குவாட்டர் கோவிந்தனின் சொந்த ஊரில் ஆண்டுதோரும் நடக்கும் தைத்திருவிழாவை முன்னிட்டு நண்பர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
கோவிந்தனை போலவே நண்பர்களும் நல்லவர்கள் என்பதால் அவர்களுக்கு தாகம் போக்க கையில் காசு வேண்டுமே என்று யோசித்தவர் கணக்கு போட்டு பார்த்துவிட்டு ஆத்தாடி எம்ம்பூட்டு பேரு வருவாய்ங்க நமக்கு கட்டுபடியாகாதுல்ல எனும் முடிவுக்கு வந்தவ்ர் சரி இதுக்கு நம்ம நாட்டு சரக்குதான் சரி காய்ச்சிட வேண்டியது தான் எனும் முடிவுக்கு வந்தார்.
மூலப் பொருள்களான வெல்லம், கருவேலம் பட்டை , வாழைப் பழம், மற்றும் கொஞ்சூண்டு கடுக்காய் தூள் எல்லாம் ரெடிசெய்ய வேண்டுமே யாரை பார்த்து ஒப்பேத்துவது என்று யோசித்தவருக்கு சாடி யின் ஞாபகம் வந்தது . மாயமூர்த்தியின் அப்பாதான் சாடி வீரமுத்து. இந்த சாடி வந்த கதை நம் கதைக்கு வேண்டாம் என்பதால் அவர் அவுட் ஆப் போகஸில் விட்டு விட்டு மாயமூர்த்திக்கு போகஸ் பன்னுவோம்.
மாயமூர்த்தியும் கோவிந்தனும் நல்ல நண்பர்கள். மாயமூர்த்தி (இனி சுருக்கமாக மாமூ) மீன் பிடிப்பதிலும் நல்ல சாரக்கு காய்ச்சி நண்பர்களுக்கு தருவதிலும் உடையாருக்கு அடுத்தபடி (அதாம்பா நம்ம சாராய உடையார் பேக்டரில்லாம் வச்சிருந்தாரே) திறமையானவன். அவனிடம் போய் விஷயத்தை சொன்னதும் மச்சான் நீ ஒன்னும் கவலப்படாத நாம எல்லாத்தையும் சரியா செஞ்சு முடிக்கலாம் முதல்ல வெல்லம் வாங்க பணம் வேணும்னு கேட்டான் சரின்னு கோவிந்தனும் ஒரு 200 ரூபா குடுத்தார்.
வேலம் பட்டை வேனும் அதை நாம இன்னிக்கு ராவுல போயி காட்டுல இருக்க மரத்த பாத்து உரிக்கலாம்னு சொல்லிட்டு போய்ட்டான். சரி அதை பகல்ல உரிச்சா என்னா?.
ராத்திரி ஏன்னா மரத்துக்காரன் பாத்தா நம்மாளுங்க பட்டைய உரிச்சுபோடுவான்ல அதுக்குத்தான் வேல மரத்தில பட்டைய உரிச்சிபுட்டா அதுக்கப்புறமா அந்த மரம் சரியா வளராது . சரி இனிக்கு நைட்டு நம்ம கதி அதோகதிதான் போலன்னு நெனைச்சுகிட்டே வாழைப் பழமும் கடுக்காய் தூளும் வேணுமே அதை வாங்கிட்டு வரலாம்னு திட்டக்குடிக்கு கோபால் கடைக்கு போனாருங்க.
இந்த கடுக்காய் தூளு இருக்கே அது வைத்தியத்துக்கும் பயன் படுதுங்க அதனால நெரையா மளிகை கடைகள்ளயே கிடைக்கும் அது ஒரு கால்கிலோ வாங்கிட்டு நம்ம திட்டக்குடி பஸ்டான்ன்டு பக்கத்துல இருக்க காய்கறி பழக்கடையில ஒரு சீப்பு வாழப்பழமும் 1 கிலோ திராச்சையும் கொஞ்சூண்டு பேரீச்சம் பழமும் வாங்கிட்டாரு. அங்க இருந்து நேரா வீட்டுல யாருக்கும் தெரியாம எல்லா சாமானையும் வச்சுட்டு நேரா மாமூவ பாக்க போனாரு.
