாதீங்க :D
//எனக்கு மான்வேட்டை கத்து கொடுக்கறேன்னு இப்போ நீங்க மான் கராத்தே யூஸ் பண்ணனும் போல..
மகேந்திரன்..உஜார்.. //
நீங்க கவலையே படாதீங்க கப்பி... இப்பத்தான் தெகாவுக்கு ஒரு வீரவசன வீராவேச பின்னூட்டம் போட்டுட்டு வந்திருக்கேன்
கலங்காதே கண்மணி...
எதிரிகளின் வஞ்சத்தை உன் நெஞ்சின் தீரம் சுக்கு ஆயிரமாக்கும்..
கலங்காதே கண்மணி...
எதிரிகளின் வஞ்சத்தை உன் நெஞ்சின் தீரம் சுக்கு ஆயிரமாக்கும்..
கலக்கமா எனக்கா என் கால்கள் நடுங்குவது கண்டு நீ கலாய்ப்பது தெரிகிறது அது நடுக்கமில்லை குளிர் ஆறு மணி நேரத்துக்கும் மேல் ஏஸி பக்கத்தில் இருந்தால் ஆடாதா பின்னே
வீரா வேஷத்தில் உங்களை வா போ நீ யென்று சொல்லிவிட்டேன் அடியேனை வீரத்துடன் மன்னியுங்கள்
//இந்த மிரட்டலுக்கெல்லாம் கோவிந்தன் பயந்துவிடமாட்டான் என்பதை பயமில்லாததுபோல் சொல்லிக்கொள்கிறேன் வரட்டும் அவர்கள்
அவர்களின் ஒட்டகத்தில் சவாரி செய்தேனா இல்லை அவற்றின் முதுகில் சிறுபிள்ளைகளை ஏற்றி ஒட்டகத்தை சித்திரவதை செய்தேனா பாலைவனம் எங்கும் நீண்டு கிடக்கும் மணல் வெளியில் பஹ்ரைன்காரன் போல் காரை ஓட்டி புழுதிவாரித் தூற்றினேனா ?, அல்லது என்னை எடுத்த எடுப்பில் கைது செய்துவிட நான் என்ன ஈரானா? :)
:) //
:-))))))
எங்களுக்கு சரியான ஆதாரங்கள் இல்லாவிட்டாலும் Pre-emtive aresst பண்ணி"யே தீருவோம்... பிரியாணி வாங்கி போட்டு ஆட்களை உங்களின் நண்பர் 'உருகுவே"யில இருந்து லாரி கொண்டு கொண்டு வந்தாலும்... நாய்'ங்கெல்லாம் யாரு, தீரன் புஷ்ஷின் தீவிர பக்தன்... பண்ணியே தீருவோம் பண்ணியே தீருவோம் அடிக்கிற வெயிலுமேல ஆனையாக ;-)))
//கலக்கமா எனக்கா என் கால்கள் நடுங்குவது கண்டு நீ கலாய்ப்பது தெரிகிறது அது நடுக்கமில்லை குளிர் ஆறு மணி நேரத்துக்கும் மேல் ஏஸி பக்கத்தில் இருந்தால் ஆடாதா பின்னே
//
தெரிகிறதடா கண்மணி..எதிரிகள் அதைக் கண்டு தவறாக எண்ணிவிடக் கூடாது... உன் வாயால் அதைச் சொல்ல வேண்டும் என்றே உசுப்பி விட்டேன்.
//வீரா "வேஷ" த்தில் உங்களை வா போ நீ யென்று சொல்லிவிட்டேன் அடியேனை வீரத்துடன் மன்னியுங்கள்
disci
//
உன் கோபமும் வீரமும் பாசமும் நெகிழச் செய்கிறது..
ஆனா மன்னியுங்கள் - அப்படின்னா இன்னாப்பா??
மன்னி-ன்னா அண்ணி தானே??
disci - இங்கிலீஷ்ல எனக்கு புடிக்காத ஒரே வார்த்தை...
//வீரா "வேஷ" த்தில் உங்களை வா போ நீ யென்று சொல்லிவிட்டேன் அடியேனை வீரத்துடன் மன்னியுங்கள்
disci
//
உன் கோபமும் வீரமும் பாசமும் நெகிழச் செய்கிறது..
ஆனா மன்னியுங்கள் - அப்படின்னா இன்னாப்பா??
மன்னி-ன்னா அண்ணி தானே??
disci - இங்கிலீஷ்ல எனக்கு புடிக்காத ஒரே வார்த்தை...
ப்ரிஎமிடிவ் அரஸ்ட் பன்ன இது என்ன மைனாரிடி ரிபோர்ட்டா இல்லை புஷ் என்ன டாம் க்ரூஸா ஸ்டீவன் ஸ்பீல்பெர்கே வந்தாலும் மான் வேட்டை நடந்தே தீரும் என்று மதியம்தான் சேதி வந்தது அல்ஜசீரா டீவியில் அல்கொய்தா பேசியது கேட்டதா பென்டகனில் இல்லை புஷ் புஸ்ஸென்று ஏர்போர்ஸ் ஒன்னில் பறந்துவிட்டாரா?
அது சரி..///தெரிகிறதடா கண்மணி//,//உன் வாயால் // இதுக்கெல்லாம் நான் அண்ணிப்பு...ச்சே மன்னிப்பு கேக்கனுமா??
தெகா என்ன சதி செய்தாலும் நாம் மான் வேட்டையைத் தொடருவோம்..
