சற்றே பெரிய பதிவு

பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார்
( 1919- 25)

தங்களின் உடல், மன, ஒழுக்கத் திறன்களை அனைவரும் வளர்த்துக் கொள்ள அனைத்து ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதே பெரியார் ஈ. வெ. ராமசாமி
( 17-9-1879 - 24-12-1973) அவர்களின் அடிப்படைத் தத்துவம். இந்த இலக்கை எட்ட, மக்களிடையே நிலவும் அனைத்து வகையான வேறு பாடுகளுக்கு முடிவு கட்டி, சமூக நீதி உணர்வையும் பகுத்தறிவுக் கண்ணோட்டத்தையும் வளர்க்க அவர் விரும்பினார்.
தனது கொள்கைளை நடைமுறைப்படுத்த, சென்னை ராஜதானி சங்கத்துடன் 1917- ஆம் ஆண்டில் பெரியார் தன்னை தொடர்பு படுத்திக் கொண்டார். பார்ப்பனல்லாதவர்களுக்கும் , சிறுபான்மை சமூக மக்களுக்கும் இழைக்கப்பட்ட அநீதிகளைக் களையும் நோக்கில் இட ஒதுக்கீடு அளிக்கும் ஜாதி பிரதிநிதித்து வம் அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்று இந்த சங்கம் வேண்டுகோள் வைத்துப் போராடியது.

தேசிய காங்கிர° கட்சியை மகாத்மா காந்தி
( 1869- 1948) வழி நடத்திச் சென்ற
1919- ஆம் ஆண்டில் பெரியார் காங்கிரசில் சேர்ந்தார். ஈரோடு நகராட்சித் தலைவர் பதவி உள்ளிட்ட அப்போது அவர் வகித்து வந்த
29 பொதுப் பதவிகளையும் அவர் துறந்தார். நல்ல லாபம் கிடைத்துக் கொண்டிருந்த தனது மளிகை மற்றும் விவசாயப் பொருள்கள் மொத்த வியாபாரத்தையும் கைவிட்டார்; அப்போதுதான் புதிய தாகத் தொடங்கப் பட்ட தனது நூற்பாலையையும்அவர் மூடிவிட்டார். காதி பயன்படுத்தும் பழக்கத்தை பரப்புவது, கள்ளுக்கடை மறியல் செய்வது அந்நிய நாட்டுத் துணி விற்கும் கடைகளைப் புறக்கணிப்பது, தீண்டாமையை ஒழிப்பது போன்ற ஆக்கபூர்வமான செயல்திட்டங்களைப் பெரியார் முழுமனதுடன் ஏற்றுத் தீவிரமாகச் செயல்பட்டார்.
1921-இல் கள்ளுக் கடை மறியல் செய்ததற்காக அவர் ஈரோட்டில் சிறைத் தண்டனை பெற்றார். அவரின் மனைவி மற்றும் சகோதரி ஆகியோரும இப் போராட்டத்தில் கலந்து கொண்டபோது, பேராட்டத்தின் வேகம் கூடியது; ஏதேனும் ஒரு சமரசத்திற்கு வரவேண்டிய கட்டாய நிலை நிருவாகத்திற்கு ஏற்பட்டது.

திருப்பூரில்
1922-இல் நடந்த தமிழ்நாடு காங்கிர° கமிட்டி கூட்டத்தில் பெரியார் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். பிறப்பினால் மக்களிடையே வேறு பாடு காட்டப்படுவதை முடிவுக்குக் கொண்டு வர, அனைத்து ஜாதிகளைச் சேர்ந்த மக்களும் அனைத்துக் கோயிலுக்குள்ளும் சென்று வழிபட அனுமதிக்க வேண்டும் என்பதே அந்தத் தீர்மானம். வேதம் மற்றும் இந்து சா°திரங்களில் கூறப்பட்டுள்ளவற்றை எடுத்துக் காட்டி கமிட்டியில் இருந்த பார்ப்பன உறுப்பினர்கள் இந்தத் தீர்மானத்தை எதிர்த்து, அது நிறைவேற்றப்பட இயலாமல் தடுத்து நிறுத்தினர். உயர் ஜாதியைச் சேர்ந்த உறுப்பினர்களின் இந்த எதிர்ப்புப் போக்கினால் ஆவேசம் அடைந்த பெரியார் மனுதர்ம சா°திரம், ராமாயணம் ஆகியவற்றைக் கொளுத்தப் போவதாக அறிவித்தார். மக்களின் சமூக, மத, கலாசார அம்சங்களைப் பற்றி இந்த புராண, சா°திரங்கள் கூறுவதை ஏற்றுக் கொள்ளத் தனது எதிர்ப்பைக் காட்டும் முகத்தான் இந்த அறிவிப்பை பெரியார் வெளியிட்டார்.
சமூகக் கலாசாரப்புரட்சி கொண்டு வரப்பட வேண்டும் என்ற பெரியாரின் உறுதியான முடிவு, தனது முன்னேற்றத் திட்டங்களை நடை முறைப் படுத்தியவர்கள் எதிரிகளாக இருந்தபோதும் அவர்களையும் ஆதரிக்கும் நிலைக்கு அவரை ஆளாக்கியது. இந்து கோயில்கள் மற்றும் மத அறக்கட்டனைகளின் நிருவாகத்தில் காலம் காலமாக ஆதிக்கம் செலுத்தி, தங்கள் சுயநலத்திற்காகத் தவறாகப் பயன்படுத்தி வந்த உயர் ஜாதியினரின் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கத்துடன் நீதிக் கட்சி 1923-இல் இந்து மத அறக்கட்டளைக் குழுவை உருவாக்கியதை, ஒரு காங்கிர°காரராக இருந்த போதும் பெரியார் ஆதரித்ததன் காரணம் இதுதான்.
நவீன இந்தியாவின் வரலாற்றில் முதன் முதலாக வரலாற்றுப் புகழ் மிக்க வைக்கம் சத்தியாகிரகப் போராட்டம்

(1924-25) பெரு வெற்றி பெற்றதற்கு பெரியார் ஆற்றிய பங்கு சற்றும் குறைந்ததல்ல. பொதுப் பாதைகளை தீண்டத்தகாத மக்கள் சுதந்திர மாக எந்த விதத் தடையுமின்றிப் பயன்படுத்தவும், அது போன்ற மற்ற சமத்துவம் நிறைந்த சமூக நடவடிக்கை களை மேற்கொள்ளவும் இப் போராட்டம் வழி வகுத்தது.

ஆங்கிலேய அரசாங்கம் நடத்தும் பள்ளிகளுக்கு ஒரு மாற்றாக தேசிய பயிற்சிப் பள்ளி ஒன்று தமிழ் நாட்டின் தென் பகுதியில் திருநெல்வேலிக்கு அருகில் உள்ள சேரன்மாதேவியில் தொடங்கப்பட்டது. குருகுலம் என்று அழைக்கப்பட்ட அந்த பள்ளியை தமிழ்நாடு காங்கிர° கமிட்டியும், இதர பார்ப்பனரல்லாத புரவலர்களும் இணைந்து தான் உருவாக்கினர். அதனை வி.வி.எ°. அய்யர் என்ற ஒரு பார்ப்பனர் நிருவகித்து வந்தார். அவரது நிருவாகத்தில் பார்ப்பனர் மற்றும் பார்ப்பனரல்லாத மாணவர்களி டையே பாகுபாடு காட்டப்பட்டது. உணவு, தங்கும் இடம் மற்றும் பாடதிட்டம் போன்றவற்றில் மற்ற பார்ப்பனரல்லாத மாணவர்களை விட மேலான முறையில் பார்ப்பன மாணவர்கள் நடத்தப்பட்டனர். தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து பெரியார் இவ்வாறு பாகுபாடு காட்டப்படுவதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து அதனை முடிவுக்குக் கொண்டு வந்தார்.

வர்ண ஜாதி நடைமுறை ஒழிக்கப்படும்போது தான், உலக மக்கள் அனைவரும் அனைத்து உரிமை களையும் சமமாக அனுபவிப்பது என்ற கோட்பாடு நடைமுறையில் வெற்றிபெறும் என்று பெரியார் உறுதியாக நம்பினார். இவ்வாறு ஜாதிகள் அழிந்து, சமூகச் சீரமைப்பு ஏற்படும்வரை, சமூக நீதியை நிலைநாட்ட ஓர் ஆக்க பூர்வமான செயல்பாடாக ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டு முறை தொடர வேண்டும் என்று அவர் விரும்பினார். அதன் காரணமாக
1919- ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டிலும் நடந்த தமிழ்நாடு காங்கிர° கமிட்டிக் கூட்டத்திலும் இடஒதுக்கீட்டுக் கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற தீர்மானத்தைப் பெரியார் கொண்டு வந்தார். ஆனால் அவரது முயற்சிகள் எந்த விதப் பயனையும் அளிக்கவில்லை; காங்கிர° கமிட்டி இந்தத் தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளவேயில்லை. அதனால்
1925- நவம்பரில் நடந்த காஞ்சிபுரம் மாநாட்டின் போது பெரியார் காங்கிர° இயக்கத்தை விட்டு விலகினார். பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வரவும், ஜாதி அமைப்பு முறைக்கு எதிராகப் போராடவும் மகாத்மா காந்தி தயாராக இல்லாத நிலையில், பெரியால் அவரை விட்டுப் பிரிந்து வர நேரிட்டது.

சுயமரியாதை இயக்கம்

நாட்டின் செல்வத்தையும் முன்னேற்றப் பயன்களையும் மக்களின் அனைத்துப்பிரிவினரும் சமமாக நுகரும் வாய்ப்பினைப் பெற்றிருக்க வேண்டும் என்பதும், அரசாட்சியிலும் நிருவாகத்திலும் தங்களின் மக்கள்தொகைக் கேற்ற பிரதிநிதித்துவத்தை அனைத்து சமூக மக்களும் பெற்றிருக்க வேண்டும் என்பதும்தான் பெரியாரின் கோட்பாடாகும். பெரியாருக்கு முன்பும் வேறு பலரும், குறிப்பாக நீதிக் கட்சி என்றழைக்கப்பட்ட தென்னிந்திய நலஉரிமைச் சங்கம் இந்தச் சமூக நீதிக் கொள்கையை வலியுறுத்தி வந்தது. ஒரு ஆரோக்கியமான உலகக் கண்ணோட் டத்தைப் பெற்றிருக்க உதவும் வகையில் தங்களின் அறிவை வளர்த்துக் கொள்ள மக்களுக்குப் பகுத்தறிவுப் பார்வை தேவை என்று பெரியார் வலியுறுத்தியதுதான் அவரது மிகச் சிறந்த ஈடு இணையற்ற பங்களிப்பாகும். ஒரு புதுவகையான சமத்துவம் நிறைந்த சமூக அமைப்பை உருவாக்க முன்னோடியாக பிறப்பின் அடிப்படையில் அமைந்த, ஏற்றத் தாழ்வுகள் நிறைந்த, பாரம்பரியமான ஜாதி அமைப்பு முறை ஒழிக்கப்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார். வேறு சொற்களில் கூறுவதானால், வலிவுபெற்ற வளம் மிகுந்த ஒரு பொருளாதார நிலையையும் சுதந்திரமான அரசியல் அமைப்பையும் உருவாக்கும் முன், ஒரு பலம் பொருந்திய சமூகக் கலாசார அடித் தளம் போடப்படவேண்டும் என்று பெரியார் விரும்பினார்.
இந்த நிலையில்தான்,

1925-இல் தோற்றுவிக்கப் பட்ட சுயமரியாதை இயக்கம், கேலிக்குரிய தீங்கிழைக்கும் மூடநம்பிக்கைகள், பழக்கவழக் கங்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள் ஆகியவற்றுக்கு எதிராக மிகத் தீவிரமான பிரச்சாரம் ஒன்றினை இடைவிடாது மேற்கொண்டது. மக்களின் அறியாமையைப் போக்கி, அவர்களை விழிப்புணர்வு பெறச் செய்ய அவர் விரும்பினார். அர்த்தமற்ற பிரிவினைகளுக்கும், நீதியற்ற பாகுபாடு ககளுக்கும் வழிவகுக்கும் மத அமைப்புகள் மற்றும் மதிப்பீடுகளை மாற்றத் தேவையான நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மாறி வரும் காலத்தின் தேவைக் கேற்றபடி அவற்றை மாற்றிக் கொண்டு, இன்றைய சூழ்நிலையுடன் நடைபோட இயன்றவர்களாகத் தங்களை மாற்றிக் கொள்ள அவர் மக்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

பார்ப்பன புரோகிதர்களும், மதச் சடங்குகளும் அற்ற திருமணங்களைச் சுயமரியாதைக்காரர்கள் நடத்தினர். வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே சமத்துவம் நிலவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினார்கள். ஜாதி மறுப்பு மற்றும் விதவைத் திருமணங்களை அவர்கள் ஊக்குவித்தனர்.
1920-ஆம் ஆண்டு வாக்கிலேயே பெரியார் குடும்பக் கட்டுப் பாட்டு திட்டத்தின் தேவையைப் பற்றி பிரச்சாரம் செய்து வந்தார். கோயில் தேவதாசி முறையினையும், குழந்தைத் திருமணத்தையும் சட்டப்படி ஒழிக்க அவர் ஆதரவு திரட்டினார். அப்போதிருந்த சென்னை ராஜதானி அரசின் பணி வாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டு முறை
1928- இல் நடைமுறைப்படுத்தப் படுவதற்கு பெரியாரின் தொடர்ந்த தீவிரமான பிரச்சாரமே முக்கியக் காரணமாக அமைந்தது.
மாநாடு
சுயமரியாதை இயக்கம்

1925-இல் தொடங்கப் பட்டபோதும்,
1929- பிப்ரவரியில்தான் முதல் சுயமரியாதை இயக்க மாநல மாநாடு செங்கல்பட்டில் பெரியாரால் ஏற்பாடு செய்து நடத்தப்பட்டது. இம் மாநாட்டிற்கு டபிள்யூ. பி. சவுந்தரபாண்டியன் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
1930-இல் ஈரோட்டில் நடைபெற்ற இரண்டாவது மாநில மாநாட்டிற்கு எம்.ஆர்.ஜெயகர் தலைமை வகித்தார். விருதுநகரில் நடைபெற்ற மூன்றாவது மாநாட்டிற்கு சர் ஆர். கே. ஷண்முகம் செட்டியார் தலைமை தாங்கினார். இம் மாநாடுகள் மக்களுக்கு ஆர்வத்தை அளித்தது மட்டுமன்றி, ஜாதி ஒழிப்பு, சமூக ஒருங்கி ணைப்பு, பெண்களுக்கு சமஉரிமைகள் வழங்குவது போன்றவை பற்றிய தீர்மானங்களும் நிறைவேற்றப் பட்டன.
வேதகால சனாதன தர்தமத்தின் அடிப்படையில் அமைந்த, ஏற்றத் தாழ்வுகள் நிறைந்த வர்ண ஜாதி அமைப்பு முறை நீடிக்க வேண்டும் என்ற எந்த வித ஆர்வமும் இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயருக்கு இல்லை என்பதால், இத்தகைய சமத்துவமற்ற சமூக அமைப்பை நீக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அந்திய அரசை சம்மதிக்கச் செய்யவோ அல்லது நிர்பந்திக்கவோ இயலும் என்று பெரியாரும் அவரைப் பின்பற்றியவர்களும் கருதினர். அதன் காரணமாக சுதந்திரப் போராட்டத்தில் அவர்கள் ஒரு மித நிலையையே கடை பிடித்து வந்தனர்.
சமூகக் கலாசார சமத்துவத்திற்குப் போராடுவது என்ற தனது முதல் செயல்திட்டத்துடன் பொருளாதார சமத்துவத்தை ஏற்படுத்தும் திட்டத் தையும் பெரியார்

1930- ஆம் ஆண்டுகளின் தொடக் கத்தில் இணைத்துக் கொண்டார். காம்ரேட் எம். சிங்காரவேலு என்ற முன்னணிக் கம்யூனி°டுத் தலைவ ருடன் சேர்ந்து, மிகப் பெரிய முதலாளிகள், நிலச் சுவான்தார்கள் ஆகியோர் மக்களைச் சுரண்டி வாழ்வதற்கு எதிராகக் போராடுமாறு தொழிலாளர், விவசாயக் கூலிகள் அமைப்புகளைப் பெரியார் உருவாக்கினார். கம்யூனி°டு கட்சியையும், அதன் கொள்கைகளைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொள்ளும் கட்சிகளையும் தடை செய்ய மத்திய, மாநில அரசகள்
1930-ஆம் ஆண்டுகளின் இடையில் நடவடிக்கைகள் மேற்கொண்டன. சுயமரியாதை இயக்கத்தின் செயல்பாடுகளைத் தடுக்கவும் அவர்கள் தொடங்கினர். இந்த நேரத்தில் ஒரு முக்கியமான முடிவை மேற்கொள்ள வேண்டிய நிலையில் பெரியார் இருந்தார். சுதந்திரப் போராட்டத்தையும், தொழிலாளர் அமைப்புகளையும் நடத்திச் செல்ல பலர் உள்ளனர் என்பதை தனது அனுபவத்திலிருந்து பெரியார் அறிந்திருந்தார். பாரம்பரியமான மதக் கேடுகளை வெளிப்படுத்தவும், அதிகாரம் நிறைந்த மேல்ஜாதி பார்ப்பனரை எதிர்த்துப் போராடவும் வெகுசிலரே முன்வந்தனர். இந்தச் சூழ்நிலையில் சமூகத்தில் தாழ்த்தப்பட்ட, வாய்ப்புகள் மறுக்கப்பட்ட வர்களாக சமூகக் கலாசார நிலையில் பின்தங்கியிருந்த மக்களை முன்னேற்றம் பெறச் செய்யும் பணியை மேற்கொள்ள சுதந்திரமாக இருக்க வேண்டி தனது சமதர்மச் செயல்பாடுகளை பெரியார் குறைத்துக் கொண்டார்.