ராத்திரி வேலம் பட்ட உரிக்க வெளேரி(வெள்ளரி விளைந்த காடு மருகி) போகனுமே அதுக்கான ஏற்பாடு பன்னனுமில்ல போனாரு. அங்க மாமூ இல்ல மாமூவோட தங்கச்சி தான் இருந்தது நம்மாளுக்கு அது மேல ஒரு இது. அதுக்கும் கொஞ்சம் இது இருந்தது எங்க மாமூஇல்லயான்னு அதுகிட்ட கேட்டாரு அதுக்கு இப்பத்தான் இங்க இருந்தாரு இப்ப வருவாரு உள்ள வாங்கன்னு சொல்லிட்டு உள்ள போயிடுச்சு
. இவருக்கு ஒன்னும் புறியல இவன் எங்க போயிட்டான் வருவானா மாட்டானான்னு ரோசனை பன்னிகிட்டே உக்காந்தாரு உள்ள போன மாமூ வோட தங்கச்சி திருப்பி வந்து எதுக்கு எங்கண்ணன தேடுறீங்கன்னுது
அதுக்கு சொனாரு ஒன்னுமில்ல ஒன்ன பொண்ணு கேக்கத்தான்னு சொன்னாரு அட எல்லாம் ஒரு பிட்டப் போட்டா எதிர்விணை என்னான்னு தெரிஞ்சிக்க ஒரு நப்பாசைதான். அதுக்கு அந்த புள்ள வெக்கத்தோட சொல்லுச்சி... அதுக்கு என்னையல்ல கேக்கனும் எங்கண்ணன கேட்டு அதுவா ஒன்னிய கட்டிக்கும்னு சொல்லுச்சி.
நம்மாளுக்கு வாங்கிவச்ச வாழைப்பழம் சரக்காவே கிடைச்சப்புல ஒரே மப்பு தலைக்கேறி கிர்ரடிச்சி போட்டாரு .... சரி சரி புள்ளைக்கும் நம்ம மேல ஒரு இது இருக்கு போலன்னு நெனைச்சுகிட்டு உங்க அண்ணன் வந்தா வீட்டுக்கு வரச்சொல்லுன்னு சொன்னாரு.
அந்த புள்ள அதுக்கு நாஞ் சொல்லுறன் ஆனா நீங்க ஒன்னுமே சொல்லாம போறீங்களேன்னு ஒரு இழு இழுத்திச்சு. நம்மாளுக்கு ஒன்னும் புறீல என்னா சொல்லன்னு கேட்டாரு அந்த புள்ள தலையில அடிச்சுகிட்டே இல்ல எங்க அண்ணங்கிட்ட என்னமோ சொல்ல வந்தீங்களே அதை ஏங்கிட்ட சொல்லக்கூடாதான்னு கேட்டுது. .
நம்மாளும் ஒன்னுமில்ல இன்னிக்கு ராத்திரி நாங்க ரெண்டுபேரும் வேலம்பட்டை உரிக்க போறம் அதுக்கு சொல்லத்தான் வந்தேன்னு சொல்லவும் அந்த புள்ளைக்கு கண்ணுல இருந்து கண்ணீரா கொட்டுது இதென்னடா வம்பாப்போச்சி அவங்க அண்ணங்கிட்ட இதத்தான சொல்ல வந்தோமின்னு நினைச்சுகிட்டே ஒன்னும் புறியாம முழிச்சாரு.
அப்ப என்கிட்ட சொன்னதெல்லாம் பொய்யான்னு கேட்டுது இப்பத்தான் புரியுது நம்மாளுக்கு ஆஹா நாம தப்பா ஒரு பதிலச்சொல்லி நம்மாளு அளுவுதேன்னு நினைச்சிகிட்டு இங்க பாரு நான் நெசமாலுமே ஒம்மெல ஒரு இது வச்சிருக்கன் நீ சொன்னா சரிதான்னு சொல்லிபூட்டு சைக்கிள எடுத்துகிட்டு உட்டாரு ஒரு ஓட்டம் அந்த புள்ள இந்த பதில கேட்டு சிரிக்குதா அழுவுதான்னு கூட பாக்கல
இவரு வேகமா போகவும் மாமூ எதுத்தாப்ல சைக்கிள்ல வரவும் சரியா இருந்தது. சரி என்னடா எங்க போனன்னு கேட்டதுக்கு இல்ல மச்சான் நம்ம இன்னைக்கு நைட்டு போகலாம் ஆனா நான் வரமுடியாதுன்னு சொன்னான் ஏண்டான்னு கேட்டதுக்கு இல்லமச்சான் இன்னிக்கு எனக்கு கொஞ்சம் வேலை யிருக்கு நாம நாளைக்கு போகலாமேனு சொன்னான் சரி அவனுக்கு என்ன கஷ்டமோ நாம நாளைக்கே போலாம்னு சொல்லிட்டு நம்மாளு வந்துட்டாரு.