எந்த preemptive action-உம் நம்மை ஒன்றும் செய்யாது..
/ப்ரிஎமிடிவ் அரஸ்ட் பன்ன இது என்ன மைனாரிடி ரிபோர்ட்டா இல்லை புஷ் என்ன டாம் க்ரூஸா ஸ்டீவன் ஸ்பீல்பெர்கே வந்தாலும் மான் வேட்டை நடந்தே தீரும் என்று மதியம்தான் சேதி வந்தது அல்ஜசீரா டீவியில் அல்கொய்தா பேசியது கேட்டதா பென்டகனில் இல்லை புஷ் புஸ்ஸென்று ஏர்போர்ஸ் ஒன்னில் பறந்துவிட்டாரா? //
எங்களது அண்ணன் அஞ்சா நெஞ்சன் தீரன் புஷ், அப்படி ஹாலிவுட் படங்களை நிறைய பார்த்துப் பார்துத்தான் அதுவும் 1940கலிருந்து 60 வரைக்கும் வந்த "டெக்ஸஸில் கவ் பாய்" பேன்ற படங்களையெல்லாம் ஒன்று விடாமல் பார்த்து அது போலவே பேசியதால்தான்... இன்றும் நாங்கள அஞ்சாமல் சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறோம் என்பதனை இத் தருணத்தில் உங்களுக்கு ஞாபகமூட்ட கடமைபட்டுள்ளேன்...
அய்யோ யாரோ ஒருத்தர் Govt. registration plate போட்டுகிட்டு ஃபோர்டு காரில் வந்து இறங்கிறாரே... ஏங்க இப்பிடி ஏன் வாய கிளரி வாம்பில மாட்டி விடுறீங்க ;-))
ஆனா மன்னியுங்கள் - அப்படின்னா இன்னாப்பா??
மன்னி-ன்னா அண்ணி தானே??
disci - இங்கிலீஷ்ல எனக்கு புடிக்காத ஒரே வார்த்தை...
//அல்ஜசீரா டீவியில் அல்கொய்தா பேசியது கேட்டதா பென்டகனில் இல்லை புஷ் புஸ்ஸென்று ஏர்போர்ஸ் ஒன்னில் பறந்துவிட்டாரா? //
எங்கள் குத்து விளக்கு, எப்பொழுதும் "டேவிஸ் காம்ப்"ல் தான் இருப்பார், ரொம்ப அதிகமாக அவர் அங்கேயே இருந்து நாட்டை ஆள்கிறார் என்று, அன்பு நண்பர் ஓசமா அறிக்கை ஒன்று விட்டாலே நாங்கள் வாஷிங்டன் வருவோம்... என்பதை வரி கட்டும் நல்ல குடி'யுரிமை பெற்றவன் என்ற முறையில் உங்களுக்கு சொல்லிக்க கொள்ள ஆசைப் படுகிறேன்...
ஐம்பதை அடித்த ஒட்டகத்து நாயகன், மென்மேலும் பின்னூக்கிகள் அடித்து வாழ வாழ்த்துகிறேன்...!!
//இப்படி பின்னூட்டத்துக்கு ஆசைப்பட்டு தனியாக கதம்பத்தில் மாட்டிக்கொண்ட எனக்கு சரியான தண்டனை சரியான தண்டனை...
//
ஃபீல் பண்ணாத மாமே..
//எங்கள் குத்து விளக்கு, எப்பொழுதும் "டேவிஸ் காம்ப்"ல் தான் இருப்பார்//
டேவிஸ் கப்பா அப்ப கிரண்டுல இருப்பாருன்னு சொல்லுங்க ஒசாமா ஓசி ப்ளைட் எடுக்க வேண்டியதுதான்
ச்சே...ஒரு மனுசனா நிம்மதியா இருக்க விடாம வேலை பார்க்க சொல்றாங்கப்பா..
அதுக்குள்ள அங்க வந்து 50 போட்டுட்டீங்களே...
உங்க பாசத்தை எண்ணி எண்ணி, 50 பின்னூட்டத்தையும் எண்ணி எண்ணி..
//உங்க பாசத்தை எண்ணி எண்ணி, 50 பின்னூட்டத்தையும் எண்ணி எண்ணி..//
பஞ்சதந்திரம் பஞ்சதந்திரம் பஞ்சதந்திரம் பஞ்சதந்திரம் பஞ்சதந்திரம் பஞ்சதந்திரம் பஞ்சதந்திரம் பஞ்சதந்திரம் பஞ்சதந்திரம் பஞ்சதந்திரம் பஞ்சதந்திரம் பஞ்சதந்திரம் பஞ்சதந்திரம் பஞ்சதந்திரம் பஞ்சதந்திரம் பஞ்சதந்திரம்
ஐம்பது அடிக்க உதவிய சக ஆட்டக்காரர்கள் கப்பி மற்றும் கேப்டன் தெகா வுக்கு நன்றி
இடையிலேயே ரன் அவுட் ஆகாமலிருக்க உதவவும் :)
இன்னைக்கு புதுசா எத்தனை பட்டியல் வந்திருக்கு மகேந்திரன்??
குழலி வெகுவிரைவில் புத்தகம் பதிவு போடப்போவதாக தனிமையில் ச்சே தனி மெயிலில் தெரிவித்துள்ளார் !
மான் வேட்டைக்கு நான் ரெடி..கொஞ்சம் டைம் கொடுங்க..ஜஸ்வந்த் மச்சத்தையும் படிச்சுட்டு வர்றேன்..