பெரியாரை மீண்டும் காங்கிர° கட்சிக்குக் கொண்டு வர ராஜாஜி என்றழைக்கப்பட்ட சி. ராஜ கோபாலச்சாரியின் தலைமையில்
1934-இல் ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது: ஆனால் அது வெற்றி பெறவில்லை. இடஒதுக்கீட்டின் மூலம் சமூக நீதியை வளர்ப்பது, முக்கியமான பெரிய பெரிய தொழிற் சாலைகள், வியாபார நிறுவனங்களின் செயல்பாடு களில் சமதர்மத்தை நடைமுறைப்படுத்தல், கடன்சுமை நிறைந்த விவசாயிகளின் துயர் துடைத்தல் போன்ற செயல்பாடுகள்கொண்ட ஒரு செயல்திட்டத்தைப் பெரியார் தயாரித்தார். அந்தச் செயல்திட்டத்தை நீதிக் கட்சிக்கும், அப்போது புகழ் பெற்று வளர்ந்து வந்த காங்கிர° கட்சிக்கும் பெரியார் அனுப்பி வைத்தார். இட ஒதுக்கீட்டுக் கொள்கை காங்கிரசுக்கு ஏற்பு இல்லை என்பதால், அது அவரின் செயல் திட்டத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. சமூக நீதியை நிலைநாட்டும் இட ஒதுக்கீட்டு முறை உள்ளிட்ட பெரியாரின் கோரிக்கைகளில் பலவற்றையும் நீதிக் கட்சி ஏற்றுக் கொண்டதால், பெரியார் அதனைத் தொடர்ந்து ஆதரித்தார்.

ஒரு சிறிய கால இடைவெளி நீங்கலாக
1921- ஆம் ஆண்டு முதல்
1937 வரை சென்னை ராஜதானியில் ஆட்சி செய்து வந்த நீதிக் கட்சி தேர்தலில் காங்கிர° கட்சியிடம் தோல்வி அடைந்தது. ராஜகோபலாச்சாரி தலைமையில் அமைந்த காங்கிர° அரசு உயர்நிலைப் பள்ளிகளில் இந்தியைக் கட்டாய பாடமாக அறிமுகப் படுத்தியது. இவ்வாறு இந்தி பேசாத மக்களை இரண்டாம் தரக் குடி மக்களாக ஆக்கும் இந்த முயற்சியை எதிர்த்தவர்கள் பெரியாரின் சீரிய தலைமையின் கீழ் ஒரு மாபெரும் போராட்டத்தைத் மேற்கொண்டனர். பெண்கள்,குழந்தைகள் உள்ளிட்ட
1200 பேருக்கும் மேலானவர்கள்
1938- இல் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறைவாழ்க்கையின் கடுமை காரணமாக அவர்களில் தாளமுத்து மற்றும் நடராசன் என்ற இரு தொண்டர்கள் உயிரிழந்தனர். இந்தப் போராட்டம் வேகம் பெற்றபோது, பெரியாருக்கு இரண்டு ஆண்டு கடுங்காவல் தண்டனைஅளிக்கப் பட்டது. ஆனாலும் அவர் ஆறுமாத காலத்தில் விடுவிக்கப்பட்டார்.
1920 மற்றும்
1930 -க்கு இடைப் பட்ட காலத்தில் பெரியார் அய்ந்து முறை சிறை தண்டனை அடைந்துள்ளார்.
1938 நவம்பரில் சென்னையில் நடந்த பெண்கள் மாநாடு ஒன்றில் ஈ.வெ. ராமசாமியைப் பெரியார் என்று அழைப்பது என்ற தீர்மானம் ஒன்று நிறைவேற் றப்பட்டது.
பெரியார் சிறைவாசத்தில் இருந்தபோது,

1938 டிசம்பர்
29 அன்று நீதிக்கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அன்றைய சென்னை மாகாணத்தில் இந்தி கட்டாய பாடமாக்கப்பட்டதை எதிர்த்த பெரியாருக்கு இரண்டாண்டு கடுங்காவல் தண்டனை வழங்கப் பட்டது. ஆனால் அவர் ஆறுமாதங்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார். விடுதலைக்குப் பின்னும் இந்திக்கு எதிரான போராட்டத்தைத் தான் தொடர்ந்து நடத்தப் போவதாகப் பெரியார் அறிவித்தார்.
நீதிக்கட்சி
சிறையில் இருக்கையில் நீதிக்கட்சியின் தலைவராகப் பெரியார் தேர்ந்தெடுக்கப்பட்டதை நாம் பார்த்தோம். நீதிக்கட்சி எனப்படும் தென்னிந்திய நல உரிமைச் சங்கம்

1938 டிசம்பர்
29, 30 தேதிகளில் சென்னையில் நடைபெற்ற தனது மாநில மாநாட்டில் இவ்வாறு தேர்ந்தெடுத்தது. அடிப்படையில், தனது வாழ்நாள் தொடக்கம் முதல் இறுதி வரை மக்கள் அனைவரின் உரிமைகளுக்காகவும் போரடியவர் பெரியார். இப்போது அவரது இயக்கத்திற்கு ஒரு புதிய தோற்றத்தினை அவர் சேர்த்து, சுதந்திர திராவிட நாடு கோரிக்கையினை முன்வைத்தார். தங்களின் சமூக ஆதிக்கத்திற்காக மற்ற சமூகத்தினரை அடக்கி ஒடுக்கி வைத்திருந்த உயர்ஜாதி பார்ப்பனர்கள் வடஇந்திய முதலாளிகளான பனியாக்களுடன் சேர்ந்து கொண்டு இந்தியைத் திணிக்கவும், தென்னிந்திய மக்களைப் பொருளாதார ரீதியில் சுரண்டவும் செய்வதைக் கண்ட பெரியார்
1938-39 இல் திராவிட நாடு கோரிக்கையை எழுப்ப வேண்டிய கட்டாய நிலைக்கு உள்ளானார்.
திராவிடர்கள் என்று பெரியார் குறிப்பிட்டது, ஒரு இனத்தின் தொடர்புடைய ரத்தத் தூய்மையின் அடிப்படையில் அமைந்தது அல்ல; வாழ்க்கை முறை மற்றும் மதிப்பீடுகளின் அடிப்படையிலேயே பெரியார் திராவிட இனத்தைப் பார்த்தார். வேதங்கள், புராணங்கள், தர்ம சா°திரங்கள் போன்றவற்றில் விதிக்கப்பட்டுள்ள சமூகக் கலாசாரப் பாகுபாட்டுக் கொள்கைகள், பழக்க வழக்கங்கள், சம்பிரதாயங்கள், சடங்குகள், பாரம்பரியத்தைப் பின்பற்றி வந்த உயர்ஜாதி பார்ப்பனர் ஆரியர்கள். சமத்துவ சமூக வாழ்க்கை முறை மற்றும் மதிப்பீடுகளைக் கொண்டவர்கள் திராவிடர்கள்.

1944 டிசம்பரில் உத்திரப் பிரதேச கான்பூரில் நடைபெற்ற பிற்படுததப்பட்ட, தாழ்த்தப்பட்ட பிரிவு மக்களின் மாநாட்டில் பேசும் போது, தங்களை இந்துக்கள் என்று கூறிக் கொள்வதைக் கைவிட்டு தங்களைத் திராவிடர் என்று கூறிக்கொள்ள வேண்டும் என்று வட இந்தியாவில் உள்ள பார்ப்பனல்லாத மக்களுக்குப் பெரியார் வேண்டுகோள் விடுத்ததை இங்கு நினைவு கூறவேண்டும்.
1939 செப்டம்பர் மாதத்தில் இரண்டாம் உலகப் போர் வெடித்தது. காங்கிர° கட்சியின் தலைவரைக் கலந்தாலோசிக்காமலேயே இந்தியா வையும் போரில் ஆங்கிலேயர் ஈடுபடுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை மற்றும் ஏழு மாகாணங்களில் ஆட்சியில் இருந்த காங்கிர° அமைச்சரவைகள் அக்டோபர்

29 அன்று பதவி விலகின. அப்போது எதிர்கட்சியான நீதிக் கட்சியின் தலைவராக இருந்த பெரியாரை அரசு அமைக்கும் படி மாநில ஆளுநரும், கவர்னர் ஜெனரலும்
1940 மற்றும்
1942 ஆண்டுகளில் இருமுறை அழைத்தனர். தனிப்பட்ட முறையில் பெரியாரின் நண்பராக இருந்த காங்கிர°காரர் ராஜபோலாச்சாரியும் இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு அரசு அமைக்க பெரியாருக்கு ஆலோசனை கூறியதுடன், நீதிக் கட்சி அரசுக்குத் தான் வெளியில் இருந்து ஆதரவு அளிப்ப தாகவும் கூறினார். ஆளுநர் மற்றும் அவரது ஆலோசகர்களின் ஆட்சிக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று தான் விரும்புவதாக ராஜாஜி விளக்கம் அளித்தார். ஆனால் இருமுறையும் ஆட்சி அமைக்க பெரியார் மறுத்துவிட்டார். முதலாவது, பொதுமக்களின் பெருவாரியான வாக்குகளைப் பெறாமல் ஆட்சி அமைப்பது சரியற்றது என்று பெரியார் கருதினார். இரண்டாவதாக, ஜாதி அமைப்பு முறையை ஒழிக்கும், மனிதநேயம் மிக்க பகுத்தறிவுக் கொள்கைகளைப் பரப்பும் தனது முக்கியமான பணிக்கு, ஆட்சி அதிகாரத்தை ஏற்றுக் கொள்வது ஒரு பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் பெரியார் கருதினார்.
1940 ஜனவரி

5 அன்று பெரியார் பம்பாய் சென்றார். டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் பெரியாருக்கு மரியாதை அளிக்கும் வகையில் இருமுறை விருந்தளித்தார்.
1940 ஜனவரி 8-ந்தேதியன்று அவர்கள் மு°லிம் லீக் தலவர் ஜின்னாவை அவரது இல்லத்தில் சந்தித்தனர். தனி திராவிட நாட்டிற்காகப் பாடுபடும் தன் முடிவைப் பற்றி அப்போது பெரியார் அவரிடம் விளக்கினார்.
சென்னை மாகாணத்தை ஆண்டு வந்த ஆளுநரும் அவரது ஆலோசகர்களும் பள்ளிகளில் இருந்த கட்டாய பாடமான இந்தியை

1940 ஜனவரி 21 அன்று நீக்கி விட்டார்கள். இந்தித் திணிப்பை எதிர்த்து மேற்கொண்ட பேராட்டத்திற்குக் கிடைத்த வெற்றியைப் பாராட்டி ஜின்னா பெரியாருக்குத் தந்தி ஒன்று அனுப்பினார்.
1921 முதல் நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த நீதிக்கட்சி

1937 தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட பின், அதன் தலைவர்களில் பலரும் சோர்வடைந்திருந்தனர். அதனால் அவர்கள் செயல்படாமல் இருந்தனர். இத்தகைய நெருக்கடியான ஒரு நேரத்தில், கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள பெரியார் சம்மதித்தார். சமூகத்தில் பின்தங்கியிருந்த மக்களின் முன்னேற்றத்திற்காகத் தீவிரமாகப் பணியாற்றும் அரசியல் கட்சி ஒன்று அவசியம் தேவை என்பதை பெரியார் உணர்ந்திருந்ததுதான் இதன் காரணம். அந்த நெருக்கடியான நேரத்தில் நீதிக்கட்சியின் தலைவர்களில் இருவர் பெரியாருக்குத் துணையாக உறுதியுடன் நின்றனர். சர். ஆர்.கே. ஷண்முகமும், ஏ.டி. பன்னீர்செல்வமும்தான் அந்த இரு தவைர்கள். அப்போது முன்னவர் கொச்சி சம°தானத்தின் திவானாக இருந்தார். பின்னர்
1947-இல் சுதந்திர இந்தியாவின் முதல் நிதிஅமைச்சராக ஆனார். பின்னவர் ஆளுநரின் ஆலோசனைக் குழுவில் ஓர் உறுப்பினராக இருந்து, பின்னர் 1930-இல் சென்னை மாகாணத்தில் ஒரு அமைச்சராக இருந்தவர். ஆங்கில அரசின் உள்துறை அமைச்சரின் ஆலோசகராகப் பொறுப்பேற்றுக் கொள்வதற்காக ஓமன் கடலுக்கு மேல் விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் திரு பன்னீர்செல்வம் உயிரிழந்தார். இத்தகைய திடீர் விபத்தினால் பன்னீர் செல்வம் உயிரிழந்தது தமிழ் நாட்டுக்குப் பேரிழப்பு என்று பெரியார் புலம்பினார்.
நீதிக்கட்சியின்

15-வது மாநில மாநாடு
1940 ஆக°ட் மாதத்தில் திருவாரூரில் நடைபெற்றது. இந்த மாநாட்டின்போதுதான், பின்னர் அறிஞர் அண்ணா என்று அன்புடனும் மரியாதையுடனும் அழைக்கப் பட்ட சி (ன்ன காஞ்சிபுரம்) ந (டராஜன்) அண்ணா துரை கட்சியின் இணைச் செயலாளராக ஆனார். தனது ஈடுஇணையற்ற எழுத்தாற்றலாலும், பேச்சாற் றலாலும் அவர் இளைஞர்களைக் கவர்ந்திழுத்தார். பெரியாரின் கொள்கைகள், கோட்பாடுகள், செயல் திட்டங்களைத் தனது கட்டுரைகள், சிறுகதைகள், புதினங்கள், நாடகங்களின் மூலம் பரப்புவதில் அவர் பெரும்பங்காற்றினார்.
1941 பிப்ரவரி மாதத்தில் புரட்சி ஜனநாயகக் கட்சியின் நிறுவனத் தலைவர் எம். என். ராய் சென்னைக்கு வந்து பெரியாரின் விருந்தினராகத் தங்கினார். காங்கிர° கட்சிக்கு எதிராக அனைத்திந்திய அளவில் ஒரு மாபெரும் கூட்டணியை உருவாக்குவ தில் அவர் பெரியாரின் உதவியை நாடினார். பாசிச வாதியான முசோலனி, நாசிசவாதியான ஹிட்லர், இராணுவ வெறி கொண்ட டோஜோ ஆகியோரை விட ஆங்கில ஏகாதிபத்தியமே மேலானது என்று கருதிய இவருவரும் இங்கிலாந்து நாட்டின் போர் முயற்சிக ளுக்கு ஆதரவு அளித்தனர்.
தொடர்ந்து பெரியார் கோரி வந்ததின் விளைவாக, ரயில் நிலையங்களிலம் மற்ற உணவு விடுதிகளிலும் பார்ப்பனர்களுக்குத் தனியாகவும் மற்றவர்களுக்குத் தனியாகவும் உணவு பரிமாறப்படும் வழக்கம்

1941 மார்ச் மாதத்தில் ஒழிக்கப்பட்டது.
நீதிக்கட்சியில் இருந்த பிற்போக்கு மனம் கொண்ட ஒரு பிரிவினர் பெரியாரின் புரட்சிகரமான சமூக சீர்திருத்த திட்டங்களையும், மதஇலக்கியங்களை கடுமையாக விமர்சித்ததையும் பகுத்தறிவுக் கொள்கை களைப் பிரச்சாரம்செய்தததையும் விரும்பவில்லை. இத்தகைய எதிர்ப்புகளை எல்லாம் பற்றி சிறிதும் கவலைப்படாத பெரியார் தன்னைச் சுற்றி இளைஞர்க ளும் பொதுமக்களும் கொண்ட ஒரு பெரும் கூட்டத்தினைத் திரட்டிக் கொண்டு தன் பாதையில் தொடர்ந்து சென்று கொண்டிருந்தார். இந்த

1942-43 ஆம் ஆண்டு காலத்தில்தான் மணியம்மையார் இயக்கத்திற்கு வந்து சேர்ந்தார்; அத்துடன் பெரியார் அவர்களின் தனிப்பட்ட தேவைகளையும் அவர் கவனித்துக் கொண்டார். தன் தலைவரிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்த அவர் அவருக்கு மிகுந்த விசுவாசத்துடன்சேவை செய்தார். பின்னர்
1949-இல் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.