மறுநா போயி எல்லாம் உரிச்சு கொண்டுவந்தாங்க வெல்லத்தபாணையில போடு வேலம் பட்டைய அதுல போட்டு வாழபழம் , கடுக்கா தூளு, இன்னும் இருக்க பழமெல்லாம் போட்டு பாணைய ஊறல்ல போட்டாங்க அது ஆச்சு ஒரு ஆறு நாளு நல்லா வாசன ஏரியாவையே தூக்குது மாமு சொன்னாரு
மச்சான் நாம இன்னிக்கு நைட்டு காய்ச்சி எடுக்கலாம்டானு சொன்னாரு. சரி நாளான்னிக்கு திருவிழா இன்னிக்கு காச்சினாத்தான் சரியா இருக்குமின்னு முடிவு பன்னி அவரோர பிரண்டு ஒருத்தர் பிரபுன்னு பேரு அவர ஊரில இருந்து வரசொன்னாரு அவனும் மத்தியானமே வந்து எங்க சரக்கு எங்க சரக்குன்ன் பட்டிகாட்டான் முட்டாய் கடைய பாத்தாப்புல அலையுரான்
இருடா இன்னிக்கு ராவுக்கு காச்சி குடிக்கலாம்னு சொல்லி சமாதானம் பன்னி அவனையும் காச்ச கூட்டு சேத்தாங்க. ராவுக்கு மூனுபேர்ரு இருந்தாத்தான் வசதி ஒராளு அடுப்பு தள்ள ஒராளு தண்ணி மாத்த ஒராளு சரக்கு சரியா இறங்குதான்னு டெஸ்ட் பன்ன. சரின்னு மூனுபேரும் போனாங்களா.
வழியில இருட்டுல கிடந்த நாய்க்குட்டிய நம்ம பிரபு மிறிச்சிட்டான் போல அது வீல்னு கத்திகிட்டே ஒரு சின்ன கடிகடிச்சது லைட்டடிச்சு பாத்தா நல்லவேளை காயம் எதுவும் இல்ல
. போனாங்க் மூனுபேரும் ஊரல்ல கிடந்த பானைய எடுத்து அடுப்புல வச்சாங்க அதுமேல ஒரு ஓட்டை பானைய வச்சு சுத்தீலும் நல்லா மண்ணக் கொழச்சு மூடி அதுமேல ஒரு பாத்திரத்துல தண்ணிய வச்சு நம்ம கிராமத்துல இருக்குமே அடுக்கு பாணைங்க அந்த மாதிரி செஞ்சாங்க
இப்ப நடுவில இருக்க பானைல ஒரு சின்ன தட்டும் அதுல ஒரு குழாயும் போடு சரக்க புடிக்கிற கேனுல விட்டாங்க . அடுப்ப பத்தடிச்சு நல்லா ஆவிவர ஆரம்பிச்சது. இப்ப மேல இருக்க பாணையில தண்ணியிருக்கா அத்னால போர ஆவி தண்ணியாகையில குழாய் வழியா சரக்கு வரும்.
இதுல மேல இருக்கிர தண்ணிய அடிக்கடி மாத்தனும் தண்ணி ரொம்ப சூடேரிப் போனா சரக்கு இரங்காது. எல்லா வேலையும் முடிஞ்சி பாத்தா 10 லிட்டர் சரக்கு இருந்துது அதை அப்படியே ஆளுக்கு ஒரு டம்ளர் சப்பிட்டு மிச்ச ச்ரக்குல ஒரு அஞ்சுலிட்டர் தண்ணி கலந்து வச்சாங்க இல்லன்னா அதிகம் குடிக்க முடியாது தொண்டை எரியுமில்ல அதனால எல்லா பத்திரத்தையும் எடுத்து கழுவி வச்சுட்டு வீடுக்கு போனாங்க.
மறுநாள் நம்மாளு மாமூவோட தங்கச்சிகிட்ட வெகுநேரம் பேசிகிட்டிருந்தாரு என்ன பேசுனாங்க ஏதுன்னு யாருக்கும் தெரியாது.
அதுக்கு அடுத்த நாள் திருவிழா. எல்லா ப்ரண்ட்ஸும் வந்து நல்லா சரக்கு சாப்பிட்டு கூத்து பாத்தாங்க ஆனா நம்மாளு சரக்கு வேண்டாமின்னு சொல்லிட்டாரு ஏன்னு கேட்டதுக்கு
சரக்கடிச்சா என்கூட பேசமாட்டேன்னு அந்த புள்ள சொல்லிட்டுதுன்னு ஒரே புலம்பல்..
அதுக்கப்புறம் ஒரு ரெண்டு மூனு வருசம் சரக்கு சாப்பிடாமலே இருந்தாரு



