திருவாளர் கப்பிபயலின் வேண்டுகோளுக்கு இணங்கி(என்னா பேருப்பா இது:)
1. ஆறு. ஆற்றில் குளிப்பது. என் வீட்டின் பின்புறத்தில் எப்போது வற்றும் எனத்தெரியாத ஆற்றில் எப்போதாவது வரும் வெள்ளத்தில் குளிப்பது. உடலும் மனசும் ஏகாந்தமாக எழுந்திருக்க மனமற்றிருக்கும் வேளையில் மனைவி வந்து எறுமைமாடு சீக்கிரம் வாயேன் என்பதுவரை குளிக்க பிடிக்கும்
2.அப்பா. ஒரு நல்ல தோழனாக என்னோடு விவாதிக்கும் எனக்கு முழுச்சுதந்திரமும் எப்போதும் மாறாத இளமையும் கொண்டு நல்ல ஆலோசனைகள் கூறும் அப்பாவுடன் விவாதிப்பது ( சில நேரம் அது சண்டையில் கூட முடியும். கருத்து மோதல்கள்தான். இது எப்படி சுக அனுபவம் என்றால் அதை அப்பாக்களோடு நல்ல இணக்கத்தில் இருப்பவர்கள் மட்டுமே அறிய முடியும் ஆக மொத்தம் அவர் அப்பா என்ற பெயரில் இருக்கும் நண்பன்
3.எங்கள் வீட்டு நாய்கள்: எட்டு நாய்கள் உண்டு. காலம்தோரும் காலைச்சுற்றிவரும் அவற்றுக்கு பட்ட கடனுக்கு சோற்றைத்தவிர என்ன தருவது என்று இப்போதும் வருந்தினாலும் அவற்றுடன் வயல்வெளிகளில் சுற்றி வருவது.
4.சினிமா. ஆங்கிலப் படங்களின் பெரிய நிலையமே உண்டு சுமார் எழுநூறு படங்களுக்கு மேல் கமல்ஹாசனின் குருதிப்புனலும் விருமாண்டியும் எனது விருப்பமானவை. மிஸ்டர் பீனின் தொடர்களுக்கு நிரந்தர ரசிகன் விடியும் வரை கணினியில் சினிமா பார்க்க பிடிக்கும்.
5.ரஷ்ய மொழிபெயர்ப்பு நாவல்கள் எழுதி நூறாண்டுகளுக்கு மேலானாலும் இன்றும் படிக்க சோர்வே தராதவை. அலெக்சோய் தல்ஸ்தோயின் காரின் அழிவுக் கதிரும் அலக்ஸாந்தர் குப்ரினின் மூன்று காதல் கதைகளும் எனது விருப்பம் தமிழில் கல்கியும் சுஜாதாவும். மொத்தத்தில் புத்தகங்கள்
6. மோட்டார் சைக்கிள்: சே குவேரா போல எங்கே போனாலும் பைக்கிலேயே போவது மிகப்பிடிக்கும் எண்னை விலை தான் கொஞ்சம் இடிக்கும்.
ஆறு மட்டுமே எழுதவேண்டும் என்பதால் இத்தோடு விடுகிறேன் இப்படி எனக்கு சுக அனுபவம் தரும் பட்டியல் எழுத பக்கம் போதாது.(யாருப்பா இது பட்டியல் போட்டு ஆளுங்கள பழச சிந்திக்க உட்றது நீங்கள்ளாம் எதாவது சுழ்ற்ச்சி ஏவாரம் பாக்கலாம்யா:))
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
//(என்னா பேருப்பா இது:)//
இந்த மாதிரி கப்பித்தனமா கேள்வியெல்லாம் கேக்கப்படாது....
இதையெல்லாம் அனுபவிக்கனும்.. ஆராயக்கூடாது...
எட்டு நாய்..எழுநூறு டிவிடி..என்ன இது..ஒரு வரைமுறை இல்ல...
//இப்படி எனக்கு சுக அனுபவம் தரும் பட்டியல் எழுத பக்கம் போதாது//
same blood!!
//கப்பித்தனமான கேள்வி கேக்ககூடாது// புரீதுங்கோவ்.
//எட்டு நாய் எழு நூறு டிவிடி// வரமொர இல்லாமத்தான் போச்சுங்க என்ன பன்ன அப்பறம் ஒன்ன உட்டுட்டனுங்க கிட்டதட்ட தமிழ் ஆங்கிலம் இசைமட்டும்னு சுமாரா ஒரு ஆயிரத்துக்கும் மேல ஆடியோ கேசட் உண்டுங்க நான் சம்பாதிச்சதுல பாதிக்கு மேல இப்படி வாழவே செலவாகுதுங்க. பாட்டு கேக்கனும்னா என் வீடுபூரா அதிராம அமைதியான இசையா கேக்க புடிக்குமுங்க
என்னங்க துஷ்யா இப்பிடி தமிங்கிலீஸ்ல டைப் அடிக்கிறதும் புடிக்கும்னு எழுதலாம்ல?
