பார்ப்பன எதிர்ப்பு ஏன்?

பார்ப்பனத் தோழர்களே! நான் மனிதத் தன்மையில் பார்ப்பனர்களுக்கு எதிரி அல்லன். தமிழ்நாட்டிலேயே அநேக பார்ப்பனப் பிரமுகர்கள் - பெரியோர்கள் ஆகியோர்களுக்கு அன்பனாகவும், மதிப்புக்குரியவனாகவும் நண்பனாகவும் கூட இருந்து வருகிறேன். சிலர் என்னிடத்தில் அதிக நம்பிக்கையும் வைத்திருக்கிறார்கள். சமுதாயத் துறையில் பார்ப்பனர்கள் அனுஷ்டிக்கிற உயர்வு, அவர்கள் அனுபவிக்கிற அளவுக்கு மேற்பட்ட விகிதம் - ஆகியவைகளில்தான் எனக்கு வெறுப்பு இருக்கிறது. இது பார்ப்பனர்களிடம் மாத்திரமல்ல, இந்த நிலையில் உள்ள எல்லோரி டத்திலுமே நான் வெறுப்புக் கொள்கிறேன். இந்நிலை என்னிடத்தில் ஏற்பட்டிருப்பதற்குக் காரணம், ஒரு தாய் வயிற்றில் பிறந்த எல்லா மக்களுக்கும் சம அனுபவம் இருக்க வேண்டும் என்று கருதி, ஒன்றுக்கொன்று குறைவு, அதிகம் இல்லாமல் பார்த்துக் கொள்வது எப்படி ஒரு தாய்க்கு இயற்கைக் குணமாக இருக்குமோ, அது போலத்தான் எனக்கும் தோன்றுகிறது.
மற்றும், அந்தத் தாய் தனது மக்களில் உடல் நிலையில் இளைத்துப் போய், வலிவுக்குறைவாய் இருக்கிற மகனுக்கு, மற்ற குழந்தைகளுக்கு அளிக்கிற போஷணையை விட எப்படி அதிகமான போஷணையைக் கொடுத்து மற்ற குழந்தைகளோடு சரிசமானமுள்ள குழந் தையாக ஆக்க வேண்டுமென்று பாடுபடுவாளோ, அது போலத் தான் நான் மற்ற வலுக்குறைவான பின் தங்கிய மக்களிடம் அனுதாபம் காட்டுகிறேன். இந்த அளவு தான் நான் பார்ப்பனர்களிடமும், மற்ற வகுப்புகளிடமும் காட்டிக் கொள்ளும் உணர்ச்சி ஆகும்.
உண்மையிலேயே பார்ப்பனர் கள் தங்களை இந்நாட்டு மக்கள் என்றும், இந்நாட்டிலுள்ள மக்கள் யாவரும் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள் என்றும், தாயின் செல்வத்துக்கும், வளப்பத்துக்கும் தாங்கள் எல்லோரும் சரிபங்கு விகிதத்துக்கு உரிமை உடையவர்கள் என்றும் கருதுவார்களேயானால், இந்நாட்டிலே சமுதாயப் போராட்டமும், சமுதாய வெறுப்பும் ஏற்பட வாய்ப்பே இருக்காது.
நான் காங்கிரஸில் இருந்த காலத்தில் - அதாவது எனது நல்ல நடுத்தர வயதான 40-வது வயது காலத்தில் - நான் ஒரு சுயநலமும் எதிர்பாராமல், எதிர்பார்க்க வேண்டிய அவசியமும் இல்லாமல் (உயர்ந்த அந்தஸ்தில்) இருக்கும் போதே, பார்ப்பன சமுதாயத்தில் இரண்டறக் கலந்து, எவ்வளவு தொண்டு செய்திருக்கிறேன் என்பது எல்லாப் பார்ப்பனர்களுக்கும் தெரியும். நான் காங்கிரஸிலிருந்து பிரிந்ததே, பார்ப்பன வெறுப்புணர்ச்சி ஏற்பட்டுத்தான் பிரிந்தேனேயொழிய, மற்றபடி எந்தவிதமான சுயநலம் காரணமாகவும் பிரியவில்லை. பிரிந்த பிறகு பார்ப்பன வெறுப்புணர்ச்சியோடு தொண்டாற்றுகிறேன் என்றால், அத்தொண்டில் எனக்குச் சுயநலம் என்ன இருக்கிறது? அல்லது எனது தொண்டில் நான் வெளிப்படையாகச் சொல்லுகின்ற கருத்தல்லாமல் வேறு உட்கருத்து என்ன இருக்கிறது?
என்னைப் போலவே என் கருத்துகளுக்கெதிரான கொள்கைகளின் மீது உண்மையாகப் பாடுபடுகிற இராஜாஜி அவர்களுக்கு என்னைப் பற்றி நன்றாகத் தெரியும். எப்படியோ நாங்கள் இரு பிளவாகப் பிளந்து ஒன்றுக் கொன்று ஒட்டமுடியாத அளவு விலகிப் போய்க் கொண்டிருக்கிறோம்.
