நீங்க அரசியலுக்கு வருவீங்களா?’

சினிமா நட்சத்திரமா இருக்கிற ஒவ்வொருவரும் இந்தக் கேள்வியைச் சந்திக்க நேரிடும். அதுக்கு நடிகனோ, நடிகையோ சொல்ற பதிலும் அதிரடியான தலைப்புச் செய்தியாவதுதான் இங்கே காமெடி, டிராஜெடி ரெண்டுமே!

‘நாளைய முதல்வரே!’னு போஸ்டர் அடிச்சு அழைக்கப்-படாத பிரபல நடிகனே இங்கு இல்லை. பிறந்த நாளுக்கு இஸ்திரிப் பெட்டி கொடுத்துட்டா, அந்த நடிகர் ஒரு கூட்டத்துக்கு புதுத் தலைவர் ஆகிடுற கலாசாரம் இங்கேதான் ஏனோ அதிகமா இருக்கு. நடிகன் அரசியலுக்கு வரவே கூடாதுன்னு நான் சொல்லலை. ஆனா, நடிகன் என்கிற அடையாளம் மட்டுமே மக்களை வழி நடத்துகிற தகுதியைத் தந்துடாதே?

ரசிகர் மன்றமே எனக்குக் கூடாதுன்னு சொல்ற ஆள் நான். எனக்கு ரசிகர் மன்றம் திறக்கிறேன்னு யார் வந்தா-லும், வாழ்க்கைக்கும் மறக்கமுடியாத மாதிரி திட்டு வாங்கிட்டு தான் போவாங்க. என் நடிப்பு பிடிச்சா, ஜாலியாப் பார்த்துட்டு போயேன். அதுக்கு எதுக்கு ஒரு மன்றம்?

இந்திரா காந்தி படு-கொலை செய்யப்பட்டப்போ, 16 பேர் தற்கொலை பண்ணிக்கிட்டாங்க. அதில் 14 பேர் தமிழர்கள். எம்.ஜி.ஆர். இறந்தப்போ விஷம் குடிச்சவங்க, தீக்குளிச்ச-வங்கன்னு நிறைய அப்பாவிகள் தற்கொலை பண்ணிட்டிருக்-காங்க. ஏன்னா அரசியல், சினிமா இரண்டுமே நம்ம நாட்டுல மதம் மாதிரி ஆகிப்போச்சு!

‘நம்ம எம்.பி.க்கள் போலி பாஸ்போர்ட் மூலமா வெளி-நாட்டுக்கு ஆள் கடத்துற அளவுக்குத் தரம் தாழ்ந்து-போயிட்டாங்-களே’ன்னு ரொம்ப வருத்தப்பட்டார் என் நண்பர். மக்கள் பிரச்னையை மன்றத்-தில் பேசுவாங்கன்னு நம்பித்தான் ஒவ்வொரு மக்கள் பிரதிநிதியையும் நாம ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுக்-கிறோம். ஆனா, நாடாளு மன்றத்தில் கேள்வி கேட்கிறதுக்கே லஞ்சம் வாங்கின அசிங்கமெல்லாம் கண்ணுக்-கெதிரே நடந்து முடிஞ்சிடுச்சு. அதிகார துஷ்பிரயோகம், ஊழல், லஞ்சம், முறைகேடுன்னு தரம் தாழ்ந்த காரியங்கள் பார்த்துப் பார்த்து நமக்கும் பழகிப்போச்சு!

அரசாங்க அலுவலகத்தில் அதிகாரி -கள் வேலை செய்ய லஞ்சம் கேட்டா, நமக்கு ஏன் கோபம் வரமாட் டேங்குது? மாப்பிள்ளைன்னா வர-தட்சணை கேட்பான்தான்னு ஏன் எல்லார் மனசுலயும் சாதாரண-மான விஷயமாப் பதிஞ்சுபோச்சு?