19 comments:

Unknown said...

இது ஒரு தொடர் வாரம் ஒன்று வீதம் வளரும் :)

முத்துகுமரன் said...

வளரட்டும். வாசனையா இருக்கே காதல் கதை :-)

மகேஸ் said...

இதுல பேட்டரிய உடச்சு அந்தக் கரித்தூளைச் சேர்ப்பாங்களே, அத விட்டுடீங்க போல.

அப்புறம் பத்துலிட்டர் சரக்கு கிடைக்கத் தேவையான மூலப்பொருட்களின் அளவையும் தப்பாச் சொல்லியுருக்கீங்க. :))

மகா ஜனங்களே, குடிகாரப் பயலேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க.

கிராமத்துல எங்க தாத்தாவுகுச் சொந்தமான கருவேலங்காட்டுக்குள்ள ஊருல இருக்குற குடிகாரப் பயலுக எல்லாம் சேர்ந்து ஊறல் போடுவாங்ய்க.
சின்ன வயசில அப்பப்ப நானும் சேர்ந்து அதை பார்த்திருக்கேன்.

Unknown said...

//வளரட்டும். வாசனையா இருக்கே காதல் கதை //

இது கொஞ்சம் நிஜக் கதை முத்துகுமரன் நன்றி

//இதுல பேட்டரிய உடச்சு அந்தக் கரித்தூளைச் சேர்ப்பாங்களே//

பேட்டரி கரித்தூள் எல்லாம் விக்கிற சரக்குக்கு இது எங்களுக்குன்னு போட்ற ஷ்பெஷல் அதால ரொம்ப சுத்தமாத்தான் செய்வோம்

//மூலப்பொருட்களின் அளவையும் தப்பாச் சொல்லியுருக்கீங்க. //

அட நீங்க வேற அளவ நான் எங்கியாவது சொல்லீருக்கனா? நீங்க அதுக்குல்ல ஊழல் குற்றச்சாட்டு சொல்றீங்க :)

நன்றி மகேஸ்

கோவி.கண்ணன் said...

மகி ...
அட தொழில் ரகசியமாக இருந்தாலும் கதையில் நல்ல 'சரக்கு' இருக்கு :)

Unknown said...

//கதையில் நல்ல 'சரக்கு' இருக்கு //

இப்பவே கிக் ஏறுதே ஏண்டா என் கதைய வலிய வலைல எழுதறன்னு கோவிந்தன் கோவிச்சுக்கிறார்.:)

நன்றி ஜி.கே

கோவி.கண்ணன் said...

//இப்பவே கிக் ஏறுதே ஏண்டா என் கதைய வலிய வலைல எழுதறன்னு
கோவிந்தன் கோவிச்சுக்கிறார்.:)//
கோவிந்தன் நல்லா சரக்கு அடிச்சிட்டு கவுரும் போது கதையை வலையில் 'ஏத்திவிடுங்க'

Hariharan # 03985177737685368452 said...

மகேந்திரன்,

கதைக்கான களமும், தயாரிக்கப்படும் பொருளும் தங்களது இப்பதிவைப் படிக்கும் போது எல்சிடிமானிட்டர் மேஜையில் தங்காமல் ஆடுற மாதிரி இருக்கே :-)))

Unknown said...