எனக்கு, "நான் தோல்வியடைய மாட்டேன்; நிதானமாகவாவது வெற்றியடைவேன்" என்கிற நம் பிக்கை உண்டு. இராஜாஜியோ, எப்படியோ யோசனையின்றி ஆத்திரப்பட்டுத் தவறான வழியில் இறங்கிவிட்டார். உண்மையிலேயே வருணாசிரம சாதி முறையைப் புதுப்பித்து நிலைநிறுத்துவது சாத்தியமாகுமா? காந்தி இப்படிச் சொல்லித் தப்பித்துக் கொண்டார் என்றால், அது இன்றைக்கு 35 ஆண்டுகளுக்கு முந்திய காலம். இந்தக் காரணத்தினால் தான், அவர் கொல்லப்பட்டதற்குத் தமிழர்கள் அவ்வளவாக வருந்தவில்லை. இன்றைய இராஜாஜியின் கருத்தை, என்னை அவர் காங்கிரஸில் இழுத்த காலத்தில் சொல்லியிருப்பாரேயானால், அவருக்கு ஏற்பட்ட பெருமையும், பதவி வாய்ப்பும், செல்வ வளர்ச்சியும் ஏற்பட்டு இருக்க முடியுமா? ஆகவே அவருடைய இன்றைய நிலைமை மக்களை ஏய்த்து வளர்த்தவர் என்றுதானே பொருள்? நான் அப்படியொன்றும் ஏய்க்கவில்லையே; உளறவும் இல்லையே?
நான் - எனக்கு ஞாபகமிருக்கிற வரையில் - என்னுடைய 10 ஆவது வயதிலிருந்தே நாத்திகன்; சாதி, சமயச் சடங்கு முதலியவற்றில் நம்பிக்கையில்லாதவன். ஒழுக்க சம்பந்தமான காரியங்களில் கூட, மற்றவர்களுக்குத் துன்பமோ, தொல்லையோ தரப்படாது என்பதைத் தவிர, மற்றபடி வேறு காரியங்களில் ஒழுக்கத்துக்கு மதிப்பு கொடுத்தவனும் அல்லன். பணம், காசு, பண்டம் முதலியவைகளில் எனக்குப் பேராசை இருக்கிறது என்றாலும், அவைகளைச் சம்பாதிப்பதில் சாமர்த்தியத்தையாவது காட்டியிருப்பேனேயொழிய, நாணயக் குறைவையோ, நம்பிக்கைத் துரோகத்தையோ காட்டியிருக்க மாட்டேன். யாரையும் ஏமாற்றலாம் என்பதில் நான் சிறிதுகூட முற்பட்டிருக்க மாட்டேன். வியாபாரத் துறையில் பொய் பேசி இருந்தாலும், பொது வாழ்வுத் துறையில் பொய்யையோ, மனதறிந்த மாற்றுக் கருத்தையோ வெளியிட்டிருக்கமாட்டேன்.
இப்படிப்பட்ட நான், எதற்காக ஒரு சமுதாயத்தாரிடம் விரோதமோ, குரோதமோ கொள்ள வேண்டும்? நான் நமது நாட்டையும், சமுதாயத்தையும் ஆங்கில நாட்டுத் தன்மைக்கும், நாகரிகத்திற்கும் கொண்டு வர வேண்டும் என்கிற ஆசையுடையவன். இதற்கு முட்டுக் கட்டையாகப் பார்ப்பன சமுதாயம் இருக்கிறது என்று சரியாகவோ, தப்பாகவோ கருதுகிறேன்.
தாங்கள் அப்படி இல்லையென்பதைப் பார்ப்பனர்கள் காட்டிக் கொள்ள வேண்டாமா? உண்மையிலேயே எனக்கு மாத்திரம் பார்ப்பனர்களுடைய ஆதரவு இருந்திருக்குமானால் நம் நாட்டை எவ்வளவோ முன்னுக்குக் கொண்டு வர என்னால் முடிந்திருக்கும்.
நம் நாடு இன்று அடைந்திருக்கிற இந்தப் போலி சுதந்திரம் என்பது ஒன்றைத் தவிர - மற்ற எல்லா வளர்ச்சிக்கும் பார்ப்பன சமுதாயம் எதிரியாக இருந்திருக்கிறது. இதுமாத்திரம் அல்லாமல், நாட்டில் சமயம், தர்மம், நீதி, அரசியல் என்னும் பேரால் இருந்து வளர்ந்து வரும் எல்லாக் கேடுகளுக்கும் பார்ப்பன சமுதாயம் ஆதரவளித்தே வந்தி ருக்கிறது, வருகிறது. அவர்களின் எதிர்ப்பையும் சமாளித்துத்தான் இந்த நாடும் இந்தச் சமுதாயமும் இந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது. இனி வளர்ச்சியை மெதுவாக்கலாமே தவிர, யாராலும் தடுக்க முடியாது என்கிற நிலைமையைக் காண்கிறேன்.