//ஜஸ்வந்த் மச்சத்தையும் படிச்சுட்டு வர்றேன்.. //
அய்யா கப்பி மச்சத்த படிச்சுட்டு பின்னூட்டத்த கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ்லேயே போடுங்கய்யா நீங்க மறந்து போயி கதம்பத்துல போட்டு கவுத்துடாதீங்க
http://kathalregai.blogspot.com/2006/07/blog-post_31.html - குமரன் எண்ணம்..
கோவியார் புதையல்-ல புடிச்சது..
தமிழ்மணத்தில் இல்லை..
//அய்யா கப்பி மச்சத்த படிச்சுட்டு பின்னூட்டத்த கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ்லேயே போடுங்கய்யா நீங்க மறந்து போயி கதம்பத்துல போட்டு கவுத்துடாதீங்க //
அதெல்லாம் தெளிவா தான் இருப்போம்...டென்சன் ஆவாதீங்க :)
மகி...
ஓசோ புத்தகம் நூலகத்திலிருந்து சிலவற்றை படித்திருக்கிறேன் ஆனால் நீங்கள் பட்டியல் இட்டு இருப்பவை அல்ல. பெயரும் நினைவு இல்லை. எனக்கு ஓசோவின் சிந்தனைகள் பிடிக்கும் கொள்களை அல்ல.
பொன்னியின் செல்வன் இன்னும் படிக்கவில்லை. இனிமேலும் படிக்கமுடியுமா என்று தெரியவில்லை. வரலாற்று கதைகளை படிப்பதற்கு தற்போது அவகாசம் இல்லை.
வைரமுத்து ... வாலி இருவருமே புடிக்கும். சுஜாதா கதைகள் படித்திருக்கிறேன்.
பாலகுமாரன் படிப்பதற்கு விருப்பம் ஏனோ வரவில்லை :(
பெரியார் ... வீரமணி புத்தகங்களை கண்டதும் இல்லை கேட்டதும் இல்லை.
எஸ்வி துரையின் புத்தகம் ஒன்றை படித்திருக்கிறேன் ... கருத்துக்கள் செழுமை :)
அப்பறம் அப்பறம் ... உங்கள் பட்டியல் நீளமாக இருப்பதால் தவணை முறையில் பின்னூட்டம் வரும் :)))
என்னங்க மகி ... பின்னூட்டமெல்லாம் ஒரே குழப்பமாக இருக்கு இதைத் தான் பார்க்கச் சொல்லி 'சுட்டிக்' காட்டினீர்களா ?
புரியுது ... முகவரிகள் தொலைந்து விட்டால் ... இன்னொரு நாளைக்கு வரவேண்டியது தான் :))
ஆமா, நேத்தைக்கு எங்கே விட்டோம், தொடரலாமா? மான் வேட்டையாடுவதை இன்னும் நிறுத்தலையா... திருந்தச் சொல்லி ஒரு வாய்ப்பு கொடுத்தும்... ஹூம் ஹூம். நோ ச்சான்ஸ்... களி கிண்டவிட்டாத்தான் சரி வரும் போல...
பட்டுக்கோட்டை பிரபாகர ஒரு முறை நான் பேருந்தில் பார்க்கிற சந்தர்பம் கிடைச்சது,,, அப்ப வந்து நான் ஜமால் முகம்மது கல்லூரியில் படிச்சிகிட்டு இருந்த காலம்...
அந்த கதையை அடுத்த பின்னூட்டத்தில கப்பி பயகிட்ட சொல்றேன் ... :-)
தெகா: மான் வேட்டையாடுரவரோட சேரதீங்க... சல்மான் நண்பர்களுக்கான கதி உங்களுக்கு ஆகிப்பூடும்...
அங்க போய் என்ன-னு கேளுங்க..
//பின்னூட்டமெல்லாம் ஒரே குழப்பமாக இருக்கு இதைத் தான் பார்க்கச் சொல்லி 'சுட்டிக்' காட்டினீர்களா //
ஜி.கே அது ஒன்னுமில்ல ஒரு நல்ல புத்தக பதிவுக்கு வரவும் பின்னூட்டம் போடவும் ஆளில்லாத கடுப்புல ச்சும்மா நானு, கப்பி, தெகா எல்லாறும் சேந்து வெளாண்டமுங்க
யப்பா ரொம்ப நேரத்துக்கப்புறமா பதிவு சம்மந்தப்பட்ட ஒரு பின்னூட்டம் உடாத புடிச்சுக்கோ :)
நன்றி ஜி.கே
மகி...
//எனக்கு ஓசோவின் சிந்தனைகள் பிடிக்கும் கொள்களை அல்ல.//
//பொன்னியின் செல்வன் இன்னும் படிக்கவில்லை. //
//பாலகுமாரன் படிப்பதற்கு விருப்பம் ஏனோ வரவில்லை :(//
ஓஷோ விஷயத்தில் நான் பெரியாரின் ரசிகன் "தேவையானத எடுத்துக்கோ"
பொன்னியின் செல்வன் பிடி எஃப் இல் கிடைக்கிறது ஆமையுங்கள்
எனக்கும் இப்போது பாலகுமாரனை பிடிக்கவில்லை காரணம் நிறைய அறிவுறைகள் நிறைய உண்மைகள்கலந்த பொய்கள்
//அங்க போய் என்ன-னு கேளுங்க.. //
கப்பி..