வரதட்சணை கேட்கிற மாப்-பிள்-ளைக்-கும் குற்ற உணர்ச்சி இல்லை; கொடுக்கிற பெண் வீட்டாருக்கும் அது குற்றமாத் தோணலை. வரதட்சணை மாதிரியே லஞ்சம், ஊழல் எல்லாமே நமக்கு கலாசார-மாகி-டுச்சு! லஞ்சம் கொடுக் கிறது தப்புன்னு சும்மா பேசிக்கலாமே தவிர, ‘காசு கொடுத் தாதான் வேலை நடக்கும்’னு நமக்குப் பிரசவ ஆஸ்பத்திரி யி-லேயே தெரிய ஆரம்பிச்சுடுது. தர்ம புரி பக்கம் அரசு மருத்துவமனை-யில், லஞ்சம் தர முடியாத ஏழைப் பெண்ணுக் குப் பிரசவம் பார்க்காம அலட்-சியமா இருந்ததால, தாய் & சேய் ரெண்டு -பேரும் இறந்து போயிட்டதா பேப்-பர்ல படிச்-சதும் மனசு வெடிச்சுப்-போச்சு!

லஞ்சம் வாங்கின குற்றத்துக்குக் கைதானவன், மறுபடி லஞ்சம் கொடுத்து விடுதலை ஆகிடறான். எல்லாத் தப்புக்கும் அரிச்சுவடி அரசியலில்தான் ஆரம்பிக்குது. இயேசுநாதர் இரண்டு மீன்கள், ஐந்து அப்பங்களைக் கொண்டு ஐயாயிரம் நபர்களுக்கு உணவு படைத்--தார்னு பைபிள் சொல்லுது. இன்னிக்கு அஞ்சு லட்சம் மக்களோட பங்கா இருக்க வேண்டிய அப்பங்களையும் மீன் களை-யும் இரண்டே அரசியல்-வாதிகள் பகிர்ந்துக்-கிறாங்க.

‘தேர்தல் பரீட்சையில் முட்டாள்-கள் தேர்வு எழுதி னால், குற்றவாளிகள்-தான் வெற்றி பெறுவார்கள்!’னு ஒரு பொன்மொழி உண்டு. அரசியல்-வாதிகள் குற்ற-வாளிகளா இருக்கி றதுக்கும், நமக்கு நல்ல தலைவர் கள் கிடைக்கா-மல் போறதுக்-கும் மக்க ளோட அறி-யாமைதான் காரணம்னு சொன்னா, நான் ஏத்துக்க மாட்-டேன். மனுஷ-னாப் பிறந்த எல் லாருக்குள்ளே-யும் அறியாமை இருக்கு. முயற்சி எடுத்துப் புரிஞ்சுக்-கணும். யாராவது புரியவெச்சா தெரிஞ்சுக்கணும். இல்லேன்னா, அதுக்குப் பேர் அறியாமை இல்லை; முட்டாள்தனம்!

இந்த முட்டாள்தனத்தின் அபாயம் பற்றி ஆண்டன் செக்காவ் ஒரு கதை எழுதியிருக்கார்.

நீதிமன்றத்தில் ஒரு வழக்கு. மீன் பிடிக்கும் தொழில் செய்பவன் மேல் ஒரு புகார். ரயில் தண்ட-வாளத்-தில் இருக் கிற ஒரு இரும்பு நட்டைக் கழற்றினதுதான் அவன் செய்த குற்றம். ரயில் கவிழ்ந்து பல நூறு மக்கள் இறந்துபோகக் கூடிய ஆபத்தான ஒரு காரியத்தை, ரொம்ப அப்பாவித்தனமா செய்துட் டான் அந்த ஆள்.