திராவிடர் கழகம்
1944 - 1973

1944 ஆக°ட்
27 அன்று சேலத்தில் நடைபெற்ற நீதிக் கட்சியின் மாநில மாடு பெரியாரின் இயக்கத்தின் ஒரு பெரும் திருப்பு முனையாக அமைந்தது. கட்சியின் பெயர் திராவிடர் கழகம் என மாற்றப்பட்டது ஆங்கில ஆட்சியினால் அளிக்கப்பட்ட பதவிகள், பட்டங்கள்,அனைத்iயும் கைவிடும்படி அதன் உறுப்பினர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டார்கள். தங்கள் பெயருக்குப் பின்னிருந்த ஜாதிப்பட்டங்களை யும் கூட கைவிடும்படி அவர்கள் கேட்டுக் கொள்ளப் பட்டனர். இயக்கத்தின் உறுப்பினர்கள் தேர்தல்களில் போட்டியிடக்கூடாதென்பதும் முடிவு செய்யப்பட் டது. வேறு சொற்களில் கூறுவதானால், இது வரை ஓர் அரசியல் கட்சியாக இருந்த நீதிக் கட்சி திராவிடர் கழகமாக மாறி அரசியல் சார்பற்ற சமூகக் கலாசார இயக்கமாக ஆனது. இன்றும் கூட அது இவ்வாறுதான் உள்ளது.
இப்போது திராவிடர் கழகத்தின் தலைவராக உள்ள திரு வீரமணிக்கு 11 வயதாக இருக்கும்போது அவரை மேசை மீது நிற்கவைத்து வரலாற்றுச் சிறப்பு மிக்க சேலம் மாநாட்டில் பேச வைக்க பெரியார் அனுமதித்தார். சுயமரியாதை இயக்கத்தின் திருஞானசம்பந்தர் என்று வீரமணியை பார்வையாளருக்கு அறிஞர் அண்ணா அறிமுகப் படுத்தினார். (ஆழ்ந்த பக்தி கொண்ட திருஞான சம்பந்தர் சைவப் புராணப்பாடல்கள் இயற்றியவர்.)
1944 ஆம் ஆண்டு டிசம்பர் இறுதி வாரம் முதல் ,

1945 ஆம் ஆண்டு ஜனவரி முதல் வாரம் வரை பெரியார் வடஇந்தியப் பயணம் ஒன்று மேற்கொண்டார்.
1944 டிசம்பர்
27 அன்று கொல்கத்தா தீவிர ஜனநாயகக் கட்சி மாட்டில் பெரியார் பேசினார். அப்போது தனது நாத்தீகக் கருத்தின் ஆசான் என்று கூறி கூட்டத்தினருக்கு பெரியாரை எம்.என். ராய் அறிமுகப் படுத்தினார்.
3 : 2 என்ற் அளவில் கருப்புப் பின்னணியின் நடுவே சிவப்பு வட்டம் கொண்டதாக திராவிடர் கழகத்தின் கொடி

1946-இல் வடிவமைக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்து மத ஆதிக்கத்தின் கீழ் திராவிடர்கள் பட்ட இழிவுகளுக்கும், ஒடுக்கு முறைக்கும் அடையாளமாக கருப்பு விளங்கியது. மக்களிடையே இருக்கும் அறியாமையையும், மூட நம்பிக்கையையும் நீக்கவும், அனைத்து வகையான, குறிப்பாக சமூகக் கலாசாரச் சுரண்டல்களிலிருந்தும் அவர்களைக் காக்கவும், உறுதியான முயற்சிகள் மேற் கொள்வதைக் காட்டுவதாக சிவப்பு அமைந்திக்கிறது.
மதுரையில்

1946 மே மாதத்தில் கருஞ்சட்டைப் படை இருநாள் மாநாடு ஒன்று ஏற்பாடு செய்து நடத்தப்பட்டது. பார்ப்பன இந்து சனாதனிகளின் தூண்டுதலால், மாநாடு நடந்த பந்தல் இரண்டாம் நாள் எரிக்கப்பட்டது. அதே ஆண்டு
9-ஆம் தேதியன்று,. இந்திய அரசமைப்புச் சட்ட மன்றம் அமைக்கப்பட்ட முறைக்கு எதிராகப் பெரியார் உறுதியாகக் குரல் எழுப்பினார்.
1947ஆக°ட் 15 அன்று இந்தியா சுதந்திரம் அடைந்ததை பெரியார் துக்க தினமாக அறிவித்தார். பொருளாதாரச் சுரண்டல் மட்டுமன்றி, சமூகக் கலாசார ஆதிக்கம் நிறைந்த பார்ப்பன - பனியா கூட்டணியிடம் அரசு அதிகார மாற்றம் செய்யப்பட்டதே இந்த நிகழ்ச்சி என்று பெரியார் கருதியதுவே இதன் காரணம். ஆங்கிலேயர் ஆட்சியை விட இந்த ஆட்சி மிக மோசமானதாக இருக்கும் என்றுஅவர் கருதினார்.

1950-இல் இந்தியா குடியரசாக அறிவிக்கப்பட்டபோது, ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பற்றியும் பெரியார் இது போன்ற கருத்தையே கொண்டிருந்தார்.மகாத்மா காந்தியுடன் பெரியார் சில அடிப்படைச் செய்திகளில் கருத்து மாறுபட்டவ ராக இருந்தபோதும், இந்துத்வ மதவெறியர்களின் குண்டுக்கு காந்தி இரையான
1948 ஜனவரி
30 அன்று பெரியார் பெரிதும் வருந்தினார். இந்தியாவுக்கு காந்தி நாடு என்று பெயர் சூட்டப்பட வேண்டும் என்றும் அப்போது அவர் ஆலோசனை கூறினார்
1948 மார்ச் மாதத்தில் சென்னை மாகாண அரசு கருஞ்சட்டைப் படை தொண்டர்களுக்கு தடை விதித்தது. இதனால் திராவிடர் கழகத்துக்கு மேலும் பரவலான விளம்பரம் கிடைத்தது.அதன் விளைவாக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள், அவர்களில் பெரும்பாலோர் கருஞ்சட்டை அணிந்து 1948 மே

8,9 தேதகளில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் கலந்து கொண்டனர்.
1948 ஜுன் மாதத்தில் மறுபடியும் பள்ளிகளில் இந்தி அறிமுகப்படுத்தப்பட்டபோது, பெரியார் அதற்கு எதிரான தனது போராட்டத்தை மறுபடியும் தொடங்கினார். தொடக்க கட்டத்தில் அதிகாரிகள் உறுதியாக இருந்து, இந்தப் போராட்டத்திற்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொண்ட போதும்., பொதுமக்களின் விருப்பத்துக்கு விட்டுக் கொடுக்க வேண்டிய நிலைக்கு உள்ளான அவர்கள் கட்டாய இந்தி பாடத் திட்டத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டனர்.
இந்தியாவில் மிக ஆழமாகவும், உறுதியாகவும் வேரூன்றியிருந்த சமூகக் கேடுகள் அனைத்தும் வர்ணஜாதி என்னும் ஜாதி நடைமுறையைக் பின் பற்றுவதையே மய்யமாகக் கொண்டவையாகும். சமத்துவமற்ற அடுக்கு முறை ஜாதி அமைப்புக்கு புனிதத் தன்மை அளிக்கும் இந்து மதக் கோட்பாட்டி லிருந்தும், அதனைப் பின்பற்றுவதிலிருந்தும் பிரிக்க முடியாத ஓர்அடிப்படை அம்சமாகவே இந்த ஜாதி அமைப்புமுறை அமைந்ததாகும். இந்த ஜாதி அமைப்பு முறையால் பயனடைபவர்கள் உயர் ஜாதி பார்ப்பனர்கள் மட்டுமே; நியாயமற்ற சலுகைகள் மற்றும் பாரம்பரியமாகப்பெற்று வரும் அனுகூலங்கள்ஆகியவற்றின் மூலம் அவர்கள் அளப்பரிய செல்வத்தையும், மன ஆற்றலையும் பெற்றிருந்தனர். இத்தகைய சமூக நடைமுறையை முற்றிலும் மாற்றவேண்டும் என்று போராடுவோர் சமமற்ற ஒரு போரில் ஈடுபடவேண்டிய நிலையில் இருந்தனர். இந்தயாவில் நிலவும் சமூகக் கேடுகளை ஒழிக்கும் பணியை ஏற்றுக் கொண்டிருக்கும் தனிப்பட்டவர்களும், இயக்கங்களும் எதிலும் சமரசம் செய்து கொள்ளாமல் தங்கள் பாதையை விட்டு விலாகாமல் முழு ஈடுபாட்டுடனும்,தியாக உணர்வுடனும் செயல்படவேண்டும் என்பதைப் பெரியார் தனது பட்டறிவினாலும், தீவிர சிந்தனை யாலும் உணர்ந்திருந்தார். அரசியல் அதிகாரம் பெற அவர்கள் தேர்தலில் போட்டியிட்டால், தங்கள் நோக்கத்திற்காப் போராடும் ஆர்வத்தை அவர்கள் இழந்து விடுவார்கள் என்று பெரியார் கருதினார். ஆனால் அவரைப் பின்பற்றியவர்களில் பலரும் வேறுவிதக் கருத்து கொண்டிருந்தனர்; அரசியலில் ஈடுபட்டு அரசாட்சியில் பங்கேற்க வேண்டும் என்று விரும்பினர். பெரியாரிடமிருந்து பிரிந்து செல்லத் தேவையான ஒரு வாய்ப்பினை அவர்கள் எதிர் நோக்கியிருந்தனர். தனது

70-வது வயதில்
30 வயதான மணியம்மையை மணந்து கொண்டதன் மூலம் பெரியார் ஒரு மோசமான முன் உதாரணத்தை உருவாக்கி விட்டார் என்று கூறிக்கொண்டு அவர்கள்
1948 ஜுலை
9 அன்று திராவிடர் கழக்தை விட்டு வெளியேறினார்கள். பிரிந்து சென்ற அவர்கள் சி.என். அண்ணாதுரை (அறிஞர் அண்ணா) தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை உருவாக்கினர்.
இதுபோன்று வேண்டுமென்றே வேறொரு நோக்கத்துடன் உணர்ச்சி பூர்வமாக எழுந்த எதிர்ப்பு களைப் பற்றி சிறிதும் சஞ்சலம் அடையாத பெரியார் விழிப்புணர்வு கொண்ட சமத்துவ சமூகம் ஒன்றை உருவாக்க இரட்டை மடங்கு வேகத்துடன் தொடர்ந்து செயலாற்றினார்.
1950 ஜனவரி

26 அன்று இந்திய அரசமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்தபின், வரலாற்று ரீதியாக வாய்ப்புகள் மறுக்கப்பட்ட சமூகப் பிரிவு மக்களுக்கு கல்வி நிறுவனச் சேர்க்கையிலும், அரசுப் பணி வாய்ப் பிலும் இட ஒதுக்கீடு அளிக்கும் சென்னை அரசின் சட்டத்தை எதிர்த்து பார்ப்பனர்கள் சென்னை உயர் நீதி மன்றத்திற்கும், உச்ச நீதிமன்றத்திற்கும் சென்றனர். வேறுபாடு காட்டக் கூடாது என்ற அடிப்படை உரிமை இதனால் மீறப்படுவதாக அவர்கள் கூறினர். நீதிமன்றங்களும் அவர்களின் கருத்தை ஏற்றுக் கொண்டு, சமூக நீதியை வளர்க்கும் இட ஒதுக்கீட்டு முறை அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று அறிவித்தன. இத் தீர்ப்பை எதிர்த்து பெரியார் பொதுக் கூட்டங்களையும், மாநாடுகளையும் ஏற்பாடு செய்து நடத்தினார். நாளாக ஆக இந்தப் போராட்டம் தீவிர மடைந்தது. இதன் விளைவாக
1951-இல் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கான முதல் திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேறி அரசமைப்பு சட்டத்தில் பிரிவு
15-இல் விதி 2 சேர்க்கப்பட்டது; “தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்கள் அல்லத சமுக அளவிலும் கல்வி நிiயிலும் பின்தங்கியுள்ள இதரப் பிரிவு மக்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பான சட்டங்கள் இயற்றுவதை இந்த விதியிலோ அலலது
29-ஆம் பிரிவின் 2-வது விதியிலோ கூறப்பட்டிருப்பது எதுவும் அரசுக்குத் தடையில்லை.”
1952 செப்டம்பார் 23 அன்று பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் பதிவு செய்யப் பட்டது.

1953-இல் பெரியால் அறிவுறுத்தியபடி, மாநிலம் முழுவதிலும் புத்தர்தினம் கொண்டாடப் பட்டது. பகுத்தறிவு வழியுடன் கூடிய ஒரு வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திய பெரியார் கற்றவர்களும், கல்வியறிவற்ற மக்களும் வழிபடும் எண்ணற்ற தெய்வங்களின் செயலற்ற தன்மையை எடுத்துக் காட்டும் முறையில் விநாயகர் சிலைகளை உடைத்தார்.
இதற்கிடையே

1952-54 ஆண்டுகளுக்கிடையே ராஜகோபாலாச்சாரி இரண்டாவது முறையாக சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக பதவிக்கு வந்தார். பள்ளிகளில் காலையில் மட்டுமே வகுப்புகள் நடத்தும் திட்டத்தை கொண்டு வந்த அவர், பிற்பகலில் தங்களின் பெற்றோரின் குலத்தொழிலை அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். முதல் கட்டமாக இத் திட்டம் மாநிலத்தின் கிராமப் புறப் பகுதிகளில் நடைமுறைப் படுத்தப்பட்டது. சூத்திர, பஞ்சம ஜாதி மக்கள் கல்வி யறிவற்றவர்களாகவும், அரைகுறையாகப் படித்தவர் களாகவும் வைத்திருக்கும் தந்திரம் மிக்க ஒரு வழியே இத் திட்டம் என்பதை திராவிடத் தலைவர்கள் சரியாக மதிப்பிட்டனர். பல நூறு ஆண்டு காலமாக கல்வி வாய்ப்புகள் மறுக்கப்பட்ட பின் அவர்களது பிள்ளைகள் இப்போதுதான் பள்ளிகளுக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர். ராஜகோபாலாச்சாரியாரின் இக் கல்வித் திட்டத்தைக் குலக்கல்வி திட்டம் என்று கண்டனம் செய்த அவர்கள் இதனைத் திரும்பப் பெற வேண்டுமென்ற போராட்டத்தை பெரியார் தலைமையில் தொடங்கினார்கள். இதன் விளைவாக 1954 மார்ச் மாதத்தில் ராஜகோபலாச்சாரி முதல் முதலமைச்சர் பதவியிலிருந்து விலக நேர்ந்தது.; ஏப்ரல்
14 அன்று காமராஜர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.
அரைநாள் படிக்கும் கல்வித் திட்டத்தை காமராஜர் நீக்கினார். மாநிலத்தின் மூலை முடுக்களில் எல்லாம் மக்கள் கல்வி கற்கும் வசதிகளை அரசு விரிவுபடுத்தும் என்று பெரியாருக்கு அவர் உறுதி அளித்தார். வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு கல்வி மற்றும் நிருவாகத்தில் வாய்ப்புகள் அளிக்கும் இட ஒதுக்கீட்டு முறையை நேர்மையுடன் நடைமுறைப் படுத்தவும் அவர் உறுதியளித்தார். காமராஜர் தனது உறுதிமொழிகளை நிறைவேற்றியதால், பெரியார் காமராஜருக்கு தடையின்றி ஆதரவு அளித்தார்.