-பெரியார் - நன்றி கீற்று.காம்

14 comments:

enRenRum-anbudan.BALA said...

மகி,
சூழலை சற்று நிதானப்படுத்த வல்ல ஒரு பதிவு !!!
எ.அ.பாலா

dondu(#11168674346665545885) said...

"இப்படிப்பட்ட நான், எதற்காக ஒரு சமுதாயத்தாரிடம் விரோதமோ, குரோதமோ கொள்ள வேண்டும்? நான் நமது நாட்டையும், சமுதாயத்தையும் ஆங்கில நாட்டுத் தன்மைக்கும், நாகரிகத்திற்கும் கொண்டு வர வேண்டும் என்கிற ஆசையுடையவன். இதற்கு முட்டுக் கட்டையாகப் பார்ப்பன சமுதாயம் இருக்கிறது என்று சரியாகவோ, தப்பாகவோ கருதுகிறேன்."
இவர் தப்பாகக் கருதுவதற்கெல்லாம் பார்ப்பனர்கள் நடனமாட வேண்டுமா இது என்ன போங்கு?

தமிழர்கள் தலைமை ஏற்கத் தகுதியற்றவர்கள், ஆகவே தான் தலைமை ஏற்றதாகவும், தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி என்றும், தமிழ்நாட்டையாவது ஆங்கிலேயர்களே ஆள வேண்டும் என்றும் கூறும்போது இவர் மற்றவர்கள் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று யோசித்தாராமா?

1965-ல் அரசியல் சட்ட ஷரத்தின்படி இந்தி ஒரே ஆட்சிமொழியாக வந்து விடும் அபாயக்கட்டத்தில் தமிழ்நாடே ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்திய போது இவர் மட்டும் அப்போராட்டத்தை கேவலம் தனது அரசியல் நிலையான காங்கிரஸ் ஆதரவுக்காக எதிர்த்தாரே, அப்போது நினைத்தாராமா அவர் மற்றவர்கள் தன்னைப் பற்றி என்ன நினைப்பர் என்று?