பார்த்தேன் ரசித்தேன் சிரித்தேன்
பக்கம் வரத் துடித்தேன்
//பட்டுக்கோட்டை பிரபாகர ஒரு முறை நான் பேருந்தில் பார்க்கிற சந்தர்பம் கிடைச்சது//
எங்கப்பா பொடா காரங்க இங்க வந்து பாருங்க தெகா அய்யா பிரபாகரன பட்டுக்கோட்டைல பாத்ததா சொல்றாரு
//களி கிண்டவிட்டாத்தான் சரி வரும் போல...//
இந்த மான் எந்தன் சொந்தமான்
பக்கம் வந்தமான்
பின்னூட்டம் போடுங்கய்யா போடுங்க :))
//ஜி.கே அது ஒன்னுமில்ல ஒரு நல்ல புத்தக பதிவுக்கு வரவும் பின்னூட்டம் போடவும் ஆளில்லாத கடுப்புல ச்சும்மா நானு, கப்பி, தெகா எல்லாறும் சேந்து வெளாண்டமுங்க //
ஊரு இரண்டான கூத்தாடிக்கு கொண்டாட்டாம் ... கிளாமத்தூர் எக்ஸ்பிரசில் பிரச்சனை என்றால் என்னோட பதிவில் பின்னூட்டம் கொட்டே கொட்டுன்னு கொட்டுது
இன்னும் 10 நாளைக்கு விளையாட வருகிறேன் ... அப்பறம் வீட்டுக்கார மேடம் வந்துடுவாங்க :))
:(((
//பின்னூட்டம் போடுங்கய்யா போடுங்க :)) //
பின்னூட்டம் போடுறவங்க ஓட்டம் போட்டு தனியே புலம்பும் படி வெச்சிட்டாங்களே... தெகா இல்லை வரமாட்டார் நம்பாதே :))
பட்டுகோட்டை பிரபாகர பார்த்த பொழுது....1
அப்படி பார்த்த ஆச்சர்யத்திலே, அந்த ஆள அப்பப்ப அவரோட "ஃபார்மஸில" பட்டுக்கோட்டையில இருக்கிறதில நடந்து கிடந்து கடந்து ;-) (கவுஜ நடையில வந்துருச்சு) போறப்ப பார்க்கிறது.
இருந்தாலும் பஸ்ஸில வச்சு அதுவும் அவரு பக்கத்து இருக்கை வேற காலியா இருந்துச்சு அப்பல்லாம் நாம இங்கிலீபீஸ் நாவல்கள் படிக்கிறதில்ல அவருதான் ட்ரான்ஸ்லேட் பண்ணி எழுதிடுவாரில்ல ;-))) அதப் படிச்சவே போதும்...
சரி விசயத்துக்கு வாரேன் அடுத்தப் பின்னூட்டத்தில...
//10 நாளைக்கு விளையாட வருகிறேன் ... அப்பறம் வீட்டுக்கார மேடம் வந்துடுவாங்க //
ஹிம் எல்லாத்துக்கும் ஒரு அதிர்ஷ்டம் வேணுமில்ல :)
//என்னோட பதிவில் பின்னூட்டம் கொட்டே கொட்டுன்னு கொட்டுது//
ஹிம் எல்லாத்துக்கும் ஒரு அதிர்ஷ்டம் வேணுமில்ல :(
கொஞ்சம் லேட்டாயிடுச்சு..அதுக்குள்ள புலம்பலா..
அங்க அவரு பட்டுக்கோட்டை பிரபாகர் கதையை ஆரம்பிச்சாச்சு
//அங்க அவரு பட்டுக்கோட்டை பிரபாகர் கதையை ஆரம்பிச்சாச்சு //
அதான் லேட்டா சொல்லட்டும் சொல்லட்டும்
//நாம இங்கிலீபீஸ் நாவல்கள் படிக்கிறதில்ல அவருதான் ட்ரான்ஸ்லேட் பண்ணி எழுதிடுவாரில்ல ;-))) அதப் படிச்சவே போதும்...//
அட நீங்க கதையெழுதற ஆளச் சொல்றீங்களா? சொல்லுங்க .....
ம்... அப்புறமா என்னாச்சு?
பட்டுகோட்டை பிரபாகர பார்த்த பொழுது....2
ரொம்ப புளாகாங்கிதப்பட்டுப் போயி, நான் போயி சேர வேண்டிய ஊரு திருச்சி, வந்து நின்ன பேருந்து, திருச்சியில இருந்து புதுக்கோட்டை வந்து அங்கிருந்து பட்டுக்கோட்டை போறது. நம்ம வெண்னை ஆட்கள் போர்ட மாத்தமா இருந்திருக்குக, அது தெரியமா நான் ஒரு வெளக்கெண்னை அதில ஏறி அந்த ஆள பார்த்ததும் ரொம்ப பந்தாவ பக்கத்தில உட்கார்ந்து கிட்டு. அவரு பார்க்கிற மாதிரி உடனேயே கையில வச்சுருந்த சுஜாதா "மணல் கயிறு"ன்னு நினைக்கிறேன், திறந்து வச்சுகிட்டு உட்கார்ந்துட்டேன் (வயிறு புகையட்டுமின்னு ;-))).
அவரும் நான் எதிர் பார்த்தமாதிரியே எட்டி எட்டி என் புத்தகத்தை சைடு கண்ணு வுட்டு பார்த்துகிட்டு வந்தாறு. எனக்கு என்னமோ அந்த ஆள பீட் பண்ணிப்புட்டதா நினைப்பு.