1925 -இல் காங்கிரசை விட்டு விலகி
30 ஆண்டுகள் கழிந்த பின் பெரியார் காங்கிரசை ஆதரித்தார் என்ற போதிலும், அவர் அளித்த ஆதரவு தனிப்பட்ட காமராஜர் என்பவருக்காகத்தானே அன்றி காங்கிர° கட்சிக்காக அல்ல.
1954 நவம்பர் டிசம்பர் மாதங்களிலும்,

1955 ஜனவரியிலும் பெரியாரும் அவரின் மனைவி மணியம்மையாரும் பர்மா மலேசிய நாடுகளுக்குப் பிரச்சாரச் சுற்றுப் பயணம் சென்றனர். தற்போது மியான்மார் எனப்படும் பர்மாவில், புத்த மத நாடாடு ஒன்றில் கலந்து கொண்ட பெரியார், டாக்டர் பி. ஆர். அம்பேத்காருடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.
1956 டிசம்பர்
6 அன்று அம்பேத்கார் மரணமடை வதற்கு முன் இந்த இரு பெரியவர்களும் சந்தித்துப் பேசிக் கொண்டது இதுவே இறுதி முறாயகும். இந்தியாவில் நிலவும் சமூக மதப் பிரச்சினைகள் தொடர்பாக அவர்கள் இருவரும் ஒத்த கருத்தையே கொண்டிருந்தனர்.
பட்டுக்கோட்டை அழகிரிசாமிக்கு அஞ்சலி செலுத்த பெரியார்

1955 மார்ச்
28 அன்று தஞ்சாவூரில் இடுகாட்டுக்குச் சென்றார். அஞ்சா நெஞ்சன் என்றழைக்கப்படும் அழகிரி திராவிடர் கழகக் கொள்கைகளில் தீவிரப் பற்று கொண்டவரும், பொறி பறக்கும் பேச்சாற்றல் கொண்டவரும் ஆவார்.
1949-ஆம் ஆண்டு இதே நாளில் அவர் உயிர் நீத்தார். சூத்திரர்களுக்குத் தனியாகப் புதைக்கும் இடம் உள்ளது என்பதைக் குறிக்கும் ஓர் அறிவிப்புப் பலகை அங்கிருப்பதைப் பெரியார் கண்டார். இவ்வாறு இறந்தபின் புதைக்கும், எரிக்கும் இடுகாட்டிலும் கூட வர்ணதர்மத்தைக் கடைபிடிப்பதை அறிவிக்கும் பலகை வைத்திருப்பதை ஆட்சேபித்து அவர் மாவட்ட ஆட்சியருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதன் விளைவாக அந்த அறிவிப்புப் பலகை நீக்கப்பட்டு, அந்த நடைமுறையும் கைவிடப்பட்டது.
வர்ண தர்மம் காப்பாற்றப்படுவதன் அடையாளமாக ராமன் இருப்பதால், ராமனின் படத்தை எரிக்கும் போராட்டம் ஒன்றை திராவிடர் கழகம் 1956 ஆக°ட்

1 அன்று மேற்கொண்டது. அச் சமயம் பெரியார் தடுப்புக் காவலில் கைது செய்யப் பட்டார்.
1956 நவம்பர்

1 அன்று மொழிவாரி மாநிலங்கள் இந்தியாவில உருவாக்கப்பட்டன; பெரியார் இந்த நடவடிக்கையை வரவேற்றார்.
சைவ உணவு மட்டுமே வழங்கப்படும் என்பதைத் தெரிவிப்பதற்காக பார்ப்பனர்கள் கொடுத்த யோசனைப்படி உணவு விடுதிகளில் பார்ப்பனர் உணவுவிடுதி என்ற பெயர்ப்பலகைகள் அக்கலாத்தில்இருந்தன. இவ்வாறு வர்ணதர்மத்தைக் குறிக்கும் செயலுக்கு திராவிடர் கழகம் எதிர்ப்பு தெரிவித்து,

1957 மே மாதம்
5-ந்தேதியன்று சென்னையில் உள்ள ஓர் உணவு விடுதியின் முன் ஓர் அடையாளப் போராட்டத்தைத் தொடங்கியது. தினமும் அங்கு சென்று போராடிய தொண்டர்கள் நாளொன்றுக்கு
10 பேர் வீதம் கைதாயினர்.
1958 மார்ச் 22 அன்று கழகத்தின் கோரிக்கை வெற்றி பெறும் வரை இது தொடர்ந்து நடந்தது.
1957 நவம்பர்

26 அன்று வர்ணஜாதி முறைக்குப் பாதுகாப்பு அளித்து உதவும் அரசமைப்பு சட்டப் பிரிவின் நகல்களைத் திராவிடர் கழகத்தின்
10,000 தொண்டர்கள் கொளுத்திப் போராட்டம் நடத்தினர். வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில்
3000-க்கும் மேற்பட்டோருக்கு 2 மாதம் முதல்
3 ஆண்டு வரை கடுங்காவல் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டது.
1957 டிசம்பர்

4 அன்று, காவல் துறை தினப் பதிவேடுகளில், பார்ப்பனர்களுக்கு எதிராக வன்முறை காட்ட தனது தொண்டர்களைத் தூண்டினார் என்று பெரியாரின் மீது குற்றம் சாட்டி பொய்யாகப் பதிவு செய்யப் பட்ட வழக்கில் பெரியாருக்கு ஆறு மாதக் கடுங்காவல் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டது; பெரியார் இக் குற்றச்சாட்டை மறுத்தார்.
ஜாதிநடைமுறையை ஆதரிக்கும் அரசமைப்புச் சட்டப் பிரிவு நகல்களை எரித்ததற்காக சிறை தண்டனை பெற்ற ராமசாமி, வெள்ளைச்சாமி என்ற இரண்டு தொண்டர்கள் சிறையில் இருக்கும்போதே உயிர் நீத்தனர். அவர்களின் உடல்களை கழகத்தினரிடம் அளிக்க விரும்பாத சிறை அதிகாரிகளின் எதிர்ப்பை மீறி பெருமுயற்சியின் பேரில் அவற்றைப் பெற்ற மணியம்மையார் திருச்சியின் முக்கிய வீதிகளின் வழியே நடந்த ஒரு உணர்ச்சி வயப்பட்ட மாபெரும் ஊர்வலத்தில் அவற்றை எடுத்துச் சென்று உரிய மரியாதைகளுடன் அடக்கம் செய்தார். சிறை தண்டனையின் கடுமையினால், சிறைவாசம் செய்த

15 தொண்டர்கள் விடுதலை அடைந்தபின் உயிர் நீத்தனர்.
பெங்களூரில்

1959 ஜனவரியில் அரசு சார்பில் நடைபெற்ற அனைத்திந்திய மொழிகள் மாநாட்டில் பெரியார் கலந்து கொண்டார். ஜெனரல் கரியப்பா மற்றும் மேடப்பா ஆகியோருடன் சேர்ந்து ஆங்கிலத்தை இந்திய அரசின் ஆட்சி மொழியாக நீடிக்க வேண்டிய அவசியத்தைப் பெரியார் வலியுறுத்தினார். பிப்ரவரி மாதத்தில் வடஇந்திய சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்ட பெரியார், பகுத்தறிவு, சமூக நீதி, சுயமரியாதை வாழ்க்கை முறை ஆகிய கொள்கைகள் பற்றி பிரச்சாரம் செய்தார்.
ஜாதி நடைமுறையினை மத்திய அரசு பாதுகாத்து கடை பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்க இந்திய வரை படத்தை எரிக்குமாறு

1960 ஜுன் மாதத்தில் பெரியார் மக்களைக் கேட்டுக் கொண்டார். இப் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக
4000-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.வளம் சேர்க்கும் தனது வழக்கறிஞர் தொழிலைக் கைவிட்டு விட்டு இயக்கத்தின் முழுநேரத் தொண்டராகப் பணியாற்ற முன்வந்த இன்றையக் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களை வரவேற்றுப் பகுத்தறிவு நாளேடான விடுதலையில் ஒரு சிறப்புக் கட்டுரையை
1962-இல் பெரியார் எழுதினார்.
முழு நேரக் கட்சிப் பணியாற்ற விருப்பம் தெரிவித்து தமிழக முதல்வர் பதவியை விட்டு விலக காமராஜர் முன்வந்தபோது, இச்செயல் அவருக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் தற்கொலை செய்து கொள்ளும் செயலுக்கு ஒப்பாகும் என்று பெரியார் ஒரு தந்தியை காமராஜருக்கு அனுப்பினார். என்றாலும் காமராஜர் தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை; அதன் விளைவாக

1963 அக்டோபர்
3 அன்று எம். பக்தவத்சலம் முதல்வர் பொறுப்பேற்றார்.
சர். சி.பி. ராமசாமி அய்யர் தலைமையிலான தேசிய ஒருங்கிணைப்புக் கமிஷன் பரிந்துரைத்தபடி, இந்திய நாட்டிலிருந்து பிரிந்து செல்லும் கோரிக்கை யினைப் பரப்புவதைத் தடை செய்யும் சட்டம் ஒன்று

1963-இல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. பெரியார் மிகத் தீவிரமாக இந்த சட்டத்தை எதிர்த்தார்.
நில உச்சவரம்பு நிர்ணயித்து தமிழ்நாடுஅரசு இயற்றிய சட்டத்திற்கு எதிராகத் உச்ச நீதி மன்றம் அளித்த தீர்ப்பினை எதிர்த்து ஏப்ரல்

1964-இல் மாநில மெங்கும் கண்டனக் கூட்டங்களைத் திராவிடர் கழகம் நடத்தியது.
இந்தித் திணிப்பிற்கு எதிராக

1965 ஜனவரி
25 முதல் பிப்ரவரி
15 வரை தமிழ் நாட்டில் கொழுந்து விட்டு எரிந்த போராட்டத்தில் பலர் உயிரிழந்தனர்; எந்த திசையில் போராடுவது என்ற நோக்கமின்றி நல்ல முறையில் ஏற்பாடு செய்யப்படாத இந்தப் போராட்டத்தைப் பெரியார் குறை கூறினார்.
பசுப் பாதுகாப்பு என்ற பெயரில், இந்துத்வக் கோட்பாடினால் வெறியூட்டப்பட்ட ஒரு வன்முறைக் கும்பல்

1966 நவம்பர்
7 அன்று டில்லியில் இருந்த காமராஜர் வீட்டினை எரித்து அவரைக் கொலை செய்யவும் முயன்றனர். காட்டாண்டித்தனமாக இச் செயலைக் கண்டித்த பெரியார் அனைத்து வகைகளிலும் காமராஜரைக் காப்பாற்ற விழிப்புடன் இருக்குமாறு மக்களைக் கேட்டுக் கொண்டார்.
1957, 1962 மற்றும்

1967 பொதுத் தேர்தல்களிக்ல திராவிடர் கழகம் காங்கிர° கட்சியை ஆதரித்தது; 1967 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பெரியா எதிர்த்தார். ஆட்சி அமைத்தவுடன், அறிஞர் அண்ணா தனது அமைச்சர்கள் அனைவருடனும் திருச்சி சென்று தனது ஆசானான பெரியாருக்கு மரியாதை செலுத்தினார். சென்னை மாகாணத்தைத் தமிழ்நாடு என்று திமுக பெயர் மாற்றம் செய்தபோதும், சுயமரியதைத் திருமணங்கள் சட்டப்படி செல்லும் என்று அறவித்தபோதும் பெரியார் மகிழ்ச்சி அடைந்தார்.
1967 வரை இதுபோன்ற திருமணங்கள் சட்டப்படி அங்கீகரிக்கப்படவில்லை என்றாலும், சுயமரியாதைக் கொள்கைகள் காரணமாக ஆயிரக்கணக்கானவர்கள் இத்தகைய திருமணங்களை நடத்தி வந்தனர்.
1967-இல் பெரியார் வடஇந்தியச் சுற்றுப் பயணம் ஒன்று மேற்கொண்டு, ஜாதி முறையை ஒழிக்கப் பாடு படுமாறு மக்களைக் கேட்டுக் கொண்டார். லக்னோவில் அக்டோபர்

12, 13 தேதிகளில் நடைபெற்ற தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட பிரிவினர், சிறுபான்மையினர் மாநாடு ஒன்றில் பெரியார் பேசினார்.
லட்சக்கணக்கான தமிழ் இளைஞர்களின் தன்னிகற்றத் தலைவராக விளங்கிய அறிஞர் அண்ணா

1969 பிப்ரவரி
3-ந்தேதி தனது
60-வது வயதில் காலமானார்.தன் முக்கியச் சீடர்களில் ஒருவரான அறிஞர் அண்ணா இறந்தபோது பெரியார் மிகமிக வருந்தினார்.
வர்ண ஜாதியின் மூல காரணங்களில் ஒன்றான ஆகமக் கோயில்களில் பார்ப்பனர்களை மட்டுமே அர்ச்சகர்களாக நியமிப்பது என்று கடைபிடிக்கப் பட்டு வந்த வழக்கத்தை முடிவுக்குக் கொண்டு வரக் கோரி ஒரு போராட்டத்தை நடத்துவது என்று திராவிடர் கழகம் தனது செயல் குழுக் கூட்டத்தில் முடிவு செய்தது.
அனைத்துலக நாடுகளின் கல்வி, அறிவியல்,காலச்சார அமைப்பினால் பெரியாருக்கு விருது ஒன்று வழங்கப்பட்டது.