‘என்னை போலீஸ் வேணும்னே கைது செய்து வழக்கு போட்டிருக்-காங்க. நான் தண்டவாளத்திலிருந்து சின்னதா ஒரேயரு நட்டு மட்டும்-தான் கழட்டி-னேன். மீன் பிடிக்கும்போது வலையைப் படகில் இழுத்துக் கட்டுற-துக்கு அந்த நட்டு வசதியா இருக்கும்னு கழட்டி-னேன். 100 கிராம் எடை கூட இல்லாத அந்த நட்டை நான் கழட்டின தால், அவ்ளோ பெரிய ரயில் கவிழ்ந் துடும்னு போலீஸ் என்னை ஏமாத்துது எஜமான்!’னு அப்பாவியா நீதிபதியிடம் முறையிடு-வான். ஆனா, அவனுக்குஉச்ச பட்ச தண்டனை தருவார் நீதிபதி. ‘தப்பான உள்-நோக்கம் எதுவும் இல்லாமல் அறியாமை-யில் செய்த தவற்றை மன்னித்தோ, அல்லது அபராதமோ விதித்து விடுதலை செய்ய வேண்-டும்’னு அவனு-டைய வழக்கறிஞர் வெச்ச வாதத்தையும் கடு-மையா விமர்சிப்-பார் நீதிபதி. ‘இதுக்குப் பேர் அறியாமை இல்லை, முட்டாள்-தனம். தான் செய்த தவற்றின் விபரீ தத்தை விளக்கியும், அதைப் புரிந்துகொள் ளாமல் இருப்பது
எப்படி அறியாமையாக இருக்க முடியும்?’னு கேட்பார் நீதிபதி.

சமூகத்தில் நடக்கிற எல்லாத் தவறுகளுக்கும் மக்களோட முட்டாள் தனம்தான் மூலகார ணம். உயிருக்குயிரா இருக்கிற உறவுகளையும் நட்பு-களையும் தவிக்கவிட்-டுட்டு, தற்கொலை செய்துக்கிற அள-வுக்குப் போகிற நம்ம தொண்டர்-களையும், ரசிகர்-களையும் அறியாமை-யில் இருக்கிறவங்-கன்னு சொல்ல எனக்கு மனசு வரலை. குழந்தைக்குப் பால் வாங்கித் தர முடியாத அப்பா, அம்மாக்கள் இருக்-கிற ஒரு நாட்டில், ஒரு படம் ரிலீஸ் ஆகிற நாளில் கட்&அவுட்டுக்குப் பாலபி-ஷேகம் செய்கிற காரி-யத்தை, எப்படி
அறியாமைன்னு சொல்லி மன்னிக்க முடியும்?

அறியாமை மனித இனத்தின் அழகு. ஆனா, முட்டாள்தனம் இருக்கே, அது அசிங்கம்!

சொல்லாததும் உண்மை பிரகாஷ் ராஜ் நன்றி ஆனந்த விகடன்

13 comments:

VSK said...

முழுக்க முழுக்க உண்மையான கருத்து!

தலைப்பே பதில்!

VSK said...

முழுக்க முழுக்க உண்மையான கருத்து!

தலைப்பே பதில்!

Unknown said...

வாங்க வீ எஸ் கே
யப்பா இந்த பதிவுக்காவது உங்க அரிப்ப சொறிஞ்சுக்க உங்க ப்ளாக்க வுட்டா எடமேதுன்னு சொல்லாம போனிங்களே :)

Thekkikattan|தெகா said...

அருமையான சிந்தனையூட்டு கட்டுரை. எப்படிய்யா எம்பூட்டு வேலைகளுக்குமிடையேயும் இப்படி சிந்திச்சு பரிமாறிக்க நேரம் கிடைக்குது.

நல்லாருந்துச்சு. சிந்திக்கணும். அது ஒண்ணுதான் விமோசனம் கிடைக்க வழி, ஓவ்வொரு பிரஜைக்கும்.

பார்ப்போம் என்னைக்கு நமது horizon விழித்துக் கொள்கிறது என்று.

அன்புடன்,

தெகா.

கோவி.கண்ணன் said...

மகி,

இது நீ எழுதுன கட்டுரை இல்லையா ?

:)

VSK said...

உள்ளதைச் சொல்லுவதில் உறுத்தல் இல்லை நண்பரே!
:))

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
கருப்பு said...

இங்கே வந்துதான் எச்சம் கழிந்ததா அந்த பரதேசி? தூக்கிப் போட்டு மிதிக்கனும் இதுபோன்ற இழிபிறப்புகளள!

Anonymous said...

Have a job in Gulf. Get paid very well. Have spare time. Isn't it enough? Why the hell you want to come to blog and feces on the web?
Because you are just like a fan of a celebrity. Your celebrity is Karunanidhi and periyar. Our celebrity is Rajni. Get it.

Santhosh said...

சூப்பர் கலக்கல் அருமையா சொல்லி இருக்காரு :))..