குழப்பத்தை விளைவிக்கும் அதர் ஆப்ஷனை உங்கள் வலைப்பூ வைத்திருப்பதால் இந்தப் இன்னூட்டத்தை உண்மையான ராகவனே இட்டான் என்பதைக் காட்டும் வண்ணம் அதன் நகலை எனது ஈவேரா அவர்களை ரெஃபர் செய்த இந்தப்பதிவில் பதிவில் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/04/100.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

Thangamani said...

//நான் நமது நாட்டையும், சமுதாயத்தையும் ஆங்கில நாட்டுத் தன்மைக்கும், நாகரிகத்திற்கும் கொண்டு வர வேண்டும் என்கிற ஆசையுடையவன். //

பெரியாரின் இந்தக்கருத்தை இன்றைய சூழலில் திரிப்பதற்கு பலர் முனையலாம். கொஞ்சம் பொதுபுத்தியும், பெரியாரின் நோக்கம் பற்றிய அறிவும், சிறிது நேர்மை இருந்தாலும் இதைச் சரியாகப் புரிந்துகொள்ளமுடியும்.

ஆங்கிலத்தன்மை/ ஆங்கில நாகரீகம் என்பது தொழிற்புரட்சிக்கு பிந்தய சமத்துவ/ சமதர்ம புரட்சிகளால், கருத்துக்களால் பாதிக்கப்பட்டு கட்டியெழுப்பப்பட்ட மேலைச் சமுதாயத்தையே. அப்படியான சமூகத்தையே நாம் அனைவரும் முன்னேறிய சமூகம் என்று இன்றும் கொள்கிறோம்; அப்படியான ஒருசமூகமாக ஆக்கிடுவதாகக் கூறியே ஓட்டுவாங்கி, ஆட்சி நடத்துகிறார்கள் அரசியல்வாதிகள். மனித சமத்துவம்/ பாலியல் சமத்துவம் இவைகளை முன்வைத்தே செயற்பட்ட பெரியார் இவைகளை தமது முன்னுதாணமாகவும், அடையத்தக்க இலக்குகளாகவும் கொண்டதில் வியப்பில்லை. இன்றைக்கும், கிழக்கு ஆன்மீக விதயங்களில் குறிப்பிடத்தக்க விதயங்களில் பங்களிப்பு செய்யக்கூடியது என்று நேர்மையாக (ஜல்லிக்காக அல்ல) நம்புகிறவர்கள் கூட சமுதாய உருவாக்கம் என்ற அளவில் மேலை நாடுகளின் முயற்சிகளை ஒத்துகொண்டே ஆகவேண்டும். அதுவும் மேலை நாட்டில் இருந்து அனுபவம் பெற்ற எவரும், சமுதாயக் கட்டமைப்பு என்ற ஒருவிதயம் இந்தியாவில் சுத்தமாக இல்லை என்றதை உணருவார்கள் (அதனால் தான் அங்கேயே குடியுரிமை பெற முயற்சிக்கிறார்கள்)

Unknown said...

//பாகிஸ்தானுக்கு தாங்கள் ஆதரவாளார்கள் இல்லை என ஒவ்வொரு முஸ்லீமும் காட்டி கொள்ள வேண்டும் என பிராமன இயக்கங்கள் கேட்பதை போலல்லவா இருக்கிறது//

வணக்கத்துடன் அவர்களே பின்னே செய்யவேண்டியதில்லையா . நாடு எதாவது விடயத்தில் முன்னேறினால் நாந்தான் செய்தேன் எனச் சொல்லி மார்தட்டும் இவர்கள், ஏன் இதிலும் முன்வரக்கூடாது என்பதே பெரியாரின் ஆசை.

Unknown said...

//சூழலை சற்று நிதானப்படுத்த வல்ல ஒரு பதிவு !!!//


நன்றி எ,எ,அ.பாலா மிக்க நன்றி

Unknown said...

