‘‘உங்கள் சகோதரர் மு.க.ஸ்டாலினின் அரசியல் பிரவேசம் பற்றி, ‘நானா ஸ்டாலினை அரசியலுக்குக் கொண்டு வந்தேன்? எமர்ஜென்சியின்போது அன்றைய பிரதமர் இந்திராகாந்திதானே மிசாவில் சிறையிலடைத்து ஸ்டாலினை பொது வாழ்க்கைக்குக் கொண்டு வந்தார்!’ என்று தி.மு.க. தலைவர் முன்பொருமுறை சொல்லியிருக்கிறார். மூன்று வருடங்களுக்கு முன்னால் தயாநிதி மாறன் கட்சிக்குள் கொண்டு வரப்பட்டார்... அடுத்து நீங்கள்! கட்சிக்காக பல தியாகங்களைச் செய்த பலர் இருக்கும்போது இப்படி ஒரு வாரிசு திணிப்பு சரியா?’’







‘‘உலகத்தில் எல்லா நாடுகளிலும் வாரிசுகள் அரசியலுக்கு வந்து கொண்டுதான் இருக்கிறார்கள், அமெரிக்கா உட்பட. இப்போது உலக அரசியலில் யாரும் வாரிசு அரசியல் பற்றி பேசுவதில்லை. இங்கே தி.மு.க&வை மட்டும்தான் குறிவைத்துப் பேசுகிறார்கள். தி.மு.க. என்பது மாபெரும் இயக்கம். இதன் வளர்ச்சிக்காக எத்தனையோ பேர் பெரும் துன்பங்களை அனுபவித்திருக்கிறார்கள். தியாகங்களைச் செய்திருக்கிறார்கள். அவர்கள் இல்லாமல் கட்சி இல்லை.அதேசமயம், ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்... ஒரு கட்சியின் தலைவராக இருப்பவர்தான் ஒரு குடும்பத்துக்கும் தலைவராக இருக்கிறார். அவருடைய பொது வாழ்க்கை என்பது கரடுமுரடானது. பொது வாழ்க்கையில் அவருக்கு ஏற்படும் இன்னல்கள் அவரது குடும்பத்தையும் சேர்த்துத்தான் பாதிக்கிறது. வாரிசுகளும் பளுவைச் சுமக்கும் நிலை ஏற்படுகிறது. இருந்தாலும், தி.மு.க. போன்ற ஜனநாயக அமைப்புக்குள் ஒருவரைக் கொண்டு வருவது என்பதை அந்தத் தலைவர் மட்டுமே தீர்மானிப்பதில்லை. கட்சியிலுள்ள மூத்த தலைவர்கள், அனுபவசாலிகள், காலச் சூழல் ஆகியவற்றைப் பொறுத்தே அத்தகைய முடிவுகள் எடுக்கப்படுகின்றன.நீங்கள் குறிப்பிடும் Ôதிணிப்புÕ என்ற வார்த்தையை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. என்னைப் பொறுத்தவரையில் யாரையும் ஒரு உயர்ந்த இடத்தில் திணித்து வெகு காலத்துக்கு உட்கார வைத்துவிட முடியாது. அந்த நபருக்கு கட்சி ஒரு ப்ரொமோஷன் தரலாம். ஆனால், அதை கட்சியின் தொண்டர்கள் முழுமனதாக ஏற்றுக்கொண்டால்தான் அவர் நிலைக்க முடியும். குறிப்பாக, அண்ணனை... அவரை கட்சித் தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளாமல் இருந்திருந்தால் அவர் இத்தனை காலமும் கட்சிக்குள் படிப்படியாக வளர்ந்து, இன்றைக்கு இந்த அளவுக்கு செல்வாக்குடன் இருக்க முடியாது. தொண்டர்களால் ஏற்றுக்கொள்ளப்படாத எவருமே அரசியலில் நீடிக்க முடியாது. இதை ஒவ்வொருவரும் புரிந்து கொண்டாலே, Ôதிணிப்புÕ குறித்த கேள்விக்கே இடமில்லாமல் போய்விடும்.’’






நன்றி : ஜூனியர் விகடன்

4 comments:

வெ. ஜெயகணபதி said...

நச் பதில்....

எங்கே இல்லை வாரிசு...திறமயிருந்தால் மட்டுமே எங்கும் தாக்கு பிடிக்க முடியும்...

கனிமொழிக்கு திறமை, அரசியல் அறிவு அனைத்தும் உண்டு... அவர் நிச்சயம் அரசியலில் ஜெயிப்பார்...

வாழ்க கனிமொழி... வாழ்துக்கள்...!

Anonymous said...

மகேந்திரா கவலைபடாதே நம் தலைவர் மஞ்சள் துண்டு வழக்கம் போல உனக்கு எலும்பு துண்டு போடுவார்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

எனக்கு இராமர் ஆண்டாலும்;இராவணன் ஆண்டாலும் ஒன்றுதான். இந்த வாய்ப்பை இராசாத்தி அம்மாவுக்குக் கொடுத்தாலும் எனக்குக் கவலையில்லை.
ஆனாலும் எல்லா இடத்திலும் நடப்பதால் ;நாமும் நடக்கிறோம். என்னும் பதிலில் உடன் பாடில்லை.
எல்லா இடத்திலும் தவறு எனத் தான் கூறுகிறோம். அதே தவறை நீங்கள் செய்கிறீர்கள் எனத் தான் சொல்லுகிறோம்.
சரி அமெரிக்காவில் மலம் தின்றால்; இவங்களும் தயாரா????

Nakkiran said...

Where is 'Dhil' in her answers...

Please check

http://nagore-shivaji.blogspot.com/2007/06/mp.html