கடைசி பாகம் ப. கோட்டை பிரபாகர சந்திச்சப்ப - 3
சரி பஸ் எடுத்து ஒரு 20 கி.மீ போயாச்சு, கன்டக்டர் டிக்கெட் போட்டு வந்து சேருவதுக்கும் ஆலங்குடின்னு ஒர் ஊரு வராதுக்கும் சரியா இருந்துச்சு, நான் ஸ்டைலா ஒரு திருச்சி ப்ளீஸ் அப்படின்னு சொன்னேன். ப. கோட்டை என்னை ஒரு மாதிரி பாத்து சிரிச்சுச்சு, நடத்துனர், யப்பா இந்த பஸ் பட்டுகோட்டை போகுதுப்பான்னு, அடப் பாவத்தேன்னு, அசடு வழிஞ்சுகிட்டே, அங்கன குதிச்சு திரும்ப வேற பஸ் புடிச்சு... அதென் ஏன் கேக்கிறீங்க (அதான் சொல்லிப்புட்டேன்ல) போங்க...
அன்னிக்கு க்ளாஸ் மட்டம் வேற போட வேண்டியாத போச்சு... அதில இருந்து எனக்கு ஒரு பாடமும் கிடைச்சுச்சு, இப்ப தென்கச்சி அண்ணன் (கோ. சுவாமிநாதன்) மாதிரி படிச்சுட்டு முடிஞ்சா சிரிச்சு வையுங்க...
உம் அப்றம்......
சந்தனமுல்லை என்பவர் கீழ்காணும் சுட்டியில் புத்தகப் பதிவு போட்டிருக்கிறார், பார்த்து படித்து உங்க கைவரிசையை அங்கு காட்டவும் ;-)
http://sandanamullai.blogspot.com/2006/08/blog-post.html
///*நட்சத்திரக் குறியுடன் இருப்பவை எனக்குப் பிடித்தமானவை //
இந்த கருத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இது ஒரு கண்னில் சுண்ணாம்பு மற்றொரு கண்ணில் வெணனெய போல் உள்ளது.:))
பி.கு. * எனக்கும் பிடித்தமானவை சில...
என்னங்கய்யா, ப.கோட்டை கதையை கை கடுக்க உட்கார்ந்து அடிச்சு உங்ககிட்ட சொன்ன ஒண்ணும் அதெப் பத்தி பேசமாடேங்கிறீங்க...
//எங்க பதிவுல வந்து கதை சொல்லுங்க நான் இங்க வந்து உம்கொட்டுறேன் :))
உம் அப்றம்......//
கதையெல்லாம் முடிஞ்சு ஸ்கீரின் இழுத்து விட்டு மூடியாச்சவோய்... இப்ப இந்த கதையில இருந்து என்ன தெரிஞ்சுகிட்டீக அப்படின்னு சொல்லணும்...
தெகா வின் கதையில் தெரியும் நீதி : எப்பவுமே எக்ஸ்ட்ராவா ஒரு அம்பது ரூபா எடுத்துகிட்டு பஸ்ஸில ஏறனும் அப்பத்தான் சரியான பஸ்ச புடிச்சு ஊருக்கு வரமுடியும்:))
இப்படி நூறு அடித்ததும் சக பதிவரை அம்போவென ரன் அவுட் ஆக்கிய தெகங்குலியை குவாட்டர் கோவிந்தன் வன்மையாக கண்டிக்கிறார்
என்னை நூறுக்கு தள்ளிவிட்டு மேட்சமடையவைப்பதற்கு உறுதுணையாக பக்கத்தில் இருந்து மேற்பார்வை பார்த்து உதவிய எக்ஸ்பிரஸ் அ'சிங்கம், அவர்களுக்கு இந்த பொன்னடைய (கிழிந்து போன, கூவம் ஆற்றில் துவைத்து ரீ-சைக்கில் செய்யப்பட்ட), எங்களூர் இழுத்தடிச்சான் பட்டி அய்யா குரங்குசாமி அவர்களின் சார்பாக, எக்ஸ்பிரஸ் அய்யாவின் மீது சாத்துகிறேன்...
மகேந்திரன்,தெகா..
நின்னு ஆடினா இன்னும் இங்க 14 தான்...
///கிழிந்து போன, கூவம் ஆற்றில் துவைத்து ரீ-சைக்கில் செய்யப்பட்ட), எங்களூர் இழுத்தடிச்சான் பட்டி அய்யா குரங்குசாமி அவர்களின் சார்பாக,//
//இதுக்கு இரண்டு அடி அடிச்சிட்டு போலாம் :D //
ரெண்டு அடி அட்ச மட்டும் அப்படி உட்றபோறீகளாக்கும்... உடனே எழ்ந்துருச்சு சொல்லுவீங்க... இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பான்னு ;-))) திருந்துங்கப்பா...
நீங்கள்லாம் எப்ப நூறு அடிக்கறது, நான் அடிக்க வைச்சுப்புட்டு சோத்துக்கு வழி பாக்கிறது ;-))
//நின்னு ஆடினா இன்னும் இங்க 14 தான்...//
சரியான நேரத்தில் எனக்கு சரியான புத்தி சொன்ன பின்னூட்ட கப்பி பயலே நீ வாழ்க
இப்படி பின்னூட்ட விளையாட்டுக்கு கூப்பிட்டு என்னையும் பின்னூட்ட வலையில் சிக்கவைத்த தெகா, ஜிகே மற்றும் கப்பி மீது போலி பின்னூட்டம் போடலாமா என யோசிக்கிறேன்
சரி இப்ப ஏதானுச்சும் சீரியாச நீங்க கேள்வி கேக்குறீங்க நான் லூசாட்டம் பதில் கொடுக்கிறேன்... எங்க யோசிச்சு ஒரு டாபிக்கோட வாங்க பார்க்கலாம் :-)
சீரியஸான கேள்வி 1: தென்னமரிக்க காடுகளில் வசிக்கும் மிகச்சிறிய குரங்கின் பெயர் என்ன?