1970 ஜுன் மாதம்
27-ந்தேதி இந்த விருதை மத்தியக் கல்வி அமைச்சர் திரிகுணாசென் பெரியாரிடம் வழங்கினார். “புது யுகத்தின் தீர்க்கதரிசி, தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீ°, சமூகச் சீர்திருத்த இயக்கத்தின் தந்தை, அறியாமை, மூடநம்பிக்கை, அர்த்தமற்ற சடங்குகள், இழிவான பழக்க வழக்கங்கள் ஆகியவற்றின் கடும் பகைவர்” என்று பெரியாரைப் பற்றி இந்த விருதில் புகழ்ந்து உரைக்கப்பட்டுள்ளது.
உண்மை என்ற தமிழ் மாத இதழையும் (தற்போது இது மாதமிரு இதழாக வெளிவருகிறது) மாடர்ன் ரேஷனலி°ட் என்ற ஆங்கில மாத இதழையும பெரியார் முறையே

1970 மற்றும்
1971 ஆம் ஆண்டுகளில் தொடங்கினார். பகுத்தறிவு மனிதநேயக் கொள்கைகளைத் பரவலாகப் பரப்பும் நோக்கத்துடன் இப் பத்திரிகைகள் தொடங்கப்பட்டன. ராமாயணத் தைப் பற்றி பெரியார் எழுதிய நூலின் இந்தி மொழி பெயர்ப்புக்கு அரசு விதித்திருந்த தடையை அலகாபாத் உயர்நீதி மன்றம்
1971-இல் நீக்கியது. சென்னை காங்கிர° அரசினால் தடை செய்யப்பட்டி ருந்த ராவண காவியம் என்ற நூலுக்கு விதிக்கப்பட்டி ருந்த தடையும்
1971-இல் விலக்கிக் கொள்ளப்பட்டது. எந்த ஜாதியில் பிறந்தவர்களாக இருந்தாலும் சரி, தகுதி படைத்த அனைவருக்கும் சம வாய்ப்பு அளிப்பதற்கான சட்டம் ஒன்றை திமுக அரசு
1971 ஜனவரி
12 அன்று நிறைவேற்றியது. மூடநம்பிக்கை ஒழிப்பு மாபெரும் பேரணி ஒன்று சேலத்தில் ஜனவரி
23 அன்று நடத்தப்பட்டது. புராணங்களிலும், இதிகாசங்களிலும் வர்ணிக்கப் பட்ட கடவுள்களின் உண்மையான உருவங்களைச் சித்தரிக்கும் படங்களையும், சித்திரங்களையும் பேரணியினர் எடுத்துச் சென்றனர். இவற்றைப் பார்த்த சகிப்புத் தன்மை அற்ற சனாதனிகள் சிலர் கூட்டத்தினர் மீது செருப்புகளை வீசி எறிந்தனர். ஆழ்ந்த தவத்தில் இருந்த சூத்திரன் சம்புகன் தலையை வெட்டிக் கொன்ற ராமனின் படத்தை அடிப்பதற்கு பேரணியிர் அந்த செருப்புகளையே பயன்படுத்திக் கொண்டனர். பெரியார் தொண்டர் களின் இச்செயல் செய்தித் துறையினால் அளவுக்கு அதிகமாக பெரிதுபடுத்தப்பட்டு இந்தியா முழுவதும் பரப்பப்பட்டது. பேரணியினர் எடுத்துச் சென்ற ஆண், பெண் கடவுள்களின் படங்களையும் அவர்கள் வெளியிட்டிருந்தனர்.
1971 மார்ச் மாதத்தில் நடைபெற்ற தேர்தலில் இந்த நிகழ்ச்சி திமுக காங்கிர° கூட்டணிக்கு எதிராகப் பயன்படுத்தப் பட்டது. என்றாலும் இரு கட்சிகளும் பெருவெற்றி பெற்றன; திமுக தமிழ்நாடு சட்டமன்றத்திலும், காங்கிர° மத்தியிலும் அறுதிப்பெரும்பான்மை பெற்று ஆட்சிஅமைத்தன.
உண்மை என்ற தமிழ் மாத இதழையும் (தற்போது இது மாதமிரு இதழாக வெளிவருகிறது) மாடர்ன் ரேஷனலி°ட் என்ற ஆங்கில மாத இதழையும பெரியார் முறையே

1970 மற்றும்
1971 ஆம் ஆண்டுகளில் தொடங்கினார். பகுத்தறிவு மனிதநேயக் கொள்கைகளைத் பரவலாகப் பரப்பும் நோக்கத்துடன் இப் பத்திரிகைகள் தொடங்கப்பட்டன. ராமாயணத் தைப் பற்றி பெரியார் எழுதிய நூலின் இந்தி மொழி பெயர்ப்புக்கு அரசு விதித்திருந்த தடையை அலகாபாத் உயர்நீதி மன்றம்
1971-இல் நீக்கியது. சென்னை காங்கிர° அரசினால் தடை செய்யப்பட்டி ருந்த ராவண காவியம் என்ற நூலுக்கு விதிக்கப்பட்டி ருந்த தடையும்
1971-இல் விலக்கிக் கொள்ளப்பட்டது. எந்த ஜாதியில் பிறந்தவர்களாக இருந்தாலும் சரி, தகுதி படைத்த அனைவருக்கும் சம வாய்ப்பு அளிப்பதற்கான சட்டம் ஒன்றை திமுக அரசு
1971 ஜனவரி
12 அன்று நிறைவேற்றியது. மூடநம்பிக்கை ஒழிப்பு மாபெரும் பேரணி ஒன்று சேலத்தில் ஜனவரி
23 அன்று நடத்தப்பட்டது. புராணங்களிலும், இதிகாசங்களிலும் வர்ணிக்கப் பட்ட கடவுள்களின் உண்மையான உருவங்களைச் சித்தரிக்கும் படங்களையும், சித்திரங்களையும் பேரணியினர் எடுத்துச் சென்றனர். இவற்றைப் பார்த்த சகிப்புத் தன்மை அற்ற சனாதனிகள் சிலர் கூட்டத்தினர் மீது செருப்புகளை வீசி எறிந்தனர். ஆழ்ந்த தவத்தில் இருந்த சூத்திரன் சம்புகன் தலையை வெட்டிக் கொன்ற ராமனின் படத்தை அடிப்பதற்கு பேரணியிர் அந்த செருப்புகளையே பயன்படுத்திக் கொண்டனர். பெரியார் தொண்டர் களின் இச்செயல் செய்தித் துறையினால் அளவுக்கு அதிகமாக பெரிதுபடுத்தப்பட்டு இந்தியா முழுவதும் பரப்பப்பட்டது. பேரணியினர் எடுத்துச் சென்ற ஆண், பெண் கடவுள்களின் படங்களையும் அவர்கள் வெளியிட்டிருந்தனர்.

1973 மார்ச் மாதத்தில் நடைபெற்ற தேர்தலில் இந்த நிகழ்ச்சி திமுக காங்கிர° கூட்டணிக்கு எதிராகப் பயன்படுத்தப் பட்டது. என்றாலும் இரு கட்சிகளும் பெருவெற்றி பெற்றன; திமுக தமிழ்நாடு சட்டமன்றத்திலும், காங்கிர° மத்தியிலும் அறுதிப்பெரும்பான்மை பெற்று ஆட்சிஅமைத்தன.
ஜாதி வேறுபாடின்றி தகுதி படைத்த அனைத்து ஜாதி மக்களையும் கோயில் அர்ச்சகர்களாக நியமிக்க தமிழ்நாடு அரச

1971-இல் நிறைவேற்றிய சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றம் குழப்பம் நிறைந்த தீர்ப்பு ஒன்றை
1972 மார்ச்
14 அன்று வழங்கியது. தற்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டும் என்று கோரும் பிற்போக்காளர்களுக்கு ஆதரவாக அதிகாரிகள் இத் தீர்ப்புக்கு விளக்கம் அளித்தபோது, சமூக, மத மற்றும் கலாசாரத் துறை உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் சம மனித உரிமைகளுக்காகப் போராட மக்களை வேண்டி பெரியார் ஒரு போராட்டத்தை அறிவித்தார். இந்து மதம் என்றழைக்கப்படும் வேத, பார்ப்பன சனாதன தர்மத்தின்படி சூத்திரர்கள் என்றும் பஞ்சமர்கள் என்றும் இழிவுடுத்தப்பட்ட திராவிட இன மக்களுக்கு ஏற்பட்ட இழிவை நீக்குவதற்கு இப் போராட்டம் தேவையானதாக இருந்தது.
1973 டிசம்பர் 8 , 9 தேதிகளில் சென்னையில் ஒரு மாநாடு நடத்த பெரியார் ஏற்பாடு செய்தார். தமிழரின் சமூக இழிவு ஒழிப்பு மாநாடு என்று அது அழைக்கப்பட்டது. கோயில்களின் கருவறையில் அனைத்து ஜாதிகளைச் சேர்ந்த மக்களும் நுழைவதற் சம உரிமைகளும் வாய்ப்புகளும் பெறப் போராடுவதற்காக கருவறை நுழைவுப் போராட்டம் என்ற ஒரு போராட்டத்தை மேற்கொள்ள இந்த மாநாடு முடிவு செய்தது. சமத்துவத்தின் அடிப்படையில் ஒரு சமூக நடைமுறையை மாற்றியமைப்பதற்கு இன்றியமையாத நடவடிக்கையாக, பூஜாரிகள் நியமனம் மற்றும் இதர மதச் சடங்குகள்,சம்பிரதாயங்களில் பார்ப்பனர் பெற்றுள்ள ஆதிக்கத்தினையும், உரிமையற்ற சலுகைகளையும் முடிவுக்குக் கொண்டு வர வேண்டியதன் அவசியத்தை விளக்க பெரியார் ஒரு பெரும் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார்.
கடவுளை மறுத்து, கடவுள் வழிபாட்டையும், பிரச்சாரத்தையும் எதிர்த்து 1967-இல் பெரியார் கூறிய புகழ்பெற்ற பொன்மொழிகளை பெரியாரின் சிலை மேடையில் பொறித்ததற்கு எதிரான வழக்கு ஒன்று அக்டோபர் 11அன்று நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.
1973 டிசம்பர்

19 அன்று சென்னை தியாகராயர் நகரில் நடைபெற்ற தனது இறுதிக் கூட்டத்தில் சமூகச் சமத்துவத்தையும், தன்மானம் நிறைந்த வாழ்க்கை முறையையும் பெறத் தக்க நடவடிக்கை மேற்கொள்ள மக்களுக்கு ஆர்வமளிக்கும் பேரழைப்பு ஒன்றை பெரியர் விடுத்தார்.
பெரியாரின் வாழ்க்கை, வரலாற்றில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தி, ஒரு புது யுகத்தின் தொடக்க மாக அமைந்ததாகும்.


நன்றி: பெரியார்.ஓஆர்ஜி

62 comments:

Sivabalan said...

மகேந்திரன்,

பெரிய பதிவாக போட்டிருக்கீங்க..

முழுவதும் படித்துவிட்டு வருகிறேன்.

நன்றி.

Anonymous said...

தலைப்பை பார்த்துட்டு நாக்க தொங்கப் போட்டுகிட்டு ஒடியாநத்வங்களுக்கு நல்ல அடி!

Unknown said...

சிபா சீக்கிரமா படிங்க நான் படிச்ச பதிவு நல்லா இருந்தது அதனால உடனே இங்க போட்டாச்சு

//தலைப்பை பார்த்துட்டு நாக்க தொங்கப் போட்டுகிட்டு ஒடியாநத்வங்களுக்கு நல்ல அடி! //

அனானிமஸ் அது யார் யாரா இருக்கும்னு நெனைக்கிறீங்க?:))

இருவருக்கும் நன்றி :

சிறில் அலெக்ஸ் said...

நல்ல பதிவு கொஞ்சம் பெரிதாய் இருப்பதால் இப்ப பாதிதான் படிக்க முடிந்தது.. மீதி நேரம் கிடைக்கும்போது...

//அனானிமஸ் அது யார் யாரா இருக்கும்னு நெனைக்கிறீங்க?:))//

:))

Muse (# 01429798200730556938) said...

தலைப்பில் மட்டும் உண்மை இருக்கிறது.

Unknown said...

anonymous said...

rajaji is a educated fogi nothing more to say about him

sorry anonymous i edited ur comment

Unknown said...

//மீதி நேரம் கிடைக்கும்போது...//
நன்றி சிறில் அலெக்ஸ் முழுதாக நேரம் கிடைக்கும் போது படியுங்கள் ஒன்றும் அவசரமில்லை...

//தலைப்பில் மட்டும் உண்மை இருக்கிறது.//

ம்யூஸ் இப் பதிவில் உண்மையில்லாதவை எவை எவை என ஸொன்னால் நானும் கொஞ்ஸம் தெரிந்து கொள்வேன்....

ஒரு வேளை தலைப்பை படித்துவிட்டு துள்ளி உள்ளே விழுந்துவிட்டீர்களோ?

உங்களின் எதிர்பார்ப்பு ஏமாற்றமளிக்கிறதா ?

:))

dondu(#11168674346665545885) said...

"1965 ஜனவரி
25 முதல் பிப்ரவரி
15 வரை தமிழ் நாட்டில் கொழுந்து விட்டு எரிந்த போராட்டத்தில் பலர் உயிரிழந்தனர்; எந்த திசையில் போராடுவது என்ற நோக்கமின்றி நல்ல முறையில் ஏற்பாடு செய்யப்படாத இந்தப் போராட்டத்தைப் பெரியார் குறை கூறினார்."

என்ன புளுகல்? ஹிந்தியை ஆதரித்து அப்போது விடுதலை பத்திரிகையில் பல கட்டுரைகள் வந்தன, பெரியார் அவர்கள் ஆசியோடு. நானே அவற்றை அக்காலக் கட்டத்தில் படித்துள்ளேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Unknown said...

நானும் படித்ததைத் தான் எழுதியுள்ளேன் டோண்டு அவர்களே ஆனால் சமீபத்தில் படித்தது.
1965ல் நான் பிறக்கவில்லை. அது குறித்த சுட்டிகள் எதுவும் கிடைப்பின் தந்தால் நலமாக இருக்கும்

dondu(#11168674346665545885) said...

நீங்கள் படித்தது செகண்ட் ஹேண்ட், நான் நேரடியாக விடுதலையில் படித்தது. அவ்வளவுதான் வித்தியாசம். அதற்கு சுட்டி எல்லாம் இப்போது கேட்டால் நான் என்ன செய்ய முடியும்.

அதே காலக் கட்டத்தில் விகடனுக்கு அளித்த பேட்டியில் இந்தித் திணிப்பே அச்சமயம் தமிழகத்தில் இல்லை என அடித்துக் கூறினார்.

ஆனால் ஒன்று. அப்போது அவர் காங்கிரஸ் ஆதரவாளர். தற்கேற்ப அவரது நிலைப்பாடு.

அப்போது எனக்கு வயது 19, நான் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் வருடம் (ஐந்து வருட கோர்ஸ்) படித்துக் கொண்டிருந்தேன். அதாவதுஸமீபத்தில் 1965-ல், :-))))

அன்புடன்,
டோண்டு ராகவன்

Unknown said...

//நீங்கள் படித்தது செகண்ட் ஹேண்ட், நான் நேரடியாக விடுதலையில் படித்தது. //

விடுதலையில் வந்த செய்திகள் கொண்டு பெரியார். ஒஆர்ஜி யில் தொகுத்தவற்றை செகண்ட் ஹேண்ட் என்றால் ஒரிஜினல் பர்ஸ்ட் ஹேண்ட் எது வென்று சொல்ல முடியுமா திரு டோண்டு அவர்களே?. இதில் பர்ஸ்ட் ஹேண்ட் செகண்ட் ஹேன்ட் என்பதை விட செய்திகளின் நம்பகத் தன்மை முக்கியம். நான் படித்ததை நம்புகிறேன் நீங்கள் படித்ததாக சொல்வதை என்னால் நம்பவும் / மறுக்கவும் முடியாது.... இப்போதைக்கு மறுக்கிறேன்

//அவ்வளவுதான் வித்தியாசம்//.
இதுக்கென்ன அர்த்தம்?

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

அரைவாசி படித்துவிட்டேன். மிச்சம் பிறகு.

விரிவான பதிவு. நன்றி.

Unknown said...

நன்றி மதி.கந்தசாமி முதல் தடவையா வந்திருக்கீங்க போல இருக்கு? :)

Anonymous said...

--நீங்கள் படித்தது செகண்ட் ஹேண்ட், நான் நேரடியாக விடுதலையில் படித்தது. அவ்வளவுதான் வித்தியாசம். அதற்கு சுட்டி எல்லாம் இப்போது கேட்டால் நான் என்ன செய்ய முடியும்.

அதே காலக் கட்டத்தில் விகடனுக்கு அளித்த பேட்டியில் இந்தித் திணிப்பே அச்சமயம் தமிழகத்தில் இல்லை என அடித்துக் கூறினார்.

ஆனால் ஒன்று. அப்போது அவர் காங்கிரஸ் ஆதரவாளர். தற்கேற்ப அவரது நிலைப்பாடு.

அப்போது எனக்கு வயது 19, நான் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் வருடம் (ஐந்து வருட கோர்ஸ்) படித்துக் கொண்டிருந்தேன். அதாவதுஸமீபத்தில் 1965-ல், :-))))

அன்புடன்,
டோண்டு ராகவன்

--

ஆதாரம் குடுங்கள் டோண்டு அவர்களே. சமீபத்தில் 1965ல் படித்தேன் என்பதையெல்லாம் ஆதாரமாகக் கொள்ளமுடியாது. உங்களின் வயது மற்றும் அப்போது என்ன செய்துகொண்டிருந்தீர்கள் என்பதையெல்லாம் யார் கேட்டார்கள். நீங்கள் சொன்னதை ஆதாரபூர்வமாக நிரூபியுங்கள். உடனே, கூட்டுக்களவாணித்துவமாக யாரையாவது (அல்லது நீங்களே ஒரு முகமூடியோடு வராதீர்கள்) அழைத்துவராதீர்கள்.

ஆதாரம். ஆதாரம். ஆதாரம்.