//எல்சிடிமானிட்டர் மேஜையில் தங்காமல் ஆடுற மாதிரி இருக்கே //

எல்சிடி மானிட்டர் ஆடாமல் இருக்க வேறு மானிட்டருக்கு மாறவும் :))
நன்றி ஹரிஹரன்

//கோவிந்தன் நல்லா சரக்கு அடிச்சிட்டு கவுரும் போது //

எங்க தலைவர் என்னிக்கு கவுந்தாலும் என்னையுமில்ல கவுக்கறார்

aathirai said...

என்ன தொழில் நுட்பம்! ஆஹா.
கதை இன் ட்ரெஸ்டிங்காக இருந்தது. இப்படி வீட்டில காச்சுறத
விட்டு ஏன் கள்ளச் சாராயம் வாங்கி குடிக்கறாங்கன்னு யோசிச்சுட்டு
இருக்கேன்.

Unknown said...

/இப்படி வீட்டில காச்சுறத
விட்டு ஏன் கள்ளச் சாராயம் வாங்கி குடிக்கறாங்கன்னு யோசிச்சுட்டு
இருக்கேன். //

ஆதிரை இதுல யோசணையே வேண்டாம் வேணும்னா சொல்லுங்க ஒரு ரெசிபி புக் அனுப்பி வ்வைக்கிறேன் ---- :)-

கப்பி | Kappi said...

கதை பட்டையை(!!)க் கிளப்புது :))

Unknown said...

/கதை பட்டையை(!!)க் கிளப்புது :)) //


பாத்து கப்பி ஓவரா கிளப்பி வேர எதையாவது கிலப்பிடப் போகுது :))

Thekkikattan|தெகா said...

தெகா ஊருக்கு எப்ப வரீங்கன்னு மட்டும் சொல்லுங்க (நான் அப்ப ஊர்ல இருந்தா) சிலேபியும் குறவையும் , கெளுத்தியும், ஆரா மீனும் நம்ம கிணத்து பெசல் ஒரு கட்டு கட்டலாம்ல ஆமா வர்ரேன்னு சொன்னீங்க இன்னமுங்கானும்? //

படிச்சுட்டு போடுறதா இல்லை படிக்கமா போடுறதா? ;-))

ஒரு கட்டு கட்டலாந்தேன்... இந்த பச்சை நோட்டு தரித்திரியம் ஒழிய மாடேங்கிதே...

இலவசம் என்னமோ ஒரு பதிவு சாடையா உங்களுக்கு கொடுத்திருக்காரு, பார்த்தீங்களா?

Unknown said...

//இலவசம் என்னமோ ஒரு பதிவு சாடையா உங்களுக்கு கொடுத்திருக்காரு, பார்த்தீங்களா? //

அதெல்லாம் போயி பாத்து கணக்க சொல்லிபுட்டு வந்தாச்சில்ல :))

Thekkikattan|தெகா said...

படிச்சிட்டேன், இப்ப சொல்லுங்க இந்த சரக்கு தயாரிச்ச ஆசாமி யாரு... ஹி..ஹி... மண்ணின் வாசம் மூக்கை தொளைக்குதப்பா...

போலீஸ்... போலீஸ்... நான் இல்ல சாமீ ஒரு ஆளு எனக்கு மீன் கொழம்பு வச்சு தாரேன்னு இங்கன இட்டாந்து, சரக்கு காச்சுறது சொல்லித்தாரப்புள.... ஹூம்ம்ம்ம்...ஹும்ம்ம் வுட்டுறுங்க சாமீ இந்த பக்கம் இனிமே வரமாடேன் ;-)))

Unknown said...

எல்லாம் உங்ககிட்ட கத்துகிட்டதுதானுங்க தெகா நீங்க தூண்டில் போட்டீங்க நான் மீனப் போட்டேன்

Thekkikattan|தெகா said...

சரக்கு மாஸ்டர் இருக்கார? இன்னும் நியான்டர்தால் தீசிஸ் உங்ககிட்ட சப்மிட் பண்ணதுக்கு பதில காணணோம், புலி வேட்டை பத்தி சொன்னதுக்கு இன்னும் துப்பாக்கி தரல...

Unknown said...

தெய்வமே தெகா விளக்கின உங்கள கொழப்பாம விடுவேனா அடுத்த கேள்வியோட இதோ வந்துட்டே இருக்கேன்