//தென்னமரிக்க காடுகளில் வசிக்கும் மிகச்சிறிய குரங்கின் பெயர் என்ன?
//
இதுல ஏதோ உகு இருக்கற மாதிரி இருக்கே??
//நான் லூசாட்டம் பதில் கொடுக்கிறேன்... //
எப்பவும் போல? :)))
உள்குத்தா ?
இல்லய்யா இல்ல
//உள்குத்தா ?
இல்லய்யா இல்ல //
அதானே பாத்தேன்...
தெகா...பதில் சொல்லுங்க
கப்பி இனிமேத்தான் நாம சாக்கிரதையா இருக்கனும் 100 நெருங்கியாச்சு அய்யா ரன் அவுட் ஆனாலும் ஆவாரு அப்பப்ப வந்து பைரன் நீதான் எடுக்கனும்
லெக் பை உண்டா??
லெக் பை உண்டா??
லெக் பை உண்டா??
//சீரியஸான கேள்வி 1: தென்னமரிக்க காடுகளில் வசிக்கும் மிகச்சிறிய குரங்கின் பெயர் என்ன?//
இதெல்லாம் ஒரு கேள்வியா... சரி சரி உங்களுக்கு விடை முன்னமே தெரிஞ்சுருக்கும் இருந்தாலும் இந்தாங்க நேசியின் பதில் ... பிக்மி மர்மோசட் (piggmy mormoset)." இதன் நீளம் 35 செ.மீ, எடை 100 கிரமிக்குள்...
சரி உங்களுக்கு ஒரு கேள்வி இது தொடர்பாகவே... புலிக்கும் சிங்கத்துக்கும் பிறந்த குட்டிய எப்படி கூப்பிடுறாங்க?
கண்டிப்பா ஆனா அதுவும் தேர்ட் அம்பையர் தான் முடிவு பன்னுவார்
ஒரே ஒரு கேள்வி கேட்டதுக்கு ஆளு எஸ்கேப்பா?
Fruit Eating Foxங்கிறது என்னா?
Megabats constitute the suborder Megachiroptera within the order Chiroptera (bats). They include the single family Pteropodidae. Often they are called fruit bats or Old World fruit bats.
While the microbats are distributed over all continents (excluding Antarctica), the megabats live only in tropical areas of Asia, Africa and Oceania.
Not all megabats are large: the smallest species is 6 cm (2 inches) long and thus smaller than some microbats. The large flying foxes are 40 cm (16 inches) long and have a wingspan of 150 cm (5 feet). These giants are almost 1 kg (2 pounds) in weight. Most megabats have large eyes enabling them to orient in the twilight and inside caves. The sense of smell is excellent. In contrast to the microbats the megabats do not use echolocation though one species is the exception, the Egyptian fruit bat Rousettus egyptiacus which uses high pitched clicks to navigate in caves.
அட 100 வந்தாச்சா??
//Fruit Eating Foxங்கிறது என்னா?
//
பழம்தின்னி நரி ..கரீட்டா? :))
புலிக்கும் சிங்கத்துக்கும் பிறந்த குட்டி லைகர்
இது மாதிரி எங்க இருந்தாவது பிட் அடிச்சு பத்தி பத்தியா எழுதக்கூடாது..
நூறு போட்ட வளைகுடா நாட்டு முடிசூடா மன்னன், சவூதி அரோபியாவின் ஆயில் தந்தைக்கு எனது 100 பின்னூட்ட வாழ்த்துக்கள்...
எங்கேயிருந்தோ சுட்டு கொண்டாந்து இப்பிடி பேஸ்ட் பண்ணதால நான் ஆட்டத்தில இருந்து அம்பேல்... :-)))
நான் கேட்டது தென்னமரிக்க காட்டுல உலகத்துலெயே கிடையாது
111...யாரும் வந்து நாமம் போடாம் இருந்தா சரி
//லைகர் //
அட ஆமா..
சீரியஸ் கேள்வி 2. அல்பட்ரொஸ் பறவை எத்தனை ஆண்டுகளில் இணை சேரும்?
//புலிக்கும் சிங்கத்துக்கும் பிறந்த குட்டி லைகர் //
சரி சரி, இந்த் இண்டெர்னெட், அனிமல் ப்ளானட்லாம் வந்ததும் வந்துச்சு, ச்சே ச்சே... ;-))
சரி இப்ப இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்... போர்னியோ காடுகளில் உள்ள ஒரு வாலில்லா குரங்கின் பெயரை குறிப்பிடுக... 5 மதிப்பெண்கள்.
//சீரியஸ் கேள்வி 2. அல்பட்ரொஸ் பறவை எத்தனை ஆண்டுகளில் இணை சேரும்?
//
தெகா கூட சேர்ந்து நீங்களும் இப்படி ஆயிட்டீங்களே :(
//கப்பி உங்கள பத்தி கேட்டுருக்கார்:)) //
நோஓஓஓஓ...
//monkey of borneo
///
ஓஓஓஓ...