நூலகங்களிலோ வேறெங்காவதோ பழைய இதழ்கள் கிடைக்காதா என்ன?

நகலெடுத்து நிரூபியுங்கள். சும்மாசும்மா கத்திக்கொண்டிராதீர்கள்.

Unknown said...

டோன்டு அவர்கள் ஒருவேளை அனானிமஸ் கேட்டதுக்காக எங்கயாவது நூலகம் தேடி போயிட்டார? :))

வெற்றி said...

மகேந்திரன்,
நான் இன்னும் முழுமையாக உங்களின் பதிவைப் படிக்கவில்லை. படித்த பின்னர் கருத்துச் சொல்கிறேன். அதே நேரம், நானறிந்த தமிழக வரலாற்றின்
படி, இராஜாஜியை மாமனிதர் என்றோ அல்லது சிறந்த தலைவர் என்றோ சொல்ல முடியாது. பெருந்தலைவர் காமராஜர் ,அறிஞர் அண்ணா, பெரியார் போன்றவர்களோடு இவரை ஒப்பிடவும் முடியாது. இராஜாஜி பதவிக்காக எதையும் செய்யும் சாதாரண அரசியல்வாதி. ஆனால், பெரியார், காமராஜர், அண்ணா போன்றோர் தமிழகத்தில் பல மாறுதல்களை உண்டாக்கி தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் வழி நடத்தியவர்கள். பெரியார், காமராஜர், அண்ணா போன்றோர் வரலாற்று நாயகர்கள். இராஜாஜியோ ஒரு சாதாரண அரசியல்வாதி.

Unknown said...

வெற்றி நீங்கள் தலைப்பை மட்டும் படித்துவிட்டு பின்னூட்டம் போட்டதாகவே அறிகிறேன் முழுதும் படித்கு விட்டே எழுதுங்கள் நன்றி

dondu(#11168674346665545885) said...

"டோன்டு அவர்கள் ஒருவேளை அனானிமஸ் கேட்டதுக்காக எங்கயாவது நூலகம் தேடி போயிட்டார? :))"
நான் நேரடியாக படித்ததை எழுதினேன். என்னைப் பொருத்தவரை அதற்கு மேல் ஆதாரம் தேவையில்லை. "என்னை நம்புவதற்கில்லை, நான் வேண்டுமென்றே பொய்யுரைக்கிறேன் என்று எழுதுபவர்களுக்காக பதிலெல்லாம் சொல்லி எனது நேரத்தை வீணாக்க விரும்பவில்லை, அவ்வளவே.

இப்போது எங்கு போய் 1965 பிப்ரவரி விடுதலை இதழ்களைத் தேடுவது?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Unknown said...

//எனது நேரத்தை வீணாக்க விரும்பவில்லை, அவ்வளவே.

இப்போது எங்கு போய் 1965 பிப்ரவரி விடுதலை இதழ்களைத் தேடுவது?//


ராஜாஜியின் குலக்கல்வியை நிறுவுவதற்கு அந்தக் கால கல்கியை தேடிப்பிடித்து எழுதுகிறீர்கள் இதுவும் அதே காலம்தான் சமீப காலம்........ சரி விடுங்க மனசில்ல உங்களுக்கு நான் என்ன சொல்ல நன்றி

கருப்பு said...

டோண்டு, ம்யூஸ் போன்றவர்களுக்கு புதுப் பாணியில் கலகலப்பாக பதில் தந்து இருக்கிறீர்கள்.

பதிவு அருமை. பெரியார் பாசறையில் இருந்தபோது இதுபோல பல புத்தகங்களைப் படித்து இருக்கிறேன் நான். மிக நல்ல பதிவு.

மற்றபடி இந்த அல்லக்கைகளுக்கு எதிராக யார் எழுதினாலும் அவர்கள் போலிகள் என்றோ போலியின் நண்பர் என்றோ முத்திரை குத்துவார்கள். அதற்காக எல்லாம் மனம் தளர்ந்து விடாதீர்கள்.

Muse (# 01429798200730556938) said...

மகேந்திரன்,

>> ஒரு வேளை தலைப்பை படித்துவிட்டு துள்ளி உள்ளே விழுந்துவிட்டீர்களோ? <<<<

பெரும்பாலும் உடனடியாகத் துள்ளி விழுந்துவிடவதில்லை. எனினும், மகேந்திரன் என்கிற பெயரைப் பார்த்தவுடன் ஏதாவது நல்ல நக்கலாகவிருக்கும் என்றுதான் வந்தேன். அந்த வகையில் எனக்கு ஏமாற்றம்தான்.

Unknown said...

நன்றி கருப்பு,,,, நானும் உங்கள் பதிவுகளை தொடர்ந்து படிப்பேன் ஆனால் பின்னூட்டம் இட்டு உங்கள் கவனம் சிதற வேண்டாம் என்று சும்மா வந்து விடுவேன்....

//போலிகள் என்றோ போலியின் நண்பர் என்றோ முத்திரை குத்துவார்கள்.//

எனக்கு போலி நானே போட்டாத்தான் உண்டு :)) .

வந்த முதல் நாளே நான் அடிச்ச கூத்தெல்லாம் கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ்ல இருக்கு நேரம் கிடைச்சா படிச்சு பாருங்க :)

Unknown said...

//எனினும், மகேந்திரன் என்கிற பெயரைப் பார்த்தவுடன் ஏதாவது நல்ல நக்கலாகவிருக்கும் என்றுதான் வந்தேன். அந்த வகையில் எனக்கு ஏமாற்றம்தான். //

அய்யோ பாவம் இப்படி நம்பிக்கையுடன் வந்தவரை ஏமாற்றலாமா சரி அப்படியே இதை படித்துவிட்டு போங்கள்.

http://kilumathur.blogspot.com/2006/07/blog-post_30.html

யப்பா இப்பத்தான் என் மனசு நிம்மதியாச்சு

அருண்மொழி said...

//நான் நேரடியாக படித்ததை எழுதினேன். என்னைப் பொருத்தவரை அதற்கு மேல் ஆதாரம் தேவையில்லை.//

சும்மாவாச்சும் அதிலே வந்திச்சுன்னு சொல்ல எங்களுக்கும் தெரியும். உண்மையா இருந்தா ஸ்கேன் பண்ணி போடுங்க. இல்லாட்டி லிங்க் கொடுங்க. சும்மா நீங்க சொன்னா, தட்டிவிட்டான்குஞ்சு அப்படீன்னு தான் எடுத்துக்குவோம். (நன்றி மாயவரத்தார்)

சதுக்க பூதம் said...

ரொம்ப நல்ல பதிவு.
ஆப்படியே மொழிவாரி மகாணம் அமைத்த போது பெரியார் சொன்ன பொன் மொழிகளையும் சேர்க்கலாமே?

Unknown said...

அருண்மொழி நீங்க சொன்னது 100% கரீட்டு ஆமா நேத்து ஆதாரம், ஆதாரம், ஆதாரம்னு டவாலி மாதிரி அனானிமஸ்ஸா வந்து சத்தம் போட்டது நீங்களா?

அருண்மொழி said...

//ஆதாரம், ஆதாரம், ஆதாரம்னு டவாலி மாதிரி அனானிமஸ்ஸா வந்து சத்தம் போட்டது நீங்களா? //

அது நான் இல்லீங்கோ.

நான் எழுதிய comment, copy & paste வேலைங்கோ. தினமலம் ஏஜன்ட் ஒருத்தரோட பதிவில், நம்ம மாயவரத்தாரின் commentங்கோ அது. அப்படியே copy & paste செய்துவிட்டேன். அதனால்தான் அவருக்கு "நன்றி" என்று போட்டேன்.

Unknown said...

//நான் எழுதிய comment, copy & paste வேலைங்கோ//

எப்பிடில்லாம் நேரத்தை சேமிக்கிறீங்க எனக்கு உடம்பெல்லாம் புல்லறிக்குதுபா :))

Muse (# 01429798200730556938) said...

மகேந்திரன்,

>>>>.... சும்மாவாச்சும் அதிலே வந்திச்சுன்னு சொல்ல எங்களுக்கும் தெரியும். உண்மையா இருந்தா ஸ்கேன் பண்ணி போடுங்க. இல்லாட்டி லிங்க் கொடுங்க. சும்மா நீங்க சொன்னா, தட்டிவிட்டான்குஞ்சு அப்படீன்னு தான் எடுத்துக்குவோம். <<<<<<

விடுதலையில் அப்படியெல்லாம் வரவில்லை என்று நிரூபிக்கிற தேவை தங்களுக்கும் உண்டு.

thiru said...

மகேந்திரன் பதிவும் நகைச்சுவையும் அருமை.

Unknown said...

//மகேந்திரன் பதிவும் நகைச்சுவையும் அருமை. //


நன்றி திரு... நமக்கென்னவோ வந்தா நகைச்சுவையா வருது இல்லைன்னா ஆசிட் வேகத்தில வருது :)


//நிரூபிக்கிற தேவை தங்களுக்கும் உண்டு.//

ம்யூஸ்.... விடுதலையில் வந்ததாகவும் அதை தானே படித்து குடித்ததாகவும் திரு டோண்டுஅவர்கள் இப்பதிவினை புளுகு என்றும் சொன்னார் வந்ததாக நிரூபிக்கவேண்டியது யாருடைய பொருப்பு என்று நான் முடிவை உங்கள் பக்கமே விட்டு விடுகிறேன். ராஜாஜியின் கொலைக்கல்வி பற்றி கல்கியை தேடி ஆதாரத்துடன் எழுதுபவர் இதையும் தருவார் என்றே நம்புவேன் அப்படி தந்தால் என் பதிவில் இருப்பதை புளுகு என்று ஏற்றுக் கொள்கிறேன்.. (பெரியார் தாத்தா அப்படித்தான் எங்களுக்கு பாடம் சொல்லி குடுத்தாரு). பந்து உங்க பக்கமிருக்கு பாத்து விளையாடுங்க :)

dondu(#11168674346665545885) said...

"பந்து உங்க பக்கமிருக்கு பாத்து விளையாடுங்க :)"
ராஜாஜி அவர்கள் விஷயத்தில் நான் பழைய கல்கி இதழ்களை ஏன் பார்க்க நேர்ந்தது என்பதை எனது ராஜாஜி அவர்கள் பற்றியப் பதிவிலேயே தந்திருக்கிறேன். ராஜாஜி அவர்கள் பதவியில் இருந்த அக்காலக் கட்டத்தில் எனது வயது ஆறு முதல் எட்டு வரையே. நான் நேரடியாகக் கல்கியில் அக்காலக் கட்டத்தில் படிக்காததையே போய்த் தேடிப் படித்தேன்.

அதுவே ராஜாஜி அவர்கள் சுதந்திரக் கட்சியை ஆரம்பித்த காலக் கட்டம், அவர் சிறுகதைகள், சக்கரவர்த்தித் திருமகன் தொடர் ஆகியவற்றையெல்லாம் நான் அக்காலக் கட்டத்திலேயே படித்ததால் அவற்றைப் போய் மறுபடி தேடும் தேவை எனக்கில்லை.

அதே போல் பெரியார் அவர்கள் ஹிந்தியை ஆதரித்து 1965-ல் செயல்பட்டு விடுதலையில் ஹிந்தி சார்பு கட்டுரைகளையெல்லாம் நேரடியாக அக்காலக் கட்டத்திலேயே படித்தவன் என்பதால் அவற்றையும் தேடிச் செல்லும் அவசியம் எனக்கில்லை.

அதே சமயம் பெரியார் அவர்களது திருமணம் பற்றிய பதிவுகளைப் போடுவதற்காக 1949 ஜூலை மாத ஹிந்து பத்திரிகை இதழ்களை போய் பார்வையிட்டேன். ஏனெனில் 1949-ல் என் வயது மூன்று மட்டுமே. பார்க்க: http://dondu.blogspot.com/2005/03/1949.html

1952-ஓ, 1965-ஓ நான் அக்காலக் கட்டங்களில் நேரிடையாகப் படித்த விஷயங்களைப் பற்றிப் பேசும்போது சமீபத்தில் என்ற அடைமொழி போடுவது வழக்கம். என்னுடைய ஞாபக சக்தி அப்படி.

அதே சமயம் நான் சொல்வதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் எதிர்ப்பார்க்கவில்லை. ஆனால் ஒன்று நீங்கள் பெரியார் ஆர்க் போன்ற தளங்களிலிருந்து செய்தி பெற்று பேசுகிறீர்கள். அவர்கள் 100% அப்படியே நடந்ததைத் தருகிறார்கள் என்றால், உங்கள் நம்பிக்கையை கேள்வி கேட்க நான் யார்? அவ்வாறே நம்பி விட்டுப் போங்கள்.

அதில் ராஜாஜி மற்றும் பெரியார் நட்பு பற்றி என்ன எழுதியிருக்கிறார்கள்? பெரியாரின் திருமணம் சம்பந்தச் சர்ச்சைகளைப் பற்றி என்ன எழுதியிருக்கிறார்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Unknown said...

//ராஜாஜி மற்றும் பெரியார் நட்பு பற்றி என்ன எழுதியிருக்கிறார்கள்? பெரியாரின் திருமணம் சம்பந்தச் சர்ச்சைகளைப் பற்றி என்ன எழுதியிருக்கிறார்கள்//


நீங்கள் கேட்ட இரண்டு கேள்விகளுக்குமான பதில் இப் பதிவிலேயே இருக்கிரது இப்படி மேலோட்டமாக படித்துவிட்டு பின்னூட்டம் இட்டு கேள்விக் கனைகளை தொடுப்பது எதற்கென் எனக்குத் தெரியவில்லை உங்களுக்காவது தெரியுமா?

Muse (# 01429798200730556938) said...

மகேந்திரன்,

ராமஸாமி நாயக்கர் ஹிந்தியை ஒரு முறைகூட ஆதரிக்கவில்லை என்று கூறுகிறீர்களா?

கேள்வி அதுதான்.

dondu(#11168674346665545885) said...

"மேலோட்டமாக படித்துவிட்டு பின்னூட்டம் இட்டு கேள்விக் கனைகளை தொடுப்பது எதற்கென் எனக்குத் தெரியவில்லை உங்களுக்காவது தெரியுமா?"
படிக்காமல் கேட்டதாக ஏன் நினைக்கிறீர்கள்? அவற்றையெல்லாம் பெரியார் அவர்களின் கோணத்தில் மற்றுமே எழுதியுள்ளனர். முக்கியமாகப் பொருந்தாத் திருமணம் பற்றியது. என்னுடைய அது சம்பந்தமானப் பதிவைப் பார்த்தால் நான் 2 கேள்விகளையும் கேட்டது ஏன் என்பது உங்களுக்கு புரியும்.

அதே போல 1965 ஹிந்திப் போராட்ட விஷயத்திலும் பூசி மொழுகி விட்டனர். அதைத்தான் புளுகு என்றேன்.

உண்மையைக் கூறப்போனால் பெரியார் அவர்கள் பல முரண்பாடுகளின் உருவமாகவே இருந்தார். அது தவறு என்று கூற இயலாது. அவ்வளவு ஆண்டுகள் செயலாக இருந்த ஒருவர் தன் வாழ்நாளில் பல முறை தன் நிலைகளை மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும். அவற்றையெல்லாம் தற்கால சௌகரியங்களுக்காக பூசி மொழுகுவதைத்தான் நான் குறிப்பிட்டேன்.

அவரது ஆண்,பெண் கற்பு நிலைபாடுகளைப் பார்த்தால் டோண்டு ராகவன் அது பற்றியெல்லாம் எழுதியது ஒன்றுமே இல்லை என்று ஆகி விடும். அதற்காக நான் எழுதியது அவர் எழுதினார் என்பதால் அல்ல. அவற்றை நானே உண்மை என உணர்ந்ததால்தான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ப்ரியன் said...

/*மகேந்திரன்,

>>>>.... சும்மாவாச்சும் அதிலே வந்திச்சுன்னு சொல்ல எங்களுக்கும் தெரியும். உண்மையா இருந்தா ஸ்கேன் பண்ணி போடுங்க. இல்லாட்டி லிங்க் கொடுங்க. சும்மா நீங்க சொன்னா, தட்டிவிட்டான்குஞ்சு அப்படீன்னு தான் எடுத்துக்குவோம். <<<<<<

விடுதலையில் அப்படியெல்லாம் வரவில்லை என்று நிரூபிக்கிற தேவை தங்களுக்கும் உண்டு.*/

மன்னிக்கனும் ம்யூஸ் நான் யார் பக்கமும் அல்ல.ஏனென்றால் எனக்கு இரு தலைவர்கள் பற்றியும் விரிவான அறிவு குறைவு.