//இவர் தப்பாகக் கருதுவதற்கெல்லாம் பார்ப்பனர்கள் நடனமாட வேண்டுமா இது என்ன போங்கு?//

டோண்டு அவர்களே உங்கள் கேள்விக்கு கீழே தங்கமனி அவர்கள் மிக நல்ல விளக்கம் தந்திருக்கிறார் ,

//1965-ல் அரசியல் சட்ட ஷரத்தின்படி இந்தி ஒரே ஆட்சிமொழியாக வந்து விடும் அபாயக்கட்டத்தில் தமிழ்நாடே ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்திய போது இவர் மட்டும் அப்போராட்டத்தை கேவலம் தனது அரசியல் நிலையான காங்கிரஸ் ஆதரவுக்காக எதிர்த்தாரே//



மேலும் 1965 விசயத்தை மட்டும் நீங்கள் எங்கே போனாலும் எதற்கு பெரியார் விஷயத்தில் சொல்கிறிர்கள் என்பது கொஞ்சம் தெரிந்துகொள்ளலாமா?

ஒருவேளை பெரியார் செய்த ஒரே தவறாக அது இருக்கிரது என்று நீங்கள் கருதுகிறீர்களோ என மற்றவர்கள் நினைக்கக் கூடும் :))

Unknown said...

//பெரியாரின் இந்தக்கருத்தை இன்றைய சூழலில் திரிப்பதற்கு பலர் முனையலாம். கொஞ்சம் பொதுபுத்தியும், பெரியாரின் நோக்கம் பற்றிய அறிவும், சிறிது நேர்மை இருந்தாலும் இதைச் சரியாகப் புரிந்துகொள்ளமுடியும்//


தங்கமணி அவர்களே மிக நல்ல விளக்கம் புறிந்துகொள்ளவும் உதவியது.... மேலும் இது திரு டோண்டு அவர்களின் கேள்விக்கும் நல்ல பதிலாக அமைந்திருக்கிறது மிக்க நன்றி

fhygfhghg said...

//தமிழர்கள் தலைமை ஏற்கத் தகுதியற்றவர்கள், ஆகவே தான் தலைமை ஏற்றதாகவும், தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி என்றும், தமிழ்நாட்டையாவது ஆங்கிலேயர்களே ஆள வேண்டும் //

அருமையான கருத்து!! ஒரு மேதையின் புரிதலுடன் கூறப்பட்ட கருத்து!!!

ஆயிரம் இருந்தாலும் பிரிட்டிஷ்காரர்கள் fair play-வில் நம்பிக்கை கொண்டவர்கள்.
பார்ப்பனரல்லாதோருக்கு சமூக நீதி வழங்கி ஆரம்பித்துவைத்ததே பிரிட்டிஷ்காரர்கள்தான்.

அடுத்து, தமிழன் சோற்றாலடைத்த பிண்டம்தான் என்பதை விவாதிக்கவும் வேண்டுமா?

dondu(#11168674346665545885) said...

"மேலும் 1965 விசயத்தை மட்டும் நீங்கள் எங்கே போனாலும் எதற்கு பெரியார் விஷயத்தில் சொல்கிறிர்கள் என்பது கொஞ்சம் தெரிந்துகொள்ளலாமா?
ஒருவேளை பெரியார் செய்த ஒரே தவறாக அது இருக்கிறது என்று நீங்கள் கருதுகிறீர்களோ என மற்றவர்கள் நினைக்கக் கூடும் :))"

நான் என்ன கருதுகிறேன் என்று மற்றவர் நினைப்பது அப்புறம் இருக்கட்டும், நீங்கள் எழுதியதையும் தங்கமணி அவர்கள் அதை மட்டும் தன் பதிலில் குறிப்பிடாது சுத்தமாக ஒதுக்கிவிட்டதைப் பார்க்கும்போது நீங்கள் கூட பெரியார் அவர்கள் 1965-ல் செய்தது தவறே என்ற நிலைப்பாட்டுக்கு ஸ்லோ அண்ட் ஸ்டெடியாக வந்து கொண்டிருக்கிறீர்களோ என்ற நினைப்பு அடிக்கடி பலருக்கும் வரும் என்றே நான் நினைக்கிறேன். :))))))