/சீரியஸ் கேள்வி 2. அல்பட்ரொஸ் பறவை எத்தனை ஆண்டுகளில் இணை சேரும்?//
யய்யக்கள, உங்களுக்கு தெரியாத கேள்வியா கேளுங்கய்யா, பொசுக்கு பொசுக்குன்னு ஆன்லைன்லெ தேடி இப்பிடி அனியாயத்திற்கு புத்திசாலிகளா இருக்கீங்களே... :-))
இது காப்பி அடிக்கிறமாதிரிதான்...அரை மதிப்பெண் கூட உங்களுக்கு கிடையாது...
இரண்டு வருடத்திற்கு ஒருமுறை அவை சேருகின்றன. இரண்டு மாதங்கங்கள் அடைகாப்பிற்கு பிறகே, குஞ்சுபரிப்பு நடைபெறுகிறது.
இந்த பறவைகள் வலசை போதலில் ரொம்பக் கெட்டிக் காரர்கள்!!
//எல்லா டி.வி.டி.யும் இருக்கு எஙிட்ட//
அந்த 600-700னு சொன்னீங்களே..மொத்தம் இதுதானா..
//நான் கேட்டது தென்னமரிக்க காட்டுல உலகத்துலெயே கிடையாது//
அமேசான் காடுகள் எங்கேகண்ணா இருக்கு... அங்கேதாணுங்கண்ணா இந்த் பிக்கி இருக்கிறான்... :-)))
நான் ரொம்ப நல்லவனுங்க காப்பியெல்லாம் அடிக்கல இந்த கேள்வியே நான் பி.பி.சி யோட லைப் ஆப் பேர்ட்ஸ் பாத்து கேட்டது தான் டேவிட் அட்டன் பரோன்னா எனக்கு உசிரு என்னப்போயி காப்பின்னு சொல்லிட்டீங்களே இது நாயமா?
3. சரி அடுத்த கேள்வி ப்ளாடிபஸ் எப்படி பால் குடுக்குது?
நான் நம்பறேன் மகேந்திரன் :)
//டேவிட் அட்டன் பரோன்னா //
மட்டன் பரோட்ட தெரியும்..இது என்ன அட்டன் பரோ?? :)))
//யாம் 2 அரை மதிப்பெண்கள் வழங்குகிறோம்... ;-))) ஜஸ்ட் பாஸ்...
//
ஆத்தா நான் பாஸாயிட்டேன்...
/ப்ளாடிபஸ் எப்படி பால் குடுக்குது? /
ரொம்ப மாடர்னா மாட்டுக்கு பேர் வச்சிருக்கீங்க..வழக்கமா மூக்கா,முருகா-னு தானே வைப்பாங்க..:D
இதுக்கும் நீங்களே பதில் சொல்லிடுங்களேன் ஹி ஹி ..
//மட்டன் பரோட்ட தெரியும்..இது என்ன அட்டன் பரோ?? :)))//
கப்பியோட கேள்விய பாத்தீங்களா தெகா நீங்க என்னப் போயி மிருக கடத்தல் காரன்னு சொன்னீங்க?
//நீங்க என்னப் போயி மிருக கடத்தல் காரன்னு சொன்னீங்க? //
அட அது அறிவுப்பசில கேட்ட கேள்வி..நான் முட்டை கூட சாப்பிட மாட்டேன்..தெகா நம்புங்கோவ்வ்வ்வ்..
எனக்கு இன்னும் 3 இருக்கு..ஆளுக்கு ஒன்னா போட்டுக்கலாம்...என்ன சொல்றீங்க?
//ரொம்ப மாடர்னா மாட்டுக்கு பேர் வச்சிருக்கீங்க..வழக்கமா மூக்கா,முருகா-னு தானே வைப்பாங்க..:D//
:))))))))))))))))))))))))))))))0
:))))))))))))))))))))))))))))))0
//நான் முட்டை கூட சாப்பிட மாட்டேன்..தெகா நம்புங்கோவ்வ்வ்வ்.. //
அடடா கலைஞர் போட்டது ரெண்டு வேஸ்டா பூடுச்சே ஒரு வேளை பேப்பர்ல மட்டும் வாங்குனா போதும்னு முடிவு பன்னியாச்சா?
/சரி அடுத்த கேள்வி ப்ளாடிபஸ் எப்படி பால் குடுக்குது?//
ஆத்தாடி இப்பிடி ஒரு கேள்விய கேட்டு வாத்தியார வீட்டுக்கு அனுப்பி வீட்டு பாட செய்ய வச்சுப்புட்டாகளே... வெவகாரமான ஆளுதாப்ப நீங்க...
தெரிஞ்ச நீங்களே சொல்லிபுடுங்க...
/Barbary Ape??
இதான் முதல்ல கிடைச்ச பதில்.. //
ரெண்டு பேருமே மாட்டீனீங்கள, அந்த கேள்விக்கு விடை கிடைக்காம...
இதில வேற டிஸ்கஷன் வேற... ;-))))
போர்னியோவில இருக்கிற நம்ம சொந்தக்காரர் வந்து ஒரங்குட்டன்... ;-) அங்கே மட்டுமே காணப்படுகிறார்... அதுவே அவரின் சிறப்பு
குறைவான கயமைத் தனத்தில் (33%) 100 அடிக்க உதவிய 'விலங்கியல் வேந்தன்' தெகாவிற்கும் 'பல்கலை பயில்வான்' மகேந்திரனுக்கும் நன்றி..நன்றி
//அதன் உடலின் மயிர்கால் களின் வழியே சுரக்கும் ஒரு திரவத்தை பாலாக ஊட்டுகிறது கொழுப்புச்சத்து நிறந்தது அப்பால் //
பேரு??