ஆனால் குற்றம் சாட்டுபவர்கள்தான் நிரூபிக்கவேண்டியவராய் இருக்கிறார்.டோண்டு குற்றம் சாட்டினார் அதனால் அவர் நிரூபிக்க வேண்டியவராகிறார் அவருக்கு நீங்கள் வக்காலத்து வாங்குவாதால் வேண்டுமென்றால் நீங்கள் கூட நிரூபிக்க முயலலாம் தவறில்லை.அதை விட்டு மகேந்திரனை நிரூபிக்கிற தேவை உமக்கும் உண்டு என்பது அபத்தம்.

மகேந்திரன் அருமையான பதிவு பெரியாரை அதிகம் அறியா இளைய சமூகமான எங்களுக்கு அவரைப்பற்றி அறிய தந்தமைக்கு நன்றி

பாராட்டுக்கள்

Unknown said...

//ராமஸாமி நாயக்கர் ஹிந்தியை ஒரு முறைகூட ஆதரிக்கவில்லை என்று கூறுகிறீர்களா//

ம்யூஸ் அவர்களே அது அந்த பாப்பான் ராஜாஜிக்கு மட்டுமே தெரியும்.

Anonymous said...

டோ ண்டுவுக்கு ரொம்ப காலமாய் பெரியாரின் திருமணத்தைப்
பற்றி பயங்கர கவலை. 26 வயது தாண்டிய ஒரு மேஜர் பெண்ணை
அவர் 'விருப்பத்தோடுதானே' திருமணம் செய்தார்?

யாராவது அனுராதா ரமணன் மாதிரி தாத்தா கைய புடிச்சு இழுத்தார்
என்று கூச்சல் போட்டார்களா?

Unknown said...

டோன்டு அவர்களே பெரியாரின் நிலைப்பாடு மாறிக்கொண்டே வந்திருக்கிரது என்பதில் எனக்கும் ஐயமில்லை அதை அவரே பலமுறை சொல்லி யிருக்கிரார். நாகம்மை மறைவுக்கு பின் எழுதிய கட்டுரை ஒன்று முத்துக்குமரனின் பதிவில் இருக்கிரது, அதே போல மணியம்மை திருமணத்தின் போது என்ன நடந்தது என்பதும் எல்லோருக்கும் தெரியும். உண்மையில் வாய்ப்பு தேடிக்கொண்டிருந்த அண்ணாவுக்கு இது ஒரு வாசலாக அமைந்தது அவ்வளவே. மேலும் ஒருவனின் தனிமனித ஒழுக்கம் பற்றி அவர் என்ன சொன்னார் என்ன செய்தார் என்பதுவும் சமீபத்தில் சிவபாலன் பதிவில் இட்ட பெரியாரின் பொன்மொழிகளில் மிக விரிவாக அலசப் பட்டன. அதே போல கற்பு நிலையும். பெரியாரே சொன்னது போல " இதையெல்லாம் முன்னெடுத்துச் செல்ல எனக்கு யோக்கியதை இருக்கிரதோ இல்லையோ ஆனால் யாரும் இதை செய்யவில்லை என்பதால் நான் செய்கிரேன் பகுத்தறிவு ஒன்றினையே எனது துனையாக கொண்டு திட்டங்கள் வகுத்து அதன்படி நடக்க வேண்டும் எனச் சொல்கிறேன்" இதுவும் அவர் சொன்னதுதான். அவரின் பொதுவாழ்க்கை என்பது வெறும் அரசியல் வாதியெனும் குப்பை யில்லை பெரியார் தனது சுமாரான எழுபது ஆண்டுகாலத்தில் எத்தனையோ முடிவுகளிலிருந்து மாறியிருக்கிரார். ஆனால் இங்கே நீங்கள் புளுகு எனச் சொன்னதை நிரூபிக்கச் சொன்னேன். முடியாது என்றீர்கள். அதற்கு விளக்கமும் தந்தீர்கள், அவர் அப்படி செய்தார் எனச் சொன்னது தாங்களாக இருக்கவே அதற்கான விடையை கேட்டேன். அதைவிடுத்து பதிவில் இருக்கும் ஒரே செய்தியை விடுதலை பத்திரிகையில் படித்ததாக சொல்லிடும் நீங்கள் அதே விடுதலையில் இருந்து எடுக்கப் பட்ட தகவலினை சொன்னால் பூசி மெழுகுவதாக சொல்கிறீகள். பெரியாரின் திருமணம் என்ன காரணத்துக்காக நடந்தது என்பது பெரியாருக்கும் மணியம்மைக்கும் மட்டுமே தெரியும், அதே போல அண்ணா ஏன் போனார் என்பதும் அண்ணாவுக்கும் பெரியாருக்கும் மட்டுமே தெரியும். அதாவது செயலலிதா சசிகலா உறவு போல 1996 இல் துறத்தி விடப்பட்ட சசிகலா இப்போது மீண்டும் சகோதரியுடன், ஏன் போனார் ஏன் வந்தார் என்பது அவர்கள் இருவருக்கும் மட்டுமே தெரியும், அதே போலத்தான் இதுவும், ஆனால் இந்தி எதிர்ப்பு, ஆதரவு, தினிப்பு என்பது அப்படியில்லை எல்லோருக்கும் தெரியும், 1938, 1948, 1965 இக் காலகட்டங்களில் இந்தி மீதான தனது நிலைப்பாடு ஒன்றாக இருக்கும் படியே நடந்துகொண்டிருக்கிறார். நாம் முதலில் இந்த விவகாரத்துக்கு ஒரு முடிவைக் காண்போம், மணியம்மை கல்யாணப் பேச்சினையும், கற்பு நிலைப் பாட்டையும் அப்புறம் பேசலாம்

Unknown said...

//மன்னிக்கனும் ம்யூஸ் நான் யார் பக்கமும் அல்ல.//

ப்ரியன் தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி அதைப் பற்றியெல்லாம் நீங்க கண்டுக்காதீங்க வினோத்துவா கொஞ்சம் வினோதமாத்தான் எழுதுவாரு. :0

கப்பி | Kappi said...

விரிவான, அருமையான பதிவு மகேந்திரன்..

நன்றி

Muthu said...

ஆங்கிலக் கல்வியைப் புறக்கணித்தால் பார்ப்பனர்கள் ஆங்கிலம் படித்து முன்னேறி விடுவார்கள் என்று பெரியார் எச்சரிக்கை செய்து இருக்கிறார். ஆனால் இன்றைய சூழலில் தமிழ்க் கல்வி வலியுறுத்தப்படுகிறதே...

அன்றைய பெரியாரின் எச்சரிக்கை என்பது மிகுந்த கவனத்துக்குரியது. பெரியார் தமிழைப் பற்றிக் கவலைப்பட்டதை காட்டிலும், தமிழனைப் பற்றிக் கூடுதலாகக் கவலைப்பட்டார். தமிழனின் முன்னேற்றத்திற்குத் தடையாக தமிழாகவே இருந்தாலும் பெரியார் அதனை எதிர்த்து இருக்கிறார். எனவே தமிழன் முன்னேற வேண்டும் என்ற வேட்கையில்தான் அவர் ஆங்கிலம் படிபடி என்று திரும்பத் திரும்ப சொன்னார். அவருடைய பழக்கம் ‘ஓங்கிச் சொல்லுதல்’. கொஞ்சம் ஓங்கிச் சொன்னால்தான் பத்துக்கு நாலு பழுதில்லாமல் போகும் என்று கருதினார்.


suba veerapandiyan on periyar
எனக்குத் தமிழ் மீது எந்த விரோதமும் இல்லை. நான் தமிழில்தான் பேசுகிறேன். தமிழில்தான் எழுதுகிறேன். எனக்கு தமிழ் மட்டும்தான் தெரியும். நான் தமிழ் மக்களுக்காகத்தான் பேசுகிறேன். அதை அறிவியல் மொழி ஆக்க வேண்டும் என்பதற்காகவும், தமிழர்கள் வேலை வாய்ப்பு பெற வேண்டும் என்பதற்காகவும் சொல்கிறேனே தவிர எனக்கு வேற ஒன்றும் கோபம் இல்லை என்று பெரியாரே எழுதி இருக்கிறார். ஆகையால் அன்றைக்கு அவர் சொன்ன அந்தச் சூழலில் நிச்சயமாக 60 களிலும் 70 களிலும் ஆங்கிலம் கற்காமல் தமிழர்கள் இருந்து இருந்தால் பார்ப்பனர்கள் மட்டுமே முன்னேறி இருப்பார்கள் என்பதை மறுக்க முடியாது. இன்றைக்குச் சூழல் மாறிக் கொண்டு இருக்கிறது.

இன்றைக்குக் கணிப்பொறி மொழி என்பது தமிழும் அல்ல. ஆங்கிலமும் அல்ல. எந்த மொழியும் அல்லாமல் தனி மொழியாக வளர்ந்து கொண்டு இருக்கிறது. எனவே இன்றைக்கு நாம் பல அறிவியல் நூல்களைத் தமிழில் மொழி பெயர்க்கத் தொடங்கி இருக்கிறோம். ஆகையினால் ஆங்கிலம் படித்தால்தான் முன்னேற முடியும் என்ற நிலையிலிருந்து மாற்றமில்லை. ஆனால் ஆங்கிலத்தை புறக்கணித்து விடுகிற நிலைக்கு நாம் முன்னேறி விடவில்லை என்பதையும் ஏற்க வேண்டும்.

தமிழ்நாட்டில், தமிழ்நாட்டுப் பள்ளிகளில், நீதிமன்றங்களில், வழிபாட்டுத் தலங்களில், இசை அரங்குகளில் அனைத்தும் தமிழே இருக்க வேண்டும். அதற்காகப் போராட வேண்டும். அதே நேரத்தில் ஆங்கிலத்தை ஒரு மொழிப் பாடமாகக் கற்றுக் கொள்வதில் எந்தப் பிழையும் இல்லை. அல்லது கற்றுக் கொள்ள வேண்டிய தேவை இன்னமும் இருக்கிறது.

Muthu said...

இராகவ அய்யங்கார், கோபால அய்யர் போன்ற தமிழறிஞர்களின் பங்கை என்னவென்று சொல்வீர்கள்?

தமிழ்மொழியின் முன்னேற்றத்தில், இனத்தின் முன்னேற்றத்தில் கூட பார்ப்பனர்களின் பங்கு இருப்பதை மறுக்கவில்லை. எப்போதும் விதியை வைத்துத்தான் நாம் பேச முடியுமே தவிர விதி விலக்கை வைத்து அல்ல. எத்தனை பார்ப்பன அறிஞர்கள் அப்படிப் பாடுபட்டார்கள்? திரும்பத் திரும்ப உ.வே. சாமிநாதய்யரைப் பற்றிச் சொல்வார்கள். உ.வே.சாவுக்கு முன்பு பதிப்புத்துறையில் யாழ்பாணத்தைச் சேர்ந்த நாவலரும், சி.வை. தாமோதரம் பிள்ளையும் பெரும்பங்கு வகித்திருக்கிறார்கள். அந்த வரலாறு மெதுவாக மறைக்கப்படுகிறது. உ.வே.சா. பதிப்பாசிரியர் என்பது உண்மைதான். ஆனால் இறுதி வரையில் அவர் பார்ப்பனீயக் கருத்துக்களை விடாதவராகவே இருந்தார் என்பது மறுக்க முடியாத உண்மை. அவர்களையும் தாண்டி இலக்கியத்துறையில் மட்டுமில்லாமல் பகுத்தறிவுத் துறையில் A.S.K. அய்யங்கார் போன்றவர்கள் இருந்து இருக்கிறார்கள். விதிவிலக்குகளை வைத்துக் கொண்டு விதிகளை வகுக்க முடியாது.

வேத மொழி சமஸ்கிருதம்தான் என்று கருதுவதோடு இன்னமும் அவர்கள் தங்களுடைய தாய்மொழி சமஸ்கிருதம் என்கிற மனோ நிலையிலிருந்து விடுபடவில்லை.

same suba vee

Muthu said...

http://www.keetru.com/ungal_noolagam/jul06/subavee.html

this may help some

Unknown said...

முத்து (தமிழினி) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முதலில்.

இங்கே விவகாரம் பெரியாரின் ஆங்கில மொழி குறித்த நிலைப் பாட்டுக்கல்ல 1965ல் பெரியார் ஹிந்தித் தினிப்பை ஆதரித்தார் என்பதே.. அதை தான் விடுதலையில் படித்ததாக டோண்டு அவர்கள் சொல்கிறார். இக் கட்டுறையும் விடுதலையில் இருக்கும் செய்திகளை கொண்டே எழுதப்பட்டது என்றால் இது பூசி மெழுகிய பதிவு என்கிறார்... சுட்டியை தேடி படித்துவிட்டு மீண்டும் வருகிறேன்

மு. சுந்தரமூர்த்தி said...

டோண்டு சார் ஓராண்டுக்கு முன்னரும் இதே பாட்டுகளைத் தான் பாடினார். சுட்டிகள் இங்கே:

http://kumizh.blogspot.com/2005/03/1_30.html

http://kumizh.blogspot.com/2005/04/2.html

Unknown said...

திரு சுந்தரமூர்த்தி அவர்களே பெரியார் 1965ல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை எதிர்த்திருக்கிறார் தான் ஆனால் இந்தியை ஆதரிப்பதாக எங்கும் இல்லை ஆனால் இவரோ எதிரிக்குஎதிரி நண்பந்தானே எனும் அதே பல்லவியை பாடிக்கொண்டிருக்கிறார். அப்போது இந்தியை எதிர்க்க ஆங்கிலமே சிறந்த வழி என்றும் அதை கடைபிடிக்க வேண்டுமே ஒழிய அதைவிடுத்து இந்தியை மட்டும் எதிர்ப்பதில் உபயோகமில்லை என்றும் சொல்லியிருக்கிரார். அதைத்தான் இந்தியை ஆதரித்தார் ஆதரித்தார் என்று பாடிக்கொண்டு இருக்கிறார் வருகைக்கும் சுட்டிக்கும் நன்றி

Anonymous said...

dondu ! rajaji supported to ariyaisum. he never think tamil culture.

ROSAVASANTH said...

Thanks for giving the detailed life long activities of periyar. 'thalaippil mattum uNmai iruppathAka' solvathu pAppAra puththi; athu appatiththAn vElai seyyum.

I have read the explanation given by periyar for not supporting Hindi agitation. At no point he supports hindi imposition. He was only against the political games of DMK, against Kamarajar. What should be noted is the oppurtunism of Rajaji, who was for hindi imposition all his life, in fact who imposed hindi, was supporting the DMK's agitation. Dondu will throw all his araivEkkaattu facts. He will demand proofs from others, but will never provide one when he writes. For example he never quoted anything directly from periyar;s speech, but still talks all sorts of nonsense.

Sorry to write in English, and sorry for other spelling and gramattical mistakes. thanks!

Unknown said...

நன்றி ரோசா வசந்த். ம்யூஸ் சொன்னதில் எனக்கும் வருத்தமே நான் நிறைய இடங்களில் (ராமசாமி நாயக்கர்)இப்படி குறிப்பிடாதீர்கள் என்று ம்யூஸிடமே பலமுறை பின்னூட்டமிட்டும் மீண்டும் என்பதிவின் பின்னூட்டத்திலும் ராமஸாமி நாயக்கர் எனும் வார்த்தை பிரயோகம் வந்தது அதனால் தான் கடுமையாக நானும் பாப்பான் ராஜாஜி எனும் வார்த்தையை பயன்படுத்தினேன் மேலும் பெரியார் 1965 இல் இந்தி எதிர்ப்பு போராடத்தை ஏன் ஆதரிக்க வில்லை என தெரிந்தும் அது போராட்டத்துக்கான எதிர்ப்பே அன்றி இந்திக்கு ஆதரவில்லை என்பதை பல இடங்களில் பெரியார் குறிப்பிட்டதையும் மறுப்பது என்ன வகை வாக்குவாதம் என்பது தெரியவில்லை.

உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி

dondu(#11168674346665545885) said...

1965-ல் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் அந்த அளவில் ஏன் வர வேண்டும்? ஏன் 1964லிலோ அல்லது 62டிலோ வந்திருக்கக் கூடாது என்பதை யோசித்தீர்களா? நான் கூறுகிறேன்.

அரசியல் சட்டப்படி 1965 ஜனவரி 26 முதல் ஹிந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழி, ஆங்கிலம் அல்ல. நடுவில் நேரு அவர்கள் கொடுத்த வாக்குறுதிக்கு சட்ட பலம் இல்லை. ஆகவே ஹிந்தி எதிர்ப்பு ஜனவரி 25-ஆம் தேதி தமிழ்நாடெங்கும் வெடித்தது. அந்த எதிர்ப்பு அலையில் திக்குமுக்காடி, நேருவின் வாக்குறுதிகளுக்கு சட்ட அங்கீகாரம் கொடுக்கப்பட்டது. 1967 தேர்தலில் தோற்ற காங்கிரஸ் பிறகு தமிழகத்தில் இன்று வரை பதவிக்கு வரவில்லை.

அவ்வளவு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது அப்போராட்டம். அந்த நேரத்தில் அதை எதிர்த்தவர்கள், அது எந்தக் காரணத்திற்காக இருந்தாலும் சரி, ஹிந்திக்கு துணை போனவர்களே.

அதிலும் பெரியார் அவர்கள் எதிர்த்தது அவர் காமராஜ் மற்றும் காங்கிரசை ஆதரித்ததாலேயே. அந்த நிலை 1967 வரை தொடர்ந்தது. பிறகு அண்ணா அவர்கள் பெருந்தன்மையுடன் அவரிடம் சமாதானக் கரத்தை நீட்ட, அவரும் சிறிதும் கூச்சமின்றி தன் ஆதரவை மாற்றிக் கொண்டார்.

பிறகு ஒரு சமயம் தான் காமராஜ் அவர்களுடன் இருந்த போட்டோ, அண்ணா அவர்களுடன் இருந்த போட்டோ ஆகிய இரண்டிலும் தான் செய்த புன்னகையைப் பற்றி கமெண்ட் செய்யும்போது அண்ணா அவர்களுடன் செய்த புன்னகை மனப்பூர்வமானது என்று வேறு பேசினார். அது அக்கால்க் குமுதத்தில் வந்தது. அதையும் அப்போது படித்திருக்கிறேன்.

நீங்கள் இப்பதிவின் ஒரு பின்னூட்டத்தில் கூறியிருக்கிறீர்கள்:
"எல்லோருக்கும் தெரியும், 1938, 1948, 1965 இக் காலகட்டங்களில் இந்தி மீதான தனது நிலைப்பாடு ஒன்றாக இருக்கும் படியே நடந்துகொண்டிருக்கிறார்."
இன்னும் அதையே கூற ஆசைப்படுவீர்களா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Unknown said...

திரு டோண்டு அவர்களே உங்கள் ஆலோசனைப்படியே தங்களின் இரு பின்னூட்டங்களும் வெளியிடப் பட வில்லை. நன்றி.

//இன்னும் அதையே கூற ஆசைப்படுவீர்களா?
//


உங்கள் கேள்விக்கான பதில் விரைவில் தனிப்பதிவாக

Unknown said...

திரு டோண்டு அவர்களின் ராஜாஜி எனும் மாமனிதர் பதிவில் ராஜாஜி பள்ளிகளை மூடினார் என்பதற்காக குத்தூசி தியாக ராஜனின் புத்தகம் மேற்கோள் காட்டினேன். ஆனால் அப் புததகம் 1997 இல் எழுதப் பட்டதால் அதன் நம்பிக்கை சந்தேகமானது என்று எனது கருத்துக்கு பருப்பு சொன்னார், சமகால பதிப்பை மட்டுமே நம்புவதாகவும் மற்றவற்றை நம்புவதில்லை எனும் அவரின் மறுப்புக்கு ராமாயனம் மகா பாரதமும் அடங்குமா எனக் கேட்டேன் நான் கேட்காத விளக்கமெல்லாம் தந்தவர் அதற்கு இபோது விடையளிக்க வில்லை.... ஆதாரம் கொடுத்தல் நம்பதவர்கள் அதாரம் தரவேண்டும் என கேட்பது ஏன்?

dondu(#11168674346665545885) said...

"சமகால பதிப்பை மட்டுமே நம்புவதாகவும் மற்றவற்றை நம்புவதில்லை எனும் அவரின் மறுப்புக்கு ராமாயனம் மகா பாரதமும் அடங்குமா எனக் கேட்டேன் நான் கேட்காத விளக்கமெல்லாம் தந்தவர் அதற்கு இபோது விடையளிக்க வில்லை.... ஆதாரம் கொடுத்தல் நம்பதவர்கள் ஆதாரம் தரவேண்டும் என கேட்பது ஏன்?"

அதற்கான பதிலை இந்திய எநேரம் பிற்பகல் 2.58-க்கு போட்டாகி விட்டது. பொறுமையுடன் படிக்கவும். சமகாலப் பதிவை ப்ரிஃபர் செய்வதன் முக்கியக் காரணமே அதை குக் அப் எல்லாம் செய்ய முடியாது. போகிற போக்கில் ராஜாஜி பள்ளைகளை மூடினார் என்று சொன்னால் எப்படி. நான் ஊகிப்பத்கு என்னவென்றால் அவ்வாறு ஏதாவது மூடியிருந்தால் அவை பேப்பரில் மட்டும் இயங்கும், அரசு மானியம் பெரும் பள்ளிகளாக இருந்திருக்க வேண்டும். நீங்கள் நினைப்பது போல செயலாக நடந்து கொண்டிருக்கும் பள்ளிகளாக இருந்திருக்க முடியாது. அவ்வாறு செய்திருந்தால் எதிர்க்கட்சியினர் சும்மா இருந்திருப்பார்களா? பொங்கி எழுந்திருக்க மாட்டார்களா?

மற்றப்படி மஹாபாரதம், ராமாயணம் ஆகியவற்றை நீங்கள் குறிப்பிட்டதற்கான பதில் என் ராஜாஇ பதிவிலிருந்து நகலெடுத்து இங்கு ஒட்டியிருக்கிறேன்.

"மகாபாரதம், ராமாயணம் மற்றும் கீதைக்கான ட்ரீட்மெண்டே தனி. அவை நம்பிக்கையை ஆதாரமாகக் கொண்டவை. நம்பினால் ராமாயணம் அவதாரக் கதை, நம்பாதவற்கு வெறும் கதை. அதேதான் மஹாபாரதத்துக்கும். பலர் கூறுகிறார்கள், கீதை அவ்வளவு பெரியது, கண்ணன் அதை உபதேசிக்கும்போது மற்ற வீரர்கள் யுத்தம் செய்யாது என்ன அவல் மென்று கொண்டிருந்தார்களா என்று. அது பற்றிய பதில் என் மனதில் உண்டு. அவற்றைக் கேட்கும் பொறுமை உங்களிடம் இருக்காது என ஊகிப்பதால், அதற்கான பதிலை இங்கு அளிக்க விரும்பவில்லை."

அன்புடன்,
டோண்டு ராகவன்

Unknown said...

அது போகிற போக்கில் சொல்லப் பட்டதல்ல . அதே போல குத்தூசி தியாகராஜனையும் உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும்... என்றே நினைக்கிரேன். புராணங்களுக்கும் இதிகாசங்களுக்கும் ஆதாரம் கேட்காத நீங்கள் இப்படி மனிதனய் நடமாடிய ஒருவர் எழுதிய புத்தக ஆதாரத்தை அதன் நம்பிக்கையை ம்றுப்பது ஆச்சரியம். அதே போல நேஷனல் புக் ட்ரஸ்டும் எப்படி என்பது தெரியும் இதிலும் நீங்கள் பிடிவாதமாக மறுப்பது ஏன் எனத் தெரியவில்லை.


Era Rathina Giri, Thanthai PeriyarVazhvum Thondum, National Book Trust, New Delhi, 1997, p 70.

Anonymous said...

MK,

The following link in a related article by Thiru has more references/proof/ஆதாரம் on the suject of whether Rajaji closed schools or not.
http://aalamaram.blogspot.com/2006/08/2.html#c115541004614183996

Unknown said...

சுட்டிக்கு நன்றி அனானிமஸ்: இது போல் பல சுட்டிகள் புத்தக ஆதாரம் காட்டியாயிற்று ஆனல் அந்த சமகால நூல் வேணும் எனும் ப்ழைய பல்லவிதான் இன்னும் .

ஆப்பு said...
This comment has been removed by a blog administrator.
ஆப்பு said...
This comment has been removed by a blog administrator.
ஆப்பு said...
This comment has been removed by a blog administrator.
ஆப்பு said...

மகேந்திரன்,

தயவு செய்து என் பின்னூட்டங்களை வெளியிடவும்.

Unknown said...

இது ஆப்பு அவர்கள் அனுப்பிய பின்னூட்டம் தனிமனித தாக்குதல் இருக்கும் இடங்கள் நீக்கப்பட்டன. மன்னிக்கவேண்டும் ஆப்பு : புரிந்துகொள்வீர்கள் என்று நினைக்கிரேன்


//அவரது ஆண்,பெண் கற்பு நிலைபாடுகளைப் பார்த்தால் டோண்டு ராகவன் அது பற்றியெல்லாம் எழுதியது ஒன்றுமே இல்லை என்று ஆகி விடும். அதற்காக நான் எழுதியது அவர் எழுதினார் என்பதால் அல்ல. அவற்றை நானே உண்மை என உணர்ந்ததால்தான்.//

ராகவனின் அறிவுரைகளைப் படியுங்கள்!

டோண்டு ராகவன் எழுதிய கருத்துக்களை இங்கே மக்கள் மன்றத்தின் முன்பு வைக்கிறேன்.

* தற்சமயம் பெண்கள் தங்கள் இச்சைகளை வெளிப்படுத்துவதில் அதிகம் தயங்குவதில்லை.

* உடல் இச்சையை அபாயமின்றி எவ்வாறு பெண்கள் பூர்த்தி செய்து கொள்வது?அடுத்த பதிவில் பார்ப்போம்.

* இப்படி அப்படி என்று இருந்தாலும் மற்றவர்களுக்கு தெரியாமல் எச்சரிக்கையுடன் நட்ந்து கொண்டால் பின்விளைவுகளிலிருந்து தப்பிக்கலாம்.

* குஷ்பு சொன்னதையே நானும் பின்மொழிகிறேன். பெண்கள் தங்கள் உடல் இச்சையை தணித்துக்கொள்ளட்டும். ஆனால் மிகுந்த தற்பாதுகாப்புடன் செயல்படவேண்டும்.. கருவுறக் கூடாது. கருகலைப்பு உடலுக்கு கெடுதல். பால்வினை நோய்கள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆணுறை உபயோகத்தை வலியுறுத்த வேண்டும். ரொம்ப முக்கியம், பரம ரகசியமாகச் செயல்படவேண்டும். மாட்டிக் கொள்ளக் கூடாது. என்னதான் இருந்தாலும் இப்போது இருக்கும் சமூகக் கட்டுப்பாடுகள் கடுமையானவை. ஆகவே மாட்டிக் கொள்ளக் கூடாது.

* ஒரு மாதவிடாய் வந்தால் அதற்கு முன் எவ்வளவு உடலுறவு கொண்டாலும் கணக்கில் வராது. ஆகவே தேவையில்லாது குற்ற உணர்ச்சி கொள்ள வேண்டாம்.

* ஆனால் ஒன்று. எந்த செயலுக்கும் எதிர்வினை வரும். ஆகவே அதற்கெல்லாம் துணிந்தவர்கள்தான் இதையெல்லாம் செய்ய வேண்டும். மற்றவர்களுக்கு? fஇரெ-தான்.

கூறினால் இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம்.

இவண்,
ஜி.ரமேஷ்குமார் எம்சிஏ,
மென்பொருள் பிரிவு,
போலியார் தலைமைக் கழகம்,
23ஏ,சிம்ரன் ஆப்பக்கடை மேல்மாடி,
துபாய்.

Tஎல்: +46 8 411 11 30
Fஅ௯: +46 8 411 11 35

பெரியாரும் இப்படித்தான் சொல்லியிருக்கிறார் என்பதற்காக டோண்டு ராகவனின் கருத்தை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் பெண்களைப் பார்த்து, 'திருமணம் என்பதில் அதிக நம்பிக்கை கொள்ள வேண்டாம். உடல் இச்சையை தணித்துக்கொள்ள விபச்சாரத்தில் ஈடுபடுங்கள்" என்று பகிரங்கமாக சொல்கிறார்.சொல்லப்பட்ட கருத்து கண்டனத்துக்கு உரியது.

இவர் சொல்லியிருக்கும் பாணி, ஏதோ எல்லாப்பெண்களும் உடல் இச்சையை தணிக்க அலைவது போலவும், கர்ப்பம் ஏற்படுமே என்ற ஒரே கவலையில்தான் கொஞ்சம் கட்டுப்பாடாக இருப்பது போலவும் பேசுகிறார்.

அப்படியென்றால் கற்பழிப்பு வழக்குகள் ஏன் தொடரப்படுகின்றன?. கற்பழித்தானா, சரி நமக்கும் உடலின்பம் கிடைத்தது என்று போய்க்கொண்டிருப்பார்களே..!.

"கருத்தடை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டதும், பெண்கள் அச்சமின்றி வீறுகொண்டு எழுந்து, ஆண்களே அஞ்சும் அளவுக்கு உடல் உறவில் ஈடுபட்டார்கள்" என்று டோண்டு ராகவன் கூறுகின்றாரே அதற்கு பொருள் என்ன?. பெண்களெல்லாம் காமவெறிப் பிண்டங்கள் போலவும், கர்ப்பத்துக்கு பயந்தே அவர்கள் கட்டுப்பாடாக இருந்தது போலவும் அதற்குண்டான தடை நீங்கியதும் கட்டுப்பாடற்ற விபச்சாரத்தில் ஈடுபடத் துவங்கியது போலவும் பேசுகிறார்.

தவறு செய்த பெண்களைத் தண்டிக்கும்போது, ஆண்களும் அந்த தண்டனைக்கு உடபடுத்தப் பட வேண்டும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. தவறு செய்வோர் யாவரும் தண்டனைக்குள்ளாக வேண்டியவர்களே.


//என்ன புளுகல்? ஹிந்தியை ஆதரித்து அப்போது விடுதலை பத்திரிகையில் பல கட்டுரைகள் வந்தன, பெரியார் அவர்கள் ஆசியோடு. நானே அவற்றை அக்காலக் கட்டத்தில் படித்துள்ளேன். //

அப்படி என்றால் சின்னவயதிலேயே ராகவனுக்கு தமிழைவிட ஹிந்தியைத்தான் பிடித்து இருக்கிறது!

சின்ன வயதில் தன் தந்தையிடம் தனது பெயரான ராகவன் என்பதை ராகவாச்சாரி அல்லது ராகவ ஐயங்கார் என அரசு கெஜட்டில் மாற்றச் சொன்ன ஜாதிவெறிப் ஆனால்தன் வெளிப்படையான எண்ணங்கள் பதிவில் தான் ஏன் தனது ஜாதியான வடகலை ஐயங்கார் என்னும் கேவலமான கீழ்த்தரமான ஜாதியைப் பெருமையாக வெளியே சொன்னேன் என்பதற்கு தமிழ்நாட்டில் எல்லோரும் பார்ப்பனர்களை தவறாகப் பேசுகிறார்கள், அதனால்தான் என்றார். அப்படி என்றால் அந்த சின்ன வயசிலேயே தமிழ்நாட்டில் பாப்பான்களை தவறாக நடத்துவதும் பேசுவதும் அவருக்குத் தெரிந்ததா? அவர் சின்ன பிள்ளையாக இருந்த காலகட்டங்களில் பாப்பான் அல்லவா மற்றவர்களை ஏய்த்தும் அடிமைப்படுத்தியும் வாழ்ந்து கொண்டிருந்தான்?

பொய்யும் புரட்டும் எத்தனை நாளைக்கு டோண்டு ?