உங்க ஆறை இப்பத்தான் படிச்சேன். எப்படி விட்டேன்னு தெரியலை.
எட்டு நாயா? பேஷ் பேஷ். என்ன பேரெல்லாம் வச்சீங்க?
நம்ம வீட்டுலேயும் கிட்டத்தட்ட 1500 படங்கள் இருக்கு. சொந்தக் கலெக்ஷன் 200தான். அப்புறம் வீடியோ க்ளப் ஆரம்பிச்ச பிறகு
சேர்ந்து போச்சு நிறைய.
ஆடியோ எல்லாம் சொந்தக் கலெக்ஷந்தான்.500க்குக்கிட்ட இருக்கு. எங்கள் காலத்துக்குப் பிறகு இதையெல்லாம்
என்ன செய்ய? வீடு முழுக்க இதுங்கதான்.
//என்ன பேரெல்லாம் வச்சீங்க//
பேரெல்லாம் எதுவும் இல்லை எல்லாம் வண்ணங்கள் கொண்டு அழைக்கப்படும். கருப்பு, வெள்ளை, இப்படி அப்புறம் அவை எப்போதும் உடனிறுப்பதால் அழைக்கவேண்டிய தேவையிருப்பதில்லை.
//எங்கள் காலத்துக்குப் பிறகு இதையெல்லாம்
என்ன செய்ய? வீடு முழுக்க இதுங்கதான். //
எனக்கும் அப்படித்தான் கிழுமத்தூரில் இருக்கும் DVD மற்றும் ஆடியோ கேசட் பத்தாதென்று இங்கே துபாயில் வேறு வாங்கி குவித்திருக்கிறேன்.
//பேரெல்லாம் எதுவும் இல்லை எல்லாம் வண்ணங்க....//
அடடா..... மொதல்லே பேர் வைக்கணும். அப்பத்தான் நம்ம குடும்பத்துலே அதுவும் ஒரு ஆள்ன்னு ஒரு
நினைப்பு வரும். அப்புறம் பேர் இருந்தாத்தான் கொஞ்சறதுக்கும், அவனுங்களைப் பத்தி பேசறதுக்கும்
வசதி. நம்ம வீட்டுலெ எல்லாருக்கும் மொதல்லே நாமகரணம்தான்.
இப்ப இருக்கறவன் பேர் கோபால் கிருஷ்ணன். சுருக்கமா ஜிகே. அது இப்ப ஆசையாக்
கூப்புடும்போது ஜிக்கு, ஜிக்கன்ஸ், ஜீட்டாச், ஜிக்கடு இப்படி பலவிதமா கூப்புடுவேன்.
அதுவும் ஆசையா ஓடிவந்து கூட உக்கார்ந்துக்கும்.
//அடடா..... மொதல்லே பேர் வைக்கணும். அப்பத்தான் நம்ம குடும்பத்துலே அதுவும் ஒரு ஆள்ன்னு ஒரு
நினைப்பு வரும்//
இனிமே புது உறுப்பினர் வரும்போது முயற்ச்சிக்கலாம் (இப்போ எல்லாத்துக்கும் சுமாரா 6 வயசுக்கு மேல ஆகுது இனிமே பேருவச்சு கூப்பிடுவது கஷ்டம்தான்)
ஆலோசனைக்கு நன்றி துளசியம்மா
periya 'irr'kku pakkathil innoru meyyeluthu varakkudathu.type mistake enru irunthen. anal pala idathilum indha thavaru thodargirathu.pala nool padikkum valakkamudaiya thangal ithai kavanithal nalam. nanri. Erode dev
மகேந்திரன்னா சும்மாவா? சூப்பர்.
மகி,
//உடலும் மனசும் ஏகாந்தமாக எழுந்திருக்க மனமற்றிருக்கும் வேளையில் மனைவி வந்து எறுமைமாடு சீக்கிரம் வாயேன் என்பதுவரை குளிக்க பிடிக்கும்..//
முதல்ல சிரிச்சுக்கிறேன் :-))) :-))) அது நல்ல காமெடிய்யா. அப்புறம் அடிக்கடி ஒஷோ சொல்வாரில்ல, நாம Boredom இல்லாம இருக்கணுமின்ன ஒண்ணு புத்தாவ இரு இல்லென்ன எருமை மாட்டு நிலையில் இருன்னு... அது ஞாபகம் வந்துடுச்சு வும்மைடைய ஏகாந்த நிலைய தண்ணீரில் வைச்சு படிக்கும் பொழுது... ;-)))))
Post a Comment