குழப்பத்தை விளைவிக்கும் அதர் ஆப்ஷனை உங்கள் வலைப்பூ வைத்திருப்பதால் இந்தப் இன்னூட்டத்தை உண்மையான ராகவனே இட்டான் என்பதைக் காட்டும் வண்ணம் அதன் நகலை எனது ஈவேரா அவர்களை ரெஃபர் செய்த இந்தப்பதிவில் பதிவில் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/04/100.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

ரவி ஸ்ரீநிவாஸ் said...

Like this any person or group , can justify hatred against any other person or group.Nehru and Gandhi differed a lot on the plans to develop India.Ambedkar was critical of Gandhi.But neither Nehru nor Ambedkar went to the extent of hating Gandhi.If I have some plans and if you disagree with
me should I hate you.Did Periyar
have monopoly on truth.Periyar
had taken irrational positions
and had tried to justify them.
As I had written elsewhere Periyar
and his rationality should be
questioned and analysed. It is
high time to talk of the limitations
and pitfalls in Periyar's thoughts
and views.

Anonymous said...

நீங்கள் போட்ட சோற்றில் தொப்பையை வளர்த்துக்கொண்டு உங்களையே அடிமைகளாக வைத்திருக்கிறோம் என்றால் எதிர்க்கத்தானே செய்வீர்கள்?

Sivabalan said...

பதிவை இங்கே கொடுத்தமைக்கு நன்றி

Anonymous said...

வர வர இந்த பார்ப்பனீய எதிர்ப்பு மட்டும் தான் இருக்கு.வெர வெலை ஒன்னும் இல்லயா?.....

டுபுக்கு பெரியார், அவருக்கு ஒரு கும்பல்...அம்மா ஜயலலிதா வாழ்க...மு.க, அண்ட் கொ ஒழிக....

Anonymous said...

ஏன் என்ற பல ஏன்களுக்கு அழகான விளக்கமாக அமைந்துள்ளது உங்கள் பதிவு. இந்த ஏன்களுக்கு இவ்வளவு நிதானமாக பதிலளிக்க நமக்கு நேரமோ/பொறுமையோ அல்லது வார்த்தைகளோ கிடைக்காததால் தான் நம்மால் முடிந்ததை அவ்வ பொழுது இந்த "ஏன்"களை பலர் மனதில் உருவாக்கும் விதத்திலாவது எழுதிக்கொண்டிருக்கிறோம்.

இந்த "ஏன்"கள் ஏன் என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கு புரிகிறதோ இல்லையோ நிச்சயம் இந்த "ஏன்"களுக்கு மூலக்காரணமானவர்களால் அடக்கி ஒடுக்கப்பட்டவர்களுக்கு புரியும்.

ஆமாம் இந்த "ஆபத்து" எப்பொழுது "குழப்பம்" ஆனது? :-)

உலக அதிபயங்கரமான ஆபத்தை விளைவிக்கும் அதர் ஆப்சனை உங்கள் வலைப்பூ வைத்திருப்பதால் இந்தப் இன்னூட்டத்தை உண்மையான இறை நேசனே இட்டான் என்பதைக் காட்டும் வண்ணம் அதன் நகலை உங்களது பார்ப்பனர்களை எதிர்க்க காரணம் ஏன் என்பதை ரெஃபர் செய்த இந்தப்பதிவில் மட்டும் பின்னூட்டமாக இடுகிறேன். அதை விடுத்து சம்பந்தமே இல்லாமல் ஏதாவது ஒரு பதிவில் போட்டு படிக்க/ரசிக்க வரும் சகோதரர்களின் கழுத்தை ரம்பத்தால் அறுக்க மாட்டேன் என உறுதி கூறுகிறேன்.

குசும்பு இறை நேசன்