ஜெயாவுடன் எனது அனுபவம்

ஜெயாவுடன் எனது முதல் அனுபவம். இப் பதிவை நீங்கள் எப்படி எடுத்துக்கொள்ளப்போகிறீர்கள் என்பதை அறியேன். இது என்வாழ்வில் முதன் முறையாக அதுவும் ஒரு அன்னிய தேசத்தில் (அமீரகம்) நிகழ்வது கொஞ்சம் வித்தியாசமாகவே இருந்தது. இதற்கு முன் இப்படி ஒரு அனுபவம் ஏற்படாமல் போனதாலோ என்னவோ?. சரி அனுபவத்திற்கு வருவோம்.
நேற்றும் வழக்கம் போல இரவு ஒருமணி வரை வலையில் மேய்ந்துவிட்டு இன்று காலை எழுந்த போது உமாவை பார்த்தேன் ஆள் இன்னும் அப்படியே இருக்கிறார். வந்திருந்த குழந்தைகளை சில கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தார். நான் அலுவலகம் செல்ல நேரமாகிவிட்டதால் பல்துலக்கவேண்டி வெளியேறினேன் உமாவை கவணிக்க முடியவில்லை. ஆனால் இதற்கு அவர் கவலைப்பட போவதில்லை. பல்துலக்கிவிட்டு வந்ததும் ஹெட்லைன்ஸ் டுடே யில் செய்திகளை பார்த்துவிட்டு கிளம்பத்தயாரானேன். மீண்டும் உமாவின் நிணைவு வரவே ஜெயாவை பார்த்துவிட்டு பிறகு அலுவலகம் போகலாம் என்று உத்தேசித்தேன்.
இத்தனை நாட்களும் நண்பர்கள் பலர் ஜெயா பற்றி சொன்ன போது நம்பவில்லை ஆனால் நேரில் பார்த்ததும் அவர்கள் சொன்னது உண்மைதான் நல்ல நிறத்தில் பார்ப்பவரின் மனங்கவரும் விதத்தில். ஜெயாவுக்கு அம்மாவைப் போலவே பிடித்த நிறம் பச்சை. சில நேரம் விளம்பரப் பிரியை என்றாலும் எல்லாம் காலத்தின் கோலம் வேறென்ன சொல்ல. அவர் அவர்களுக்கு நேரம் வந்தால் அப்படித்தான். நேற்றிருந்தார் இன்று இல்லை.
ஆனால் வருகை தருபவர்கள் எண்ணிக்கை குறையவா போகிறது. சிலருக்கு பிடிக்காமல் போகலாம் அது அவர்களின் விருப்பம். ஆனால் வேறு வழியில்லாத அயல் நாட்டில் வசிக்கும் என்போன்றவர்களுக்கு. வேறு கதியில்லை. என்னைப்போல அமீரகத்தின் வேறு சில நண்பர்களும் இதே அனுபவத்தை பெற்றிருக்கலாம். அவர்கள் எல்லோரும் வலையில் இவ்வனுபவத்தை பகிர்ந்துகொள்வார்களா? தெரியாது.
இன்று நேரங்கழித்து அலுவலகம் சென்றதும் சக ஊழியர்கள் என்னிடம் ஏன் தாமதம் என்றவர்களுக்கு ஜெயாவை பார்த்துவிடு வந்தேன் என்றதும் காலையிலேவா என்றார்கள் அப்புறம் நீ அந்த பக்கம் கூட போகாதவனாயிற்றே எப்படிப்பா என்றார்கள். என்ன செய்ய பிடிக்கவில்லை என்றாலும் வேறு வழியில்லாத போது என்ன செய்வது?. என்னைப் பொருத்தவரை ஜெயா சுமார் ரகம்தான். போகப்போக பார்க்கிறேன்.
(ஒன்னுமில்லீங்க இன்னைக்குத்தான் முதன்முதலா ஜெயா டிவிய பாக்குரனுங்க. (நிசந்தான்ங்க) அதான் அந்த அனுபவத்த சொல்லிட்டு போலாம்னு......... செயா டிவி பத்தி குவாட்டர் கோவிந்தன் அப்புறமா எழுதுரன்னு சொல்லீருக்கார்)
5 comments:

நிலவு நண்பன் said...

உங்க தலைப்பை பார்த்தவுடன் என்னடா நல்லபிள்ளையா இருந்த மகேந்திரனா இப்படி என்று நானும் பயந்துட்டேன்..

எங்க அறையிலும் இப்படித்தான் மாறிப்போச்சு நண்பா..சன்டிவி வர வேண்டிய இடத்துல ஜெயாடிவி வருது..என்னடா அம்மாவோட ஆளமை துபாய் வரைக்கும் வந்துடுச்சோன்னு நினைச்சேன்..

சுல்தான் said...

இவ்வளவு நாள் சூரியனைப் பார்த்துட்டு ஜெயாவைக் குறை சொன்ன ஆளா?
ஒழுங்கா ஜெயாவைப் பார்த்துக் கொண்டிருந்தால் சூரியனைப் பார்த்து குலைக்கத் தோணும். இல்லையன்றால் ஏனென்று கேளுங்கள்.
இப்படிக்கு - உங்களை மாதிரியே விழி பிதுங்கும் ஒருவன்.
பி.கு.: ஜெயாவின் எலெக்ஷன் ரிசல்ட் விளையாட்டை மறக்கவே முடியாது தவிக்கிறேன்.

மகேந்திரன்.பெ said...

//என்னடா நல்லபிள்ளையா இருந்த மகேந்திரனா இப்படி//

:))

விடாதுகருப்பு said...

ராஜாஜியுடன் எனது அனுபவம் என்பதுபோல ஜெயலலிதாவுடன் உங்க அனுபவம்னு ஆசையா ஓடிவந்தா இப்படியா ஏமாத்துவது?

விடாதுகருப்பு said...

ராஜாஜியுடன் எனது அனுபவம் என்பதுபோல ஜெயலலிதாவுடன் உங்க அனுபவம்னு ஆசையா ஓடிவந்தா இப்படியா ஏமாத்துவது?