அதன் உடலின் மயிர்கால் களின் வழியே சுரக்கும் ஒரு திரவத்தை பாலாக ஊட்டுகிறது கொழுப்புச்சத்து நிறந்தது அப்பால் (உபயம் பி.பி.சி. ட்ரயல்ஸ் ஆப் லைப்- டேவிட் அ.பரோ)
//நம்மூரில் காட்டுக்கழுதைகள் எங்கு காணப்படுகின்றன?//
மெட்ராஸ்ல ஒரு இடம் ஞாபகம் வருது...வேணாம் உசுரு மேல கொஞசம் ஆசை இருக்கு :D
நன்றிங்கோவ் மகோ, இன்னொரு கேள்வியோட இன்னைய விளையாட்ட முடிச்சுகிறேன்...
நம்மூரில் காட்டுக்கழுதைகள் எங்கு காணப்படுகின்றன? 10 மதிபெண்கள் சொல்லிவிட்டு நீங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுக்காம நிறந்து எடுத்துக்கோங்க, சமர்த்தா... ;-))
உங்க பதிலுக்கு மக்கள் என்னை அடி பின்ன போறாங்க :)
இந்தியாவெங்கும் காணப் படுகின்றன சில துபாய்க்கும் உருகுவேக்கும் அமெரிக்காவுக்கும் வேலை நிமித்தம் சென்று விட்டதால் இப்போது உலகமெங்கும் காணப் படுகின்றன மேலும் சில சிங்கப்பூர் , தாய்லாந்து மலேசியா, ஜெர்மனி பாரிஸ் என்ற பறந்த உலகில் இந்தியக் கழுதைகள உலகமெங்கும் காணக் கிடைக்கின்றன
எப்பிடி என்னோட கடைசி பதில் இன்னைக்கு :)
நெசமாவே பதில் தெரியலீங்கோவ்
/எப்பிடி என்னோட கடைசி பதில் இன்னைக்கு :)
நெசமாவே பதில் தெரியலீங்கோவ்
//
நீங்க சொல்றமாதிரி கழுதைங்க நிறைய திரியுது, என்ன மாதிரி.
நான் கேட்டது "அக்மார்க்" wild asses, அவைகள் குஜராத்தில் "ரன் அஃப் கட்ச்" எனுமிடத்தில் மட்டுமே காணப்படுகின்றன.
நீங்க சொல்ற காட்டுக் கழுதைகள் ஊரெலாமிருக்கு அதுகென்ன பஞ்சம் ;-)))
நன்றி தெகா, கப்பி நாளை வேறு ஒரு அறிவியல் கேள்விபதிவில் சந்திப்போம்
பின்னூட்ட முயல் தெகா உருகுவே மான் வேட்டை புகழ் கப்பி இருவருக்கும் நன்றி
138
இது நீங்க கேட்ட கேள்வி...//எல்லாம் சரிதான் நியான்டர்தால் மனிதன் அப்டீனு ஒரு செட்டே திடீர்னு காணாம போச்சே அவங்கதான நம்மக்கு ரொம்ப நெருங்கின சொந்த காரங்க //
ஆம, ஆம, இவங்க 40 ஆயிரம் வருஷத்திக்கு முன்பு வரை நம் கூடத்தான் வாழ்ந்திருக்காங்க, Homo Neandarthalis அப்படின்னு சொல்லிகிட்டு. கொஞ்சம் பருத்த புஷங்களும், பெரிய பட்டையான பற்களும், அகண்ட மண்டையுமா. ஐரோப்பா கண்டத்தில உள்ள குகை சார்ந்த பகுதிகளில் வசிச்சு இருக்காங்க, அப்படின்னு படிச்சதா ஞாபகம் இருக்கு.
ரெண்டு மூனு தியரி இருக்கு இவங்க எப்படி காணமல் போயிருக்கலாம் இந்த பூமிய விட்டேன்னே... அ) நம்ம ஆட்கள் கொண்டு (மாடர்ன் ஹோமோ செபியன்ஸ்) போய் கொடுத்த புது வித நோயகள் ஆ) இல்லென்னா அவங்களொட உடல் ஆரோக்கியமில்லாமயே அவங்களுக்கு எதிரியா திரும்பினது இ) இல்லென்னா நம்ப மக்கள் அவங்களை சந்திச்சப்ப ஏற்பட்ட போட்டி, அடிதடிச் சண்டை மறைமுகமா உணவுக்காக, மற்ற தேவைகளுக்காகவும், இல்லென்னா இனக்கலப்பு செஞ்சு ஒரே மனித இனமா ஆக்கவும் வாய்ப்பு இருந்திருக்கலாம்.
இப்பவும் அவனுங்க அப்படித்தானேப்ப இருக்காங்க... சில பேரு நல்ல பெரிய உருவமா... எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு ;-))
எது எப்படியோ, நியான்டர்தால் மனித வகை மண்டையோடுகள் ஈ.பேயில் $150 கிடைக்கிறதாம்...
இன்னும் கேள்விகள் இருந்தால், பழைய *நேசி* பதிவுகளிலிரருந்து, படித்துவிட்டு, கேள்விகளை எழுப்பலாம் ;-)) (மக்கள் நல்ல விசயங்களை படிக்க அஞ்சுவதால்). இப்பொழுது சற்று வேலைகள் இருப்பதால் பிறகு சந்திக்கிறேன்...
Post a Comment